அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 28/06/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 3
நாள், நேரம் : 28/06/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம் : உலக நன்மைக்காக 11 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.
முழு கூட்டு பிரார்த்தனை நிகழ்வின் நேரலை :-
https://www.youtube.com/watch?v=q8Hs63mXjrc&t=1s
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
இவ் பதிவின் நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=20271
(இப்போது குருநாதர் எழுது பலகையில் ரகசியங்களை உரைக்க ஆரம்பித்தார்கள்)
குருநாதர் :- அப்பனே, உருண்டையை வரை.
அடியவர் :- உருண்டை, உருண்டை. உலக உருண்டை.
சுவடி ஓதும் மைந்தன் :- கரெக்டா போடுவீங்களா? நீங்க உருண்டை வரைவீங்களா?
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, நானே வரையறேன். குடுங்க, ஐயா. ( எழுது பலகையில் உலக உருண்டை வரைய ஆரம்பித்தார் )
அடியவர் :- உலக உருண்டை வரைய சொல்லிருக்காங்க, குருநாதர்.
( வரைந்து முடித்த பின்னர் )
நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=20321
குருநாதர் :- இதைத்தான் பல வகைகளில் கூட, பழைய... எதை என்ற புரிய பல... பின் மைல், எவை என்று பிற கடந்து, பின் சுற்றுகின்றது.
சுவடி ஓதும் மைந்தன் :- இது என்ன ஆகுதாம்? உலகம் உருண்டை. பல கிலோமீட்டர் வேகத்துல சுத்துது.
அடியவர் :- பல மைல் வேகத்துல சுத்துதுன்றாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- பல கிலோமீட்டர் வேகத்துல சுத்துது.
குருநாதர் :- ஏது, எதை என்று புரிய, எதற்கு இவை சுற்றுகிறது என்றால், நிச்சயம் தன்னில் கூட அறிந்தும், ஏது என்று கூற, மேல் ஒரு ஆற்றல், நிச்சயம் பலமாக, இதைத்தன் பின்னி பின்னி, எவை என்று அறிய.
சுவடி ஓதும் மைந்தன் :- இதுக்கு வந்து, இது உலகம்.
அடியவர் :- ஆமா.
சுவடி ஓதும் மைந்தன் :- இது வந்து புவி, பூமி.
அடியவர் :- மேலுள்ள ஆற்றல் வருதுன்னு சொல்றாங்க.
Speaker 1
சுவடி ஓதும் மைந்தன் :- பூமி எதனால் சுற்றுகிறது என்றால், வந்து, மேலுள்ள ஆற்றல் பின்னி பின்னி வருவதுதான்.
அடியவர் :- ஆமா. அதாவது...
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, மேல் ஒரு ஆற்றல், பெருசா ஒரு ஆற்றல் இருக்கு. இதுக்கு மேல, பூமிக்கு மேல, எங்கோ இருக்குது.
அடியவர் :- அதான் சிவனுடைய உடுக்கை ஒலி சொன்னாங்கல. உடுக்கைல ஒரு ஆற்றல் இருக்குது.
சுவடி ஓதும் மைந்தன் :- அது எவ்வாற வந்து திரியுதுன்னா, பின்னி பின்னி வருதாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- எப்படி சொல்றது? பின்னி... என்ன? போடுங்க, அப்படிதான். அவ்வளவுதான்.
அடியவர் 6 :- ( வரைய ஆரம்பித்தார் )
அடியவர் :- பாம்பு பின்னி இருக்கும்ல, அந்த மாதிரி.
சுவடி ஓதும் மைந்தன் :- இன்னொரு போடுங்க.
அடியவர் 6 :- ( பாம்பு பின்னி இருப்பது போல வரைய ஆரம்பித்தார் )
சுவடி ஓதும் மைந்தன் :- பின்னி பின்னி இந்த பூலோகத்துக்கு வந்துட்டு இருக்குது.
===========================
# ஈசனாரின் உடுக்கை சத்தம் - இவ்வுலகத்தை இயக்குகின்றது
===========================
நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=20409
குருநாதர் :- எதை, ஏது என்று அறிய, இதைத்தான் நிச்சயம் உடுக்கை சத்தம் என்கிறோம்.
அடியவர் :- சிவாய நம.
சுவடி ஓதும் மைந்தன் :- இதுதான். இதை வந்து, இதனோட சத்தம் எப்படி தெரியுமா?
அடியவர் :- உடுக்கை ஒலி.
சுவடி ஓதும் மைந்தன் :- டம டம டம டமன்னு இப்ப யாரோ வச்சிருந்தாங்க, பார்த்தீங்களா?
அடியவர் :- டமரகம், டமரகம்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்படி வருமா? இது உடுக்கை சத்தம். ஐயா, தெரியுதுங்களா எல்லாருக்கும்?
அடியவர் :- டமரகத்துடைய ஒலிதான் வந்து இந்த பூமியை வந்து இயக்குதுன்னு சொல்றாங்க. அதனுடைய ஒளி ஆற்றல், போர்ஸா வந்து, பின்னி பிணைஞ்சு வருது. அந்த பின்னி பிணைஞ்சு வர்றப்ப, அந்த ஒளியுடைய வேகத்துல பூமி அதிவேகமா சுத்துதுன்றாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- இது வந்து உடுக்கை சத்தம். ஐயா, புரியுதுங்களா? இது உடுக்கை சத்தம். இங்க வந்துவிழுகும் பொழுது, (பூமி) இது என்ன ஆகுதாம் வந்து? வேகமா சுத்துதாம்.
குருநாதர் :- ஆனாலும் இதை தடுக்க ஒரு ஆற்றல், இன்னும் வேகமாக, வேகமாக, நிச்சயம் தன்னில் கூட அனைத்தும், பின் ஏது என்று புரிய, அறிந்து கூட, அழிந்துவிடும். ஆனாலும் இதை தடுக்க, எதை என்று புரிய,
சுவடி ஓதும் மைந்தன் :- இது வேகமா, இது பட பட, என்ன ஆகும்னா, உலகம் என்ன ஆகுமாம்?
கூட்டு பிரார்த்தனை அடியவர் :- வேகமா சுத்தும்.
சுவடி ஓதும் மைந்தன் :- வேகமா சுத்தும். இப்பவே வேகம்தான் சுத்திட்டு இருக்குது. வந்து இன்னும் அதிகமா வேகமாக சுற்று, சுற்றுகின்ற பொழுது என்ன ஆகும்? ஐயா?
அடியவர் 7 :- வேகம் ஜாஸ்தி ஆயிடும்.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாமே என்ன ஆகும்? ஐயா?
அடியவர் 8 :- பாஸ்ட்டா, காலங்கள் எல்லாம் பாஸ்ட்டா போயிடும்.
சுவடி ஓதும் மைந்தன் :- பாஸ்ட்டா. ரொம்ப இது ஆயிடும். எல்லாமே மக்களுக்கு வந்து, உலகம் அதிகமா இன்னும் வேகத்துல சுற்றினா, மக்களுக்கு வந்து வேற மாதிரி எல்லாம் போயிடும்ன்றாரு.
===========================
# ஈசனாரின் உடுக்கை சத்தம் - பூமிக்கு உள்ளே புகுந்து கொண்டே இருக்கின்றது……
===========================
குருநாதர் :- இதை அறிந்து, பின் எதை புரிய, பின் இவ்வாற்றல், பின் எது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, புவி தன்னில் உள்ளே புகுகின்றது.
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த ஆற்றல் என்பது…
( பூமியில் உள்ளே இருப்பது போல புள்ளிகள் இட்டு வரைந்தார்கள் )
அடியவர் :- பின்னி பிணைஞ்சு பூமிக்கு உள்ள போகுதுன்றாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- உள்ள?
அடியவர் :- போகுது.
சுவடி ஓதும் மைந்தன் :- போகுது. பூமிக்குள்ள போகிறது.
குருநாதர் :- எதை, எவை என்று கூற, இவ்வாறாகவே, இவ்வாற்றலை, எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, உள் புகுந்து, உள் புகுந்து சென்றால், பின் இவ் புவியானது வெடித்துவிடும்.
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த ஆற்றல் இன்னும் அதிகமாக, அதிகமாக, இந்த உடுக்கை சத்து இருக்குது இல்ல, இந்த ஆற்றல் அதிகமாக, அதிகமாக, இது என்ன ஆகுமாம்?
அடியவர்:- உள்ள போக, அழுத்தம் அதிகமாகி, வெடிச்சு சிதறிடும்ன்றாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- அழுத்தம் அதிகமாகி, வெடிச்சிடும்.
===========================
# வேல் கொண்டு இவ் உலகை காக்கும் முருகப் பெருமான் திருவடிகள் போற்றி !!!!!!
===========================
குருநாதர் :- இதனால்தான் கலியுகத்தில் மூலாதாரமாக முருகன் விளங்குகின்றான். அறிந்து கூட, இதனால் நிச்சயம் தன்னில் கூட, பின் இவ்வாற்றலை மீண்டும் வெளியே எடுக்க வேண்டும்.
அடியவர்:- சிவாய நம
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, இந்த ஆற்றல் வந்து வெளியே...
அடியவர்:- எடுக்கணும். இல்லனா வெடிச்சிடும்.
சுவடி ஓதும் மைந்தன் :- எடுக்கணும்.
குருநாதர் :- இதனால்தான் வேல் ஒன்றை வைத்து முருகன் குத்திக்கொண்டே இருக்கின்றான்.
அடியவர்:- சிவாய நம.
அடியவர்கள் :- ( உணர்ச்சி வசப்பட்டார்கள். கை தட்டல்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- யாருக்காவது தெரியுமா? சும்மா வேல் எதுக்கோ, சும்மா எல்லாம் இல்ல. வேல் எதுக்கு வச்சிருக்காரு?
அடியவர்:- அந்த ஆற்றலை வெளியில எடுக்க.
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த ஆற்றல் வந்து...
அடியவர்:- அதிகப்படியான ஆற்றலை.
சுவடி ஓதும் மைந்தன் :- இங்க போடுங்க, ஐயா, வேலை. சூப்பரா. அழகா போடுங்க, ஐயா.
அடியவர் 3 :- வேலோட முடியை அங்க டச் பண்ற மாதிரி போடுங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- வேல் மாதிரி போடுங்க. இது ஒளி அப்படியே வெளியில வர்ற மாதிரி காமிங்க, ஐயா.
நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=20591
அடியவர் 6 :- ( பூமியின் அடியில் வேல் ஒன்றை வரைந்தார்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- வெளியில வரும் மாதிரி. இப்ப தெரியுது எல்லாருக்கும். வேல் எதுக்கு வச்சிருக்காரு?
குருநாதர் :- இதை தெரியாமலே, வருங்காலத்தில் மனிதன் பின் ஏதோ வைத்திருக்கின்றான், பின் நிச்சயம் என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- வேல் எதுக்கு வச்சிருக்காரு, இப்ப தெரியுதுங்களா? இந்த ஆற்றல் என்ன ஆகும் வந்து...
அடியவர்:- அதிகப்படியான ஆற்றல் பூமிக்குள்ள போற ஆற்றலை வெளியில எடுக்கிறது, முருகருடைய வேல்னாலதான். இல்லனா...
சுவடி ஓதும் மைந்தன் :- வேல் என்ன பண்ணுறாரு? அப்ப கலியுகத்தை யார் வந்து...
அடியவர்:- காக்கிறவர் முருகப்பெருமான். அவருடைய வேல்.
===========================
# மதங்களை கடந்த விஞ்ஞான ரகசியங்கள்
===========================
குருநாதர் :- இதனால் மக்கள் மூடங்கெட்டவராக இருப்பார்கள். இதனால் நிச்சயம் இங்கு மதத்தைப் பற்றி யான் பேசவில்லை. எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் அறிந்து கூட, மற்றொன்று எது என்று அறிய, பின் பிற மதத்தைப் பற்றியும் யான் சொல்கின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப இதை பார்த்தாங்கன்னா யாரோ என்ன பண்ணுவாங்களாம்? முருகர் மட்டும் தானே கையில வேல் பிடிச்சுண்டு இருப்பாரு. அப்ப எங்க இல்லன்னு சொல்லிட்டு சில பேர் என்ன பண்ணுவாங்களாம்? மதம் தாழ்ந்து பேசுவார்கள். அதற்கும் நான்... பொருட்படல.
===========================
# உடுக்கை சத்தம் - கட்டுப்படுத்தவில்லை என்றால், பூமி நீள்வட்ட பாதையில் இருந்து புவியானது இன்னும் கீழே இறங்கும்
===========================
குருநாதர் :- அப்பனே, எது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறாக, நிச்சயம் தன்னில் கூட, அறிந்து கூட, இவ்வாறாக, அப்பனே, எது என்று அறிய, அனைத்தும் சொல்கின்றேன், அப்பனே.
குருநாதர் :- இவ்வாறாக, நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் கூட, புவியானது பின் எவை, அறிந்தும் கூட, உண்மையானது எல்லாம், இவ்வாறாக, அப்பனே, ஆற்றல் அதிகரிக்க, அதிகரிக்க, அப்பனே, பின் எவை என்று கூற, தன் வட்டத்தில், அதாவது நீள்வட்ட பாதையிலிருந்து, அப்பனே, புவியானது இன்னும் கீழே இறங்கும், அப்பா.
அடியவர்:- சிவாய நம.
சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு வட்டத்துல தான் இயங்கணும்.
( நீள்வட்ட பாதை வரைந்தார்கள் ……)
அடியவர்:- பூமி வந்து ஒரு அச்சு, அந்த அச்சுல சுழன்றுட்டு இருக்கு பாருங்க. ஒரு பாதையில சுற்றுட்டு இருக்கு. இந்த போர்ஸ் அதிகமாச்சு.
சுவடி ஓதும் மைந்தன் :- இதெல்லாம் எந்த விஞ்ஞானியும் சொல்லிக் கொடுக்க மாட்டாங்க.
அடியவர்:- யாரும் சொல்ல மாட்டாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- அகத்தியர் சொன்னாதான் உண்டு. அதை எடுத்து உங்களுக்கு சொல்லப்போறார், அவ்வளவுதான். அப்ப ஒரு வட்டத்துல...
அடியவர் 6 :- நீள் வட்டம் காமிங்க, ஐயா.
சுவடி ஓதும் மைந்தன் :- அவ்வளவுதான், அவ்வளவுதான். நீள் வட்டம் போடுங்க, ஐயா. போடுங்க, ஐயா. ஒரு வட்டத்துக்குள்ள சுற்றினீங்க தான் வந்து. ஐயா, எல்லாருக்கும் தெரியுதா?
அடியவர்கள் :- ( தூரத்தில் இருந்து தெரியவில்லை )
சுவடி ஓதும் மைந்தன் :- தெரியலையா? ஓகே.
( விவரிக்க ஆரம்பித்தார்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு நீள் வட்ட பாதையில் சுற்றுகிறது வந்து. ஓகேங்களா? அப்ப என்ன ஆகும் வந்து, என்ன ஆகுமாம்?
அடியவர் 6 :- ( நீள் வட்ட பாதை வரைந்தார்கள் )
நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=20735
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, இனிமேல் எல்லாம் படம் பார்த்து...
கதை சொல் தான். ஏன்னா தெரியல. வேல் எதுக்கு வச்சிருக்காருன்னு என்ன சொல்லுவீங்க? இதெல்லாம் சயின்டிஸ்ட். சயின்டிஸ்ட் ஆனா பிஹெச்டி முடிஞ்சா எல்லாம் கண்டுபிடிக்க முடியாது.
அடியவர் :- அதாவது பூமி வந்து இந்த ஒரு வட்ட பாதை, ஒரு நீள் வட்ட சுற்றுப் பாதையில, பூமி வந்து சூரியனை சுற்றி வருதுன்னு சொல்றாங்க. இப்போ இந்த போர்ஸ் அதிகமாச்சுன்னா, அதோட சுற்றுவட்ட பாதையை விட்டு விலகிரும். இந்த போர்ஸ் அதிகமா கீழ இறங்கிடும்.
சுவடி ஓதும் மைந்தன் :- கீழ?
அடியவர் :- இறங்கிடும்.
===========================
# இறைவன் அருளால் இவ்வுலகம், மற்றும் கிரங்கங்கள் சமநிலையில் இயங்கி வருகின்றது
===========================
# ஏன் சிவலிங்கங்கள் ?
===========================
குருநாதர் :- இதற்காக எது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட மேலே இயக்குபவனே கீழேயும் தங்கி நிற்கின்றான். அப்பனே, லிங்கத்தை வரை.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப இந்த ஆற்றலை கொடுப்பவனே என்ன பண்றார்? மீண்டும் லிங்கத்தை இங்க வரைங்க, ஐயா. சிவலிங்கம்.
நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=20793
அடியவர் 6 :- ( சிவலிங்கம் ஒன்று வரைந்தார்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த சிவலிங்கம் என்ன ஆகுது வந்து?
சுவடி ஓதும் மைந்தன் :- தடுத்து நிப்பாட்டுது.
சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப லிங்கம் எதற்கு யாராவது தெரியுமா? நமச்சிவாயம் சொல்லுவாங்க, எல்லாம் சொல்லுவாங்க, ஐயா, வந்து. ஏன் இப்ப லிங்கம்? ஐயா, இது சயின்டிஸ்ட். ஏன்னா இனிவரும் காலங்கள்ல வந்து யாருமே இறைவனை...நம்ப போறது...கம்மி. அதனால என்ன ஆகுது இது வந்து? அடுத்து என்ன ஆகுதுன்னா, வேல் எடுத்து லிங்கம். இதனுடைய ஆற்றல் அதிகாகின்ற பொழுது...
( எழுது பலகையை அனைவருக்கும் தெரியும் வண்ணம் இடம் மாற்றினார்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, இங்க தெரியல. ஐயா, இங்க தெரியல. ஐயா, இங்க தெரியுதா? தெரியலையா?
( எழுது பலகையை அனைவருக்கும் தெரியும் வண்ணம் இடம் மாற்றினார்கள் )
குருநாதர் :- எதை, ஏது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, இதை இயக்குவது பன்மடங்கு, எது என்று அறிய, பின் புவியை தாண்டி, நிச்சயம் தன்னில் கூட, இதுதான் ஈசனாக அங்கங்கு பாவித்துள்ளனர்.
சுவடி ஓதும் மைந்தன் :- இது வந்து பூமி. நம்ம பூமியில தான் இருக்கிறோம். இதுக்கு கீழ ஒரு லிங்கம் மாதிரி இருக்குதாம் வந்து. ஐயா, புரியுதுங்களா? அந்த லிங்கம் என்ன ஆகுதுன்னா, தன் நீள்வட்ட பாதையிலிருந்து கொஞ்சம் விலகும் பொழுது, இந்த லிங்கம் என்ன ஆகும்? இதிலிருந்து ஆற்றல் இது கிடைச்சு, திருப்பி அப்படியே மேல ஏறுதுன்றார். ஐயா, புரியுதுங்களா? ஐயா, ஐயா, சொல்லுங்க, யாரும் தூங்காதீங்க, ஐயா.
அடியவர்:- ஐயா, கவனிங்க. குருநாதர் வாய்ப்பு தர்றாரு. பயன்படுத்திக்கோங்க.
குருநாதர் :- நிச்சயம் அப்பனே, இவ்வாறாக அப்பனுடைய கிரகங்கள் அனைத்தும் கூட, நிச்சயம் தன்னில் கூட, இவ்வாற்றலை தூக்கி விடுகின்றது.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப எல்லா கிரகங்கள்... போடுங்க, ஐயா.
அடியவர் 6:- ( அனைத்து கிரகங்களை வரைவதற்கு ஆயத்தம் ஆனார்கள் )
நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=20928
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப இப்படி சுற்றுகின்ற பொழுது, இந்த லிங்க வடிவத்துல பெரிய ஒரு ஆற்றல் இருக்குது கீழ. இந்த ஆற்றலானது என்ன ஆகுது?
அடியவர்:- கீழ போகாம தூக்கி விடுது.
சுவடி ஓதும் மைந்தன் :- கீழ போகாத. அப்படியே அது வேகத்துல வரும் பொழுது...
அடியவர்:- ஆமா, ஆமா.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்படியே அதனோட ஆற்றல் இயங்குகின்றது.
அடியவர்:- அதாவது...
சுவடி ஓதும் மைந்தன் :- தெரியலையா?
அடியவர்:- இந்த சிவனுடைய உடுக்கை ஒலி... என்னங்க, ஐயா? சிவனுடைய உடுக்கை ஒலி அவ்வளவு போர்ஸா இருக்கு. அப்போ அந்த ஆற்றல் அதிகமாக, அதிகமாக வர்றப்போ, எந்த கிரகமும் தாங்காது. கீழ இறங்குமாம் அந்த போர்ஸ்ல. அப்போ கீழ சிவன், அதாவது லிங்க ரூபத்துல இருந்து, அந்த கிரகங்கள் கீழ வராம, எல்லா கிரகத்தையும் மேல ஏத்தி விடுறார்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, புரியுதுங்களா?
அடியவர்:- ஒரு குஷன் மாதிரி மேல ஏத்தி விடுறார்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப இந்த லிங்கமானது…. எல்லா கிரகத்திலும் வந்து இப்படி வந்து, இது இல்லையென்னா, இந்த லிங்க வடிவிலே… லிங்கம் இல்லன்னா... என்ன ஆகுமாம் கிரகங்கள்?
அடியவர்:- பிரபஞ்ச இயக்கம் நின்று போயிடும்.
சுவடி ஓதும் மைந்தன் :- இயக்கம் நின்று போயிடும்.
அடியவர்:- பூமி கீழ போயிடும்.
குருநாதர் :- எதை என்று அறிய, பின் இதன் வடிவிலே இவ் லிங்கமானது, நிச்சயம் தன்னில் கூட, மீண்டும் ஆற்றலை அதிகமாக வெளியிடுகின்ற பொழுது, நிச்சயம் தன் மீண்டும் மீண்டும் எவை என்று கூட சுற்றுகின்றது.
அவசியம் நேரலையை இவ்விடத்தில் பார்க்கவும்:-
https://youtu.be/q8Hs63mXjrc?t=20986
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப இந்த லிங்கமானது இப்படி வரும் பொழுது, இப்படி வந்துரும். ஆனா வராம, இந்த ஆற்றல் இது தடுத்து, திருப்பி இப்படியே போகுது. ஐயா, யாருக்காவது புரியுதா?
அடியவர்:- சுத்தி விட்டுருதுன்றாங்க. ஆற்றலை சுத்தி விட்டுருது. மேல இருந்து வர்ற ஆற்றலை… கீழ போக விடாம… திருப்பி மேல அனுப்பிச்சுறது, சுத்தி விட்டுருதுன்றாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால இந்த ஆற்றல்…
மற்றொரு அடியவர் :- ( ஒரு உதாரணம் உரைத்தார் )
அடியவர்:- அதான் கரெக்ட். நல்ல உதாரணம். பந்து, ஒரு பந்து போர்ஸா எரியுறேன் பாருங்க. தரையில பட்டு திரும்பி எழும்புது இல்ல? அதே போல தான்.
===========================
# அனைத்து கிரகங்களின் தலைவன் - “லிங்காதிபதி”
===========================
குருநாதர் :- எதை என்று சொல்ல, அதனால்தான் கிரகங்களுக்கெல்லாம் தலைவன், நிச்சயம் இவ் லிங்காதிபதி.
அடியவர்:- நமச்சிவாய !!!!!
அடியவர்கள் :- ( கைதட்டல்கள் )
அடியவர்:- லிங்காதிபதி !!!!!
சுவடி ஓதும் மைந்தன் :- லிங்காதிபதி !!!!!
சுவடி ஓதும் மைந்தன் :- இங்க கிரகங்களுக்கெல்லாம் யார் தலைவன்?
அடியவர்கள் அனைவரும் :- லிங்காதிபதி.
சுவடி ஓதும் மைந்தன் :- லிங்காதிபதி. அதனால்தான் எல்லாரும் என்ன சொல்றோம்? நமச்சிவாயன்னு சொல்றோம்.
அடியவர்:- லிங்காதிபதி.
நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=21035
===========================
# “நமச்சிவாய” மந்திர ஒலி ரகசியங்கள் - ஆதி மூல காரணம்
===========================
குருநாதர் : அப்பனே, இவ் ஆற்றலும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எவ்வாறு நிச்சயம் பின் ஒலிக்கும் என்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, நமச்சிவாய...
சுவடி ஓதும் மைந்தன் :- அய்யா , இங்க நமச்சிவாயன்னு எழுதுதுங்க. இந்த ஆற்றலும் எப்படி என்ன ஒலிக்கும் ?
அடியவர்:- நமச்சிவாய.
( இவ் உச்சரிப்பை அவசியம் நேரலையில் பார்க்கவும் )
சுவடி ஓதும் மைந்தன் :- நா... மா... சி…...வா...யா
சுவடி ஓதும் மைந்தன் :- சவுண்டு, சவுண்டு. இதனோட சவுண்ட் என்ன?
அடியவர்:- நமச்சிவாய.
சுவடி ஓதும் மைந்தன் :- நமச்சிவாய. யார் அப்ப?
அடியவர்:- சிவபெருமான்.
சுவடி ஓதும் மைந்தன் :- நமச்சிவாய. சவுண்ட் என்ன? இப்ப வந்து ஒரு பாடல் போடுறோம். அந்த பாடல் என்ன ஆகுது?
அடியவர்:- சவுண்ட் வருது.
சுவடி ஓதும் மைந்தன் :- சவுண்ட் வருது. அப்ப இந்த எனர்ஜியோட லெவல் என்ன தெரியுமா?
சுவடி ஓதும் மைந்தன் :- நா... ம... சி…...வா...யா
குருநாதர் :- அப்பனே, இதை ஏன் பின் நீங்கள் சொல்கிறீர்கள் என்றால், நிச்சயம் தன்னில் கூட உங்களை ஆற்றலை மேம்படுத்தத்தான்.
அடியவர்:- சிவாய நம.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப நீங்க இதை எதையா சொல்றீங்க?
அடியவர்:- உங்களுடைய ஆற்றலை பெருக்கிறது.
அடியவர்கள் :- ( கை தட்டல்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- நமச்சிவாய. யாருனாவது தெரியுதுங்களா?
===========================
# சித்தர்களிடத்தில் - “விஞ்ஞானத்தை மிஞ்சும் விஞ்ஞானம் உள்ளது”
===========================
குருநாதர் :- அப்பனே, இதைத் தெரியாமல் மூடன் மனிதன் என்னென்னவோ சொல்லிக் கொண்டிருப்பான், அப்பனே. ஏனென்றால் விஞ்ஞானம். அப்பனே, நிச்சயம் கலியுகத்தில், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, மனிதன் நவீனம். அதற்கு மேலே எங்களிடத்தில் நவீனம் இருக்கின்றதடா, மனித முட்டாளே.
அடியவர்:- சிவாய நம.
அடியவர்:- என்னென்னமோ பேசுறீங்களப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- என்னென்ன பேசுறீங்க?
அடியவர்:- எங்க கிட்ட இருக்குன்றாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- அய்யா நீங்க எல்லாம் விஞ்ஞானத்துல போயிட்டு இருக்கீங்க. அதெல்லாம் கண்டுபிடிச்சது நாங்க தான்டா. அதுக்கு மேல நாங்க தூக்கிட்டு போறோம்டா உங்களான்றாரு வந்து.
அடியவர்:- மாபெரும் விஞ்ஞானி நம் குருநாதர் அகத்திய பெருமான்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப இதனோட என்ன ஆச்சு? இங்க உடுக்கு சத்தம். டப டப டப டப்பான்னு கேக்குது.
அடியவர்:- டமருகம் .
சுவடி ஓதும் மைந்தன் :- டமருகம் . உடுக்கை.
===========================
# புவி சமநிலையில் இயங்கும் ரகசியங்கள்
===========================
குருநாதர் :- அப்பனே, எது என்று அறிய, மீண்டும் அப்பனே, ஏது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, பின் ஒழுங்காக புவிதன் எவை என்று கூட இயக்கப்பட வேண்டும். இதனால், அப்பனே, இரண்டு விசைகளும் சமமாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நீங்களும் சமமாக நிற்பீர்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப இங்கிருந்து ஒரு எனர்ஜி வரணும். மேல இருந்து எனர்ஜி வரணும். அப்பதான் நீங்க வந்து ஸ்டடியா நிக்க முடியும். இல்லனா என்ன ஆகுது? குடிச்சிட்டு ஆடுறான் பாரு.
அடியவர்:- இல்லனா கீழ விழுவ வேண்டியதுதான்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஓகேங்களா? அப்ப என்ன ஆகுது? இங்கிருந்து எனர்ஜி வரணும். மேல இருந்து எனர்ஜி வரணும். ஆனா அப்பதான் வந்து ஈக்குவலா சுத்தும்.
நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=21187
குருநாதர் :- அப்பனே, கீழிருந்து அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் கூட, மேல் ஆற்றல், அப்பனே, பின் எவை என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, மேலிருந்து அப்பனே, பின் இன்னும், அப்பனே, சமமான எவை என்று அறிய , அப்பனே, பின் இருந்தால் மட்டுமே, அப்பனே, பின் புவி சமநிலை பெற்று, ஈர்ப்பு விசையோடு சுற்றும், அப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- இங்க இருக்கிற எனர்ஜியும் இங்க வரணும். ஓகேங்களா? இங்கிருந்து எனர்ஜியும்...
அடியவர்:- திருப்பி மேல போகணும்.
சுவடி ஓதும் மைந்தன் :- இங்க வரணும். அப்பதான் என்ன ஆகும் புவி?
அடியவர்:- சமமா இருக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- சம வேகத்தில் சுத்தும்.
அடியவர்:- சுத்தும்.
அடியவர்:- அதாவது அந்த சுற்றுப்பாதை இருக்குல்ல, அந்த சுற்றுப்பாதையில அந்த அச்சு விலகாம சுத்துறதுக்கு…. மேலிருந்து வர ஆற்றலும், கீழிருந்து வர ஆற்றலும் சமமா இருந்தாதான் இந்த நீள்வட்ட சுற்றுப்பாதையில பூமி நிக்கும். இல்லனா விலகிரும்ன்றாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- இல்லனா?
அடியவர்:- பூமி விலகிரும்.
சுவடி ஓதும் மைந்தன் :- பூமி இடம் ?
அடியவர்:- பூமி விலகிரும்.
சுவடி ஓதும் மைந்தன் :- விலகிடும்..
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDelete