அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 28/06/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த 11 வது சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 10 ( நிறைவு பகுதி )
நாள், நேரம் : 28/06/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம் : ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.
முழு கூட்டு பிரார்த்தனை நிகழ்வின் நேரலை :-
https://www.youtube.com/watch?v=q8Hs63mXjrc&t=1s
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
இவ் பதிவின் நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=35532
===========================
# சிவபுராணம் - ஏன் 96 வரிகள் ?
===========================
குருநாதர் :- அப்பனே, இவ்வாறாக ஒவ்வொரு வரியும், அப்பனே, எது என்று அறிய அப்பனே, பின் எத்தனை வரிகள் அனைத்தும் உள்ளது?
சுவடி ஓதும் மைந்தன் :- எத்தனை வரிகள் அனைத்தும் உள்ளது?
அடியவர்கள் :- 96
சுவடி ஓதும் மைந்தன் :- 96.
குருநாதர் :- அப்பனே, எவை, ஏது என்று அப்பனே, நிச்சயம் இதற்கு, அப்பனே, எவ்வாறாக, அப்பனே, விளக்கம் கூறுங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த 96க்கு முதல்ல விளக்கம் கூறுன்றார்.
அடியவர்கள் :- ( யோசனை ….)
குருநாதர் :- அப்பனே, எடு எழுதுகோலை.
சுவடி ஓதும் மைந்தன் :- எடுரா எழுதுகோலை…. ( வரை பலகையில் எழுத எழுந்தார் )
அடியவர்கள் :- ( சிரிப்புகள் )
அடியவர் :- எடுரா பேனாவை. ( வரை பலகையில் எழுத எழுந்தார் )
அடியவர்கள் :- ( சிரிப்புகள் )
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, தெரிஞ்சுக்கோங்க. உண்மையிலேயே தெரிஞ்சு வணங்குங்க. ஐயா, வேற ஒன்னும் இல்ல. வந்து ஏன்னா, நீங்க எப்ப எத்தனை காலம் தான் வந்து இறைவன் ஒரு சான்ஸ், அவ்வளவுதான்.
அடியவர் :- 96 ஓட ரகசியம் என்ன? அய்யா (அனைவரும் ) அமைதி (யாக இருங்கள். வாக்குகள் ஆரம்பம் ).
குருநாதர் :- அப்பனே, பின் ஏது என்று புரிய. அப்பனே, ஒன்பதை மேலே இடு.
சுவடி ஓதும் மைந்தன் :- ஒன்பது?
அடியவர் :- மேலே இடுங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( எழுது பலகையில் 9 என்று எழுதினார்கள் மேலே )
இவ்விடத்தின் நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=35605
குருநாதர் :- அப்பனே, கீழே அப்பனே, நிச்சயம் தன்னில் ஏது என்று ஆறை இடு.
சுவடி ஓதும் மைந்தன் :- ( எழுது பலகையில் 6 என்று எழுதினார்கள் கீழே )
அடியவர் :- அப்பா….
அடியவர் :- பல்லாயிரக்கணக்கான வருடங்கள் பூமியை சுத்தி படிச்சிருக்கிறார் அவரு ( மாணிக்கவாசக பெருமான் )
குருநாதர் :- அப்பனே, அறிவுள்ளவர்களை இதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு என்று பின் கூறச்சொல் பார்ப்போம். இத்தனை வருடமாக நமச்சிவாய என்று சொன்னார்களே,
சுவடி ஓதும் மைந்தன் :- அறிவுள்ள மனிதர்களே…….
அடியவர்கள் :- ( பல உரையாடல்கள்……….. )
அடியவர் :- எப்படி பார்த்தாலும் ஒன்பது தான்யா. கீழ பார்த்தாலும், மேல பார்த்தாலும் ஒன்பது.
குருநாதர் :- அப்பனே, ஒவ்வொரு பைத்தியனும் ஒவ்வொன்றாக கூறட்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- (சிரித்துக்கொண்டே) என்ன சொல்றார் தெரியுங்களா?
அடியவர் :- (சிரித்துக்கொண்டே) பைத்தியங்கள் எல்லாம் வரிசையா, சொல்லுங்க …
சுவடி ஓதும் மைந்தன் :- ஒவ்வொன்றாக கூறட்டும். சொல்லுப்பான்றாரு.
அடியவர் :- எல்லா பைத்தியங்களுக்கும் ஒரு வாய்ப்பு தரப்படும்.
சுவடி ஓதும் மைந்தன் :- இது ஆறு சொல்லிட்டாரு. இங்க ஒன்பது எல்லாமே இங்க. ஐயா, இப்படி போட்டாலும், இப்படி போட்டாலும், இங்க ஒன்பது தான் வரப்போறது. தலை கீழ (போட்டாலும், இங்க ஒன்பது தான் வரப்போறது…..)
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, இவ்வளவு உருவம் வரப்போகுது.
அடியவர் :- நேரா போட்டாலும், ஒன்பது வரப்போகுது.
சுவடி ஓதும் மைந்தன் :- இது இங்க போட்டா ஆறு வரப்போகுது.
https://youtu.be/q8Hs63mXjrc?t=35665
சுவடி ஓதும் மைந்தன் :- அய்யா பார்த்தீங்களா? இது என்னது? படிங்க.
ஒரு அடியவர் :- நேரா வந்தா ஒன்பது, தலையில வந்தா ஒன்பது.
அடியவர் :- அதை தான் சொன்னாரு.
சுவடி ஓதும் மைந்தன் :- அவர் அதுதான், அதுதான் சொல்றாரு. அறிவுள்ள பைத்தியக்காரர்கள் ஒவ்வொன்றாக ஒவ்வொன்னு சொல்லட்டும் என்று சொல்லிவிட்டார்.
குருநாதர் :- தாயே, எது என்று புரிய, நிச்சயம்……
அடியவர் :- இல்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, யார் யாரெல்லாம் சயின்ஸ் படிச்சிக்கிறீங்க? ஐயா, ஐயா, யாரெல்லாம் சயின்ஸ் கிளாஸ் படிச்சிருக்கீங்க? யாராவது இருக்காங்களா? ஐயா,
ஒரு அடியவர் :- நவகிரகத்தை வெல்லலாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா ?
அடியவர் 6 :- நவகிரகத்தை வெல்லலாம் ( என்று சொல்கின்றார் அத ஒரு அடியவர் ).
தனசேகர் ஐயா,
குருநாதர் :- அப்பனே, எது என்று கூற இணை எவை இரண்டும்
சுவடி ஓதும் மைந்தன் :- ( இப்போது 9 மற்றும் 6 இரண்டையும் இணைந்தார்கள் )
அடியவர் 6 :- ஐயா இன்பினிட்டி. ஐயா ( ஒரு பதில் )
அடியவர் 10 :- ஆறு வந்து…. முருகர்.
அடியவர் :- ஆறுபடை வீடு .
அடியவர் 10 :- இல்ல, மேல ஒன்பது நவகிரகங்கள்.
குருநாதர் :- அப்பனே, இப்பொழுது புத்தியை நசுக்கு.
அடியவர் :- புத்தியை, புத்தியை நசுக்குங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- நல்லா வந்து யோசிங்க. இது என்ன தெரியுதுன்னு சொல்லுங்க. ஐயா, அதெல்லாம் ஆறு எல்லாம் முடிஞ்சு போச்சு. குடுங்க, ஐயா. இதெல்லாம் இணைக்க சொல்லிட்டாருங்க, ஐயா.
அடியவர் :- ஐயா, ஆற்றல், ஆற்றல் உருவாகி மேலிருந்து கீழ் வந்து திருப்பி வந்து கீழிருந்து மேல போகுது……. சுருண்டு (மேல போகுது)....
குருநாதர் :- அப்பனே, இவ்வாற்றலில் தொடங்கின்ற பொழுது, அப்பனே, சிவபுராணத்தை ஓதினால், அப்பனே, நிச்சயம் பாதி வயதிற்கு மேலே உங்களுக்கு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட உண்மை நிலை புரியும். அப்பனே, அப்பொழுதுதான் பலன்கள் ஏற்படும்.
அடியவர் :- சிவாய நம.
சுவடி ஓதும் மைந்தன் :- இது இங்க ( மேல் உள்ள 9 ) வந்து இங்க தொடங்கினீங்கன்னா, ( பூபியை சுற்றி ) நீங்க இந்த இதை எடுத்துட்டு வந்து இதை எடுத்து இப்படியே வந்துச்சுன்னா, ( மேல் உள்ள 6 ) இங்க வந்தாதான் உண்மையான பொருள் தெரியும்.
அடியவர் :- கிட்டத்தட்ட ஒரு 40, 50 வருடங்கள் சிவபுராணத்தை சொன்னாதான்…..
சுவடி ஓதும் மைந்தன் :- எத்தனை வருடம் சொல்லணும்?
அடியவர் :- 40, 50 வருடங்கள்,
சுவடி ஓதும் மைந்தன் :- 30 வருடங்களாவது சொல்லணும். குறைந்தபட்சம்,
அடியவர் :- குறைந்தபட்சம் 30.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, புரியுதுங்களா? அப்ப, இது வந்து பார்த்துக்கோங்க.
அடியவர் :- 60 வயது வாழ்ந்தான்னா 30 வருடம் சுத்து.
சுவடி ஓதும் மைந்தன் :- ( மேலே 9 அங்கிருந்து கீழே 6 வரை நேர் கோடிட்டார் )
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, புரியுதுங்களா?
===========================
# ஆதி ஈசனார் 9 - 6 ….இதனை பிடித்து பூமியை சுற்றும் ரகசியங்கள்..
===========================
இவ்விடத்தின் நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=35798
குருநாதர் :- அப்பனே, எதை என்று அறிய, அப்பனே, அடிக்கடி, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, எவை என்று கூற, இதைப் பிடித்து, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட, ஈசன், அப்பனை பின் இழுப்பான் அப்பா, அதிவேகமாக. அப்பனே, சமநிலையில் பூமி, அப்பனே, சுற்றும் அப்பா….
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த இப்படி…. அதுக்கு என்ன பண்ணுவாராம்? திருப்பியும் இங்க புடிச்சு, இங்க வரும்பொழுது, இப்படி பிடிச்சு இழுப்பாரு. இப்படி வரும்பொழுது, ஐயா, புரியுதுங்களா?
சுவடி ஓதும் மைந்தன் :- பிடித்து அடிச்சு, அடிச்சு, இழுத்துனே வருவார்.
குருநாதர் :- அப்பனே, எது என்று புரிய, எதை என்று அறிய, அப்பனே, இவையும் கூட, அப்பனே, பின் அறிவில் வழியாகவே.
சுவடி ஓதும் மைந்தன் :- இதுவும் ஒரு அறிவியல் தான் வந்து… அந்த ஒரு விசையானது. இந்த லிங்கம் இருக்குறதுல வந்து விசையானது, வந்து என்ன ஆகும்? வந்து
அடியவர் :- கடிவாளம் மாதிரி,
சுவடி ஓதும் மைந்தன் :- கை போல மாறி, இழுத்து புடிச்சு இருக்கும்ன்றார். வந்து இதுவும்
அடியவர் :- வேகம் குறையறப்போ, வேகம் அதிகமாகும்.
குருநாதர் :- அப்பனே, இவ்வாறாக, அப்பனே, மீண்டும், அப்பனே, பின் எதை என்று கூற,
சுவடி ஓதும் மைந்தன் :- மீண்டும் 96.
குருநாதர் :- அப்பனே, சந்தர்ப்பத்தை தருகின்றேன். ஐந்து நிமிடங்கள்..
சுவடி ஓதும் மைந்தன் :- ஐந்து நிமிடம்… பரவாயில்லை.
அடியவர் :- ஐந்து நிமிடம், அனைவருக்கும் வாய்ப்பு என்னங்க அய்யா சொல்லணும்?
சுவடி ஓதும் மைந்தன் :- 96 இது என்ன பண்ணுவீங்கன்னு சொல்றாரு. இது வந்து
அடியவர் :- 96. நீங்க எப்படி வேணாலும்… ஒரு காம்பினேஷன்ல…. என்ன அர்த்தம் சொல்லுங்க 96க்கு அப்படின்றாரு…. 9+6… 6+9… அந்த டைரக்ஸன்ல யோசிங்க.
குருநாதர் :- அப்பனே, எது என்று புரிய, ஆறை, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் எவை என்று குறைந்த, அப்பனே, பின் நிச்சயம் சக்தி
சுவடி ஓதும் மைந்தன் :- ஆறு என்பது?
அடியவர் :- குறைந்த,
சுவடி ஓதும் மைந்தன் :- குறைந்த
அடியவர் :- சக்தி,
அடியவர் :- குறைந்த
சுவடி ஓதும் மைந்தன் :- சக்தி,
சுவடி ஓதும் மைந்தன் :- ( அது போலே எழுதினார்கள்)
சுவடி ஓதும் மைந்தன் :- சக்தி. ஒன்பது குறைந்த சக்தினா, இங்கிலீஷ்ல லோ எனர்ஜி,
இவ்விடத்தின் நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=35909
குருநாதர் :- அப்பா, பூஜ்ஜியத்தை எடுத்துவிடு.
சுவடி ஓதும் மைந்தன் :- ( 96 என்று எழுதியிருந்தார்கள். அதனில் 9 ல் உள்ள “0” அதனை நீக்கி விட்டார்கள். இப்போது 16 போல கட்சி அளித்தது….நேரலையை அவசியம் பார்க்கவும்…. )
===========================
# 16 வயது வரை… உங்கள் குழந்தைகளின் கல்வி ரகசியங்கள்…
===========================
குருநாதர் :- அப்பனே, எது என்று கூற, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் ஒரு மனிதனுக்கு, அப்பனே, நிச்சயம் 16 வயது வரை, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, ஏது என்று புரிய, அப்பனே, ஒன்றும் புரியாதப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த 16 வயசு வரையும் ஒருத்தருக்கு என்ன ஆகும் வந்து?
அடியவர் :- புரியாது.
சுவடி ஓதும் மைந்தன் :- குறைந்த எனர்ஜி, லோ எனர்ஜி வந்து இருக்கும். ஐயா, புரியுதுங்களா? ஒருத்தருக்கு வந்து 16 வயசு வரையும் என்ன வரும்? லோ எனர்ஜி, குறைந்த சக்தி, மனுஷனுக்கு, குழந்தைக்கு வந்து இருக்குமாம்.
குருநாதர் :- அப்பனே, இவ் குறைந்த சக்தியில், அப்பனே, நீங்கள் என்ன சொல்கின்றீர்களோ, அதுதான், அப்பனே, இவ் 16க்கு மேல்
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த குறைந்த சக்திகள்ல, நீங்க என்ன கத்து, ஒரு பசங்களுக்கு வந்து, நீங்க என்ன கத்துக்கொடுக்கிறீங்களோ, அதுதான்,
அடியவர் :- அதுதான் பிற்கால வாழ்க்கையில உங்களை வந்து செயல்படுத்தும்ன்றாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, புரியுதுங்களா?
அடியவர் :- 16 வயசு வரைக்கும் குழந்தைங்க மனசுல என்ன எண்ணத்தை பதிக்கிறோம்ன்றது முக்கியம்ன்றாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆமா…
https://youtu.be/q8Hs63mXjrc?t=35975
குருநாதர் :- அப்பனே, எது என்று புரிய அடுத்து, அப்பனே, எது என்று அறிய, எது என்று ஒன்பது.
சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்து, ஒன்பது இடு. இங்க “0” எடுத்துட்டோம். இந்த இதை வந்து… இந்த ஜீரோ இங்க இருக்குது வந்து ( தனியாக “0” என்று எழுதினார்கள் )
===========================
# 16 வயது வரை சிவபுராணத்தை சொல்லிக் கொடுத்துவிட்டால்… இறைவனை காணலாம்
===========================
குருநாதர் :- அப்பனே, ஏது என்று புரிய அப்பனே, நிச்சயம் தன்னில் இவ்வாறாக ஒரு 16 வயது எவை என்று புரிய, நிச்சயம் தன்னிலே கூட, சிவபுராணத்தை பின் சொல்லிக் கொடுத்துவிட்டால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது ஏது என்று புரிய…
குருநாதர் :- இறைவன், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட முடிவில்லாதவன் அப்பனே.
குருநாதர் :- பின் எதை என்று கூற, பூஜ்ஜியம் என்பேன் அப்பனே. அதாவது எது என்று கூறிய பின், நிச்சயம் இப் பூஜ்ஜியத்தில் இறைவனை காணலாம்.
அடியவர் :- சிவாய நம.
அடியவர் :- 16 வயசுல….
சுவடி ஓதும் மைந்தன் :- முடிவில்லாதவன்
அடியவர் :- சிவபுராணத்தை சொல்லிக் கொடுத்துரலாம்ன்றாங்க.
சொல்லிக் கொடுக்கணும்.
சுவடி ஓதும் மைந்தன் :- என்ன பண்ணலாம்?
அடியவர் :- இறைவன் முடிவில்லாதவன். வட்டத்துக்கு முடிவில்லை.
குருநாதர் :- அப்பனே, எது என்று அறிய. அப்பனே, பின் அதாவது 96. அப்பனே, திருப்பி இடு.
https://youtu.be/q8Hs63mXjrc?t=36030
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, 96 திருப்பி இடுனா எப்படிங்க ஐயா? 96, இது இப்படி 69. இப்படியும் போடலாம். வேற எப்படிங்க திருப்பி போடுறது?
அடியவர் :- ஐயா, இதை திருப்பி போட்டா ஆறு, இதை திருப்பி போட்டா ஒன்பது. அவ்வளவுதானே. வேற
சுவடி ஓதும் மைந்தன் :- ஓகேங்களா? ஐயா,
அடியவர் :- கரெக்ட்தான்.
சுவடி ஓதும் மைந்தன் :- இப்படி போட்டாதான் 96 தான் வருது.
அடியவர் :- 96, ஆறு, ஆறு, ஒன்பது. அவ்வளவுதான்.
சுவடி ஓதும் மைந்தன் :- திருப்பி போட்டா ஒன்பது ஆயிடுச்சு. இது கரெக்ட்.
குருநாதர் :- அப்பனே, எது என்று புரிய இன்னும் 19 வரை, அப்பனே, மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை தருகின்றான் இறைவன்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப…. ( 19 என்று எழுதினார் )
சுவடி ஓதும் மைந்தன் :- 19 வரை மீண்டும் ஒரு வாய்ப்பு தருகிறார்.
அடியவர் :- 96 தலைகீழ போடுங்க. திருப்பி, திருப்பி 69 ஆகுதா? அதுல அந்த முட்டையை எடுத்துடுங்க. எடுத்துட்டா? 19.
சுவடி ஓதும் மைந்தன் :- 19 மீண்டும் ஒரு அந்த லோ எனர்ஜி மீண்டும் வந்து என்ன பண்றாரு?
அடியவர் :- 16 லிருந்து இன்னொரு மூணு வருஷம்.
===========================
# LOVE - Low Energy
===========================
குருநாதர் :- அப்பனே, இதற்கு என்ன பதில்? அப்பனே, நிச்சயம் ஆங்கிலத்தும் இருக்கின்றது. அப்பனே,
சுவடி ஓதும் மைந்தன் :- ஆங்கிலத்தில் லோ எனர்ஜி. இதுக்கு என்ன பதில்? லோ எனர்ஜி. ( Low Energy என்று எழுதினார்கள் )
குருநாதர் :- அப்பனே, இதற்கு அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட இதற்கு என்ன பின் ஆங்கிலத்தில், அப்பனே, பல ஞானிகள் கண்டுபிடித்துதான் உள்ளார்கள். அப்பனே, பின் ஆங்கிலத்தில் பல ஞானிகள் இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே.
குருநாதர் :- இதில் தவறு செய்யாதே என்று அப்பனே. இதற்கு எவை என்று கூற, மனிதன் மாற்றிவிட்டான் அப்பனே.
குருநாதர் :- இதற்கு பெயர், அப்பனே, பின் எவை என்று அறிய அப்பனே, அதாவது விருப்பம்.
சுவடி ஓதும் மைந்தன் :- (LOVE) லவ் என்றாரு. எல் ஓ வி இ… லோ எனர்ஜி தான் லவ் என்றாரு.
அடியவர் :- சூப்பர்…… லோ எனர்ஜினா லவ்வாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- லவ்வாம். ஆங்கிலத்துல ஒரு ஞானி கண்டுபிடிக்கிறார். இது லோ எனர்ஜி தான்.
அடியவர் :- அதாவது அறியாத புரியாத வயதுல தான் காதல் வருதுன்னு சொல்றாங்க. இல்ல, அதைத்தான் குருநாதர் சொல்றறார்.
சுவடி ஓதும் மைந்தன் :- லோ எனர்ஜி சொல்றாரு. இது லோ லோ எனர்ஜி தான். லவ், லோ எனர்ஜி. லவ்.
===========================
# உங்கள் குழந்தைகள் காதல் வலையில் சிக்காமல் காக்கும் கவசம் - சிவபுராணம் ….
===========================
குருநாதர் :- அப்பனே, இதில் கூட, அப்பனே, நிச்சயம் இவ் 19, 20 அப்பனே, வயதுகளில் அப்பனே, தாய் தந்தையருக்கு மதிப்பு கொடுக்காமல், அப்பனே, ஒருவன் எது என்று அறிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, எது என்று அறிய, அப்பனே, சிக்காமல் இருக்க, இவ் சிவபுராணம் உதவுகின்றது.
அடியவர் :- சிவாய நம. சிவாய நம.
அடியவர்கள் :- ( கைதட்டல்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- சிவபுராணம் எதுக்கு உரைகிறது முதல்ல?
……….
……….
……….
சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்தவங்க மேல, உங்க அப்பா மேல லவ் பண்ணனும். அம்மாவை லவ் பண்ணனும். இறைவனை லவ் பண்ணனும். எல்லாம் நல்லது தெரிஞ்சுக்கணும். அதுக்குத்தான் ?
அடியவர் :- சிவபுராணம்.
சுவடி ஓதும் மைந்தன் :- சிவபுராணம் முதல்ல படிக்கணும். தேவைப்படுகின்றது.
===========================
# பெற்றோர்களே ! சொல்லிக்கொடுங்கள் சிவபுராணத்தை உங்கள் குழந்தைகளுக்கு இன்றே…தினமும் பலமுறை பாட வையுங்கள்…
===========================
குருநாதர் :- அப்பனே, எது என்று கூற, அப்பனே, இவ்வாற்றலை ஒழுங்காக பயன்படுத்தாத ஆணோ அல்லது பெண்ணோ வாழ்க்கையில் சிக்கிக்கொண்டு தவித்து விடுகின்றார்கள் என்பேன் அப்பனே.
அடியவர் :- சிவாய நம. சிவாய நம.
சுவடி ஓதும் மைந்தன் :- அவ்வளவுதான் முடிஞ்சது. ஐயா, வாழ்க்கை
அடியவர் :- இந்த 19 வயசுக்குள்ள,
சுவடி ஓதும் மைந்தன் :- 19, 20 வயசுக்குள்ள,
அடியவர் :- 20 வயசுக்குள்ள இந்த சிவபுராணத்தை சரியா பயன்படுத்தல. அப்படின்னா எல்லா பிரச்சனைகளும் சிக்கி அழிஞ்சு.
சுவடி ஓதும் மைந்தன் :- லோ எனர்ஜில வந்து… லோன்னா என்னது?
அடியவர் :- லவ்…
சுவடி ஓதும் மைந்தன் :- லவ். ஆணோ பெண்ணோ லவ்ல வந்து இறங்கி, அவங்க வாழ்க்கையை க்ளோஸ் அழகாக வந்து…. யாரு க்ளோஸ் பண்ணிக்கிறாங்க வந்து?
அடியவர் :- அவங்க வாழ்க்கையை அவங்களே க்ளோஸ் பண்ணிப்பாங்க.
===========================
# உங்கள் 59 வயதில் ….
===========================
https://youtu.be/q8Hs63mXjrc?t=36203
குருநாதர் :- அப்பனே, எது என்று புரிய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட மீண்டும் அப்பனே, இவை என்ற, அப்பனே, பின் அதாவது அறிந்து கூட 40 வருடங்கள் கழித்து தான் அப்பனே, பின் அதே இடத்திற்கு பூமி வருமப்பா.
அடியவர் :- சிவாய நம.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, அது திருப்பி என்ன பண்ணும்?
சுவடி ஓதும் மைந்தன் :- 40 வருடங்கள் ஈக்குவல் என்ன இருக்கணும்? 59. அப்போ, திரும்பியும் அந்த இடத்துல வந்து வந்துவிடும்.
குருநாதர் :- அப்பனே, இவ் அன்பு 50 அப்பனே, பின் ஒன்பது வயதில் (59) , அப்பனே, அப்பொழுதுதான் யோசிப்பான்.
குருநாதர் :- ஐயயோ, பின் இறைவன் மீது காதலிக்கவில்லை.
குருநாதர் :- பின் அம்மாவும் காதலிக்கவில்லை.
குருநாதர் :- எது என்று புரிய. நிச்சயம் அப்பாவையும் காதலிக்கவில்லையே.
குருநாதர் :- இப்படி ஆகிவிட்டதே.
குருநாதர் :- அனைத்தும் நோய் வந்துவிட்டதே எது என்று புரிய.
குருநாதர் :- அப்பொழுதுதான் யோசிப்பான். எதற்காக வந்தது என்றெல்லாம் அப்பனே, நோய்கள், நொடிகள், கஷ்டங்கள் என்றெல்லாம்.
அடியவர் :- மனிதன் எப்போ அந்த இயலாத வயது வருது பாருங்க. அப்பதான் அந்த ஞானம் எல்லாம் வரும்ன்றாரு. ஐயயோ,
சுவடி ஓதும் மைந்தன் :- அப்பதான் 59,
அடியவர் :- 59, 60 வயசுல .
குருநாதர் :- அப்பனே, இயற்பியல் வேதியியல், அப்பனே, அனைத்தும் உரைக்கின்றேன் அப்பனே, நிச்சயம் தன்னை கூட.
குருநாதர் :- புரிந்து கொண்டால், பிழைத்துக் கொள்ளுங்கள் கலியுகத்தில்.
குருநாதர் :- புரியாவிடில், கஷ்டத்தோடு வாழ்ந்துட்டு செல்லுங்கள். அவ்வளவுதான்.
அடியவர் :- அம்மா, உங்களுக்கெல்லாம் ஒரு வாய்ப்பு தராரு குருநாதர். தயவு செஞ்சு இந்த உண்மைகளை புரிஞ்சுக்கோங்க. புரிஞ்சுகிட்டா பொழைச்சிப்பீங்க. இல்லைன்னா, கஷ்டத்தோட வாழ்ந்து கடைசில யோசிப்பீங்களாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- எந்த வயசுல யோசிப்பீங்களாம்?
மற்ற அடியவர் :- 60 வயசு…
சுவடி ஓதும் மைந்தன் :- 59, 60 வயசு,
அடியவர் :- 50 வயசு, 60 வயசு தான் யோசிப்பீங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- என்னடா இது? வாழ்க்கையோட உண்மையை பத்தி தெரிஞ்சுக்காம ஜாலியா இருந்தோம்… ஆட்டம் பண்ணோம், குடிச்சோம், கொண்டாடினோம், லவ் பண்ணோம். அந்த நேரத்துல இறைவனை மறந்துட்டோம். நரம்பு சுருங்கும்போது, நரம்பு சுருங்கும்போது என்ன ஆகுமாம்?
அடியவர் :- ஒன்னும் பண்ண முடியாது.
===========================
# எச்சரிக்கை:- 59 வயது முதல் 80 வயது வரை ….
===========================
குருநாதர் :- அப்பனே, மீண்டும், அப்பனே, எதை என்று கூற இதிலிருந்து அப்பனே, ஆரம்பமாகிவிடும் , அப்பனே, 80 அப்பனே, நிச்சயம்
சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்து திருப்பியும் வரதுக்கு என்ன ஆகும்? வந்து 80 ஆயிடும்.
குருநாதர் :- அப்பனே, இதற்குள்ளே, அப்பனே, எதை என்று கூற நிச்சயம் மரணம் ஏற்படும் அப்பா ஒருவனுக்கு சொல்லிவிட்டேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, இந்த வயதிலிருந்து 59ல தொடங்கி, திருப்பியும் இந்த பூமி வந்து அதே திருப்பியும் இந்த சுற்றத்துக்கு வந்து, அது சொல்லுவார். காலநிலை சொல்லுவார். இப்பதான் ஒன்னொன்னா சொல்லி இருக்காரு. இந்த 80க்குள்ள என்ன ஆகுமாம்? வந்து ?
சுவடி ஓதும் மைந்தன் :- மரணம் ஏற்பட்டுவிடும்.
குருநாதர் :- ஆனாலும், அப்பனே, பின் சொன்னேனே… பின் அது நிச்சயம் அப்படியே இருக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- சென்சார். அப்ப, என்ன சொன்னாரு? அது என்ன ஆகும்?
ஒரு அடியவர் :- அது அப்படியே தான் இருக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அது அப்படியே தான் இருக்கும்.
குருநாதர் :- அப்பனே, எது என்று அறிய , எப்படி மீண்டும் அப்பனே, பின் நிச்சயம் ஒருவர், அப்பனே, ஐந்து வருடமோ, பத்து வருடமோ, எதை என்று கூற மீண்டும் அப்பனே, அவ் உடம்பு எவை என்று சுற்றுகின்ற பொழுது, அந்நேரத்தில் வருகின்ற பொழுது, இத் திரை ஈர்த்துக்கொள்ளும். அப்பா,
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த சென்சார் திருப்பி என்ன ஆகும்? வந்து இது ஒரு ரவுண்டு 80-ல, 79-ல, 70-ல இறக்குறாங்கன்னா, இது ஒரு ஐந்து, இது ஒரு ஐந்து வருடங்கள்ல எனர்ஜி இங்க வரும் பொழுது, திருப்பி என்ன பண்ணுவாருன்னா,
அடியவர் :- சென்சார் வந்து திருப்பி ஒரு சுத்தி வர்றப்போ,
சுவடி ஓதும் மைந்தன் :- மெமரி உங்களுக்கு என்ன ஆயிருக்கும்?
அடியவர் :- அடுத்து ஒரு உடம்பு எடுத்துரும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்து உடம்பு எடுத்துரும்.
அடியவர் :- ஒரு பொம்மை.
===========================
# பிறந்த குழந்தை ********* ஆ !!!!!! ********* என்று ஏன் கத்தும்?
===========================
https://youtu.be/q8Hs63mXjrc?t=36365
குருநாதர் :- அப்பனே, பிறக்கின்ற பொழுது, அப்பனே, குழந்தைக்கு தெரியும். ********* ஆ !!!!!! ********* என்று கத்தும். அப்பனே, இதற்கு என்ன அர்த்தம்?
அடியவர் :- ( சிரிப்புடன் ) ஐயயோ,
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயயோ, திரும்பியும் பொறந்துட்டோமேடா. ********* ஆ !!!!!! ********* அப்பா, என்னதான் நடக்க போகுது? என்ன
அடியவர் :- குழந்தை முதல் பிறந்த உடனே ********* ஆ !!!!!! ********* என்று கத்துது பாருங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- அம்மா தெரியுமா யாருக்காவது? குழந்தை பெத்தவங்க எல்லாம் சொல்லுமா? ஆமான்னு… அகத்தியர் சொல்ல எனக்கும் தெரியாது ********* ஆ !!!!!! ********* னு கத்துமா?
அடியவர் :- ஐயயோ, வந்து பிறந்துட்டேனே. இந்த ஆன்மா கத்துமாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- கத்துமாம்…. அப்புறம் என்ன பிரயோஜனம்பா?
…….
…….
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, புரியுதுங்களா?
அடியவர் :- இறைவன் வாய்ப்பு கொடுக்கிறாரு. புரிஞ்சுக்கோங்க.
குருநாதர் :- அப்பனே, அதனால்தான் மறைமுகமாக, அப்பனே, நிச்சயம் ஆங்கிலத்தில், அப்பனே, ஒரு ஞானி இவ்வாறாக, நிச்சயம் தன்னில் கூட மறைமுகமாக, அப்பனே, ஒரு எழுத்தை சேர்த்து விட்டான். அப்பனே, அவ்வளவுதான். இதற்கே பொருள் தெரியவில்லை. அப்பனே, பின் எவை என்று கூற, அப்பனே, இழவுக்கு….
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த லவ்வுக்கே பொருள் தெரியல.
இழவு என்றார் அகத்தியர்.
அடியவர் :- லவ் என்றது இழவாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- இழவாம்….. இந்த லவ்வுக்கே பொருள் தெரியல.
அடியவர் :- லைப் முடிச்சிருவோம்ன்றாரு.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, ஒரு அறிஞர், ஒரு ஞானி என்ன பண்ணிருக்காரு? இந்த லவ்ல வந்து பார்க்கிறான். எத்தனை பேர் பொழைச்சிக்கிறாங்கன்னு நடுவுல ஒரு எழுத்து சேர்த்து விட்டாராம். ஆக, மட்டும் இது வந்து லோ எனர்ஜி.
சுவடி ஓதும் மைந்தன் :- ( “Lo E” என்று எழுதினார்கள். அதாவது low energy )
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, மனுஷன் இதை உணர்ந்துக்கணும். எப்படி உணர்ந்துக்கிறான் சொல்றதுக்கு இங்க வி போட்டார். முடிஞ்சு போச்சு.
சுவடி ஓதும் மைந்தன் :- ( Lo “V” E என்று எழுதினார்கள். அதாவது “LoVE”)
குருநாதர் :- அப்பனே, இறைவனிடத்தில் செல்ல வேண்டுமென்றால், அனைத்தும் அங்கங்கு அப்பனே, நிச்சயம் தன்னில் கூட நீங்கள் பேருந்துகளில் செல்கின்றீர்கள் அல்லவா? அப்பனே, அங்கங்கு எதற்கு? அப்ப, நிச்சயம் தன்னில் கூட அப்பனே, மட்டை போட்டு இருக்கின்றார்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- மட்டைன்னா, ஸ்பீட் பிரேக் எதுக்கு போட்டுக்கிறாங்க? அங்கங்க நீங்க போறதுல கார்ல போறீங்களா? எதுக்கு மட்டை போட்டுக்கிறாங்க? ஐயா, ஸ்பீட் பிரேக் பத்தி சொல்றாருங்க. ஐயா, எதுக்குயா?
அடியவர் :- ஸ்பீட் பிரேக்கர் போட்டு இருக்கிறதை பத்தி சொல்றாங்க குருநாதர்.
குருநாதர் :- அப்பனே, இறைவன் அப்படித்தான். அப்பா, நிச்சயம் தன்னில் கூட ஒரு வாய்ப்பை கொடுக்கின்றேன். அதில் திருந்திக்கொள், திருந்திக்கொள் என்றெல்லாம் , அங்கங்கு மட்டை இடுகின்றான். ஆனாலும், மனிதனுக்கு புரியவதே இல்லை.
அடியவர் :- எங்கெல்லாம் வேகம் அதிகமாகுதோ, ஸ்பீட கண்ட்ரோல் பண்றதுக்கு இறைவன் ஒரு தடுப்பு போடுறாரு.
சுவடி ஓதும் மைந்தன் :- டேய், உன் நிலைமை சரியில்ல.
அடியவர் :- வாய்ப்பு கொடுக்கிறேன். திருந்திரு….
சுவடி ஓதும் மைந்தன் :- திருந்திரு…
அடியவர் :- இல்ல அப்படின்னா, சிக்கிப்ப. அவ்வளவுதான். எங்கயாவது போய் இடிச்சிப்ப.
குருநாதர் :- அப்பனே, இவ்வாற்றலை மாற்ற அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே, ஆற்றல் தேவைப்படுகின்றது என்பேன் அப்பனே. நிச்சயம் இவையும் சொல்கின்றேன் அப்பனே. இப்பொழுது ஆற்றலை பெருக்க, அப்பனே, ஏதாவது ஒரு பைரவரின் பாடலை பாடு.
சுவடி ஓதும் மைந்தன் :- ( சில அறிவுரைகள் வழங்கினார்கள் )
ஓதுவார் அடியவர் :- சிவா, சிவபுராணம் வந்து பார்த்தீங்கன்னா, மொத்தம் புத்தகத்துல 95 லைன் தான் இருக்கும். சிவபுராணம் வந்து பார்த்தீங்கன்னா, புத்தகத்துல 95 லைன் தான் இருக்கும். ஆனா அகத்தியப் பெருமான் 96 சொல்லி இருக்கிறார். அது என்னன்னு இப்ப ஐயா பார்த்தாரு. பார்த்தா, சிவபுராணம் படிக்கிறதுக்கு முன்னாடி, தொல்லை இரும்பிறவி சூடும் தலைநீக்கி அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே எல்லை மறுவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன் திருவாசகம் எனும் தேன். அப்படின்னு முதல் அந்த நாலு வரிகளை படிச்சிட்டு தானே நம்ம சிவபுராணம் படிப்போம்.
===========================
# “மாணிக்கவாசகர் பெருமான்” - உலகின் சிறந்த பாடகர்
===========================
https://youtu.be/q8Hs63mXjrc?t=36963
குருநாதர் :- அப்பனே, எது என்று புரிய . அப்பனே, மூச்சு விடாமல், அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- மூச்சு விடாமல் பாடி இருக்காரு அவர் வந்து. எப்படி?.....
குருநாதர் :- அப்பனே, எது என்று அறிய, இது ஒரு எவை என்று கூட நிச்சயம் சொல்ல. அடுத்து, நிச்சயம் தன்னில் கூட இவ் பாடல் எவை என்று கூற பின் எவை என்று மூச்சு விடாமல்
சுவடி ஓதும் மைந்தன் :- இதை முடிச்சிட்டு ஒரு மூச்சு விட்டார். ஐயா, புரியுதுங்களா? இதை முடிச்சிட்டு ஒரு மூச்சை விட்டாரு. அடுத்து, நமச்சிவாய என்றது வந்து மூச்சு விடாமல் கடைசி வரை பாடுறார்.
குருநாதர் :- அப்பனே, இவனைப் போன்று பாடகன் யார் இங்கு?
சுவடி ஓதும் மைந்தன் :- மாணிக்கவாசகர் பாடல் பாடல். ஐயா, இந்த உலகத்தில் ஆளு கிடையாது. அப்பனா, ஐயா, மூச்சை புடிச்சு பார்க்கிறோம். மூச்சு விடாம, நமச்சிவாய. ஃபர்ஸ்ட் என்னது? தேன், அது முடிச்சிட்டாரு. அடுத்து என்ன வந்தாரு?
அடியவர் 4 :- மூச்சு விட்டுட்டு, நமச்சிவாய ஆரம்பிச்சு.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆரம்பிச்சு, அதுல வந்து,
குருநாதர் :- அப்பனே, எவை என்று அறிய அப்பனே, இவ்வாறாக, அப்பனே, நிச்சயம் மாணிக்கவாசகன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பல ஆண்டுகள் அப்பனே, நிச்சயம் பின் இதற்கு பொருள் புரிந்தால் என்று…. மூச்சை கூட விடவில்லை என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, என்ன தெரியுமா புரியுது. என்ன சொல்றாரு தெரியுமா இது? பல வருடங்களா, நமச்சிவாய வாழ்க. நாதன் தாள் வாழ்க சொல்லிட்டு, அவர் மூச்சை விடல.
சுவடி ஓதும் மைந்தன் :- பல ஆண்டுகள் சிந்தித்து, திருப்பி என்ன பண்ணாரு? அப்புறம்தான் அடுத்த வரி. அப்பா,
குருநாதர் :- அப்பனே, இதனால்தான், அப்பனே, பின் நீண்டு அவன் பெயர் இருக்கின்றது.
சுவடி ஓதும் மைந்தன் :- உலகம் அழிவரையும், சிவபுராணம் அழியாது. அவர் பெயரும், அவர் பெயரும் அழியாது. அப்ப, ரெண்டு வார்த்தை. ஐயா, புரியுதுங்களா? நமச்சிவாய, நாதன் தாழ் நிறுத்திட்டாரு. அடுத்து என்ன பண்ணாரு?
குருநாதர் :- எது என்று அறிய, இன்னும் இவ் ஞானியைப் பற்றி வருங்காலத்தில் சித்தர்கள் உரைப்பார்கள். சிறிது சிறிதாக தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் உங்களுக்கு அவ் சக்தி இல்லை. அவ் சக்தி இல்லாமல் சொன்னால், நீங்கள் பொய் என்று சொல்லிவிடுவீர்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால கொஞ்சம் கொஞ்சம் தான் சொல்லுவாராம். அந்த சக்தி இருந்தா மட்டும்தான், நீங்க வந்து சொல்றதை புரிஞ்சுக்க முடியும். சக்தி இல்லைன்னா, அது பொய்ன்னு சொல்லிட்டு போயிட்டே இருப்பீங்களாம்.
காளி அன்னை உபாசகர் :- ( காசி பைரவர் பாடல் பாட ஆயத்தம் ஆனார்கள் ….)
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, நெகட்டிவ் எனர்ஜி அதிகமா இருக்குது. இவர் பாடுறாரு. எல்லாம் போகட்டும். அண்ணாமலையாரை வேண்டிக்கோங்க. ஐயா, கெட்டதெல்லாம் போட்டோம். நல்லதே நடக்கட்டும்னு.
===========================
# காசி - காலபைரவாஷ்டகம் பாடல்
===========================
காளி அன்னை உபாசகர் ( காசி பைரவர் பாடல்) நேரலை :-
https://youtu.be/q8Hs63mXjrc?t=37128
காளி அன்னை உபாசகர் :- ஓம் அகஸ்தீஸ்வர நமஹ. சக மக தாத பாருங்க. ஐயா, சகம சரி. சகம தான தமக சகம மரத சகம
https://youtu.be/q8Hs63mXjrc?t=37255
தேவராஜ ஸேவ்யமான பாவனாங்க்ரி பங்கஜம்
வ்யாலயஜ் ஞசூத்ர மிந்துசேகரம் க்ருபாகரம்
நாரதாதியோகிப்ருந்த வந்தினம் திகம்பரம்
காசிகா புராதி நாத கால பைரவம் பஜே 1
……………
……………
……………
……………
……………
……………
ஓம் ஸ்ரீமத் சங்கராச்சாரிய கிருதோ ஸ்ரீ கால பைரவாஷ்டக ஸ்தோத்திர மந்திர பாடம் ஸ்ரீ அகஸ்தீஸ்வரார்ப்பணம் அஸ்து…ஓம் காளி !!!!!!!!!
காளி அன்னை உபாசகர்:- ( காலபைரவாஷ்டகம் பாடி முடித்தவுடன் …..)
குருநாதர் :- அப்பனே அறிந்தும் எவையென்று கூற அப்பனே அனைவருக்குமே அப்பனே ஆற்றல் இன்னும் அப்பனே நிச்சயம் தன்னில் இன்னும் ஏற்றிக் கொடுக்க அப்பனே நிச்சயம் தன்னில் கூட பாடலை பின் அதாவது கர்ஜிக்கும் எவை என்று கூற பின் எது என்று கூறிய முறையில் பாடு
சுவடி ஓதும் மைந்தன் :- இன்னும் உங்களுக்கு ஆற்றல் ஏத்தணும் அதனால வந்து ஒரு கட்சிக்கும் முறையில பாட சொல்றாரு
அடியவர் 7:- ( அதனை மொழிபெயர்த்து காளி அன்னை உபாசகரிடம் எடுத்துரைத்தார்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா எனர்ஜி இதுதான் இப்படித்தான் பண்ண முடியும் நீங்க கெட்டதையே பார்த்திருந்தா என்ன பண்ணுது? ஒரு டிவி பாக்குறீங்க அழுகை அழுகை யா வருது…. அதேதான். ஓகேங்களா. நீங்க எதை வந்து நினைக்கிறீங்களோ… எனர்ஜி ஏத்துனாதான் நீங்க சொல்றது புரியும்ன்ற ரகசியம் வந்து
குருநாதர் :- அப்பனே பல வகைகள் கூட 95 96 அப்பனே 97 98 அவரவர் அப்பனே விருப்பப்படி அமைத்துக் கொள்கிறார்கள்
சுவடி ஓதும் மைந்தன் :- சிவபுராணத்தை 95 96 97 98 அவரவர் விருப்பத்துக்கு
குருநாதர் :- ஆனாலும் அப்பனே எப்படி பார்த்தாலும் இப்படித்தான் வரும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த கால்குலேஷன் இப்படி போட்டாலும் இப்படி வந்தாலும் இப்படித்தான் வரும்பா
குருநாதர் :- அப்பனே இன்னும் பின் நிச்சயம் இன்னும் விவரிக்கின்றேன் பொறுத்திரு மகனே.
சுவடி ஓதும் மைந்தன் :- இன்னும் அதை பற்றி நானு விவரமா சொல்றேன்பா. 95 கொண்டு வாங்க 96 97 98 99 எல்லாம் போட்டாலும் இப்படித்தான் கால்குலேஷன் வரும் அது இன்னும் நான் பண்ணி உங்களுக்கு காமிக்கிறேன்றாரு அதனாலதான் சந்தேகம் கேட்கணும்ன்றது அகத்தியர் வந்து ஏன்னா நமக்கு தெரியாது எல்லாம் வந்து
காளி அன்னை உபாசகர்:- ( ….அங்குள்ள அடியவர்களுக்கு சில உபதேசங்கள் )
साथ में संकीर्तन करिए सब लोग ओम नमः शिवाय का संकीर्तन करेंगे मैं जैसे जैसे बोलूंगा वो सब बोले
(எல்லாரும் சேர்ந்து சங்கீர்த்தனம் செய்யுங்கள்.‘ஓம் நமசிவாய ’ என்று நான் சொல்லும் போதெல்லாம், நீங்கள் எல்லாரும் அதையே சொல்லுங்கள். )
அடியவர் 7:- ( அதனை மொழிபெயர்த்து காளி எடுத்துரைத்தார்கள் )
இறைவனுடைய திருநாமங்களை சொல்லும் பொழுது அதைப் பின்பற்றி நீங்களும் தொடர்ந்து சொல்ல வேண்டும் என்று கூறுகின்றார்
===========================
# “ஓம் நமசிவாய” - நாம பாராயணம் அங்கு ஓங்கி ஒலித்தது…..
===========================
காளி அன்னை உபாசகர்:- ஓம் நமசிவாய ஹர ஹர ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஹர ஹர
அடியவர்கள் :- ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஹர ஹர ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய ஹர ஹர
…………….
……………
……………
அடியவர் 7:- அனைவரும் சேர்ந்து நன்றாக ஒலி எழுப்புங்கள்
https://youtu.be/q8Hs63mXjrc?t=38264
ஓம் நமசிவாய.
நம பார்வதி பதயே ஹர ஹர மகாதேவா
நம பார்வதி பதயே ஹர ஹர மகாதேவா……
கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( ஒன்று கூடி இறைவனை அழைத்தனர் )
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
காலம் வெல்லுரானாய் போற்றி
பராய்த்துறை மேவிய பரனே போற்றி
அண்ணாமலை எம் அண்ணா போற்றி
அண்ணாமலை கடலே போற்றி
காவாய் கனகத் திரளே போற்றி
கைலை மலையானே போற்றி போற்றி
எங்கள் கைலை மலையானே போற்றி போற்றி
கைலை மலையானே போற்றி போற்றி
எங்கள் கைலை மலையானே போற்றி போற்றி.
( இதனை தொடர்ந்து வேல் பூசை வாக்குகள் ஆரம்பமானது. சித்தன் அருள் - 2241 - வேல் பூஜை வாக்கு! )
===========================
# சுவடி ஓதும் மைந்தன் நிறைவு வாக்குகள்
===========================
https://youtu.be/q8Hs63mXjrc?t=41866
சுவடி ஓதும் மைந்தன்:- வாங்கிட்டு, எல்லாம் அவ்வளவு சந்தோஷமா. இறையருள் பெற்று, போங்க. வாங்கிட்டு, நல்ல இறையருள் பெற்று, அண்ணாமலை அம்மையாரை வந்து நல்லா அருளாசிகள் கொடுத்துட்டோம். உங்கள் விருப்பங்கள் எல்லாம் வந்து, உங்கள் முதல்ல வந்து சில வியாதிகள், சில மனக்கஷ்டங்கள் போகட்டும். அப்புறம் ஈஸியா அது வந்து, வர்றது வந்துரும், வந்து. அதையே வந்து போக முடியலன்றார் வந்து. அதனால, அகத்திய பெருமானே, எல்லாருக்கும் சித்தர்களுக்கும் வந்து வேண்டிக்கிறோம் வந்து. ஐயா, எல்லாரும் வேண்டிக்கோங்க வந்து. நல்லதே நடக்கும் எல்லாருக்கும். வாங்கிட்டு, அகத்தியர் என்னென்ன சொல்றாரோ அதெல்லாம் செய்யுங்க.
===========================
# அடுத்த கூட்டுப் பிரார்த்தனை - திரிசூலம் தொடர்பான வாக்குகள்…
===========================
சுவடி ஓதும் மைந்தன்:- அடுத்த திரிசூலத்தை வச்சு, அடுத்த முறை எக்ஸ்பிளைன் பண்ணுவார் வந்து, உலகத்தை வச்சு. அதனால இதெல்லாம் பயன்படுத்திக்கோங்க. நாலு பேருக்கு வந்து, உங்கள் ஆற்றலை ஏறிக்கிச்சுன்னா, நாலு பேருக்கு நீங்க நல்லதை செய்வீங்க வந்து. அந்த நல்லது செஞ்ச நல்ல செய, அப்படியே அப்படியே போயிட்டே இருக்கும். அவ்வளவுதான். சரிங்களா? சந்தோஷம்ங்க ஐயா, சந்தோஷம்.
……………………
……………………
===========================
# மூகாம்பிகை அம்மையின் காலடியில் வைத்த காசு…..
===========================
சுவடி ஓதும் மைந்தன்:- ஐயா, கொஞ்சம் பொறுங்க. மூகாம்பிகை அம்மையின் காலடியில் வைத்த ஒரு காசு உங்களுக்கு கிடைக்கும். அதை என்ன பண்ணுங்கன்னா, பூஜை ரூம்ல வச்சிருங்க. போதும். ஓகேங்களா? பூஜை ரூம்ல வச்சிருங்க வந்து. இதை வந்து படிக்கும் பொழுது, பூஜை ரூம்ல வச்சிருங்க. அடுத்தடுத்து அகத்தியர் உங்களுக்கு வந்து சில விஷயங்கள் எல்லாம் சொல்வாரு. எல்லாருக்கும் சொல்லுங்க. அவங்களும் பயன்பெறட்டும். உங்களால வந்து. சரிங்களா?
சுவடி ஓதும் மைந்தன்:- நல்லது செஞ்சுகிட்டே இருப்போம்.
===========================
அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 28/06/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த 11 வது சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை அதனில் உரைக்கப்பட்ட வாக்குகள் நிறைவு அடைந்தது.
===========================
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)

No comments:
Post a Comment