பஞ்சாக்ஷர மந்திரங்களை உரக்க கூறி ஓதுவதை வாசகம் என்றும், தனக்கு மட்டும் கேட்பதுபோல், மென்மையாக கூறுவதை உபாஞ்சு என்றும் மனதில் வைத்து ஓதுவதை, பச்யந்தி என்றும் சித்தர்கள் கூறுகிறார்கள். ஸ்தூல, சூக்ஷும பஞ்சாட்சரங்களை வாசகம், உபாஞ்சு முறையிலும், அதி சூக்ஷும, காரண, மகாகாரண பஞ்சாக்ஷரங்களை பச்யந்தி முறையில் மட்டும் ஓதவேண்டும் என்கிற குறிப்பு, சித்தர்கள் இலக்கியத்தில் காணப்படுகிறது. "சிவயவசி" அல்லது "சிவயசிவ" என்பதில், எது சூக்ஷும பஞ்சாட்சரம் என்பதில் சித்தர்களிடையே, கருத்து வேறுபாடு உள்ளது. சிவவாக்கியர் சித்தர் "சிவயவசி" என்பதே சூக்ஷும பஞ்சாட்சரம் என்கிறார்.
பஞ்சாக்ஷ்ரத்தில் உள்ள ஐந்து எழுத்துக்களும் சிவபெருமானின் ஐந்து முகங்களான வாமதேவம் (வடக்கு நோக்கிய முகம்), தத்புருஷம் (கிழக்கு நோக்கிய முகம்), சத்யோஜாதம் (மேற்கு நோக்கிய முகம்), அகோரம் (தெற்கு நோக்கிய முகம்), ஈசானம் (மேல் நோக்கிய முகம்) போன்றவற்றை குறிக்கிறது. ஆறாவதாக ஒரு முகம், அதோ முகம், என்பதும் சிவபெருமானுக்கு உண்டு. இது உள்நோக்கிய முகம் எனப்படும். இதற்கு திசை என்பதில்லை.இதையே சித்தர்கள், உள்பூசை எனவும், உள் த்யான நிலை எனவும் விவரித்தனர். ஒருவர் உள்ளுக்குள், த்யானத்தில் இறையை சுயமாக கண்டு தெளிகிற முறை அது. இந்த முறையில் இறங்கி த்யானம் செய்பவர்களுக்கு, சித்தர்கள் உபதேசம், வழி நடத்தல் போன்ற நிகழ்ச்சிகள், எளிதாக அமையும்.
நமசிவய என்கிற மந்திரத்தை பிற பீஜ மந்திரங்களுடன் சேர்த்து த்யானத்தில் ஜெபம் செய்பவருக்கு பலவித நிலைகளும் உருவாகும் என அகத்தியப் பெருமான் உரைக்கிறார்.
தத்புருஷ முகத்தை சார்ந்த 25 மந்திரங்கள்:-
1. நங்-சிவயநம - விரும்பிய புத்திர பாக்கியம் கிட்டும்.
2. அங்-சிவயநம - இயல்பாக தேக நோய் தீரும்.
3. வங்-சிவயநம - யோக சித்தி காணலாகும்.
4. உங்-சிவயநம - ஆயுள் விருத்தி ஏற்படும்.
5. ஓம்-அங்-சிவய - ஐம்பூதங்கள் மேல் கட்டுப்பாடு உண்டாகும்.
6. கிலி-நமசிவய - உலக வசியம் உண்டாகும்.
7. ஹிரீம்-நமசிவய - நினைத்தது நடக்கும்.
8. ஐ-உம்-நமசிவய - புத்தி, வித்தை நல்கும்.
9. கிலி-உம்-நமசிவய - பிறப்பின்மை நல்கும்.
10. நமசிவய - அமுதம் கிடைக்கும்.
11. நமசிவய=உங்-நமசிவய - நாட்டிலுள்ள வியாதி, சுரம் தீரும்.
12. நமசிவய-சிங்-உங்-நமசிவய - அறுபத்து நான்கு பிறவிகள் தீரும்.
13. நமசிவய-வங் - வெற்றி கிடைக்கும்.
14. சவ்-உம்-சிவய - சந்தானம் உண்டாகும்.
15. சிங்-க்ரீம்-(சிவய) - வேதாந்த ஞானி ஆவார்.
16. உங்-றீம்-சிவயநம - மோட்சம் கிட்டும்.
17. அங்-நங்-சிவயநம - தேக சித்தி உண்டாகும்.
18. அவ்-உம்-சிவயநம - கையிலை வாழ் குருவை காணலாகும்.
19. ஓம்-நமசிவய - இறப்பை வெல்லலாம்.
20. லங்-றீ-றீ-உங்-நமசிவய - தானியங்கள் கொழிக்கும்.
21. நமசிவய ஓம் - வாணிபம் செழிக்கும்.
22. ஓம்-அங்-உங்-சிவயநம - சாத்வீக குணம் உண்டாகும்.
23. ஓம்-ஸ்ரீ-உம்-சிவயநம - தனவான்கள் வசியமாவார்கள்.
24. உங்-ஓம்-நமசிவய - சிரசு ரோகம் நிற்கும்.
25. ஓம்-அங்-சிவயநம - நெருப்பினில் பிரவேசிக்கலாம்.
மேலே கூறப்பட்ட பீஜாக்ஷர மூல மந்திரங்களை எவனொருவன், பொறுமையை கடைப்பிடித்து, பொதுநலம் கருதி, நம்பிக்கையுடன் இறைவனை மனதில் தரித்து, சித்தம் நிலைத்து த்யான ஜபம் செய்கிறானோ, அவனுக்கு இறையருளினால் அந்த மந்திரத்தின் சக்தி கைவல்யமாகும் என்கிறார் அகத்தியப் பெருமான்.
சித்தன் அருள்............................. தொடரும்!
NICE. GURUVEY SARANAM
ReplyDeleteஓம் அருள்மிகு மூத்தோனே போற்றி
ReplyDeleteபரம்பொருளே உன் அடி சேரும் வரை என்னை காத்தருள வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்...
Om lopamudra samata agastiyar thiruvadi sàranam.miga arumaiyana upadasam.
ReplyDeleteMilka nandri ayya.
ReplyDeleteஐயா வணக்கம்...
ReplyDeleteபதிவிற்கு நன்றி ஐயா. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
om sri lopamuthra sametha agasthiyar namaka
ReplyDeleteNandri swamiji.om agathesya namaha
ReplyDeleteSir please pray for my father and mother health
ReplyDeleteஓம் ஸ்ரீ அகதீசாய நம . ஓம் ஸ்ரீ அகத்தியர் குருவே துணை
ReplyDeleteஅகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்
ReplyDeleteநமது குருநாதரின் சீடரான தேரையரின் கொரோனா வைரசுக்கு மருந்து
மாற்று மண்டத்தி னுள்ளித் தைலமும்
சேர்த்து லிங்கமும் சித்திர மூலமும்
பார்த்து முருங்கையின் பட்டை ரசங்களும்
கோர்த்து வந்தையுங் கூட்டும் சமாதியே
பொருள்; அண்ட தைலம், உள்ளி தைலம் , சித்திர மூலம் , முருங்கை பட்டை சாறும் , இத்துடன் சுத்தி செய்த சாதி லிங்கம் சேர்த்து கொடுக்க எப்பேர்ப்பட்ட வைரஸையும் கொல்லும். வைரஸால் வந்த வியாதி குணமடையும்
இப்பதிவை கமெண்ட் ல போடாம தலைப்பு பதிப்பா போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்
வணக்கம் ஐயா. மந்திரம் 48 நாட்கள் , 108 முறை சொல்ல வேண்டுமா ஐயா. மிக்க நன்றி ஐயா. ஓம் அகத்தியர் பாதம் போற்றி!
ReplyDeleteTHERE IS NO LIMITATON OF 48 DAYS
Delete