அதை கேட்டதும், சிறிதாக புன்னகைத்து நிமிர்ந்து உட்கார்ந்தேன்.
நண்பர் இதை எதிர் பார்க்கவில்லை.
"என்ன! ஏதேனும் பிரச்சினையா? நான் சென்று பின்னர் வரவா?" என்றார்.
"இல்லை! சற்று பொறுங்கள்!" என்றுவிட்டு கண்மூடி அகத்தியப்பெருமானை தியானித்து நன்றி கூறினேன்.
"முன்னர் அகத்தியப் பெருமானிடம் சில கேள்விகள் கேட்டிருந்தேன். ஒரு வழியை காட்டி அந்த பாதையில் செல்க! என சொல்கிறார்" என்றேன்.
"சரி! நீங்கள் தொடருங்கள்" என்றேன்.
"அவருக்கு வயது 42. சில மாதங்களுக்கு முன் வரை வெளி நாட்டில் நல்ல வேலையில் இருந்தார். நல்ல சம்பாத்தியம் அவருக்கு. கூடவே சிறு குடும்பமும். மனைவி, 12 வயதான மகள். உடலில் அடிக்கடி அசதியும், சுரமும் வரத்தொடங்கிய பொழுது, அங்கிருக்கும் மருத்துவமனையில் காட்டி சிகிர்சை பெற்றார். முதலில் நல்ல பலன் அளித்த சிகிர்சை, பின்னர் பலனளிக்காமல் போகவே, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது நுரையீரல் முழுவதும் கண்டமாலையால் பாதிக்கப்பட்டுவிட்டது என கண்டறிந்தனர். அதை அவருக்கு தெரிவித்ததும், மொத்தமாக உடைந்து போனார். உடனேயே ஒரு தீர்மானம் செய்து, மனைவி, மக்களை அழைத்துக் கொண்டு, வேலையை உதறிவிட்டு, இங்கு வந்து விட்டார். இங்கே, அரசாங்க மருத்துவமனையில் அதற்கான சிகிர்சையை மேற்கொண்டார்.
நாள் செல்லச்செல்ல, அவர் உடல் இளைத்துக்கொண்டே வந்தது. நோயும், கூடியதே அன்றி, குறையவில்லை. ஒருநாள், அவருக்கு சிகிர்சை அளித்த மருத்துவர்கள், குடும்பத்தினரை அழைத்து, இனிமேலும் சிகிர்சை கொடுப்பதில் அர்த்தமில்லை. இனிமேல், அவர் ஒரு மாதம்தான் வாழ்வார். வீட்டிலேயே வைத்து, அவருக்கு என்னென்ன பிடிக்குமோ, அந்த உணவு வகைகளை செய்து கொடுத்து, அவரை கவனித்துக் கொள்ளுங்கள். மருத்துவமனைக்கு வரவேண்டம், எனக்கூறி அனுப்பிவிட்டனர்.
ஒரு இட்லியை நான்கு துண்டுகளாய் மாற்றி, அதில் ஒரு துண்டு இட்லியை 30 நிமிடம் சுவைத்துத்தான் அவரால் உண்ணமுடியும் என்கிற நிலைக்கு மாறிவிட்டார். அவருக்கு நிறைய உறவினர்கள். விஷயத்தை கேள்விப்பட்ட அனைவரும், ஒவ்வொரு நாள், ஒவ்வொரு நேரம், ஏதேனும் உணவை அவர் சாப்பிட கொண்டு வந்து கொடுத்தனர். இவராலோ, எதுவும் சாப்பிட முடியாத நிலை." என்று நிறுத்தினார்.
"சரி! எது உங்களை இந்த சூழ்நிலைக்குள் இழுத்து கொண்டு வந்து மாட்டிவிட்டது?" என்றேன்.
"அவருக்கும், எனக்கும் பொதுவான ஒரு நண்பர் சில நாட்களாக என்னை தேடிக் கொண்டிருந்தார். நானோ நேரமின்றி அலைவதால் அவரை சந்திக்க முடியவில்லை. ஒருநாள் விடியற்காலையில், வீட்டில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு திறந்து பார்த்தால், இவர் நின்று கொண்டிருந்தார்."
"ஆச்சரியப்பட்டு, என்ன இந்த நேரத்தில்? என்று வினவ, முன்னர் சொன்ன அவர் நண்பரின் விஷயம் அனைத்தையும் கூறினார்."
"சரி! இதில் நான் என்ன செய்ய வேண்டும்? எதற்காக நான்! என்றேன்."
"நீ யோகா சொல்லிக்குடுக்கிறே! என் வேறொரு நண்பர் உன்னை கைகாட்டி விசாரிக்க சொன்னார். இறை அருள் இருந்தால், யோகசூத்திரத்தில் ஒருவரின் எந்த வியாதியையும் விரட்டுகிற சிகிர்சை வழி உண்டு. அவன் யோகா வகுப்பெடுப்பதால், விசாரித்துப் பாருங்கள் என்றார். அதனால்தான் வந்தேன்." என்றார்.
"அவன் மகளுக்கு 12 வயதுதான் ஆகிறது. அந்த குழந்தைக்கு, தகப்பனை, திருப்பி வாங்கி கொடுக்க முடியுமா?" என்று மிக எதிர்பார்ப்புடன் வினவினார்.
"ஹ்ம்ம்! இப்பொழுது புரிகிறது, நீ ஏன் இதில் இறங்கினே என்று! சரி சொல்லு" என்றேன், அடியேன்.
"சற்று அவகாசம் கொடுங்கள். யோசித்து சொல்கிறேன். நேரமின்மை என்பது என்னை விரட்டுகிறது. எல்லாவற்றுக்கும் மேல், இறை அருள்/அனுமதி வேண்டும், குருநாதர் அனுமதித்து அருள வேண்டும். இவை கிடைத்துவிட்டால் மட்டும் போதாது, அவரிடம் நேர்மை வேண்டும், "நான் உயிர் வாழ வேண்டும்" என்கிற நேர்மையான எண்ணம் எப்போதும் வேண்டும். இவை எல்லாம் ஒன்று சேர்ந்து, உறவுகள் அனைத்தும் அவரிடமிருந்து விலகி நிற்க தயார் என்றால், பார்க்கலாம். எனக்கும் மகள் இருக்கிறாள். புரிந்து கொள்ளுங்கள்" என்றேன்.
"சரி யோசித்து சொல்லுங்கள்! அவர் பக்கத்திலிருந்து என்னென்ன அவர் செய்யவேண்டுமோ, அத்தனைக்கும் நான் உறுதி அளிக்கிறேன். எப்பொழுது கூப்பிட்டு வரச் சொல்கிறீர்களோ அப்பொழுது நான் வந்து உங்களை அவர் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன்" என்று கூறி சென்றார்.
"என் விண்ணப்பத்தை இறைவனிடமும், குருநாதரிடமும் சமர்ப்பித்து பதிலுக்காக காத்திருந்தேன். பிறகு அன்றைய தின வேலைகளில் மூழ்கி, இதை மறந்து போனேன்" என்றார்.
சித்தன் அருள்........................ தொடரும்!
ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரை தாய் துணை
ReplyDeleteஅய்யா தவறு இருந்தால் மன்னிக்கவும்.... அவர் யோகா பயிற்சி கொடுப்பவர் ஆனால் என்ன காரணம் ஐயா.... நன்றிகள் ஐயா
வணக்கம்!
Deleteஅவர் யோகா சொல்லிக்கொடுப்பவராயினும் விஷய ஞானம் உள்ளவர். கண்டமாலை போன்ற மிகப் பெரிய நோய்க்கான சிகிர்சையாக யோக முறைகளை உபயோகிக்கும் முன் இறைவன், குரு போன்றவர்களின் அனுமதி பெற வேண்டும். ஏன் என்றால், நோய் கர்ம வினையால் வருவது. நிச்சயமாக இறைவன் அனுமதி தேவை.
எப்பொழுதும் "அகத்தியப்பெருமானின் சித்தன் அருளில்" அவர் கூறுவதை உன்னிப்பாக கவனித்து வாசிக்கவும். பல உன்னத விஷயங்களும், அவரால் மறைத்துக் கூறப்படும்.
அக்னிலிங்கம்!
மிகவும் அற்புதம்... நன்றி ஐயா
DeleteWho is god bhrama Vishnu or shivan who give
ReplyDeletePermission for cure diseases.
I am praying all gods but there is no result
Om Namasivaaya!
DeleteThank you sir I will chant OM NAMASIVAAYA 108 times from NOW
DeleteI can not go agasthiyar temple at tpk road Madurai
I just pray the Agasthiyar from my home for my
Father and mother health issue.
Thank u very much for u r reply
Please pray for my father and mother
Deleteஓம் ஸ்ரீ அகதீசாய நம . ஓம் ஸ்ரீ அகத்தியர் குருவே துணை
ReplyDeleteOm Agastheesaya Nama!
ReplyDeleteAyya, waiting for next post! Gandamaalai is thyroid related disease?
4448th disease which is called "Cancer".
Deleteஅய்யா வணக்கம். Lockdown நேரத்தில் அகத்தியரிடம் வேண்டிக்கொண்டு அகத்தியரின் அருளை (பதிவுகள்) தினசரி வழங்குமாறு அகத்தியர் அடியவர்கள் சார்பாக பணிவுடன் வேண்டி கொள்கிறேன்.
ReplyDeleteஉலகத்தின் அசைவை, ஆட்டத்தை இறை உத்தரவால் கட்டிப்போட்ட சித்தர்கள், நம் குருநாதர், அமைதியாய் இருக்கச்சொன்ன நேரம். உண்மையை சொல்வதென்றால், அனுமதி கொடுப்பார் என தோன்றவில்லை. எப்படிப்பட்ட செய்தியை கேட்க கூடாது, என்று விரும்பிய மனதுக்கு அதையே உத்தரவாக அளிக்கின்ற நேரம். புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteமேலே உள்ள படத்தில் குருநாதருக்கு அடுத்ததாக வருகிற தவசியின் முகத்தில் இருக்கும் ஒருவித வேதனையின் வெளிப்பாடுதான், இன்றைய மனிதனின் நிலை.
ReplyDeleteவிளக்கத்துக்கு நன்றி அய்யா. நீங்கள் சொன்ன பொழுது தான் தவசியின் முகத்தை கவனித்தேன்.இப்பொழுது புரிந்து கொண்டேன்.
Deleteஅகத்திய பெருமானின் கருணையால் இந்த கஷ்டத்தில் இருந்து எல்லோரும் வெளியே வருவோம். ஓம் அகத்தீஸ்வராய நமஹ.
வணக்கம் அகத்தியர் அடியவர்களே..
ReplyDeleteஅற்புதமான இந்த மனித பிறவியின் நோக்கம் உணராமல் கொடூர குணத்தோடு இரக்கம் என்பது சிறிதும் இல்லாமல் நேர்மை இல்லாமல் பொதுநலம் இல்லாமல் பிற உயிர் இனங்களை உயிரோடு சமைத்து உண்ணும் மனித இனத்திற்கு இந்த தண்டனை குறைவுதான்.ஈசனும் அகத்தீசனும் பார்த்துக் கொள்ல்வர்(துர்குணத்தை).அமைதியாக இறைவனை குருநாதரை வழிபட்டு வாருங்கள்.
அசைவம் வெறுப்போம்.
கருணை கொள்வோம் அருளைப் பெறுவோம்.
சித்தர்களையும் சித்தர்களின் மருத்துவத்தையும் பின்தொடர்வோம்
குருவே சரணம்...
வணக்கம் அகத்தியர் அடியவர்களே..
ReplyDeleteSri அகத்தியர் லோபமுத்திரை அடியவர்கள் ஒருங்கிணைந்த முகநூல் தளம் என்ற முகநூல் குழு ஒன்றை உருவாக்கி இருக்கிறேன்.விருப்பம் இருப்பவர்கள் முகநூலில் தேடிப் பார்த்து கிடைக்கிறதா என பார்த்து சொல்லுங்கள்.
IF YOU CAN GIVE THE LINK IT WILL BE EASY TO SEARCH FOR
DeleteSri அகத்தியர் லோபமுத்திரை அடியவர்கள் ஒருங்கிணைந்த முகநூல் தளம்
ReplyDeletehttps://www.facebook.com/groups/516854752566339