​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Monday, 23 March 2020

சித்தன் அருள் - 853 - அகத்தியப் பெருமானின் அருள் வாக்கு!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இந்த ஒரு கிருமியின் பரவலால், உலகமே அடிப்போயுள்ள இந்த நிலைமையில், அகத்திய பெருமான், ஒவ்வொருவரும், தன்னையும், குடும்பத்தாரையும் பாதுகாத்துக்கொள்ள, ஒரு சுத்தி செய்துகொள்ளும் முறையை, ஒரு அடியவருக்கு அருளினார். அவர், அந்த முறையை சித்தன் அருள் வலைப்பூ வழி உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள கூறினார். அந்த முறையை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

வீட்டினருகில் இருக்கும் ஏதாவது ஒரு கோவிலில் இருந்து, அதிகாலையில் அபிஷேகம் செய்த தீர்த்தத்தை வாங்கிக் கொண்டு வந்து அதனுடன், மஞ்சள் பொடி, சிறிது துளசி, கோமியம் சேர்த்து, வீட்டிற்கு உள்ளும் வெளியேயும் நன்றாக தெளிக்கவும்.

தீர்த்தத்துடன் மற்ற பொருட்களை சேர்க்க முடியாதவர்கள், அபிஷேக தீர்த்த பாத்திரத்தை கிழக்கு நோக்கி அமர்ந்து, கையில் வைத்து, கீழ் வரும் ஸ்லோகத்தை 108 முறை ஜெபித்து பின்னர் அந்த தீர்த்தத்தை தெளிக்கவும்.

த்ரயம்பகம் யஜா மகே சுகந்திம் புஷ்டி வர்த்தனம் 
உர்வாருக மிவ பந்தனான் ம்ரித்யோர் முக்ஷி யமாமிர்தாது !

இதை நான்கு நாட்களுக்கு ஒருமுறை செய்ய வேண்டும்.

இன்னொரு அகத்தியர் அடியவர் இந்த கிருமிக்கான மருந்தை, அகத்தியரின் சிஷ்யரான தேரையரின் பாடலிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளார்.

நமது குருநாதரின் சீடரான தேரையரின் மருந்து,

மாற்று மண்டத்தி னுள்ளித் தைலமும்
சேர்த்து லிங்கமும் சித்திர மூலமும்
பார்த்து முருங்கையின் பட்டை ரசங்களும்
கோர்த்து வந்தையுங் கூட்டும் சமாதியே

பொருள்; அண்ட தைலம், உள்ளி தைலம் , சித்திர மூலம் , முருங்கை பட்டை சாறும் , இத்துடன் சுத்தி செய்த சாதி லிங்கம் சேர்த்து கொடுக்க எப்பேர்ப்பட்ட வைரஸையும் கொல்லும். வைரஸால் வந்த வியாதி குணமடையும்

மேலும் அகத்தியரின் ஒரு வாக்கு:-

உலகின் அனைத்துப் பொருட்களும் பஞ்ச பூத சக்திகளால் (நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்) ஆனவையே! மனித உடலும் இத்தகைத்தே! ஆனால், மனித குலம் பஞ்ச பூத சக்திகளுக்கான நன்றி வழிபாட்டை முறையாக ஆற்றுவதில்லை!காலை, மதியம், மாலையில் எட்டு அகல் விளக்கு தீபங்களை ஒரு தாம்பாளத்தில் வைத்து, வானத்தை நோக்கிக் காட்டி, பூமியைத் தாங்கும் அஷ்ட திக்குப் பாலக தேவர்களை நினைந்து,

தீபப் பிரகாசம், ஜோதிப் பிரகாசம், சிவப் பிரகாசம்,
அருட் பிரகாசம், க்ஷேமப் பிரகாசம், திவ்யப் பிரகாசம்,
அமுதப் பிரகாசம், ஆனந்தப் பிரகாசம், ஆதிமூலப் பிரகாசம்
முக்திப் பிரகாசம், மோட்சப் பிரகாசம் வாழிய வாழியவே!

என 12 முறை குடும்பத்தாருடன் சேர்ந்து ஓதி, தன்னையே ஆத்மப் பிரதட்சிணமாக வலம் வந்து, இதன் பலாபலன்கள் உலகெங்கும் ஜாதி, மத, ஜீவன்கள் பேதமின்றி யாவரையும் சென்றடைய ஸ்ரீஅகஸ்திய மாமுனியின் ஆசியை நாடி வேண்டி எண் முறை எட்டுத் திக்குகளிலும் சாஷ்டாங்கமாகப் பூமியில் வீழ்ந்து வணங்கிடுக

வேதியர்கள் செய்ய வேண்டியது....

யம பயம், மரண பயம் இந்த இரண்டும் தணிய வேண்டுமானால், காலை, மதியம், மாலை மூன்று சந்தியா நேரங்களிலும், யம வந்தன, யமத் தர்ப்பண பூஜையை ஆற்றி வருதல் நல்லது

மேலும் ஒரு கவச முறை:-

நல்லெண்ணை, வேப்பெண்ணை கலந்து இரு அகல் விளக்கு ஏற்றி, காலை, மாலை இருவேளை அல்லது மாலையேனும், சிறிது உப்பை தூவி, அதன்மேல் அகல்விளக்கை வீட்டின் வாசல் படிக்கு பக்கத்தில் வைத்து அகத்தியரை, இறைவனை தியானித்து அனைத்து உயிர்களையும் காப்பாற்ற வேண்டி வழிபடுக. தினமும் வீட்டில் காலை, மாலை இரு நேரமும், சாம்பிராணி புகை போட்டு, சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

அகத்தியர் அடியவர்கள் அனைவரும் மேற்சொன்ன வழிகளை கடைப்பிடித்து, ஆரோக்கியத்தை அடைந்து, கிருமி பாதிப்பிலிருந்து, தப்பித்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............. தொடரும்!

16 comments:

 1. நான் நினைத்துக்கொண்டே இருந்தேன் ஏன் குறுமாமுனி அய்யன் அகத்தீசர் இந்த கொடிய வைரஸ் காய்ச்சல் நோயில் இருந்து இந்த உலகினை காக்க அருள்கூறவில்லை என்று. தக்க சமயத்தில் அருள் உரைத்துவிட்டார். அகத்தீசர் மட்டுமே நம்மை காக்க முடியும். ஓம் அகத்தீசாய நமஹ

  ReplyDelete
 2. Nandri ayya!We will definitely follow.
  Om Agatheesaya Namah!!

  ReplyDelete
 3. ஓம் லோபமுத்ரா சமேத அகதீசாய நமக
  நன்றி பரம்பொருளே

  ReplyDelete
 4. ஸ்ரீ அகத்தியர் குருவின் ஆசியால் எதுவும் கடந்து விடலாம் , முடிந்த அளவு ஆணைவருக்கும் தெரியப்படுத்துங்கள் .
  ஓம் ஸ்ரீ அகதீசாய நம . ஓம் ஸ்ரீ அகத்தியர் குருவே துணை

  ReplyDelete
 5. வணக்கம் ஐயா. ஓம் அகத்தீசாய நமஹ! தாயே போற்றி! ஐயா சுத்தி செய்த சாதி லிங்கம் பற்றி கூறுங்கள் ஐயா. மிக்க நன்றி ஐயா.💐

  ReplyDelete
 6. அகத்தியர் வாக்கு (சில வருடங்களுக்கு முன் உரைத்தது)

  இஃதோடு யாங்கள் கூறவருவது, பொதுவாய் தேக நலம் நன்றாய் இருக்க செய்கின்ற முயற்சிகள், ஏற்கின்ற உணவுகள், செய்கின்ற உடற்பயிற்சிகளோடு நல்விதமாய் மஹா ம்ருத்யுஞ்சய மந்திரத்தை அன்றாடம் உருவேற்றுதலும்,இஃதொப்ப திருநீற்றுப் பதிகத்தை உருவேற்றுதலும், திருநீலகண்ட பதிகத்தை உருவேற்றுதலும், நல்விதமாய் பழனியெம்பெருமான் திருவடியை வணங்கி, போகனையும் வணங்கி அஃதொப்ப திருநீற்று பிரசாதத்தை ஏற்றுக்கொள்வதும் நன்றாம்.

  ReplyDelete
 7. Sir thank you very much
  But there is no temple near for me.I can not go
  Temple at 5km distance from my house.
  Only Agasthiyar can help

  ReplyDelete
 8. Sir I read jeava nadi for my father
  Please give if any one read these at madurai

  ReplyDelete
 9. சூழ்நிலை புரியவில்லை.தற்போது உலகத்திற்கு சித்த பெருமான்கள் உதவி தேவை.அகத்தியர் இந்த கிரிமிநாசினியை அழித்து மக்களை காப்பற்ற சொல்லுங்கள் அய்யா.அகத்தியர் எல்லா சித்தர்களும் அனைவரையும் காப்பாற்ற உபாயம் இருக்கும் தயவு செய்து நீங்கள் எல்லாருக்காகவும் வேண்டிகொள்ளுங்கள்.

  ReplyDelete
 10. its difficult to abishek theertham, is it possible to do with stored Ganga theertham - banu

  ReplyDelete
  Replies
  1. Thank u for the reply sir, I have the theertham got from pazhamuthirsolai Rakkayi temple that is from the foot of vishnu ( i hope it is spelled as noothana theertham)

   Delete
 11. அய்யா கோரோனாவுக்கான சித்த மருந்து மக்களுக்கு"கிடைக்க இறையின் அனுமதி
  கிடைக்க பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன்.

  ReplyDelete
 12. This Prakasa mantra has also been given in 2015 in this link https://www.facebook.com/photo?fbid=847107142070713

  ReplyDelete
 13. குரு வாழ்க!! குருவே துணை!!

  ReplyDelete