அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 28/06/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த 11 வது சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 7
நாள், நேரம் : 28/06/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம் : ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.
முழு கூட்டு பிரார்த்தனை நிகழ்வின் நேரலை :-
https://www.youtube.com/watch?v=q8Hs63mXjrc&t=1s
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
இவ் பதிவின் நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=29351
குருநாதர் :- எது என்று புரிய திருத்தலங்கள் ஏன் அமைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதெல்லாம் இப்படி கூறுகின்றேன்
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப திருத்தலம் ஏன்? திருத்தலம் ஏன் இங்க எல்லாம் அமைந்து இருக்குதுன்னு சொல்லிட்டு இப்ப சொல்றாரு
===========================
# உங்கள் கர்மாக்களை கழிக்கும் ஆலயங்கள்…
===========================
குருநாதர் :- பின் எது என்று தவறு செய்கின்றீர்கள் ஆனாலும் பின் நிச்சயம் ஆண்டுகள் நிச்சயம் கழிய வேண்டும். அதனால் திருத்தலத்தில் அமர்ந்துவிட்டால் ஆண்டுகள் கழிந்துவிடும். பின் வருகின்ற பொழுது நிச்சயம் அனைத்தும் நடக்கும்.
அடியவர் :- சிவாய நம!!!!! சிவாய நம!!!!! சிவாய நம!!!!!
அடியவர் :- கோயில் … கோயில்களின் ரகசியம் கோயில் அமைக்கப்பட்ட ரகசியம் நீங்க இந்த மாதிரி வந்து பாவங்கள் செஞ்சுறப்போ… அதை கழியறதுக்கு… அதுக்கு தான்ப்பா திருத்தலங்கள் கட்டுனாங்க.
அடியவர் :- அறிஞ்சோ அறியாமலோ சில தவறுகள் செஞ்சுட்டீங்க. இறைவன் ஒரு வாய்ப்பு கொடுக்கிறாரு. அதுக்கு தான் ஞானிகள் கோயில் கட்டி இருக்காங்க. அங்க நீங்க போய் அமர்ந்து இந்த பாடல்கள் எல்லாம் படிக்கிறப்போ, இந்த பாவமானது உங்களுக்கு குறைக்கப்படுகிறது. அழிக்கப்படுகிறதுன்னு சொல்றாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப வந்து இங்க சுற்றும் பொழுது கஷ்டம் வரும் பொழுது என்ன பண்ணனும் கோயில்களுக்கு போகணும் டைம் பாஸ் பண்ணனும் கோயிலுக்கு போயிட்டு படிக்கணும்.
===========================
# ஆலயங்களில் ஈசனார் பாடல்கள் மிக அதிகம் பாடுக….
===========================
குருநாதர் :- அப்பனே இதனால் நிச்சயம் திருத்தலுக்கு சென்று அப்பனே சில அப்பனே பாடல்களையும் பாடி, அப்பனே பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட, லிங்கோனை அப்பனே நிச்சயம் தன்னில் கூட, இதனால் அப்பனே சிறு சிறுதாக ஆற்றல் வரும்.
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த லிங்கம் இருக்கிறார் பாருங்க வந்து…
அடியவர் :- சிவாய நம!!!!! சிவாய நம!!!!!
சுவடி ஓதும் மைந்தன் :- லிங்காதிபதி
அடியவர் :- அது உடனே வந்துராதுங்க. குருநாதர் சொல்லி இருக்காரு குறைஞ்சது அந்த சார்ஜ் ஏறுவதற்கு…..
===========================
# திரிசூலம் ……………….
===========================
குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட சூலத்தை பற்றியும் கூட அப்பனே இன்னும் விவரிப்பேன். அடுத்தடுத்த வாக்கில்.
சுவடி ஓதும் மைந்தன் :- இன்னும் சூலத்துக்கு நான் வரல சூலம் இருக்குது இல்ல
அடியவர் :- திரிசூலம் திரிசூலம்
சுவடி ஓதும் மைந்தன் :- திரிசூலம் அது நான் இன்னும் வரவில்லை
அடியவர் :- ஐயா எல்லாத்துக்கும் தத்துவம் இருக்கு. கையில வச்சிருக்கிற ஆயுதங்களுக்கும் சரி….
===========================
# தர்ம தேவர் , சனி தேவர் நீல நிற விளக்கு பாடம் ஆரம்பம்….
===========================
குருநாதர் :- அப்பனே நீல நிறத்தை எடு அப்பனே நிச்சயம் பின் விளக்காக.
சுவடி ஓதும் மைந்தன் :- நீல நிறை விளக்கை எடு என்றார்.
அடியவர் 6 :- ( நீல நிற விளக்கை எடுத்தார்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா புரிஞ்சுக்கோங்க ஐயா. எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு, நல்லா இருங்க போதும். காசோ பணமோ அதெல்லாம் தேவையில்லை. எதுவுமே தேவையில்லை. நீங்க நல்லா இருந்தா போதும். அதுக்காகத்தான் வந்து அகத்திய பெருமான் வந்து இது மாதிரி கஷ்டப்பட்டு ஆட்கள் எல்லாம் இதுபோல வந்து கூட்டி, ஒரு ஒரு வேலைக்கு கொடுத்து எல்லாருக்கும் வந்து அவங்களுக்கு எல்லாம் பொண்டாட்டி இருக்குது. பிள்ளை குட்டி இருக்குது. எப்படிங்க ஐயா? எல்லாம் இருக்குது வந்து. அவங்க வேலை விட்டு ( இங்க வந்து உதவி செய்றாங்க ).
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால காசோ அதெல்லாம் உங்களை எதிர்பார்க்கல எதுவுமே. அன்புதான். நல்லது செய்யுங்க. அடுத்தவருக்கு நல்லது செய்யுங்க. அதே போதும் அம்மா வந்து.
சுவடி ஓதும் மைந்தன் :- கெட்டது செய்ய நினைக்காதீங்க. எப்பவுமே அவன்.. கெட்டவனும் நல்லா இருக்கிறாங்க ணும்னு சொன்னா கடைசில என்ன ஆகும்? பிரபஞ்சம் உனக்கே கொடுக்கும். எல்லாத்தையும் கொடுக்கும். பார்த்தீங்களா எப்படி சொல்றாரு.
சுவடி ஓதும் மைந்தன் :- a x a….
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாத்தையும் அழிச்சிடும் வந்து. வேணாம். எல்லாரும் ஒரு ஆசை இருக்கும். எல்லாமே இந்த பூமியில நான் பொண்டாட்டி, வீடு கட்டுனேன். அது கட்டுனேன். இது கட்டுனேன். எல்லாத்துக்கும் ஒரு ஆசை இருக்கும். அதனால அதெல்லாம் தேவையானா என்ன பண்ணனும்? அதை சொல்றாரு
குருநாதர் :- அப்பனே ஏன் சிலருக்கு அப்பனே பின் எவ்வாறு மனைவி, இன்னும் அப்பனே எது என்று அப்பனே பின் நினைக்கின்றான். இன்னும் இல்லம், அப்பனே இன்னும் இன்னும் எதை எதையோ. அப்பனே ஏன் எதற்கு நடக்கவில்லை?......
சுவடி ஓதும் மைந்தன் :- ( நீல நிற விளக்கை) கொடுங்க ஐயா
அடியவர் :- ( நீல நிற விளக்கை கொடுத்தார்கள்)
https://youtu.be/q8Hs63mXjrc?t=29516
குருநாதர் :- அப்பனே ஒரு மூலத்தில் இவன் நினைக்கின்றான் என்றால் அப்பனே, உடனடியாக கிடைத்தால், அது உடனடியாக போய்விடும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப திருமணம் இங்க வந்து ( பூமியில் ஒரு இடத்தை காட்டி ) நீங்க நினைச்சா….
குருநாதர் :- அப்பனே நிச்சயம் உன் மனதிற்கு ஏற்றவாறு அப்பனே ஆண்டுகள் நிச்சயம் நீ பின் நிச்சயம் தன்னில் கூட எதை என்று அறிய அப்பனே பின் அதாவது நிச்சயம் பொருத்தேயாக வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- இங்க நீ திருமணம் நினைச்சா இங்கே நடக்காது. உடனே அப்ப ஒரு ஒரு ஆற்றல் இங்க இங்க இருக்கு. அப்ப இது வந்து இங்க வந்தா திருமணம். இங்க வந்து வச்சேன்னா இது ஆற்றல் இது வந்து என்ன ஆகும்? அது மாதிரி வந்து… உடனே என்பது இந்த பிரபஞ்சம் உங்களுக்கு வராது.
===========================
# இவ்வுலகத்தின் குழந்தைகளே நிச்சயம் எதிர்ப்பாளிகள் தான்.
===========================
குருநாதர் :- அப்பனே இப்பிரபஞ்சத்தின் அதாவது இவ்வுலகத்தின் அப்பனே குழந்தைகளே அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்றது அப்ப நிச்சயம் தன்னில் கூட அப்பனே சொன்னேனே அப்பனே எதிர்ப்பாளிகள் தான்.
https://youtu.be/q8Hs63mXjrc?t=29564
சுவடி ஓதும் மைந்தன் :- சென்சார். இதை உலகத்தின் பிள்ளைகள் யாரு? சென்சார். அப்ப இந்த உலகம் ஒவ்வொரு கையிலயும் ஒரு சென்சார் கொடுக்குது. உன் கையில ஒரு சென்சார் கொடுக்குது. இவரு கையில ஒன்னு சென்சார். இவரு கையில ஒன்னு சென்சார். அழகா நீங்க என்னன்னா அந்த சென்சார் வந்து ஒரு இடத்துக்கு இங்க வரும்போதே இந்த உலகம் அப்படியே… இங்க வந்து அது ஒட்டுது இங்க போய் சொல்லுது அந்த சென்சார். இந்த இந்த உள்ள இந்த செல்லும் பொழுது இந்த பிரபஞ்சம் அங்கங்க ஆற்றல் வரும் பொழுது மீண்டும் சீறி பாயுது. உங்களுக்கே சீறி பாயுதுங்க ஐயா. ஐயா புரியுதுங்களா?
குருநாதர் :- அப்பனே எது என்று கூற அப்பனே பின் அதாவது தத்துவங்கள் பல உள்ளது என்பேன் அப்பனே. மாற்றிவிட்டார்கள் அப்பனே நிச்சயம் பின் ஆற்றலை அப்பனே அழிக்கவே.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா ஒரு தத்துவம் இருக்குது. ஆற்றலை?
அடியவர் :- ஐயா சொன்னாரு
சுவடி ஓதும் மைந்தன் :- ஆக்கவோ
அடியவர் :- அழிக்கவோ முடியாது
சுவடி ஓதும் மைந்தன் :- அழிக்கவோ முடியாது
அடியவர் :- ஆற்றல் கோட்பாடு. ஆனால் ஒரு ஆற்றலை மறுவகை ஆற்றலாக மாற்றலாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- மாற்ற முடியும் என்ன அதுக்கு அர்த்தம்?
அடியவர் :- எனர்ஜி இறையாற்றலை எப்பயும் அழிக்க முடியாது.
குருநாதர் :- அப்பனே எது என்று கூறப்பின் ஆற்றல் தான் இறைவன்
அடியவர் :- ஆமா
சுவடி ஓதும் மைந்தன் :- ஆற்றல்தான்
அடியவர் :- இறைவன் எனர்ஜி = GOD.
சுவடி ஓதும் மைந்தன் :- இறைவனை ஆக்கவோ
அடியவர் :- அழிக்கவோ
சுவடி ஓதும் மைந்தன் :- அழிக்கவோ
அடியவர் :- முடியாது.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆனால் மனிதன் அழிந்து விடலாம்
https://youtu.be/q8Hs63mXjrc?t=29639
===========================
# அதிர்ஷ்ட வாய்ப்புகள் கொடுப்பதற்கு தர்ம தேவன், சனி கிரகமே தேவைப்படுகின்றது.
===========================
குருநாதர் :- அப்பனே ஏன் எதற்காக பின் முதலில் பின் சனி கிரத்தின் அப்பனே எவை என்று கூட பார்ப்போம். ஏன் அப்பனே பின் சனி என்றால் பயப்படுகின்றீர்கள் என்பேன் அப்பனே?
சுவடி ஓதும் மைந்தன் :- சனி பகவானால் முதல்ல ?
அடியவர் :- ஏன் பயப்படுறோம் ?
சுவடி ஓதும் மைந்தன் :- ஏன் ?
குருநாதர் :- அப்பனே இன்னும் அப்பனே அதிர்ஷ்ட வாய்ப்புகள் கொடுப்பதற்கு அவ் கிரகமே தேவைப்படுகின்றது என்பேன் அப்பனே.
குருநாதர் :- இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் எது என்று புரிய அப்பனே இதனால் அப்பனே பின் அறிந்து கூட எவை என்று புரிய அப்பனே இவ்வாறாக நிச்சயம் பின் அதாவது சுற்றிக் கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே.
குருநாதர் :- ஒவ்வொரு இடத்துக்கு வருகின்ற பொழுது அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் இன்னும் உயர்வான எதை என்று புரிய அப்பனே.
குருநாதர் :- இதனால் ஆற்றலை அப்பனே பின் எங்கெங்கு சேமித்து அப்பனே எங்கெங்கு அப்பனே, எதனை கொடுக்க வேண்டுமோ அப்பனே அங்கெங்கு அப்பனே நிச்சயம் அதற்கு பொறுத்தே ஆகவேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா சனி கிரகம்….
(இப்போது நீல நிற ஒளிரும் விளக்கை சனி தேவன் கிரகத்தில் வைத்தார்கள் )
அடியவர் :- சனி நிறம் நீல நிறம். நீல நிறம் சனி கிரகத்துடைய (ஒளி).
சுவடி ஓதும் மைந்தன் :- பூமியில விழுதா? எங்க விழுது ஐயா?
………………..
……………….
( நீல நிற ஒளி சனி தேவன் கிரகத்திலேயே இருக்கின்றது என்று அவ் நீல நிற விளக்கை வைத்து காண்பித்தார்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா இங்க சனி கிரகம் இருக்குங்க. அய்யா…. ( பூமியை சுட்டிக்காட்டி ) இங்கதான் பூமி? எங்க விழுது?
அடியவர்கள் :- அங்கேயேதான் விழுது
சுவடி ஓதும் மைந்தன் :- சனி கிரகத்திலேயே விழுதுங்க ஐயா.
அடியவர் :- அங்கதான் விழுகுது
சுவடி ஓதும் மைந்தன் :- விழுகுது.
குருநாதர் :- அப்பனே இவ் நீல நிறத்தை நீங்கள் இழுத்தாக வேண்டும் என்ன செய்வீர்கள்?
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த ஒளியை வந்து புடிங்க ஐயா…. இங்க புடிங்க ஐயா.
அடியவர் 6 :- (இப்போது அவ் நீல நிற ஒளிரும் விளக்கை தர்ம தேவர் சனி கிரகத்தின் மீது பிடித்துக்கொண்டார்)
அடியவர் :- ஐயா இப்போ அந்த ஒளி வந்து ….சனி கிரகத்து மேல தான் படுது. அங்க இருக்குது அந்த ஒளி வந்து. அதோட இந்த ஒளி வந்து, பிரதிபலிப்பு வந்து, (கிரகத்தின்) உள்ள தான் இருக்கு. வெளியில வரல. அப்போ பூமிக்கு இழுக்கணும் நம்ம இழுக்கணும். எப்படி அது எப்படின்னு கேக்குறாங்க?
அடியவர் :- எப்படின்னு கேக்குறாங்க
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த ஒளியை இழுக்கணும்.
சுவடி ஓதும் மைந்தன் :- பூமிக்கு வரல பூமிக்கு எப்படி வரல பூமிக்கு எப்படி?
அடியவர் :- ஐயா யாருக்கு தெரியாது படிங்க
குருநாதர் :- அப்பனே இத்தனை பாடங்கள் எடுத்துக் கொண்டுள்ளேன். பின் எவருக்காவது நிச்சயம் அறிவு பார்ப்போம்.
சுவடி ஓதும் மைந்தன் :- இவ்வளவு நான் சொன்னேன் யாருக்காவது அறிவு இருக்குதான்னு கேக்குறாங்க
அடியவர் :- யாராவது அறிவு இருக்கான்னு சொல்லுங்க
அடியவர் ஒருவர் :- அய்யா கோளறு பதிகம் படிக்கணும்…
குருநாதர் :- அப்பனே இது ஒரு பக்கம் இருக்கட்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- இது ஒரு பக்கம் இருக்கட்டும். இதுவும் ஒரு உண்மைதான். இது ஒரு பக்கம் இருக்கட்டும்ப்பான்றாரு. அடுத்து?
அடியவர் ஒருவர் :- புண்ணியம் இல்ல…
குருநாதர் :- அப்பனே எது என்று புரிய அப்பனே இருக்கட்டும் ஒரு பக்கம்.
சுவடி ஓதும் மைந்தன் :- இதுவும் ஒரு பக்கம் இருக்கட்டும். அது ஒளி ஈர்ப்பது எப்படி ?
அம்மை அடியவர் ஒருவர் :- தவறு செய்யாமல் இருக்கணும். தவறு செய்யாமல் இருக்கணும்
குருநாதர் :- அம்மையே எது என்று புரிய (இதுவும் ஒரு பக்கம் இருக்கட்டும்.)
குருநாதர் :- இதுவும் கொஞ்சம் புரிஞ்சுக்கோம்மா. அடுத்து
அடியவர் :- சொல்லுங்க…அந்த ஒளி வந்து நம்ம வந்து அதாவது அந்த…
அடியவர் ஒருவர் :- எண்ணங்கள்
குருநாதர் :- அப்பனே இதற்கும் எவை என்று புரிய அப்பனே பொறுத்தே ஆகவேண்டும்
சுவடி ஓதும் மைந்தன் :- இதுக்கும் பொறுத்திருப்பான்றார். ஐயா இந்த ஒளி ஈர்க்கணும் இங்க வந்து. என்ன பண்ணுவீங்க?
அடியவர் :- அது ஈர்க்கிறதுக்கு என்ன வழின்னு கேக்குறாங்க?
அடியவர் ஒருவர் :- திருவாசகம் …
அடியவர் ஒருவர் :- திருப்புகழ் ….
அடியவர் ஒருவர் :- ஒளி ஈர்க்கிறதுக்கு அதற்கு ஒரு நிறம்… அதற்கு ஒரு நிறம்
குருநாதர் :- எதை என்று புரிய நிச்சயம் இதை யான் சொல்லிவிட்டேன்
சுவடி ஓதும் மைந்தன் :- இதை யான் சொல்லிட்டேன்
அடியவர் :- ஐயா சொல்லிட்டாங்க முன்னாடியே.
அடியவர் ஒருவர் :- நீர்
அடியவர் :- நீரின் மூலமாக
குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஒன்றை சொல்கின்றேன் அப்பனே.
குருநாதர் :- அதாவது எதை என்று கூட கீழேயும் அப்பனே லிங்கமாக.
குருநாதர் :- மேலேயும் உடுக்கையாக.
குருநாதர் :- அப்பனே இவ்வாறு இருக்கின்ற பொழுது அப்பனே அதீத சக்திகள் இவர்கள் தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட புவிக்கு தருகின்றார்கள் என்பேன் அப்பனே.
குருநாதர் :- இதனால் பின் எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட சரியாகவே ஒரு இடத்திற்கு வருகின்ற பொழுது அப்பனே பின் இவையே தானாக ஈர்த்துக்கொள்ளும்.
அடியவர் :- சிவாய நம!!!!! சிவாய நம!!!!!
===========================
# அவசியம் பின்வரும் இவ்விடத்தின் நேரலையை பார்க்கவும். அதன் பின்னர் படிக்க நன்று.
===========================
இவ்விடத்தின் நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=29815
===========================
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப ( மேலாக ) இது ஒரு உடுக்கை இங்க வருது…
அடியவர் :- கீழிருந்து லிங்கத்துடைய சக்தி வருது
சுவடி ஓதும் மைந்தன் :- ( வானவெளியில் ) சனி இங்க இருக்காரு வந்து. ( லிங்கத்தின் மூலம் கீழிருந்து ) அதிக ஸ்ட்ரென்த் கொடுத்தா மட்டும்தான்..
அடியவர் :- (பூமியில்) அந்த ஒரு இடத்துக்கு வர்றப்போ அந்த ஆற்றல் இருக்குன்றாங்க
சுவடி ஓதும் மைந்தன் :- (பூமியில்) இந்த இடத்துக்கு வருமாம், இந்த ( சனி கிரகத்தின்) ஆற்றல். தானாகவே என்ன ஆகும்?
ஒரு அடியவர் :- எப்படியெப்படி ?
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா ( ஈசனாரின் உடுக்கை ) இங்கிருந்து…(பூமி) இங்க ஆற்றல் வருகின்ற பொழுதும்…. ( பூமியின் கீழே உள்ள லிங்கம் ) இங்கிருந்து கீழே இருந்து வந்து,,,, கீழே ஒரு லிங்கம் இருக்குது.
அடியவர் :- ஐயா இந்த ஆற்றல் பூமியில
சுவடி ஓதும் மைந்தன் :- பூமியில… அடியில…. அப்ப பூமிக்கு அடியில… ஒரு கிரகம் பெரிய இதே (லிங்கம்) இருக்குது வந்து…. அது லிங்க வடிவமா இருக்குன்றாரு வந்து.
சுவடி ஓதும் மைந்தன் :- (பூமியின் கீழே உள்ள லிங்கம்) இதுவும் வந்து ஒரு ஆற்றலை (பூமிக்கு) கொடுத்து…….
சுவடி ஓதும் மைந்தன் :- (மேலிருந்து ஆதி ஈசனாரின் உடுக்கை ) இதுவும் இன்னும் ஒரு பெரிய ஆற்றலை (பூமிக்கு) கொடுத்து….
சுவடி ஓதும் மைந்தன் :- இவங்க எல்லாம் ( முருகப்பெருமான் , விநாயகர் , சுவாமி ஐயப்பன் அனைவரும்) ஞானிகள், எல்லாம் இதெல்லாம் கொடுத்தாங்க பார்த்தீங்களா?
சுவடி ஓதும் மைந்தன் :- ( இவங்க எல்லாம் முருகப்பெருமான் , விநாயகர் , சுவாமி ஐயப்பன் அனைவரும்) எதுக்காக இருக்குறாங்கன்னு சொல்லிட்டு ( குருநாதர் முன்பு உரைத்தது போல ) ….
சுவடி ஓதும் மைந்தன் :- இதெல்லாம் நிறைய ஆற்றல் (பூமிக்கு) கொடுக்கும் பொழுது, இந்த சனியானவர் இப்படி வந்து…. என்ன பண்ண போறது? இப்படி வரும் பொழுது… (பூமி) இதை டச் பண்ணிட்டு போவாரு லைட்டா. ஐயா புரியுதா யாருக்காவது ?
……..
…….
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா புரியுதுங்களா ஐயா
குருநாதர் :- அப்பொழுது எதை என்று கூறிய பின் நீ எங்கு பின் தீயவை செய்திருந்தாயோ, நிச்சயம் அவ்விடத்திற்கும் வந்து சனி அவன் அடைவான்.
அடியவர் :- சிவாய நம அதாவது நம்முடைய ராசிக்கு வந்து இந்த இடத்துல வர்றப்போ சனி பகவான் கஷ்டத்தை ஏழரை சனி சொல்றோம்ல அதை தான் சொல்றாங்க குருநாதர்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப நீங்க இங்க கெட்டது செஞ்சிருந்தீங்கன்னா
அடியவர் :- அந்த பூமி சுத்தி அந்த இடத்துக்கு வர்றப்போ அந்த ஒளி பிரதிபலி
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப சமமா சந்திக்கும். இப்ப வந்து இங்க சந்திச்சுன்னா… இது வந்து இந்த இடம் சுத்தி நீங்க இங்க வர்றப்போ..
அடியவர் :- நீங்க நல்லது செஞ்சிருந்தீங்கன்னா சனி பகவான் நல்லது கொடுப்பார்
சுவடி ஓதும் மைந்தன் :- சனி நல்லது கொடுப்பார். ந்த ஆற்றல் இங்க வந்து விழுகுமா கரெக்டான நேரத்துல விழுகுமா
அடியவர் :- அது என்னன்னா அங்க ராசிக்கு வர்றப்போ ராசிக்கு சனி வர்றப்போ அதுதான் நமக்கு புரிஞ்சுக்கணும் அந்த நேரத்துல
சுவடி ஓதும் மைந்தன் :- ஓகேங்களா
ஓதுவார் அடியவர் :- சனி பெயர்ச்சி
அடியவர் :- ஆமாம். சனி பெயர்ச்சி
https://youtu.be/q8Hs63mXjrc?t=29905
குருநாதர் :- இல்லையென்றால் உன்னை பின் அங்கேயே பின் தள்ளிவிட்டு மீண்டும் பொறுத்தாக வேண்டும். ஒரு 50 எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட அதாவது நிச்சயம் பின் வருடத்தில் எதை என்று புரிய பின் 20 அல்லது பின் எவை என்று ஒரு பத்தோ அல்லது ஐந்து ஆண்டுகளோ… பின் நீ செய்யும் நல்காரியத்தில் தான் இருக்கின்றது அதுவும் கூட
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப ( உங்கள் ராசியில் ) இங்க தண்டனை குடுத்திட்டு போய்விட்டால் , திருப்பியும் (கிரகம் அதன் சுழற்சியில்) போயிட்டே இருக்கும் அது வந்து. அது பாட்டுக்கு போயிடும். போயிடுச்சுன்னா…….???
………
………
சுவடி ஓதும் மைந்தன் :- திருப்பியும் வெயிட் பண்ணனுமா. ஒரு அஞ்சு ஆண்டுகளோ.. ஒரு பத்து ஆண்டுகளோ.. ஒரு 15 ஆண்டுகளோ… என்ன பண்ணனும்? வெயிட் பண்ணனும்.
அடியவர் :- நல்லது நடக்குறதுக்கு
சுவடி ஓதும் மைந்தன் :- நல்லது நடக்க. கெட்டது நடக்கும். வெயிட் பண்ணனும். திருப்பி வரணும் இல்ல, அட்டாச் பண்றதுக்கு. ( மறு பெயர்ச்சி வரை காத்திருக்க வேண்டும் )
===========================
# அனைத்து ஜோதிடர்களுக்கும் எச்சரிக்கை…..
===========================
குருநாதர் :- அப்பனே ஆனால் இன்றோ அப்பனே நிச்சயம் எதை எதையோ சொல்லி பின் நிச்சயம் பின் நீ எதை எவை என்று புரிய நிச்சயம் மனிதன் குழப்பிக் கொண்டிருக்கின்றான் அப்பனே. வருங்காலத்தில் அவ் குழப்புபவர்கள் எல்லாம் அப்பனே நிச்சயம் சித்தர்கள் யாங்களே தண்டனை கொடுப்போம்.
சுவடி ஓதும் மைந்தன் :- வருங்காலத்துல என்ன பண்றாங்க? இதெல்லாம் தெரியாம.. இறைவன் யாரும் தெரியல.. ஆற்றல் எதுனும் தெரியல… இதெல்லாம் வருகின்ற பொழுது
அடியவர் :- ஜோதிடமும் தெரியல
சுவடி ஓதும் மைந்தன் :- என்னது ?
அடியவர் :- ஜோதிடமும் தெரியல
சுவடி ஓதும் மைந்தன் :- (ஜோதிடமும் ) தெரியல. (இப்படி தெரியாமல் ) இருக்கும் பொழுது மனிதன் என்ன பண்றான்?
அடியவர் :- குழப்பிட்டு இருக்காங்க எல்லா பேரும்
சுவடி ஓதும் மைந்தன் :- நாங்களே அடிப்போம். ஏன்டா தப்பா சொல்லிக் கொடுக்கிற?
சுவடி ஓதும் மைந்தன் :- அம்மா பசங்களுக்கு நீங்க நல்லா சொல்லிக் கொடுத்தாதானே நீங்க வந்து நல்ல பேர் வாங்க முடியும். அம்மா இந்த டீச்சர் அம்மா இவங்க. நல்ல பரவாயில்லை நல்ல டீச்சர்ன்ட்டு. கெட்ட சொல்லிக் கொடுத்தா
அடியவர் :- பேரண்ட்ஸ் வந்து திட்டுவாங்க
சுவடி ஓதும் மைந்தன் :- திட்டுவாங்க. ஏம்மா அந்த டீச்சர் நல்லாவே சொல்லிக் கொடுக்கலப்பா. என்னப்பா அந்த பசங்க அப்படின்னு உன்னை தான் திட்டுவாங்க.
அம்மை அடியவர் :- குழப்பி விட்டுருவாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- குழப்பி விட்டுருவாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால ஐயா இப்ப கூட தெரிஞ்சுக்கோங்க. இறைவனோ… இது மூணும் என்ன தெரியுமா தெரியுது? யாரும் யாரும் கொடுக்கிறது இல்ல.
ஒரு அடியவர் :- நல்லதும் கேட்டதும் நாமதான் செய்யறோம்…
சுவடி ஓதும் மைந்தன் :- நீங்கள் ஐயா ஐயா நீங்க தான் காரணம். இங்க இறைவனோ, யாரும் யாரும் கொடுக்கிறது இல்ல. இதை வச்சு சயின்ஸ் வச்சு பார்த்தா.
சுவடி ஓதும் மைந்தன் :- ஓகேங்களா
ஒரு அடியவர் :- ( ஒரு சந்தேகம் கேட்டார் - ஆடியோ தெளிவில்லை )
அடியவர் :- 24 மணி நேரம் தானே பூமி தன்னை தானே சுத்திட்டு சுத்தி வருது… சுத்திட்டு சூரியனை சுத்தி வருதோ தன்னைத்தானே சுத்துறதுக்கு 24 ஹவர்ஸ். பூமியை சுத்தி வர்றதுக்கு ஒரு வருடம். அய்யா புரியுதுங்களா?
அடியவர் :- (சுவடி ஓதும் மைந்தனை பார்த்து ) ஐயா அவர் கேக்குறாரு. அதாவது சுத்தி வருதுன்றாங்கல. அப்ப அந்த சூரியன் வந்து எத்தனை வருடங்களுக்கு ஒரு முறை அதாவது சுத்தி வருது?
குருநாதர் :- அப்பனே எது என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட மெதுவாக சுற்றினால் அப்பனே நீங்கள் எல்லாம் சுற்றுவீர்கள் என்பேன் அப்பனே. அப்பொழுது எவ்வளவு வேகத்தில் அளக்க முடியாது அப்பா. நிச்சயம் சொல்கின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- இதெல்லாம் அளக்க முடியாதுங்க ஐயா. மெதுவா சுற்றினா என்ன பண்ணுவீங்க? ஐயா எல்லாம் பொத்து பொத்துன்னு விழுந்துரும் ஐயா. புரியுதுங்களா? எல்லாம் டப்பு டப்புன்னு விழுந்துரும் நீங்க இப்படி ஆடுவீங்க. அப்ப எல்லாம் கீழ எல்லாம் விழாது. அதனால வேகம் என்பது இமைக்கப்படாது. யாரும்
குருநாதர் :- வேண்டும் என்றால் அனைத்தும் பெயருக்காகவும் புகழுக்காகவும் சொல்லிக் கொள்ளலாம். அனைத்தும் வித்தையே. ஏதோ நிச்சயம் கண்கட்டு வித்தை.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாம் என்னது பூச்சாண்டி வேலை.
………
சுவடி ஓதும் மைந்தன் :- இப்படி இப்படின்னு சொல்லிட்டு பூச்சாண்டி வேலை. நம்ம பிளைட்ல போயிட்டு இருப்போம் பார்த்தீங்களா? டேய் பெல்ட் போடுறா. இப்படி வந்தா இப்படி தப்பிக்கணும். ஆனா விழுந்தா என்ன ஆகும்?
ஒரு அடியவர் :- கை கால் முறியும்.
சுவடி ஓதும் மைந்தன் :- கை கால் முறியுமா?...... ( சிரிப்புடன் ) ஐயா ஒண்ணுமே தேராதுங்க ஐயா. அது பூச்சாண்டி வேலை. பெல்ட் போடு. கட்டிக்கோ. ஐயா புரியுதுங்களா? இது மாதிரி கட்டிக்கோ. நல்லா இருங்க திடீர்னு ஏதாவது ஆபத்து எகிறி குடிச்சிருங்க. எங்க எகிறி குடிக்குது? அப்ப அதே மாதிரி ரைட் நான் குடிச்சிடுறேன் நான் பண்ணுவேன்னு சொல்லிட்டு பிளைட்ல இவன் வந்து யோசிச்சுட்டு இருப்பான் அதெல்லாம் ஆனா என்னது கண் கட்டி வித்தை. கண் கட்டு… முன்னாடி ஏமாத்துறாங்கன்னு அர்த்தம். பூச்சாண்டி வேலைன்னு அர்த்தம். ஐயா புரியுதுங்களா?
குருநாதர் :- எதை என்று அறிய நிச்சயம் எவை என்று கூற இவ் எதிரொளி எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட ஏது என்று புரிய அடிக்கடி நிச்சயம் நீங்கள் சரிபடுத்த வேண்டும். இல்லையென்றால் நிச்சயம் தன்னில் கூட ஏது என்று புரிய.. சரியாகாமல் அப்படியே நோய் இருக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- சென்சார நீங்க அடிக்கடி என்ன பண்ணனும்? ரிப்பேர் பார்க்கணும். மாடிஃபை பண்ணனும். என்னது? பியூரிஃபை பண்ணனும். இல்லைன்னா என்ன பண்ணுவாங்க? நோய்கள் வந்துரும்.
https://youtu.be/q8Hs63mXjrc?t=30137
குருநாதர் :- ஆனால் பின் நிச்சயம் பின் அங்கும் செல்வீர்கள் மருத்துவமனைக்கும் கூட. ஆனாலும் அப்பனே நிச்சயம் பின் நன்றாகாதப்பா. எல்லை மீறி போய்விட்டது.
சுவடி ஓதும் மைந்தன் :- சென்சார் வந்து எல்லை மீறி போயிடுச்சு. நீங்க மருத்துவமனைக்கு சென்றாலோ
அடியவர் :- சும்மா ஒரு ஒரு வாரம். பத்து நாள்… ஒரு மாசம்…
சுவடி ஓதும் மைந்தன் :- ரிப்பேருக்கு என்ன பண்ணுவாங்க? ரிப்பேர் ஆயிடுச்சு ஐயா
அடியவர் :- ரிப்பேர் ஆயிடும்
சுவடி ஓதும் மைந்தன் :- ஊசி போடுவாங்க. ரிப்பேர் ஆகுறதுக்கு ஊசி போட்டு என்னது பண்ணிருவாங்க ஐயா?
அடியவர் :- அந்த மருந்தோட வீரியம் கம்மியாகுற வரைக்கும் நோய்
அடியவர் :- ரிப்பேர் பண்ணுவாங்க அந்த இதுக்கு ஆனா எல்லை மீறி போயிட்டதால அந்த நோயும்
அடியவர் :- திருப்பி வந்துரும்
அடியவர் :- ஐயா எல்லை தாண்டி போயிட வேண்டி எல்லை தாண்டி போயிடுச்சு
குருநாதர் :- எதை என்று அறிய நிச்சயம் அதற்கு இறப்பில்லை. பொம்மைகளுக்குத்தான் இறப்பு.
சுவடி ஓதும் மைந்தன் :- சென்சார் ?
அடியவர் :- சென்சார் இறக்காது
சுவடி ஓதும் மைந்தன் :- இறப்பில்லை. இந்த பொம்மை தான்…
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த பொம்மை தான் வந்து
அடியவர் :- பொம்மை புட்டுக்கும்
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த பொம்மை இருக்குது பாருங்க அதுக்குத்தான் என்னது?
ஒரு அடியவர் :- இறப்பு
சுவடி ஓதும் மைந்தன் :- இறப்பு.
சுவடி ஓதும் மைந்தன் :- சென்சாருக்கு ?
அடியவர் :- இறப்பில்லை.
https://youtu.be/q8Hs63mXjrc?t=30187
குருநாதர் :- எது என்று எப்படியாவது மீண்டும் மீண்டும் எது என்று புரிய பின் பிறக்க வேண்டும் என்பதே…. எங்கேயாவது நிச்சயம் தன்னில் கூட.
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த சென்சாருக்கு என்ன வேலை தெரியுமா? இவனை எப்படியாவது … (இவன் கர்மா) ஒன்னும் தீரலடா. எங்கயாவது போய்.. இவனை அடிச்சு.. இழுத்து வருவேன்னு சொல்லிட்டு… எங்கயாவது பிறக்க வச்சு… இழுத்து வந்துருங்க ஐயா. பிறவி கொடுத்துருங்க ஐயா. ஐயா புரியுதுங்களா?
===========================
"பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்."
— திருக்குறள் 10
===========================
குருநாதர் :- இதனால்தான் அப்பனே வள்ளுவன் கூட பிறவிக்கடலை அவ்வளவு எளிதாக நீந்த முடியாது என்பேன் அப்பனே. மோட்சம் எதை எதையோ சொல்லலாம் மனிதன்.
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால பிறவிக்கடலை ?
அடியவர்கள்:- நீந்த முடியாது
சுவடி ஓதும் மைந்தன் :- நீந்த முடியாது
அடியவர் :- யாராலும் நீந்த முடியாது.
சுவடி ஓதும் மைந்தன் :- எளிதில்லை. கடல்ல என்ன பண்ணனும்?
அடியவர் :- பிறவி என்பது பெருங்கடல்…
சுவடி ஓதும் மைந்தன் :- பெருங்கடல்… பெருங்கடல்ல நீந்தினே இருக்கணுமா எப்ப இந்த வந்து
===========================
# முக்தி.. மோட்சம் எப்போது ?
===========================
குருநாதர் :- எது என்று கூட எப்பொழுது சரியாக பின் வெள்ளை நிறமாக மாறுகின்றதோ, எதுவும் பின் இருப்பதில்லையோ அப் பிம்பத்தில், அப்பொழுது முக்தி.. மோட்சம்.
சுவடி ஓதும் மைந்தன் :- எப்பொழுது வந்து… அந்த திரையில.. சென்சார்ல ஒண்ணுமே இல்லடா. வெள்ளையா இருக்குதுன்னு சொன்னா மட்டும்தான்… உனக்கு என்ன பண்றது
அடியவர் :- (Ctrl+Alt+Delete ) கண்ட்ரோல் ஆல்ட் டெலிட் போட்டு எல்லாம் (erase) எரேஸ் ஆனாதான்…. இந்த ( ஆன்மா ) மேல போக முடியும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆமா சென்சார்
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)

No comments:
Post a Comment