ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன், அகத்தியன்.
அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்.
( பகுதி 3..அதன் தொடர்ச்சியாக…)
(மதிய உணவு முடித்த பின்னர் மீண்டும் வாக்குகள் ஆரம்பமானது ……)
குருநாதர்:- அப்பனே, நல் வழிகளாக அனைத்தும் எதை என்று புரிய, அனைத்து குழந்தைகளுக்கும் ஆசிகள்.
அதாவது ஒவ்வொரு ஞானியைப் பற்றியும் நிச்சயம் தெரிந்து கொண்டால், அவ் ஞானியின் ஆற்றல் நிச்சயம் பல வழிகளில் கூட யான் சொல்லியிருக்கின்றேன்.
இதனால் நிச்சயம் பெற்று, நன்காகவே பின் நிச்சயம் தன்னில் கூட அறிவுகள் பலப்படும்.
இதனால் நன்காகவே ஓதி, அனைத்து நலன்களும் ஏற்படும்.
குருநாதர்:- இதனால் அனைத்து ஞானிகளையும் கூட போற்றி, பின் இவர்களையும் சொல்லித் தர நன்று, நிச்சயம் தன்னில் கூட.
சுவடி ஓதும் மைந்தன்:- எல்லாருக்கும் என்ன பண்ண சொல்றங்கன்னா… ஞானிகள் இருக்காங்க இல்ல… ஞானிகள் போற்றி, அதை நீங்க படிங்க. இவங்க சொல்லுவாங்க, அந்த ஞானிகள் போற்றி படிக்கும் பொழுது, இவங்க சொல்லுகின்ற பொழுது, அந்த ஞானிகள் கூட வந்து அருள் ஆசிகள் கொடுக்கட்டும் குழந்தைகளுக்கு என்றார் வந்து. அதனால எல்லாரும் சொல்லணும்.
குருநாதர்:- அழகாக, குழந்தைகளே, உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேளுங்கள்.
சுவடி ஓதும் மைந்தன்:- அகத்திய பெருமான் ஒரு சான்ஸ் கொடுக்கிறார்:
சுவடி ஓதும் மைந்தன்:- யாருயாருக்கு என்ன வேணுமோ, அவர் கேட்கிறார். அதனால, உங்களுக்கு என்ன வேணுமோ, யாராவது ஒருத்தர் உங்களுக்கு என்ன வேணுமோ, இங்க வந்து முன்ன கேளுங்க. அகத்திய பெருமான் அதுக்கு பதில் சொல்வார்.
மாணவி 1:- கல்வி வேண்டும்.
குருநாதர்:- தாயே, நல்விதமாக அனைவரும் எதை என்று கூற, பின் அனைவருக்கும், இவ்வுலகத்தில் உள்ள அனைவருக்குமே கல்வி வேண்டும் என்று இறைவனிடத்தில் அனுதினமும் பிரார்த்தனை, பின் நிச்சயம் வைத்துக்கொண்டே இரு. நிச்சயம் எவை என்று புரிய, அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கும் என்று….. உனக்கு தானாக கிடைக்கும்.
சுவடி ஓதும் மைந்தன்:- சரியா? பாப்பா, கல்வி வேண்டும்னு சொல்லுச்சு நல்லா. அதனால, எல்லாருக்காக நீ வேண்டிக்கோ. உலகத்துல எத்தனை பேர் உன்ன போல இருப்பாங்க வந்து. அதனால, எல்லா குழந்தைகளுக்கும் நல்ல கல்வி அறிவு வேண்டும். அதான் ஏழைகளுக்கு அதான் சொன்னாருல, அப்பவே வந்து ஒன்னும் சாப்பாடு இல்லாம, ஒண்ணுமே இல்லாம, அப்பா அம்மா இல்லாம, ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்க. ஓகேங்களா? அவங்களுக்காக நீ வீட்ல வந்து நல்லா வந்து விளக்கேத்தி, நல்லா வந்து வணங்கு. உனக்காக இறைவன் எல்லாம் செய்வார்.
மாணவி 2:- நான் படிக்கிறதுக்காக கேக்குறேன். ரொம்ப கஷ்டப்படுறாங்க. நான் பெரியாளாக வந்து, அவங்க கஷ்டப்படாம பாத்துக்கணும்.
குருநாதர்:- தாயே, எதை என்று புரிய, பின் ஏற்கனவே தெரிவித்துவிட்டேன்.
நல்விதமாக எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட அவ்வாறு நினைக்காமல், நிச்சயம் தன்னில் கூட அனைத்து பின் பெற்றோர்களும் நன்றாக இருக்க வேண்டும்.
தன் தன் குழந்தைகளுக்கு என்னென்ன பின் தேவையோ, அனைத்தும் பின் செய்ய வேண்டும்.
இதனால் பெற்றோர்களுக்கு நல்விதமாக, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது உடம்பு தன்னில் கூட, உபாதை இருக்காமல், நல் பின் எதை என்று புரிய, பின் நல் செல்வத்தையும், நல் பின் புத்தியையும், நல் எவை என்று புரிய, அனைத்தையும் கொடுத்து, அனைத்து குழந்தைகளையும் கூட, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது என் போல், பின் யோசித்து, நிச்சயம் தன்னில் கூட யானும் நன்றாக இருக்க வேண்டும்.
பின் யானும், பின் தாய் தந்தையையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நிச்சயம் இவ்வுலகத்தையும், பின் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று, நிச்சயம் தன்னில் கூட அழகாக, அனுதினமும் இறைவனை நினைத்து, நிச்சயம் நினைத்து, நினைத்து, நிச்சயம் தன்னில் கூட,
பின் இறை வழிபாட்டை, நிச்சயம் தன்னில் கூட, அனைவருக்கும், பின் எவை என்று புரிய, பின் அனைத்தும் சொல்.
பின் இவ்வாறாக வேண்டிக்கொள்ளுங்கள்.
நன்றாக, பின் படியுங்கள். எதை என்று புரிய, நன்றாக படியுங்கள்.
நன்றாக படித்தால், தாய் தந்தையரும், பின் கஷ்டம் இல்லாமல் பார்த்துக்கொள்ளலாம்.
பின் அதேபோல், உலகத்தில் உள்ள எத்தனையோ ஏழை குழந்தைகள் இருக்கின்றது.
அவர்களுக்காகவும், நிச்சயம் தன்னில் கூட, பின் யாம் உழைப்போம்.
குருநாதர்:- இதனால் யாம் முன்னுக்கு வந்து, அனைவரையும் காப்போம். இவ் தேசத்தை காப்போம் என்று, நிச்சயம் வேண்டிக்கொள், தாயே. அனைவரிடத்திலும் நீ சொல்ல வேண்டும். சொல்.
சுவடி ஓதும் மைந்தன்:- அகத்திய பெருமான் என்ன சொல்றாரு தெரியுங்களா? அகத்திய பெருமான் என்ன சொல்றாருன்னா, இந்த பாப்பாக்கு… என்ன கேட்டாங்க கேள்வி? நான் நல்லா படிச்சு, தாய் தந்தையர் பார்த்துக்கணும்னு சொல்றாரு. அதே மாதிரி, இந்த உலகத்தில் உள்ள எத்தனை பேர் குழந்தைகள் எல்லாம் இருக்காங்க. எல்லாருக்காக வேண்டிக்கோங்க. நல்லா இருக்கணும், நல்லா படிக்கணும். அப்படி எல்லாம் வந்து நீ வேண்டிக்கணும்னா, நானும் அதே மாதிரி வந்து, தாய் தந்தை நல்லா இருக்கணும். மத்தவங்களையும் நான் வாழ வைக்கணும். இந்த உலகத்தையும் காக்கணும். அப்படி வேண்டிக்க சொல்றாரு. டெய்லி வேண்டிக்கிட்டீங்கன்னா என்ன பண்ணுவாங்க? இறைவன் ஆசீர்வதித்தால, எல்லாமே கொடுப்பாங்க. எல்லாமே நல்லா இருப்பாங்க. ஓகேங்களா?
சுவடி ஓதும் மைந்தன்:- உனக்கு என்னப்பா வேண்டும்?
மாணவர் 3:- நல்ல கல்வியும், நல்ல ஒழுக்கமும் வேணும்.
குருநாதர்:- அப்பனே, அனைத்தும் கொடுக்க தயார் என்பேன். அப்பனே, ஆனாலும் நீ, அப்பனே, முதலில் அப்பனே, நிச்சயம் அனைவருக்கும் சொல்லித்தா. இங்கிருந்து, அப்பனே, பின் தாய் தந்தையரை முதலில் வணங்க வேண்டும். பின் குருவை வணங்க வேண்டும் என்று.
மாணவர் 3:- (அங்குள்ள அனைவருக்கும் தெரிவித்தார்) அப்பா, அம்மாவை எல்லாரும் காலையில வணங்க வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன்:- அப்புறம் குருவை வணங்க வேண்டும்.
மாணவர் 3:- அப்புறம் குருவை வணங்க வேண்டும்.
குருநாதர்:- குருவை, பின் எதை என்று புரிய. குருவை, அதாவது பின் வணங்கி என்ன சொல்கின்றானோ, அதை கேட்க வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன்:- சொல்லுங்க, குருவை வணங்கி, குருவானவர் என்ன சொல்கின்றாரோ, அதை கேட்கணும்.
மாணவர் 3:- குருவை வணங்கி, குருவானவர் என்ன சொல்கிறாரோ, அதை கேட்கணும்.
குருநாதர்:- நிச்சயம் கேட்பீர்களா என்று நீயே கூறு.
சுவடி ஓதும் மைந்தன்:- எல்லாரும் இது மாதிரி செய்வீங்களா? கேட்பீங்களா? கேளுங்க.
மாணவர் 3:- எல்லாரும் இது மாதிரி செய்வீங்களா? கேட்பீங்களா?
மாணவ மாணவிகள் :- (ஒருமித்த குரலில் ) செய்வோம்
குருநாதர்:- அப்பனே, தானாக இப்படி செய்தால், தானாக ஒழுக்கம் வந்துவிடும் அப்பா. அப்பனே, அனைத்தும் கிடைத்துவிடும் அப்பா.
சுவடி ஓதும் மைந்தன்:- இது மாதிரி செஞ்சீங்கன்னா, தானா ஒழுக்கம் வந்துரும். தானா எல்லாமே கிடைச்சிரும்.
சுவடி ஓதும் மைந்தன்:- உட்காருப்பா. அகத்தியரை என்ன கேட்க போற?
மாணவர் 4:- அம்மா, அப்பா நல்லா பாத்துக்கணும்.
மாணவர் 4:- அம்மா, அப்பாக்கு உழைச்சு நான் சாப்பிடணும்.
குருநாதர்:- அப்பனே, எழுது. இதை யான் கொடுத்து விடுகின்றேன் . அப்பனே. நீ மற்றவர்களுக்காக என்ன செய்வாய்?
சுவடி ஓதும் மைந்தன்:- நான் இது வந்து, நான் வந்து கொடுத்துறேன். உனக்கு ஆசி. மத்தவங்களுக்காக நீ என்ன செய்யப் போகின்றாய்? கேக்குறாரு அகத்தியர்.
மாணவர் 4:- …….
சுவடி ஓதும் மைந்தன்:- அடுத்து என்ன செய்ய போற? உங்க அப்பா, அம்மாவை இறைவன் பார்த்துப்பார்.ஆசிகள் கொடுத்துட்டார். நீ அடுத்தது என்ன செய்ய போற எல்லாருக்கும்?.
மாணவர் 4:- அடுத்து படிக்காதவங்களுக்கு எல்லாம் படிக்க வச்சு, அவங்க சாப்பாடு எல்லாம் போடணும்.
குருநாதர்:- அப்பனே, எதை என்று புரிய நிச்சயம் எம்முடைய ஆசிகள். நிச்சயம் செய்வாய் வருங்காலத்தில் அப்பனே,
சுவடி ஓதும் மைந்தன்:- இதே போலத்தான், இதே போலத்தான் என்ன வேண்டும். நம்ம நல்லா படிச்சிட்டு, பெரிய ஆளாகி, எல்லாருக்கும் கல்வி இல்லாதவர்களுக்கு எல்லாம் வந்து, கல்வி கொண்டு வந்துட்டு, சாப்பாடும் கொடுக்கணும். ஓகேவா? சந்தோஷம். அதெல்லாம் உங்களுக்கு ஆசி கொடுத்துட்டாருப்பா. ரொம்ப சந்தோஷம். அடுத்து,
மாணவி 5:- இந்த உலகத்துல நிறைய பேர் இயற்கை அனர்த்தங்கள் எல்லாம் வந்து, நிறைய பேர் எல்லாம் அவங்க உடமைகள் எல்லாம் இழந்துட்டாங்க. அந்த மாதிரி இனிமேல் எதுவும் நடக்காம இருக்கனும்.
(இயற்கை அனர்த்தங்கள் - இயற்கையின் மாற்றங்களால் தாமாகவே ஏற்படுபவை (எ.கா: நிலநடுக்கம், சுனாமி, வெள்ளப்பெருக்கு, சூறாவளி, மண்சரிவு, வறட்சி, எரிமலை வெடிப்பு) )
குருநாதர்:- தாயே, நிச்சயம் தன்னில் கூட ஒழுக்கத்தை கடைபிடித்தாலே, மனிதன் அனைத்தும் எதை என்று கூட, இறைவன் ஏது என்று புரிய, எதுவும் செய்ய மாட்டான் தாயே. இதனால் நிச்சயம் தன்னில் கூட வருங்காலத்தில் ஒழுக்கத்தை கடைபிடித்தால், அழிவுகள் என்று வளராது தாயே. ஒழுக்கத்தை பயன்பட, பின் அதாவது, நிச்சயம் பயன்படுத்த எவை என்று கூட, நிச்சயம் பயன்படுத்த வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன்:- ஒழுக்கத்தை பயன்படுத்த வேண்டும். கடைபிடிக்க வேண்டும். ஒழுக்கத்தை யார் ஒருவன் சரியாக பயன்படுத்துகின்றானோ, அதுக்கு வந்து உலகம் அழியாது.
குருநாதர்:- தாயே, நிச்சயம் சிறு குழந்தையாக இருந்து, பெரிய கேள்வி கேட்டுவிட்டாய். நிச்சயம் யான் காப்பாற்றுவேன். கவலைகள் வேண்டாம்.
மாணவி 5:- எல்லாரும் ஒழுக்கமா இருங்க.
சுவடி ஓதும் மைந்தன்:- ஐயா, எல்லாரும் ஒழுக்கமா இருக்கணும். ஒழுக்கம்னா என்ன? தாய் தந்தையர் பேச்சு கேட்கணும். ஆசிரியர் பேச்சு கேட்கணும்.. ஆசிரியர் அவர் என்ன சொல்றாரோ, அதை கேட்கணும். அதுதான் ஒழுக்கம். ஆசிரியர் சொல்றது யார் ஒருத்தர் கேக்குறாங்களோ, அந்த உலகத்துல பெரிய ஆள் ஆகலாம். ஆசிரியர் சொல்றது யார் ஒருத்தர் கேட்காமல் போனாங்களோ, அவங்க ஒன்னும் படிப்பே வளராது. வந்து அதனால குரு சொல்வதை சத்தியமா கேட்கணும். ஓகேங்களா? எல்லாரும் சொல்லுமா? அதே மாதிரி சொல்லுங்க. ஃபர்ஸ்ட்ல சொல்ற மாதிரி, தாய் தந்தையரை வணங்கணும். முதல்ல வீட்ல இருந்து, தாய் வணங்கணும். அப்புறம் குரு வணங்கணும். குரு பேச்சை கேட்கணும். எல்லாரும் சொல்லுங்க.
மாணவி 5:- தாய் தந்தையரை வணங்கணும். குருவை வணங்கணும். குரு சொல்றதை கேட்டு நடந்து கொள்ளவேண்டும்.
மாணவர் 6:- நான் போலீஸ் ஆகி, தீமை செய்றவங்களை நான் திருத்தணும் .
குருநாதர்:- அப்பனே, நல்விதமாக அனுதினமும், பின் ஏற்கனவே சொன்னேன். தாய் தந்தையரை வணங்கி, குரு சொல்வதை கேள். நிச்சயம் அதேபோல ஆகுவாய் என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன்:- அவர் என்ன கேள்வி கேட்டார்…… சந்தோஷம். இதேபோல், எல்லாரும் ஐஏஎஸ், ஐபிஎஸ், பெரிய பெரிய பதவியில வந்து, நல்லா படிச்சு மக்களை காப்பாத்தணும். எப்படி பண்ணனும்? மக்களை காப்பாத்தணும்.
மாணவர் 7 :- போதை பொருள் எல்லாம் யூஸ் பண்றோம். அதை தடுக்கணும்.
குருநாதர்:- அப்பனே, சிறுவயதிலிருந்து பெரிய, அதாவது பெரிய கேள்வி கேட்டுவிட்டாய்.
அப்பனே, நிச்சயம் தன்னில் கூட….
***** வருங்காலத்தில், அப்பனே, சிறு குழந்தைகள் தான் பெரிய தூண்கள் என்பேன் அப்பனே. *****
அதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இறைவன்….
அப்பனே, நிச்சயம் அதற்காகத்தான் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட
சில அழிவுகளை ஏற்படுத்தி, அப்பனே, நிச்சயம் பாடம் புகட்டுவான் என்பேன் அப்பனே.
குருநாதர்:- நிச்சயம் அப்பனே, அனைவரும், அப்பனே, இதுபோல் என்ன வேண்டும்….
சுவடி ஓதும் மைந்தன்:- இறைவன் வந்து சில அழிவுகளை ஏற்படுத்தி, மனிதனுக்கு அறிவை புகுத்தி வைப்பார். நீங்க எல்லாமே சிறு குழந்தைகள். இதே, இதே போலத்தான் எல்லாருமே என்ன எண்ண வேண்டும்? நம்ம பெரிய ஆளாகி, எல்லா போதைகளும் தடுக்கணும். அருமையான கேள்வி கேட்டார். அதனால, நீங்கள் என்ன பண்ணனும்? விழிப்புணர்வு ஏற்படுத்தணும். எல்லாம் உங்களால முடியும். குழந்தைகளால் முடியும்ன்றார்.
குருநாதர்:- அப்பனே, ஆசிகள் கொடுக்கின்றேன். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே, பின் தடுப்பாய் என்பேன் அப்பனே, நிச்சயம்
சுவடி ஓதும் மைந்தன்:- கண்டிப்பா நீ தடுப்ப. ஆசிகள் கொடுத்துட்டார். இன்னும் பெரிய, நல்லா படிச்சு, படிச்சு, நீ கண்டிப்பாக சேவை செய்வாய்.
மாணவர் 10 :- அப்பா, கண் பார்வை சரியாகணும். நல்லா படிச்சி அவங்களை பார்த்துக்கணும்.
குருநாதர்:- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட கவலை வேண்டாம் என்பேன் அப்பனே. எதை என்று புரிய யான் பார்த்துக் கொள்கின்றேன். இதேபோல், நன்றாக, அப்பனே, பின் படித்து, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அனைவருக்கும், அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, கண் இழந்தோருக்கெல்லாம் சேவை செய்வாய் அப்பனே, இப்பொழுது ஆசிகள் தந்து விடுகின்றேன். கவலைகள் வேண்டாம்.
சுவடி ஓதும் மைந்தன்:- இவர் என்ன சொல்றாரு தெரியுங்களா? கண்டிப்பாக நீ பெரியவனாகி, எல்லாருக்கும் கண் சம்பந்தப்பட்டதெல்லாம் நீ எல்லாருக்கும் செய்வேன்ட்டார். அப்பாக்கு வந்து கண் தெரியல. அவருக்கு வந்து அகத்திய பெருமான் பார்த்துப்பார். அடுத்து நீ பெரிய ஆளாகி என்ன பண்ணுவ? என்ன பண்ணுவ?
மாணவர் 10 :- டாக்டர் ஆகி , (சுகம் இல்லாதவர்கள்) அனைவரையும் சுகமாக்குவேன் (குணப்படுத்துவேன்).
சுவடி ஓதும் மைந்தன்:- டாக்டர் ஆகி சுகம் சுகமாக்குவார். சரிங்களா? அதே மாதிரி நீ பெரிய ஆளாகி வந்து எல்லாருக்கும் சுகமாக்குவார். நல்லா படிப்பேன்ட்டார். அகத்திய பெருமான் பார்த்து பாருங்க.
சுவடி ஓதும் மைந்தன்:- எல்லாருக்கும் சந்தோஷம். எல்லாருக்கும் இந்த கூட்டுப்பிரார்தனையை ஏற்படுத்தினதுக்கு எல்லாருக்கும் ஆசிரியருக்கும், ஆசிரியர் பெருமக்களுக்கும் நல்லா சந்தோஷம். இது மாதிரி வந்து இந்த காலகட்டத்துல, நல்லது சொல்றவங்களுக்கு ஆளே இல்லை. அதனால இறைபக்தி எல்லாருக்கும் புகட்டணும். இறைபக்தி எல்லாருக்கும் புகட்டணும்னா நல்ல எண்ணங்களை தோன்றி, பெரிய ஆளாகி இந்த உலகத்துக்கு சேவை செய்யலாம்.
சுவடி ஓதும் மைந்தன்:- எல்லாருக்கும் ஆசிகள். அப்பவே அகத்திய பெருமான் சொல்லிட்டாரு. எல்லாரும் உங்களை பார்த்துட்டு ஆசிகள் கொடுத்துட்டாங்க. அதனால எல்லாருமே நல்லா இருப்பீங்க. இதேபோல் எப்பவுமே ஒழுக்கத்துடன் தாய் தந்தையரை மதித்து, ஆசிரியர் சொல்வதை கேட்டு, அப்படியே நடந்து வாருங்கள். ஓகேங்களா? சந்தோஷம், ஐயா. ரொம்ப சந்தோஷம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)

No comments:
Post a Comment