​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 4 December 2021

சித்தன் அருள் - 1048 - அந்தநாள் >> இந்தவருடம் இரண்டாம் பூஜை - கோடகநல்லூர்!



வணக்கம்! அடியவர்களே!

கோடக நல்லூர் பிரஹன் மாதவ சுவாமிக்கு அகத்தியர் பெருமான் செய்கிற இரண்டாவது அபிஷேக பூஜை இந்த மாதம் 12ம் தியதி, ஞாயிற்று கிழமை காலை 10 மணிக்கு  நடை பெறுகிறது.

"என் அனைத்து சேய்களும் பங்கு பெறும் விதமாக அமய வேண்டும்" * என அவர் விருப்பம்.

திரு.ராகேஷ், தேடல் உள்ள தேனீக்கள் குழு அகத்தியர் அடியவர் முன் நின்று இந்த பூசையை நடத்துகிறார். அவர் தொடர்பு எண்ணை கீழே தருகிறேன்.

+917904612352

அனைவரும் தொடர்பு கொண்டு பங்கு பெற்று உழவாரப் பணி செய்து குருவருள் பெற்றுக் கொள்ளுங்கள்.

மற்றவை பின்னர் பார்ப்போம்.

ஶ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்.

சித்தன் அருள்.........தொடரும்!