​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 8 July 2026

சித்தன் அருள் - 2243 - அன்புடன் அகத்தியர் - 24/05/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 8


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 24/05/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 8

நாள், நேரம்  : 24/05/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 

முழு நிகழ்வின் நேரலை :-  https://youtu.be/NqRaI13qIDU?t=1 

இடம் : உலக நன்மைக்காக 10 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.


===========================
# இவ் 8 ஆம் பகுதி வாக்கின் நேரலை:-  https://youtu.be/NqRaI13qIDU?t=25106 
===========================

===========================
# சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னைக்கு அன்பளிப்பு
===========================


சுவடி ஓதும் மைந்தன் :- பாடுங்க ஐயா முருகர் நல்லா வரட்டும் அம்மா.  


பல அடியவர்கள் :- ( அருள் அம்மைக்கு,  மேடைக்கு வந்து அன்பான பல  அன்பளிப்புகள் )


அகத்திய மாமுனிவரின் அன்னை:- ( திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா ….என்ற பாடலை பாடினார்கள் ) 


நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=25148


பல அடியவர்கள் :- ( அருள் அம்மைக்கு,  மேடைக்கு வந்து அன்பான பல  அன்பளிப்புகள் )


குருநாதர் :- தாயே  அறிந்தும் எதை என்று புரிய இன்னும் மக்களுக்கு நல்வார்த்தை கூறும் அம்மா.


சுவடி ஓதும் மைந்தன் :-  இன்னும் நல்ல வார்த்தைகளை மக்களுக்கு கூறுமான்றார் எது தெரியுமா? ஐயா, பாப்பாவை அகத்தியர் சொல்றாரு, இன்னும் அம்மா அகத்தியர் உங்களை அம்மான்னு சொல்லிட்டு பெரிய வாய்ப்பு கொடுத்திருக்கார். வந்து அகத்தியர் பெரிய விஷயம்ங்க, ஐயா இவ்வளவு பெரிய வந்து அதனால நீங்க மக்களுக்கு என்ன சொல்றீங்களோ சொல்லுங்கமான்றாராம். அகத்தியர் சொல்லாம நின்னு போயிட்டாரு, அவர் குழந்தை ஆயிட்டாரு. இங்க வந்து வாக்கு வந்து அப்படித்தான் வருது. சொல்லுங்கம்மா.  ஐயா கேளுங்க.


===========================
# அகத்திய மாமுனிவரின் அன்னை உரைத்த வாக்குகள் 
===========================


நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=25386


அகத்திய மாமுனிவரின் அன்னை:- மாளியவான் புஷ்பதந்தா அப்படின்னு ரெண்டு சிவகணங்கள் இருந்தாங்க. இவங்க ரெண்டு பேருமே, இவங்க ரெண்டு பேருமே வந்து எதிரிகள், ஓகேவா? 


இவங்க வந்து இவங்க சண்டை போட்டா ஒருவருக்கு ஒருவர் அடிச்சிட்டு, அவங்களுக்கு அவங்களே வந்து இறந்துட்டாங்க. 


அடுத்த ஜென்மத்துல வந்து மாளியவான் வந்து ஒரு காட்டுல ஒரு சிலந்தி பூச்சியாகவும், புஷ்ப தந்தா வந்து அதே காட்டுல யானையாகவும் பிறந்தாங்க. 


அப்போ ஒரு வில்வ மரத்துல, ஒரு அழகான சிவலிங்கம் இருந்தது. அதை பார்த்த உடனே இவங்க ரெண்டு பேரும் சிவபக்தர்கள் தானே, ரெண்டு பேருக்கும் ஆசையாச்சு. இந்த இந்த சிவபெருமானை நம்ம எப்படியாவது வழிபாடு செய்யணும் அப்படின்னு நினைச்சாங்க. 


சிலந்தி பூச்சி என்ன பண்ணுச்சு? சிவபெருமான் வந்து வெயில்லையும் மழையிலயும் ரொம்ப நனையறாரு. அவர் மேல காஞ்ச இலை சருகெல்லாம் விழுது. அவர் பாவம் இல்ல, நம்ம வந்து அவர் மேல என்ன பண்ணுவோம்? நம்மளால முடிஞ்ச அளவுக்கு வலை கட்டுவோம். அவர் மேல வலை கட்டினா அந்த இலை எல்லாம் விழாது, அது வந்து தாங்கிக்கும் இல்லையா? அப்படி செய்வோம், நம்மளால முடிஞ்ச பக்தி செய்வோம் அப்படின்னு அந்த சிலந்தி பூச்சி என்ன பண்ணுச்சு? சிவபெருமானுடைய தலைக்கு மேல ஒரு வலை கட்டுச்சு, சிலந்தி வலை கட்டுச்சு. 


இந்த யானை என்ன பண்ணுச்சு? யானைக்கும் ஆசை, இது வந்து நம்ம இந்த சிவபெருமானை எப்படியாவது வழிபாடு செய்யணும் அப்படின்னு ரொம்ப ஆசை. அதனால முடிஞ்ச அளவுக்கு டெய்லியும் காலையில வந்து என்ன பண்ணும்? அந்த சிவபெருமானை சுத்தம் செஞ்சு, காவேரில இருந்து தன்னில் கொண்டு வந்து, சிவபெருமான் மேல அபிஷேகம் செஞ்சு, காட்டுல உள்ள பூக்கள் எல்லாம் அதுக்கு தெரிஞ்ச மாதிரி பறிச்சு வந்து, சிவபெருமானை போட்டு மேல போட்டு அர்ச்சனை பண்ணும். இப்படி அதுக்கு தெரிஞ்ச மாதிரி வழிபாடு செய்யும். 


அப்போ இந்த யானை என்ன பண்ணுச்சாம்? டெய்லியும் வந்து இந்த மாதிரி பூஜை செய்ததா,  அப்போ என்ன பண்ணும்? சிவபெருமானுடைய தலைக்கு மேல ஒரு சிலந்தி வழியா இருக்கா? அது ஏதோ தேவையில்லாதது, வேண்டாதது ஒட்டடைய்ன்னு சொல்லுவோம் இல்லையா? அந்த மாதிரி நினைச்சுக்கிட்டு, அதோட தந்தத்தால டெய்லியும் அப்படியே சுத்தம் செஞ்சுட்டு, அது வந்து பூஜை செய்யும். 


இந்த சிலந்தி பூச்சி நைட் ஃபுல்லா உட்கார்ந்து கஷ்டப்பட்டு வலை கட்டும். காலையில வந்து அதுக்கு ( யானைக்கு )  தெரியாது இல்ல, அது வந்து இந்த (வலை) தேவையற்றது அப்படின்னு நினைச்சு, அதை சுத்தம் பண்ணிரும். இப்படி ரொம்ப நாள் போச்சு. 


இந்த சிலந்தி பூச்சிக்கு கோபம் வந்துட்டு. என்னடா இது ,  நம்ம கட்டுற வலையை யார் இன்னைக்கு வந்து உடைக்கிறான்னு பார்ப்போம் அப்படின்னு காலையில மரத்துக்கு பின்னாடி இருந்து பார்த்திருக்கு. 


அப்போ இந்த யானை வந்து, இந்த மாதிரி அதை வந்து சுத்தம் செஞ்சுட்டு, சுவாமி அபிஷேகம் செஞ்சு, மலர்களால அர்ச்சனை செஞ்சதை பார்த்த உடனே இதுக்கு கோவம் வந்துட்டு. 


ஓ, நீதான் இந்த வேலையை பார்க்கிற. பாரு, இன்னைக்கு உனக்கு வந்து ஒரு பாடம் புகற்றணும் அப்படின்னு என்ன பண்ணுச்சாம்? குடுகுடு குடுகுடுன்னு அது தும்பிக்கை வச்சு சுத்தம் பண்ணுது இல்ல, அந்த தும்பிக்கைக்குள்ள வந்து அந்த சிலந்தி பூச்சி குடுகுடுன்னு தும்பிக்கைக்குள்ள போயி யானையை கடிக்க ஆரம்பிச்சுட்டான். 


யானைக்கு தாங்க முடியல. சிலந்தி பூச்சிக்கும் யானைக்கும் ஒரு பெரிய போராட்டம். இந்த போராட்டத்துல இந்த சண்டையில ரெண்டு பேருமே உயிரை விட்டாங்க. இவங்களுடைய பக்தியை பார்த்த சிவபெருமான் என்ன செஞ்சார் தெரியுமா? 


அந்த சிலந்தி பூச்சியை மறுபிறவியில மன்னரா பிறக்க வச்சார். ஏன்? அவ்வளவு பக்தி.  சிலந்தி பூச்சியா பிறந்தாலும் மறுபிறவியில மன்னரா ஆக்கிட்டார். 


அதான் கோச்செங்கணான் சோழன் அப்படிங்கிற சோழ மன்னரா ஆக்கினார். இந்த யானையை தன்னோட கைலாயத்துல பூதகணங்களுக்கு தலைவரா ஆக்கிட்டார். 


பார்த்தீங்களா, அவருடைய எவ்வளவு இரக்கமான மனசை? அதாவது சாதாரண அஞ்சு அறிவு உள்ள யானையும் சிலந்தி பூச்சியும் அதுக்கு என்ன தெரியும்? ஆனா அதுக்காக அதுக்கு இயன்ற அளவுக்கு நம்ம வந்து பூஜை செய்வோமே அப்படின்னு அது வந்து ரெண்டு பேருமே அவ்வளவு பக்தி சிவபெருமான் மேல. 


அப்போ இப்படி அஞ்சறிவா பிறந்து, பூஜை செஞ்சதுக்கே, மறுபிறவியில மன்னரா பிறக்க வச்சாரே. 


ஆனா நம்ம அதுக்கு வந்து பலன் எல்லாம் பார்க்கக்கூடாது. நம்ம செய்யணும். நம்ம எப்படி இந்த மனுஷ பிறவியில அவ்வளவு அழகா நமக்கு கை கால் எல்லாம் வந்து படைச்சிருக்காரு. 


எதுக்கு? அவருக்கு வந்து பூஜை செய்ய.. உழவார பணி செய்யலாம். அழகா மந்திரங்கள்… பூஜை செய்யலாம். அவரை எவ்வளவோ வழிகள் இருக்கு, அவரை அடைய. 


ஆனா அதெல்லாம் விட்டுட்டு நம்ம வந்து என்ன பண்றோம்? காசு காசு… எப்படியாவது நம்ம சொத்து சேர்க்கணும். எப்படியாவது கல்யாணம் பண்ணி கொடுக்கணும். ஐயோ, ஓடு ஓடு ஓடு ஓடு, வேலை தேடு, ரெஸ்யூம் பண்ணு, அப்படி இப்படின்னு என்னெல்லாமோ நம்ம வந்து இது பண்றோம் இல்லையா? ஆனா அதெல்லாம் வந்து சும்மா டெம்பரரி. 


நிரந்தரமான தீர்வு எது? சிவபெருமானை நாம வழிபாடு செஞ்சு, அவருக்கு பூஜை செஞ்சோம் அப்படின்னா கண்டிப்பா தன்னோட ஆட்கொண்டுருவார். 


===========================
# சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னைக்கு அன்பளிப்பு
===========================


பல அடியவர்கள் :- ( அருள் அம்மைக்கு,  மேடைக்கு வந்து அன்பான பல  அன்பளிப்புகள் )


===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
===========================


குருந்தார் :- அம்மையே, தெரிந்துகொள்ளுங்கள்; ஏன், எதற்காக என்று—இவையும் விளையாட்டுத்தான், இறைவனின் விளையாட்டுத்தான். இதனால் புத்திகளை வளர்த்துக்கொள்ளுங்கள் என்பதற்காகவே. நிச்சயம் உங்களை எவ்வாறு அழைத்து, எது என்று புரிய, இன்னும் பெரிய பெரிய வேலைகளில் கூட—இதனால் நிச்சயம் தன்னில் கூட—அதாவது, அம்மையே, இன்னும் பாடு; முருகன் நலமாகவே அறிந்தும், எது என்று கூட ஆசிகள் கொடுப்பான். அம்மா, அறிந்தும், எது என்று புரிய. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அம்மா, இன்னும் முருகர் உங்களுக்கு வந்து ஆசி கொடுப்பார். அடுத்த பாட்டு பாடுங்கம்மா. முருகர் நினைச்சே, முருகன்—அம்மா, இங்கதான் இருக்கார் முருகர். நீங்க பாடுங்க. 


===========================
# தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா 
===========================


அகத்திய மாமுனிவரின் அன்னை:- ( தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா…என்ற பாடல் பாடினார்கள் )


நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=25741


கங்கை அணிந்தவா
கண்டோர் தொழும் நிலாசா!
சதங்கை ஆடும் பாத விநோதா!
லிங்கேஸ்வரா நின்தாள் துணை! நீதா.


============


தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா!
அல்லல் தீர்த்தாண்டவா!
வா வா அமிழ்தானவா
எங்கும் இன்பம் விளங்கவே


அருள் உமாபதி
எளிமை அகல வரம் தா வா வா
வளம் பொங்க வா (தில்லை அம்பல)
பலவித நாடும் கலையேழும்
பணிவுடன் உனையே துதிபாடும்
கலையலங்கார பாண்டியராணி நேசா
மலைவாசா மங்கா மதியானவா! (தில்லை அம்பல)




===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
===========================



குருநாதர் :- அம்மா மீண்டும் இப்பாடலை பாடு. முருகன் கேட்டுக்கொண்டே இருக்கின்றான். கடைசியில் வரங்கள் அவரவருக்கு அள்ளித்தரத்தான் போகின்றான்.


சுவடி ஓதும் மைந்தன் :-   திருப்பி இதையே பாருங்க. ஐயா, இறைவன் இங்கேயே தான் இருக்கார்; பார்த்துட்டு இருக்கார். பாப்பாவையும் பார்த்துட்டே இருக்கார்.


===========================
# சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னைக்கு அன்பளிப்பு
===========================


பல அடியவர்கள் :- ( அருள் அம்மைக்கு,  மேடைக்கு வந்து அன்பான பல  அன்பளிப்புகள் )


===========================
# மீண்டும் “தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா” 
===========================


அகத்திய மாமுனிவரின் அன்னை:- ( தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா…என்ற பாடலை மீண்டும்  பாடினார்கள் )


நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=26066

===========================
# சித்தர்கள் மட்டுமே இறைவனை மனிதனுக்கு காண்பிக்க முடியும் 
===========================

===========================
# இறைவனே பார்த்துக் கொண்டிருக்கின்றான். ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு…..
===========================

===========================
# “தாயே, விட்டு விடாதே; இதுதான் சமயம். பாடு!”.
===========================



குருநாதர் :- அப்பனே, அம்மையே எப்படி, எதை என்று புரிய சிறுவர் அறிந்தும், எது என்று கூற பெரியவராக இருப்பதால் எத்தனை உங்களுக்கு சந்தோஷங்கள். அதனாலே பின் அடிபடியாத மனம், கரைப்படாத அறிந்தும் இவைதென்றுதான் இறைவன் நிற்பான். 


நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக இருந்தால், நிச்சயம் தன்னில் கூட இறைவனே பார்த்துக் கொண்டிருக்கின்றான். ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு. "தாயே, விட்டுவிடாதே; இதுதான் சமயம்" பாடு. இவர்களுக்கெல்லாம் நல்லருள் கொடுக்க, நிச்சயம் தன்னில் கூட. 


சுவடி ஓதும் மைந்தன் :-  கடவுள் ஓரிடத்திலிருந்து பார்த்துட்டே இருக்கார். இதுதான் சமயம் பாடு அம்மா.


===========================
# தாயும் சிறந்ததொரு கோவிலும் இல்லை. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை 
===========================


அகத்திய மாமுனிவரின் அன்னை:-  (அருமையான பாடல் பாடினார்கள் - தாயும் சிறந்ததொரு கோவிலும் இல்லை. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை  )


https://youtu.be/NqRaI13qIDU?t=26341 


தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை


தன்னலமற்றது தாயின் நெஞ்சம்
தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்
தன்னலமற்றது தாயின் நெஞ்சம்
தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்


மண்ணுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம்
மண்ணுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்


தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை


பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு
பூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு


பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு
பூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு


கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று
கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று
கருணையும் தாயும் கடவுளும் ஒன்று


தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை


தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை 


( பாடல் நிறைவு ) 




குருநாதர் :- தாயே அழகாக ஒரு உரையை உரை புத்தி வரட்டும் மக்களுக்கு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஏதாவது சொல்ல சொல்றார். சொல்லுங்க. நீங்க சொல்றது வேற. குட்டி!!!!! அகத்தியரே உங்களுக்கு சொல்லி சொல்ற சொல்றார்னா அது வேற. அகத்தியரே உங்களுக்கு வந்து மனசுல எழுப்புவார். சொல்லுங்க.




அகத்திய மாமுனிவரின் அன்னை:-  நம்ம எல்லாரும் வந்து நமக்காக வேண்டும் வேண்டுறோமோ இல்லையோ, நம்ம எல்லாரும் நல்லா இருக்கணும். நம்ம மட்டும் நல்லா இருந்து நம்ம வந்து என்னத்த வந்து காணப்போறோம். 


எல்லாரும் நல்லா இருக்கணும். யாருக்கும் ஒரு துன்பம் வரக்கூடாது அப்படின்னு வேண்டணும். அப்படி வேண்டணும்னா சிவபெருமானே வந்து நம்மள வந்து ஆட்கொள்வார். 


அதாவது அந்த மனசு இருக்குங்க. பிறருக்கு உதவி செய்யணும் அப்படின்ற அந்த பக்குவம் வந்துட்டாலே வந்து, நம்ம அடுத்தடுத்து நம்மளாவே வளருவோம். நம்மள வளர்க்கணும் அப்படின்னா, கடவுளே என்ன வந்து நீ வந்து உயர்வான இடத்துக்கு கொண்டு போ அப்படின்னு கேட்கக்கூடாது. 


எல்லாரும் நல்லா இருக்கணும். எல்லாருக்கும் வந்து கஷ்டம் வரக்கூடாது. யாருக்கும் எந்த ஒரு பஞ்சமும் வரக்கூடாது. அப்படின்னு நம்ம வேண்டனும். அதான் வழினே வச்சுக்கலாம். நம்மள வந்து அவர் வந்து ஆட்டோமேட்டிக்கா வந்து உயர்த்தி விடுவார்.


===========================
# குருநாதர் உரைத்த,  நிஜமாகவே நடந்த  ஒரு குட்டி கதை. ===========================

நிஜ கதையின் நேரலை :-  https://youtu.be/NqRaI13qIDU?t=26604


குருநாதர் :-  அம்மா! அறிந்தும் ஒரு குட்டி கதை சொல்ல போகின்றேன். இவை தன் பின் கதை அல்ல, நிஜமாகவே 


சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாருக்கும் வந்து உனக்கும் சேர்த்து ஒரு குட்டி கதை சொல்றாரு. அகத்தியர் சொல்றாரு. ஆனா அது கதை இல்ல, நிஜமாகவே என்றார் வந்து. 


குருநாதர் :- அறிந்தும் எதை என்று புரிய அனைத்தும் அதாவது செல்வந்தனாக வாழ்ந்து வந்தான். ஆனாலும் அவ் செல்வந்தனோ எதையும் தேவையில்லை என்று அண்ணாமலைக்கு வந்துவிட்டான். வந்து ஆனாலும் இது இன்னும் ஏது என்று புரிய சில வருடங்களுக்கு முன்புதான் இதுவும் நடந்தது. 


ஆனாலும் அனைத்தும் தேவையில்லை என்று வந்துவிட்டான். ஆனாலும் எதை என்று புரிய ஓரிடத்தில் பின் படுத்து உறங்கினான். 


ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் பார்த்தான் சிவபெருமான். அறிந்து கூட பின் அதாவது பார்த்துட்டு செல்வது. பார்த்துட்டு செல்வது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா ஒரு பெரிய செல்வந்தர். புரியுதுங்களா? இது வந்து ஒரு பெரிய செல்வந்தர். எதுவுமே எனக்கு தேவையில்லைன்னு சொல்லிட்டு என்ன பண்ணிட்டாராம். திருவண்ணாமலைக்கு வந்துட்டாராம். அவர் யாருகிட்டயும் பேச மாட்டாரு. அப்படியே படுத்துப்பாரு. ஆனா டெய்லி என்ன பண்ணுவாராம். சிவபெருமான் பார்த்துட்டு போவாராம். 


குருநாதர் :- ஆனாலும் எது என்று புரிய ஏது என்று அறிய ஒரு நாள் அறிந்தும் அதாவது நிச்சயம் தன்னில் கூட வேணும் என்றே நிச்சயம் கால்களை உராசிச் சென்றான் ஈசன். 


சுவடி ஓதும் மைந்தன் :- தூங்குகின்ற பொழுது ஈசன் காலு மிதிச்சு போயிட்டார். யாரு? செல்வந்தன் காலு மிதிச்சு போயிட்டார்.


குருநாதர் :-  எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட எழுந்து நின்றான். பார்த்தான். அவ்வளவுதான். மீண்டும் உறங்கிவிட்டான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப என்ன பண்ணாரு? யார்டான்னு சொல்லிட்டு எழுந்து எழுந்து பார்த்தாரு. மீண்டும் என்ன பண்ணிட்டாரு? தூங்கிட்டார். 


குருநாதர் :-  ஆனாலும் ஏன் இங்கு வந்தான் என்றால் நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் சிவபெருமான் கொடுத்ததுதான் என்று எது என்று புரிய வேண்டாம் என்று சலித்துவிட்டது. அனைத்தும் பார்த்து பார்த்து. உற்றார் உணர்ந்தார்கள். நிச்சயம் செல்வம் இருக்கும் பொழுது அனைவரும் வந்தார்கள் நிச்சயம் தன்னில் கூட. ஆனாலும் செல்வம் இல்லாத பொழுது நிச்சயம் தன்னில் கூட எவரும் மதிக்கவில்லை. பின் உற்றார் உறவினர் அனைவரும் கூட. இதனால் பின் அனைத்தும் பின் அனாதை ஆசிரமத்திற்கு, நிச்சயம் அனாதை என்று சொல்லக்கூடாது. அனைவரும் இறைவன் பிள்ளைகளே. அனைத்தும் எது என்று கூட மறைமுகமாக எழுதி வைத்துவிட்டான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அனாதைன்னு சொல்லக்கூடாதுன்றார் அகத்தியர். வந்து எல்லாமே இறைவனோட பிள்ளைந்தைகள் தான்ட்டாரு. அப்ப என்ன பண்ணிட்டாரு? நிறைய வாழ்ந்தாரு. சொந்தம் பந்தங்களோட பொண்டாட்டி பொருள்கள் எல்லாம் குழந்தைகள் நல்லா வாழ்ந்தாரு. ஆனா கடைசியில காசு ஏதோ இதைட்டு என்ன பண்ணாரு? அப்புறம் பொண்டாட்டியும் மதிக்கல. பிள்ளைங்களும் மதிக்கல. யாரும் கவனிக்கல. என்ன பண்ணிட்டாராம் வந்து அண்ணாமலைக்கு மறைமுகமா சொத்தெல்லாம் எழுதி வச்சிட்டு யாரும் வேண்டாம். என் சொத்தெல்லாம் அவங்களே சாரட்டன்னு சொல்லிட்டு ஏதோ எதுக்கோ அரசாங்கம் எது எழுதி வச்சிட்டு என்ன பண்ணிட்டாராம் அண்ணாமலைக்கு வந்துட்டாராம். 


குருநாதர் :-   மீண்டும் எது என்று கூட சோதிக்க நினைத்தான் ஈசன். அறிந்தும் எது என்று புரிய மீண்டும் உறங்கிக் கொண்டிருந்தான். இதனால் எது என்று புரிய அதேபோல் மீண்டும் எட்டி உதைத்தான் ஈசன். 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப மீண்டும்  அங்கேயே படுத்து இருந்தாராம். காலை என்ன பண்ணாராம்? எட்டி மிதிச்சிட்டு போயிட்டே இருந்தாராம். 


குருநாதர் :-   எதை என்று கூட ஆனாலும் கோவம் வந்தது. எதை என்று புரிய இவனுக்கு பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட பைத்தியக்காரனே, அறிவு கெட்டவனே என்று. 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப அவர் படுத்திருந்தார். பார்த்தீங்களா? எட்டி  உதைச்சு சிவபெருமான் போறாரு. ஏய் பைத்தியக்காரா அறிவு கெட்டவனேன்னு சொல்லிட்டு யாரு சொல்றாரு? ஒரு செல்வந்தர் படுத்துட்டாரு. சந்நியாசி மாதிரி படுத்துட்டு இருக்காருல்ல. அவர் சொல்றாரு…. 


குருநாதர் :- அறிந்தும் எது என்று புரிய பலமாக ஈசன் சிரித்தான். நிச்சயம் தன்னில் கூட யான் எது என்று புரிய அறிவு கெட்டவன் தான் என்று 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஓஹோன்னு சிரிக்கிறாராம். யாரு? ஈசன் நான் அறிவு கெட்டவன் தான்ப்பான்றாராம். 


குருநாதர் :- எதை புரிந்து ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட இவனும் நினைத்து கொண்டான். இவன் பைத்தியக்காரன் என்று. 


https://youtu.be/NqRaI13qIDU?t=26857


சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த செல்வந்தர் என்ன நினைச்சுக்கிறார்னா? அவர் என்ன நினைச்சுக்கிறாராம்? வந்தது சிவபெருமான் தான். மறைமுகமா இது வந்து இவன் உண்மையிலேயே பைத்தியக்காரன் தான் என்று சொல்லிட்டு என்ன பண்ணிட்டாராம்? செல்வந்தர் நினைச்சுக்கினாராம். இவன் உண்மையிலேயே நம்ம திட்டனாலே இவனுக்கு உரைக்கல. அதனால இவன் உண்மையிலேயே பைத்தியக்காரன். இவன் மீண்டும் என்ன பண்ணாராம்? திருப்பியும் படுத்துட்டாரு. இவர் அவர் கிளம்பிட்டாரு. 


குருநாதர் :-  எதை எவை என்று புரிய மீண்டும் நிச்சயம் தன்னில் அறிந்து கூட மீண்டும் இரவு தன்னில் கூட எதை என்று கூட வந்தான். எதை மீண்டும் எட்டி உதைத்தான். எதை என்று புரிய நிச்சயம் கம்பு எடுத்து போய் நிச்சயம் எதை என்று கூட பின் ஏவை என்று கூட அடித்தான். 


சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப மீண்டும் என்ன பண்ணாரு? அதே மாதிரி என்ன பண்ணாராம்? ஈசன் போனாரு. எட்டி உதைச்சாரு. இவன் பைத்தியக்காரன் கம்பு இருக்கிறார் பாரு. கம்பு எடுத்து என்ன பண்ணாராம்? அடிச்சாராம். பட்டான்னு அடிச்சாராம். வந்து ஈசனை வந்து 


குருநாதர் :-  எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அப்பொழுது கூட உரைக்க ஏது என்று புரிய 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்பொழுது கூட அவருக்கு வந்து உரைக்கல. 


குருநாதர் :-  எதை என்று புரிய நிச்சயம் தன்னில் அறிந்து கூட இதனால் ஈசன் எது என்று புரிய மீண்டும் படுத்து எது என்று அறிய பின் அவர் செல்வந்தனும் படுத்து உறங்கினான். மீண்டும் அருகிலே வந்தான் ஈசன். எது என்று புரிய யான் கூட படுக்கட்டுமா என்று 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப என்ன பண்ணாரு? அவர் அடிச்சிட்டாரு. ஈசன் வந்து திருப்பி இவர் படுத்துட்டாரு. இவன் வந்து ஒன்னத்துக்கு இல்லன்னு சொல்லிட்டு அவர் நினைச்சுக்கினாரு. அந்த சந்நியாசி திருப்பியும் ஈசன் வந்து உன் பக்கத்துல நானும் படுத்துக்கட்டுமான்னு யாரு கேக்குறாரு? ஒரு சந்நியாசி கிட்ட கேட்டார். எல்லாம் இழந்து வந்து ஒரு சந்நியாசி கிட்ட கேட்கிறார் வந்து. 


குருநாதர் :-  எது என்று புரிய நீ பைத்தியக்காரன் எது என்று புரிய அன்று ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அதாவது இரவு உறங்கச் செல்வது உறங்கும் பொழுது ஏதாவது செய்துவிட போகின்றாய். கல்லையோ எதையோ எடுத்து நிச்சயம் வீசப் போகின்றாய். இங்கு எது என்று புரிய. 


https://youtu.be/NqRaI13qIDU?t=26965 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப படுத்துக்கோ. நீ பைத்தியக்காரனா இருக்கிற நைட்ல ஏதாவது கல்லையோ ஏதாவது எடுத்து தூக்கி போட போறப்பா நீ என்று சொல்லிட்டு யார் சொல்றாரு? செல்வ செல்வந்தர் அந்த சந்நியாசி சொல்றார். 


குருநாதர் :- அறிந்தும் எதை என்று புரிய பின் அதாவது இரவு தன்னில் சரியாக பின் ஒரு மணிக்கு எழுந்து நிச்சயம் அதாவது தட்டி எழுப்பினான். நிச்சயம் தன்னில் கூட எது என்று புரிய சந்நியாசியை. பின் நிச்சயம் பைத்தியக்காரனே உன்னிடம் நிச்சயம் தன்னில் கூட ஏதோ இங்குதான் நிம்மதியாக இருக்கின்றது என்று உறங்க வந்தேன். இங்கு கூட நிச்சயம் தன்னில் வந்துவிட்டாய். எதை என்று எப்பொழுது எதை என்று புரிய. 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப ஒரு மணிக்கு எழுந்துட்டு என்ன பண்றாரு? தட்டி எழுப்புறாரு. அந்த சந்நியாசி என்ன சொல்றாரு? நீ பைத்தியக்காரனா எங்கயாவது நிம்மதியாக படுத்து வந்தேனா? நானு எங்கடா வந்து கெடுக்கிறடா நீ வந்தேன்னு சொல்லிட்டு என்ன பண்றாரு? சொல்றாரு யாரு? சந்நியாசி.


https://youtu.be/NqRaI13qIDU?t=27022


குருநாதர் :- எதை என்று புரிய நிச்சயம் தன்னில் அறிந்து கூட ஆனாலும் ஏது என்று புரிய வந்தது எதை என்று புரிய ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட மீண்டும் அறிந்து கூட அதனால் எனக்கு பின் இங்குதான் நிம்மதியா இருக்கின்றது. இங்கேயே யான் நிச்சயம் தன்னில் கூட இருந்து விடுகின்றேன் என்று. 


சுவடி ஓதும் மைந்தன் :- அவர் வந்து ஈசன் சொன்னாராம். எனக்கு இங்கேயே நிம்மதியா இருக்குதே. நான் இங்கேயே இருந்துக்கிறேன்ப்பான்றார். 


குருநாதர் :-  எதை என்று புரிய இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட பைத்தியக்காரன் போல் நிச்சயம் உளறாதே. உளரிவிட்டால் சோறு சோறு எவை என்று கொடுப்ப வருவார்கள். அதை கூட கிடைக்காமல் போகும். அதனால் நிச்சயம் தன்னில் கூட அமைதியாக இருந்தால் அனைத்தும் கிட்டும். இருந்து கொள் என்று. 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப நீ பைத்தியக்காரன் மாதிரி இருக்காத. நீ பைத்தியக்காரன் மாதிரி இருந்து ஏதாவது பண்ணேன்னா ஏதோ ஒரு வேளை ரெண்டு வேளை சோறு குடுத்துட்டு போறாங்க. அப்ப அதுவும் கிடைக்காது. நீ இங்கு வரவங்களை. ஏதாவது பண்ணிட்டேன்னா வந்து அதுவும் கிடைக்காது. சோறு விட கிடைக்காது வந்து. அதனால நீ வந்து என்ன பண்ணு? அமைதியா இரு. சோறு கொடுப்பாங்க. சாப்பிட்டு படுத்துக்கோ. 
https://youtu.be/NqRaI13qIDU?t=27078


குருநாதர் :-  எதை எவை என்று புரிய இப்படியே ஆனது. இப்படியே ஆனது பல மாதங்கள் ஆனாலும் நிச்சயம் தன்னில் எவ்வாறு என்று கூட. ஆனாலும் பின் நிச்சயம் தன்னில் கூட அவ் எதை என்று புரிய சந்நியாசி கூட நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக இருந்தேன். எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட இவ்வாறெல்லாம் ஆகிவிட்டேன். எது என்று புரிய என்றெல்லாம் பிதற்றல்.




சுவடி ஓதும் மைந்தன் :-  அப்புறம் வந்து அவர் சந்நியாசி இருக்காரு இல்ல. நைட்ல பிதற்றிக்கிட்டு இருக்கிறார். வந்து என்னடா இவெல்லாம் அவர் அங்கேயே ஈசனும் படுத்துருந்தாங்கிறார். வந்து ஆனா இவர் என்ன நினைக்கிறாரு? என்னடா இதெல்லாம் இப்படி எல்லாம் இருந்தோம். இப்படி எல்லாம் ஆகிடுச்சு. இப்படி எல்லாம் இது ஆயிடுச்சேன்னு சொல்லிட்டு என்ன பண்றாரு? வந்து நினைச்சு கேக்குறாரு. 


குருநாதர் :- நிச்சயம் எதை என்று புரிய அதாவது ஈசனாரும் இதற்கு பாடம் கற்றுக்கொள்ள நன்றாக பாடம் கற்பிக்க வேண்டும் என்று நிச்சயம் எது என்று புரிய, பின் அதாவது நிச்சயம் மறைமுகமாக நிச்சயம் அதாவது ஏது என்று புரிய ஒரு மனிதனை போல் நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட, தங்க கட்டிகளும் நிச்சயம் பின் எதை என்று பணங்களையும் நிச்சயம் வைடூரியங்களையும் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அறிந்தும், ஏது என்று புரிய அதாவது நிச்சயம் எடுத்து வந்து, நிச்சயம் தன்னில் கூட ஏது என்று புரிய 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப ஈசன்  என்ன பண்றாரு? ஈசன் எங்கதான் இருக்கிறார்? நார்மல் மனுஷன் மாதிரி வேற ஒருத்தர் ரெடி பண்ணி தங்கம் தங்க கட்டி வைடூரம் கட்டி எல்லாமே என்ன பண்றாரு? கொண்டு வராரு. 


குருநாதர் :-  நிச்சயம் எதை என்று புரிய பின் அதாவது பின் என் இல்லத்தில் அதாவது அவன் மனிதனும் கூட இப்படி சொல்கின்றான். என் இல்லத்தில் எது என்று புரிய நிம்மதி இல்லை. இதனால் அனைத்தும் எடுத்து வந்துவிட்டோம். எது என்று புரிய எது என்று அறிய அதாவது நிச்சயம் பின் இதையெல்லாம் பார்த்துக் கொள்வோம். இதையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய ஏது என்று அறிய 
https://youtu.be/NqRaI13qIDU?t=27186


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப தங்க கட்டியை அதெல்லாம் எடுத்துட்டு வராங்க. இந்த சந்நியாசிகள் சொல்றாங்கப்பா இதெல்லாம் எடுத்துட்டு வந்துட்டா நம்ம எங்காவது இதெல்லாம் என்னவாப்பா இதுக்கு ஒண்ணுமே நிம்மதி இல்ல. இதெல்லாம் எடுத்துட்டு வந்துட்டா என்ன பண்ணலாம்பான்றாரு வந்து. 


குருநாதர் :- ஏது எவை என்று புரிய அதாவது நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் என்ன ஏது என்று புரிய இதனால் நிச்சயம் இது எங்கேயாவது நிச்சயம் அதாவது உன்னை தான் பார்த்தேன். நீதான் முழித்துக் கொண்டிருக்கின்றாய். 


சுவடி ஓதும் மைந்தன் :-   ஒரு மணிக்கு அது வந்து அவனை தான் இங்க பார்த்து எல்லாரும் தூங்கி நிக்கிறாங்க. வந்து உன்னை தான் நான் பார்த்தேன். முழிச்சு நிக்கிற அதனால இது என்ன பண்ணலாம் இங்க என்ன பண்ணலாம்? ஒரு மனுஷனை சந்நியாசிக்கு என்ன சொல்றாரு? பார்க்கிறார் 


குருநாதர் :-  எதை என்று புரிய நிச்சயம் எதை  என்று அறிய நிச்சயம் அதாவது அறிந்து கூட ஈசனும் பார்த்துக் கொண்டே இருக்கின்றான். எது என்று புரிய ஆனால் செல்வந்தனும் எவை என்று கூட பைத்தியக்காரனே இதையெல்லாம் எடுத்துக்கிட்டு ஓடிவிடலாமா என்று எண்ணுகின்றாயா? 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப ஈசன் பார்த்துட்டே இருக்கிறார். அதெல்லாம் என்னதான் பண்றான்னு அப்ப இவரும் யோசிக்கிறார். இன்னொருத்தரும் யோசிக்கிறார். அப்ப ஈசனை பார்த்து டேய் பைத்தியக்காரா இதெல்லாம் எடுத்துட்டு ஓடணும்னு நினைச்சுட்டு இருக்கிறேன் என்று யார் சொல்றாரு? செல்வந்தர் சொல்றாரு. அந்த சந்நியாசி சொல்றாரு. வந்து 




குருநாதர் :- அறிந்தும் ஏது என்று புரிய ஆனாலும் ஈசனும் அமைதி காத்திருக்கின்றான். நிச்சயம் தன்னில் கூட அதனால் எவை என்று புரிய அதாவது இவ் மனிதனிடம்  சொல்கின்றான். நிச்சயம் தன்னில் கூட அதாவது அனைத்தும் பின் நிச்சயம் தன்னில் கூட இவையெல்லாம் கூட்டினால் எங்கோ போயிடும். அதனால் நாம் இருவரும் சென்று விடுவோம். எங்கேயாவது இல்லத்தை அமைப்போம். நிச்சயம் சுகமாகவே வாழ்ந்து கொள்வோம் என்று. 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப அந்த மனுஷன் சொல்றாரு. சந்நியாசி சொல்றாரு. எப்பா இதெல்லாம் எடுத்துட்டு போய் என்னத்துக்கு இங்க வந்து படுத்துருக்கிறோம்? நம்பு ஏதோ ஒன்னு நான் பார்த்துட்டேன். இதெல்லாம் எடுத்துட்டு போய் பெரிய வீடு கட்டுவோம். நிம்மதியா இருப்போம். சந்தோஷமா இருப்போம். அதனால எல்லாம் எடுத்துட்டு போயிடுவோம்னு சொல்லிட்டு 


குருநாதர் :- எதை எவை போன்று எவை என்று புரியும். ஆனால் அதற்குள்ளே சிலர் வந்து நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய திருடர்கள் என்று 


சுவடி ஓதும் மைந்தன் :- அதற்குள்ளே என்ன பண்ணான்? மனுஷன் வந்து ஏய் இவங்க ஏதோ திருடுங்க, ஏதோ பேசி நிக்கிறாங்க. இந்த நாட்டுலன்னு சொல்லிட்டாரு. 


குருநாதர் :- அறிந்தும் எது என்று புரிய ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் இவர்களும் பயந்து பயந்து நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட ஆனாலும் நிச்சயம் அதாவது பையில் என்ன உள்ளது? நிச்சயம் காண்பியுங்கள், காண்பியுங்கள் என்று அவர்களும் கூட 


சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த பையில என்ன இருக்குது? அதை மூடிட்டு இருக்காங்க. வந்து என்ன ஆகுது, என்ன ஆகுதுன்னு சொல்லிட்டு என்ன பண்றாங்க? கேக்குறாங்க. அந்த திருடர்களை வந்து நைட் ஏதோ வந்து குடிச்சு ஏதோ ஒன்னு பண்ணு. 


குருநாதர் :-  ஆனாலும் நிச்சயம் தள்ளி காண்பிக்கிறார்கள். கடைசியில் நிச்சயம் அவை மண்ணாகவே தெரிந்தது. ஆனாலும் சென்றுவிட்டார்கள். 
https://youtu.be/NqRaI13qIDU?t=27331


சுவடி ஓதும் மைந்தன் :- இந்தா பார்த்துக்கோன்னு சொல்லிட்டு இவங்களுக்கு தான் தெரியுது. அது வந்து இவங்களுக்கு தெரியுது. தங்கம் எல்லாமே ஆனா அவங்களுக்கு தெரியுது என்ன? திருடர்களுக்கு வந்து மண்ணா தெரிஞ்சுக்கிறது. வந்து அவங்க என்ன பண்றாங்க? டேய், இவங்க பைத்தியக்காரங்கடா என்னது? இவங்கள அவங்க ஓடிட்டு இருக்காங்க. வந்து வேற ஒன்னும் இல்ல. இதுதான் கதை. உண்மை நடந்தது. இது வந்து 


குருநாதர் :-   அறிந்தும் இதனால் என்ன பயன்?  ஏது என்று புரிய மீண்டும் அறிந்தும் கூட பின் ஈசன் பார்த்துக்கொண்டே இருந்தான். இதனால் என்ன செய்கின்றார்கள் என்று ஆனாலும் செல்வந்தன் சொன்னான். எது என்று புரிய அனைத்தும் எது என்று புரிய. ஏது என்று அறிய பின் வேண்டாம். இதையெல்லாம் நான் பார்த்துவிட்டேன். நிச்சயம் இது வந்தாலும் இன்னும் பிரச்சனைகள் தான். எது என்று அறிய நிச்சயமாக அதாவது பின் இருக்கும் வரை தான் அனைத்தும் உற்றார் உறவினர். இன்னும் மனைவி, இன்னும் சுகங்கள் எல்லாம் நிச்சயம் வேண்டாம். இவையெல்லாம் எடுத்து போய் எடுத்துப்போய் நிச்சயம் தன்னில் கூட அண்ணாமலையருக்கே இட்டுவிடு என்று. ஆனாலும் நிச்சயம் எது என்று புரிய. 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன பண்றாரு? நான் எல்லாம் பார்த்துட்டேன்பா. மனைவி பார்த்துட்டேன், பிள்ளையை பார்த்துட்டேன், சொந்த பந்தங்களை பார்த்துட்டேன். நான் நிறைய சேர்த்து வச்சேன். நான் கூட வந்து கடைசில என்ன ஆச்சு? இங்கதான் வந்து உட்கார்ந்து இருக்கேன். அதனால என்ன பண்ணு? அண்ணாமலைக்கு போயிடுன்றார். அண்ணாமலைக்கு போட்டுறேன்றார். 


குருநாதர் :-  எதை ஏது என்று புரிய. நிச்சயம் ஈசனும் எழுந்து மூட்டை கட்டினான். எதை என்று புரிய எடுத்துச் சென்றான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஈசன் உடனே என்ன பண்ணாரு? அந்த மூட்டை கட்டி டப்புக்குன்னு எடுத்துக்கினார். வந்து பின்னாடி எடுத்துக்கினார். 


குருநாதர் :-  எது என்று புரிய. நிச்சயம் இவர் இருவரும் பின்னே வருகின்றார்கள். நிச்சயம் பைத்தியக்காரனே எவை என்று அறிய. பைத்தியக்காரன் என்றால் நீ திருடனாக இருக்கின்றாயே என்று 


சுவடி ஓதும் மைந்தன் :-  இவர் டக்குனு மூட்டை கட்டி போயினே இருக்கிறார். டேய், டேய், நில்லுடா, நில்லுடா, உன்னை பைத்தியக்காரன்னு நினைச்சேன். இவன்டா இதை எடுத்துட்டு ஏன்டா போறேன்றாரு? 


குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட நீங்கள் எவை என்று இருவரும் பேசினீர்கள் அல்லவா? எது என்று கூறப்பின் இது ஈசனுக்குத்தான். அதாவது நிச்சயம் சொந்தம் என்று அதனால்தான் எடுத்துச் செல்கின்றேன் என்று எது என்று புரியப்பின் அப்பொழுது நிச்சயம் விஸ்வரூபத்தை காட்டினான் இறைவன். எது என்று புரிய நிச்சயம் அப்பொழுதுதான் புரிந்தது. எது என்று அறிய இதனால் மீண்டும் எவை என்று அறியாமல் கூட இதனால் நிச்சயம் அறிந்து கூட இவ்வாறெல்லாம் நிச்சயம் என்ன வேண்டும் என்று அச்செல்வந்தனுக்கு நிச்சயம் ஈசன் பின் கட்டளையிட, பின் ஒன்றும் பேசவில்லை. 


குருநாதர் :- இறைவா, பார்த்துவிட்டேன். உன் தரிசனம் எது என்று புரிய ஆனாலும் நான் இங்கே தான் தங்குவேன். எது என்று புரிய இதனால் நிச்சயம் இங்கு இருப்போருக்கெல்லாம் அன்னத்தை சரியாக கொடு. போதும் எது என்று கூட அனைத்தும் தேவையானதெல்லாம் கொடு. இதுபோலத்தான் நிச்சயம் சொத்து சுகங்கள் இழந்து, பணம் இழந்து, மனைவி இழந்து, இங்கு வந்து விடுதார்கள். இதனால் அனைவருக்கும் தேவையானது மட்டும் கொடு. தேவையில்லாததை கொடுத்து நீ கெடுத்து விடாதே என்று 


சுவடி ஓதும் மைந்தன் :- அய்யா  கொஞ்சம் எக்ஸ்பிளைன் பண்ணுங்க ஐயா. 


https://youtu.be/NqRaI13qIDU?t=27489’


( ஆடியோ தடங்கல்கள் ) 


அடியவர்  4:-  அப்போ வந்துட்டு அந்த செல்வந்தர் சொல்றாரு. சோ, இங்க வந்தவங்க எல்லாருமே குடும்பம், மனைவி, குழந்தை, செல்வம் எல்லாத்தையும் விட்டுட்டு தான் வந்திருக்காங்க. அதனால அவங்களுக்கு வந்து தேவையானதை மட்டும் கொடுங்க. பெருமானே, ஈசப் பெருமானே, வந்துட்டு சாப்பாடு, அன்னம் கொடுங்க. அன்னம் கொடுத்துட்டு மற்றது என்ன தேவையோ, தேவையை மட்டும் கொடுங்க. தேவையில்லாதது எதையும் கொடுத்து அவரை கெடுத்துறாதீங்க. மனிதனை கெடுத்துறாதீங்க. தேவையில்லாததை கொடுக்காதீங்க. அப்ப அண்ணாமலைக்கு வந்தா என்ன தேவையோ, அந்த ஆத்மாக்கு என்ன தேவையோ, அதை மட்டும்தான் வந்து அண்ணாமலையார் கொடுப்பார். நம்ம கேட்கிறதுனால எல்லாத்தையும் கொடுக்க மாட்டார். அந்த ஆத்மாக்கு என்ன வேணுமோ, அதை மட்டும்தான் கொடுப்பார். நம்ம தேவையில்லாதது ஏதாவது கேட்டா, கர்மத்தை கேட்டா, கர்மத்தை கொடுக்க மாட்டார். அது கர்மத்தை சேர்க்கிற மாதிரி இருந்தா, அதை கொடுக்க மாட்டார். 


குருநாதர் :-  எது என்று புரிய. இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட இப்படிப்பட்ட மனது வேண்டும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப அந்த வந்து கோடி கடையை கணக்குல எடுத்துட்டு வந்து கொடுத்தார் பாரு. அதை செல்வந்தன் என்ன பண்ணான்? டேய், வேணாம்டா, இறைவனுக்கு சொந்தம்னு சொல்றாரு பாரு. அந்த மனசு உங்களுக்கு வேணும்பா. 


குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட அவ்வாறாக இருந்தால் இறைவன் கண்ணுக்கு தெரிவான். இல்லையென்றால் தெரியப்போவதில்லை. எப்படி இருந்தாலும் 


சுவடி ஓதும் மைந்தன் :-  அது மாதிரி மனசு இருந்தா மட்டும்தான் எதுவும் தேவையில்லை. எல்லாம் இறைவனுக்கு தான் சொந்தம். எல்லாம் இறைவனுடைய சொந்தம்னு சொல்லிட்டு யார் ஒருத்தர் நினைக்கிறாரோ, அப்பதான் இறைவனுக்கும் கண்ணுக்கு தெரிவார். 


குருநாதர் :-  தாயே, நிச்சயம் தன்னில் கூட குழந்தைகள், அதாவது நிச்சயம் தன்னில் கூட வருங்காலத்தில் நிச்சயம் நிறைய நோய்கள் வரும் தாயே. 


===========================
# எம்பெருமான் ஆதி ஈசன் வருகை….
===========================

குருநாதர் :-  எதை என்று கூற பின், அதாவது அம்மா, இதனால் நிச்சயம் குழந்தைகளுக்காக நன்றாக இருக்க வேண்டும் என்று ஒரு பாடலை பாடு. ஈசன் பார்த்துக் கொண்டே இருக்கின்றான். 


https://youtu.be/NqRaI13qIDU?t=27602


சுவடி ஓதும் மைந்தன் :-   குழந்தைகளுக்கு நிறைய நோய்கள் வரும், உடம்பு சரியில்லாமல் போகும். இப்ப ஈசன் பார்த்துக் கொண்டே இருக்கிறார். குழந்தைகளுக்காக ஒரு பாடல் பாடு, நல்லா இருக்கணும்னு சொல்லிட்டு, ஐயா, நீங்க வேண்டிக்கோங்க. ஐயா, அடுத்து குழந்தைகள் வந்துட்டாரு. ஃபர்ஸ்ட் சட்டத்துக்காக வந்தார். அடுத்து குழந்தைகளுக்காக வரார். 


அகத்திய மாமுனிவரின் அன்னை:-  (அருமையான பாடல் பாடினார்கள் )


https://youtu.be/NqRaI13qIDU?t=27735 


அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே
அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே []


செம்மாதர் போற்றும் செந்தூர் வேலவா
சிவனார் உள்ளம் குளிரும் குமரா
செம்மாதர் போற்றும் செந்தூர் வேலவா
சிவனார் உள்ளம் குளிரும் குமரா


(அம்மாவும் நீயே...)


பொல்லாத வினைகள் தீர்க்கும் தேவா
புண்ணியம் தங்கும் பழனி ஆண்டவா
பொல்லாத வினைகள் தீர்க்கும் தேவா
புண்ணியம் தங்கும் பழனி ஆண்டவா
வல்லாளன் கண்ட திருத்தணிகேசா
வள்ளல் முருகா, வடிவேல் குமரா
வல்லாளன் கண்ட திருத்தணிகேசா
வள்ளல் முருகா, வடிவேல் குமரா


(அம்மாவும் நீயே...)


கார்த்திகைப் பெண்கள் அறுவரால் வளர்க்கப் பட்டாய்
காத்தருள் புரியும் கடம்பனே ஆனாய்
கார்த்திகைப் பெண்கள் அறுவரால் வளர்க்கப் பட்டாய்
காத்தருள் புரியும் கடம்பனே ஆனாய்
பார்த்திபன் காணும் திருப்பரங் குன்றில்
பக்தர்கள் போற்றும் பரமனும் நீயே
பார்த்திபன் காணும் திருப்பரங் குன்றில்
பக்தர்கள் போற்றும் பரமனும் நீயே


(அம்மாவும் நீயே...)


( அருமையாக பாடல் பாடி முடித்தார்கள் ) 


https://youtu.be/NqRaI13qIDU?t=27916




குருநாதர் :-  அனைவரும் சோர்வு தட்டி எழுப்பு 


சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாரும் சோர்வு வைட்டாங்க தட்டி எழுப்புமா. அதுமாதிரி பாடல் பாடுங்க.  வேலைவா அதெல்லாம் பாடுங்கமா.


அகத்திய மாமுனிவரின் அன்னை:-  (அருமையான பாடல் பாடினார்கள் - வேலவா வடி வேலவா ….. )


பாடல் நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=27946 


ஒரு அடியவர் :- ( அருமையாக பாடல் பாடிய அன்னையை,  மேடையின் அருகில் வந்து மாலை அணிவித்து கௌரவித்தார்கள்…மற்றும் பல அன்பளிப்புகள் அங்கு இவ் குழந்தை அன்னைக்கு….நெகிழ்ச்சியான தருணங்கள்…..) 


நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=28213


சுவடி ஓதும் மைந்தன் :-  பாடுங்க அம்மா.


அகத்திய மாமுனிவரின் அன்னை:-  (அருமையான பாடல் பாடினார்கள் - “நீயல்லால் தெய்வமில்லை …முருகா !!!!!!” )


நேரலை :-  https://youtu.be/NqRaI13qIDU?t=28277


===========================
# அருணகிரிநாதர் வருகை….
===========================

https://youtu.be/NqRaI13qIDU?t=28669


குருநாதர்:- அம்மா அருணகிரி வந்திருக்கின்றான் இப்பொழுது  அதாவது அவன் பாட்டு பாடிட்டு அவனையே மடக்கி அருள்களை அனைவருக்கும் வாங்கி தரலாம். பாடு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அருணகிரி வந்திருக்காராம். அவர் பாடிய பாடலே நீ பாடிட்டு அவரையே மடக்கி இவங்க அருள் கொடுத்தலாம். பாடு அம்மா  முத்த எங்க இருக்கறாங்க ஏன்னா மறைமுகம் தெரியாது.


அகத்திய மாமுனிவரின் அன்னை:-  (அருமையான பாடல் பாடினார்கள் - “முத்தை பத்தி திருநகை” )

நேரலை :-  https://youtu.be/NqRaI13qIDU?t=28735 

( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 24/05/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் …..)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment