அடியேனுடைய நண்பர், அகத்தியர் அடியவர் ஒருவர், அனுப்பித் தந்த "அகத்தியர் வாக்கை" உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். "கலியின்" பிடியில் மாட்டி உழல்வதை தவிர்த்து, இங்கு கூறப்பட்டுள்ள நல் உரையை மனதுள் ஏற்றி நலமாய் வாழ வேண்டிக்கொள்கிறேன்.
கலி முற்றி விட்டது என்பதற்கு என்ன அடையாளம்?
கலி என்றால் துன்பம் என்று ஒரு பொருள். அலுப்பிலும், சலிப்பிலும், விரக்தியிலும் ஒரு மனிதன் கூறுவது “கலி முற்றி விட்டது” என்று.
கலி காலம் என்பது தனியான ஒரு காலம் அல்ல. த்வாபர யுகத்திலும், திரேதா யுகத்திலும் கலி இருந்தது. எல்லா காலத்திலும் உண்டு. பஞ்சபாண்டவர்கள் எந்த காலம்? அங்கே பலர் அறிய ஒரு பெண்ணை துகில் 'உரியவில்லையா?எனவே.எல்லா காலத்திலும், மனிதனிடம் உள்ள தீய குணங்கள் வெளிப்பட்டு கொண்டுதானிருக்கும். அதற்கு ஆதரவாகத்தான் அசுர சக்திகள் எப்போதும் செயல்பட்டுக் கொண்டேதான் இருக்கும். அதனால்தான் தவறான வழியில் செல்பவர்களுக்கு, செல்வம் அதிகமாக சேர்வதற்கு அந்த தீய தேவதைகள் உதவி செய்கின்றன. நாங்கள் அவ்வாறு செய்வதில்லை. அதனால்தான் நல்வழியில் செல்பவர்கள் குறைவாக இருக்கிறார்கள். உடனடி லாபம், ஆதாயம் பெற, தீய வழியில் செல்லக் கூடாது என்று நாங்கள் பலமுறை கூறுகிறோம். எனவே,
இந்த நல்ல எண்ணங்களும், நல்ல செய்கைகளும், எத்தனை துன்பங்கள்.
இருந்தாலும், நன்மைகளை விட்டு விடாமல் நல்லவனாக வாழ வேண்டும் என்ற உறுதி ஒரு மனிதனிடம் இருக்க, இருக்கத்தான், அந்த தீய சக்தியின் அட்டூழியங்கள் குறையும். இல்லை என்றால் “கலி முற்றி விட்டது.கலி காலத்தில் இப்படித்தான் வாழ வேண்டும்” என்று இவனாகவே வேதாந்தம் பேசி தவறு மேல் தவறு செய்து கொண்டே போனால் , முதலில்.
அது இன்பத்தை காட்டி. முடிவில் முடிவில்லா துன்பத்தில் ஆழ்த்தி விடும். எனவே கலி முற்றி விட்டது என்பது எப்போதுமே பேசப்படக்கூடிய ஒரு வழக்கு சொல்தான்.
சத்யம் பேசுவது எளிது என்றால், இந்த உலகிலே அத்தனை மனிதர்களும் சத்தியம் பேசுவார்களே. ஒரு விஷயம் எப்பொழுது சிறப்பு பெறுகிறது?
தங்கத்திற்கு ஏன் அத்தனை மதிப்பு? குறைவாக கிடைப்பதால்தானே?அப்படி, எல்லோராலும் எளிதில் பின்பற்ற முடியாத ஒரு கொள்கை, ஒரு குணம். அதுதான் உயர்ந்ததாக இருக்கிறது. எனவே அந்த சத்யத்தை கடினபட்டுத்தான் நாம் பின்பற்றவேண்டும். எனவே சத்யமும் பேச வேண்டும். இடர்பாடும் இருக்க கூடாது என்றால். அதற்கு வாய்ப்பு இல்லை. இருந்த போதிலும் கூட, நன்மையை கருதி கூறப்படும் சத்யத்திற்கு மாறான விஷயங்கள், பாவமாக கருதப்பட மாட்டாது. அது சுயநல நன்மையாக இருக்க கூடாது. "பொதுநல" நன்மையாக இருக்க வேண்டும்.
இதை சேய்கள் உணர்ந்து, அப்படியே உலகில் வாழ்ந்து வர ஆசிகள்.
சித்தன் அருள்................ தொடரும்!
