நம் குருநாதர் அகத்தியப் பெருமானின் அருளால், இந்த தொடரை பதிவு செய்து வருகையில், பலவித கேள்விகள் அடியேனுக்குள் உருவானது. அவற்றை யாரிடம் கேட்பது? என யோசித்து, அகத்தியரிடமே கேட்டுவிடுவோம் என்ற எண்ணத்துடன், அவர் பாதத்தில் சமர்ப்பித்தேன்.
"தொடர்ந்து செல், உரிய காலத்தில் ஒரு அனுபவம் வழி இதற்கான பதில் கிடைக்கும்" என உத்தரவு வந்தது.
அமைதியாய் இருப்பதே உசிதம் என்றுணர்ந்து, விதிக்கப்பட்ட வேலையை செய்து வந்தேன்.
அடியேனுக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் விரும்பியவர்களுக்கு யோகா பயிற்றுவித்து வருகிறார். நாங்கள் இருவரும் தனியாக அமர்ந்து பல விஷயங்களை/அனுபவங்களை பகிர்ந்து கொள்வோம். அவரை அந்த நாளில் சந்தித்தே ஒன்பது மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவருக்கு நேரமின்மையே காரணம். வரும்பொழுது, வரட்டும்; அனாவசியமாக தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைக்காமல்/அழைக்காமல் இருந்தேன்.
ஒரு நாள், அவரிடம் ஒரு விஷயத்தை பற்றி பேச வேண்டும் என தோன்றியது. "எங்க போய்விட்டார் இவர்? வந்து பார்க்கக்கூடாதா! வாருங்கள்! பேச வேண்டியுள்ளது" என என்னறியாமல் மனதுள் நினைத்துவிட்டேன். இது நடந்தது காலையில்.
பொதுவாக மூச்சு பயிற்சி, ஆதார சக்கரங்களை தொடுபவர்களுக்கு, அவர்கள் யாருடன் தொடர்பில் உள்ளார்களோ, அந்த அவர்கள் என்ன நினைத்தாலும், எங்கிருந்தாலும், தெரிந்துவிடும்.
அன்று இரவு ஏழு மணிக்கு அவர், அடியேன் வீட்டுக்கு வந்துவிட்டார்.
"என்ன! நிறைய நாட்களாகிவிட்டதே! அவ்வளவுக்கு நேரமின்மையா?" என்றேன்.
"உண்மைதான். வருவதற்கான அவகாசமே கிடைக்கவில்லை. ஓடிக்கொண்டிருக்கிறேன். காலையில் ஏழு மணிக்கு வீட்டை விட்டு இறங்கினால், இரவு 11 மணிக்குத்தான் வீட்டுக்குப்போய் குடும்பத்தை பார்க்க முடிகிறது. அவ்ளோ பிஸி" என்றார்.
அந்த பதிலில், ஒரே நிமிடத்தில் எல்லாம் புரிந்தது.
"சரி! வாருங்கள்! மாடியில் போய் அமர்ந்து பேசலாம்" என்று அழைத்துக் கொண்டு போனேன்.
"அமருங்கள்! ஒரு சில விஷயங்களை கூற வேண்டும் என தோன்றியது! அதான் இங்கு நீங்கள் வருவதற்காக மனதுள் அழைத்தேன்" என்றேன்.
"இன்று மதியம் உங்கள் வீட்டு பக்கமாக வரவேண்டி இருந்தது. பார்த்தேன். உங்கள் விண்ணப்பம் இருந்தது கண்டேன். சரி வரலாம் என்று தீர்மானித்து இப்பொழுது வந்தேன்" என்றார்.
அன்றைய தினம் மாலை அலுவலகம் விட்டு வீட்டுக்கு வந்ததும், தலைக்கு குளித்துவிட்டு, பூசையறையில் அமர்ந்து, 9 முறை "ஆதித்ய ஹ்ருதயம்" ஜெபிக்க உத்தரவு வந்தது, அடியேனுக்கு. ஏன் எதற்கு என்றறியாமலே, ஒன்பது முறை ஜெபித்து முடித்தவுடன், தலை முதல் கால் வரை, வியர்வையில் குளித்துவிட்டேன். ஆனால் இவர் வரும் முன் சுதாகரித்துவிட்டேன்.
"என்ன! உள்ளுக்குள் இவ்வளவு கொதிப்பாக இருக்கிறீர்கள்?" என்றார்.
"அது ஒன்றுமில்லை. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு ஜபம் பண்ணினேன். அதன் விளைவுதான். சரி அதெல்லாம் இருக்கட்டும்! என்ன, சமீபத்தில், பிறருக்கு இறைவன் விதித்த விதியில் நிறையவே கை வைக்கிறீர்கள் போல உள்ளதே" என்றேன்.
"உண்மை! முடியாது என்று மறுக்க முடியாத சூழ்நிலையில் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியுள்ளது." என்றார்.
"தவிர்க்க முடியாத மூன்று உதாரணங்களை கூறுங்கள்" என்றேன்.
"ஒரு கண்டமாலை நோயாளி, ஒரு இருதய நோயாளி, ஒருவருக்கு சிறுநீரக பிரச்சினை" என்றார்.
"உங்களுக்கு குடும்பம் என ஒன்றிருக்கிறது, என்ற எண்ணம் இருக்கிறதா?" என்றேன்.
"ஆம். அதற்காக எல்லா பாதுகாப்பு முறைகளையும் எடுத்துக் கொள்கிறேன். சக்கர வளையம், ஆதார சக்கரங்களை உருவேற்றி பாதுகாப்பு போன்றவை அணிந்து கொள்கிறேன்." என்றார்.
"எப்பொழுதுமா?" என்றேன்.
அவருக்கு புரிந்துவிட்டது.
"இல்லை அந்த கண்டமாலை நோயாளிக்கு பிராணாயாமம் வகுப்பு எடுக்கும் பொழுது, கவசங்கள் அனைத்தையும் கழட்டி வைக்கத்தான் வேண்டியுள்ளது. இல்லை என்றால், அவரால் விழித்து இருக்க முடியவில்லை, உறங்கிவிடுகிறார். பிறகு இரவு வீட்டிற்கு வந்து நாடி சுத்தி செய்தபின் என் ஆதாரங்களை பூட்டிக்கொள்கிறேன்" என்ற உண்மையை கூறினார்.
"ஹ்ம்ம்! கவசமின்றி பிறர் கர்மாவை தொடுவது மிகுந்த ஆபத்து. வேறு வழி இல்லை என்று சொல்வதால், சரி! தினமும் சுத்தி செய்ய மறந்துவிடாதீர்கள்" என்றேன்.
அவராகவே, கண்டமாலை நோயாளியை பற்றி, அவருக்கு எடுக்கும் வகுப்பு முறையை பற்றி கூறத் தொடங்கினார்.
"இதை தொடர்ந்தால் கிடைக்கும் அனுபவம், உன் கேள்விக்கு பதிலாக அமையும்" என்று சன்னமாக யாரோ கூறுவது கேட்டது.
ஓம் அருள்மிகு மூத்தோனே போற்றி
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரை தாய் துணை
நன்றி ஐயா...இந்த விளக்கம் நானும் எதிபார்த்துக் கொண்டிருந்தேன்....
நன்றி ஐயா
நன்றி ஐயா.... ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
ReplyDeleteAyya, Coronavirku Sri Agathiya peruman enna solgiraar?
ReplyDeletehttps://siththanarul.blogspot.com/2020/03/853.html
Deleteஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகதீசாய நமஹ! ஓம் அகத்தியர் குருவே துணை
ReplyDeleteகுடும்பத்தினர் எண்ணிக்கையும்,விளக்கும் அதே எண்ணிக்கைய்ல் இருத்தல் நலம்
ReplyDelete