அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 28/06/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த 11 வது சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 8
நாள், நேரம் : 28/06/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம் : ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.
முழு கூட்டு பிரார்த்தனை நிகழ்வின் நேரலை :-
https://www.youtube.com/watch?v=q8Hs63mXjrc&t=1s
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
இவ் பதிவின் நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=30247
===========================
# சிவப்பு நிற ரகசியங்கள்…..
===========================
குருநாதர் :- அப்பனே இப்பொழுது சிவப்பு நிறத்தை எடு.
சுவடி ஓதும் மைந்தன் :- எடுங்க ஐயா. சிவப்பு நிறத்தை மாத்துங்க ஐயா.
அடியவர்:- ( ஒளிரும் விளக்கை கொடுத்து ) இது அமுக்குனா மாறிடும். ( இப்போது சிகப்பு விளக்கு ஒளிர்ந்தது. அதனை சுவடி ஓதும் மைந்தனிடம் கொடுத்தார் )
சுவடி ஓதும் மைந்தன் :- ( சிரிப்புடன் ) பெருசா (விளக்கை) வாங்குங்க என்றால், என்ன சின்ன சின்னதா வாங்கி இருக்கீங்க ஐயா.
அடியவர்:- ( சிரிப்புடன் ) அடுத்த முறை பெரிய பல்ப் வாங்கிடுறேன். தட்டி வச்ச பல்ப் வாங்கிடுறேன்.
அடியவர் 6:- ( அமுக்க சிரிப்பு அங்கு நடந்த சுவாரசிய உரையாடலை கேட்டு …..)
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா இதுல எரியறது எல்லாருக்கும் தெரியுதா? (அனைவருக்கும் காண்பித்தார்கள் )
அடியவர்:- (அவர் கையில் உள்ள மற்றொரு சிவப்பு விளக்கை அனைவருக்கும் காண்பித்தார்கள்)
https://youtu.be/q8Hs63mXjrc?t=30275
===========================
# சிவப்பு நிறம் கதிர்கள் ரகசியங்கள் வாக்கு
சித்தன் அருள் - 1858 - அன்புடன் அகத்தியர் - ருவென்வெலிசாய. மகா தூபா.புத்தமகா விஹார்.அனுராதாபுரம். ஸ்ரீலங்கா
https://siththanarul.blogspot.com/2025/05/1858.html
===========================
===========================
# சிவப்பு நிறம் - அதனுடன் ஆலயங்களுக்கு செல்லும் மனிதன்.
===========================
குருநாதர் :- அப்பனே இப்பொழுதெல்லாம் அப்பனே, மனிதனுக்கு எது என்று புரிய அப்பனே, நிச்சயம் இவ்நிறம் அதிகமாய் விட்டது. இதை வைத்துக்கொண்டு திருத்தளத்திற்கு செல்கின்றான். அவ்வளவுதான்.
சுவடி ஓதும் மைந்தன் :- ரெட் மனுஷனுக்கு அதிகமாயிடுச்சு. ரெட் லைட். டம் டம்னு எரியுதுங்களா? இது தெரியுதா ஐயா?
சுவடி ஓதும் மைந்தன் :- (தன் கையில் உள்ள சிவப்பு விளக்கை அனைவருக்கும் காண்பித்தார்கள்)
சுவடி ஓதும் மைந்தன் :- இது என்ன ஆச்சுன்னா…. மனுஷனுக்கு அதிகமாயிடுச்சு. (சிவப்பு) இதை வச்சுக்கொண்டு என்ன பண்றான்? கோயிலுக்குள்ள போயிடுறான்ப்பா.
https://youtu.be/q8Hs63mXjrc?t=30306
சுவடி ஓதும் மைந்தன் :- (தன் கையில் உள்ள சிவப்பு விளக்கை எழுது பலகையில் உள்ள ஆலயத்தில் மேல் வைத்து அனைவருக்கும் காண்பித்தார்கள்)
சுவடி ஓதும் மைந்தன் :- கோயிலுக்குள்ள போயிரு. போயிடுறான் ரெட் லைட்டோட.
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட அங்கு இருக்கும் ஆற்றலையும் கெடுத்து விடுகின்றான் மனிதன்.
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால அங்கு இருக்கும் நல்ல ஆற்றல் இருக்குது. அது என்ன பண்றான்?
அடியவர்:- அதையும் மனுஷன் கெடுத்துறானாம்
https://youtu.be/q8Hs63mXjrc?t=30318
குருநாதர் :- அப்பனே இதனால்தான் திருத்தலத்தில் மேலதாளங்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூற பின் அதாவது இவ்வாறு வைத்தியங்கள். அப்பனே நிச்சயம் தன்னில் கூட எது என்று புரிய இவ்வாறாக பாடல்கள் அப்பனே பாடிக்கொண்டே இருக்க, அப்பனே நிச்சயம் தன்னில் மாறும் பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் எவை என்று முருகன்
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப இது போடுங்க. இதனால எப்பொழுதுமே கைலாய வத்தியம், நாதஸ்வரங்கள் எப்பவுமே வந்து இறைவனுக்கு பூஜை பண்றது.. புரஸ்காரம் பண்றது…. இந்த மாதிரி எல்லாம் நடந்து கொண்டே இருந்து பண்ணா…( நல்லது ).
சுவடி ஓதும் மைந்தன் :- எந்த மதத்துலயும் இது இருக்குது. சர்ச் போனா என்ன பண்ணிருப்பாங்க? பண்ணினே இருப்பாங்க வந்து. முஸ்லிம் இவரு…. இங்க எந்த மதத்தையும்… எல்லா மதத்தையும் பத்தி சொல்றாரு.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, அகத்தியர்… ( அனைத்து மதத்தினருக்கும் ) அவங்களுக்கே தெரியாது. எல்லா மதத்தை பத்தி சொல்லி இருக்கிறார். எல்லா ஆற்றலை பத்தி சொல்லி இருக்காரு. யாருக்காவது தெரியுமா? யாருக்கும் தெரியாது வந்து?
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப அடுத்து இந்த ஆற்றல்கள், நல்லா நம்ம மனசு நல்லா வச்சுக்கிட்டு, கோயிலுக்கு நல்லா பண்ணிக்கிட்டு, நல்ல பிரார்த்தனைகள், நல்ல பலமாக செய்தால், அது வந்து ரெட் என்ன ஆகும்? வந்து
சுவடி ஓதும் மைந்தன் :- கிரீனா மாறும்ன்றாரு வந்து. அப்ப இது கிரீனா மாறிடும். ( சிவப்பு விளக்கு இப்போது பச்சை விளக்கானது….)
சுவடி ஓதும் மைந்தன் :- (தன் கையில் உள்ள பச்சை விளக்கை எழுது பலகையில் உள்ள ஆலயத்தில் மேல் வைத்து அனைவருக்கும் காண்பித்தார்கள்)
சுவடி ஓதும் மைந்தன் :- அய்யா தெரியுதுங்களா?
https://youtu.be/q8Hs63mXjrc?t=30381
குருநாதர் :- அப்பனே இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட, அப்பனே விழுந்து கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- பிளிங்கிங் போடுங்க ஐயா. எல்லா லைட்டும் பிளிங்கிங் போடுங்க ஐயா.
அடியவர் :- ( தன் கையில் உள்ள விளக்கை ஒளிர்ந்து அணைந்து ஒளிர்ந்து எரியும் ஒளிரும் விளக்காக மாற்றினார்கள் )
குருநாதர் :- அப்பனே இவ்வாறு ஆற்றல்கள் பதிந்து கொண்டே இருக்கும் புவி தன்னில்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா இது மாதிரி வந்து பிளிங்கிங் தெரியுதா?
சுவடி ஓதும் மைந்தன் :- ( தன் கையில் உள்ள ஒளிரும் விளக்கு அதனை அனைவருக்கும் காண்பித்தார்கள்)
சுவடி ஓதும் மைந்தன் :- வேற வேற கலர் இங்க மாறினே இருக்குமாம். இந்த கலர் எல்லாம் வந்து. இந்த இது ரவுண்டு அடிக்கும் போது…. செவ்வாய் வெள்ளி (கிரகங்கள்) இதெல்லாம் விடும்போது….( பூமியை வட்டமிட்டு காட்டி ) இது வந்து இப்படி வந்து பிளிங்கிங் ஆகினே இருக்குமாம். பூமியில…. உங்களுக்கு தெரியாது.
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த கலர்ஸ் என்ன ஆயிருக்கும்?
அடியவர் 6:- பிளிங்கிங் ஆயிட்டே இருக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆமாம். பிளிங்கிங் ஆயிட்டே இருக்கும்.
குருநாதர் :- அப்பனே நீங்கள் முதலில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எதனை அப்பனே அதிக அளவு அப்பனே ஈர்த்துக் கொள்வீர்கள்?
சுவடி ஓதும் மைந்தன் :- நீங்க முதல்ல என்ன ஈர்க்கணும்?
குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே வெள்ளை.
சுவடி ஓதும் மைந்தன் :- வெள்ளை நீங்கள் இருக்கணும். முதல்ல ஐயா வெள்ளை போடுங்க ஐயா. லைட்டு.
===========================
# உணவு அழைப்பு - பொது அறிவிப்பு…
===========================
குழுவினர் பொது அறிவிப்பு :- ஐயா முக்கிய அறிவிப்பு. சாப்பிடாத அன்பர்கள் யாராவது இருந்தா, கிச்சன் க்ளோஸ் பண்ண போறாங்க. வந்து சாப்பிடலாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- அய்யா சாப்பாடு யாருனா சாப்பிடலைன்னா தயவு செய்து சாப்பிட்டு வந்துருங்க. சாப்பிட்டுருங்க.
குழுவினர் பொது அறிவிப்பு :- இன்னொரு பத்து நிமிஷத்துல கிச்சன் க்ளோஸ் ஆயிரும் தயவு செய்து சாப்பிடாத அன்பர்கள் சாப்பிட்டுருங்க. சாப்பிடலைன்னா வந்து சாப்பிட்டுருங்கமா கிச்சன் க்ளோஸ் ஆகப்போகுது
===========================
# மீண்டும் வாக்குகள் …..
===========================
https://youtu.be/q8Hs63mXjrc?t=30475
குருநாதர் :- அப்பனே எது என்று அறிய அப்பனே இவ்வெள்ளை ஆவதற்கு அப்பனே அடுத்த நிறம் என்ன?
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த வெள்ளையா ஆகுறதுக்கு நீங்க வந்து அடுத்த நிறம் என்ன?
அம்மை அடியவர் :- பச்சை… பச்சை ….
குருநாதர் :- அம்மையே இல்லை. மஞ்சள் ஏன் என்றால் நிச்சயம் மஞ்சள் எவை என்று அறிய குரு பகவான் அதிக அளவில் நிச்சயம் பின் எவை என்று கூற பின் மனதை மாற்ற. இன்னும் சொல்கின்றேன் எதை என்று புரிய.
===========================
# மஞ்சள் நிற கதிர்கள் ரகசியங்கள் வாக்கு
சித்தன் அருள் - 1858 - அன்புடன் அகத்தியர் - ருவென்வெலிசாய. மகா தூபா.புத்தமகா விஹார்.அனுராதாபுரம். ஸ்ரீலங்கா
https://siththanarul.blogspot.com/2025/05/1858.html
===========================
குருநாதர் :- பாடலை நிச்சயம் தன்னில் கூட அதாவது இன்னும் எவை என்று கூற தீய சக்திகள் அவரவருக்கு பின் ஒளிந்துள்ளது. அதன் நீக்க நிச்சயம் தன்னில் அதிகாலையில் பாடியவனை வரச் சொல்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா அவரை வரச் சொல்லுங்க ஐயா. (காளி அன்னை உபாசகரை பாடல் பாட அழைத்தார்கள்)
சுவடி ஓதும் மைந்தன் :- உடம்பு சரியா இல்லை அவருக்கு. பாருங்க எவ்வளவு நெகட்டிவ் எனர்ஜி (இங்க) இருக்குது பாருங்க. அவருக்கு பாடியே… உடம்பு சரியில்லை ஆயிடுச்சுங்க அய்யா.
அடியவர் :- அவர் போய் படுத்துட்டாரு. அவரு அப்பவே படுத்துட்டாரு
சுவடி ஓதும் மைந்தன் :- அவ்வளவு எனர்ஜி ஏன்னா அவர் கையில நிறைய டிவைன் எனர்ஜி இருக்குது வந்து. அதனாலதான் உங்க கையில கெட்ட எனர்ஜி இருக்கு அதிகமா. அது பண்றது… இது பண்றது… (மாந்திரீகம்) அந்த தேங்காய்… இப்படி பண்றது.. அந்த இது பண்றதுனால… அவர் என்ன பண்ணிட்டாரு? கடைசில பாருங்க
காளி அன்னை உபாசகர்:- ( காளி அன்னை உபாசகர் அங்கு பாடல்கள் பாடியதால் , அனைவரும் நெகடிவ் ஆற்றல்களை தன்னுள் வாங்கும்படி ஆனதால் , அவருக்கு உடம்பு சரி இல்லாமல் போனது. அதனால் அவர் படுத்து விட்டார்கள்)
அடியவர் :- வர முடியுமா கேளுங்க ? ( அவரை அழைக்க சென்றார்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- இருந்தாலும் அழையுங்க ஐயா வரட்டும். பேசவே முடியலையாம். அப்பனா எவ்வளவு நெகட்டிவ் எனர்ஜி இருக்குது பாருங்க மக்கள் கிட்ட. பார்த்தீங்களா அதனால போயிட்டு இருக்கு என்னத்துக்கே டம்மி டிம்மி எழிஞ்சிட்டு இருக்குன்னு நினைக்கிறேன் பாதி. வர சொல்லுங்க ஐயா.
சுவடி ஓதும் மைந்தன் :- ஒரே அடியா ஒரே அடியா எல்லாரும் போட்டுட்டாங்க. ஆயிரம் பேர் சேர்ந்து ஒரே அடியா போட்டாங்க அவரை வந்து. அப்பனா எனர்ஜி கெட்ட எனர்ஜி இருக்குதுங்க ஐயா. அதுதான் இறைவன் வந்து முதல்ல நல்ல எனர்ஜி கொடுக்கணும். யார் மூலமா எப்படி கொடுக்கணும்னு….
சில உரையாடல்கள்:- https://youtu.be/q8Hs63mXjrc?t=30572
…………
…………
…………
மீண்டும் வாக்குகள் :- https://youtu.be/q8Hs63mXjrc?t=30653
குருநாதர் :- அப்பனே ஏனென்றால் நிச்சயம் தன்னில் கூட எவர் எதை என்று புரிய பின்னும் அப்பனே இவகளுடைய ஆற்றலை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். இன்றைய அளவில் நிச்சயம் தன்னில் கூட சில எவை என்று கூற பின் குறைவாக ஆற்றல் இருந்தால் உனக்குத்தான் அப்பா உடம்பு அப்பனே பின் முடியாமல் போய்விடும். அதனால்தான் அப்பனே யாருக்கு என்ன வாய்ப்பு கொடுக்க வேண்டுமோ அதை யான் கொடுக்கின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஓகேங்களா யாருக்கு எந்த நேரத்துல கொடுக்கணுமோ.. அந்த நேரத்துல கொடுக்கிறோம் பாரு நானு.
அடியவர் :- ஆற்றலை அதிகப்படுத்தி தான் நீங்க பேசணும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆமா இல்லைன்னா என்ன பண்ணுவீங்க ? இவங்களுக்கு இருக்கிற ஆற்றல் உங்களுக்கு அடிச்சுன்னா பெட்ல படுத்துருவீங்கன்னு சொல்லறாரு.
அடியவர் :- அதனால இந்த அட்வைஸ் பண்றது எல்லாம் ஈஸி இல்லைங்க. நம்மள தான் திருப்பி அடிக்கும். ஜாக்கிரதையா இருக்கணும்.
…………
…………
…………
https://youtu.be/q8Hs63mXjrc?t=30729
காளி அன்னை உபாசகர்:- ( அங்கு வருகை …)
அடியவர்கள் :- ( தங்களிடம் உள்ள எதிர்மறை ஆற்றல்களை நீக்குபவர் என்று உண்மை உணர்ந்து …நன்றியுடன் …பலத்த கை தட்டல்கள் …வரவேற்புகள் )
சுவடி ஓதும் மைந்தன் :- ( சிவ தாண்டவம் பாட சொன்னார்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா (காளி அன்னை உபாசகர்) பாடுவாரு நல்லா வந்து கெட்டதெல்லாம் விலகட்டும்னு சொல்லி நல்லா வேண்டிக்கோங்க ஐயா. தயவு செய்துங்க ஐயா. எல்லாரு கிட்டயும் நெகட்டிவ் போர்ஸ் அதிகமா இருக்குதுங்க ஐயா. ஆமா நெகட்டிவ் போர்ஸ் அதிகமா இருந்தா, சொல்றதும் புரியாது. நீங்க பண்ணவும் மாட்டீங்க ஏன்னா வேல் வேற வருது.
சுவடி ஓதும் மைந்தன் :- ஏன்னா சில மந்திரங்கள் சில நல்ல உபவாசம் அவங்க எல்லாம் பாடுனாங்கன்னா… உங்க கையில கெட்டதெல்லாம் நிக்காது வந்து. எழுச்சி ஓடிடும்… போடா எப்பான்னு சொல்லிட்டு…
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா நல்லா எல்லாரும் கைதட்டி…
சுவடி ஓதும் மைந்தன் :- நல்ல நெகட்டிவ் எனர்ஜி சம்பாதிச்சு வச்சிருக்கீங்க அவ்வளவுதான்.
சுவடி ஓதும் மைந்தன் :- இறை எனர்ஜி சம்பாதிச்சு வச்சிருக்கீங்களோ இல்லையோ… நெகட்டிவ் எனர்ஜி அதிகமா சம்பாதிச்சு வச்சுக்கிறீங்க. ஐயா,...
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால ஏன்னா அந்த நெகட்டிவ் எனர்ஜி போனாதான்…. பாசிட்டிவ் எனர்ஜி வந்தா…. சித்தர் சொல்றது நீங்க ஏற்றுக்கொள்ள முடியும்….
காளி அன்னை உபாசகர்:- ( சிவதாண்டவம் பாட ஆரம்பித்தார்கள் )
பாடல் நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=30832
( பாடல் முடிந்த பின்னர் வாக்குகள் தொடர்ந்தது …)
குருநாதர் :- உனக்கு காசுகள் வேண்டுமா
சுவடி ஓதும் மைந்தன் :- அகத்தியர் கேட்கிறார் உனக்கு காசுகள் வேண்டுமான்னு கேட்கிறார்
https://youtu.be/q8Hs63mXjrc?t=31639
அடியவர் 7 :- அகத்தியர் காளிகாம்பால் பல்கலைக்கழகம் என்று அகத்தியரின் பெயரால் ஒரு யுனிவர்சிட்டியை ஏற்படுத்தி….
( ஆடியோ தடங்கல்கள் )
அடியவர் 7 :- (காளி அன்னை உபாசகரை ) மூன்று முறை கொலை பண்றதுக்கு முயற்சி மூன்று முறை கொலை பண்றதுக்கு முயற்சி நடக்குது
சுவடி ஓதும் மைந்தன் :- https://youtu.be/q8Hs63mXjrc?t=31686
( சில அறிவுரைகள்….)
அடியவர் 7 :- https://youtu.be/q8Hs63mXjrc?t=31716
( காளி அன்னை உபாசகருக்கு நடந்த கொடுமைகளை , அதிசயங்களை எடுத்து உரைத்தார்கள் …அவசியம் நேரலையில் பார்க்கவும் )
===========================
# அகத்திய மாமுனிவர் தரிசனம்..மீண்டும் உடம்பில் ஆன்மா …..
===========================
( ஆடியோ தடங்கல்கள் )
அடியவர் 7 :- அகஸ்தியப்பா வந்துட்டாரு அப்ப நான் இறந்துட்டேனா பரவாயில்லை சந்தோஷம் எங்க அப்பாவை பார்த்துட்டேன் ஓடிப்போய் அப்பாவை கட்டிப்பிடிச்சிருக்குது அந்த ஆத்மா…. அப்ப எங்க கிளம்பிட்ட நீ உனக்கு இன்னும் வேலை இருக்கு வா… இல்ல உங்களையே நான் பார்த்துட்டேன் எனக்கு எதுக்கு மறுபடியும் எனக்கு மறுபிறப்பு எனக்கு உங்களோட கிளம்புறேன். இல்ல உனக்கு இன்னும் வேலை இருக்குன்னு சொல்லிட்டு அந்த ஆத்மாவை எப்படி தூக்கி இருக்காரு ஒரு கைய வந்து அந்த கை குழந்தையை தூக்குற மாதிரி பின்னாடி ஒரு கையவும்… இடுப்புல ஒரு கைய தூக்கி கொண்டு போய் இவரோட உடம்புல படுக்கை போட்டு ஒரு அமுக்கு அமுக்கி இருக்கிறார். அமுக்கிட்டு இன்னும் இந்த நாட்டுக்கு இன்னும் நீ நிறைய சேவை செய்யணும்னு
===========================
# தீய சக்திகளிடம் இருந்து காப்பாற்றிய அகத்திய மாமுனிவர்…
===========================
அடியவர் 7 :- மற்றொரு முறை ராத்திரி ஒரு ரெண்டு மணி இருக்கும். ஆன்மீக சேவை முடிஞ்சிட்டு தனியா வரும்பொழுது, மாற்று மாத்துனார். அப்படின்னு சொல்ல முடியாது. நம்மளுடைய தர்மத்தையும் கலாச்சாரத்தையும் எதிர்க்கும் தீய சக்திகள், சுத்தி வளைச்சிருச்சு. சுத்தி வளைச்சிட்டு, அருவா கண்ணு அதெல்லாம் எடுத்துக்கிட்டு…. என்னப்பா இது சோதனை…. அப்படின்ன பொழுது…. எங்கிருந்தோ ராத்திரி ரெண்டு மணிக்கு அந்த காட்டுக்குள்ள ஒரு பெட்ரோலிங் போலீஸ் வண்டி வந்துச்சு.
அடியவர் 7 :- உள்ள வந்தெல்லாம் ஏழு அடி எட்டு அடி ஹைட்ல இருந்த போலீஸ்காரங்க… வந்து இவரை சுத்தி வளைச்சவங்களை போட்டு அடி அடின்னு அவங்க அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க…. அப்பதான் நினைச்சாரு எப்பா இதெல்லாம் உங்களோட போர்ஸ்ங்களா… அப்ப உங்களோட கணங்களா…. ராத்திரி ரெண்டு மணிக்கு அங்க பெட்ரோலிங் வண்டி வர சான்சே கிடையாது. அப்ப அந்த முறையும் அவர் நம்மை காப்பாத்தி விட்டாரு
===========================
# விஷம் கொடுத்து உயிர் பறிக்க நினைத்த சக்திகளிடம் இருந்து காப்பாற்றிய அகத்திய மாமுனிவர்…
===========================
அடியவர் 7 :- விஷம் கொடுத்து கொல்ல முயற்சி பண்ணாது அப்ப அந்த முறையும் அவர் நம்மை காப்பாத்தி விட்டாரு.
===========================
# சிறை வாசத்தில் இருந்து காப்பாற்றிய அகத்திய மாமுனிவர்…
===========================
அடியவர் 7 :- போன கவர்மெண்ட் ஜெயில்ல போட்டுச்சு போட்டாங்க மூணு மாசம் அப்பா வந்து ஐயா ஒரு ஆன்மீக கருத்துக்களை சொன்னோம். அப்படிங்கறதுக்காக… போகும்போதே சொல்லி இருக்காங்க இவனை ஜீப்ல வச்சு அதாவது கேஸ் மகாராஷ்டிரால கேஸ்… குஜராத்துல கேஸ் இந்தூர்ல கேஸ்… மத்திய பிரதேசத்துல கேஸ்… எப்படியாவது இவரோட ஆன்மீக சேவையை வந்து தடை பண்ணனும். அமுக்கணும். தீய சக்திகளோட போராட்டத்தை பாருங்க.
அடியவர் 7 :- ஒரு நல்லது செய்ய நினைக்கும் பொழுது எவ்வளவு எதிர்ப்புகளை தாண்டி ஜெயில்ல போட்டு தனியா போன் கால் வருது மினிஸ்டர் இருந்து போன் கால் வருது ஜெயில்லையே வச்சு இவனுக்கு ஏதாவது பண்ணுங்க… ஜெயில்லையே வச்சு இவரை வந்து கொடுமைப்படுத்துங்க… ஜெயில்லையே இவருக்கு சாப்பாடு தன்னில் கரெக்டா கொடுக்காதீங்க… அப்படின்னு
===========================
# காளி உபாசகரின் ஆசை
===========================
# தர்மத்தை போதிக்கும் அகத்திய மாமுனிவர் பல்கலைக்கழகம் அமைய வேண்டும்…..
===========================
அடியவர் 7 :- ஆனா அந்த சூழ்நிலையிலும் அப்பாவுடைய தரிசனம் இவருக்கு கிடைச்சது. அகஸ்தியப்பா இவரோட எண்ணமே அப்பா பேர்ல ஒரு பல்கலைக்கழகம்… ஏன்னா அப்பாவும் சொல்லி இருக்காரு… ஏற்கனவே பல்கலைக்கழகம் இருந்ததுப்பா காசியில இருந்தது நாலாந்தால இருந்தது… நாங்க எல்லாம் ஓலைச்சுவடி எழுதி வச்சு எல்லாரும் சொல்லிக் கொடுத்திருக்கோம்ப்பான்னு… அப்போ இவரோட ஆசை… அப்பா பேர்ல ஒரு யுனிவர்சிட்டி வந்து…. அதுல வந்து… நம்மளோட தர்மமும் வரும் தலைமுறை இந்த ஏய் ஐயா அப்ப சொன்னாரு மைந்தன் சொன்னது இந்த ஏய் நம் மொபைல் இந்த இன்ஸ்டாகிராம் இன்டர்நெட்டுக்கு அடிமையாகாம தர்மத்தை போதிக்கிற மாதிரி படிக்கணும்னு அவர் ஆசைப்படுறாரு… அப்பா
===========================
# அகத்திய மாமுனிவர் பல்கலைக்கழகம் அமைக்க ஆசி வாக்கு …
===========================
குருநாதர் :- அப்பனே எதை என்று புரிய இதற்கு இன்னும் அப்பனே எவை என்று கூற அப்பனே பின் ஏற்படுத்துகின்றேன். அப்பனே கவலை வேண்டாம். எப்படி ஏது என்று கூற மாற்றும் எங்கு எவை என்று கூற கை வைக்க வேண்டுமோ அங்கு கை வைக்கின்றேன்.
அடியவர்கள் :- ( மகிழ்ச்சியில் பலத்த கைதட்டல்கள் )
அடியவர் 7 :- ( ஹிந்தி மொழியில் எடுத்துரைத்தார்கள்.) சிந்தா மத் கீஜியே பேட்டா ஆப்கா சொப்னம் பூர்த்தி யோகா மே கஹா சுச்சு தபானே
வடநாட்டு அடியவர்கள் :- (மகிழ்ச்சியில் பலத்த கைதட்டல்கள்..ஆரவாரங்கள் ….. )
சுவடி ஓதும் மைந்தன் :- அதனாலதான் அதனாலதாங்க ஐயா வந்து நிறைய விஷயங்கள் இறைவன் வந்து அதனால வந்து அதனால இறைவன் வந்து நல்ல எண்ணங்களை வேண்டுங்க ஐயா. நாலு பேருக்கு நல்லது பண்ணுங்க ஐயா வந்து. போதுங்க ஐயா. அதே வந்து அதுவே வந்து வாழ்ல கொடுத்துரும் உங்களுக்கு. என்னென்ன தேவையோ… இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் என்ன பண்றாங்க வந்து? ஐயா கெட்ட எண்ணத்தோட வாழ்ந்துக்கிறாங்க ஐயா. ஐயா நிறைய விஷயங்கள் இருக்குங்க ஐயா வந்து.
https://youtu.be/q8Hs63mXjrc?t=31968
===========================
# அன்பு அகத்திய மாமுனிவர் குருநாதர் ஒரு அடியவருக்கு அளித்த பெரும் கருணை ….
===========================
# அடியவர் புரிந்து வரும் மகத்தான புண்ணிய சேவை…..
===========================
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா நிக்கிறாரு பாரு இவர் வந்து …ஒரு பொண்ணு ஒரு பையன் ஐயா சொல்லித்தான் ஆகணும். இதெல்லாம் வந்து சொல்லித்தான் ஆகணும் ஏன்னா நிறைய நான் ஒரு ஒரு விஷயத்துல ஒரு ஒரு டைம் இருந்தா சொல்றேன் அகத்தியர் என்ன பண்ணிக்கிறாருன்னு ஏன்னா இது சொல்லி ஆகணும்….
அவ் அடியவர் அகத்தியர் இறையருள் மன்றம் அன்ன சேவை அடியவர் மேடை ஏறினார்கள் :-
நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=31991
சுவடி ஓதும் மைந்தன் :- நம்பிக்கை வேண்டும் இவர் வந்து என்ன பண்ணுவாரு தெரியுமா? தொழு நோய்கள் எல்லாம்… யாருமே யாராவது தொழு நோய்யாளர்கள் எல்லாம் போவாங்களா? யாராவது போவாங்களா ஐயா? கிட்ட கூட போகமாட்டாங்க ஐயா.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆனா தொழு நோயாளிகளுக்கு வந்து உணவளிச்சவர். இவருடைய வேலையே அதுதான். சாப்பாடு கொடுக்கிறது அது பண்றது இது பண்றது இதோட வேலையே இவர்தான்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்புறம் ஒரு மாசம் முன்னாடிதான் நடந்தது இது வந்து… அகத்தியர் சொல்றாரு பர்சனலா வந்து பர்சனலா வந்து எடுத்து பார்க்கிறேன்… எப்பா ஒருத்தன் உணவு வந்து எல்லாமே கொடுத்துட்டு இருக்கிறான்ப்பா. அவங்க வைப்க்கு வந்து பெரிய ஆபத்து இருக்குதுப்பா வந்து. அந்த ஆபத்து வந்துருச்சுன்னா அவ்வளவுதான் பேச முடியாது. ஒன்னும் முடியாது. அவ்வளவுதான். இவர் என்ன பண்ணுவாரு? அந்த தொண்டு விட்டுருவாருப்பா. சே !!!! என்னடா இவ்வளவு நல்லது பண்ணோம் நம்ம வந்து. இவ்வளவு நல்லது பண்ணியா ஒண்ணுமே ஆகல அப்படின்னு சொல்லிட்டு வந்து…
சுவடி ஓதும் மைந்தன் :- என்ன பண்றாரு அகத்தியர்… சொல்றாரு வேணாம்ப்பா… இவனுக்கு உடனடியா ஒரு ஓலைச்சுவடி இருக்குது நம்ம வீட்ல… அது என்ன பண்ணனும்னா அது என்ன யாருக்கு ரொம்ப அகத்தியர் அடியார்களுக்கு வந்து ரொம்ப கஷ்டமோ… அந்த ஓலைச்சு கொடுக்க சொல்லுவார்… கொடுக்க சொல்லுவார்…
===========================
(குருநாதர் அவ் அடியவரிடம் கொடுக்கப்பட்ட ஓலைச்சுவடி இங்கு இணைத்துள்ளோம். அடியவர்கள் கண்டு தரிசனம் பெறுக ….)
===========================
சுவடி ஓதும் மைந்தன் :- அப்புறம் வந்தா இது மாதிரி வந்து அவன் உடனே காசிக்கு போக சொல்லுப்பா… உடனே காசிக்கு போயிட்டு அந்த ஓலைச்சு வச்சிட்டு… எங்க வீட்ல பிரேயர் பண்ணி சொல்லுன்னு சொல்லிட்டாரு…. உடனே என்ன பண்ண இவர் காசிக்கு போறவர் வந்து காயின்ஸ் எல்லாம் இருக்கு… ஐயா எப்பங்க பிளைட்ன்னு கேட்டேன் ஐயா நாளைக்கு காலையில தான்ங்க பிளைட்ன்னேன். ஐயா அப்ப அவரால வர முடியாது பிளைட் மாத்துங்க ஐயா… போய் அவரையும் கூட்டிட்டு போங்க ஐயா..
===========================
(அவ் ஓலைச்சுவடி காசியில் வைத்து பூசை செய்த படமும் இங்கு இணைத்துள்ளோம். அடியவர்கள் கண்டு தரிசனம் பெறுக ….பூசையின் பொது லிங்கத்தில் இருந்து ஒரு ஒளி வெளியே வந்த காட்சிகளை அவசியம் பார்க்கவும்….)
===========================
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா இவரையும் கூட்டிட்டு போங்க. கூட்டிட்டு போயிட்டு …அங்க வணங்கிட்டு, வீட்ல போய் வச்சு.. வணங்கு ஐயா அன்னு சொல்லி அகத்தியர் வந்து சொல்லி இருக்காரு. உத்தரவுன்னு… அதே மாதிரி போயிட்டு வந்தாரு… ஒரு மாசத்துல வந்து அதே வந்து 100% நடக்க வேண்டியது… 10% தான் ஏதோ உடம்பு சரியில்லாம… ஏதோ கவலை இருந்து காப்பாத்தி விட்டார் அவங்களோட வைஃப் வந்து…. அதனால நம்பிக்கை வேணும் நம்பிக்கை வேணும்…
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால நம்பிக்கை வேண்டுங்க ஐயா வந்து இறைவன் மேல நம்பிக்கை வேண்டும் எதை நீ எதன் மேல நீ நம்பிக்கை வைக்கிறாயோ அதையே உன்னை காக்கும். எதன் மேல நீ வந்து தீவை நினைக்கின்றாயோ அதையே வந்து புடிச்சு அமுக்கி தூக்கிடும் உன்னை
அடியவர் :- காலி பண்ணிடும்…. சொல்லுங்க ஐயா
அகத்தியர் இறையருள் மன்றம் அன்ன சேவை அடியவர் :- ( தனது அனுபவங்களை எடுத்து உரைக்க ஆரம்பித்தார்கள் )
இவ்விடத்தின் நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=32106
அகத்தியர் இறையருள் மன்றம் அன்ன சேவை அடியவர் :- ஓம் அகத்தீஸ்வராய நமஹ…. மதுரையில அகஸ்திய பெருமானுடைய பெயரினால… அகத்தியர் இறையருள் மன்றம் அப்படின்ற பேர்ல…. அகத்திய பெருமான் உத்தரவின் பெயரில்… அன்னதான சேவையை தொழுநோயாளிகள்.. அரசு மருத்துவமனை… ஊனமுற்றவங்க பார்வையற்றவங்களுக்கு…. தொடர்ந்து இப்ப ஒரு 16 வருஷமா செய்துட்டு இருக்கோம்.
அடியவர்கள் :- ( பலத்த கை தட்டல்கள் )
அகத்தியர் இறையருள் மன்றம் அன்ன சேவை அடியவர் :- எல்லாம் அன்பர்களுடைய ஒத்துழைப்பு எங்களுடைய முயற்சி ஒரு பங்கு உடல் உழைப்பு முதலிலே பொருள் இருந்தது போகப்போக நிறைய சேவைகள் பெருக பெருக நிறைய அன்பர்களுடைய ஒத்துழைப்புல இந்த சேவையை செய்துட்டு வந்திருக்கிறோம்.
12 ஆண்டுகள் ஒரு நற்செயலை தவத்தை செய்தால் அதுக்கு பெரிய பலன் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த முறையில 12 ஆண்டுகள் நிறைவடையும் பொழுது ஜானகி ஐயாவை தொடர்பு கொண்ட பொழுது அவர்களிடம் வாக்கை கேட்டோம்… அவங்க சொன்னாங்க ஒரு மாசம் பொறுங்க…நான் குருநாதர்ட்ட கேட்டு சொல்றேன் என்று..
பிறகு வந்து அவங்களே கூப்பிட்டாங்க. நீங்க என்னய்யா பண்றீங்க அப்படின்னு கேட்டாங்க. நான் விவரம் சொன்னேன். ஐயா உங்களுக்கு கேட்டு சொல்றேன் அப்படின்னாங்க. பிறகு வந்து ஐயாவை கூப்பிட்டுட்டு… ஐயா நீங்க அலையாதீங்க உங்களை தேடி அகத்தியர் நாடி உங்க வீட்டுக்கு வரும் அப்படின்னு சொன்னாங்க.
அதுக்கப்புறம் தொடர்ந்து ஒரு பத்து முறைக்கு மேல எங்க வீட்ல சத்சங்கம் அதை நீங்க சித்தன் அருள் வலைத்தளத்தில் படிச்சிருப்பீங்க. அதனால எங்க வீடு தேடி
அடியவர் :- ( புண்ணியத்தின் வலிமையை அழுத்தி உரைத்தார்கள் ) அகத்தியர் !!!!! வீட்டுக்கு…. தேடி…. போயிருக்கார்
சுவடி ஓதும் மைந்தன் :- இதுதான் பாருங்க இதுதான்
அடியவர் :- ( புண்ணியத்தின் வலிமையை அழுத்தி உரைத்தார்கள் ) புண்ணியம் செஞ்ச ஆத்மா தேடி போவார்
சுவடி ஓதும் மைந்தன் :- நீங்கள் வந்து இதுதான் அவர் சொன்னாரு பாருங்க வந்து… எனக்கு நாடி கிடைக்கலையே… போன் படிக்கல அதெல்லாம் செல்லாது வந்து… நல்ல எண்ணங்களோடு நாலு பேருக்கு நன்மை செஞ்சிருந்தேன்னா… அகத்தியர் சொல்லுவாரு இதுல பெயர் வரும்ங்க ஐயா,,
அடியவர் :- ஆமா
சுவடி ஓதும் மைந்தன் :- பெயர் வரும் ஜீவநாடியில.. ஏன்னா நான் எல்லாம் ஒன்னு இது வந்து படிக்கிறதுக்கு தான் நான். ஆனால் உங்களிடத்தில் தான் இது வர்றதோ வராததோ உங்களிடத்தில் தான் இருக்குது வந்து. பேர் வச்சு சொல்லுவாரு. எப்பா அவன் கஷ்டப்பட்டு இருக்கிறான்ப்பா. அவன் என் ஆளுப்பா. போய் தப்பிச்சு விடுப்பான்னு சொல்லிட்டு வரும்… நான் நிறைய பேர் பண்ணிக்கிறேன் அது மாதிரி வந்து
அடியவர் :- யாருன்னே தெரியாது யாருன்னே தெரியாது
சுவடி ஓதும் மைந்தன் :- ரகசியமா இன்னும் வந்து அகத்தியர் சொல்லி இருக்கிறார் எப்பா அது பண்ணி காப்பாத்துப்பா இல்லைன்னா க்ளோஸ் ஆயிடுவாங்கப்பா… நிறைய பேர் இந்த மாதிரி அதனால என்னடா இது எனக்கு நம்மளுக்கு வந்து அது ஏன்னா இங்க ஓலைச்சுவல்ல சொல்றாரு வந்து… நிறைய விஷயங்கள் சொல்லல…
சுவடி ஓதும் மைந்தன் :- ஏன்னா இவர் வந்து தொழு நோயாளிக்கு வந்து யாருமே கை கூட பிடிக்க மாட்டாங்க..
அடியவர் :- சேவை செய்ய மாட்டாங்க..
சுவடி ஓதும் மைந்தன் :- தொழு நோயாளி கை பிடிப்பாங்களா? ஒரு ஊருக்கே வந்து அந்த தொழு நோயாளிகள் எல்லாம் இது பண்ணிட்டு… அப்ப பாரு அகத்தியர்.. எப்பா கூடுவா உடனே அந்த வைப்க்கு வந்து சொல்லிட்டு ஓலைச்சு உடனே போக சொல்றாரு அதனால வந்து மனம் அது செம்மையானால்… மந்திரங்கள் ஜெபிக்க வேண்டாம்….
சுவடி ஓதும் மைந்தன் :- நீங்க வந்து நல்ல எண்ணங்கள் புண்ணியங்கள் சேர்க்கணும்.
அடியவர் :- புண்ணியங்கள் சேர்க்கணும்
சுவடி ஓதும் மைந்தன் :- புண்ணியங்கள் சேர்த்துக்கிட்டே வந்தா யாருக்கு தேடி வருவார்? உங்களை தேடி அகத்தியர் வருவாருமா. நீங்க தேடி இறைவனை தேடி யாரும் இல்ல… நீங்க வந்து இது பண்ண உங்களை தேடி இறைவன் வருவார். வருவார்… வந்து அய்யா உங்களுக்கு இது மாதிரி லைஃப் இருக்குதுடா.. இது மாதிரி இருக்குதுடா மாத்தி கொடுன்னு சொல்லிட்டு சொல்லுவாருங்க ஐயா உங்களுக்கு வந்து நிறைய பேரு
…………..
…………..
…………..
அடியவர் :- சொல்லுங்க ஐயா
அகத்தியர் இறையருள் மன்றம் அன்ன சேவை அடியவர் :- அகஸ்திய பெருமான் வந்து.. இந்த மாதிரி ஐயா எனக்கு போன் பண்ணி.. ஐயா அம்மாவுக்கு என்னய்யா பண்ணுதுன்னு கேட்டாங்க. ஐயா இருமல் சளி ஜாஸ்தியா இருக்குன்னு. வேற என்னய்யான்னு கேட்டாங்க. நான் இல்ல அதுதாங்க ஐயான்னு. ஐயா சொல்ல வந்த விஷயத்தை சொல்லல. என்னை பயமுறுத்த வேணாம்னு சொல்லிட்டு ஒன்னும் இல்லைங்கயான்னு சொல்லிட்டு… நீங்க நாளைக்கு வீட்டுக்கு வந்து நாடி வாங்கிட்டு போங்கயான்னு சொன்னாங்க… நான் எதுக்குங்கயான்னு கேட்டேன். இல்ல குருநாதர் உத்தரவு கொடுத்திருக்காரு.
உங்க நல்லதுக்கு தான்யா அப்படின்னு சொல்லிட்டாங்க. எங்க வரணும்னா வேலூருக்கு வர சொன்னாங்க. சரிங்க அப்படின்னுட்டேன். ஈஸ்வரன் ஐயாவை கூட்டிட்டு வாங்கன்னு சொன்னாங்க. ஐயா அவங்க காசிக்கு கிளம்பி போயிட்டாங்கன்னு. சரி நான் பார்த்துக்கிறேன் என்று வச்சுட்டாங்க. எனக்கு ஒரு குழப்பமான மனநிலை இருந்ததுனால நேரா அகத்திய பெருமான் ஆலயத்துல போயி கொஞ்சம் பிரேயர் பண்ணிட்டு இருக்கும்போது…. கரெக்டா ஈஸ்வரன் ஐயா போன் பண்ணி… ஐயா நம்ம நீங்க நாளைக்கு சென்னைக்கு வந்துருங்க. ஐயா வீட்ல போய் நாடி வாங்கிட்டு காசிக்கு போறோம்னாங்க.
ஆக்சுவலி உங்க கூட காசிக்கு போற ப்ரோக்ராம் எனக்கு இருந்தது. ஆனா பிளைட்ல போறதுனால கொஞ்சம் நிறைய செலவாகும் அப்புறம் பார்த்துக்கலாம்னு தள்ளி வச்சிட்டேன். ஆனா அகத்தியருடைய அருட்பெரும் கருணை என்னன்னா ஈஸ்வரன் ஐயா மூலம் எனக்கு அடுத்த நாளே காசிக்கு செல்லக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. ஈஸ்வரன் ஐயா என்கிட்ட எந்த காசும் வாங்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க ஐயா எனக்கு குருநாதர் உத்தரவு நீங்க எதுவும் கொடுக்க வேண்டாம்னு ஐயா நான் கொடுக்கிறேன் இல்ல வேணாம் அப்படின்னு சொல்லிட்டாங்க. அந்த மாதிரி காசிக்கு செல்வதற்கு எனக்கு முதல் முறை விமான பயணம். நான் ஏரோபிளேனா வானத்துல தான் பார்த்துட்டு.
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால நீங்க வந்து நினைச்சாவே வந்து அவர் கூட்டிட்டு போவாருங்க வந்து நீங்க நல்ல மனசோட நான் வந்து போகணும்னு சொன்னாவே இறைவன் என்ன பண்ணுவாரு? யார் யார் எங்க நிக்க வைக்கணும் ஆள? இப்ப போலீஸ்னா ஒரு படை ஒரு திருடனை பிடிக்கணும்னா எங்கெங்க நிக்க வைக்கிறாரோ அது மாதிரி நிக்க வைப்பார் இறைவன் வந்து சத்தியம். இதை நான் உணர்ந்து இருக்கிறேன் பல பேருக்கு உணர்ந்து இருக்கிறேன் எங்கெங்க நிப்பாரோ அங்க அவனை காப்பாத்துறான் அவனை போடுற ஆளன்னு சொல்லிட்டு கரெக்டா காப்பாத்துவாங்க வந்து… அதனால வந்து
அகத்தியர் இறையருள் மன்றம் அன்ன சேவை அடியவர் :- முடிச்சுறேங்க அய்யா. தொடர்ந்து அப்புறம் நாடியை கொடுத்துவிட்டாங்க. வீட்ல வச்சிருக்கேன் ஒரு மாசமா வீட்லதான் இருக்கு டெய்லி அகத்தியர் கோவில் போயிட்டு பிரார்த்தனை பண்றேன் அந்த சோதனை காலம் எப்பன்னு எங்களுக்கு தெரியாது. ஆனா அகத்திய பெருமானுக்கு தெரிஞ்சதுனால… ஒரு மாதத்துக்கு முன்னாடியே எங்களை காப்பாத்துறதுக்காண்டி ஓலைச்சோடி வாயிலாக வீட்டுக்கு வந்துட்டாங்க.
போன வாரம் என் வீட்டு வீட்டுக்கார அம்மாவுக்கு ரொம்ப விட முடியல அடுத்தடுத்த உடல் சோர்வு பிரச்சனை ஜாஸ்தியாகி அவங்க ரொம்ப வாழ்க்கை வெறுக்கிற அளவுக்கு ஆயிட்டாங்க
இப்ப வந்துட்டாங்க நல்லா இருக்குறாங்க. அப்ப அவங்க ரொம்ப வருத்தப்பட்டுகிட்டு இருந்தாங்க. அப்ப சொன்னேன் குருநாதருக்கு நமக்கு என்ன நடக்கும்னு தெரியும். அதனால அவங்க வந்து நம்மள காப்பாத்திருவாங்க அப்படின்னு சொன்னேன்.
***** அப்புறம் ஐயா கிட்ட கேட்கும்போது தான் சொன்னாங்க உங்களுக்கு வந்து ஒரு விபத்து ஏற்பட்டு மனநிலை அதாவது கோமா ஸ்டேஜ்ல ரெண்டு வருஷம் இருக்கணும்னு விதிப்பா *****
***** நான் மாத்தி கொடுத்துட்டேன் அப்படின்னு சொன்னாங்க****
கூட்டு பிரார்த்தனை அடியவர்கள் :- ( பலத்த கை தட்டல்கள் )
அடியவர் :- ஒரு வருடம் ஒரு வருடம் இருக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை குருநாதர் மாத்தி கொடுத்திருக்காங்க
அகத்தியர் இறையருள் மன்றம் அன்ன சேவை அடியவர் :- அந்த நாள் அதனால நான் சொல்ல வர்றது என்னன்னா தன்னலம் பாராமல் ஆக்சுவலி என்னுடைய லைஃப் நான் கிட்டத்தட்ட டெடிகேட் பண்ணி தான் இருக்கிறேன்… பிறருக்காக சேவை செய்யும் பொழுது… நமக்கு இறைவன் தேடி வருவார். அதாவது திருவள்ளுவர் கூட ஒரு குறள் சொல்லி இருக்காரு.
===========================
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்
திருக்குறள் (அதிகாரம்: குடிசெயல்வகை, குறள் 1023)
===========================
அகத்தியர் இறையருள் மன்றம் அன்ன சேவை அடியவர் :- அதாவது “தெய்வம் அடைந்தற்று தான் முந்துறும்”.. அப்படின்னு சொல்லி ஒரு குறள் சொல்றாங்க…
===========================
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.
திருக்குறள் 85
===========================
அகத்தியர் இறையருள் மன்றம் அன்ன சேவை அடியவர் :- நீ பிறருக்கு வித்தும் இடல் வேண்டும். “கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்.” ஒரு குறள் சொல்றாங்க. நீங்க உங்க இடத்துல நீங்க ஒழுங்கா வேலை செஞ்சீங்கன்னா…. உங்க வேலையை இறைவன் பார்ப்பார் அப்படின்னு சொல்லிட்டு….
அதே மாதிரி இன்னொரு குறள்ல சொல்றாங்க… நீங்க வந்து சமுதாய சேவை பண்ணீங்கன்னா இறைவன் உங்களுக்கு சேவை செய்ய வருவாருன்னு சொல்லிட்டு.. அது மாதிரி அகத்திய பெருமான் எங்களுக்கு பல ரூபத்துல அருள் காட்சி கொடுத்திருக்காங்க… அது சித்தன் அருள் நீங்க எல்லாம் படிச்சிருக்கலாம் …இப்ப ஓலைச்சுவடி வாயிலாகவும்… ஜானகி பெருமானுடைய கருணையோடு… எங்க வீட்ல வந்து அமர்ந்திருக்காங்க. அதுக்கு மிகப்பெரிய நன்றியை அகஸ்திய பெருமானிடத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். வாங்கிட்டு போங்க ஐயா இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த அகத்திய பெருமானுக்கும் ஜானகி ஐயாவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் அகத்தீஸ்வரா …
அகத்தியர் இறையருள் மன்றம் அன்ன சேவை அடியவர் :- சின்ன வேண்டுகோள் சாது சந்நியாசிகளுக்கு வஸ்திரம் கொடுக்கிறதுனால இங்க அமர்ந்திருக்கக்கூடிய சந்நியாசிகள் கீழே வரும்படி கேட்டுக்கொள்கிறேன்…. ஓம் அகத்தீஸ்வரா….
===========================
# முருகப்பெருமான் பாடல் பாடுக….
===========================
நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=32521
குருநாதர் :- அப்பனே அறிந்து கூட அப்பனே.. அனைவரும் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே.. முருகன் ஆற்றலை பெருக அப்பனே நிச்சயம் தன்னில் கூட… என்று அப்பனே ஏது என்று புரிய
குருநாதர் :- அப்பனே வேலை எப்படி எல்லாம் நிச்சயம் தன்னில் கூட பின் விஞ்ஞான பூர்வமாக எடுத்துரைக்கின்றேன் அப்பனே. அதற்காக முருகனை பாடலை பாடி அப்பனே நிச்சயம் வரவழை அப்பனே பின்…
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா முருகர் பாடல் பாடுங்க … ஐயா எல்லாருக்குமே வேல் கொடுக்க போறாங்க… ஆனா சயின்ஸ் வழியில் உரைக்க போறாங்க… சும்மா வேல் குத்துனா இல்ல. அது எப்படி பண்ணனும். அதனால முருகன் அருள் வரவைகளுக்கு அவருக்கும் அவர் வந்து நல்லா அவரை வந்து நம்ம மகிழ்விச்சா…. அவர் நம்மள மகிழ்விச்சுப்பார்…. அதனால வந்து
குருநாதர் :- அப்பனே அனைவரையும் எழுந்து நிற்கச் சொல் அப்பனே…
அடியவர்கள் :- ( அனைவரும் எழுந்து நின்றனர் )
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாரும் எழுந்து எல்லாரும் தூக்கம் இருக்குறீங்களா ? அம்மா அகத்தியருக்கு தெரியும்
பாடகர் :- ( “மருதமலை மாமணியே முருகையா மருதமலை மாமணியே முருகையா” - என்ற பாடல் பாடினார்கள் )
நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=32564
( பாடல் முடிந்த பின்னர்……வாக்குகள் ஆரம்பம் …)
நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=32866
குருநாதர் :- இன்னொரு பின் விஷயத்தையும் சொல்லப் போகின்றேன். இதனால் முருகனைப் பின் அதாவது பாடிடுக. பின் குழந்தையே.
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த குழந்தை வர சொல்லுங்க.. இன்னொரு விஷயத்தை அகத்தியர் சொல்லப்போறாரு… உண்மைப் பொருளை அதனால அந்த குழந்தையை முருகனுக்குமா முருகன் நல்லா உற்சாகப்படுத்தி ஒரு பாடல் பாடுங்கமா உட்காருங்க அம்மா
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா இன்னும் வந்து இன்னும் நல்லா இது மாதிரி குழந்தைகள் எல்லாம் வளரணும்… நாட்டு மக்களுக்கு நல்லது செய்யணும்… வந்து அது மாதிரி நீங்களும் உங்க குழந்தையை வந்து நாட்டுக்கு இப்படித்தான் செய்யணும். இப்படித்தான் செய்யணும்.. வளருங்க.
குழந்தை :- ( முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்…என்ற திருப்புகழ் பாடலை பாடினார்கள் )
பாடல் நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=33065
( பாடல் முடிந்த பின்னர்……வாக்குகள் ஆரம்பம் …)
வாக்கு நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=33268
குருநாதர் :- அப்பனே எது என்று அறிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே இன்னும் அப்பனே சொல்கின்றேன் விளக்கமாக. ஆனாலும் அப்பனே நேரங்கள் போதவில்லை. அவரவருக்கு அப்பனே ஒரு ஒரு அப்பன் நிச்சயம் தன்னில் கூட.
சுவடி ஓதும் மைந்தன் :- இன்னும் நிறைய இருக்குது.. அகத்தியர் சொல்றது ஆனால் நேரங்கள் ஒருவருக்கொருவர் ஒருத்தர் ஒருத்தருக்கு ஒரு ஒரு வேலைப்பா என்றார்.
குருநாதர் :- அப்பனே அவை தன் நலமாகவே அப்பனே நிச்சயம் தன்னில் கூட வேலை அப்பனே பின் விஞ்ஞான பூர்வமாகவே விவரிக்கின்றேன்
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த வேலானது.. விஞ்ஞான பூர்வமாகவே இப்ப விவரிக்கிறாங்க… உக்காருங்க ஐயா…
அடியவர் :- உக்காருங்க… எல்லாரும் உக்காருங்க…
குருநாதர் :- அப்பனே அறிந்து கூட எது என்று புரிய அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட அனைவரையும் ஆன்மாக்களும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பழுதடைய செய்த அப்பன் நிச்சயம் தன்னில் கூட இவ்வைத்தியங்களுக்கு அப்பனே நிச்சயம் தன்னில் கூட சரியாகவே அப்பனே நிச்சயம் பின் எட்டு ஆயிரங்களை அப்பனே பின் காணிக்கையிட்டு அப்பனே ஓதுபவனும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா அகத்தியர் என்ன சொல்றாருன்னா இதை வந்தவங்களுக்கு ஓகேங்களா… எட்டு ஆயிரம்… நான் படிச்சு இருக்க நான் இப்ப படிக்கிறேன்ல… இதை ஓதுபவனும் அவங்களுக்கு வந்து தட்சணை கொடுத்து அனுப்பணுமா….
தட்சணை கொடுக்கும் நிகழ்வு :-
https://youtu.be/q8Hs63mXjrc?t=33340
===========================
இதனை தொடர்ந்து வேல் பூசை வாக்குகள் அருளினார்கள்…அவ் வாக்குகள் முன்பே அடியவர்கள் பயன் ஆடிய முன்னர் வெளியிட்டு …அதன் பதிவு பின் வருமாறு
===========================
சித்தன் அருள் - 2241 - அன்புடன் அகத்தியர் - 28/06/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் வேல் பூஜை வாக்கு! https://siththanarul.blogspot.com/2026/07/2241-28062026.html
===========================
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)
.jpeg)
.jpeg)

No comments:
Post a Comment