வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
"சித்த மார்கத்தில்" நுழைந்து கவனித்த பொழுது, பல நேரங்களில் சித்தர்கள் உதிர்த்த அறிவுரைகள், உங்கள் அனைவருக்காக!
- ஒரு செயலை செய்யும் பொழுது, சிரித்து இளிச்சவாயனாக இரு, கவனத்தில் சிவமாக இரு, உருவாக்குவதில் பிரம்மனாக இரு! அங்கு தெய்வம் சூழ்ந்து நிற்கும்.
- இறைவனிடம், நீ கொடுத்த வாழ்க்கை என்று பக்தியோடு இரு.
- "சித்து" என்பது, யோகம், ஞானம் என்பவற்றில் நிறைவு என்று பொருள்.
- தன்னை உணர்ந்தவன் ஞானி, தன்னில் இறைவனை கண்டவன் யோகி.
- வாய்மையும் தூய்மையும் கொண்டவன் யோகி.
- சிந்தை தெளிந்திருப்பான், அவனே சித்தன்
- சிவத்தை தன்னுள் கண்டவன் சித்தன்.
- ஏகாமல் வாசனையை அடித்தோன் சித்தன்.
- நோக்கமின்றி திரிவான் சித்தன்.
- பதி (இறை) எண் சித்தர்களே பதினெண் சித்தர்களாயிற்று.
- சித்தர் பாடல்கள், அவர்களின் அனுபவப்பாடம்!
- மனம் பண்பட்டுவிட்டால் யோகமும் ஞானமும் தேவை இல்லை.
- மனம் அது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டா
- முற்றிய கதிரே தன்னடக்க தலைகுனிவு.
- உண்மை பேசுவதே கலியுக தவம்.
- மனம் வாக்கு சரீரம் அசைவற்று இருப்பதே நிட்டை.
- பொறி புலன்களுடன் கூடினும், பற்றற்ற ஆன்மாவாகி தன்னை காண்பதே சமாதி.
- நான், நாமம், ரூபம் இழந்த நிலை சமாதி.
- ஞானம் முழுமை பெறும் வேளை சமாதி வாய்க்கும்.
- மாசற்ற மனம் உடையோர், மந்திரம் உருப்போடும் அவசியமில்லை.
- ஓம் எனும் பிரணவத்தை உண்ணும்பொழுதும், உறங்கும் முன்னரும் கீழிருந்து மேல் உயர்த்திட கூற்றுவன் பிடி சிக்கும் நிலை விலகிப்போகும்.
- உன்னை அறிந்துகொள், உண்மை அறிந்தபின் மற்றவற்றை உதறிவிடுவாய்.
- உன் தேகமே ஞான வடிவம்.
- தீர்த்தங்களாடி தீவினைகளை போக்க முடியாது. நல்வினை இருப்பின் நாதனை காண்பாய்.
- சும்மா இரு, நான் அற்றுப்போகும். மௌனத்தில் உண்டு ஆனந்தம்.
- இறைவனை முறைகளில் தேடாதே, அவன் முறைகளுக்கும் அப்பால் மறைந்திருப்பவன்.
- பிரணவம் விரிந்து உருவானதே பிரபஞ்சம்!
- ஓம் என்பதே ஆதி அட்சரம்.
- அகமுக பயணம் ஆண்டவனை உணர்த்தும்.
- மனம் என்ற குதிரைக்கு, மதியே கடிவாளம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

No comments:
Post a Comment