​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 10 July 2026

சித்தன் அருள் - 2245- அன்புடன் அகத்தியர் - 24/05/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 11



அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 24/05/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 11

நாள், நேரம்  : 24/05/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 


முழு நிகழ்வின் நேரலை :-  https://youtu.be/NqRaI13qIDU?t=1 

இடம் : உலக நன்மைக்காக 10 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.


===========================
# இவ் பகுதி வாக்கின் நேரலை:-  https://youtu.be/NqRaI13qIDU?t=32161 
===========================

( வணக்கம் அடியவர்களே , இவ் பகுதி மிக முக்கிய வாக்கு. பல ரகசியங்கள் அடங்கிய வாக்கு. அவசியம் பொறுமையுடன் படிக்க நன்று.  இவ் வாக்கை நேரலை உடன் இணைத்து பார்த்து, பின்னர் இவ் வாக்கையும் படிக்க முழு புரிதல் உண்டாகும். அங்கங்கு நேரலை இணைப்பை கொடுத்துள்ளோம். அவசியம் நேரலையுடன் இவ் வாக்கினை படிக்க நன்கு புரிதல்கள் உண்டாகும். வாருங்கள் வாக்கின் உள் செல்வோம்.) 

===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
===========================


குருநாதர் :- அப்பனே, உலகத்தைச் சுற்றி, அப்பனே, சில கிரகங்களை இடு. 


சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, இந்த உலகம், இது புவி. புவி சுற்றி சில கிரகங்களை. ஐயா, கிரகங்கள் ரவுண்டு போட்டு, ரவுண்டு போட்டு, புதன் ரைட். 


அடியவர் 6 :- (கிரகங்கள் ஒவொன்றையும் அங்கு எழுதி , அதனை சுழிக்க ஆரம்பித்தார்கள்) 


இவ்விடத்தின் நேரலை:- https://youtu.be/NqRaI13qIDU?t=32190


குருநாதர் :- அப்பனே, அறிந்தும் மாய கிரகங்களான ராகு கேது, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட., அப்பனே, ஆற்றல் புவி தன்னில்  அப்பனே, விழவில்லை அப்பா, என்று நினைத்துக் கொள்வோம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  (ராகு கேது கதிர்வீச்சுகள்) புவியிலே விழல.. ஓகேங்களா? 


குருநாதர் :-  அப்பனே, ஆனாலும் மற்ற  ஆற்றல்களை, அப்பனே, நிச்சயம் புவியில் படுமாறு இடு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ( ராகு , கேது ) இது ரெண்டும் வேணான்றார். வந்து, ( மற்ற கிரகங்களின் ஆற்றல் படும்படி வரைங்க ) 


அடியவர் 6 :-  (ராகு , கேது பகவான்கள் நீங்கலாக , அனைத்து கிரகங்களிடம் இருந்து கதிர் வீச்சுக்கள் பூமிக்கு வரும் வண்ணம் அங்கு வரைந்தார்கள் )


இவ்விடத்தின் நேரலை:- https://youtu.be/NqRaI13qIDU?t=32274 


===========================
# மற்ற கிரகங்களின் ஆற்றல்களை தடுத்து நிறுத்தும் சாயா கிரகங்கள்.
===========================


குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சராசரியாகவே அப்பனே, இவ்வாற்றலை ராகு கேதுக்கள் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே, சில இடங்களில், அப்பனே, தடுத்து நிறுத்துகின்றது. 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, இந்த ஆற்றல் இதிலே விழும் பொழுது, ஐயா, இந்த ஆற்றல் இங்கு விழுகின்ற பொழுது, சில இடங்கள் ராகு கேது தடுக்குதாம். தடுத்து நிறுத்துது. 


===========================
# குருநாதர் , பாடத்தை ஏன் கடக ராசியுடன் நிறுத்திவிட்டார்கள் ? 
===========================


குருநாதர்:- அப்பனே, இது புரியும்படி. ஏனென்றால், புரியாதவாறு செய்தாலும் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. எதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, ஒரு முக்கால் பங்கு. அதனால்தான் நான்கோடு யான் நிறுத்திவிட்டேன் அங்கு வரை, அப்பா, நிச்சயம் தன்னில் கூட. 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, இது ( முழுவதும் )  உங்களுக்கு சொன்னா புரியாதுன்றார். அதனால என்ன ஆகுதாம்? ( கடக ராசி அங்கு சுட்டிக்காட்டி)  இதோட தான் படுதாம். நாலு பங்குதான்?....


அடியவர் 4 :- ( சில விளக்கங்கள் - ஆடியோ தடங்கல்கள் ) 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, இதோட வந்து, (கடக ராசி அங்கு சுட்டிக்காட்டி)  இங்க வரை  தான் படுது. ஓகேங்களா? 


===========================
# ஏன் கிரகங்களின் கதிர்வீச்சு ஆற்றல்கள் பூமிக்கு வருவதில்லை? 
===========================


இவ்விடத்தின் நேரலை:-  https://youtu.be/NqRaI13qIDU?t=32353


குருநாதர் :- அப்பனே, இது பட்டு அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. கிரகங்கள் ஆற்றல் மீண்டும் அப்பனே, அதற்கே சென்று விடுகின்றது என்பேன் அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன ஆகுதுன்னா? ஐயா, இது எப்படி தெரியுமா சொல்றாரு அகத்தியர். எப்படி சொல்றாருன்னா, ராகு கேது ஆற்றல் இல்ல. ஆனாலும், தடுக்குது. திரும்ப பட்டு என்ன ஆகுது? ரிப்ளெக்ஷன் ஆகுதுங்க ஐயா.  போடுங்க. ஐயா, ரிட்டர்ன் போயிடுச்சு. ஐயா, ரிட்டர்ன் போகுதுங்க. ஐயா, திருப்பியும் இந்த ஆற்றல்கள் எல்லாம் வெளியில போற மாதிரி போடுங்க. 


அடியவர் 6 :- (கடக ராசியில் இருந்து கதிர்வீச்சுக்கள் மற்ற கிரகங்களுக்கு திரும்பி செல்வது போல வரைந்தார். அடியவர்கள் இதனை நேரலையில் பார்த்து தெரிந்து கொள்ளவும். )


இவ்விடத்தின் நேரலை:-  https://youtu.be/NqRaI13qIDU?t=32403


அடியவர் 6 :- (பூமியில் இருந்து, கடக ராசியில் இருந்து - ராகு கேது எதிரொளிப்பின் காரணமாக - அனைத்து  கிரகத்தின் கதிர் வீச்சுக்கள் திரும்பி போவது போல வரைந்து முடித்தவுடன்……. )


===========================
# ஜோதிடத்தில் உலகம் அறியாத அதிர்ச்சி ரகசியங்கள்.
===========================
# ஏன் கிரகங்களின் கதிர்வீச்சு ஆற்றல்கள் - சிம்மராசி 5ஆம் இடத்தில் இருந்து மீன ராசி 12ஆம் இடம் வரை - படுவதில்லை? 
===========================


குருநாதர் :- அப்பா, அப்பொழுது ஐந்தாம் இடத்திலிருந்து 12 ஆம் இடம் வரை அனைத்தும் கலியுகத்தில் நிச்சயம் எதை என்று கூற பின்  அங்கு ஒளிகளே படாது சொல்லிவிட்டேன். 


சுவடி ஓதும் மைந்தன் :- அஞ்சிலிருந்து? 


அடியவர் 4:- 12 வரை ஒளியே இல்லை. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஒளியே இல்லை. 


அடியவர் 6 :- ராகு கேது-வினால் ஒளி படவில்லை 


சுவடி ஓதும் மைந்தன் :-   படவில்லை கலியுகத்தில். அப்ப, இது அஞ்சாம் இடம். ( X ) டேஷ் போடுங்க. 


அடியவர் 6 :-  ( சிம்மராசி X என்று குறியிட்டார் )


இவ்விடத்தின் நேரலை:-  https://youtu.be/NqRaI13qIDU?t=32445


சுவடி ஓதும் மைந்தன் :-   ( X )  டேஷ் போடுங்க. 


அடியவர் 6 :- ( கன்னி ராசி முதல் மீன ராசி வரை  X என்று குறியிட்டார் )


சுவடி ஓதும் மைந்தன் :-   ஐயா, ( மீன ராசியில் இருந்து கடக ராசி வரை ) இதுவரை ஒளி இருக்காது. அஞ்சாம் பாவத்திலிருந்து 12 வரை. ஒளி இருக்காது.  ( எந்த கிரகங்களின் கதிர்வீச்சுகள் சிம்ம ராசி முதல் மீன ராசி வரை விழாது ) 


அடியவர் 6 :-  ( “5,6,7,8,9,10,11,12 ஒளி இல்லை” - என்று எழுதினார்கள் அங்கு )


குருநாதர் :-  அப்பனே, இப்படி இருக்க. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அனைத்து கிரகங்களுக்கும் பாதி வயது என்று அர்த்தம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  எப்ப இது மாதிரி வந்து ஒளி படலையோ? அப்ப, கிரகங்களுக்கு என்ன வயசு? 100 வயசுன்னா எவ்வளவு? 


அடியவர் 6 :-   50 வயசு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  50 வயசு.  


அடியவர் 6 :-   ஒளி இழந்ததுனால, 


சுவடி ஓதும் மைந்தன் :- ஒளி இழந்ததுனால,   ஐயா, இப்படி ஒளி இழந்ததுனால எவ்வளவு வயசு வந்து இதுக்கெல்லாம் வந்து? 


அடியவர் 4 :-  பாதிதான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  பாதி வயசுதான்.


அடியவர் 3:-  எவ்வளவு இருக்கணுமோ அதுல பாதிதான். 


===========================
# ஏன் பல விஷயங்கள் இவ் உலகில் அதி விரைவாக நடக்கின்றது? 
===========================


குருநாதர் :-  அப்பனே, எப்படி எது என்று புரிய. அதேபோல் மக்கள் நிச்சயம் தன்னில் கூட அன்றைய காலகட்டத்தில் தர்மங்கள் நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் செய்தனர். 


குருநாதர் :-   அனைத்தும் பல விஷயங்கள் கிரகங்களை பின் எட்ட வேண்டும் என்று செய்தார்கள். 


குருநாதர் :-   ஆனாலும், ஒன்றிலிருந்து ஒரு 50 வரை மெதுவாக சென்றது வயது இளமை போல். 


குருநாதர் :-   ஆனாலும், இப்பொழுது வரும்பொழுது, நிச்சயம் தன்னில் கூட கடுமையாக செல்லும். அதாவது, அதிவேகமாக செல்லும். 


குருநாதர் :-  அதாவது, ஒருவன் பின் நிச்சயம் தன்னில் கூட. அதாவது, இதை எப்படி புரிந்து கொண்டால், ஒரு மணி நேரத்தை பின் அதிவிரமாக நிச்சயம் தன்னில் கூட மெதுவாக கடக்கக்கூடியவன், ஒரு மணி நேரத்தை சுலபமாக திடீரென்று கடந்து விடுவான். 


சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, கொஞ்சம் எக்ஸ்பிளைன் பண்ணுங்க. யாராவது, 


அடியவர் :- மனிதனுடைய வயதை சொல்றாங்க. ஆக்சுவலா, இந்த கிரகங்களுடைய, அஞ்சாம் இடத்திலிருந்து 12 ஆம் இடம் வரைக்கும் ஒளி வந்து சரியா படுறது இல்லை. அதனால, மனிதனுடைய வாழ்நாள் வந்து பாதி அப்படின்னு சொல்றாங்க. இந்த இடம்  எல்லாம் இருள் இடம் அப்படின்றத குருநாதர் சொல்றாங்க. 


சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, இப்ப வந்து எல்லா கிரகத்துக்கும் வயசு ஆயிடுச்சு. அதிகம் வயசு ஆயிடுச்சு. பாதி பாதி வயசு ஆயிடுச்சு. ஓகேங்களா? அப்ப, இந்த பாதி வயசு வரைக்கும் கிரகங்கள் என்ன ஆச்சு? ஸ்லோவா போச்சு. அப்ப, ஸ்லோவா போனதுனால ஆனா மக்கள் கொஞ்சம் கொஞ்சம் நல்லா இருந்தாங்க. இப்ப என்ன ஆகுமாம்? வேகமா போகும் பொழுது, மனிதனுடைய எண்ணங்கள் என்ன ஆகும்? மாறும். 


===========================
# தற்போது ஏன் பலருக்கு வேலைகள் , தொழில்கள்  பறி போகின்றன ?
===========================
# தற்போது ஏன் பலருக்கு வருமானம் குறைகின்றது ?
===========================
# தற்போது ஏன் பலருக்கு திருமண தடைகள் , குழப்பங்கள்  ?
===========================
# தற்போது ஏன் பல நோய்கள் உருவாகிறது ?
===========================
# தற்போது நாம் ஏன் சரியாக தூங்க முடிவதில்லை? 
===========================
# தற்போது ஏன் மோட்சமும் கிடைப்பதில்லை ? 
===========================


குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட ஐந்தாம் இடம், ஆறாம் இடம் அனைத்தும் நிச்சயம் பழுதாகும். எதை என்று அறிய பத்தாம் இடம். அதனால்தான் தொழில்கள் அனைத்தும் எவை என்று கூற வேதைகள்,  எதை  என்று இதிலே அடங்கி விடுகின்றது. புரிகின்றதா? 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, புரியுதுங்களா ஐயா?  சொல்லுங்க. ஐயா, 


அடியவர் 4 :- பாருங்க, முன்னாடி எல்லாம் வந்துட்டுங்க. ஒரு 50 வயசு ஆகுறதுக்கு வந்து, மனிதனுக்கு வந்து ரொம்ப நாள் வாழ்ந்த மாதிரி ஒரு இது இருக்கும். 50 வயசு வரைக்குமே ஒரு இளமையா தான் இருந்திருப்பாங்க. வந்துட்டுங்க. இன்னைக்கெல்லாம் வந்து 50 வயசு எல்லாம் வந்து ரொம்ப வயதான ஒரு தோற்றம் வந்துருது. அது இல்லாம 50 வயசு சீக்கிரம் ஆன மாதிரி நமக்கு ஒரு இது இருக்குது. முன்னாடி எல்லாம் வந்து 50 வயசுன்றது ஏதோ மெதுவா போச்சு. 


ஒரு வருஷம், ரெண்டு வருஷம் மெதுவா போச்சு. இன்னைக்கு ஒரு வருஷம் நமக்கு போன வருஷம் தான் பிறந்தநாள் வந்தது. அதுக்குள்ள இந்த வருஷம் பிறந்தநாள் வந்துருச்சுன்னு சொல்றோம். இல்லைங்களா? 


ஏன் இவ்வளவு வேகமா போகுது? அப்படின்னா, அஞ்சாவது இடத்திலிருந்து 12 ஆம் இடம் வரைக்கும் எந்த கிரகத்தோட ஒளியும் வந்து படுறது இல்லை. 


அதனால, மனிதன் வந்து முன்னாடி பழைய காலத்துல வந்துட்டுங்க. 50 வயசு வரைக்குமே இளமையா தான் இருந்தான். 50 வயசு வரைக்குமே அவனோட வாழ்க்கை வந்து மெதுவா தான் போயிட்டு இருந்தது. ஆனா இன்னைக்கு 50 வயசுங்கிறது ரொம்ப வேகமா வந்துருது. 50 வயசுல அந்த இளமையும் மனிதனுக்கு இருக்கிறது இல்லை. இது வந்து முதல் முதல் இது வந்துட்டுங்க ( முதல் கருத்து விளக்கம் ). 


இரண்டாவது, அஞ்சாவது இடத்திலிருந்து 12 ஆம் இடம் வரைக்கும் ஒளி இல்லாததுனால, இந்த அஞ்சாவது இடத்துக்கு அப்புறம் தான் வந்து ஏழாவது இடம் என்கிற திருமணம் என்கிறது வருது. பத்தாவது இடம் என்கிற தொழிலும் வருது. அதனாலதான் எல்லாருக்குமே தொழில் வேலை எல்லாத்துலயும் பிரச்சனைகள் அதிகமாக இருக்குது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  கரெக்ட். அப்ப, ஆறாயிடம் கெடும். ஏழாயிடம் கெட்டுப்போயிடும். எட்டாயிடம் ஆயுள் ஸ்தானம் போயிடும். பாக்கியம் யாருக்கும் புண்ணியங்கள் அதிகமா இருக்காது. பத்தாயிடம் என்பது என்ன? தொழிலும் போயிடும். வருமானம் என்பது என்ன? வருமானம் வந்தா தானே ஏதாவது சாப்பிடுறதுக்கு அதுவும் போயிடும். ஆற்றலும் மோட்சமும் கிடைக்கிறது இல்லை. 


===========================
# தற்போது ஏன் வேற்றுக்கிரகவாசிகள்  பூமிக்கு வருகின்றார்கள்? 
===========================


குருநாதர் :-  அப்பனே, இதனால்தான் உலகம் இவ்வாறு இருந்தாலே அழிவு நிலைக்கும் போகின்றது என்றுதான் அர்த்தம். யாராலும் தடுக்க முடியாது. அதனால்தான் சித்தர்கள் வந்து, நிச்சயம் தன்னில் கூட மனிதன் புரிந்து கொண்டால் கொள்லட்டும். இல்லையென்றால், எப்படியாவது நிச்சயம் தன்னில் கூட. 


குருநாதர் :-  அதனால்தான், நிச்சயம் தன்னில் கூட வேற்று கிரகவாசிகள், நிச்சயம் தன்னில் கூட புவி அழியப் போகின்றது என்று, நிச்சயம் தன்னில் கூட ஓரிடத்தில், நிச்சயம் தன்னில் கூட வந்து, அதாவது எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட வருகின்றார்கள். 


https://youtu.be/NqRaI13qIDU?t=32754 


சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால்தான் இந்த பூமி அழியப் போகின்றதுன்னு தெரிஞ்சு போச்சு. வேற்று கிரகவாசிகள். அவங்க என்ன பண்றாங்க? 


அடியவர் :- ஒரு இடத்துக்கு வராங்க. 


சுவடி ஓதும் மைந்தன் :- வராங்க. 


அடியவர் :-  பூமியில ஒரு இடத்துக்கு, 


குருநாதர் :-   நிச்சயம் தன்னில் கூட முதலில் ஐந்தாம் இடத்துக்கு வருகின்றார்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப, வேற்று கிரகவாசி இங்க போடுங்க. ஐயா, 


அடியவர் 6 :- ( வேற்று கிரகவாசி - என்று எழுதினார்கள் )


நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=32774
 
சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, இதெல்லாம் யாரும் சொல்லிக் கொடுக்க மாட்டாங்க. ஐயா, அரரோ மார்க் போடுங்க இருக்கு. 


அடியவர் 6 :- ( வேற்றுகிரகவாசி - என்று எழுதியதை ஐந்தாம் இடத்துடன் இணைந்தார்கள் )


சுவடி ஓதும் மைந்தன் :-  பாருங்க, ஐந்தாம் இடத்துக்கு வராங்க. பூர்வ புண்ணியம் 


===========================
# உலகின் பூர்வ புண்ணியத்தை திறக்கும் சித்தர்கள் மற்றும் வேற்றுகிரகவாசிகள்
===========================


குருநாதர் :- அறிந்தும் எது என்று புரிய அதாவது, நிச்சயம் தன்னில் கூட. அதாவது, நீருக்கு தண்ணீர், நீருக்கு எது என்று கூற, ஒரு அணை போட்டது போலே நிச்சயம், அவ்வணை, நிச்சயம் தன்னில் கூட, யாங்கள் நிச்சயம் திறந்து, ஏது என்று புரிய அனைத்திற்கும். 


சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு அணை மாதிரி போட்டுச்சு (கடக ராசி) இதுவரைக்கும் ஓகேங்களா? இந்த ஏலியன்ஸ் வந்து இதை தட்டுறாங்க. இந்த அணையை வந்து கழிக்க பார்க்கிறாங்க. வந்து, ஐயா, புரியுதுங்களா? ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க. ஐயா, ஓகேங்களா? 
( ராகு கேதுக்கள் மூலம் 5ஆம் இடம் தடுக்கப்படுகின்றது. அதனை வேற்றுகிரகவாசி  அவர்கள் வந்து உடைக்கிறார்கள் )


===========================
# தற்போது ஏன் சித்தர்கள் பலமாக வாக்குகள் நமக்கு உரைகின்றார்கள்? இப்போது வர என்ன கரணம்? 
===========================


குருநாதர் :-  இதனால்தான் சித்தர்களும் இறங்கி வந்து, மனிதனுக்கு பாடாய், நிச்சயம் தன்னில் கூட. 


குருநாதர் :-  சொல்வார்கள். சித்தர்கள் ஏன் மனிதனுக்காக இறங்கி வந்து சொல்ல வேண்டும்? இவ்வளவு நேரம் சித்தன் சொல்வானா என்ன? 


குருநாதர் :-  **** “நிச்சயம் மனிதனுக்கு அறிவு கெட்டவன்.” **** 


குருநாதர் :-  அதனால்தான், நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக இருந்தால், மனிதன் பின் செய்வது அனைத்தும் தவறாகும். 


குருநாதர் :-  இதனால்தான் சித்தர்கள் வந்து இதனை, அதாவது, இது எப்பொழுதோ ஆரம்பித்து விட்டது. இதனால்தான் பல ஞானிகள் கூட வந்து, மக்களுக்கு தெளிவுபடுத்தி, எது என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால, இது என்ன பண்ணனும்? 


அடியவர்கள் :- ( அமைதி )


சுவடி ஓதும் மைந்தன் :-  உடைக்கிறதுக்கு வராங்க. இதை வந்து, இதை உடைச்சா மட்டும்தான் நிம்மதியா வாழ முடியும். 


அடியவர்:- சித்தர்கள் அதுக்கு உதவி பண்ண வர்றாங்க. சித்தர்கள், 


சுவடி ஓதும் மைந்தன் :-  அதனாலதான் ஞானிகள் இப்படி எல்லாம் இருந்திரான்னு சொன்னாரு. வந்து சொல்லிக் கொடுத்தாங்க. அப்ப, இதை உடைச்சா மட்டும்தான், நீ நோய் நொடி இல்லாம வாழ முடியும். 


அடியவர்:-  ஆயுள் கூடும், 


சுவடி ஓதும் மைந்தன் :- ஆயுள் கூடும். திருமணம் நல்ல நல்ல இடத்தில் இல்லைன்னா, சண்டைகள் தான், ஃபைட்டிங் வரும். ஆயுள் குறைவாயிடும், பாக்கியம் கிட்டாது, தொழிலும் கிட்டாது, 


அடியவர்:- வருமானம், 


சுவடி ஓதும் மைந்தன் :- வருமானம் குறைஞ்சு போயிடும். 


அடியவர்:- மோட்சமும் கிடைக்காது, 


சுவடி ஓதும் மைந்தன் :-  மோட்சமும் குறைஞ்சு போயிடும். 


===========================
#  சித்திர குள்ளர்கள் என்ற வேற்று கிரக வாசிகளின் பெருங்கருணை 
===========================


குருநாதர் :-  அப்பொழுது மனிதன் உணவுக்கே கஷ்டப்படுவான் நிச்சயம் தன்னில் கூட. இவ்வாறாக, நிச்சயம் அதிவிரைவிலே வந்து கொண்டிருக்கின்றது. ஒரு நுண்ணுயிரி, நிச்சயம் இவ்வாறாக, சித்திர குள்ளர்கள் பின், நிச்சயம் ஐந்தாம் வீட்டை பின், அதாவது எது என்று புரிய. நிச்சயம் பின், அவ் மடையை, நிச்சயம் தன்னில் கூட. அதாவது அறுத்து எவை என்று கூற, ஆனாலும் இறைவன் இருக்கின்றான். ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட, இறைவன், இறைவனிடம் முறையிட்டுத்தான் வந்து கொண்டிருக்கின்றார்கள். 


நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=32919


அடியவர்:-  அதாவது அங்க ஒரு அந்த மடை இருக்குல்ல, அணை இருக்குன்னு சொல்றாங்க. அந்த அணையை உடைக்கிறதுக்காக சித்திர குள்ளர்கள் வர்றாங்க. ஆனா, இறைவன்ட்ட அனுமதி பெற்று தான் வர்றாங்க. அதை உடைச்சாதான் நமக்கு எல்லா பாக்கியமும் கிடைக்கும்ன்றாங்க. 


===========================
#  எப்போது நீங்கள் நினைத்தது நடக்கும் ?
===========================


குருநாதர் :-  ஏனென்றால் மனிதனிடத்திலும் சில புண்ணியங்கள் தர வேண்டும் என்றால், நிச்சயம் அங்கிருந்து எடுத்து விட வேண்டும். நிச்சயம் தன்னில் கூட, எதனால் எது என்று புரிய. அப்புண்ணியத்தை கூட செயல்படாமல், அதாவது நிச்சயம் இவ்வாற்றல் புண்ணியம் என்பது ஒரு ஆற்றல் என்று வைத்துக் கொண்டால், அவ்வாற்றலும் இயங்கவில்லை. நிச்சயம் அவ்வாற்றல் உங்களுக்கு கொடுத்தால் மட்டுமே நீங்கள் நினைப்பது நடக்கும். இல்லையென்றால் நடக்காது. 


அடியவர்:- எவ்வாறு ஒரு அணையில வந்து தண்ணி தேங்கி கிடக்கோ, அதேபோல அங்க வந்து நம்மளுடைய ஆற்றல்கள் எல்லாமே, புண்ணியங்கள் எல்லாமே தேங்கி கிடக்கு. அதை உடைச்சு எடுக்குறதுக்கு சித்தர்கள் வருவாங்க. சித்திர குள்ளர்கள் வராங்க. அவங்க உடைச்சு எடுத்தாதான் மிச்ச ஆற்றல்கள் எல்லாம் நமக்கு கிடைக்கும். புண்ணியங்கள் கிடைக்கும். அந்த புண்ணிய பலன் சொல்றாங்க. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஆமாம்….


===========================
#  ஏன் கூட்டுப்பிரார்தனையில் பல புண்ணிய பொருட்கள் வழங்கப்படுகின்றன?
===========================


குருநாதர் :-  அதனால்தான் பல ஆற்றல்கள் எங்கு உள்ளதோ, அவையெல்லாம் பின் சேகரித்து உங்களுக்கு தரச் சொல்கின்றோம். சொல்லிவிட்டோம். 


அடியவர்:- அதனாலதான் பல்வேறு இடங்களுக்கு சென்று, அறுபடை வீடு, பஞ்சபூத ஸ்தலங்கள், கங்கை நீர், அதுக்கப்புறம் கங்கை மண்ணு, இதெல்லாம் எடுத்து வந்து உங்களுக்கு வந்து ஆற்றலை பெருக்குறதுக்கு நிறைய வழிகள் சொல்லிட்டு இருக்கிறோம். அந்த அஞ்சாம் இடத்தை வெல்வதற்காக சொல்றாங்க. 


===========================
#  ஏன் நிச்சயம் ஐந்தாம் இடத்தை வென்றே ஆகவேண்டும்?
===========================


குருநாதர் :-  நிச்சயம் ஐந்தாம் இடத்தை வென்றே ஆகவேண்டும். அப்படி இல்லை என்றால் அனைத்தும் கெட்டுவிடும். 


அடியவர்:- அஞ்சாம் இடத்தை கட்டாயம் வெல்லணும். இல்லைன்னா வாழ்க்கையில தோத்துருவோம்ன்றாங்க. 


குருநாதர் :- இதனால்தான் இவ் ஐந்தாம் இடத்தை வெல்லத்தான் பல விஷயங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். பல புண்ணிய காரியங்களை செய்தால்தான், நிச்சயம் அவ் சித்திர குள்ளர்களும், நிச்சயம் தன்னில் கூட மனிதனுக்கு வந்து உதவிகளாக இருப்பார்கள் நிச்சயம். 


குருநாதர் :- ஏனென்றால் பின் இறைவனும் ஏது என்று புரிய, அமைதி காத்துக் கொண்டிருக்கின்றான். 


குருநாதர் :- அதாவது அச்சித்தர் குள்ளர்களும், நிச்சயம் ஏது என்று புரிய, இறைவனிடத்தில் பின் பலம் பெற்று, ஏது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட. 


குருநாதர் :- இதனால், நிச்சயம் நீங்கள் என்ன நினைக்கின்றீர்களோ, அதேபோல் சித்தர்களும் பாவம் என்று நினைக்கின்றார்கள். 


குருநாதர் :- அதாவது அதனால்தான் உன் எண்ணங்கள் உயர்வாக இருக்கட்டும் என்று யாங்கள் சித்தர்கள் வந்து சொல்லிக் கொண்டே இருக்கின்றோம். 


குருநாதர் :- ஏனென்றால் வழிகள் காட்டிக் கொண்டிருக்கின்றோம். முதலில் உங்களை நீங்கள் காத்துக்கொள்ள, உலகத்தை பின் காத்துக்கொள்ள. 


அடியவர்:- அதாவது நமக்கு வந்து நிறைய வந்து, அதாவது நிறைய வந்து உங்களுடைய புண்ணிய பலனை பெருக்குவதற்கு தான் இந்த ஐந்தாம் பாவத்தை வெல்வதற்கு தான் நிறைய வழிகள், நிறைய கூட்டு பிரார்த்தனை, கடந்த பத்து கூட்டு பிரார்த்தனை உங்களுக்கு நிறைய விஷயங்கள் சொல்லிட்டு வரோம். 


அடியவர்:- புண்ணிய பலனை சேர்க்கிறது தான். அந்த புண்ணிய பலனை சேர்த்தாதான் அந்த இடத்தை வெல்ல முடியும். சித்தர்கள் வந்து நாங்க உங்களுக்கெல்லாம் அதுக்காக உதவி செய்ய இறங்கி வந்திருக்கிறோம். அப்படின்னு சொல்றாங்க. 


===========================
#  திருவாசகத்தின் மகிமை.
===========================


குருநாதர் :- இவ்வாற்றலை அதிகரிக்க, நிச்சயம் தன்னில் கூட. அதாவது திருவாசகம், நிச்சயம் தேவைப்படுகின்றது. நிச்சயம் தன்னில் கூட இதனால். 


அடியவர்:-  இந்த ஆற்றலை வந்து நாம வந்து பெறுவதற்கு வந்து என்னன்னா, திருவாசகத்தோட உதவி தேவைப்படுதுன்றாங்க. 


===========================
#  எச்சரிக்கை :- எப்போது திருத்தலங்களுக்கு சென்றாலும், ஒன்றும் நடக்காமல் போய்விடும்?
===========================


குருநாதர் :-  இதனால் அமைத்தோம் திருத்தலங்கள் பல வழியில் கூட. இதனால் இவ்வாற்றல் மீண்டும் திரும்பிச் செல்வதால், திருத்தலங்களுக்கு சென்றாலும் ஒன்றும் நடக்காமல் போய்விடும். பின் ஆற்றல்கள் மீண்டும் அங்கே. ஏனென்றால் எது என்று புரிய, அவ்வாற்றல் வருங்காலத்தில் பெருக்க வேண்டும். எப்படி பெருக்குவது என்பதை  யான் சொல்கின்றேன். 


அடியவர்:- அதாவது இந்த ஆற்றல்கள் எல்லாம் ரிட்டர்ன் போற ஆற்றல்கள் எல்லாம் திருத்தளத்துக்கு போய் அங்க போய் சேர்ந்துருதுப்பா. பட் அங்கேயும் அந்த ஆற்றல்களை வந்து பெருக்குறது எப்படின்னு வந்து வரும் காலத்துல நான் சொல்லித்தரேன். அப்படின்னு சொல்றாங்க. அவங்க 


சுவடி ஓதும் மைந்தன் :-  புரியலையே. நீங்க சொன்னது? 


அடியவர்:- ஐயா, அந்த அந்த ஆற்றல்கள் வரக்கூடிய அந்த ஆற்றல் வந்து இங்க வருது இல்ல. அஞ்சாம் இடத்துக்கு வரக்கூடிய ஆற்றல்கள், அது எல்லாம் சொல்லுங்க ஐயா. 


அடியவர் 4 :- அதாவதுங்க ஒவ்வொரு ஒரு திருத்தலமும் ஏன் கட்டி வச்சிருக்காங்கன்னா, இந்த கிரகங்களோட ஆற்றல் வந்து இந்த பூமியில தங்கணும். அப்படிங்கறதுக்காக தான். ஆனா இப்ப இருக்கிற சூழ்நிலையில, இந்த ஆற்றல் எல்லாம் திரும்பி போயிடுது. அஞ்சாம் இடத்திலிருந்து 12 ஆம் இடத்துக்கு வரவேண்டிய ஆற்றல் எல்லாம் திரும்ப ராகு கேதுனால, திரும்பவும் அதே கிரகத்துக்கு திரும்பி போயிடுது. அதனால அந்த கோயில்கள்ல வந்து கிடைக்கக்கூடிய ஆற்றல் வந்து இருக்கிறது இல்ல. அதனால மனிதன் வந்து கோயிலுக்கு போனாலும், அவனுக்கு அந்த ஆற்றல் கிடைக்கல. அதுக்கு திருவாசகம் தான் இப்போதைக்கு வந்து மனிதனுக்கு உதவி பண்ணும். 


குருநாதர் :-  அதனால் வரும் நாட்களில், நிச்சயம் தன்னில் கூட ஒவ்வொரு திருத்தருக்கும் சக்திகளை அதிகரிக்க வேண்டும். ஆனால் இவை மனிதனால் முடியாது. 


அடியவர் :- அதான் வரக்கூடிய நாட்கள்ல, ஒவ்வொரு திருத்தருக்கும் சக்திகளை அதிகரிக்கணும். மனிதனால் இது முடியாது. 


குருநாதர் :- இதனால்தான், நிச்சயம் தன்னில் கூட ஆற்றல்கள், நிச்சயம் சித்திர குள்ளர்கள் எது என்று புரிய. இதனால் அவ்வாற்றல்கள் அதிவிரைவே வரவேண்டும். இல்லையென்றால், அனைத்தும் அழிந்துவிடும். அதிவிரைவில்….


அடியவர் :- அதனாலதான் சித்திர குள்ளர்கள் விரைந்து வராங்க. சீக்கிரம் வரணும்பா, இல்லைன்னா வந்து அழிஞ்சிரும், உலகம் அழிஞ்சிரும்ன்றாங்க. 


===========================
#  எச்சரிக்கை :- ஏன் சண்டைகள் ?
===========================


குருநாதர் :-  மனிதனே பைத்தியக்காரன் போல் திரிவான். ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வான். யான் பெரிவன், நீ பெரிவன் என்று. இதனால் பல ஆயுதங்களை எடுத்தே கொல்வான். 


அடியவர் :- அதான் மனுஷன் பைத்தியக்காரன் ஆயிருவான். ஒருத்தன் கூடத்தான் போட்டி போறாம, போட்டு சண்டை போட்டு ஆயுதங்கள் எடுத்து, ஒருத்தர் ஒருத்தர் அடிச்சு வெட்டிட்டு சாவான்றாங்க. 


குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட இன்னும் ஆற்றல் படும் இடங்கள் சொல்கின்றேன். அங்கு அனைத்தும் எடுத்து வந்து மக்களுக்கு தாருங்கள். பின், நிச்சயம் நன்றாக இருக்கட்டும். 


அடியவர் :- இன்னும் நிறைய ஆற்றல் விழுகக்கூடிய இடங்கள் இப்ப கொல்லூர் மூகாம்பிகை சொல்லி இருக்காங்க இல்ல. அதேபோல வந்து நிறைய இடங்களை நாங்க சொல்றோம். அதை எடுத்துட்டு வந்து, உங்களுடைய ஆற்றலை நீங்க பெருக்கிக்கோங்கப்பான்றாங்க. 


குருநாதர் :- நிச்சயம் எது என்று கூட உம் ஆற்றலை, அதாவது மந்திரத்தில் எவ்வாறு பெருக்கிக் கொள்வது. 


சுவடி ஓதும் மைந்தன் :-   இப்பொழுது உங்களுடைய ஆற்றலை இந்த மந்திரத்தால எப்படி பெருக்கிக் கொள்வது. 


குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட யாராவது ஒருவர் சொல்லட்டும், பார்ப்போம். பின்பு உரைப்பேன். 


சுவடி ஓதும் மைந்தன் :-   யாராவது இதுல மந்திரம் இருக்குது கண்டுபிடிங்கன்றார். 48 நாள் ஒரு மண்டலம், அதிலேயே இருக்குதுன்றார். வந்து ராகுவும் சனியும் வென்றாக வேண்டும். 48 ராகுவும் சனியும். அப்ப இதுலயே மந்திரம் இருக்குது. 


அடியவர்கள் :-  ( சிந்தனை…………………………….. )


===========================
# நமச்சிவாய மந்திர ரகசியங்கள் பாடம் ஆரம்பம் 
===========================

நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=33226


அடியவர்கள் :-  ( சிந்தனை…………………………….. )


(மந்திரத்தை கண்டுபிடித்த தடுமாறியதால் , முதல் அடி எடுத்து கொடுத்தார்கள் கருணை கடல் )


குருநாதர் :-  அப்பா, ஆம், உம் 


நேரலை : - https://youtu.be/NqRaI13qIDU?t=33247 


சுவடி ஓதும் மைந்தன் :-  அம், சிம், ஆம். போடுங்க ஐயா. ஐயா, இருங்க ஐயா. ஆம், எங்க இங்க, அம், அம், வம். இதெல்லாம் போடுங்க ஐயா. ஐயா, அம்….


அடியவர் 6 :- ( சுவடி ஓதும் மைந்தன் சொன்னவாறே இணைத்தார்கள். )


குருநாதர் :-  அப்பனே, காவில் இருந்தும்…அப்பனே, அடுத்தடுத்து எடு. அப்பனே, மந்திரங்கள் எல்லாம் 


சுவடி ஓதும் மைந்தன் :-  அடுத்தடுத்து எடுங்க ஐயா. 


அடியவர் 6 :- ( சில சிந்தனைகள் எப்படி எடுப்பது என்று )


குருநாதர் :-  அப்பனே, நமச்சிவாய என்று எழுது. முதலில்.


https://youtu.be/NqRaI13qIDU?t=33312




அடியவர் 6 :-  (பின் வரும் இவ் எழுத்துக்களை சுழித்தார்கள். அதன் பின் அவ்வாறே மேலிருந்து கீழாக எழுதினார்கள்)


ந 
ம 
சி  ( ச - என்பதை சி ஆக்கினார். பின்பு சுழித்தார் )
வ 
ய  


குருநாதர் :-   அப்பனே, எதற்காக அதை இழுத்தாய் என்பேன் அப்பனே, 


சுவடி ஓதும் மைந்தன் :-   அந்த சி, நீ எதற்காக இழுத்த சி? 


அடியவர் 7 :- கொம்பு ஏன் வருதுன்னு கேக்குறாரு. “ச” தான இருக்கு. சி, 


சுவடி ஓதும் மைந்தன் :- எதுக்கு இழுத்த நீ ? “ச” தான இருக்கு. 


அடியவர் 7 :-  “ச்”  + “இ”  கொடுத்தா, சி வரும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அதை அழியன்றார். இது இங்க அழியன்றார். 




அடியவர் 6 :-  


(சி என்ற எழுத்தை மட்டும் நீக்கி, ச என்று எழுதினார்கள்.)


ந 
ம 
ச 
வ 
ய  




குருநாதர் :-   இதை ஓதி, இப்பொழுது 


அடியவர் 6 :-   நமசவய. 


குருநாதர் :-    எது என்று புரிய. அப்பனே, இப்பொழுது இங்கு மறைமுக பொருள் எது? 


சுவடி ஓதும் மைந்தன் :-   ஐயா, இதுதான் “ச” தான். போடுங்க ஐயா. இதுதான் மறைமுக பொருள். ஐயா, “ச” தான் மறைமுக பொருள். மறைபொருள், மறைபொருள். 


அடியவர் 6 :-  


(ச  என்ற எழுத்தை மட்டும் சுழித்தார்கள்.)


ந 
ம 
ச ( மறைமுக பொருள் )
வ 
ய  




குருநாதர் :-  அப்பனே, இதை நீங்கள் கண்டுணர்ந்தால் வெற்றி. நிச்சயம்.


சுவடி ஓதும் மைந்தன் :-  (ச) இது யார்? இதுதான் மறைபொருள். ச எழுதுங்க ஐயா. இதுதான் மறைபொருள். 
https://youtu.be/NqRaI13qIDU?t=33415


அடியவர் 6 :-  ( தனியாக “ச” என்று எழுதினார் ) 


குருநாதர் :- அப்பனே, இதை பிரித்து எழுதுக. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அதை பிரித்து எழுதுங்க ஐயா. போடுங்க, போடுங்க. 


அடியவர் 6 :-  ச் + அ  = ச ( என்று எழுதினார் )


குருநாதர் :-  அப்பனே, அப்படி இல்லை. 


அடியவர்கள் :- ( யோசனைகள் )


குருநாதர் :-   அப்பனே, அதன் முறையில் வரிசைப்படுத்து.


நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=33447
 
சுவடி ஓதும் மைந்தன் :-  ச வரியில். ஐயா, சா, சீ, வரிசைப்படுத்துன்றார். 


அடியவர் 6 :- ( பின்வருமாறு எழுதினார்கள் ) 


ச, சா, சி, சீ, சு, சூ, செ, சே, சை, சொ, சோ, சௌ 


குருநாதர் :-   அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. பின், இதிலே கிரகங்கள் எடு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இது கிரகங்கள் குறிக்கும் எழுத்துக்கள் எடு. 


அடியவர் 6 :- ( பின்வருமாறு எழுதினார்கள் ) 


ச - சனி , சந்திரன் 
சா
சி
சீ
சு  - சுக்கிரன் 
சூ - சூரியன் 
செ - செவ்வாய் 
சே
சை
சொ
சோ
சௌ




குருநாதர் :-  அப்பனே, வரிசைப்படுத்து. 


சுவடி ஓதும் மைந்தன் :-  திரும்பி இங்க வரிசைப்படுத்துன்றார். 


https://youtu.be/NqRaI13qIDU?t=33558 


அடியவர் 6 :- ( பின்வருமாறு எழுதினார்கள் ) 
சனி
சந்திரன் 
சுக்கிரன் 
சூரியன் 
செவ்வாய் 


குருநாதர் :-   அப்பனே, மீதி இருக்கும் கிரகங்களும் நிச்சயம் தன்னில் கூட தெரிந்து, 


சுவடி ஓதும் மைந்தன் :-  தெரிந்தது இவ்வளவுதான். ஒன்பது கிரகங்கள் மட்டும்தான். மீதி எழுதுப்பான்றார். மீதி என்ன இருக்குது? ஐயா, இது இப்படி, இப்படி எழுதிட்டீங்களா? சனி, சந்திரன், சுக்கிரன், சூரியன். 


அடியவர் 6 :- ( பின்வருமாறு எழுதினார்கள் ) 


புதன், 
வியாழன், 
ராகு, 
கேது.


குருநாதர் :-  அப்பனே, யோசியுங்கள். ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்கின்றேன்.  இதிலிருந்து என்ன தெரியப்போகின்றது உங்களுக்கு? 


சுவடி ஓதும் மைந்தன் :-  நான் ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்கிறேன். இதிலிருந்து என்ன யோசிக்கிறீங்க? நீங்கன்னு கேட்கிறார். 


அடியவர்கள் அனைவரும் :- ( பலத்த யோசனை )


குருநாதர் :- அப்பனே, நிச்சயம் இடையில் சேரு. அப்பனே, 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, இது என்ன தெரியுங்களா? ந, ம போட்டு இந்த சி எடுத்துட்டு, இந்த ஐந்து கிரகங்கள் இடையில் சேர்ன்றார். 




அடியவர் 6 :- ( பின்வருமாறு எழுதினார்கள் ) 


ந 
ம 
சனி
சந்திரன் 
சுக்கிரன் 
சூரியன் 
செவ்வாய் 
வ 
ய  


குருநாதர் :-  அப்பனே, ஒவ்வொன்றாக ஓது முதல் எழுத்தை. 


சுவடி ஓதும் மைந்தன் :- ( எப்படி என்று சொல்லிக்கொடுத்தார்கள் )


அடியவர் 6 :- ( பின்வருமாறு எழுதினார்கள். நடு எழுத்தை சுழித்தார்கள் ) 


ந ம ச வ ய  
ந ம ச வ ய  
ந மசு வ ய  
ந ம சூ வ ய  
ந ம செ வ ய  


குருநாதர் :-   அப்பனே, இதை படி. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இது கொஞ்சம் படிங்க ஐயா. 


அடியவர் 4:-  நமசவய, நமசவய, நமசுவய, நமசூவய, நமசெவய. ( என்று படித்தார் ) 


குருநாதர் :-   அப்பா, இதையெல்லாம் நீங்கள் வென்றால்தான் எதை என்று புரிய. அடுத்து, பின் புதனவன் புத்தியை வளர்க்க முடியும். 


நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=33793


சுவடி ஓதும் மைந்தன் :-  இது வென்றா மட்டும்தான். நமசிவய என்ன தெரிஞ்சால் மட்டும்தான், புத்தியே வரும்ன்றார். புத்தி, புத்தி வரும்ன்றார். 


குருநாதர் :- புத்தியின் மூலம் குருவை காணலாம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  புத்தியின் மூலம் ? 


அடியவர் 4 :- குரு நமக்கு தெரிவார். 


சுவடி ஓதும் மைந்தன் :- குருவை காணலாம். 


குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட குருவை. குருவானவன் நிச்சயம் தன்னில் கூட உங்கள் முன்னோர்களை வழிகாட்டுவான். அவ்வளவுதான். பிறவி முற்றிற்று. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, புரியுதுங்களா? யாராவது யாருக்கும் புரியல. புரியுதுங்களா? ஐயா, அதான் அது வந்து நீங்க கால்குலேஷன் போடணும். இந்த மந்திரத்தை குருவை புடிச்சா, இந்த நமச்சிவாய யாருன்னு முதல்ல தெரியணும். நமச்சிவாய யாருன்னு தெரியல. அப்ப, இது தெரியாத வரையில் இந்த புத்தியும் உங்களுக்கு நல்லா இருக்காது. இறைவன் வேணும், அது வேணும். அப்படி எல்லாம் இருக்காது. வந்து தேவையில்லாத புத்திகள் எல்லாம் வரும். அப்ப, புத்தியே நல்லா இல்லை. குருவான புத்தி நன்றாக இருந்தா, இதை தெரிஞ்சா, புத்தி ஒரு நல்ல புத்தி. குரு வருவார். அப்புறம் நீ யார்? நீ யார்? நம்ம யார்? வழிகாட்டுவார். அப்ப, முன்னோர்கள் எப்படி வராங்க? எங்கிருந்து வராங்க? நம்ம எங்கிருந்து வரோம்? நம்ம எப்படி வரோம்னு சொல்லிட்டு என்ன தெரியுமா? பூரா தெரிஞ்சிருமாம். அப்ப, இதுக்கெல்லாம் யார் காரணம்? 


குருநாதர் :-  அப்பனே, நமச்சிவாயனுக்கு அப்பனே, இவை பெயரெல்லாம் சொல்லிவிட்டேன். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப, நமச்சிவாயனுக்கு எந்தெந்த பெயர்? சனி, சனியும், சந்திரன், சுக்கிரன், சூரியன், செவ்வாய். இவர்தான் நமச்சிவாய. அய்யா புரியுதுங்களா? 


அடியவர் 4:- நமசிவாயத்தின் வெவ்வேறு பெயர்களை சொல்லிட்டார். 


சுவடி ஓதும் மைந்தன் :-  இதுதான் ரகசியம். தமிழ் ஐயா, இது நல்லா புரிஞ்சாதாங்க. ஐயா, நல்லா வணங்கி இதை வந்து புரிஞ்சுக்கோங்க. வந்து 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப யார் நம்மளுக்கு குரு காண்பிப்பார்? 


அடியவர் 4:- புதன் தான் குருவை காண்பிப்பார். 


https://youtu.be/NqRaI13qIDU?t=33955


சுவடி ஓதும் மைந்தன் :-  புதன் தான் குருவை காண்பிக்கிறதுக்கு அறிவு வேணும். அப்ப, இவன் இதை வந்து இதுக்கு என்ன? நமச்சிவாயனுக்கு என்னன்னு நம்ம தெரிஞ்சுக்கணும். அர்த்தம் தெரியாம சொல்லக்கூடாது. அப்ப, நமச்சிவாய, நமச்சிவாய. நீங்க என்ன பண்ணனும்? அறிவு சொல்லினே இருக்கணும். வந்து இது வந்து பிரபஞ்ச ரகசியம். அப்ப, இதை சொல்லினே இருந்தீங்கன்னா, புத்தி கிடைக்கும். அதன் மூலம் குரு உணரலாம். அடுத்து, ஐயா, நான் யார் தெரிஞ்சுக்கலாம்? நீ யார் தெரிஞ்சுக்கலாம்? 


குருநாதர் :-   அப்பனே, இவையெல்லாம் ஒரே முறையில் சொன்னால், நீங்கள் குழப்பிக் கொள்வீர்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :-   இதையெல்லாம் ஒரே முறையில் சொன்னால்?


அடியவர் 4:- குழம்பிடும், 


சுவடி ஓதும் மைந்தன் :-   குழம்பிடும். 


===========================
# நிச்சயம் அதிகாலையிலிருந்து நமச்சிவாய மந்திரத்தை சொல்லச் சொல்
===========================
#  ஓம் நமச்சிவாய - பிரபஞ்சத்தின் சத்தம். 
===========================


குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் அதிகாலையிலிருந்து அப்பனே, நிச்சயம் அதாவது நமச்சிவாய மந்திரத்தை சொல்லச் சொல். நிச்சயம் தன்னில் சொல்லிவிட்டேன் முதலில்…..


குருநாதர் :- அப்பனே, எது என்று அறிய. அப்பனே, பிரபஞ்சத்தின் சத்தம். அப்பனே, ஓம் நமச்சிவாய. 


சுவடி ஓதும் மைந்தன் :-  பிரபஞ்சத்தின் சத்தம், ஓம் நமச்சிவாய. ஓம் நமச்சிவாய. ஓம் எப்படி போகணும்னா? ஓம் நமச்சிவாய. அப்படியே பிரபஞ்சத்தின் சத்தம். இது யாரு பிடிக்கிறது இல்ல? வந்து பிரபஞ்சத்தின் சத்தம். டேய், என்று சொல்றேன்ல. அது மாதிரி ஒரு சத்தம். 


நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=34051


குருநாதர் :- இதற்கு எவ்வாறெல்லாம் அறிவியல் வழியாகவே உரைக்கின்றேன். 


சுவடி ஓதும் மைந்தன் :- இதை சயின்ஸ் மூலமா எடுத்துட்டு வருவார். அப்ப, ஓகேங்களா? 


குருநாதர் :-  அப்பனே, நிச்சயம். அப்பனே, அதை வெளியே, வெளியே இழுத்து, 


சுவடி ஓதும் மைந்தன் :- முடி இது . ( ச என்ற எழுத்தின் மீது கொம்பு ஒன்று சுழித்தார். ) 


குருநாதர் :-  அப்பனே, இதிலிருந்து என்ன தெரிகின்றது? 


சுவடி ஓதும் மைந்தன் :-  இதிலிருந்து என்ன தெரிகிறது? 


அடியவர்கள் :- ( சில உரையாடல்கள் ) 


===========================
# ஆதி ஈசனாரின் நெருப்பு பிழம்பு - பரம ரகசியங்கள் வாக்கு
===========================


குருநாதர் :-  அப்பனே, இது தனி கிரகம். அப்பா. அப்பனே, எது என்று புரிய இவ்வாறாக, அப்பனே, சுற்றிக் கொண்டே இருக்கின்ற பொழுது, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் அதாவது, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, வெளிச்சம் வெளிவருகின்றது அல்லவா? இது தனி. 


https://youtu.be/NqRaI13qIDU?t=34113


சுவடி ஓதும் மைந்தன் :- இப்படித்தான் ஈசன் என்ன பண்ணுவாராம்? இப்படி ஆடினே இருப்பாராம். வந்து இப்படி போயிட்டு, இப்படி போயிட்டு, கால்ல இப்படி போறது. இப்படி எடுத்து, இப்படி போயிட்டு, இப்படி போயிட்டு, இதிலிருந்து ஒரு ஒளி வரும். பாருங்க. இந்த ஒளி, இந்த ஒளிதான் எல்லா கிரகத்திலும் செல்லும். போடுங்க, ஐயா, புரியுதுங்களா? 


அடியவர் 6 :-  ( “சி” என்ற எழுத்தில் இருந்து அனைத்து கிரகத்திற்கும் கோடுகள் வரைய ஆரம்பித்தார்கள்)  


சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லா கிரகத்திலும் வந்து அது பேரொளி அண்டம். பேரண்டம், புரியுதுங்களா? 


அடியவர் :- பேரொளிப் பிழம்பு. அது வந்து இதிலிருந்து எல்லா கிரகத்துக்கும் போகும்.  ( இவ் ரகசியம்  குறித்து முன்னர் குருநாதர் வாக்குகள் உரைத்துள்ளார்கள். அவ் ரகசியங்கள் தெரிந்து கொள்ள பின்வரும் பதிவினை படிக்கவும் ) 

===========================
# ஆதி ஈசனாரின் நெருப்பு பிழம்பு ரகசியங்கள் குறித்த வாக்கு
===========================
சித்தன் அருள் - 2092 - அன்புடன் அகத்தியர் - 26.1.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு. - பகுதி 7
https://siththanarul.blogspot.com/2026/02/2092-2612026-7.html
===========================


குருநாதர் :-  ஆனாலும், பின் புவியில், பின் மேற்பரப்பில் தான் படிகின்றது. ஆனால் உள்ளே வர முடியவில்லை. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஆனால் இதை வந்து என்ன ஆகுது? ( பூமி ) மேலதான் படியுது. மத்த கிரகங்களுக்கு எல்லாம் ( இந்த ஒளி )  போகுது. உள்ள படுது. ஆனால் என்ன ஆகுது? 


அடியவர் :- அந்த ஒன்னு, ரெண்டு, மூணு, நாலு, அஞ்சு மேல உள்ள வரலை. அதான் அந்த ஒன்னு, ரெண்டு, மூணு, நாலு, அஞ்சு மேல தான் விழுகுதுன்னு சொல்றாரு. 

===========================
#  அனைத்து சித்தர்கள் திருவடிகளுக்கு நன்றி!  நன்றி!!  நன்றி!!!
===========================
# ஆதி ஈசனாரின் நெருப்பு பிழம்பு அதனை  பூமிக்கு கொண்டு வருவதற்கு சித்தர்கள் பெரும் பாடுபட்டனர். 
===========================


குருநாதர் :-  இதனால் இதை ஈர்க்க சித்தர்கள் பெரும் பாடுபட்டனர். நிச்சயம் தன்னில் கூட. 


குருநாதர் :-  ஆனாலும், இவை எது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட கீழிருந்தே, நிச்சயம் அதாவது, பின் அதாவது, நிச்சயம் இரு சமமான நிச்சயம் தன்னில் கூட, பின் ஒன்றோடு எதை என்று கூட இணைய. பின் இவ்வாறாவது புவியின் தன்னில் கூட பின் கீழ் பரப்பில் இணைத்தால், பின் நிச்சயம் அவ்வொளி விழுமா என்று கூட. 


அனைத்து அடியார்களுக்கும் பொது வேண்டுகோள் :- (பின் வரும் நேரலையை அவசியம் பார்த்தால் மட்டுமே இவ் ரகசியங்கள் தெரியவரும்.  ) 


நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=34200




சுவடி ஓதும் மைந்தன் :-  இப்ப இன்னொன்னுல இருந்து என்ன பண்றாரு? கரண்ட் மாதிரிதாங்க. வேற ஒன்னும் இல்லை. அப்ப இதுல இணைச்சு இப்படி எடுக்கலாமா? கரண்ட்ட சித்தர்கள் புரியுதுங்களா? இதுல இருந்து ஒளி படல. அப்ப இதுல இருந்து எடுத்து இந்த நீர்ல இட்டா என்ன ஆகும்? 


அடியவர் 4 :- எல்லா பக்கமும் போகும். 


சுவடி ஓதும் மைந்தன் :- எல்லா பக்கமும் போகும். ஐயா, புரியுதுங்களா? 


அடியவர்  :-  நீர் வந்து கடத்தீரும் ( அந்த ஆற்றலை) 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, கொஞ்சம் சொல்லுங்க. ஐயா, கொஞ்சம் இதா இருக்குதுங்க. ஐயா, சயின்ஸ் தானே? ஐயா, இதெல்லாம் யார் சயின்ஸ் படிச்சா, அவங்களுக்கு தான் புரியுங்க. ஐயா, வந்து இது வந்து இதெல்லாம் தெரிஞ்சுக்க முடியாது யாராலும். வந்து ஆமா, ஆமா. ஆனா இது உலக நன்மைக்காக இதை சொல்றாரு. வந்து இது வருங்காலத்துல பயன்படும். தன்னில் பாய்ச்சும்போது என்ன ஆகும்? எல்லா பக்கமும் போகும். 


அடியவர்  :-   நீர் வந்து எளிதில் வெப்பத்தை கடத்தும், ஒளியை கடத்தும். 


குருநாதர் :-   அப்பனே, எதை என்று அறிய  திருத்தலம் கட்டி ஈர்க்க முடியவில்லை. அப்பனே, இதனால் அப்பனே, இதன் மேற்பரப்பில் தான் அப்பனே, திருத்தலம் உள்ளது. 


நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=34259


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப இதை இழுக்க முடியல. கோயில் கட்டி கம்மி ஆயிடுச்சு. இங்கிருந்து பாய்ச்சோம்னா, இங்கதான் கோயில் எல்லாம் இருக்குதான்றார். வந்து இதெல்லாம் தண்ணி ஃபுல்லா. அப்ப உருண்டை பிறை வடிவில் இருக்கு. வந்து தண்ணி, ஐயா, புரியுதுங்களா? 


அடியவர் 4 :-  அதுக்கு மேலதான் வந்து திருத்தலங்கள் எல்லாமே இருக்குது. அதனால, தன்னில் வந்து அந்த ஒளி கிடைச்சதுன்னா, எல்லா திருத்தலங்களுக்கும் அந்த ஒளி கிடைக்கும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  பூமி இப்படி சுத்தும் பொழுது, தண்ணி எங்க அலையல, அலைப்பாயாது. வந்து, ஐயா, புரியுதுங்களா? 


அடியவர் 7:- பிறை வழியில தான் இருக்கு. நீங்க வந்து அப்ப கோயில் இங்க மேல இருக்குது. வந்து பூமி மேல படுறது. ஆனா தண்ணி மேல பட்டுச்சுன்னா, எதிர் ஒளிச்சு எல்லா திருத்தலங்களுக்கும் போகும். இன்னும் 


சுவடி ஓதும் மைந்தன் :-  ரைட், ரைட், 


அடியவர் 7:- சொல்றாங்க. அப்ப இந்த திருத்தலங்களுக்கு போச்சு. அப்படின்னா, இங்க இருந்து ஒளி வந்து இங்க போச்சு. அப்படின்னா, இந்த திருத்தளங்கள் இந்த தண்ணி வழியாக எல்லா திருத்தங்களுக்கும், எல்லா திருத்தங்களுக்கும் பரவிரும். 


குருநாதர் :-  இதற்கு விஞ்ஞானிகளும் பின் நன்கு அறிந்து கொண்டார்கள். ஆனால் எப்படி என்று பின் செய்யாமல் தவிக்கின்றார். 


சுவடி ஓதும் மைந்தன் :-  விஞ்ஞானிகளுக்கு  இதெல்லாம் தெரியும். விஞ்ஞானி சில பேருக்கு தெரியுது. வந்து ஆனா எப்படி மனுஷனை காப்பாத்துறதுன்னு சொல்லிட்டு. வந்து அப்ப வந்து ஓகேங்களா? அப்ப வந்து இதை வந்து கனெக்சன் பண்ணோம்னா, இந்த நீர்நிலை எடுத்து இங்க மனுஷன் இதான். ஐயா, இது நீர்னா இதுக்கு அந்த பக்கம். ஐயா, புரியுதுங்களா? இது வந்து அதுக்கு மேலதான் திருத்தலம் எல்லாம் இருக்குது. 


அடியவர் :- அதாவது ஒளி வந்து இங்க மட்டும்தான் படுது. சித்தர்கள் வந்து இது வழியை வந்து ஒளியை வந்து இங்க நம்ம நீர்ல பட்டோம். அப்படின்னா, திருத்தளங்கள் எல்லாம் இதுக்கு மேலதான் இருக்கு. அப்படின்றப்போ, இந்த ஒளியானது எல்லா திருத்தளங்களுக்கும் பரவி, எல்லா மக்களுக்கும் ஆற்றல் கிடைக்கும். அப்படின்றத வந்து சொல்ல வராங்க. நிச்சயமா? அதனாலதான் 


அடியவர் 4 :- எல்லா நீர்நிலைகள்ல தான் வந்து இருக்குது. வந்துட்டு திருத்தளங்கள் புரிய. 


===========================
# பக்தர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய ரகசியங்கள் 
===========================
#  முருகப்பெருமான் உருவம் ரகசியங்கள் 
===========================


இவ்விடத்தின் நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=34366


குருநாதர் :-   எதை என்று புரிய அதனால்தான் இதை ஈர்க்க முருகன் என்ற உருவம் தேவைப்படுகின்றது. அதனால்தான் பின் நிச்சயம் தன்னில் கூட முருகன் எவை என்ற பின் அதுவும் ஒரு நிச்சயம் தன்னில் கூட சமக்கடத்தி தான் என்று யான் சொல்வேன். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப முருகன் என்றால் என்னது? சம கடத்தல். சமக்கடத்தல்னா அவர் வந்து முருகர். நமக்கு முருகர்னு வணங்குறோம் இல்ல? அவர் சமக்கடத்தல். சமக்கடத்தல்னா என்னது? ஒளியை இது 


அடியவர் :- ஈக்குவலைசர். 


சுவடி ஓதும் மைந்தன் :- ஈக்குவலைசர் பண்றாரு. 


அடியவர் :- ஈக்குவலைசர், 


அடியவர் :- ஈக்குவலைஸ் பண்றாரு. 


சுவடி ஓதும் மைந்தன் :- அது சமக்கடத்தி பண்றார். 


===========================
#  48 நாட்கள் வழிபாடு செய்து,  பின் முருகப்பெருமான் தரிசனம் செய்ய  நிச்சயம் நினைத்தது நடக்கும் ரகசியங்கள். 
===========================


குருநாதர் :- இதனால் நிச்சயம் ஒரு மண்டலம் வரை மனதில் என்னென்ன நினைத்துக் கொண்டிருக்கின்றோமோ, அதையெல்லாம் நினைத்து நிச்சயம் தன்னில் கூட அவ் கடத்தியிடம் நீங்கள் சென்றால், நிச்சயம் நடக்கும். 


சுவடி ஓதும் மைந்தன் :- முருகன் இங்க வந்து கடத்தி என்றார். ஐயா, சொல்லுங்க. ஐயா, 


அடியவர் :-  முருகன் வந்து ஒரு மின்கடத்தி, அதாவது மின்சாரம். அப்படின்றாரு. மின்கடத்தி எளிதாக கடத்தக்கூடியவர். அப்போ ஒரு மண்டலம் வந்து நாம வந்து முருகன்ட்ட செஞ்சா, அவரை தரிசிக்க போனோம். அப்படின்னா, வந்து கிரகங்கள். அதாவது முக்கியமா அந்த 


ஒரு ஆசிரியை :- ( ஒலி பெருக்கி இல்லாமல் பேசினார்கள் ) 


சுவடி ஓதும் மைந்தன் :- சொல்லுங்க. டீச்சரா, ஐயா, குடுங்க. ஐயா, அம்மா, ரொம்ப குழப்பம் இருக்கும். அதனாலதான் இருங்கம்மா. அதனால்தான் சித்தர்கள் என்ன சொல்றாங்க தெரியுங்களா? டேய், முதல்ல அடிப்படை தத்துவத்தை படிங்கடா. இப்படி எல்லாம் எடுத்துட்டு வந்தா, எப்படிமா புரியும் உங்களுக்கு? அதனாலதான் முதல்ல நீங்க அடிப்படை தத்துவம் தெரிஞ்சுக்கோங்க. அம்மா, வேற லெவல்ல எடுத்துட்டு போவோமா? சித்தர்கள் வந்து ஏன்னா, நீங்க வந்து அந்த அடிப்படை தத்துவங்களே தெரியாத பொழுது, நம்மளை எப்படி மேல்நோக்கி தூக்கிட்டு போவாரு? இப்ப அந்த அம்மா கொடுத்தாங்க. அகத்தியர் வந்து எழுதுன்னு சொல்லிட்டு, அதெல்லாம் செய்ய முடியாதுன்றார். அகத்தியர் வந்து செய்ய முடியாது. இதெல்லாம் ஒரு 


உலகம் அழியப்போகுது. வந்து ஆனால் இன்னொன்னு சொன்னாரு. வந்து பொறித்திருந்தால் நல்லதே நடக்கும். ஏன்னா, நாட்டுல வந்து பைத்தியக்காரன் ஆயிடுவோமா? இறைவன் பலமே தெரிஞ்சுக்க மாட்டோமா? வந்து எது எதையோ செய்வோமா? நான் அதை தொடங்குறேன், இதை தொடங்குறேன். இது உண்மை, அது உண்மைன்னு சொல்லிட்டு, ஒண்ணுமே செய்யாம க்ளோஸ் பண்ணிடுவாங்கமா? மனுஷனை வந்து இறைவனை நம்பி, ஏன்னா இறைவனை நம்பி, மனுஷன் ஏமாத்த தான் போறான். ஒன்னும் ஆகாதுன்றார் அகத்தியர். அதனால, நீ தெரிஞ்சுக்கோடா. இறைவன் யாருன்னு தெரிஞ்சுக்கணும். தெரியாமையே இறைவன் பார்க்க தான் போறானான்னு சொல்லிட்டு, ஏமாத்துவாங்களாம்மா. வந்து ஏமாத்துவாங்களாம். இறைவனுக்கு கண்ணு தெரிஞ்சா என்ன பண்ணுவான்? எப்பா, நீயே பணி கூட பண்ணா, அமைதியா விளையாடுவான். அதனால, ஏமாற்றுகளும் புத்தி இல்லாததுனால, நமக்கு நிறைய ஏமாறதும் நோய் நிறைய வரும். அதனாலதான், நீங்க அகத்தியர் நம்பிட்டீங்க. வந்து யாரோ சொல்லி, ஏதோ படத்துல போட்டு நம்பிட்டீங்க. வந்து அதனாலதான், உங்களுக்காக இறங்கி வந்து அவர் சொல்றாரு. வந்து தெரிஞ்சுக்கோங்க, தெரிஞ்சு புரிஞ்சுக்கோங்க. 


நம்ம பலத்தை நாமே எப்படி அதிகரிப்படுத்தது? ஜீவநாடி எல்லாம் இப்படி சொல்றாருன்னா, எங்கயும் சொல்ல மாட்டாங்க. வந்து இப்படி சொல்றாங்கன்னா, நம்மளுக்காக பாருங்க. எந்த விஞ்ஞானிக்கும் இது தெரியாது. அகத்தியர் சொல்றது, 


அதனாலதான் அடிக்கடி உங்களை என்ன சொல்றாருன்னா, அடிப்படை தத்துவத்தை படிச்சுக்கோங்க. இப்ப நீங்க எல்லாருமே, நான் நல்லா இருக்கணும், நான் பெரிய ஆள் ஆகணும்னு சொல்றீங்க இல்ல? இதை வந்து படிச்சா மட்டும்தான். ஆனா எல்லாரும் பெரிய ஆள் ஆகணும்னா, திடீர்னு பெரிய ஆள் ஆயிட்டாங்கன்னா, பெரிய ஆள் ஆகுவாங்க. ஒரு வருஷமோ, ரெண்டு வருஷமோ, மூணு வருஷமோ, நாலு வருஷமோ, டப்புக்குன்னு கீழ போடுவாங்க. ஆனால் இதெல்லாம் தெரிஞ்சுக்கணும்னா, நீங்க அப்படியே போயிட்டே இருப்பீங்க. மேலுக்கு உங்க பிள்ளைகள் நாலு பேர் இதெல்லாம் ஏன் இழுக்குறாங்கன்னா, உங்க பிள்ளைகளுக்கு, உங்க பிள்ளைகள் இது கத்துக்கொடுத்தீங்கன்னா, அவங்க நாலு பேருக்கு நல்லது செய்வாங்க. அவங்க நாலு பேருக்கு நல்லது செய்வாங்க. அப்படியே உலகம் மாறிடுமா.  வந்து தர்மம் தலை தூக்குமா? வந்து மேல, அதனாலதான்மா சொல்லுங்கம்மா. 


===========================
#  அருமையான ஒரு விளக்கம் அளித்த ஆசிரியை.  
===========================
# அனைத்து கூட்டுப்பிரார்தனைகளுக்கும் தவறாமல் வரும் அடியவர் இவ் அம்மை
===========================
# ஏன் செம்பு வேல் , பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும் ?
===========================


ஆசிரியை விளக்கம் நேரலை:-  https://youtu.be/NqRaI13qIDU?t=34581 


ஆசிரியை விளக்கம் :-  நவகிரகங்களில் செவ்வாய் பகவான் மின் சாதனங்களுக்கான பொருள். ஏன்னா, அது காப்பர். காப்பர் வந்து அவருக்குரிய அந்த பொருள். மின் கடத்தியா, நம்ம அந்த காலங்களிலேயே காப்பர் தான் பயன்படுத்தி வந்தோம். 


ஆசிரியை விளக்கம் :- அப்ப வந்து அது மின் மின்னோட்டத்தை அதிகரிச்சு கொடுக்கக்கூடும். அழுத்தத்தை அதிகப்படுத்தி, அந்த மின் மின் மின் அந்த சக்தியை இழுக்கக்கூடிய சக்தியும் அதுக்கு உண்டு. 


===========================
# ஏன் செம்பு வேல் பூஜையில்  பயன்படுத்த வேண்டும் ?
===========================


ஆசிரியை விளக்கம் :- அதனால, வேல் வந்து நம்ம காப்பர்ல வாங்கி வச்சோம்னா, அந்த செவ்வாய் கிரகத்துக்கான சக்தி நமக்கு எளிமையா. அந்த முருக வேல் காப்பர்ல வாங்கி வைக்கும் பொழுது, அந்த மின் கடத்தி மூலமா நம்ம வீட்டுக்கு இணைச்சு கொடுக்கும். 


ஆசிரியை விளக்கம் :- அப்ப அந்த இணையும் பொழுது, மண் சட்டியில சொல்றாங்க. குருநாதர் இதுக்கு முன்னாடி நம்ம விபூதியில பசும் சாணம் ( விபுதி) வச்சிருந்தோம். 


===========================
# கோமாதாவும் , நவகிரக சக்தியும் 
===========================


ஆசிரியை விளக்கம் :-  ( கோமாதாவும் ) பசுவும் அந்த மின்காந்த அலைகளை முக்கியமா நவகிரக சக்திகளை ஈர்க்கக்கூடிய சக்தி. பசு அது மேயக்கூடிய இடமும், நவகிரகம் சக்தி எங்க விழுகுதோ, அங்கதான் மேயும். ஏற்கனவே (இதுகுறித்து) குருநாதர் சொல்லிக் கொடுத்திருக்காங்க. 


ஆசிரியை விளக்கம் :-  இப்போ அந்த நவகிரகங்களுக்கு ஏற்கனவே அந்த விபூதியில வச்சாச்சு. இப்ப காசி தல த்துக்குரிய மண் சக்தியில ( வேல் )  வைக்கும் பொழுது, அந்த மண் சக்தி என்ன பண்ணும்? அப்படின்னா, அந்த காப்பர் சக்தியை இழுத்து கொடுக்கும் பொழுது, பூலோகம் காக்கப்படும். 


ஆசிரியை விளக்கம் :- அப்ப உலகத்துல மூணு பங்கு நீரால சுழப்பட்டிருக்கு. ஒரு பங்குதான் புவியினால இருக்கு. அந்த புவியை சந்திர பகவான்,  சனியன் கிரகத்தினால் ஊடுருவ முடியாத பட்சத்துல, அந்த நீரை நம்ம புவி சுழற்றும் பொழுது, இதைத்தான் போன முறை வந்து நமக்கு குருநாதர் கிளாஸ்ல எப்படி வந்து ராக்கெட் விடுறாங்க. கரெக்டா, ஒரு கிரகத்தை வந்து நாசால செலுத்துறாங்க இல்ல, இஸ்ரோல செலுத்துறாங்கன்னா, அது எப்படி அந்த சந்திர பகவான் கிரகம் கரெக்டா பூமியை பிளந்து எப்படி வந்து அந்த விசையோடு கரெக்டா பொருந்தி சந்திரகத்துல விழுந்துச்சோ. அதுபோல, இங்க நீர் வந்து நிறமற்ற ஒரு பொருள்தான். 


அந்த நிறமற்ற பொருளை ஈசியா ஊடுருவ முடியும். எந்த கிரகம் மேல வருதோ, ஊடுருவ முடியும். அந்த அந்த சக்திகளை ஊடுருவிச்சு, அந்த கடக்குறையோரமா ராமநாதபுரமா இருக்கட்டும். 


===========================
# திருச்செந்தூர் பஞ்சலிங்கங்கள் 
===========================


ஆசிரியை விளக்கம் :-  முக்கியமா, திருச்செந்தூர் வந்து பின்னாடி பார்த்தீங்கன்னா, அது பஞ்ச பஞ்சலிங்கங்கள் தான் இருக்கும். அப்ப அந்த அந்த திருச்செந்தூர் தலம் மெயினா இதுவரைக்கும் உலகத்தால் அழியப்படாமல் இருக்கிற இடமும், அழிவு வரும் பொழுது நீர் பின்னோக்கி நகந்து போற சக்தியும், முருகப்பெருமானுக்கு பின்னால அந்த பஞ்சலிங்கங்கள். அப்ப அந்த பஞ்சாட்சரமும் சரவண பவன் சடாட்சரமும் இணையும் பொழுது, புவியானது காக்கப்படுகிறது. 


===========================
# முருகப்பெருமானும், சிவபெருமானும்  இணைந்து அருளும் தலங்கள் அனைத்தும்  சக்தி மிக்க தலங்கள்,
===========================


ஆசிரியை விளக்கம் :- எங்கெல்லாம் முருகனும் பஞ்சாட்சரமாகிய சிவபெருமானும் இணைந்து நிற்கிற சக்தி தலங்கள், சக்தி மிக்க தலங்களா, பாதுகாப்பு மிக்க தலங்களா இருக்கு. அந்த சக்தியை அதிகப்படுத்தும் பொழுது, புவியானது காக்கப்படும் என்ற ரகசியத்தை அந்த ரெண்டு மந்திரத்தை இணைச்சு கொண்டு வராங்க. அதுல பஞ்ச பூதங்களும் அடங்குது. நவகிரக சக்தியும் உள்ள கொண்டு வராங்க. 


===========================
# ஆன்மீகத்தில் - முருகப்பெருமான் கடவுள் 
===========================
# விஞ்ஞானத்தில் - முருகப்பெருமான் மின்கடத்தி 
===========================


சுவடி ஓதும் மைந்தன் :- புரியுதுங்களா? அப்ப முருகன் என்பவர் யாரு? அவர் தமிழ் ரீதியா நம்ம முருகன் கடவுள்.  அறிவியல் ரீதியா  கடத்தி, 


ஆசிரியை விளக்கம் :-  மின் கடத்தி. செவ்வாய் கிரகம். அதி தெய்வம்.


சுவடி ஓதும் மைந்தன் :- தெரிஞ்சுக்கோங்க. ஐயா, நம்ம எல்லாம் பக்தர்களா இருக்கிறோம். நீங்க எல்லாம் பக்தரா இருக்கிறீங்க. வந்து ஏன்னா, மனுஷன் என்ன பண்றான் தெரியுமா? கடவுள் இல்லை என்று சொல்றான். ஆனால் அறிவியல் பூர்வமாக  நிரூபிக்கிறார் இறைவன். 


சுவடி ஓதும் மைந்தன் :-  கடத்தல்காரன் முருகப்பெருமான் யாரு? கடத்தல்காரன் முருகன் என்பவர் சயின்ஸ் சொல்லுங்க. 


ஆசிரியை விளக்கம் :-  செவ்வாய் கிரகத்துக்குரிய அதிதெய்வம் முருகப்பெருமான். கடத்துறது மின் கடத்தல். அவர்தான் கடத்துறார். காப்பர் உலோகம் பயன்படுது. 


===========================
# மின்காந்த அலைகளை எப்படி நம் உடம்பிற்குள் செலுத்துவது?
===========================
# ஏன் அதிகமாக பழ வகைகள் உட்கொள்ளவேண்டும்?
===========================
# ஏன்  உணவு பொருட்களை நிச்சயம் அதிகமாக எடுத்துக் கொள்ளக்கூடாது? 
===========================
# எப்போது வேண்டுதல்கள் நிறைவேறும் ?
===========================


இவ் பகுதி நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=34800 


குருநாதர் :-  அப்பொழுது எவை என்று அறிய காந்த அலைகள் உங்களுக்குள் வரவேண்டும் என்றால், நீங்கள் நிச்சயம் தன்னில் கூட உணவு பொருட்களை நிச்சயம் எதை என்று கூட அதிகமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இதனால் பழ வகைகள்  எடுத்துக்கொண்டால், அதிவிரைவில் நிச்சயம் பின், அதாவது அவ் மின்னலைகளும்,  ஒளி அலைகளும் உள் ஊடுருவி, நீ கடத்தல் இடத்தில் சென்றால், அவ் கடத்தல் பின் உங்களுக்கு பின் நல்லாற்றுகள் தந்து, நீங்கள் பின் உயர்ந்து விடலாம். 


அடியவர் :- பழங்கள் எடுத்துக்க சொல்றாங்க. சமைத்த உணவை விட பழங்கள், 


அடியவர் 4 :- அதாவதுங்க உணவு பொருட்களை வந்து கம்மியா எடுத்துக்கணும். ஏன்னா வந்து அந்த அதிர்வலைகள் வந்து நமக்குள்ள கடந்து போயி, நம்மளோட எண்ணங்களை வந்து இறைவன்ட்ட கொண்டு, 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, அப்படி இல்ல. இல்ல, இல்ல, மின்காந்த அலைகள் உடம்பு வந்து இந்த மின்சார அலைகளை ஏற்கிறது. பழங்கள்ல இருக்குது. 


அடியவர் :- பழங்களை சாப்பிடணும். 


அடியவர் 7  :-உணவுல பழங்களை எடுக்கும்போது, மின்காந்த அலைகள் ஈர்க்குது. 


சுவடி ஓதும் மைந்தன் :-   ஈர்க்குது…. 


சுவடி ஓதும் மைந்தன் :-   பழங்கள் நீங்க சாப்பிடும்போது, மின்காந்தம் அதிகமா ஈர்க்குது என்று. அப்ப அந்த கடத்தல்காரனிடம் செல்லும் பொழுது, நீங்க வந்து (பழ) உணவு அதிகமாகும் பொழுது, நீங்கள் என்னென்ன நினைக்கின்றீர்களோ, அது நடந்துரும்ன்றார். அப்ப வேண்டுதல் நிறைவேறும். 


===========================
#  ரகசியம் - ஏன் 48 நாட்கள் காப்பர் கம்பி வைத்துக் கொள்ள வேண்டும்?
===========================
# அடுத்த கூட்டு பிரார்த்தனையில் செம்பு வேல் கொடுக்க வேண்டும் 
===========================


குருநாதர் :- அவை மட்டுமில்லாமல், கம்பியை பற்றி சொன்னாயே, தாயே, அதை எப்பொழுதும் 48 நாட்கள் வைத்துக் கொள்ள வேண்டும். 


சுவடி ஓதும் மைந்தன் :-    கம்பி என்ன? கம்பி சொன்னீங்க நீங்க வந்து?


அடியவர்கள் :-  காப்பர் கம்பி


சுவடி ஓதும் மைந்தன் :-  காப்பர் கம்பி என்ன பண்ணனும்? 


குருநாதர் :-  அப்பனே புரியாது அப்பா, இவர்களுக்கு. புரியும்படி சொல்கின்றேன். அடுத்து, அப்பனே, இதனால் ஆன ஒன்று வேலை, அனைவருக்கும் கொடுங்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப அடுத்து என்ன சொல்றாரு? இவங்களுக்கு இப்ப இனிமேல் புரியாது. பாய், அவங்களுக்கு சொன்னா, எல்லாருக்கும் காப்பரான வேல் ஒன்னு எடுத்துட்டு வந்து கொடுங்க. 


அடியவர்கள் :-  (கைதட்டல்கள்) 


சுவடி ஓதும் மைந்தன் :-  அம்மா, கை நல்லா அகத்தியர் கை தட்டும்மா. அகத்தியர் இருக்காருமா. அப்ப அடுத்து சின்ன விரலாலான காப்பர் வேல் வாங்கி கொடுக்கணும். அந்த வேல் மூலம் நீங்கள் கடத்தல் எப்படி கடத்தணும், ஏது கடத்தணும்னு சொல்லுவார். ஐயா, நம்மளுக்காக இவ்வளவு சித்தர் பெருமக்கள் சொல்றாங்க. ஐயா, வந்து ஐயா, மனுஷன் எல்லாம் வந்து அதுக்கு புண்ணியம் வேணுங்க ஐயா.  கேக்குறதுக்கும் வந்து 


சுவடி ஓதும் மைந்தன் :- ஏன்னா, வருங்காலத்துல இறைவன் இல்லைன்னு தான் சொல்ல போறாங்க. அகத்தியர் ஆணித்தரமா சொல்றாரு. பொய் என்று சொல்வாங்க. 


சுவடி ஓதும் மைந்தன் :- ஏன்னா குடிகாரன் ஆயிட்டான் மனுஷன். போதைக்கு அடிமை ஆயிட்டாங்க. ஐயா, போதை, போதை, குடிகாரன், கஞ்சா போடுறான். இதெல்லாம் அதிகமாயிட்டாங்க. ஐயா, வந்து அப்ப என்ன ஆகும்? வந்து புத்தி மங்கிடும். அப்ப இறைவன் எங்க இருக்கிறதுன்னு தெரிய போகுது. வந்து ஆனா, நிச்சயமா அடிப்பாங்க. ஐயா, நான் பார்த்து தான் இருக்கிறேன். வந்து இந்த குடிகாரன் இதெல்லாம் வந்து கண்டிப்பா அடிக்கும் பொழுது, இதெல்லாம் தெரிஞ்சுக்கும் பொழுது, ஏன்னா நீங்க நல்லா இருக்கணுங்க. ஐயா, வந்து அதனாலதான் சித்தர்கள் வந்து ஏதோ ஒரு இடத்துல சொல்லி இருக்காங்க. வந்து இப்படியே போனா, நாடு என்ன ஆகிறது? மக்கள் என்ன ஆகிறது? வந்து சொல்லுங்க, பார்ப்போம். 


சுவடி ஓதும் மைந்தன் :- நல்லவர்கள் எல்லாம் இருக்கிறாங்கமா இந்த உலகத்துல வந்து அவங்க எல்லாம் எப்படி சொல்லுங்க, பார்ப்போம். வாழனும் பக்திக்குள்ள இருந்தே தப்பு பண்றாங்க. ஐயா, எல்லாம் வந்து நான் பார்த்துக்கிறேங்க. ஐயா, எண்ணங்கள் சரியில்லை., நான் பெரியவன், நீ பெரியவன், நிறைய. அதனால இறைவன் வந்து இங்க தோத்து போயிடுவாராம் கலியுகத்துல. ஆனா சித்தர்கள் என்ன சொல்றாங்க? டேய், நாங்க விடமாட்டேங்கடா. இறைவனை நாங்க விடமாட்டோம். 


சுவடி ஓதும் மைந்தன் :- அதனால வந்து நீங்க எல்லாம் வந்து இறைவனை வந்து கொடுப்பாங்க, கொடுப்பாங்கன்னு நம்பி இருக்கீங்க. வந்து இறைவன் உங்களுக்கு துரோகம் பண்ணுவாரா? சொல்லுங்கம்மா, பண்ண மாட்டார். சத்தியமா, பண்ண மாட்டார். 


சுவடி ஓதும் மைந்தன் :- அதனாலதான் சயின்ஸ் மூலமா எடுத்துட்டு வருவார். அடுத்தெல்லாம் நீங்க எல்லாம் அதிர்ஷ்டசாலி தான் சொல்லுவேன். காப்பர், ஐயா, சொல்லுங்க. ஐயா, அடுத்து காப்பருடைய வேல், காப்பர் வேல். ஐயா, தாமிரம், தாமிரம், காப்பர் வேல் ஒன்னு எல்லாருக்கும் உங்களுக்கு கொடுப்பாங்க. அடுத்து 


அடியவர்:- அதை வச்சு குருநாதர் சில எக்ஸ்பெரிமென்ட் சொல்லுவாங்க. 


சுவடி ஓதும் மைந்தன் :- காயின்ஸ், மூகாம்பிகையில போனோம். மூகாம்பிகை, தாய், மூகாம்பிகை, எங்க இருக்கு? 


அடியவர்:-  குங்குமம், 


சுவடி ஓதும் மைந்தன் :- குங்குமம் வேணும். பிரசாதம், காப்பர் காயின்ஸ் வேணும். காப்பர் கம்பி வேணும். 


===========================
# வேல் பூஜை வாக்கு
===========================


நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=35028


குருநாதர் :-  நிச்சயம் இதன் ஆற்றல் எது என்று அறிய வேலோடு அறிந்தும், பின் பிடித்துக் கொண்டு கையில் நிச்சயம் மந்திரம் சொன்னால், நிச்சயம் எப்படி நடக்கும் என்பது அப்பொழுது உரைக்கின்றேன் 


===========================
# இப் பூஜை முறையை பின் வரும் வாக்கில் படித்து தெரிந்து கொள்க.
===========================
சித்தன் அருள் - 2241 - அன்புடன் அகத்தியர் - 28/06/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் வேல் பூஜை வாக்கு!
https://siththanarul.blogspot.com/2026/07/2241-28062026.html
===========================



சுவடி ஓதும் மைந்தன் :-  அதை வேலை கையில வச்சுக்கிட்டு மந்திரம் சின்ன வேல்தான். அதை கையில வச்சு நீங்க வந்து அதை கடத்துறது எப்படி? மந்திரம் சொல்றது ஆற்றல் வாங்குறது எப்படி? ஆற்றல் எப்படி? அதனால வந்து நான் அடுத்த கூட்டுப்பிரார்தனையில் சொல்றேன். 


===========================
# உலகம் அழிவு நிலைக்கு செல்கின்றது
===========================
# கூட்டுப் பிரார்த்தனைக்கு அனைவரையும் அழை 
===========================



குருநாதர் :-   தாயே, அனைத்தும் செப்பிவிட்டாலும் இப்பொழுது புரியாது. எல்லாம் சொன்னாலும் இப்பொழுது புரியாது. நிச்சயம், அப்பனே, அனைவருக்கும் தாருங்கள் என்பேன் அப்பனே, நிச்சயம், அனைவரையும் வரவழை. ஏனென்றால் உலகம் அழிவு நிலைக்கு செல்கின்றது அப்பனே. அப்பனே, இதைப்பற்றி இன்னும் ரகசியமாக சொல்கின்றேன். அப்பனே, அனைத்தும் அழை




சுவடி ஓதும் மைந்தன் :-   ( எழுது பலகையில் எல்லாவற்றையும்  ) அழிச்சிருங்க. ஐயா, அடுத்து நீங்க சொல்லணும். திருப்பி அகத்தியர் கேட்பாரு. 


அடியவர்கள் :- ( அனைவரும் எழுது பலகையை படம் எடுத்துக் கொண்டனர். பின்னர் எழுது பலகை முழுவதும் அழிக்கப்பட்டது) 


===========================
# மீண்டும் வகுப்பு ஆரம்பம் - கணினி/கம்ப்யூட்டர்  மூலம் அழிவுகள்  
===========================
# இளைஞர்கள்  வேலை இழப்பார்கள் 
===========================

நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=35179 


குருநாதர் :-   அப்பனே, நிச்சயம், தனனில் கூட காற்றை நிச்சயம், இப்பொழுது எதை என்று கூற  அலையலையாக இடு.


சுவடி ஓதும் மைந்தன் :-  காற்று. இதுதான் அலையலையா.
( அலை அலையாக வரைந்தார்கள் )


அடியவர் :-  ஐயா, கொஞ்சம் அமைதியா இருங்க. எல்லாரும் இங்க கவனிங்க. முக்தி என்பது எளிதல்ல. 


குருநாதர் :-  அப்பனே, எது என்று புரிய. பின் உருண்டையை விடு.


சுவடி ஓதும் மைந்தன் :- உலகம் 


குருநாதர் :-  இதில் ஆட்களை இடு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஆட்கள் வரையுங்க. ஐயா, அங்கங்க ஆட்கள். 


அடியவர் 6:- ( பல ஆட்களை குறியீடு இட்டு அங்கு வரைந்தார்கள் ) 


குருநாதர் :-  அப்பனே, எது என்று அறிய கணினி வரை 


சுவடி ஓதும் மைந்தன் :-  கம்ப்யூட்டர் வரையுங்க. 


குருநாதர் :- அப்பனே, ஒரு உண்மை சொல்கின்றேன். அப்பனே, ஒருவன் தேசத்தில், அப்பனே, நிச்சயம் செயற்கையாக கண்டுபிடித்து இளைஞர்களை எப்படி அழிக்க வேண்டும் என்று அழித்திட்டு, அனைத்தும் அழித்து விடலாம் என்றெல்லாம். 


குருநாதர் :-  இறைவன் பின் எது என்று புரிய, தன் கட்டுப்பாட்டில் அனைவரும் வைத்துக் கொள்ளலாம் என்று காற்றின் மூலமாக எது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட சம்பளத்தை அதிகப்படுத்தி, நிச்சயம் இளைஞர்களை அனைவரையும் அழித்து, நிச்சயம் வேலை இல்லாமல் செய்யப் போகின்றான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அடுத்து, கம்ப்யூட்டர் இன்ஜினியரா இங்க ஒருத்தன் ஒருத்தர் ஊதுவான். வந்து இந்த காற்றின் வழியாக என்னென்ன அவங்க நினைக்கிறாங்களோ, அது கம்ப்யூட்டர்ல வரும். சம்பளம் கொடுத்து, அதிகமா வந்து இந்த இளைஞனை? 


அடியவர் :- பாடாப்படுத்துவான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  பாடாப்படுத்துவான்


அடியவர் :-  அடிமைப்படுத்திருவாங்க. 


குருநாதர் :- அப்பனே, இங்கு என்ன நினைக்கின்றானோ, அது இங்கு செய்வான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  இங்க என்ன ஒருத்தன் நினைக்கிறானோ, இந்த காற்றின் ஓடைகளாலோ, இவன் இங்க வந்து செய்வான். 


https://youtu.be/NqRaI13qIDU?t=35308 


===========================
# அடியவர்கள் அனைவரும் சித்தர்களுக்கு துணையாக நிற்க வேண்டும் 
===========================


குருநாதர் :-  அப்பனே, அதிக சம்பளத்தை கொடுத்து, அப்பனே, பின் அதாவது போதைக்கு அடிமையாக்கி, அப்பனே, நிச்சயம் பெண்களை, அப்பனே, ஏமாற்றி காதல் வலையில் சிக்கிக் கொண்டு அழிந்து விடுவார்கள் என்பேன்  அப்பனே. நிச்சயம் மனிதனால் தடுக்க முடியாதப்பா. யாங்கள் தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கெல்லாம் நீங்கள் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, துணையாக நிற்க வேண்டும். 


அடியவர்கள் :- ( கைதட்டல்கள் ) 


அடியவர்  :- கம்ப்யூட்டர் மூலமா அழிவுகள் வர காத்திருக்கின்ற 


சுவடி ஓதும் மைந்தன் :- சாப்ட்வேர் இன்ஜினியர்ஸ். அப்ப என்ன பண்ணுவாங்களாம்? இங்கிருந்து ஊதுவாங்களாம். இவன் கெட்டுட்டோம். இவன் சீக்கிரம் வேலை செஞ்சுட்டு போயிட்டோம். இவனை காதல் மயக்கம் ஆக்கு. அந்த பொண்ணோட இந்த பொண்ணோட லவ் பண்ண சொல்லு. எல்லாம் முடியும். போடா, வெளிய. அவ்வளவுதான். இது அப்படியே இங்க வந்து கம்ப்யூட்டர்ல இறங்கும் பொழுது, இவன் வந்து என்ன பண்ணுவான்? கெட்டுப்போயிடுவான். அப்புறம் இளைஞனோட லைஃப்பும் எல்லாமே க்ளோஸ் ஆகப்போகுது. அதை நம்ம தடுத்து நிறுத்தணும்பா. அதெல்லாம் யார் செய்யணும்? நீங்க தான் செய்யணும். 


குருநாதர் :-  அப்பனே, அதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட மனிதனிடத்தில் அருள் கொடுத்தால், இப்படி செய்து கொண்டிருக்கின்றான். அப்பனே, இவையெல்லாம் தடுத்து நிறுத்தினால் மட்டுமே. இல்லையென்றால், அப்பனே, பின் எவராலும், பின் எதை என்று கூட, அப்பனே, தடுக்க முடியாதப்பா. 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப இதை தடுச்சா, முடிச்சா மட்டும்தான் இந்த தேசத்தை, இந்த நம்ம நாட்டை காக்க முடியும். இல்லைன்னா, அரசியல்வாதிகளாலும் காப்பாத்த முடியாது. ஒரு எம்பி இருந்தாலும் காப்பாத்த முடியாது. எம்எல்ஏவாலும் காப்பாத்த முடியாது. பிரதமராலயும் காப்பாத்த முடியாது. 


அடியவர் :- இறைவன் வந்து மனிதனுக்கு அறிவை கொடுத்தது வந்து உருவாக்குறதுக்கு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அதாவது இந்த காற்றின் வழியாக என்ன பண்றாங்க பாருங்க. ஐயா, எப்படி இருக்குது? கடத்தல், அது எப்படி சம்பளத்தை கொடுத்து வச்சு? 


குருநாதர் :- அப்பனே, எது என்று புரிய இக் கடத்தலை நிறுத்த வேண்டும் என்றால், கடத்தல்காரனை இங்கு கொண்டு வரவேண்டும். 


சுவடி ஓதும் மைந்தன் :- இந்த கடத்தலை நிறுத்த வேண்டும் என்றால் யார்? கடத்தல்காரன் 


அடியவர் :- முருகர். முருகரை கொண்டு வரவேண்டும். 


சுவடி ஓதும் மைந்தன் :- முருகரை கொண்டு வரவேண்டும். 


குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இதை தடுப்பதற்கு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் தடுப்பு காரகன். அப்பனே, நிச்சயம் இதனால்தான், அப்பனே, கம்பியை கொண்டு வாருங்கள் சொல்கின்றேன். அப்பனே, இதை நிறுத்தலாம். அப்பனே, வருங்காலத்தில், அப்பனே, 


சுவடி ஓதும் மைந்தன் :-  இதை என்ன பண்ணலாம்? 


அடியவர் :-  வேலை கொண்டு வாங்க. நம்ம இதை தடுத்து, இதை நடுவுல வந்து தடை போட்டுருவோம். 


சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, புரியுதுங்களா? இதை வந்து நிறுத்தலாம். 


குருநாதர் :- அப்பனே, இதனால் இளைஞர்களின், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, மனங்கள் மாறும்ப்பா. இல்லையென்றால் மாறாதப்பா. 


சுவடி ஓதும் மைந்தன் :- அது தடுத்து நிறுத்தினால் மட்டும்தான் இளைஞர்களோட மனசு மாறும். 


குருநாதர் :- அப்பனே, இல்லையென்றால் தாய் தந்தையிடம் சண்டையிடுதல். அப்பனே, சகோதரிகள் சண்டையிடுதல் என்பேன். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்படி இல்லைன்னா, தாய் தந்தை மதிக்க மாட்டாங்க. குடும்பத்துல சண்டை, குடும்பத்துல வேலைக்கு போயிட்டு குழப்பம், குழப்பம், சண்டை போடுறது. வேலைக்கு, வேலைக்கு போறீங்களே. ஐயா, காசுக்காக வந்து அதனால வந்து..


===========================
# அடியவர்கள் அனைவரும் சித்தர்களுக்கு துணையாக நிற்க வேண்டும் 
===========================


குருநாதர் :- அப்பனே, இன்னும் சொல்கின்றேன். அப்பனே, நிச்சயம் தன்னில் பல ரகசியங்கள். அப்பனே, இப்பொழுது உலகம் நன்மையாக இருக்க அப்பனே, நிச்சயம் அனைவரும் நன்றாக வாழ வேண்டும். இறைவா!!!!! இன்னும் அருள்கள் கொடு. நிச்சயம் சித்தர்கள் வரட்டும். அனைவரும் நிச்சயம் சொல்லட்டும் என்றெல்லாம், அப்பனே, அனைவரும் இந்நாடு நன்றாக இருக்கட்டும் என்றெல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட திருவாசகத்தை பதிவேற்றுங்கள். அப்பனே, பின்புரைக்கின்றேன். 


சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாரும் திருவாசகத்தை பாடுங்க. எல்லாரும் நல்லா இருக்கணும். இந்த நாடு செழிப்பா இருக்கணும். நாட்டு மக்கள் நல்லா இருக்கணும் என்று சொல்லிட்டு நினைச்சு பாடுங்க. ஐயா, 


கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( சிவபுராணம் பாராயணம் ஆரம்பித்தார்கள் …..) 

( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 24/05/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் …..)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment