இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.
அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 24/05/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 7
நாள், நேரம் : 24/05/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை
முழு நிகழ்வின் நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=1
இடம் : உலக நன்மைக்காக 10 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.
===========================
# இவ் 7ஆம் பகுதி வாக்கின் நேரலை:- https://youtu.be/NqRaI13qIDU?t=22502
===========================
===========================
# சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னைக்கு அன்பளிப்பு
===========================
சிவ குழந்தை பாடல்:- ( வேலவா வடி வேலவா )
( இவ் பாடல் பாடும் வேளையில் அனைத்து அடியவர்களும் மிகுந்த பக்தி பரவசம் அடைந்தனர். அவசியம் நேரலையில் பார்த்து , கேட்டு மகிழுங்கள்)
பாடல் நேரலை - https://youtu.be/NqRaI13qIDU?t=21983
வேலவா வடி வேலவா
வேடனாக வந்து நின்ற வேலவா
ஓடிவா.... நண்பரை நாடிவா
ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா (வேலவா வடி)
வேலவா!!!!!!!
வெற்றிவேல் முருகனுக்கு.... அரோகரா!
வள்ளி மணவாளனுக்கு.... அரோகரா!
சின்னஞ்சிறு பாதம் எடுத்து ஆடிவா.... ஆடிவா (சின்னஞ் சிறு)
சிங்கார வேலுடனே ஒடிவா.... ஓடிவா (சிங்கார வே)
சிந்தையிலே நினைப்பவரை நாடிவா...
(உன்னை) சிந்தையிலே நினைப்பவரை நாடிவா....
சின்னஞ் சிறு சிவகுமரா ஓடிவா
வேலவா!!!!!!!
வெற்றிவேல் முறுகனுக்கு..... அரோகரா!
வள்ளி மணவாளனுக்கு..... அரோகரா!
அடியவர்கள் :- ( பாடல் நிறைவில் …பலத்த கைதட்டல்கள் )
சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னைக்கு அன்பளிப்பு:- ( பல பெரியோர்கள் , சிவனடியவர்கள் அங்கு சிவ குழந்தைக்கு அன்பளிப்பு வழங்கினார்கள்.)
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
===========================
# குழந்தாய் உன்னை என் அன்னை என்று அழைத்தேன்.
===========================
குருநாதர் :- அம்மா அறிந்தும் இன்னும் பின் உலகத்தில் எதை எதையோ, இன்னும் கட்டுப்பாடுகள், இன்னும் நோய்கள் வரப்போகின்றது. குழந்தாய், அதாவது குழந்தாய் என்று யான் ஏது என்று புரிய, என் அன்னைத்தான் என அழைத்தேன்.
இதனால் இவ் அன்னைக்கு முருகன் நிச்சயமாய் பின் இறங்கி வருவான்.
===========================
# அனைத்து மத தெய்வங்களும் இவ் அம்மையை பார்த்த மகத்தான தருணம் …..
===========================
குருநாதர் :- இதனால் அறிந்தும் அனைத்து தெய்வங்களும் மகிழ்வுடன் உன்னை பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். இவ் உலகத்தில் உள்ள வெவ்வேறு மதத்தில் ஆயினும், அனைத்து இக்குழந்தைக்கு இவ்வளவு பெரிய ஞானமா என்று.
இதனால் இப்பாடலை மீண்டும் பாடு. அவர்களும் சந்தோஷம் அடையட்டும்.
===========================
# **** “ உன் புகழ் இன்னும் செல்லட்டும், அம்மா!! ” ****
===========================
குருநாதர் :- அனைவரும் வந்துதான் இருக்கின்றார்கள், பார்த்துதான் கொண்டிருக்கின்றார்கள். உன் புகழ் இன்னும் செல்லட்டும். அம்மா.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாரும் எந்த மதத்திலாவது, மத எல்லாம் கிடையாது, ஜீசஸ் ஆயினோ, அப்புறம் யாரு? அல்லா, அதான் அல்லா ஆயினோ, புத்தர் ஆயினோ, இந்த பொண்ணு இப்படி பாடுறியேப்பான்னு சொல்லி எல்லாரும் ஒரு இடத்துல பார்த்துதான் இருக்கறாங்க. வந்து
இன்னும் உன் புகழ் ஓங்கட்டும். எல்லா உலகை நல்லா வந்து ஆக்கட்டும். எல்லாம் முருகன் ஓடி வரட்டும். வரங்கள் கொடுக்கட்டும். எல்லாத்தையும் நல்லதாகட்டும். எல்லாம் நல்ல மனசை கொடுக்கட்டும்னு சொல்லிட்டு மீண்டும் அம்மா அகத்தியர் இங்க குழந்தை ஆயிட்டாரு. நீயே பாடமான்னுட்டாரு.
வரட்டும்மா முருகன். ஐயா, தயவு செய்து நல்லா ஒரு சின்ன குழந்தைங்க ஐயா வந்து…. ஒன்னும் தெரியாத குழந்தை.
எவ்வளவு ஞானம், எவ்வளவு ஞானம். அதனால வந்து இறைவனே இங்க அனுப்பிச்சிருக்காருன்னுதான் நான் நினைப்பேன். அதனால வந்து கேட்ட வரங்கள் கண்டிப்பா கொடுப்பார் நம்மளுக்கு வந்து.
அதனால நல்லா கைதட்டி பாராட்டுங்கள். இறைவன் கண்டிப்பா இறங்குவார். எல்லாரும் நல்லா கைதட்டுமா வந்து. குழந்தை சின்ன குழந்தமா.
அடியவர்கள் :- ( பலத்த கைதட்டல்கள் )
சிவ குழந்தை பாடல்:- ( வேலவா வடி வேலவா )
( அவசியம் நேரலையில் பார்த்து , கேட்டு மகிழுங்கள்)
நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=22320
அடியவர்கள் :- (பாடி முடித்த பின்னர்…. பலத்த கைதட்டல்கள் )
===========================
# அகத்திய மாமுனிவரை வணங்கிக் கொண்டே , அகத்திய மாமுனிவரை தவறாக பேசும் மனிதர்களுக்கு….
===========================
===========================
# இப்பொழுது நீ தான் என் தாய்.
===========================
குருநாதர்:- அம்மா, அறிந்தோம் எத்தனையோ. யான் இங்கு சிறு பிள்ளையாகவே இருக்கின்றேன்.
எத்தனையோ மனிதர்கள் அகத்தியன் பொய் என்றும்,
இன்னும் வேஷம் என்றும்,
இன்னும் பல மனிதர்கள் எனை வணங்கிக்கொண்டே ஏராளம் பேசுகின்றனர்.
தாயே, அம்மையே, எவ்வாறு செய்வது?
பின் அவ் அதாவது, என்னை வணங்கியும், எவ்வாறு கிண்டலடித்தும், கேலி செய்தும் வருகின்றனர். இவர்களுக்கெல்லாம் என்ன தண்டனை யான் தருவது?
தாயே !! , யான் உன்னிடத்திலே கேட்கின்றேன்.
**** “ இப்பொழுது நீ தான் என் தாய்.” ****
சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றார் தெரியுமா, அகத்தியர் வந்து— என்ன சொல்றார் தெரியுங்களா? தாயே, அம்மா கையில வந்து பேசுறார் யாரு? அகத்தியர்.
அம்மா கையில பேசுறார். என்னை வணங்கிக்கொண்டே பொய்யன்னு சொல்றாங்க. அகத்தியன் இல்லைன்னு சொல்றாங்க. அந்த சுவடி எல்லாம் பொய்யன்னு சொல்றாங்க. இதோட முடிஞ்சிடும். சித்தர்கள் இல்லைன்னு சொல்றாங்க.
அம்மா, அவர்களுக்கெல்லாம் நான் என்ன தண்டனை தரட்டுமான்னு கேக்குறார் உங்களை வந்து.
அய்யா புரியுதுங்களா? நான் என்ன தண்டனை கொடுக்கட்டுமா? சொல்லுமான்றார். நீதி நீதான் சொல்லணும்.
அன்பு அகத்திய மாமுனிவரின் அன்னை:- ( பலத்த சிந்தனையுடன் பதில் சொல்ல தயார் ஆனார்கள்… )
சுவடி ஓதும் மைந்தன் :- ஏன்னா, நல்லா கேளு, குட்டி. அகத்தியர் வணங்கியே வந்து, "நான் உண்மை, பொய், அது... (ஓலை சுவடி) அது உண்மை இல்ல, அதெல்லாம் அப்படித்தான் நடக்கும், இதெல்லாம் நல்லது செய்ய முடியாது" எல்லாமே அகத்தியர் வணங்கினையே அது மாதிரி சொல்லிக்கிறாங்க. பல இதுல வந்து, இதெல்லாம் முடியாது, அதெல்லாம் சொல்லிட்டு, (அகத்தியன்) நான் பிள்ளையா இருக்கிறேன்மா உனக்கு? நீ அம்மா, நான் அவன் எல்லாம் எப்படி தண்டிக்கிட்டேன்னு கேக்குறார் உங்களை வந்து.
===========================
# கருணைக்கடல் அன்னையின் உயர் அன்பு
===========================
நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=22602
அன்பு அகத்திய மாமுனிவரின் அன்னை:- எங்களுக்கு இருக்கிறது ஆறறிவு தான். அதனால தப்பா நினைச்சிருந்தாலும், நீ அவங்களுக்கு புரிய வை.மன்னித்துவிடு…
அடியவர்கள் :- ( பலத்த கைதட்டல்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- அம்மா, ஐயா,
அடியவர்கள் :- ( தொடர்ந்து ஒலித்த பலத்த கைதட்டல்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- இதுதான் அகத்தியர். ஒரு அம்மா. இங்க பாருங்க, அகத்தியர் என்றது யாராலும் புரிஞ்சுக்க முடியாதுங்க. சத்தியமா சொல்றேங்க, ஐயா, வந்து. எந்த பக்தனாலும் புரிஞ்சுக்க முடியாது இதெல்லாம் வந்து. குழந்தை பேசுது. யாரு இங்க குழந்தை? அகத்தியர்.
இப்படி எல்லாம் பேசுறாங்கமா? என்னை வணங்கி வந்து, இப்படி எல்லாம் அம்மா, இப்படி எல்லாம் வணங்குறாங்க. என்னை திட்டுறாங்க, அது பொய், இப்படியே நின்னுடும், இதெல்லாம் நடக்காது. இது மாதிரி எல்லாம் கர்மா, இதெல்லாம் எல்லாமே சொல்றாங்கமா. நான் என்னமா தண்டனை கொடுக்கட்டும்னா,
(இந்த குழந்தை) அம்மா சொல்றாங்க, அகத்தியருக்கு, (தன்) பிள்ளைக்கு. என்ன சொல்றாங்க? அவங்களெல்லாம் ஆறறிவு தான். புரியல. (அகத்தியா) நீயே புரிய வைன்னு (இந்த குழந்தை) அம்மா வந்து ஒரு பிள்ளைக்கு சொல்லுது.
அடியவர்கள் :- ( தொடர்ந்து ஒலித்த பலத்த கைதட்டல்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- எவ்வளவு பெரிய அறிவு! எவ்வளவு ஞானம்! பாருங்கம்மா, இறைவன் இதுதான். இப்படி எல்லாம் இருந்துட்டு என்ன நாட்டை வந்து, அவங்க அவங்க வேலை பார்த்துட்டே போவாங்க. நாட்டுல குற்றம் நடக்காது, குறை இல்லாம எல்லா செல்வத்தையும் பெற்று வாழ்வாங்க. அகத்தியரே, இது அனுபவம் தான் வந்து.
===========================
# அன்னையிடம் மீண்டும் கேட்ட குருநாதர்.
===========================
குருநாதர்:- தாயே, பின் , அம்மா, இன்னும் கூறு, யான் என்ன செய்யட்டும்?
சுவடி ஓதும் மைந்தன் :- நான் அவர்களை என்ன செய்யட்டும்? திரும்பியும் சொல்றார் உங்க கையிலேயே வந்து.
===========================
# அன்னையின் உயர் அன்பு, பெரும் கருணை….
===========================
நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=22684
அன்பு அகத்திய மாமுனிவரின் அன்னை:- **** “மன்னிச்சிடலாமே.” ****
அடியவர்கள் :- ( கைதட்டல்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றாங்க பார்த்தீங்களா? இதுதான் உயர்ந்த பண்பு. குற்றம் சொன்னாலோ, குற்றம் புரிந்தாலோ, அகத்தியர் பெயர் சொல்லி நடிச்சாலோ, அம்மா சொல்றாங்க, பிள்ளைக்கு நீ மன்னிச்சிருப்பா.
ஐயா, எப்பேர்ப்பட்ட ஒரு இது! அகத்தியர் வந்து இங்க சொல்லறார் ஓலை சுவடியில. அகத்தியர் என்ன சொல்றாரு, இது வந்து எப்பேர்ப்பட்ட ஒரு ஞானம். அம்மான்னு சொல்லிட்டு, அம்மான்னு சொல்லிட்டு, குழந்தை வந்து என்ன சொல்றாங்க, அது மாதிரி மனிதனுக்கு அறிவு இல்ல. குழந்தைக்கு அம்மா சொல்லிக் கொடுக்குறாங்க. அவங்கள என்ன பண்ணு? புரிய வை. ஒன்னு புரிய வைக்கணும். அவங்கள அறிவு ஆறறிவு தான், நீ புரிய வைப்பா.
அம்மா சொல்றாங்க, குழந்தைக்கு.
யார் குழந்தை இங்க?
அகத்தியர் தான் குழந்தை.
அப்ப அப்படி என்ன செய்யலாம்னு சொன்னானா, நீ மன்னிச்சிட்டு ஒரு தடவை. என்ன பெரிய ஞானம்ங்க, ஐயா. யாருக்கு இந்த ஞானம் கிடைக்கும்? யாருக்கு கிடைக்கும் இந்த ஞானம்?
https://youtu.be/NqRaI13qIDU?t=22734
அதனால இந்த ஞானத்தை பெறணும். இந்த ஞானத்தை பெறத்தால் மட்டும்தான் இறைவனை காண முடியும். நான் வணங்கினேன், நான் வந்து பூஜை போட்டேன், நான் வந்து மாலை போட்டேன், நான் அப்படி போட்டேன், இப்படி போட்டேன். இந்த மனசு வேணுங்க, ஐயா, வந்து. அதனாலதான் அகத்தியர் விளையாடுறாரு, இந்த குழந்தை கிட்ட வந்து.
அகத்தியர் வாக்கு சொல்லல. நீயே சொல்லுமா மக்களுக்குன்றார் வந்து. புத்தி வரணும், அறிவு வரணும், தெளிவு வரணும். அதனால என்ன சொல்றாரு, ஒரு சின்ன பாப்பா வச்சு.
ஏன்னா நிறைய பேர் இது வந்து கூட்டு பிரார்த்தனை நடக்குறதுல வந்து, நிறைய பேருக்கு ஏதோ சிந்திச்சு இருப்பாங்க. அவங்க அவங்க வந்து. அதனால புத்தி வளரட்டும்டான்னு சொல்லிட்டு என்ன பண்றாரு, குழந்தை மூலமாவே, நான் பிள்ளை, நீ அம்மா, நீ நடத்துமான்றார் வந்து. வேற ஒன்னும் இல்ல.
===========================
# நுண்ணுயிர் ஆபத்து - மனிதர்களை கொல்லத்தான் போகின்றது.
===========================
# முருகனிடத்தில் வேண்டுதல் வைத்தால், அனைத்து தெய்வங்களிலும் வைத்தார் போல்.
===========================
குருநாதர்:- ஏது என்று புரிய, இன்னும் பின் அறிந்தும், இன்னும் நுண்ணுயிரி, பின் வரத்தான் போகின்றது. மனிதர்களை கொல்லத்தான் போகின்றது.
குருநாதர்:- ஆனாலும் முருகனிடத்தில் , அதாவது முருகனிடத்தில் வைத்தால், அனைத்து தெய்வங்களிலும் வைத்தார் போல்.
===========================
# அனைத்து தெய்வங்களும் உன்னை பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றது.
===========================
குருநாதர்:- தாயே, நிச்சயம் தன்னில் கூட அழகாக, நிச்சயம் அனைத்து தெய்வங்களும் உன்னை பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றது. இதனால் இப்பாடலை மீண்டும் பாடு, கேட்கட்டும்.
அடியவர்கள் :- ( தொடர்ந்து ஒலித்த பலத்த கைதட்டல்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- பாடுமா. வேலை. ஐயா, எல்லாரும் ஒரு சின்ன, ஐயா, நல்லது நினைச்சுக்கோங்க. ஏன்னா நாட்டுல நல்லா இருக்கணும் வந்து. ஆளவங்கும் நல்லா இருக்கணும் வந்து. ஏன்னா நல்ல சூட்டு கீடு சண்டைகள் வரப்போகுதாம் வந்து. அதனால வந்து அதெல்லாம் தீர்க்கணும். நல்லா இது பண்ணனும்னு சொல்லிட்டு, இறைவனிடத்தில் வேண்டினே இருங்க.
இறைவன் இங்கதான் இருக்கிறார் வந்து. இந்த பிள்ளை பாடும் பொழுது மனசுல நினைச்சுக்கோங்க. அப்பா, இதே மாதிரி எல்லா சந்தோஷத்தையும் நாட்டு மக்கள் நல்லா இருக்கணும்பான்னு சொல்லிட்டு வேண்டிக்கோங்க, ஐயா, தயவு செய்துங்க, ஐயா. பாடுமா.
அகத்திய மாமுனிவரின் அன்னை:- ( மீண்டும் வேலவா வடி வேலவா பாடல் பாடினார்கள்)
பாடல் நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=22839
===========================
# குருநாதரின் திருவிளையாடல் ஆரம்பம் - வைர காதணி அன்பளிப்பு.
===========================
சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னைக்கு வைர காதணி அன்பளிப்பு:-
( குருநாதரின் திருவிளையாடல் - அடியவர்கள் அவசியம் பின் வரும் நேரலையை அவசியம் பார்க்கவும். அப்போதுதான் முழுமையாக நன்கு புரியும்)
வைர மோதிரம் பரிசு நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=23013
பரிசு ஒன்று கொடுத்த அம்மை அடியவர் :- ( வைர மோதிரம் ஒன்றை சுவடி ஓதும் மைந்தனிடம் கொடுத்தார்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- என்னது அது? நம்மளுக்கா? ( பிரித்து பார்த்தார் )
அடியவர் 2 :- கூட்டு பராயணத்துக்காக கொடுத்திருக்காங்க, ஐயா. சொல்லுங்க அம்மா .
பரிசு ஒன்று கொடுத்த அம்மை அடியவர் :- ( பணம் கொடுப்பதற்கு பதிலாக வைர மோதிரம் சுவடி ஓதும் மைந்தனிடம் கொடுக்கின்றேன் என்று உரைத்தார்கள் - ஆடியோ தடங்கல்கள்)
சுவடி ஓதும் மைந்தன் :- ( வைர காதணி ) எனக்கா?.
அடியவர் 2 :- ஆமாம் .
பரிசு ஒன்று கொடுத்த அம்மை அடியவர் :- ( ஆமாம் என்று தலை அசைத்தார்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- ஓகே. எவ்வளவு இது வந்து?
அடியவர் 2 :- 1.5.
பரிசு ஒன்று கொடுத்த அம்மை அடியவர் :- 1.5.
===========================
# சுவடி ஓதும் மைந்தனின் பரந்த மனம்
===========================
https://youtu.be/NqRaI13qIDU?t=23044
சுவடி ஓதும் மைந்தன் :- அம்மா, எல்லாரும் தெரிஞ்சுக்கோங்க. லட்சக்கணக்கு இது வந்து. இது என்ன, அது வைரம்.
( அனைவருக்கும் தெரியும் வண்ணம் எடுத்து காண்பித்தார்கள். )
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :-
( மனிதர்களின் அன்பு, பாசம், கருணை, சேவை மனப்பான்மை தான் உண்மையான வைரம்; பணம், தங்கம், உடம்பு, பொருள் எல்லாம் தற்காலிகம். பூ விற்கும் அம்மா கூட தன் வருமானத்தில் இருந்து உணவு வாங்கி கொடுக்கும் அளவுக்கு மக்கள் காட்டும் அன்பு அவரை உருக்குகிறது; இதுவே அவருக்கு கோடி மதிப்புள்ள செல்வம். அகத்தியரின் அருளால் தான் தன்னை மக்கள் சேவை செய்ய வைத்திருக்கிறார் என்று நம்புகிறார்; தர்மம், நியாயம், நல்ல மனசு, பிறருக்கு உதவுதல் — இவை தான் மனித வாழ்க்கையின் அடிப்படை என்று வலியுறுத்துகிறார். எல்லாரும் ஒரே தாயின் பிள்ளைகள் என்று நினைத்து பிறருக்காக உழைக்க வேண்டும், புண்ணியம் சேர்க்க வேண்டும், நல்ல எண்ணம் வைத்தால் இறைவன் தூக்கி வைப்பார் என்று கூறுகிறார். கோடி ரூபாய் இருந்தாலும் ஒரு ரூபாய் கூட நமக்கு தேவையில்லை; அள்ளி கொடுங்கள், பிறருக்கு உதவுங்கள் — இதுவே உண்மையான செல்வம். உடம்பு, பொருள், பணம் எல்லாம் இறைவனுடையது; நாமே எதையும் வைத்திருக்க முடியாது, அதனால் தர்மத்தை நிலைநாட்டி, நல்ல மனசுடன் வாழ வேண்டும்)
===========================
# பாட்டி அம்மாவுக்கு வைர காதணி ஞான அன்பளிப்பாக …..
===========================
சுவடி ஓதும் மைந்தன் :- ( இவ் குழந்தையை , எனது குருநாதரின் அன்னை என்று சொல்லி , எனக்கு பாட்டி போன்று என்று உரைத்து , இவ் குழந்தையின் / பாட்டியின் கால்களில் விழுந்து ஆசி பெற்றார். அத்துடன் இவ் வைர காதணியை இவ் குழந்தைக்கு ஞான அன்பளிப்பாக அளித்தார்கள். )
நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=23268
சிவ குழந்தையின் தந்தை:- ( வைர காதணியை அன்பளிப்பு பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே ..என்ற பாடலை பாடினார்கள்)
நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=23779
சுவடி ஓதும் மைந்தன் :- ( அய்யா எனக்காக இன்னொரு முறை இவ் பாடலை பாடுங்கள் )
சிவ குழந்தையின் தந்தை:- ( மீண்டும் இரண்டாம் முறையாக பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே ..என்ற பாடலை பாடினார்கள்)
நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=24016
===========================
# தாயே, நீ பாடினால் வயிறு நிரம்பும்.
===========================
குருநாதர் :- தாயே, இது உண்மை; நீ பாடினால் வயிறு நிரம்பும். இதனால் பாடு, முருகனை நினைத்து.
சுவடி ஓதும் மைந்தன் :- நீ பாடினேன்னா, உடம்பு ஒன்னு சாப்பிட பசிக்கு எல்லாம் வந்து நிறைஞ்சிடுமாம். அதனால நீங்க பாடுங்க.
அம்மா, அந்த பாட்டு பாடுங்கம்மா. அந்த வேலவா, அந்த பாடுங்கம்மா. ஐயா, எல்லாரும் கை தட்டுங்க, ஐயா. நல்லா இருக்கட்டுங்க, ஐயா.
ஒரு அடியவர்:- ( இவ் குழந்தை அன்னைக்கு ….அன்பளிப்பு )
சுவடி ஓதும் மைந்தன் :- பாப்பாக்கு. குட்டி இல்ல, அகத்தியர் அம்மாக்கு.
===========================
# இவ் குழந்தை பேசியது அனைவருக்கும் தெரிய வேண்டும்
===========================
சுவடி ஓதும் மைந்தன் :- பாடுங்கம்மா. அம்மா, எல்லாரும் நினைச்சுக்கிட்டு நல்லா பாடுங்கம்மா. தயவு செய்து பாடுங்கம்மா. அந்த குழந்தைமா, பச்சை குழந்தைமா வந்து என்னமா தெரியும்? வந்து இது எல்லா பக்தருக்கும் தெரியணும். வந்து என்னென்ன பேசுறது? அகத்தியர் சூப்பரா இன்னைக்கு விட்டுருக்காரு. பத்தாவது கூட்டு பிரார்த்தனைல ஒரு சின்ன குழந்தையை எடுத்துட்டு வந்து… பாடுங்கம்மா.
அகத்திய மாமுனிவரின் அன்னை:- ( வேலவா வடி வேலவா பாடல் பாடினார்கள் )
பாடல் நேரலை :- - https://youtu.be/NqRaI13qIDU?t=24775
===========================
# தாயே இறைவன் ஆனந்தம் ஆகட்டும் செழிப்பு ஏற்படட்டும். நிச்சயம் மீண்டும் பாடு, அம்மா.
===========================
குருநாதர் :- தாயே, இன்னும் எதை என்று புரிய, இறைவன் ஆனந்தம் ஆகட்டும். நிச்சயம் தன்னில் கூட ஆனந்தம் ஆகட்டும்; செழிப்பு ஏற்படட்டும். நிச்சயம் மீண்டும் பாடு, அம்மா.
அகத்திய மாமுனிவரின் அன்னை:- ( வேலவா வடி வேலவா பாடல் பாடினார்கள் )
பாடல் நேரலை :- - https://youtu.be/NqRaI13qIDU?t=24937
( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 24/05/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் …..)
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)

No comments:
Post a Comment