​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 9 April 2020

சித்தன் அருள் - 857 - அதிர்வலைகளும் தசவாயுக்களும்!


அன்றைய தினம், மதியம் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, யோகா வகுப்பு சொல்லித்தர வேண்டியது இல்லாததால், சற்று நேரம் தனிமையில் அமர்ந்து த்யானம் செய்யலாம் எனத் தோன்றியது.

தியானத்தில் அமர்ந்த ஐந்தாவது நிமிடமே, குருவின் ரூபம் உள்ளே எழும்ப, அவர் கைதூக்கி ஆசிர்வதிப்பது போலவும், இன்னொரு கையில் நான் காலை கொடுத்த விண்ணப்பம் இருப்பதையும் கண்டேன். இறை அனுமதியுண்டு, நலம்பெறுவான் என்ற ஆசிர்வாதமும் பதிலாக வந்தது.

உடனேயே நண்பரை அழைத்து, மாலை வாருங்கள், அவரை பார்க்க செல்லலாம், என்றேன்.

அவர் என்னை அழைத்து செல்ல வந்ததும், இரவு மணி 8 ஆகிவிட்டது.

என்னை அழைத்து சென்று, அவர் வீட்டின் முன் அறையில் இருத்திவிட்டு உள்ளே சென்றவர், ஐந்து நிமிடத்தில் என்னை உள்ளே அழைத்து சென்றார்.

என்னை அவரிடம் அறிமுகப்படுத்தினார். அவரின் உடல் மெலிந்து போய், எலும்பு உடலெங்கும் துருத்திக்கொண்டு நிற்பதுபோல், சதைப்பற்று இல்லாமலேயே இருந்தது.

அவர் முன் பலவித பாத்திரத்தில், வித விதமான உணவு வகைகள் வைக்கப்பட்டிருந்தது. இதிலிருந்தும் அவர் ஒரு துளி கூட சாப்பிட்டதிற்கான தடயமே இல்லை.

அருகில் சென்று நின்று, அவரது வலது கையை கேட்டு வாங்கி, நாடி பார்த்தேன். சரியான துடிப்புக்கு, சற்று கீழே இறங்கியிருந்தது. மூச்சு விட சற்று சிரமம் இருந்தது. ஆதார சக்கரங்கள் எப்படி இருக்கிறதென்று நாடி பிடித்து பார்க்கலாம். ஒவ்வொரு விரலும் ஒவ்வொரு பஞ்ச பூதத்திற்கு உரியது. அவர் உடலில், ப்ரித்வி அடிவாங்கியதால், உடலின் பிற பகுதிகளில் வாயுவின் சஞ்சாரம் நிறையவே  பாதிக்கப்பட்டிருந்தது.

"இறை அருளால் நாம் முயற்சி செய்யலாம். உங்கள் மனதில் என்ன நடந்தாலும், நான் உயிர் வாழ்ந்தே தீருவேன் என்கிற திட வைராக்கியம் வேண்டும். யோகாவில், பிராணாயாமம் தான் முதல் பகுதியாக உங்களுக்கு சொல்லித்தருகிறேன். பிராணாயாமம் வழி உடலை திடகாத்திரமாக்கி, உடலை கொண்டு வியாதியை தொலைக்க வேண்டும். உடலுக்கு உரம் ஏறினால், அதுவே நோயை விரட்டிவிடும். அந்த நிலையை அடைய வேண்டும். அப்படியென்றால், உங்கள் வாழ்க்கை திரும்பி உங்கள் கையில் அமரும். தினமும் ஒருவேளை எப்பொழுது எனக்கு நேரம் கிடைக்கிறதோ அப்பொழுது வந்து உங்களுக்கு பயிற்சி எடுக்கிறேன். மற்ற நேரங்களில் குறைந்தது  ஒரு நாளைக்கு மூன்று நேரமாவது நீங்கள் சுயமாக பிராணாயாமம் செய்ய வேண்டும்." என்றேன்.

அவர் ஆச்சரியமாக என்னை பார்த்து "சரி" என்றார்.

நண்பரை வெளியே அமரச்சொன்னேன்.

அவர் உடலில் ஆதார சக்கரங்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்க, குருவை பிரார்த்தித்து , அவர் நெஞ்சு குழியில் கைவைக்க, அவர் அதிர்ந்து அமர்ந்தார். ஆதார சக்கரங்களில் உயிரூட்ட வேண்டி வரும். அதுவும் அவர் உடல் இருந்த நிலைக்கு அன்றே பயிற்சி தொடங்குவது நல்லது என்று தோன்றியது.

குருவை, இறைவனை பிரார்த்தனை செய்து, அவரின் சித்தத்தில் விரல்வைத்து அதிர்வை உள்கொடுத்து, அவருக்கான பிராணாயாம வகுப்பை தொடங்கினேன். 12 அடி இழுத்த பொழுது அவர் அசந்து போனார். இதற்கு மேல் முடியாது என்று அமர்ந்துவிட்டார்.

உள்ளுக்குள் நோய் அவரை எவ்வளவு தூரம் பாதித்துள்ளது, எந்த அதிர்வு நுரையீரலை அதன் சுவர்களை மறுபடியும் உயிர்த்தெழ வைக்கும் என்பதெல்லாம் புரிந்தது. இது ஒரு கடினமான ப்ராஜெக்ட் ஆகத்தான் இருக்கும், இவருக்கு பயிற்சி கொடுக்க வேண்டுமென்றால், என் ஆதார சக்கரங்கள் பூட்டப்படாமல் திறந்திருக்க வேண்டும். பயிற்சியின் முடிவில் என் உடல் தன் சக்தியை இழந்து , நான் தினமும் அசந்து போய்விடுவேன் என்பதும் தெளிவாகியது. ஆதலால், அவருக்கான பயிற்சியை, தினமும், கடைசி வகுப்பாக வைக்க தீர்மானித்தேன்.

அன்றைய வகுப்பு ஒரு மணிநேரம் நீண்டு சென்றது. 

"இன்று போதும், காலை எழுந்ததும், ஒரு முறை, மதியம், மாலை ஒரு முறை என முதல் நாள் செய்கிற எண்ணிக்கையில் பிராணாயாமம் செய்ய வேண்டும். என்ன விருப்பமோ அதை சாப்பிடலாம். ஆனால் இப்போது உங்கள் முன் இருக்கும் எந்த உணவும் உங்களுக்கு ஜீரணமாகாது. இவற்றையெல்லாம் தூக்கி போட்டுவிடுங்கள். நான் நாளை வருகிறேன்" எனக்கூறி விடைபெற்றேன்.

அழைத்து சென்ற நண்பரிடம் "உறவுகள் யாரும் அவருக்கு சாப்பாடு கொண்டு வருகிறேன் என்று வந்து, வாய் தவறி அவரிடம் பேசவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். யாரும் வரவேண்டாம். நான் எப்பொழுது வருவேன் எனத்தெரியாது. அப்படி நான் வருகிற பொழுது, அவர் உறவினர் யாரையும் நான் பார்க்கக் கூடாது. அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டியது, உங்கள் பொறுப்பு. எல்லாம் நல்லபடியா நடந்தால், இறைவன் அருளால், நீங்கள் கேட்டபடி அவர் பெண்ணுக்கு தகப்பனை திருப்பி கொடுத்துவிடலாம்" என்றேன்.

அன்று தொடங்கிய பயிற்சி, நேற்று வரை 45 நாட்களாயிற்று. குருவின், இறைவனின் அருளால் நல்ல முன்னேற்றம் உள்ளது. உறவினர்கள் விலகி நின்றுவிட்டார்கள். அவர் உடலும் ஒத்துழைக்கிறது. சற்று பசி எடுக்க தொடங்கியிருக்கிறது. ஓரளவுக்கு சாப்பிடுகிறார்.

"அப்படியென்றால், இன்னும் எத்தனை நாளில், உச்சநிலையை பிடிப்பதாய் நினைத்திருக்கிறீர்கள்?" என்றேன்.

"90 நாட்களில் உச்சி ஏறவேண்டும். இன்னும் 45 நாட்கள் இருக்கிறது. அதன் பிறகுதான் அவருக்கு பிராணாயாமம் வழி சர்ப்ப நிலை உருவாக்கி தசவாயு பந்தனம் பண்ண வேண்டும்" என்றார்.

இது உடலுக்குள்ளேயே  பிராணனை அடக்க செய்யும் முறை. தசவாயுக்களையும் பிராணாயாமத்தினால் நெருடி அதில் பிராணனில் மற்ற 9 வாயுக்களையும் கோர்த்து, ஒன்றுக்கொன்று விட்டுவிடாமல் இருக்கச் செய்யும் முறை. இதை, பிராணாயாமத்தில், ஆதார சக்கரங்களை தொட்டு பயிற்சி செய்பவர்களாலேயே மட்டும் செய்ய முடியும். அதற்கு, இறை அருளும் தேவை.

அடியேன் நண்பரிடம், குருவருளும், இறையருளும் இருக்கிறது.

அந்த நோய்வந்தவருக்கு, விதி விலகி, வழி விட தயாராகவும் இருந்தது.

சித்தன் அருள்................. தொடரும்!

12 comments:

 1. அகத்தீசாய நம,
  வணக்கம் அய்யா, தசைச்சிதைவு என்ற நோய்க்கு சித்த மருத்துவத்தில் மருந்து உள்ளதா;? (ஆங்கில மருத்துவத்தில் இல்லை) அப்படி இருந்தால் பதிவிடுங்கள் ஐயா நன்றி வணக்கம்

  ReplyDelete
  Replies
  1. Naattu maruthuvar Dr.sakthy subramani

   என்ற முகநூல் பக்கத்திற்கு சென்று மருத்துவரிடம் கேட்டுப் பாருங்கள்

   https://www.facebook.com/1488674551446383

   Delete
  2. gnanalayathil marunthugal kidaikkum , ask them

   http://www.enlightenedbeings.org/

   Delete
 2. ௐம் லோபமுத்ரா சமேத அகதீசாய நமக

  ReplyDelete
 3. வணக்கம்.அகத்தியர் அடியவர்கள் ஒருங்கிணைய முகநூல் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.விருப்பம் உள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம்.
  Sri அகத்தியர் லோபமுத்திரை அடியவர்கள் ஒருங்கிணைந்த முகநூல் தளம் என்று முகநூலில் தேடவும்.இன்றைய உலக நிலை பற்றி அகத்தியப் பெருமான் மற்றும் முருகப்பெருமானின் வாக்கினை இணையத்தில் படிக்க நேர்ந்தது.அதன் இணைப்பு இந்த முகநூல் குழுவில் கொடுக்கப்பட்டுள்ளது.விருப்பம் உள்ளவர்கள் குழுவில் இணைந்து தெரிந்து கொள்ளலாம்.


  https://www.facebook.com/groups/516854752566339

  ReplyDelete
 4. ஓம் அருள்மிகு மூத்தோனே போற்றி
  ஓம் அருள்மிகு அம்மை அப்பனே போற்றி
  ஓம் அருள்மிகு முருகக் கடவுள் போற்றி
  ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரை தாய் துணை

  நன்றிகள் ஐயா

  ReplyDelete
 5. எல்லாம் வல்ல குருவை வணங்கி
  அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்

  நமது குருவிடம் கொரோனா வைரஸ் பாதிக்க பட்டவர்கள் என்ன மருந்து சாப்பிட வேன்டும் பரவாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் வைரஸ் பாதிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்கவும். அக்நிலிங்கம் அவர்களே தாங்கள் தியானம் செய்யும் போது குருவிடம் கேட்டால் நிச்சயம் வழி காட்டுவார்

  ReplyDelete
 6. வணக்கம் அகத்தியர் அடியவர்களே

  நமது குருநாதர் அகத்தியப் பெருமான் இன்றைய விஷகிருமி பிரச்சினை பற்றியும் தீர்வு பற்றியும் தனது மைந்தன் வழியாக பொது வாக்கினை இன்று (11/04/2020) காலை உரைத்துள்ளார்.ஆர்வம் உள்ளவர்கள் நமது முகநூல் குழுவில் பார்த்து பயனடையவும்.
  நன்றி..

  குருவே துணை..

  ReplyDelete
 7. Tomorrow 13/04/20 my birthday please bless me thank u sir

  ReplyDelete
 8. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் எம் தாய் லோபமுத்ரா தந்தை அகத்தியர் அவர்களுக்கு.

  ReplyDelete