அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 28/06/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த 11 வது சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 4
நாள், நேரம் : 28/06/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம் : ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.
முழு கூட்டு பிரார்த்தனை நிகழ்வின் நேரலை :-
https://www.youtube.com/watch?v=q8Hs63mXjrc&t=1s
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
இவ் பதிவின் நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=21229
===========================
# சிவ மைந்தனின் வேல் திருவிளையாடல்கள்
===========================
குருநாதர் :- இடையிடையே வேல் தான் பின் இங்கிருந்து புறப்படும். இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட சிவனுடைய மைந்தன் என்றே நிச்சயம் பின் முருகன் அழைக்கப்படுகின்றான்.
சுவடி ஓதும் மைந்தன் :- (பூமி) இதுல வந்து அடிக்கடி ஒளி உட்டுருவும் போது, வேல் வடிவில் போகுமாம் இங்கிருந்து ( கீழே உள்ள வேல் அதனை சுட்டிக்காட்டி) . ஐயா, எழுதுங்க ஐயா. ஐயா, புரியுதுங்களா?
அடியவர் 7:- சவுண்ட் வந்து நமச்சிவாய. உருவம் வந்து வேல்.
சுவடி ஓதும் மைந்தன் :- வேல் வெளியில போகுமாம் வந்து. அதனால்தான் சிவனுடைய மைந்தன், இந்த இந்த லிங்கத்தோட வடிவம் யாரு?
அடியவர் 7:- முருகன்.
சுவடி ஓதும் மைந்தன் :- வேல் . வேல்தான் முருகர். அப்ப அந்த அதை போய் குத்துது பாருங்க வந்து அடிக்கடிக்கு இந்த ஆற்றல் ஐயா ஆற்றல் எப்படி செல்லும்னா வேல் மாதிரி செல்லும்.
அடியவர் :- இங்க வேல். டாட் போட்டு வரைங்க. அப்படியே வேல்.
நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=21270
அடியவர் :- ( அவ்வாறே வரைந்தார் )
சுவடி ஓதும் மைந்தன் :- புரியுதுங்களா? ஐயா, இப்ப போடுறீங்களா?
சுவடி ஓதும் மைந்தன் :- இதனுடைய ஆற்றல் என்ன மாதிரி போகுமாம்?
அடியவர் :- வேல் வடிவத்துல.
சுவடி ஓதும் மைந்தன் :- வேல் வடிவத்துல போய் இடிக்கும்.
இது இடிக்கும் பொழுது என்ன ஆகும்? அதிகமா ரொம்ப ஆற்றல் அதிகரிச்சாலும் சமநிலை.
அடியவர் :- படுத்திவிடும்.
சுவடி ஓதும் மைந்தன் :- படுத்திவிடும்.
===========================
# பூமிக்கும் வயது உள்ளது. ஏன் மனிதனுக்கும் வயதாகின்றது?
===========================
குருநாதர் :- எதை என்று அறிய இதனால்தான் சித்தர்கள் நிச்சயம் கலியுகத்தில், இப்புவியானது ஒழுங்காக சுற்ற முடியாது என்பதை யாங்கள் அறிந்தோம்.
அடியவர் :- சித்தர்களுக்கு இது தெரியும் முன்னாடியே. பூமி சுத்த முடியாது.
குருநாதர் :- நிச்சயம் பூமிக்கும் வயது உள்ளது. தெரிந்து கொள்ளுங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த பூமிக்கும்?
அடியவர் :- ஒரு வயசுன்னு இருக்கு.
சுவடி ஓதும் மைந்தன் :- வயது?
அடியவர் :- உள்ளது.
சுவடி ஓதும் மைந்தன் :- உள்ளது.
குருநாதர் :- இத்தனை வயதுகள் என்று பின் அத்தனை வயதுகள் ஆடிவிட்டால் தடுமாற்றம் நிச்சயம் தன்னில் கூட. அதனால்தான் புவி சுற்ற சுற்ற மனிதனுக்கும் வயதாகின்றது.
அடியவர் :- சிவாய நம.
அடியவர் :- எப்படி நமக்கு வயசானா தடுமாற்றம் வருதோ… அதேபோல பூமிக்கும் வயசாகும். பூமி வயசாகுறப்ப தடுமாறும். அந்த தடுமாற்றம் வரப்போ நீங்களும் தடுமாறுவீங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- நீங்களும் தடுமாறுவீங்க. புவி தடுமாறும்போது என்ன பண்ணுவீங்க? நீங்களும் தடுமாறுவீங்க.
அடியவர் :- தடுமாறனா என்ன? தீய வழியில போறது.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆமா.
===========================
# ஏன் சித்தர்களால் பல திருத்தலங்கள் உருவாக்கப்பட்டன?
===========================
# ஏன் சிவலிங்கம் ஆலயங்களில் அவசியம் வேண்டும் ?
===========================
குருநாதர் :- இதனால் திருத்தலங்களை யாங்கள் அமைத்தோம். ஏன்? எதற்காக என்றால் நிச்சயம் தன்னில் கூட … மேலிருந்து வரும் …ஆற்றலையும் கீழிருந்து ஒரு ஆற்றலையும் சமமாக பாவித்து ஒரு திருத்தளத்தை நிச்சயம் தன்னில் கூட உருவாக்கினால் மேலிருந்து ஆற்றலும் கீழிருந்து ஆற்றலும் சமமாக.
அடியவர் :- சிவாய நம. ஒரு பெரிய உண்மையை சொல்லி இருக்காங்க. எதற்காக ஆலயங்களை அமைச்சாங்க?
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப கோயில் எதற்கு? கோயில் எதற்கு? மேலிருந்து ஆற்றலும்.
சுவடி ஓதும் மைந்தன் :- மேலிருந்து ஆற்றலும். இது ஆற்றல். கோயில் போடுங்க ஐயா. ஒரு கோயில் போடுங்க ஐயா.
அடியவர் 6:- ( ஆலயம் ஒன்றை வரைந்தார் )
சுவடி ஓதும் மைந்தன் :- சமப்படுத்துறது. அப்ப கோயில் எதற்கு? கீழிருந்து ஆற்றலும் ஒரு வரணும். மேலிருந்து ஆற்றலும் ஒன்னு வரணும்.
குருநாதர் :- அப்பனே, இதற்கு லிங்கம் தேவைப்படுகின்றது.
சுவடி ஓதும் மைந்தன் :- இதுக்கு?
அடியவர்:- சிவாய நம. இந்த ஆற்றலை சமப்படுத்த லிங்கம் தேவைப்படுகிறது.
சுவடி ஓதும் மைந்தன் :- லிங்கம் தேவைப்படுகின்றது.
===========================
# ஆலயங்களில் புதைந்து இருக்கும் ரகசிய வாய்ப்பாடுகள்.
===========================
குருநாதர் :- இதனைத் தன் சமமாக நிச்சயம் தன்னில் கூட ஒரு ஆற்றலையும் மேலிருந்து. அப்பொழுது கீழ் இருக்கும் பல ஆற்றல்களை பெருக்க யாங்கள் பல வகையான பின் அறிவில் பின் விஞ்ஞானிகளாக நிச்சயம் பின் உருவாக்கி நிச்சயம் பல தத்துவங்களை பின் வாய்ப்பாடுகளை ஏற்றி புதைத்துள்ளோம்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப இது சும்மா எல்லாம் கோயில் கட்டல. அவர் வந்து கீழ நல்லா எனர்ஜி உள்ளாத பொருட்கள் எல்லாம் பொருத்தி என்னென்ன.. ஏது போட்டு… போட்டுதான்… இங்க வர இந்த லிங்கத்துக்கு ஆற்றல் கொடுக்கணும். கீழ நல்லா புதைச்சு பழைய கோயில்ல லிங்கத்தை வச்சிருக்காங்க. சும்மா எல்லாம் வைக்க மாட்டாங்க.
===========================
# ஆலயங்களில் உள்ள கொடிமரம், கோபுரம் , கலசங்கள் ரகசியம்.
===========================
குருநாதர் :- அப்பனே, அப்பொழுது லிங்கோன் மேலும் பின் நிச்சயம் ஆற்றலை இறக்க வேண்டும். அதற்குத்தான் அப்ப நிச்சயம் தன்னில் கூட பின் கொடி மரம்.
அடியவர்:- சிவாய நம !!!!! சிவாய நம !!!!!
கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( கைத்தட்டல்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த கொடி மரத்துல இருந்து ஆற்றலும்?
அடியவர்:- கொடிமரத்தின் வழியாக அந்த ஆற்றல் கீழே இறங்குது கோயிலுக்குள்ள.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் அப்பொழுதெல்லாம் கோபுரம் கட்டினால் அப்பனே, கோபுரத்தில் அப்பனே பல விஷயங்கள் இருக்கும் அப்பா. ஒவ்வொரு அப்பனே பின் மந்திரங்கள் செப்பி செப்பி பின் பல கோடி அப்பனே உருவேற்றித்தான் கோபுரத்தை ஏற்றுவோம். அப்பொழுதுதான் மேலிருந்து கீழே அப்பனே பின் ஆற்றல் ஈர்க்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- கோபுரம் எதுக்கு?
அடியவர்:- கோபுரம்… கோபுர கலசங்கள்…. இதெல்லாம் எதுக்காகன்னா…. இந்த ஆற்றலை கீழே இழுக்குறதுக்காக. கொடிமரம் இதெல்லாம் வந்து ஆற்றல்களை கீழே இழுக்குறதுக்காக தான் கோயில்ல அமைச்சிருக்காங்க இதெல்லாம்.
===========================
# பூமியை சிலுவையாக மாற்றிவிட ஞானிகள்
===========================
குருநாதர் :- அப்பனே, இவையெல்லாம் வந்த ஞானிகளுக்கு தெரியும் அப்பா. அதனால் அப்பனே, இப்பூமியை இன்னும் அழுத்தமாக நிச்சயம் தன்னில் கூட அப்பனே சிலுவையாக மாற்றிவிட்டார்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, இங்க சிலுவை போடுங்க.
அடியவர் 6:- ( சிலுவை வரைந்தார்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லா மதத்திற்கும் சொல்றாரு. இல்லனா எங்க மதம் உங்க மதம்தான்.
அடியவர்:- இன்னும் மதம் கிறிஸ்தவ மதம்னு சொல்றாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப வந்த ஞானிகளுக்கெல்லாம் தெரிஞ்சுக்குது இது வந்து.
அடியவர்:- சிலுவை தத்துவம். சிலுவை சிலுவை தத்துவம் சொல்றாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப சிலுவை என்ன ஆகுது ஐயா?
அடியவர்:- ஆற்றலை சமப்படுத்துற மாதிரிதான்.
சுவடி ஓதும் மைந்தன் :- (சிலுவை) இது எதுக்கு?
அடியவர்:- மேல, கீழ, நடுவுல…. ( சிலுவை ஆற்றல்களை சமப்படுத்த )
===========================
# அன்பு சித்தர் இயேசுநாதர் நடத்திய சிலுவை நாடகம்.
===========================
நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=21571
குருநாதர் :- மக்களை எதை என்று கூற காக்கவே, நிச்சயம் தன்னில் கூட, ஒரு ஆற்றல் நிச்சயம் இயங்கிட வேண்டும். அதாவது பின் அதாவது உடம்பினை வலுவுபடுத்தி…. இயேசுநாதன், மக்களுக்காகவே நிச்சயம் அவ் ஆற்றல் எப்பொழுதுமே இயங்கிக் கொண்டிருக்கும் பூமி சமமாக சுற்றி இருக்க வேண்டும் என்பது நிச்சயம் அவன் தன்னை பின் எவை என்று கூற…. இவ்வாறாக பின் எவை அனைத்தும் நாடகமே. எதை என்று கூற… பின் அனைவரையும் உருவாக்கி அவனே நிச்சயம் மேடையில் ஏறினான்.
கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( உண்மை புரிந்து உணர்ச்சி வசப்பட்டு , மெய்மறந்த தருணம்….அனைவரும் கை தட்டினார்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப இயேசுநாதர் என்ன நினைச்சாருன்னா? ஜீசஸ்…. டேய் கலியுகத்துல பூமி இறங்கப்போகுது. அப்ப என்ன பண்ணனும்னா நம்ம என்ன பண்ணனும் நம்ம அப்ப வந்து நம்ம உயிர் நல்லா நம்ம உடம்பை ஏத்திக்கிட்டு… நம்மள சாகடிச்சு நம்ம இது மாதிரி பண்ணிட்டு பிறகு அந்த ஆற்றல் ஏறிக்கிட்டே இருக்கும்டா. அது மாதிரி என்ன பண்ணிட்டாரு அவரவே அது பண்ணிக்கினாரு. அப்ப இது வந்து என்ன ஆகும் இந்த ஒரு ஆற்றல் என்ன ஆகும் அந்த ஆற்றலை சமப்படுத்தும்.
சுவடி ஓதும் மைந்தன் :- இங்க யாரையும் குறை சொல்லல இறைவன்.
அடியவர்:- அவரு ஜீவ சமாதி ஆயிட்டாரு.
===========================
# பிறையை இடுங்கள்.
===========================
குருநாதர் :- அப்பனே, இவ்வாறாக நிச்சயம் பின் பிறையை இடுங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- இவ்வாறாக பிறை இடுங்கள்ன்றாரு. பிறை போடுங்க.
அடியவர் 6 :- ( ஒரு பிறை , அதன் மேல் ஒரு சிறிய நட்சத்திரம் வரைந்தார்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, யாருமே குறை சொல்லல. எந்த எல்லா இது இறைவனும் ஒன்னுதான் மக்களுக்கு நல்லது செஞ்சு வச்சிருக்காங்க. மக்கள்…. ஏன்னா அறிவு இருந்தாதானே மக்களுக்கு… அறிவில்லாட்டி டேய் என்ன இது உன் கடவுள் தானா…. சித்தர்கள் யாரையும் குற்றம் சொல்லல. ஏன்னா இறைவனுக்கு தெரியும். மனுஷன் என்ன பண்ணிருப்பான்? என்ன இதுன்னு போட்டு? யாருமே வாழவிடாம கடைசில தூக்கிட்டு போட்டுருவான் எல்லாமே வந்து.
குருநாதர் :- அப்பனே நிச்சயம் பின் ஒரு ஆற்றல் நிச்சயம் மறைமுகமாக செயல்படுகிறது என்று நிச்சயம் இவ் மதம் சொல்கின்றது. இதுதான் அப்பா இப்பூவியை இயக்க.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா சொல்லுங்க ஐயா
சுவடி ஓதும் மைந்தன் :- இஸ்லாம் மதம்….ஐயா சொல்லுங்க அய்யா…
அடியவர்:- இஸ்லாம் மத குறியீடு என்ன சொல்கிறது அப்படின்னு கேக்குறாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன பண்ணிட்டாரு? இந்த புவியானது ஒரு ஆற்றல் மறைமுகமாக இயக்கிக் கொண்டிருக்கின்றது என்று நபிகள் நாயகம் யாரோ வந்து அவர் சொல்லிட்டாரு. அப்ப அந்த ஆற்றல் என்னன்னா இதான். இது என்ன பண்ணிக்குது பூமியை அது சரிசம படுத்துது.
===========================
# புவியை காக்க புத்தர் செய்த சின் முத்திரை தவங்கள்….
===========================
குருநாதர் :- அப்பனே நிச்சயம் பல நூறு ஆண்டுகள் புத்தன் தவம் செய்தான் அப்பனே. கடைசியில் பின் புவியானது கீழே வரப்போகிறது என்று தெரிந்தது. அவனும் அப்பனே இரு கைகளால் அப்பனே தியானம் செய்தான்.
அடியவர்:- சிவாய நம. புத்தர் அவருக்கு தெரிஞ்சு போச்சு
சுவடி ஓதும் மைந்தன் :- அவருக்கும் தெரிஞ்சு போச்சு. அப்ப புத்தர் என்ன பண்ணார் ? நம்ம ஆற்றல் ஏற்றிக்கினு என்ன பண்ணாரு அவரு?
அடியவர்:- தியானம் பண்ணாரு.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, இப்படி தியானம் எப்படி தியானம் பண்றது அவரு? இப்படி அந்த முத்திரையால வந்து சின் முத்திரையால இப்படி இருந்தா நம்ம ஆற்றல் போகணும் பூமிக்கு அப்படி இருந்தா என்ன ஆகும்?
அடியவர்:- கீழ வரக்கூடாது.
சுவடி ஓதும் மைந்தன் :- கீழ வர கூடாதுன்னு சொல்லிட்டு அவர் தியானம் பண்ணாரு.
குருநாதர் :- எல்லா ஞானிகளும் இப்படித்தான் பின் உலகத்திற்கு தெரிய வைத்தனர். ஆனால் மனிதன் அதை புரிந்து கொள்ளும் சக்தி இல்லை. மூளை இல்லாத மனிதன் என்றுயான் கேலி செய்கின்றேன் மனிதனை.
அடியவர்:- சிவாய நம.
சுவடி ஓதும் மைந்தன் :- இவ்வாறு எவ்வளவு எவ்வளவு ஞானிகள் எல்லாம் மனிதனுக்காக நல்லது செய்ய வந்தாங்கடா. ஆனால் மனிதன்?
அடியவர்:- அவர்களை புரிந்து கொள்ளவில்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- மூளை?.......
சுவடி ஓதும் மைந்தன் :- மூளை இல்லாதவன்.
குருநாதர் :- (மூளை) இல்லாதவன் எதை செய்தாலும் ஒன்று நடக்கப்போவதில்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த மூளை இல்லாதவன்……?
அடியவர் 7 :- அகத்தியர் அய்யா சொன்னது 100க்கு 100 உண்மை.மதம் தான் வேற தவிர.. கும்பிடுற வழிபாடு ஒரே முறை.…….அவங்க ஜெபம் பண்றது ஜெபமா எல்லாம் பண்ணுதான் ( ஆடியோ தடங்கல்கள்….. )
சுவடி ஓதும் மைந்தன் :- அதுதான் எல்லா மதமும் எல்லா. மக்களும் ஏன் இதை சொல்லி வராங்கன்னா அடுத்த மத சண்டை வரப்போகுது அடுத்து. ஆமாங்க ஐயா. நிறைய அழிவு வரப்போகுது நல்லா. அதனால மக்கள் மக்களை அழிந்து பண்ண போறாங்க அதனால இதை சொல்லி இருக்கிறார் வந்து
===========================
# பிளிங்கிங் லைட் எடுத்து… ஆதி ஈசனாரின் உடுக்கையில், அதாவது புவிக்கு வரும் ஆதி மூல சக்தியில் வரை பலகையில் வைக்க உத்தரவு அங்கு….
===========================
குருநாதர் :- அப்பனே இப்பொழுது ஒரு விளக்கை எடு
சுவடி ஓதும் மைந்தன் :- பிளிங்கிங் லைட் எடுங்க ஐயா.
அடியவர் 6 :- ( வரை பலகையின் பின்னே உள்ள பிளிங்கிங் லைட் எடுத்து வர சென்றார் )
சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப புரிஞ்சுதா வேல் எதற்கு? அந்த வேல் உங்களுக்கு சொல்லி வழிபாடு சொல்லிக் கொடுப்பாங்க எல்லாருக்கும். வேல் எப்படி வழிபட சொல்லணும் சும்மா வச்சிட்டு கோவிந்த ராமன் சொல்லிட்டு அப்படி எல்லாம் கிடையாது. அகத்தியர் என்ன பண்றாரு ? சயின்ஸ் மூலமா ஏத்துட்டு வருவார். சயின்ஸ்.. சயின்ஸ்.. எல்லாம் மக்கள் எல்லாம் வந்து நல்லா இது பண்ணிட்டு AI பண்ணுகிறா கம்ப்யூட்டர்ல எல்லாம் பார்க்க அப்படி எல்லாம் கிடையாது. அதெல்லாம் ஒரு புஷ்வாணம் ஆக்க போறார் அப்பதான் தெரியும் வீட்ல உட்கார்ந்தா வேலை இல்லை ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டு வந்து… அப்ப பிளிங்கிங் லைட்
குருநாதர் :- அப்பனே எதை என்று அறிய அப்பனே உடுக்கையில் இடு.
சுவடி ஓதும் மைந்தன் :- உடுக்கைன்னா… இங்க.. இங்க வச்சுக்கோங்க ஐயா. இதை வந்து இங்க வைங்க ஐயா.
அடியவர் 6:- ( ஒளிரும் விளக்கு…. அதனை, ஆதி ஈசனாரின் ஒலி அலை வரும் இடத்தில வரை பலகையில் மேலே வைத்தார். வைத்து பிடித்துக்கொண்டார். பின் வரும் நேரலையில் பார்த்து புரிந்து கொள்ளவும்.)
ஒளிரும் விளக்கு நேரலை:- https://youtu.be/q8Hs63mXjrc?t=21879
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா எரியுது இல்ல?
அடியவர் 6:- ( ஆமாம் )
குருநாதர் :- அப்பனே எது என்று புரிய சிறிது கீழே இறக்கிக் கொண்டே வா.
சுவடி ஓதும் மைந்தன் :- கீழே இறக்கிக் கொண்டே வா.
அடியவர் 6:- ( அடியவர் அவ்வாறே செய்ய ஆரம்பித்தார்… அதாவது ஒளிரும் விளக்கு அதனை மேலிருந்து கீழே இறக்க ஆரம்பித்தார்…)
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா அப்படியே மெதுவா…. அப்படியே மெதுவா மெதுவா அப்படியே லைன்ல வாங்க ஐயா
…….
…….
…….
…….
அடியவர் 6:- ( ஒளிரும் விளக்கு இப்போது பூமியின் மேல் வந்தது…)
குருநாதர் :- அப்பனே இங்கே நிறுத்து
சுவடி ஓதும் மைந்தன் :- அங்கே நிறுத்துன்றார்
அடியவர் 6:- ( ஒளிரும் விளக்கை பூமியின் மேல் நிறுத்தினார் )
குருநாதர் :- அப்பனே இதன் வழி எங்கு வரை உள்ளது?
சுவடி ஓதும் மைந்தன் :- இதன் வழி எங்க வரை உள்ளது?
…….
…….
சுவடி ஓதும் மைந்தன் :- மேற்புறத்தில் நிக்குதுங்க ஐயா
அடியவர் :- கீழ வரல..
சுவடி ஓதும் மைந்தன் :- கீழ வரலையே.
===========================
# சிவலிங்கம் - இறை சக்தியை ஆகாயத்தில் இருந்து கீழே புவிக்கு ஈர்க்கும்
===========================
குருநாதர் :- அப்பனே முட்டாள்தனமாக பேசிக் கொண்டிருக்காதே அப்பனே நிச்சயம் தன்னில் கூட. கீழே பின் இறக்க வேண்டும் என்றால் ஒரு சக்தி தேவைப்படுகின்றது. அதனால்தான் அப்பனே நிச்சயம் அவர் சக்தியானது எது என்று புரிய அப்பனே பின் லிங்கம்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன வேணும்? இங்க ஒரு சக்தி தேவை. கீழ வந்து ஒரு சக்தி தேவை வேணும் அப்ப என்ன பண்ணனும் வந்து
குருநாதர் :- அப்பனே இறக்கு.
அடியவர் 6:- ( ஒளிரும் விளக்கை பூமியின் உள்ளே இறக்கினார்..அதாவது லிங்கத்தின் சக்தியால் ஆதி ஈசனாரின் ஒலி பூமிக்கு இழுக்கப்படுகின்றது )
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப இந்த சக்தியானது என்ன ஆகுது? மெதுவா இறக்குங்க ஐயா. இல்ல இல்ல இருங்க ஐயா அப்ப இருக்குது இந்த சக்தி என்பது இங்கேயே வந்து நின்னுருது இந்த சக்தியானது என்ன ஆகுது ஈர்க்கப்படுகிறது.
அடியவர் 6:- ( ஒளிரும் விளக்கை ஆலய கோபுரத்தின் மேலே நிறுத்தினார் )
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப திருத்தலங்கள் என்ன பண்றது? கோபுரத்துல அந்த சக்தியை ஈர்க்குது.
நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=21977
குருநாதர் :- அப்பனே நிச்சயம் பின் எவை என்று கூட மடி.
சுவடி ஓதும் மைந்தன் :- மடின்னா..(ஒளிரும் விளக்கை) ஆஃப் பண்ணிடுங்க.
அடியவர் 6:- ( ஒளிரும் விளக்கை நிறுத்தினர்)
===========================
# சிகப்பு ஒளி - மனக்குழப்பங்கள் போராட்டங்கள்.
===========================
குருநாதர் :- அப்பனே இதுபோலத்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட வெவ்வேறு அப்பனே நிச்சயம் தன்னில் நிறங்களாக வரும் அப்பா ஒளி.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா இது என்ன ஆகுமாம் இந்த ஒளி வந்து
வெவ்வேறு ஒளியுமா ஒளி வருமாம்.
அடியவர் :- வெவ்வேறு நிறங்கள்
சுவடி ஓதும் மைந்தன் :- டிஃபரண்ட் டிஃபரண்ட் கலரா வரும். ஒளி வந்து?
அடியவர் 6 :-பூமியை நோக்கி வருது.
சுவடி ஓதும் மைந்தன் :- பூமியை நோக்கி வருது ஓகேங்களா
குருநாதர் :- அப்பனே அதிகமாக சிவப்பு ஏற்பட்டால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட மனக்குழப்பங்கள் போராட்டங்கள் தான் என்பேன் அப்பனே.
அடியவர் :- சிவாய நம
சுவடி ஓதும் மைந்தன் :- சிவப்பு கலர் போடுங்க ஐயா
https://youtu.be/q8Hs63mXjrc?t=22024
சுவடி ஓதும் மைந்தன் :- (ஒளிரும் விளக்கை எடுத்து விளக்க ஆரம்பித்தார் ) அப்ப இப்ப சிவப்பு கலர் இந்த கலியுகத்துல (மேலிருந்து) வந்துட்டு இருக்குதாம் வந்து. இந்த சிவப்பு கலர் வர வர என்ன ஆகும்?
அடியவர்கள் :- மனக்குழப்பங்கள்
சுவடி ஓதும் மைந்தன் :- மனக்குழப்பங்கள், போராட்டங்கள்.. தடுமாற்றங்கள்.. எல்லாம் மனிதர்களுக்கு ஏற்படும் என்றார்.
===========================
# முருகன் நிறம் என்ன?
===========================
குருநாதர் :- அப்பனே இதிலிருந்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவ் ஆற்றலை அப்பனே வெளியேற்ற அப்பனே நிச்சயம் அப்பனே எது என்று புரிய அப்பனே ஒரு பின் ஏது என்று கூற அப்பனே பின் எது என்று அறிய அப்பனே பின், முருகன் நிறம் என்ன?
அடியவர்கள் :- பச்சை.
சுவடி ஓதும் மைந்தன் :- பச்சை. இந்த நிறத்தை வெளியேற்றனும்னா என்ன ஆகுது? பச்சை கலர் வேணும்
குருநாதர் :- அப்பனே இதனால் முருகன் எதை என்று அறிய அப்பனே பின் உள்ளாற்றலை எது என்று அப்பனே நிச்சயம் வேலால் அப்பனே அதாவது பச்சை நிறத்தினால் உள்ளே இயக்குகின்றான்.
https://youtu.be/q8Hs63mXjrc?t=22081
சுவடி ஓதும் மைந்தன் :- இங்க பச்சை எரியுறீங்க ஐயா பச்சை ஐயா இது வந்து
சுவடி ஓதும் மைந்தன் :- பச்சை (ஒளிரும் விளக்கை ) எடுங்க ஐயா.
சுவடி ஓதும் மைந்தன் :- ( ஒளிரும் விளக்கை பச்சை நிறத்திற்கு மாற்றி எரிய விட்டார்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா இந்த பச்சை… அப்ப முருகனோட நிறம் இந்த வேலான நிறம் என்ன?
அடியவர் 6:- பச்சை
சுவடி ஓதும் மைந்தன் :- பச்சை.
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த பச்சை எனர்ஜி வந்து இங்க குத்துகின்ற பொழுது இந்த எனர்ஜி வந்து இந்த கீழேயும் வருது இவர் மேல வந்து அடுத்த திசை என்ன போகுது பச்சை கடல்ல போகுது
சுவடி ஓதும் மைந்தன் :- சிவப்புக்கு ஆப்போசிட் பச்சை. சிவப்பு மேல கொண்டு வரணும் புரியுதுங்களா
குருநாதர் :- அதனால்தான் சில மதங்கள் எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக தெரிந்து நிச்சயம் பின் இவ்வாறாகவே
சுவடி ஓதும் மைந்தன் :- அதனாலதான் பல மதங்கள் என்ன ஆகுது?
அடியவர் :- பச்சை கலர் வச்சிருக்காங்க முஸ்லிம்ஸ்ல என்ன முஸ்லிம்ஸ் பச்சை கலர் வச்சிருக்காங்க
மற்றொரு அடியவர் :- நபிகள் நாயகம்
சுவடி ஓதும் மைந்தன் :- நபிகள் நாயகம் என்ன பண்ணாரு? ஞானிகளுக்கு பச்சை தெரிஞ்சிருக்கிறது அதனால என்ன பண்றாரு வந்து இது வந்து என்ன நடந்ததுன்னா இந்த வேல் வந்து மேல இருந்து அப்படியே சிகப்பு ….
பொது :- ( அடியவர் சிகப்பு விளக்கை பூமிக்கு மேலே ஏரியவிட்டார். சுவடி ஓதும் மைந்தன் பச்சை விளக்கை கீழிருந்து மேலாக ஏரியவிட்டார்கள். அவசியம் நேரலையை பார்க்கவும்.)
===========================
# கருணை கடல் வைத்த பெயர்.
===========================
குருநாதர் :- அப்பனே இதற்கு பெயர்… யான் வைத்த பெயர் எது என்று அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட பின் எதிர்ப்பாளி எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட. இன்றெல்லாம் அதை பயன்படுத்தி வேற விதமாக பேசுகின்றார்கள் அப்பனே எவை என்று கூற. அப்பனே இதனால் அப்பனே இங்கு ஈக்கினால் அங்கு நடக்குமாம் இதனால்
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா சென்சார் பத்தி பேச வராரு.. சென்சார்…. சென்சார். இதற்கு பொருள் எதிர்ப்பாளி.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா சென்சார்னு சொல்றீங்களா அதை பத்தி விளக்குறார் அகத்தியர். அதற்கு பெயர் நான் வைத்த பெயர் என்னவாம் எதிர்ப்பாளி. இப்ப சென்சார் ஆயிடுச்சு. எதிர்ப்பாளி
===========================
# உங்கள் கூடவே இருக்கும் மற்றொரு உருவம் அதன் ரகசியங்கள்.
===========================
குருநாதர் :- அப்பனே ஒன்றை சொல்கின்றேன் பின் நீ ஒருவனும் மட்டுமா கூறு
சுவடி ஓதும் மைந்தன் :- நீ ஒருவனும் மட்டுமா கூறுன்றார்
அடியவர் 6:- ( பதில் அளிக்க தயார் ஆனார்கள் )
குருநாதர் :- அப்பனே உன்னுடைய பிம்பம் அப்பனே பின் நிச்சயம் மறைமுகமாக கண்ணுக்கு தெரியாதாக இருக்கின்றது அப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா (அடியவர் 6) இவர் மனுஷன். இவருக்கு தெரியாம இன்னொரு பிம்பம் செயல்படுகின்றது. இதுதான் சென்சார் என்றார் எல்லாருக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- என்ன நினைச்சுக்கிறோம்?
அடியவர்கள் :- ஒரு ஆள்தான் நினைச்சுக்கிறோம்.
https://youtu.be/q8Hs63mXjrc?t=22216
சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு ஆள்தான் நினைச்சுக்கிறோம். ஆனால் ஒருவர் இல்லை இன்னொரு பிம்பம் உன் பக்கத்துலவே இருக்குது. அதுதான் வந்து நாங்க அன்றைய காலத்தில் எதிர்ப்பாளின்னு பெயர் வச்சிருந்தோம். இன்னைக்கு காலத்துல என்ன ஆயிட்டு இருக்குது?
அடியவர்கள் :- சென்சார்
சுவடி ஓதும் மைந்தன் :- சென்சார்
குருநாதர் :- அப்பனே இறைவன் இவ் ஆன்மா மூலம் உன்னை இயக்குவான். அவ்வளவுதான்.
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த சென்சார் மூலம் உன்னை இயக்குவார். ஐயா யாருக்காவது ஐயா புரியுதா என்னங்க ஐயா தயவு செய்து கேளுங்க ஐயா. இதெல்லாம் நீங்க கோடி ரூபாய் கொடுத்தாலும் செஞ்சுக்க முடியாதுங்க ஐயா.
சுவடி ஓதும் மைந்தன் :- சூட்சம சரீரம் அதை வச்சுதான் சென்சார் ஏத்துட்டு வந்துக்கிறார். அப்ப இவர் இயங்குறது எப்படி? அடுத்து இங்க ஒரு வந்து உடம்பு தனியாக இருக்கு
அடியவர் :- சூட்சமமா ஒரு உருவம் இருக்கு. அதன் மூலமாதான் இறைவன் இயக்குறார்
சுவடி ஓதும் மைந்தன் :- அது வந்து இவனை இயக்குகின்றது
குருநாதர் :- ஆனால் இவன் இறந்து விடலாம். ஆனால் நிச்சயம் அது இறக்காது
சுவடி ஓதும் மைந்தன் :- இவர் வந்து என்ன பண்ணிடலாம்? பக்கத்துல இருக்கிற இது
அடியவர் :- அந்த சூட்சமம் வந்து உடல் வந்து சூட்சம உடல் அது இறக்காது (என்று சொல்றாங்க குருநாதர்.)
சுவடி ஓதும் மைந்தன் :- அதுதான் சென்சார் என்றார் ஆத்மா சென்சார் இருக்குதுன்றாரு ஓகேங்களா
ஓம் ஸ்ரீலோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)

No comments:
Post a Comment