​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 12 July 2026

சித்தன் அருள் - 2247 - மதுரை பசுமலை ஸ்ரீ சக்தி மாரியம்மன், லோபாமுத்திரா சமேத அகத்தியர் கோவில் கும்பாபிஷேகம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே! 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

அருள்மிகு ஸ்ரீ சக்திமாரி அம்மன் திருக்கோவில், பசுமலை, மதுரையில் உறையும் அம்பாளுக்கும் அனைத்து தெய்வ மூர்த்தங்களும் பாலாலயம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இறையருளால், ஆகஸ்ட் மாதம் 23ம் தியதி (ஞாயிற்றுக்கிழமை) அமிர்தயோக சுபதினத்தில் காலை 10.30 - 12.00 மணிக்குள் கும்பாபிஷேகம் செய்வதாய் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இங்குதான் நம் குருநாதரின்/குருமாதாவின் சன்னதியும் உள்ளது. அங்கும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதை பற்றிய விரிவான செய்தியை கீழே உள்ள படத்தில் காண்க.

நாம் வாழும் காலத்தில் நடக்கிற சிறப்பான இந்த விசேஷத்தில் அகத்தியர் அடியவர்கள் ஒவ்வொருவரும் பங்கு பெற்று அவர் அருள்/இறை அருள் பெற்று கொள்ள வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.

மற்ற விஷயங்களுக்கு கோவிலை தொடர்பு கொண்டு செயல்படவும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment