​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Tuesday, 7 April 2020

சித்தன் அருள் - 856 - அகத்தியப்பெருமானின் அருள் வாக்கு!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அடியேனுடைய நண்பர், அகத்தியர் அடியவர் ஒருவர், அனுப்பித் தந்த "அகத்தியர் வாக்கை" உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். "கலியின்" பிடியில் மாட்டி உழல்வதை தவிர்த்து, இங்கு கூறப்பட்டுள்ள நல் உரையை மனதுள் ஏற்றி நலமாய் வாழ வேண்டிக்கொள்கிறேன்.

கலி முற்றி விட்டது என்பதற்கு என்ன அடையாளம்‌?

கலி என்றால்‌ துன்பம்‌ என்று ஒரு பொருள்‌. அலுப்பிலும்‌, சலிப்பிலும்‌, விரக்தியிலும்‌ ஒரு மனிதன்‌ கூறுவது “கலி முற்றி விட்டது” என்று.

கலி காலம்‌ என்பது தனியான ஒரு காலம்‌ அல்ல. த்வாபர யுகத்திலும்‌, திரேதா யுகத்திலும்‌ கலி இருந்தது. எல்லா காலத்திலும்‌ உண்டு. பஞ்சபாண்டவர்கள்‌ எந்த காலம்‌? அங்கே பலர்‌ அறிய ஒரு பெண்ணை துகில்‌ 'உரியவில்லையா?எனவே.எல்லா காலத்திலும்‌, மனிதனிடம்‌ உள்ள தீய குணங்கள்‌ வெளிப்பட்டு கொண்டுதானிருக்கும்‌. அதற்கு ஆதரவாகத்தான்‌ அசுர சக்திகள்‌ எப்போதும்‌ செயல்பட்டுக்‌ கொண்டேதான்‌ இருக்கும்‌. அதனால்தான்‌ தவறான வழியில்‌ செல்பவர்களுக்கு, செல்வம்‌ அதிகமாக சேர்வதற்கு அந்த தீய தேவதைகள்‌ உதவி செய்கின்றன. நாங்கள்‌ அவ்வாறு செய்வதில்லை. அதனால்தான்‌ நல்வழியில்‌ செல்பவர்கள்‌ குறைவாக இருக்கிறார்கள்‌. உடனடி லாபம்‌, ஆதாயம்‌ பெற, தீய வழியில்‌ செல்லக்‌ கூடாது என்று நாங்கள்‌ பலமுறை கூறுகிறோம்‌. எனவே, 

இந்த நல்ல எண்ணங்களும்‌, நல்ல செய்கைகளும்‌, எத்தனை துன்பங்கள்‌.
இருந்தாலும்‌, நன்மைகளை விட்டு விடாமல்‌ நல்லவனாக வாழ வேண்டும்‌ என்ற உறுதி ஒரு மனிதனிடம்‌ இருக்க, இருக்கத்தான்‌, அந்த தீய சக்தியின்‌ அட்டூழியங்கள்‌ குறையும்‌. இல்லை என்றால்‌ “கலி முற்றி விட்டது.கலி காலத்தில்‌ இப்படித்தான்‌ வாழ வேண்டும்‌” என்று இவனாகவே வேதாந்தம்‌ பேசி தவறு மேல்‌ தவறு செய்து கொண்டே போனால்‌ , முதலில்‌.
அது இன்பத்தை காட்டி. முடிவில்‌ முடிவில்லா துன்பத்தில்‌ ஆழ்த்தி விடும்‌. எனவே கலி முற்றி விட்டது என்பது எப்போதுமே பேசப்படக்கூடிய ஒரு வழக்கு சொல்தான்‌.

சத்யம்‌  பேசுவது எளிது என்றால்‌, இந்த உலகிலே அத்தனை மனிதர்களும்‌ சத்தியம்‌ பேசுவார்களே. ஒரு விஷயம்‌ எப்பொழுது சிறப்பு பெறுகிறது?

தங்கத்திற்கு ஏன்‌ அத்தனை மதிப்பு? குறைவாக கிடைப்பதால்தானே?அப்படி, எல்லோராலும்‌ எளிதில்‌ பின்பற்ற முடியாத ஒரு கொள்கை, ஒரு குணம்‌. அதுதான்‌ உயர்ந்ததாக இருக்கிறது. எனவே அந்த சத்யத்தை கடினபட்டுத்தான்‌ நாம்‌ பின்பற்றவேண்டும்‌. எனவே சத்யமும்‌ பேச வேண்டும்‌. இடர்பாடும்‌ இருக்க கூடாது என்றால்‌. அதற்கு வாய்ப்பு இல்லை. இருந்த போதிலும்‌ கூட, நன்மையை கருதி கூறப்படும்‌ சத்யத்திற்கு மாறான விஷயங்கள்‌, பாவமாக கருதப்பட மாட்டாது. அது சுயநல நன்மையாக இருக்க கூடாது. "பொதுநல" நன்மையாக இருக்க வேண்டும்‌.

இதை சேய்கள் உணர்ந்து, அப்படியே உலகில் வாழ்ந்து வர ஆசிகள்.

சித்தன் அருள்................ தொடரும்!

14 comments:

 1. om sri lobamuthra samathe agasthiyar thiruvadigalae saranam - Banukumar

  ReplyDelete
 2. Hello Sir, Can you please provide me the link for adithya hridyam which was posted in this site long ago. I missed to take a copy of it. Please help.

  Thanks,
  Shanthi

  ReplyDelete
  Replies
  1. https://siththanarul.blogspot.com/2015/01/207.html

   Delete
  2. Sir, My Raasi is Kumbha. Sun ku kumbam pagai veedu thanae... Appa naan Adithya hirudyam recite panalama?

   Delete
  3. அகத்தியரையும், இறைவனையும் நம்புங்கள். அந்த மந்திரம் அத்தனை வீரியமானது. அது பார்த்துக்கொள்ளும்.

   Delete
  4. கீழே உள்ள YouTube link சிறப்பாக உள்ளது. இதில் வரிகளும் உள்ளது.

   https://youtu.be/-wlj-GrOv_k

   அகஸ்தியர் திருவடிகளே சரணம் 🙏

   Delete
 3. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரை தாய் துணை

  ReplyDelete
 4. Ayya Vanakkam,

  Ellaam valla Sri Agaththyap perumaanin paatham paninthu enanthu vendugolai samarpipikiren.

  Naan tharpozhuthu Maharastravil manaiviyudan vasiththu varugiren. Thaniyaar Kattumaanath thurrayil panipurigiren. Naan ovvory murayum oorukku varumpothu evvalavo muyarchithum "Naadi" parka vara mudiyavillai. Enakkaga thaangaley dhayai koornthu "Naadi" paartharula vendum.
  Enathu kurikol ithuthaan - " Sri Agathiyar ennai avarathu seedanaga yeartru arulpuriya vendum. Melum avar vazhigaatuthal eppothum ennaku thevai. Engalukku nalvaazhkai amaiya vendum.

  Enavey thaangal idhanai alatchiyam seiyyamal en intha vendukolai en thanthai Sri Agathiyaridam samarpikka vendugiren.

  Thangal pathilai ethirnokki kaathirukkum,
  Agathiyan mainthan Karthikeyan.

  ReplyDelete
  Replies
  1. சித்தன் அருளில் வெளியிடப்பட்ட அகத்தியர் அருளிய வாக்கில் பல நல்ல விஷயங்களை அவரே கூறியுள்ளார். அவைகளை நம் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தினால், ஒரு ஆத்மா சுத்தமாக தொடங்கிவிடும். சுத்தமான மனநிலை வர வர, உயர்ந்த ஆத்மாக்களை தேடி சித்தர்களே வருவார்கள். என் என்றால், அவர்கள் தேடுகிற மனிதர்கள் கிடைப்பது மிகவும் குறைவாக உள்ளது. சரி! நீங்கள் கேட்டபடி எல்லாம் விஷயங்கள் நடக்க என்ன செய்ய வேண்டும்? மிக எளிது. எப்படி வாழ்ந்தால் இறைவனுக்கு, சித்தர்களுக்கு பிடிக்குமோ அப்படி வாழத்தொடங்குங்கள். அனைத்தும் நல்லதாக நடக்கும்.

   Delete
  2. Deivamae neengathan andha karthikeyana . thangalin nanbar eluthiya perualum adiyenum kadhaiyai padithen migavum nandra irundhathu ..

   Delete
  3. Kaarthikeyan endra peyar kondavargalil naanum oruvaney thavira avar alla.

   Delete
 5. திரு கார்த்திகேயன் அவர்களுக்கு, அடியேனின் அனுபவம்... தெரிந்தவர்கள் சொல்வதில்லை;சொல்பவர்களுக்கு தெரிவதில்லை. நீங்கள் அனுதினமும் அகத்தியர் பெருமானிடம் வழி காட்ட ப்ரார்த்தனை செய்யுங்கள். உண்மையான ஜீவ நாடி மறைந்து தான் இருக்கிறது.ஈசன் சித்தம்.

  ReplyDelete
  Replies
  1. Nanri Ayya,
   En piraarthanayai kaividdamatten.

   Delete