​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 15 July 2026

சித்தன் அருள் - 2249- அன்புடன் அகத்தியர் - 28/06/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 2




அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 28/06/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 2

நாள், நேரம்  : 28/06/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 


இடம் : உலக நன்மைக்காக 11 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.

முழு கூட்டு பிரார்த்தனை நிகழ்வின் நேரலை :-  
https://www.youtube.com/watch?v=q8Hs63mXjrc&t=1s 


===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================

இவ் பதிவின் நேரலை :- https://www.youtube.com/watch?v=q8Hs63mXjrc&t=18546s 

===========================
# நீங்கள் தீயதை நினைக்க, தீய ஆன்மாக்கள் ஒட்டிக்கொள்ளும் 
===========================
# நீங்கள் நல்லதை நினைக்க, நல்ல ஆன்மாக்கள் ஒட்டிக்கொள்ளும் 
===========================
# உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்…. 
===========================

குருநாதர் :- அப்பனே, அறிந்தும் கூட இவ்வாறாக, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பலமாகவே. அப்பனே, பல பல வினைகள், அப்பா.  ஏதாவது அப்பனே, பின் தீயவையும் நீங்கள் நினைத்திருந்தாலும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அவ் ஆன்மாக்கள், அப்பனே, தீய ஆன்மாக்களாகவே பலமாக ஒட்டிக்கொள்ளும், அப்பா. 

குருநாதர் :- இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட நல்லதாகவே நினைக்க வேண்டும் என்று, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட முன்னோர்கள் சொல்லி வைத்து. 

குருநாதர் :- இதனால், அப்பனே, பின் எது என்று புரிய, அப்பனே, இதனால், அப்பனே, நல்லதாகவே நினைத்தால், அப்பனே, நல்ல ஆன்மாக்கள், அப்பனே, ஒட்டிக்கொண்டு, அப்பனே, சிறப்பான வாழ்க்கை ஏற்படுத்தும், அப்பா. 

குருநாதர் :- இதனால், அப்பனே, ஆனால், அப்பனே, கலியுகத்தில், அப்பனே, அனைத்தும் தீய ஆன்மாக்கள் எது என்று, அப்பனே, பின் ஒட்டிக்கொண்டு, அப்பனே, உங்களை, உங்களையே, அப்பனே, பின் கெடுத்துக் கொண்டிருக்கின்றது. அவ்வளவுதான்; அது உங்களுக்கு தெரியவில்லை, அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றாருன்னா, எப்பவுமே ஏன் நல்லது நினைக்கணும்னு சொல்றாரு, தெரியுங்களா பெரியோர்கள் வந்து?. எப்பவுமே என்ன பண்றாங்கன்னா, தீய ஆன்மாக்கள், தீய இதுதான் உங்களை ஒட்டிக்கொண்டிருக்குதாம். வந்து 

அடியவர் :- தீய எண்ணங்கள் இருக்கிறப்போ, தீய ஆன்மாக்கள் நம்மளிடம் வந்து ஒட்டிக்கொள்ளும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  நிறைய ஒட்டிக்கொண்டு  இருக்கும் பொழுது, உங்களால இப்படியும் பண்ண முடியாது, இப்படியும் ஆட முடியாது என்றார். வந்து அதனால, அந்த தீய ஆன்மாக்கள் இருக்கும் வரை, உங்களால எவ்வளவு நீங்க பக்திகள் செலுத்தினாலும், என்ன பண்ணாலும், அது வந்து ஒன்னும் ஆகாது. ஏன்னா, தீய ஆன்மாக்கள் பளிச்சுன்னு ஒட்டிடுச்சு அது வந்து.  

சுவடி ஓதும் மைந்தன் :- அதனாலதான் என்ன சொல்றாருன்னா, பெரியோர்கள் எல்லாம், நீ நல்லதே நினை, நல்லதே நடக்கட்டும். அப்ப நீங்க நல்லதே நடந்துச்சுன்னா, நல்லதே வந்து இது பண்ணிடுச்சுன்னா, 

அடியவர் :- நல்ல ஆன்மாக்கள் ஒட்டிக்கொள்ளும். 

சுவடி ஓதும் மைந்தன் :- நல்ல ஆன்மாக்கள் ஒட்டிக்கின்ற பொழுது, உங்களுடைய சக்தி என்ன ஆகும்?

அடியவர் :-  மேலும் மேலும் பெருகும்.

சுவடி ஓதும் மைந்தன் :- மேலும் மேலும் பெருகும்.

சுவடி ஓதும் மைந்தன் :- உயரும்.

சுவடி ஓதும் மைந்தன் :- மேலும் மேலும் நன்மையை செயலைச் சேரும். 

===========================
# ஒரு சிவனடியார் இப்போது அனைவரையும் கவுரவப்படுத்தினார் 
===========================

நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=18652


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, பெரியவர் ஐயா வந்து போடுறாரு. வந்து யாராவது சித்தர் இருக்கலாம். வந்து எந்த ரூபத்திலும் வரலாம். நமக்கு தெரியாது. இதான் சித்தனுடைய ஏன்னா, சித்தர்கள் வந்து இங்க யார் ரூபத்திலும் வரலாம் 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, ஏன்னா திடீர்னு என்று வந்து அது நிறைய விஷயங்கள் இருக்கு. வந்து இறைவன் நம்மளுக்கு நல்லது செய்யணும்னா, எந்த ரூபத்தாவது வந்து செய்வார். ஆமா, அப்ப அதை வந்து நம்ம என்ன பண்ணனும்? அப்ப நல்லதே நினைக்கணும். நல்லதையே கெட்டதை நினைக்கக்கூடாது. 

===========================
# தகடு, தாயத்து  வாங்கியவர்கள் எல்லாம் இங்கு உள்ளனர்.
===========================

குருநாதர் :-  அப்பனே, ஒரு காலத்தில் நீங்களும், அப்பனே, அங்கும் இங்கும் சென்று, அப்பனே, தகட்டை செய்கின்றார்கள். இதை செய்தார்கள், அதை செய்கின்றார்கள் என்று சென்றவர்கள் தான் இங்கு வந்திருக்கின்றீர்கள் என்பேன் அப்பனே.  இதனால், அப்பனே, நல்லது சொன்னாலும், அப்பனே, எவை என்று புரிய. அப்பனே, பின் எதை என்று அறிய அதனால், அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  நீங்க ஒரு காலத்துல எல்லாரும் என்ன பண்ணிக்கிறாங்க? 

அடியவர் :-  அங்கங்க திரிஞ்சவங்கதான் தான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  எங்கெங்க திரிரிஞ்சு அதை செஞ்சா, இது நடக்கும். இந்த தகடு தாய், இதெல்லாம் வந்து உங்களுக்கு நீங்க எல்லாம் கூட என்ன பண்ணிக்கிறீங்க? ஒட்டிக்கிறீங்கப்பா. 

குருநாதர் :- எதை என்று கூறிய இதனால், நிச்சயம் தன்னில் கூட அதை கொடுப்பவனும் நல்லவனாக இருக்க வேண்டும். ஆனால், நிச்சயம் பின் அனைத்தும் பணத்திற்காக. 

சுவடி ஓதும் மைந்தன் :- அதை வாங்குறது வந்து பெருசு இல்லை. அதை கொடுப்பவனோ, 

அடியவர் :-  நீங்க எங்கெங்கெல்லாம் தெரிஞ்சீங்களோ, யார்ட்ட போய் வாங்குனீங்களோ, அவன் நல்லவன் இல்லப்பா. அவன் கொடுத்ததும் கெட்டதுதான். நீங்களும் கெட்டு போயிட்டீங்கன்றாரு. 

===========================
# உங்கள் இல்லத்தில் உள்ள யந்திரங்கள் , தகடுகள் உண்மையில் எப்படி வேலை செய்கின்றது? - அதிர்ச்சியான ரகசியங்கள்.
===========================

குருநாதர் :-  இதனால், நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய. ஆனாலும், அத் தகட்டிற்கு கூட, நிச்சயம் தன்னில் கூட ஈர்க்கும் சக்தி அதிகம். 

குருநாதர் :-  இதனால், நிச்சயம் அப்பொழுது பின் நல்லதாக நினைத்தால் மட்டுமே, அத்தகடானது நல் சக்தி ஈர்த்து உங்களுக்கு கொடுக்கும். ஆனாலும், மனிதன் அப்படி இல்லை. 

குருநாதர் :-  கலியுகத்தில், நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் தீமையாக எண்ணிக்கொண்டிருக்கும் பொழுது, அதையும் கூட ஈர்த்துக் கொண்டு, நிச்சயம் உங்களுக்கு அப்படியே அள்ளிக் கொடுத்தது தீமைகளை. 

அடியவர் :-  சிவாய நம. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அது என்ன ஆச்சாம்? அப்படி தகடு ஏதாவது இருந்திருந்தா கூட, வீட்ல ஏதாவது இருந்திருந்தா கூட, நீங்க வந்து நல்லது நினைக்கணும். ஆனா, இந்த கலியுகத்திலே நல்லது செய்யும் மனம். 

அடியவர் :-  அந்த தகடு எந்திரம் எல்லாம் போய் வாங்குறீங்களே. யார் யார்கிட்டயோ, அவனுக்கு நல்ல எண்ணம் இல்லப்பா. நல்ல எண்ணத்தை 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்படி இல்ல. அந்த தகடு கூட வந்து நீங்க வாங்கிக்கின்ற பொழுது, அது நல்ல சக்தி ?

அடியவர் :- ஈர்க்கும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஈர்க்கும். ஆனால், உங்களுக்கு இந்த கலியுகத்தில் நீங்கள் வாங்குகிறாங்கும் மனசு இல்லை. தீய எண்ணம் தான் போகும். அது பண்ணலாமா? இது பண்ணலாம்னு சொல்லிட்டு, அதனால என்ன ஆச்சுன்னா, மீண்டும் 

அடியவர் 2 :- அதிகமான தீயது வந்து சேர்ந்துச்சு. 

சுவடி ஓதும் மைந்தன் :- அதிகமாக தீயது வந்து சேர்ந்துருச்சு. 

அடியவர்  :-  பல்மடங்கு பெருகி, 

சுவடி ஓதும் மைந்தன் :-  இவ்வளவு பயனை நல்ல தீமையோட சேர்ந்துட்டு, இப்ப நல்லது இறைவன் கையில போனாலும், உங்களுக்கு 

அடியவர்  :-  நல்லது நடக்கிறது. கஷ்டம் நல்லது நடக்கிறது. கஷ்டம் எண்ணங்கள் வராது. 

சுவடி ஓதும் மைந்தன் :-  எண்ணங்கள் வராது. 

அடியவர்  :-  நல்ல எண்ணங்கள் வளராது. 

குருநாதர் :- தாயே, எதை என்று புரிய. அதனால், இறைவனால், நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய. இதனால், முதலில் அனைவரும் நீங்கள் பின் எவை என்று ஒரு இறங்கு முகமாகத்தான் உள்ளீர்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாரும் என்ன பண்றீங்க? 

அடியவர்  :-  இறங்கு முகம் 

சுவடி ஓதும் மைந்தன் :- மைனஸ்ல தான் இருக்கிறீங்கன்றார். வந்து மைனஸ்னா என்னது? 

அடியவர்  :- உங்களுடைய சக்தி ஆற்றல், 

சுவடி ஓதும் மைந்தன் :- ஆற்றல் என்ன இருக்குது? 

அடியவர்  :-  மைனஸ்ல இருக்கு. 

சுவடி ஓதும் மைந்தன் :- மைனஸ்ல இருக்கும் பொழுது, ஜீரோல இருக்கும் பொழுது, என்ன பண்ணாலும், என்ன பண்ணாலும், உங்களால ஒரு சக்தி பண்ண முடியல. 

அடியவர்  :-  புரியாது, 

சுவடி ஓதும் மைந்தன் :- புரியாதுன்றாரு. ஏதோ சொல்றாங்க, ஏதோ மறந்துடுறாங்கன்னு. 

===========================
# காளி அன்னை உபாசகர்  ரகசியங்கள்.
===========================

குருநாதர் :-  இதனால், மீண்டும் சொல்கின்றேன். எவை என்று கூற, பின் பல பின் மந்திரங்களும், பின் எதை என்று புரிய. பின் எவை என்று புரிய. பின் உருவேற்றி, பின் இவன் செப்பியவன். மீண்டும் ஒரு முறை பாடுச்சொல். அனைவரும் பின் எதிராற்றலும் நீங்கட்டும். 

குருநாதர் :- பின்புதான், நிச்சயம் தன்னில் கூட, யாங்கள் எவை என்று கூற பின், அதாவது எதை என்று புரிய பின், அதாவது வேலை ( செம்பு வேல்)  கொடுத்தாலும், நீங்கள் நற்கதியாக உபயோகிக்க முடியும். இல்லையென்றால், நிச்சயம் தன்னில் கூட ஏதோ கொடுத்தார்கள் என்று, இதனால், நிச்சயம் தன்னில் கூட, இதற்கும் பின் வேல் எதை என்று புரிய பின், ஏது என்று அறிய , எங்கிருந்து வந்தது, ஏது என்று கூட. ஆனாலும், இதற்கும் மெய்யாற்றல் கொடுக்கப்பட வேண்டும். அதனால்தான்.

அடியவர்  :-  அப்பா!!!!! இப்ப (அகத்தியர்) ஐயா, (காளி அன்னை உபாசகர்) அவரை  திருப்பி பாட சொல்றாங்க. இவங்க பாடுறப்போ, அந்த எண்ணங்கள், அந்த ஒளி தெரிக்கிறப்போ, உங்ககிட்ட இருக்கக்கூடிய அந்த தீய எண்ணங்கள், எதிர்மறை ஆற்றல் போடட்டும். ஓடுனாதான், நாங்க கொடுக்கிற வேல் உங்களுக்கு வேலை செய்யும்ன்றாங்க. 

===========================
# காளி அன்னை உபாசகர்  காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கக்கூடாது.
===========================

குருநாதர் :-  எதை எவை என்று ஆனாலும், ஒன்றை சொல்கின்றேன். எவரிடத்திலும், எதை என்று கூறப்பின், ஏது என்று கூட, ஆசீர்வாதங்கள் வாங்கக்கூடாது. 

சுவடி ஓதும் மைந்தன் :- இவர் பாடுறாரு, எல்லாரிடத்திலும் என்ன பண்ணக்கூடாது? ஆசீர்வாதம் வாங்கக்கூடாது. வாங்கக்கூடாது. 

அடியவர்  :-   பொட்டு பொட்டுன்னு கால்ல விழுகுறீங்க பாருங்க. அதெல்லாம் செய்யக்கூடாதுன்றாங்க. பொட்டு பொட்டுன்னு கால்ல விழுகுறாங்க இல்ல? கால்ல கால்ல விழுகுறாங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :- அதெல்லாம் செய்யக்கூடாது. 

அடியவர்  :-  செய்யக்கூடாதுன்றாங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :- நீங்கள் நீங்களாகவே இருங்கள். நெகட்டிவ் பாசிட்டிவ். இவர் வந்து பாடத்தினால, காளி உபாசகர், தேவி உபாசகர். அதனால, எல்லார் கையில என்ன இருக்குது? 

அடியவர்  :- நெகட்டிவ் இருக்கு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  நெகட்டிவ் எனர்ஜி அதிகமா இருக்குது. பிளஸ் பார்த்துட்டு, அப்புறம் இதெல்லாம் சொல்லுவாருன்றாரு. வந்து அகத்தியர் வந்து மீண்டும் அடிங்க. ஐயா, சிவதாண்டவம் 

சுவடி ஓதும் மைந்தன் :-  அவர் எதை படித்தாலும், பாடினால், அது வந்து நெகட்டிவ் எனர்ஜியை பாசிட்டிவ் ஆக்கும். அவர் எதை பண்ணாலும், 

அடியவர்  :-  பாசிட்டிவ் ஆயிடும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  பாசிட்டிவ் ஏறும்ன்றாரு. வந்து அதனால, 

அடியவர் 4 :- இன்னொரு விஷயம், அகத்தியர் பெருமான் சொல்லி இருக்கிறார். நம்ம பாடும்போது, கைதட்டி பாடும்போது, நம்முடைய, ….., 

===========================
# காளி அன்னை உபாசகர் - டெல்லியில் இருந்து விமானத்தில் , கூட்டு பிரார்த்தனைக்காக வந்தார்கள். 
===========================

சுவடி ஓதும் மைந்தன் :-   ஐயா, நம்மள வந்து சித்தர் இறைவன் வந்து, இவர் வருவாருன்னு எதிர்பார்க்கல. யாரும் யாரும் எதிர்பார்க்கல. சொல்லி இருக்கார். அகத்தியர் பக்தர்கள் எல்லாம் சொல்லி இருக்காங்க. வந்து, இவருக்கு ஏற்கனவே நாடி திருவண்ணாமலையில தான் நாடி படிச்சிருக்கோம். ரமண மகரிஷி, அங்க வந்து, இவருக்கு நாடி படிச்சிருக்கோம். எப்ப நாடி படிச்சிருக்கிறோம்? 2022ல நாடி படிச்சிருக்கிறோம். வந்து, 

அடியவர் 5:- அகத்தியருக்காக யுனிவர்சிட்டி கட்ட உள்ளார் . 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால, இன்னும் யூனிவர்சிட்டி, இன்னும் நிறைய தொடங்கத்தான் இருக்கிறார். இவர் வந்து, ஆனா, அகத்தியர் ஆனா, ஒரே அடிதான் டெல்லியில இருந்தார். வந்து, இது மாதிரி சொன்னதுமே, பிளைட் புடிச்சு என்ன பண்ணாரு? ஓடி வந்துட்டாருங்க. ஐயா, இப்ப அகத்தியர் என்ன பயன்படுத்திக்கினார் இவரை வந்து நல்லா உங்களுக்கு பயன்படுத்திக்கினார். அவ்வளவுதான். பிற நலனுக்காக பயன்படுத்திக்கினார். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால, வந்து, உங்களுக்கு என்ன பண்ணனுமா? முதல்ல, தீய ஆற்றலை விளக்கணும். நெகட்டிவ், நெகட்டிவ்ல இருக்குது இல்ல? அதை வந்து பாசிட்டிவ் ஆக்கணும். அப்பதான் எல்லாம் நமக்குள்ள இறைவன் வந்து, 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, புரியுதுங்க. 

===========================
# பாடும் போது கை தட்டினால் மட்டுமே நம்மிடம் உள்ள தீய சக்திகள் விலகும்.
===========================

அடியவர் 4 :- எல்லாருக்கும் தயவுசெய்து, எல்லாருமே நல்லா கை தட்டுங்க. ஏன்னா, கை தட்டும்போதுதான் அந்த நெகட்டிவ் துகல் நம்மள விட்டு போகும். அகத்திய பெருமான் சொல்றதுதான். அதனால, எல்லாருமே பாடும்போது கை தட்டணும். 

காளி அன்னை உபாசகர் :- ஓம் காளி 

காளி அன்னை உபாசகர் :- சப்லோக் போலியே. 

அடியவர் 5:- எல்லாரும் சொல்லுங்க. 

காளி அன்னை உபாசகர் :- ஓம் காளி. 

அடியவர்கள்  :-  ஓம் காளி. 

காளி அன்னை உபாசகர் :- ஓம் சக்தி. 

அடியவர்கள்  :-  ஓம் சக்தி. 

காளி அன்னை உபாசகர் :-  ஓம் காளி. 

அடியவர்கள்  :-   ஓம் காளி. 

===========================
# மகிஷாசுரவர்தினி   பாடல்  - அடியவர்களின் எதிர்மறை ஆற்றல்களை விலக்க, காளி அன்னை உபாசகர் பாடல் பாடினார்கள்.
===========================

காளி அன்னை உபாசகர்  ( மகிஷாசுரவர்தினி   பாடல் - அயிகிரி நந்தினி நந்தித மேதினி விஸ்வ வினோதினி நந்திநுதே  … )

https://youtu.be/q8Hs63mXjrc?t=19082 

(மீண்டும் கருணை கடல் வாக்குகள் ஆரம்பமானது…. )

===========================
# அடியவர்கள் அவர்கள் அறியாமலேயே எதிர் ஆற்றல்களை வாங்கிக் கொண்டிருக்கும் அதிர்ச்சி உண்மைகள் 
=========================== 

குருநாதர் :- அப்பனே, இதனால் என்னவென்று அப்பனே, எது என்று புரிய இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அனைத்தும் கூட, அப்பனே, நீங்கள் பார்ப்பதும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எதிராற்றலைத்தான் இவ்வுலகத்தில் வாங்கிக் கொண்டிருக்கின்றீர்கள் என்பேன் அப்பனே. இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எப்பொழுது, அப்பனே, நல்லாற்றலை வாங்குவீர்கள் என்பேன் அப்பனே? 


சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாருமே இந்த உலகத்துல


அடியவர்  :- எதிராற்றல்.


சுவடி ஓதும் மைந்தன் :-  எதிராற்றல் தான். எதிராற்றல்னா என்ன தெரியுங்களா?


அடியவர்  :-  நெகட்டிவ்.


சுவடி ஓதும் மைந்தன் :-  நெகட்டிவ் போர்ஸ். எல்லாம் வாங்கிண்டு இருக்கீங்க. அப்போ, எப்போ? 


அடியவர்  :-  எப்போ வாங்கப் போறீங்க, நல்லாற்றல்.


சுவடி ஓதும் மைந்தன் :-  நல்லாற்றல் எப்போ வாங்கப் போறீங்க?


குருநாதர் :- அப்பனே, எது என்று அறிய  அப்பனே, இப்பொழுதெல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் அனைத்திலும், அப்பனே, பின் எவை என்று, ஒரு பார்ப்பது, எது என்று அறிய  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அனைத்தும், அப்பனே, பின் எதிர்மறை ஆற்றல்தான், அப்பொழுது எப்பொழுது, பின் நல்லது நடக்கப் போகின்றது. 

சுவடி ஓதும் மைந்தன் :-   இப்போ எல்லாருமே என்ன பண்றீங்க?


அடியவர்  :-   பார்க்கிறதும்.


சுவடி ஓதும் மைந்தன் :-   நம்ம பார்க்கிறதும், கேட்கிறதும், எல்லாமே என்னது?


அடியவர்  :-   எதிர்மறை ஆற்றல்.


சுவடி ஓதும் மைந்தன் :-   எதிர்மறை ஆற்றல் தான் அதிகமா இருக்குது என்றார். அப்போ, நல்லாற்றல் நீங்க எப்போ வாங்கப் போறீங்க? நல்லாற்றல்.


அடியவர்  :-   நல்ல விஷயங்களை பார்க்கிறது, பேசுறதா இருந்தா, நல்லாற்றல் வாங்க முடியும். அது எப்போ?

===========================
# உங்களிடம் உள்ள நல் ஆற்றல்களை அதிகப்படுத்துங்கள்.
=========================== 


குருநாதர் :-  அதனால், நிச்சயம் தன்னில் கூட, இன்னும் நல்லாற்றல் நீங்கள் அதிகரிக்க, அதிகரிக்க, உங்களுக்கும் நல்லாகும், பின் உங்களை— அதாவது, ஒருவரை, நிச்சயம் தன்னில் கூட, நீங்கள் நல்லாற்றலை அதிகப்படுத்தினால், உங்களுக்கும் அவ்  நல்லாற்றல் அதிகமாகி, மற்றவளுக்கும் நல்லாற்றல் அதிகமாகி, அவர்களுக்கும் நல்லாற்றல் நிச்சயம் அதிகப்படுத்த வேண்டும். 

குருநாதர் :-  அதனால்தான், முதலிலே நீங்கள் பின் எதிர்மறை ஆற்றலாக இருந்தால், எப்படி— எது என்று— பின் எதை வணங்கினால் நன்று, எவை என்று புரிய…

சுவடி ஓதும் மைந்தன் :- அப்போ என்ன சொல்றார்னா, அகத்தியர், முதல்ல நீங்க நல்ல பாசிட்டிவ் எனர்ஜி இருக்கணும். ஆனா அந்த பாசிட்டிவ் எனர்ஜி யார்கிட்டயுமே இல்லை என்றார்.


அடியவர்  :- இல்லை.


சுவடி ஓதும் மைந்தன் :- அப்போ நீங்க அந்த பாசிட்டிவ் எனர்ஜி உங்களுக்கு முதல்ல ஏத்துனா தான் வந்து என்ன ஆகுங்களா?


அடியவர்  :- அடுத்தவங்க கிட்ட பேசுறப்போ, அவங்க பாசிட்டிவ் ஆவாங்க.


சுவடி ஓதும் மைந்தன் :- அவங்க பாசிட்டிவ் ஆவாங்க, அவங்க அப்படியே ஆவாங்க, அப்படியே நல்லா ஆகி—


அடியவர்  :-  அப்படியே பரவும்.


அடியவர்  :- நல்லது பரவும்.


சுவடி ஓதும் மைந்தன் :- பரவும்.


அடியவர்  :-  இப்போ தீயது தான் பரவுது.


சுவடி ஓதும் மைந்தன் :- பரவுது.


சுவடி ஓதும் மைந்தன் :- இப்போ என்ன ஆகுது? தீயவைத்தான் பரவுது.


அடியவர்  :-  பரவுது.

===========================
# கலியுகத்தில் பக்தி 
===========================


குருநாதர் :-  எதை எது என்று கூற பக்தி எவை என்று அறிய  நிச்சயம் தன்னில் கூட, தீயவையாகவே மாறிவிட்டது இவ்வுலகத்தில். 

சுவடி ஓதும் மைந்தன் :-  பக்தி என்பது என்னவாக மாறிவிட்டதாம்?


அடியவர்  :- தீயதா மாறிப்போச்சுன்றாங்க.


சுவடி ஓதும் மைந்தன் :-  தீயவையாகவே மாறிடுச்சு.


அடியவர்  :- மாறிப்போச்சு.


குருநாதர் :- அப்பொழுது எது என்று அறிய  வருங்காலத்தில், நிச்சயம் இறைவனைப் பற்றி செப்பினாலும், இளைஞன் பின் எது என்று அறிய  நிச்சயம் தன்னில் கூட, பின் எவை  என்று அறிய இறைவனாவது, பின் என்ன ஆவது என்று தான் சொல்வான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்போ வருங்காலத்தில் என்ன ஆகுமாம்?


அடியவர்  :- இறைவனைப் பற்றி சொன்னா யாரும் நம்ப மாட்டீங்க.


சுவடி ஓதும் மைந்தன் :-  யாரும் நம்ப மாட்டாங்கன்னு—


அடியவர்  :-  அவர் எங்கப்பா? ஒன்னும் கிடையாதுப்பா என்று போவாராம்.


சுவடி ஓதும் மைந்தன் :-  ஆமாம். இறைவனாவது என்ன ஆவது? இறைவனாவது—


அடியவர்  :-  நம்பிக்கை இருக்காது இறைவன் மேல.


சுவடி ஓதும் மைந்தன் :-  நம்பிக்கை இறைவன் மேல?


அடியவர்  :-  இருக்காது.


சுவடி ஓதும் மைந்தன் :-  இருக்காது.


அடியவர்  :-  ஏன்னா நம்ம நெகட்டிவா இருக்கோம். அதனாலதான்.


சுவடி ஓதும் மைந்தன் :-  நம்ம நம்ப வந்து

அடியவர்  :-  பாசிட்டிவா ஆகணும். நல்ல எண்ணங்கள் ஆகணும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  பாசிட்டிவா ஆகணும் முதல்ல.


அடியவர்  :-  ஆமாம்.


சுவடி ஓதும் மைந்தன் :-  பாசிட்டிவ் ஆகலைன்னா?


அடியவர் :-  அப்பனாதான் இறைவன் மேல நம்பிக்கை வரும். இறைவனை வணங்க முடியும். இல்லன்னா நெகட்டிவா இருந்தோம்னா இறைவன்ட்ட போக முடியாது, இறைவனை வணங்க முடியாது. அது இன்னொருத்தரையும் நாம சேர்த்து, அவரையும் நெகட்டிவா தான் ஆக்குவோம். தீயது என்ன? 

அடியவர் :-  நல்லது நினைச்சா, நல்லது எல்லார்கிட்டயும் பரப்ப முடியும். எல்லாரும் நல்லவங்க ஆவாங்க. இறைவனைப் பற்றி பேச முடியும், பாட முடியும், சிந்திக்க முடியும். இறை ஒழுக்கம் பரவும் எல்லா பேர்கிட்டயும். இறை சிந்தனை பரவும். 

அடியவர் :- ஆனா அந்த நல்ல எண்ணங்கள் இல்லாதப்போ, தீய எண்ணங்கள் இருக்கிறப்போ, இறைவனைப் பற்றி எதிர்மறை ஆற்றலுக்கு தான் நினைக்க தோணும். எனக்கு எதுவும் நல்லது நடக்காதுன்னு நினைக்க தோணும். இப்படியே நம்ம நெகட்டிவா திங்க் பண்ணி, திங்க் பண்ணி, வாழ்க்கையில வீழ்ந்து அழிஞ்சு போவோம்ன்றாங்க. அதனால நல்லதே நினைங்க.

===========================
# ( software ) மென்பொருளே காரணம் 
===========================


குருநாதர் :- அதனால், நிச்சயம் தன்னில் கூட, இவ்வுலகத்தில் ஒரு கூட்டமே இருக்கின்றது. நிச்சயம் தன்னில் கூட, கெடுதலை பரப்பதற்கே, பின் பரப்புவதற்கே, நிச்சயம் பின் அக்கெடுதல் தான் இப்பொழுது பரவிக் கொண்டிருக்கின்றது. அழிவு நிச்சயம் தன்னில் கூட, கலியுகத்தில்.


அடியவர் :- இதெல்லாம் பிளான் பண்ணி செல்றாங்க, செய்றாங்கப்பா. ஒரு கூட்டமே இருக்குன்றாங்க, அந்த கெடுதலை பரப்புறதுக்கு அப்படின்றாங்க.


===========================
# ( software ) மென்பொருள் பயன்படுத்துபவரிடம் இறைவனை பற்றி சொன்னால் என்ன நடக்கும் ?
===========================


குருநாதர் :- எதை எது என்று புரிய முதலில் எது என்று கூறு, பின் எது என்று அறிய,  நிச்சயம் தன்னில் கூட, இதற்கு காரணம் மென்பொருளே என்பேன்.


அடியவர் :- குருநாதர், இதுக்கு காரணம் மென்பொருள் தான். சாப்ட்வேர் தான் சொல்றாங்க.


சுவடி ஓதும் மைந்தன் :-   சாப்ட்வேர். சாப்ட்வேர்.


அடியவர் :- அங்க இருந்து தான் எல்லா பிரச்சனையும் ஆரம்பிக்குதுன்றாங்க.


சுவடி ஓதும் மைந்தன் :-   இதுல இருந்து தான் எல்லாமே?


அடியவர் :- ஆரம்பிக்குது.


சுவடி ஓதும் மைந்தன் :-   ஆரம்பிக்குது. 

குருநாதர் :- எதை என்று கூற நிச்சயம் தன்னில் கூட, இவர்களிடத்தில் நீங்கள் இறைவனைப் பற்றி சொல்லிப் பாருங்கள். என்ன நடக்கின்றது என்று பாருங்கள்.


அடியவர் :-  ஆமாம். இவர்களிடம் போய், இறைவனைப் பற்றி சொன்னா என்ன நடக்குதுன்னு பாருங்கன்றாங்க.


சுவடி ஓதும் மைந்தன் :-   சாப்ட்வேர்ல இருக்கிறாங்க இல்ல, அவன் கையில எப்படி—


அடியவர் :-  யாராவது நம்புவானா? ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் கிட்ட பேசுங்க.


சுவடி ஓதும் மைந்தன் :-   இறைவன் கிட்ட பேசுங்க, பார்க்கலாம்.


அடியவர் :-  கேட்க முடியாது.


அடியவர் :-  கேட்க மாட்டான். 


===========================
# மென்பொருளில் இருப்பவர்கள் எப்பொழுதும் இல்லத்தில் சண்டையிட்டுக் கொண்டு தான் இருப்பார்கள்
===========================

குருநாதர் :-  எதை என்று அறிய அறிய நிச்சயம் தன்னில் கூட, அவர்களுக்கு நிச்சயம் கெடுதலை பார்த்து பார்த்து, இதுதான் வாழ்க்கை என்று தெரிந்துவிட்டது. நிச்சயம் தன்னில் கூட. 


குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட, மென்பொருளில் இருப்பவர்கள் எப்பொழுதும் இல்லத்தில் சண்டையிட்டுக் கொண்டுதான் இருப்பார்கள். இதற்கு ஒரு சின்ன உதாரணம் யான் சொல்கின்றேன், இப்பொழுது. 

சுவடி ஓதும் மைந்தன் :-  சாப்ட்வேர் இன்ஜினியரிங் இடத்துல எப்பவுமே வேலை செய்றவங்கன்னா, எப்பவுமே என்ன பண்ணிருப்பாங்களாம்?


அடியவர் :-  வீட்டுல நிம்மதி இருக்காது.


சுவடி ஓதும் மைந்தன் :-  வீட்டுல நிம்மதி இருக்காது. சண்டை போட்டே இருப்பாங்களாம்.


அடியவர் :-  கணவன் மனைவி, குழந்தைகள், பெற்றோர்களோட சண்டை போட்டே இருப்பாங்க.


சுவடி ஓதும் மைந்தன் :-  பெற்றோர் கூட சண்டை போடுறது, தன்னுடைய—


அடியவர் :-  உறவினர்களோட சண்டை போடுறது, குழந்தைகளோட சண்டை போடுறது. ஒற்றுமை இருக்காது.


சுவடி ஓதும் மைந்தன் :-  அம்மா கூட, அப்பா கூட. இதெல்லாம்

===========================
# எப்போது இல்லத்தில் சண்டைகள் உண்டாகும் ?
===========================

குருநாதர் :-  ஏன், எதற்கு, எவை என்று நிச்சயம் தன்னில் கூட, இதழில் முதலை, எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட, ஏனென்றால், நிச்சயம் தன்னில் கூட, மாற்றங்கள் அதிகமாக வருகின்றது. நிச்சயம் தன்னில் கூட. பின் அதிகமாக வருகின்ற பொழுது, இவையெல்லாம் பின் நல் ஆற்றலாக பயன்படுத்திக் கொண்டால் நன்று. இறைவன் நல்லது செய்வான். இல்லையென்றால், நிச்சயம் தீய ஆற்றல். நிச்சயம் இதுவும் விஞ்ஞானபூர்வமாக விளக்கப் போகின்றேன் யான்.


அடியவர் :-  மாற்றங்கள். நல்லாற்றலை பெருக்கிக்கணும்ப்பா. தீய ஆற்றலை விலகவில்லை எல்லாம் வீணா போயிடுவோம். இதை நான் விஞ்ஞானபூர்வமாக விளக்குறேன் அப்படின்னு சொல்றாங்க குருநாதர்.


குருநாதர் :-  இப்பொழுது, நிச்சயம் தன்னில் கூட, ஒரு தாய் எவை என்று கூற பின் தந்தையிடம் நல்லாற்றல் இருப்பது என்று, பின் நிச்சயம் தன்னில் கூட, அறிந்து கூட வைத்துக்கொள்வோம். 

குருநாதர் :-  ஆனால் மகளோ அல்லது மகனிடமோ தீய ஆற்றல்கள் இருந்தால், இவர்களுக்கு நிச்சயம் ஒத்துப்போகாது. நிச்சயம் தன்னில் கூட, பின் அடிதடிகள், இன்னும் போராட்டங்கள், மனக்குழப்பங்கள், இதனாலே, நிச்சயம் தன்னில் கூட, கடைசியில் பின் அனைத்தும் இழந்து போகின்றார்கள்.


அடியவர் :-  அழகா உதாரணம் சொல்றாங்க. ஒரு கணவன் தாய், தந்தையர், இரண்டு பேருக்கும் நல்லாற்றல் இருக்கு. ஆனா குழந்தைக்கு நல்லாற்றல் இல்ல, தீய ஆற்றல் இருக்கு. அப்படின்றப்போ, அந்த குடும்பத்துல, அந்த குழந்தைகளுக்கும், தாய், தந்தையருக்கும், ஒத்துப்போகாது. சண்டைகள் வரும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  சண்டைகள் வரும்.


அடியவர் :- கலகம் தான் வரும் அப்படின்றாங்க.


குருநாதர் :-  எதை எது என்று எல்லாம், நிச்சயம் மனிதனே தீய ஆற்றலை பரப்பிக் கொண்டிருக்கின்றான் இத்தேசத்தில்.


அடியவர் :-  மனிதன் தீய ஆற்றலை இந்த தேசத்துல போட்டி போட்டு பரப்பிக் கொண்டிருக்கிறான் அப்படின்றாங்க.


குருநாதர் :- அறிந்தும், இவ்வாறாக ஆற்றல் பரப்பிக் கொண்டிருக்கும் பொழுது, உங்களுக்கு நல்லதை பின் நினைக்க தோன்றுமா என்ன?


அடியவர் :-  இப்படி வந்து நெகட்டிவ் போர்ஸ் நிறைய பரவிட்டு இருக்கிறதுனால, நல்லது நினைக்கணுமே தோணாதுப்பா. தீயதைப் பற்றி தான் பேசுவீங்க, செய்வீங்கன்றாங்க.

===========================
# முருகப்பெருமான், வேல் ரகசியங்கள் - யாருக்கும் தெரியாத உண்மை - கலியுகத்தில் முதன் முறையாக - கருணை கடல் அருளால்….
===========================


குருநாதர் :-  இதனால், நிச்சயம் வேல் எதற்காக? முருகன் ஏன்? பின் நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் கூட, எதற்காக என்று யாருக்காவது தெரியுமா?


அடியவர் :-  முருகன் ஏன், எதற்கு வந்தார் என்று யாருக்காவது தெரியுமான்னு கேக்குறாங்க.


குருநாதர் :-  வேல் எது என்று கொடுத்து, பின் எவை என்று— கூற— வாங்கிக்கொண்டு, நிச்சயம் தன்னில் கூட, ஏதாவது செய்தோம் என்று தான் மனிதன் நினைத்துக் கொண்டிருக்கின்றான். ஆனால் இப்பொழுது யாருக்கும் தெரியாத உண்மையை, பின் யான் உரைக்கப் போகின்றேன்.


அடியவர் :-  வேலை வாங்கி, ஏதோ நீங்க செய்யணும்னு என்னமோ நினைச்சுட்டு இருக்கீங்கப்பா. யாருக்கும் தெரியாது. நான் சொல்றேன் என்ன பண்ணனும்ன்றதாங்க குருநாதர்.


குருநாதர் :-  எதை என்று புரிய இவ்வாறாக செய்தால், நல்லாற்றல் நிச்சயம் பெருகும். அதற்கு உதாரணமாக, படம் பார்த்து, எவை என்று— நிச்சயம் தன்னில் கூட, பதில் சொல்கின்றேன். 

சுவடி ஓதும் மைந்தன் :-   படம் போட்டு விளக்குகிறாராம்.


அடியவர் :-  விளக்க சொல்றாங்க.


சுவடி ஓதும் மைந்தன் :-   ஐயா, போர்டு வைங்க ஐயா.


அடியவர் :-  ஐயா, போர்டு போர்டு செட் பண்ணுங்க.


சுவடி ஓதும் மைந்தன் :-  போர்டு செட் பண்ணுங்க. 

குருநாதர் :-  அப்பனே, இவ்வாறாகவே, நிச்சயம் தன்னில் கூட, நன்மைகள் பலவற்றிலும் கூட, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, உங்களுக்கு ஏற்படுத்தி,  எது என்று அறிய அறிய  அப்பனே, பின் சித்தர்கள், அதாவது, இறைவனை நம்பி நம்பி செல்கின்றீர்கள். நல்லது ஆகட்டும் என்று. 

குருநாதர் :-   ஆனாலும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எவ்வாறு நடப்பது என்று, அப்பனே, பின் நிச்சயம் நடப்பதே இல்லையப்பா இக்கலியுகத்தில். அதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எவ்வாறெல்லாம், அப்பனே, பின் எவை என்று புரிய அப்பனே, பின் நடந்து கொண்டால், நல்லது நடக்கும் என்பவை எல்லாம், யான் விவரமாக விவரிக்கப் போகின்றேன்.


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, புரியுதுங்களா? எல்லாரும் இறைவனை நாடி நாடி போறீங்க. ஒண்ணுமே—


அடியவர் 4 :-  நல்லது நடக்கல.


சுவடி ஓதும் மைந்தன் :-  நல்லது நடக்கல. ஏன் நல்லது நடக்கல? நல்லது நடக்கல. ஏன் நல்லது நடக்கல? சொல்லுங்க பார்ப்போம். என்ன நல்லா இல்ல? அடுத்து என்ன சொன்னாங்க?


அடியவர் 4 :-  நெகட்டிவ் போர்ஸ்.


சுவடி ஓதும் மைந்தன் :-  நெகட்டிவ் போர்ஸ்.


அடியவர் 4 :-  நான் சொல்லிக் கொடுக்கிறேன், எப்படி போனா நல்லது நடக்கும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  எப்படி போனா நல்லது நடக்கும். வேல் எதுக்கு? யாருக்காவது தெரியுமா? வேல் எதுக்கு? அதை வந்து எல்லாமே சும்மா வேல், முருகர் வேல் வச்சிட்டு இருக்காருன்னு சொல்லிட்டு, இதை வந்து எக்ஸ்பிளைன் பண்றாராம். 

===========================
# உங்கள் நல்லாற்றல் பெருக்கி அதன் பின் வாக்குகள் உரைத்தால் மட்டுமே உங்களுக்கு புரியும்.
===========================

குருநாதர் :-  எதை எவை என்று புரிய இதனால், உங்களுக்கும் நல்லாற்றலை நிச்சயம் பெருக்கித்தான், நிச்சயம் யாங்களும் உரைக்க முடியும். 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்போ உங்களுக்கு வந்து நெகட்டிவ் போர்ஸ் … சில பேருக்கு இருக்கும் பொழுது, உங்களுக்கு சொன்னாலும் புரியாது. அப்போ என்ன பண்ணனும்?


அடியவர் 4 :-  பாசிட்டிவ்.


அடியவர் 4 :-  பாசிட்டிவ் வாங்கிட்டு.


அடியவர் 4 :-  நல்லாற்றல் பெருக்கி.


சுவடி ஓதும் மைந்தன் :- நல்லாற்றல் பெருக்கி.


அடியவர் 4 :-  அதுக்கப்புறம் சொன்னாதான் புரியும்.


சுவடி ஓதும் மைந்தன் :- அதற்கு அப்புறம் சொன்னாதான் உங்களுக்கு புரியும். 

குருநாதர் :-  அறிந்து கூட, இதனால், நிச்சயம் தன்னில் கூட, ஏனென்றால், பின் வரக்கூடிய காலத்தில், நிச்சயம் தன்னில் கூட, மனிதன்— எவை என்று— பின் இன்னும், என் ஜாதி, உன் ஜாதி என்றெல்லாம்.  என் இறைவன், உன் இறைவன் என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் கூட, பின் சண்டைகள் இடை போகின்றான். நிச்சயம் தன்னில் கூட. 

குருநாதர் :-  அதனால், எவராலும் தடுத்திட முடியாது இத்தேசத்தில். அதனால்தான், நிச்சயம் இப்பொழுதே திருந்துங்கள், திருந்துங்கள் என்று. 

சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்து என்ன பண்றாராம் மனுஷன்? ஜாதி வெறி பிடிச்சு ஆடுவானாம்.  அடுத்து— மதம் பிரச்சனை வருமா? அதெல்லாம்—


அடியவர் 4 :-  தடுக்குறதுக்கு தான்.
சுவடி ஓதும் மைந்தன் :-  தடுக்குறதுக்கு தான்.


அடியவர் 4 :- சொல்லிக் கொடுக்க போறார்.

சுவடி ஓதும் மைந்தன் :- சொல்லிக் கொடுக்க போறார். 

===========================
# இறைவன் நினைத்தால் மட்டும்தான் மனிதனுக்கு நல்லது நடக்கும்
===========================

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறாகவே, நல்லது செய்ய இவ்வுலகத்தில் ஆள் இல்லை. அதனால்தான், 

சுவடி ஓதும் மைந்தன் :- நல்லது செய்ய—


அடியவர் 4 :- யாருமே இல்ல.


சுவடி ஓதும் மைந்தன் :-  யாருமே இல்லன்றார். 

குருநாதர் :- தாயே, தந்தையே, நிச்சயம் தன்னில் கூட, எவை என்று கூற— அறிந்தும் கூட, பின் இறைவன் நினைத்தால் மட்டும்தான் மனிதனுக்கு நல்லது நடக்கும். மனிதன் நினைத்தால் நிச்சயம் நடக்காது. 

சுவடி ஓதும் மைந்தன் :- இறைவன் நினைத்தால் மட்டும்தான் மனுஷனுக்கு என்ன நடக்கும்?


அடியவர் 4 :- நல்லது நடக்கும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  நல்லது நடக்கும். வேற யாரு நினைச்சாலும்—


அடியவர் 4 :- நல்லது நடக்காது.
சுவடி ஓதும் மைந்தன் :-  நடக்காது. 

குருநாதர் :- அறிந்தும் எது என்று புரிய, இதனால்தான், நல்லாற்றல்களை முதலில் பெருக்க வேண்டும். நிச்சயம் இத்தேசம் பின் நல்முறையாக வாழ வேண்டும். அவ்வளவுதான்.


அடியவர் 4 :-  பாசிட்டிவ் இன்க்ரீஸ்.


சுவடி ஓதும் மைந்தன் :- பாசிட்டிவ் இன்க்ரீஸ் பண்ணிட்டு, இந்த தேசத்துல—


அடியவர் 4 :-  நல்லது நடக்கணும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  நல்லது நடக்கணும். அவ்வளவுதான். 

குருநாதர் :- சித்தர்கள் ஏன், எதற்காக, எவை என்று பாடுபட்டு, எவை என்று கூற பின் நல்லதற்காகவே. நல்லோர்கள் வாழ வேண்டும். இன்னும் கூட.  தீயவர்களாக இருந்தாலும், அவர்களை மாற்றி, பின் நல்லோர்களாக, பின் வாழ வைப்போம் யாங்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  என்ன சொல்றாரு?


அடியவர் 4 :-   கெட்டவனாகவே இருந்தாலும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  கெட்டவனாக இருந்தாலும், எல்லாருக்கும் நல்லதா சொல்லி—


அடியவர் 4 :-  நல்லவனா மாத்தி.


சுவடி ஓதும் மைந்தன் :-  நல்லவனா மாத்தி—


அடியவர் 4 :- அவனை வாழ வைக்கணும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  அவனை?


அடியவர் 4 :-  வாழ வைக்கணும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  வாழ வைக்கணும். இதுதான்?


அடியவர் 4 :-  சித்தர்களுடைய.


சுவடி ஓதும் மைந்தன் :-  சித்தர்களுடைய?


அடியவர் 4 :-  கோட்பாடு.


சுவடி ஓதும் மைந்தன் :-  கோட்பாடு.

===========================
# ஏன் முருகப்பெருமான் வேல் வைத்துக் கொண்டு உள்ளார்கள் ?
===========================


குருநாதர் :- எதை என்று கூற அனைவரையும் உங்களை கேட்கின்றேன். வேல் எதற்காக? எதற்காக வேலோன் வைத்துக் கொண்டிருக்கின்றான்? 

சுவடி ஓதும் மைந்தன் :-   எல்லாரும் கேக்குறாங்க. ஒரு வேல் வச்சிட்டு இருப்பாரு. யாரு?


அடியவர் 4 :-  முருகர்.


சுவடி ஓதும் மைந்தன் :-  முருகர்.  எதற்காவது யாருக்காவது தெரியுமா? ஐயா யாருக்காவது தெரியுமா? 

அடியவர்கள் :- ( யோசனை , அமைதி ) 

குருநாதர் :-  தாயே நிச்சயம் தன்னில் கூட, தந்தையே எவருக்கும் தெரியாது. வாய்க்கு வந்ததெல்லாம் உளறி. 

சுவடி ஓதும் மைந்தன் :- யாருக்கும் தெரியாதுப்பா. ஆனா நீங்க வேணும்னா?

அடியவர் 4 :-  சொல்லிக்கலாம்.

சுவடி ஓதும் மைந்தன் :-  சொல்லிக்கலாம். வாயில வந்ததெல்லாம் சொல்லிக்கலாம். ஆனால்— யாருக்கும் தெரியாது. 

குருநாதர் :- எதை எது என்று புரிய நிச்சயம் இதை விஞ்ஞான பூர்வமாகவே விளக்குகின்றேன். 

சுவடி ஓதும் மைந்தன் :-  என்ன பண்றாரு?


சுவடி ஓதும் மைந்தன் :-  விஞ்ஞானபூர்வமாகவே விளக்குகின்றேன்.


குருநாதர் :-  நீங்கள் தெரிந்து கொண்டு, அறிந்து கொண்டு, புரிந்து கொண்டு, பின் ஆற்றலை பெருக்கிக் கொள்ளுங்கள். உங்களை நீங்கள் வெல்லலாம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  நீங்கள் தெரிஞ்சுகிட்டு, நல்லா புரிஞ்சுகிட்டு, உங்களை ஆற்றலை, முதல்ல நீங்க எனர்ஜி வேணும். எனர்ஜியே இல்ல உங்ககிட்ட. அப்போ எப்படிமா இறைவனை வணங்கி என்னமா பிரயோஜனம்? சொல்லுங்க பார்ப்போம். 

குருநாதர் :-  எதை எது என்று அறிய சொல்கின்றேன். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, தெரியலைன்னா கேளுங்க. எக்ஸ்பிளைன் பண்றேன். எனக்கும் தெரியாது. இதுல எடுத்து இங்க விளக்க வைக்க போறேன்.  ( கருணைக்கடல் அருளால் எழுது பலகை வகுப்பு ஆரம்பமானது ….) 

( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 28/06/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை அதனில் உரைக்கப்பட்ட  வேல் பூசை வாக்கு பகுதி நிறைவு அடைந்தது).

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment