நண்பரின் விளக்கத்தை கேட்டு அமைதியாக இருந்தேன்.
"ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்கள். பிறரின் ஆதார சக்கரங்களை தொட்டு/தொடாமல் பயிற்சி கொடுக்கும் பொழுது உங்களுக்குள் பிராண அவஸ்தை உருவாகிறதே, அதை கவனித்தீர்களா?" என்றேன்.
"ஆம்! அதை பற்றித்தான் கேட்க வேண்டும் என நினைத்தேன். சில நாட்களில் பயிற்சி முடித்துவிட்டு திரும்பும் பொழுது, என் உடல் மொத்தமாக அசந்து போய்விடுகிறது. எப்படியோ சமாளித்து, வண்டி ஒட்டிக்கொண்டு, வீடு வந்து சேர்ந்துவிடுகிறேன். கண் பார்வையும் மறைக்கிறது. அவ்வாறு ஏன் நடக்கிறது, இதிலிருந்து விடுபட என்ன செய்வதென்று தெரியவில்லை" என்றார்.
"குருநாதரிடம் கேட்டீர்களா?" என்றேன்.
"தனிப்பட்ட மனிதர்களுக்கு குருவின் உத்தரவிருந்தால்தான் பயிற்சி கொடுக்கிறேன். ஒரு குழுவாக ஒரு கல்விக்கூடத்தில் பயிற்சி எடுக்கும் பொழுது, முன் அனுமதி பெற முடியவில்லை. ஏன் என்றால், அது ஒரு நிறுவனம். அங்கு கூடிய ஒருசிலரை மட்டும் ஏற்றுக்கொண்டு, மற்றவர்களை முடியாது என்று திருப்பிவிட என்னால் முடியாது. அதனால் தான்" என்றார்.
"உண்மைதான். சரி, இரண்டு நிலைகளிலும் பயிற்சி கொடுக்கும் பொழுது, உன்னை சுற்றி வளையம் கவசமாக போட்டுக்கொள்கிறயோ?" என்றேன்.
"மானசீகமாக மந்திரம் ஜெபித்து, என்னை சுற்றி வளையம் போட்டுக்கொள்கிறேன். இருந்தும் பல நேரங்களில் அடிவாங்கத்தான் வேண்டியுள்ளது. அவர்கள் கர்மா அத்தனை பலம் வாய்ந்ததாக உள்ளது. என்னை சுற்றிய வளையம் பலமிழந்து விடுகிறது" என்றார்.
"இந்த உலகத்தில் உள்ள மனிதர்களுக்கு ஆறறிவை இறைவன் கொடுத்தார். இதிலிருந்து மேலேறி என்னிடம் வந்துவிடு என்று. அவன் சேர்த்துக் கொண்டது அனைத்தும் கெட்ட கர்மா. பிற உயிர்களுக்கு ஐந்து வரையிலான அறிவை கொடுத்தான். அவை, தன் கர்மாவை மனிதனுக்கு கொடுத்து, அவனை கீழே இறக்கி வைத்துவிட்டு, தான் மோக்ஷத்தை வாங்கிக் கொண்டு சென்று விடுகிறது. இப்பொழுது புரிந்ததா, மனிதர்களின் கர்மாவை தொட்டால் ஏன் வலிக்கிறதென்று?" என்றேன்.
"மருத்துவம் மருத்துவருக்கு வாழ்வாதாரம் போல், யோகா பயிற்சி சொல்லிக் கொடுப்பது எனக்கு வாழ்வாதாரம். இதை தவிர்க்க முடியாது. ஏதேனும் ஒரு வழி இருந்தால் கூறுங்களேன்" என்றார்.
"பிறருக்கு உதவிட நினைத்து இறங்கும் பொழுது, எப்படியெல்லாம் ஒருவன் பாதுகாப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என அடியேனின் குருநாதர், பல வழிகளை சொல்லித் தந்துள்ளார். அதில் ஒரு வழியை நீ முயற்சித்துப்பார். உனக்கு, நல்ல கவசம் அமைகிறதா என பார்க்கலாம்" என கூறி பூஜை அறையை நோக்கி சென்றேன்.
எதிர்பார்த்துப் போனது, தேடிய உடனேயே கிடைத்தது. அதிலிருந்து பிரசாதம் சிறிதளவு எடுத்து, ஒரு சின்ன சிமிழில் வைத்து அவரிடம் கொடுத்தேன்.
"இது, மிக சக்தி வாய்ந்த தெய்வத்துக்கு, குறிப்பிட்ட நாளில், கோவிலில் பூசி பிரசாதமாக கிடைத்தது. தினமும் யோகா பயிற்சிக்கு வீட்டிலிருந்து போகும் முன்னோ, வகுப்பு தொடங்கும் முன்னோ, உன் சித்தம், இரு புருவம், தலை உச்சியில் சிறிது பூசியபின், உனக்கு உபதேசிக்கப்பட்ட கவச மந்திரத்தினால் வளையம் போட்டுக்கொள். பார்க்கலாம் அந்த கவசத்தை, பிறர் கர்மாக்கள் உடைக்கிறதா என. ஆனால் நிறைய பேர் இது என்ன, இப்படி ஒரு மணம் என்றெல்லாம் கேட்பார்கள். சாதாரண வாசனை திரவியம் என்று மட்டும் கூறு. அல்லது சிரித்து பதில் சொல்லாமல் விட்டுவிடு. ஏன் என்றால், மந்திரத்துக்கும், மணத்திற்கும், எதிர்வினை உண்டு. கவனம்!" என்றேன்.
மேலும், சிறிது நேரம் பல விஷயங்களையும் பேசிவிட்டு, அவர் கிளம்பினார்.
"அவருடைய வகுப்புதான் இன்று கடைசி. அவர் வீட்டுக்கு போய் சொல்லிக் கொடுத்துவிட்டு, என் வீட்டிற்கு போகவேண்டும்" என்றார்.
"சரி! கிளம்புங்கள்! அதற்கு முன் ஒருவிஷயம். இந்த நபருக்கு, கொடுக்கப்படும் பயிற்சி, அதன் விளைவுகள் போன்றவற்றை பற்றி எனக்கு தெரிவி. அதில் என் கேள்விக்கான பதில் கிடைக்கும் என்று குருநாதர் கூறுகிறார். அப்ப இனி என்று சந்திக்கலாம்? 15 நாட்களாகுமா?" என்றேன்.
"தெரியவில்லை, நேரம் கிடைக்கும் பொழுது வருகிறேன்" என்று கூறி சென்றார்.
அடுத்தநாளே, அவரிடமிருந்து போன் வந்தது.
"என்னப்பா! என்ன விஷயம்?" என்றேன்.
"நீங்கள் தந்த இறைவன் பிரசாதம், நல்ல வீரியமானது. அது எந்தெந்த வாசனாதி திரவியங்கள் சேர்த்து உருவாக்கப்பட்டது?" என்றார்.
"பிரசாதம் தந்தார்கள். அதுவே பெரிய பாக்கியம் என்று நினைத்து வாங்கி வந்தேன். நான் எப்பொழுதும் இறைவனின் விபூதி, குங்குமம், வாசனாதி திரவியங்கள் பூசிக் கொள்வதால், இதெல்லாம் எப்படி உருவாக்கப்பட்டது என்று விசாரிப்பதில்லை. அது சரி என்ன விஷயம்?" என்றேன்.
'அந்த பிரசாதம் நல்ல பாதுகாப்பை தருகிறது. எந்த அசதியும் வருவதில்லை. வட்டம் போட்டால் அப்படியே இருக்கிறது. அதனால்தான் கேட்டேன். நீங்கள் தந்தது 10 நாட்கள்தான் இருக்கும். அது தீரும்முன் ஒரு நாள் வந்து மேலும் வாங்கிக் கொள்கிறேன்" என்றார்.
"ஆகட்டும்! பாடத்தில் கவனமிருக்கட்டும்! யாருக்கும் தெரிய வேண்டாம்" என்று முடித்துக் கொண்டேன்.
குருநாதரிடம், தெளிவு பெறுவதற்காக, பல கேள்விகளை கேட்டிருந்தாலும், அதில் ஒரே ஒரு கேள்வியை நீங்கள் தெரிந்து கொள்ள சமர்ப்பிக்கிறேன்.
"சித்தர்கள் ஆட்சி தொடங்கிவிட்டது. இனி அதிவேகத்தில் மனிதர்கள் "சீர்"படுத்தப் படுவார்கள், என கேள்விப்படுகிறோம். ஆன்மீக தேடுதல் வழி ஒருவன் தன்னை உயர்த்திக்கொள்ள நினைத்து, மந்திரம், ஜபம், பூசை, த்யானம், யோகா போன்றவைகளை சார்ந்து நின்று தன் உள்ளே செல்லும் பொழுது, அவனை/அவளை அதிர்வுகள் தானே உணரவைக்கிறது. இந்த அதிர்வுகளை கைபிடித்து நடந்தால் ஒரு மனிதனையே மாற்றிவிடமுடியுமா? மனிதனை வாட்டும் நோய் நொடியையும் அதிர்வுகளால் சரி பண்ணிவிட முடியுமா? ஏதேனும் ஒரு அனுபவம் வழி புரியவைக்க கூடாதா?" என்றேன்.
மிகப் பெரிய அனுபவம் வழி மிகத்தெளிவான பதிலை தந்தார், குருநாதர்.
அகத்தீசாய நம
ReplyDeleteஓம் ஸ்ரீ அகத்தியர் திருவடிகளே சரணம்
ReplyDeleteஓம் ஸ்ரீ அகதீசாய நம
தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4)
ReplyDeleteஅனைவருக்கும் அன்பு வணக்கம்.
இன்றைய பதிவில் தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு சார்பில் நடைபெற்று வரும் மற்றொரு சேவை பற்றி அறிய இருக்கின்றோம். இந்த சார்வரி ஆண்டில் 4 ஆம் ஆண்டில் குருவருளால் அடியெடுத்து வைக்கின்றோம். இதனை சிறப்பிக்கும் பொருட்டு தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழுவின் அன்னதான சேவை, உழவாரப் பணி சேவை ,ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை என பார்த்தோம். இன்றைய பதிவிலும் நம் குழுவின் அடுத்த நிலை நோக்கி நகர்ந்த மோட்ச தீப வழிபாடு பற்றி தொடர உள்ளோம். அன்னதானம், உழவாரப் பணி , ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய வழிபாடு என தொடர்ந்த நாம், மோட்ச தீப வழிபாட்டின் மூலம் குருவருளைப் பற்றிடவும், பெற்றிடவும் முடிகின்றது. ஆரம்பத்தில் நாமும் மோட்ச தீப வழிபாடு பற்றி சாதாரணமாக எண்ணினோம். ஆனால் நாம் நினைப்பது தவறு என்று உணர்த்தப்பட்டு இன்றும் நம் தளம் சார்பில் மோட்ச தீப வழிபாடு செய்து வருகின்றோம்.
இனி..நாம் எப்போது மோட்ச தீப வழிபாட்டு பூசை ஆரம்பித்தோம், எப்படி முதல் வழிபாடு நடந்தது என்பது போன்ற அனுபவத்தை இங்கே காண்போம்.
Read more - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html
நீங்கள் எங்கள் குழுவில் இணைய விரும்பினால் - https://chat.whatsapp.com/HTU2NKSsjku5KHYrh6fbey
Om agathesya namaha
ReplyDeleteOm lopamudra samata agastiyar thiruvadi pottri.Thai tantaiku nandri.nin padavae saranam.
ReplyDeleteஅகத்தீசாய நமக
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
ReplyDeleteவணக்கம் ஐயா.... கோடான கோடி நன்றிகள் தங்களின் பதிவிற்கு. எனக்கு தேவையான அனைத்தையும் என் ஐயன் இங்கு தாங்களின் மூலம் தந்து எனது வாழ்க்கையை செம்மைப் படுத்துகிறார். தங்களின் சேவை என்றென்றும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்... நன்றிகள் ஐயா
Sir today appar's guru pooja,what will I do today?
ReplyDeleteவணக்கம். யாராவது ஒருவருக்கு அன்னம் கொடுத்து புண்ணியத்தை சேர்த்துக்கொள்ளுங்கள்.
DeleteSir i am eagerly waiting for guru nadhar answer
ReplyDeletePlease don't keep surprise
Please sir
குரு வாழ்க! குருவே துணை!!
ReplyDeleteSir some 7chakara's mudra and mandra awakening videos are available at youtube can I follow it?.
ReplyDeleteIs dekshai important for chakara wake up yoga.
Will Chakara changes bad karma?
What is vital play of aura in human?. I experienced one
Myth That all IAS toppers says thought and belief will bring our dream true. is thought and belief of humen have the true power?.SIR MY DREAM ABOUT MY PARENTS SPEEDY RECOVERY FROM ALL DISEASES AND I SHOULD BECOME IAS OFFICER.
Do not follow chakra awakwning instructed through You Tube. Its very dangerous. Will endup in trouble. Find out a yoga yoga master in your place/city and get it through him.
DeleteThank you for ur reply my
DeleteSmall request can I meet u at Madurai
I AM NOT IN MADURAI.
Delete