​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 2 April 2020

சித்தன் அருள் - 855 - அதிர்வலைகளும் தசவாயுக்களும்!


அதை கேட்டதும், சிறிதாக புன்னகைத்து நிமிர்ந்து  உட்கார்ந்தேன்.

நண்பர் இதை எதிர் பார்க்கவில்லை.

"என்ன! ஏதேனும் பிரச்சினையா? நான் சென்று பின்னர் வரவா?" என்றார்.

"இல்லை! சற்று பொறுங்கள்!" என்றுவிட்டு கண்மூடி அகத்தியப்பெருமானை தியானித்து நன்றி கூறினேன்.

"முன்னர் அகத்தியப் பெருமானிடம் சில கேள்விகள் கேட்டிருந்தேன். ஒரு வழியை காட்டி அந்த பாதையில் செல்க! என சொல்கிறார்" என்றேன்.

"சரி! நீங்கள் தொடருங்கள்" என்றேன்.

"அவருக்கு வயது 42. சில மாதங்களுக்கு முன் வரை வெளி நாட்டில் நல்ல வேலையில் இருந்தார். நல்ல சம்பாத்தியம் அவருக்கு. கூடவே சிறு குடும்பமும். மனைவி, 12 வயதான மகள். உடலில் அடிக்கடி அசதியும், சுரமும் வரத்தொடங்கிய பொழுது, அங்கிருக்கும் மருத்துவமனையில் காட்டி சிகிர்சை பெற்றார். முதலில் நல்ல பலன் அளித்த சிகிர்சை, பின்னர் பலனளிக்காமல் போகவே, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது நுரையீரல் முழுவதும் கண்டமாலையால் பாதிக்கப்பட்டுவிட்டது என கண்டறிந்தனர். அதை அவருக்கு தெரிவித்ததும், மொத்தமாக உடைந்து போனார். உடனேயே ஒரு தீர்மானம் செய்து, மனைவி, மக்களை அழைத்துக் கொண்டு, வேலையை உதறிவிட்டு, இங்கு வந்து விட்டார். இங்கே, அரசாங்க மருத்துவமனையில் அதற்கான சிகிர்சையை மேற்கொண்டார்.

நாள் செல்லச்செல்ல, அவர் உடல் இளைத்துக்கொண்டே வந்தது. நோயும், கூடியதே அன்றி, குறையவில்லை. ஒருநாள், அவருக்கு சிகிர்சை அளித்த மருத்துவர்கள், குடும்பத்தினரை அழைத்து, இனிமேலும் சிகிர்சை கொடுப்பதில் அர்த்தமில்லை. இனிமேல், அவர் ஒரு மாதம்தான் வாழ்வார். வீட்டிலேயே வைத்து, அவருக்கு என்னென்ன பிடிக்குமோ, அந்த உணவு வகைகளை செய்து கொடுத்து, அவரை கவனித்துக் கொள்ளுங்கள். மருத்துவமனைக்கு வரவேண்டம், எனக்கூறி அனுப்பிவிட்டனர்.

ஒரு இட்லியை நான்கு துண்டுகளாய் மாற்றி, அதில் ஒரு துண்டு இட்லியை 30 நிமிடம் சுவைத்துத்தான் அவரால் உண்ணமுடியும் என்கிற நிலைக்கு மாறிவிட்டார்.  அவருக்கு நிறைய உறவினர்கள். விஷயத்தை கேள்விப்பட்ட அனைவரும், ஒவ்வொரு நாள், ஒவ்வொரு நேரம், ஏதேனும் உணவை அவர் சாப்பிட கொண்டு வந்து கொடுத்தனர். இவராலோ, எதுவும் சாப்பிட முடியாத நிலை." என்று நிறுத்தினார்.

"சரி! எது உங்களை இந்த சூழ்நிலைக்குள் இழுத்து கொண்டு வந்து மாட்டிவிட்டது?" என்றேன்.

"அவருக்கும், எனக்கும் பொதுவான ஒரு நண்பர் சில நாட்களாக என்னை தேடிக் கொண்டிருந்தார். நானோ நேரமின்றி அலைவதால் அவரை சந்திக்க முடியவில்லை. ஒருநாள் விடியற்காலையில், வீட்டில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு திறந்து பார்த்தால், இவர் நின்று கொண்டிருந்தார்."

"ஆச்சரியப்பட்டு, என்ன இந்த நேரத்தில்? என்று வினவ, முன்னர் சொன்ன அவர் நண்பரின் விஷயம் அனைத்தையும் கூறினார்."

"சரி! இதில் நான் என்ன செய்ய வேண்டும்? எதற்காக நான்! என்றேன்."

"நீ யோகா சொல்லிக்குடுக்கிறே! என் வேறொரு நண்பர் உன்னை கைகாட்டி விசாரிக்க சொன்னார். இறை அருள் இருந்தால், யோகசூத்திரத்தில் ஒருவரின் எந்த வியாதியையும் விரட்டுகிற சிகிர்சை வழி உண்டு. அவன் யோகா வகுப்பெடுப்பதால், விசாரித்துப் பாருங்கள் என்றார். அதனால்தான் வந்தேன்." என்றார்.

"அவன் மகளுக்கு 12 வயதுதான் ஆகிறது. அந்த குழந்தைக்கு, தகப்பனை, திருப்பி வாங்கி கொடுக்க முடியுமா?" என்று மிக எதிர்பார்ப்புடன் வினவினார்.

"ஹ்ம்ம்! இப்பொழுது புரிகிறது, நீ ஏன் இதில் இறங்கினே என்று! சரி சொல்லு" என்றேன், அடியேன்.

"சற்று அவகாசம் கொடுங்கள். யோசித்து சொல்கிறேன். நேரமின்மை என்பது என்னை விரட்டுகிறது. எல்லாவற்றுக்கும் மேல், இறை அருள்/அனுமதி வேண்டும், குருநாதர் அனுமதித்து அருள வேண்டும். இவை கிடைத்துவிட்டால் மட்டும் போதாது, அவரிடம் நேர்மை வேண்டும், "நான் உயிர் வாழ வேண்டும்" என்கிற நேர்மையான எண்ணம் எப்போதும் வேண்டும். இவை எல்லாம் ஒன்று சேர்ந்து, உறவுகள் அனைத்தும் அவரிடமிருந்து விலகி நிற்க தயார் என்றால், பார்க்கலாம். எனக்கும் மகள் இருக்கிறாள். புரிந்து கொள்ளுங்கள்" என்றேன்.

"சரி யோசித்து சொல்லுங்கள்! அவர் பக்கத்திலிருந்து என்னென்ன அவர் செய்யவேண்டுமோ, அத்தனைக்கும் நான் உறுதி அளிக்கிறேன். எப்பொழுது கூப்பிட்டு வரச் சொல்கிறீர்களோ அப்பொழுது நான் வந்து உங்களை அவர் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன்" என்று கூறி சென்றார்.

"என் விண்ணப்பத்தை இறைவனிடமும், குருநாதரிடமும் சமர்ப்பித்து பதிலுக்காக காத்திருந்தேன். பிறகு அன்றைய தின வேலைகளில் மூழ்கி, இதை மறந்து போனேன்" என்றார்.

சித்தன் அருள்........................ தொடரும்!