அகத்தியப் பெருமான் அருள் வாக்கு
எம்மை நாடி வருகின்ற மனிதனின் விதியை அனுசரித்து, இறைவனின் கட்டளையையும் அனுசரித்துத்தான் நாங்கள் வாக்கை கூறுவோம். இதழில் ஓதப்படுகின்ற விஷயங்கள் ஏற்புடையதாக இல்லை, நம்பக்கூடியதாக இல்லை என்று கூறுவது கூட, ஒரு மனிதனின் தனி சுதந்திரம். இகுதொப்ப நிலையிலே மீண்டும், மீண்டும் கூறுவது என்னவென்றால், அறம், சத்தியம், பரிபூரண சரணாகதி தத்துவம், இவற்றை கடைபிடித்தால், கடுமையான விதி, மெல்ல, மெல்ல மாறத் துவங்கும். எடுத்த எடுப்பிலேயே மாற்றத்தை எதிர்பார்த்தால், மாற்றம் வராது, ஏமாற்றம்தான் வரும் என்பதை புரிந்து கொண்டு ஒவ்வொரு மனிதனும் இறை வழியில், அற வழியில், சத்திய வழியில் நடக்க, எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் என்று கூறி, நல்லாசி கூறுகிறோம். ஆசிகள்.
