​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 9 October 2026

சித்தன் அருள் - 2334 - அன்புடன் அகத்தியர் - கோலாலம்பூர் கூட்டு பிரார்த்தனை வாக்கு - 4 !



ஆதி சிவசங்கரியின்  பொற்  கமலத்தை  பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் லோபா முத்திரையோடு. 

( பகுதி 3 அதன் தொடர்ச்சியாக……) 

குருநாதர்:-  எதை ஏது எது என்று புரிய,  இதனால் நிச்சயம் தன்னில் கூட. அதனால்தான் என் பக்தர்களுக்கு, அதாவது இத்தேசத்தில் உள்ள பின் அன்பானவருக்கெல்லாம் நிச்சயம் தன்னில் கூட, எது என்று கூற பின் அறிவுகளை  பின் பலப்படுத்தி முதல் தரத்தில் நிச்சயம் தன்னில் கூட பின் வைக்கப் போகின்றேன் வருங்காலத்தில் கூட. 

சுவடி ஓதும் மைந்தன்:- அதனால்தான் யாரெல்லாம் நல்லவர் இருக்கிறார்களோ, யாரெல்லாம் நல்ல மனசோட அன்பை வந்து யார் தர்மத்தை கடைபிடிக்கிறார்களோ, அவங்களை  என்ன பண்ணுவாராம் ? எல்லா உண்மையை எல்லாம் சொல்லி… 

அடியவர் :- அவர்களை உயர்த்துவாராம் 

சுவடி ஓதும் மைந்தன்:- ஃபர்ஸ்ட் ரேங்க் எடுத்து வைப்பாராம். 

சுவடி ஓதும் மைந்தன்:- ஆமாம் அய்யா. ஹை ரேங்கிங் எடுக்க  வைப்பாராம்.

குருநாதர்:-  எதை என்று புரிய  இதனால் நிச்சயம் தன்னில் கூட எவ்வாறாக, இவ்வூரிலிருந்து கொண்டு எது என்று புரிய  நிச்சயம் தன்னில் கூட, இவ்வூரின் வரலாறே தெரியாமல் இருக்கின்றார்கள். என்ன லாபம்?

அடியவர் :-  அதாவது இந்த ஊரில் இருந்து கொண்டே அறியாமையினால் வரலாறே தெரியாமல் இருக்கிறார்கள். 

சுவடி ஓதும் மைந்தன்:-  என்ன லாபம்? 

அடியவர் :-  இதுவே உங்களுக்கு தெரியவில்லை அப்படின்னு வருத்தமாக பீல் பண்றாரு 

(அகத்திய மாமுனிவரின் ரகசிய ஆராய்ச்சி கூடம்)

குருநாதர்:-  அப்பா எதை என்று கூற பின் ஆராய்ச்சி கூடத்தையும்  கூட, ஒரு இடத்தில், ஒரு மலையில் அமைந்திருக்கின்றது என் ஆராய்ச்சி கூடம். அதனையும் வருங்காலத்தில் எங்கு இருக்கின்றது உங்களுக்கு சொல்கின்றேன். 

சுவடி ஓதும் மைந்தன்:-   ஆராய்ச்சி கூடம்.  ஆராய்ச்சி கூடம் என்றால் என்னதுங்க ஐயா?  

அடியவர் :-  ரிசர்ச் லேபாரட்டரி (Research Laboratory).  

சுவடி ஓதும் மைந்தன்:-  அது வந்து எங்கேயோ அமைச்சிருக்காங்க 

அடியவர் :-  இங்க ஏதோ ஒரு மலையில இருக்கு 

சுவடி ஓதும் மைந்தன்:-   இங்க மலையில இருக்குதாம். அதையும் உங்களுக்கு யான் காண்பிக்க போகின்றேன் என்று சொல்கின்றார். 

குருநாதர்:-  என்னென்ன எவை என்று கூற, செய்தேன் என்பவை எல்லாம், நிச்சயம் தன்னில் எத்தனை எத்தனை நிச்சயம் ரிஷிகள் எல்லாம் வந்தார்கள் எல்லாம்  இங்கு,  இத்தேசத்திற்கு  என்றெல்லாம் உங்களுக்கு அழகாக விளக்குவேன் ஒரு நாள். 

குருநாதர்:-  எதை ஏது என்று புரிய,  நிச்சயம் தன்னில் கூட, அதே எவை என்று புரிய,  நிச்சயம் தன்னில் கூட, சில ( … ஆடியோ தடங்கல்கள்… )  எவ்வாறு என்பதெல்லாம்.  

இப்பொழுது நிச்சயம் தன்னில் கூட இங்கு இருக்கின்றானே  பெரிய முருகன் பின் எவை  என்று அறிய பின்  நிச்சயம் தன்னில் உயர்வாக நிச்சயம் தன்னில் கூட. 

பின் அதிலிருந்து ஒரு நிச்சயம் தன்னில் கூட,   எவை  என்று கூற பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும்  நூரு எவை  என்று அறிய அங்கேதான் நிச்சயம். 

***** ஆனாலும் யாருக்கும் அது தெரியாத ரகசியம். ***** 

*****  ஆனாலும் சில விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கிறார்கள். ஆனாலும் அமைதியாக இருக்கிறார்கள். ***** 

அடியவர்:- பத்துமலை முருகனை பத்தி சொல்றார்… உயர்ந்த முருகன்….

சுவடி ஓதும் மைந்தன்:-   உயர்ந்த முருகன் பத்துமலை பக்கத்துல ஒரு 100…. ஒரு 100 மீட்டரோ…. கொஞ்சம் பக்கத்துல அந்த கூடமே இருக்கலாம் வந்து. அது சயின்டிஸ்ட்க்கு எல்லாம் தெரியுமாம்.  ஏதோ ஒரு ஆராய்ச்சி கூட இருக்கு தெரியுமாம். ஆனாலும் என்ன பண்ணிட்டாங்க?  

அடியவர்:-  சில காரணம் அமைதியாக விட்டார்கள். அமைதியாக்கி விட்டார்கள் அவர்களை 

சுவடி ஓதும் மைந்தன்:-   அமைதியாக. அது ஓகே. இது வந்து மனுஷனுக்கு சொன்னா இது புரியாது. ஆனால் என்ன பண்ணிட்டாரு வந்து?  

அடியவர்:-   அமைதியாகிவிட்டார்கள். 

குருநாதர்:-  அப்பனே இப்பொழுது கூட நிச்சயம் தன்னில் கூட ஏது என்று அறிய,  எவ்வாறு என்பதெல்லாம் நிச்சயம் தன்னில் கூட. 

பின் அதாவது எவ்வாறு என்பதெல்லாம் நிச்சயம் தன்னில் கூட பின் இக்குள்ளர்கள் எவை என்று எதை கேட்டார்கள் என்றால் நிச்சயம் தன்னில் கூட

 அனைவரும் எவை என்று புரிய  நிச்சயம் தன்னில் கூட 

எங்களுக்கு பணம் தான் தேவை என்று நிச்சயம் அனைவரும் கேட்டார்கள். 

இதனால் நிச்சயம் பின் பணத்தை எதை என்று புரிய  நிச்சயம் எவ்வாறு (...வரவழைப்பது…)  என்பதை எல்லாம் நிச்சயம் அழகாக நிச்சயம் ஊதி வைத்திருக்கின்றேன் அங்கு. 

***** அதனால் நிச்சயம் தன்னில் கூட “ஊதியும் மலை” என்றும் இதற்கு பெயர். *****

அடியவர்:- ஊதியும் மலை 

சுவடி ஓதும் மைந்தன்:-  ஊதியும் மலை. அப்ப எல்லாரும் அந்த காலத்துல அகத்திய பெருமான்  திருப்பி ஏன் ஒரு நல்லது எல்லாம் என்னடா வேணும்னா?  பணம் எங்களுக்கு பணம் தான் வேணும் என்று சொல்லிட்டாங்க  கடைசில. அப்ப என்ன பண்ணுறாங்க அகத்திய பெருமான்? 

அடியவர்:-  சரி அதையும் கொடுக்கிறேன் என்று 

சுவடி ஓதும் மைந்தன்:- அதையும் கொடுக்கின்றேன் என்று ஒரு ஆராய்ச்சியில வந்து அவர் ஏற்படுத்தி அது என்னங்க ஐயா?  

அடியவர்:-  ஊதி மலை 

சுவடி ஓதும் மைந்தன்:-  ஊதியும் மலை என்று சொல்லிட்டு… இங்கதான் அது இருக்குதாம் வந்து… 

குருநாதர்:-  இதனால் அப்பொழுது ஊதியதுதான் இப்பொழுதும் உங்களுக்கு வந்து கொண்டே இருக்கின்றது. அதனால் இவ் தேசத்தில் உள்ளவர்கள் எல்லாம் நிச்சயம் பணத்தின் மதிப்பே அதிகம்தான்.  

சுவடி ஓதும் மைந்தன்:-  அதனால அப்ப நான் ஊதியது…. பணத்தை  எல்லாரும் கேட்டாங்க பார்த்தீங்களா?  அப்ப நான்  ஊதிய விட்டது?

அடியவர்:-  இன்னும் வந்து கொண்டே தான் இருக்கின்றது.

சுவடி ஓதும் மைந்தன்:- இன்னும் வந்து கொண்டே தான் இருக்கின்றது. மக்களுக்கு வந்து என்ன பண்ணிருக்குது?  அதோட ஆற்றல் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. மக்களுக்கு வந்து செல்வம் வந்து கொண்டே தான் இருக்கிறதுன்றாங்க ஐயா. 

அடியவர்:- அதாவது இந்த தேசம் செழிப்பாகவே இருக்கிறதுன்னு சொல்றாங்க 

சுவடி ஓதும் மைந்தன்:- இன்னும் செழிப்பாகவே வளரும்ன்றாங்க வந்து 

குருநாதர்:-  ஆனாலும் எதை என்று புரிய  நிச்சயம் தன்னில் கூட ஏது என்று புரிய,   ஆனாலும் எதை என்று  இறைவன் முடிவெடுத்து விட்டான்  நிச்சயம் தன்னில் கூட எவை என்று  இங்கு அழிவு ஏற்படுத்த வேண்டும் என்று. 

குருநாதர்:-   அதனால் யான் நிச்சயம் தன்னில் கூட எது என்று புரிய  பின் நிச்சயம் அழிவு ஏற்படுத்தக் கூடாது என்று,  யான் இங்கு வந்து நிச்சயம் தன்னில் கூட, பின் போராட்டமே செய்தேன். 

அடியவர்:- அதாவது செல்வம் பெருகிடுச்சு. ஆனா நேர்மையான பாதையில போகல. அதனால இறைவன் என்ன நினைக்கிறார்,   அழிச்சிடனும்னு முடிவு பண்ணிட்டாரு 

சுவடி ஓதும் மைந்தன்:-  முடிவு பண்ணிட்டாரு. யாரும்  நேர்மையாக  இல்லை. அநியாயங்கள் நடக்குது. ஒண்ணுமே சரியில்லன்னு சொல்லிட்டு…. என்ன பண்ணிட்டாரு இறைவன் வந்து? 

அடியவர்:- அழிச்சிடலாம் 

சுவடி ஓதும் மைந்தன்:- அழிக்க பார்க்கிறார். எதை இயற்கை சீற்றத்தால் அழிக்க பார்க்கிறார்.  ஆனால் நான் காப்பாற்றின ஊரு 

அடியவர்:-  என் தேசம் 

சுவடி ஓதும் மைந்தன்:- என் தேசம் 

அடியவர்:-  என் மக்கள் 

சுவடி ஓதும் மைந்தன்:-  என் மக்கள்.  அதனால நான் இறைவனிடம்  போராடி…. ஏதாவது நல்லது செஞ்சு, தப்பிச்சி விட்டுடனும் என்று அகத்திய பெருமான்  சொல்கின்றார். ஐயா புரியுதுங்களா?  அம்மா எல்லாருக்கும் புரியுதுங்களா ? 

குருநாதர்:-  அப்பனே இதை போலத்தான் எதை என்று புரிய,  நிச்சயம் தன்னில் கூட, அப்பனே நிச்சயம் ஏது என்று புரிய,  ஒருவனை காப்பாற்றினால் அப்பனே நிச்சயம் அவனுக்குத்தான் லாபம் அப்பனே. 

குருநாதர்:-  எதை என்று புரிய அப்பனே இதனால் அனைவரையும் அப்பனே பின் காப்பாற்றினால், அப்பனே நிச்சயம் அப் புண்ணியம் அப்பனே உங்களைத்தான் சாரும் என்பேன் அப்பனே. 

குருநாதர்:- இதற்கு விதி அப்பனே பின் விதி விலக்கு  என்னவென்று அடுத்தடுத்த வாக்கில் நிச்சயம் அப்பனே யான் தெரிவிப்பேன் அப்பனே. 

அடியவர்:- அதாவது என்ன சொல்றாருன்னா, இந்த வாக்குகளை எல்லாம் எடுத்து, உங்கள் தெரியுறவர்களுக்கெல்லாம் பகிர்ந்து, அவர்களையும்  அன்பு தர்ம வழியில் மாற்றினால், எல்லாரும் காப்பாற்றப்படுவார்கள். அப்பதான் அது மிகப்பெரும் புண்ணியமாக உங்களுக்கும் மாறும். நீங்க 10 பேர் சொன்னா 10 பாயிண்ட் புண்ணியம். 100 பேர் சொன்னா 100 பாயிண்ட் புண்ணியம். 

குருநாதர்:-  அப்பனே எதை என்று புரிய  நிச்சயம் முருகனும் வந்து எதை என்று புரிய  பின் அகத்தியனே!!!!!! நீயே அனைத்தும் செய்து கொண்டிருக்கின்றாய்.  எனக்கு ஏதாவது ஒரு வேலை கொடு என்று. 

அடியவர்:- முன்பு அகத்திய பெருமான் , முருகப்பெருமானை சும்மா வேடிக்கை பார்க்க சொல்லிட்டாரு இல்லயா. முருகப்பெருமானுக்கு போர் அடிச்சிருச்சு. எனக்கு எல்லாம் நீ பண்ணா, இங்க  நான் எதுக்கு? … எனக்கு ஏதாவது சொல்லு அப்படிங்கிறாரு… 

குருநாதர்:-  எதை என்று புரிய  முருகனே!!!!! எவை  என்று புரிய  இப்பொழுது நீ வந்துவிட்டால் நிச்சயம் தன்னில் கூட யாருக்கு எதை என்று புரிய  அனைவரும் ஒரு எவை  என்று அறிய  நிச்சயம் தன்னில் கூட கேட்பார்கள். 

எதை என்று புரிய  மனிதனுக்கு தெரியாது. 

அதனால் எது என்று புரிய  நிச்சயம் தன்னில் கூட, சரியாகவே எவை  என்று புரிய  நிச்சயம் தன்னில் கூட, எவ்வாறாக அதாவது சிங்கம் போல் எவை என்று கூற இரு.  எவை  என்று புரிய மாறிவிடு என்று. 

அடியவர் :- அதாவது நீ முருகனா நீ வந்துட்டா, மக்கள்  எல்லாத்தையும் கேட்பாங்க. அதாவது மக்கள் கிட்ட தகுதி இருக்காது. அவங்களுக்கு கொடுத்தாலும் நிலைக்காது. தகுதி இல்லாம கேட்பாங்க கேப்பாங்க. 

சுவடி ஓதும் மைந்தன்:-  அதனால வந்து நீ சிங்கம் வேஷம் எடுத்துவிடு.  ஐயா புரியுதுங்களா?  முருகப்பெருமான் சிங்கம் வேஷம் எடுத்துவிடு என்று சொல்லியிருக்காரு  வந்து… 

குருநாதர்:-  எதை ஏது என்று புரிய,  நிச்சயம் தன்னில், அழகாக முருகன், அதாவது என் வாக்கிற்காக எடுத்து வந்தான். 

ஆனாலும் அனைவரும் பயந்து ஓடினர். 

ஆனாலும் முருகா!!!!!! பின் நிச்சயம் தன்னில் கூட எடுப்பது இவ்வாறாக நிச்சயம் பின் இவ்வூரை தாண்டி சென்று விடு என்று, நிச்சயம் தன்னில் கூட.

எவை  என்று புரிய,  இப்பொழுது எவை  அறிய நிச்சயம் தன்னில் கூட, அங்கே சென்று விட்டான். 

எவை  என்ற அறிய நிச்சயம் தன்னில் கூ,ட அவ்வூரும் எவை  என்று அறிய நிச்சயம் தன்னில் கூட,  இதனால் பின் சிங்கமாக இருந்து, அவ்வூரை தான் நிச்சயம் தன்னில் கூட, பின் காத்துக் கொண்டிருக்கின்றான் பணமழையில்… 

அடியவர் :- சிங்கப்பூர்.

சுவடி ஓதும் மைந்தன்:-  சிங்கப்பூருக்கு அப்படியே அங்க சென்றுவிட்டார். அகத்திய பெருமான் , முருகப்பெருமானிடம் -  முதல்ல நீ இங்க இருந்து இப்ப சென்றுவிடு…. எல்லாரும் உன்னை பார்த்து பயப்படுறாங்க.  அப்படியே நடுவுல நின்றுவிடு என்று  சொல்லிட்டு வந்து… அப்படியே சிங்கப்பூர் அங்க போயிட்டாரு…. 

அடியவர் :- அவர் போய் நின்ன இடம் தான் சிங்கப்பூர் 

சுவடி ஓதும் மைந்தன்:-  அந்த போயிட்டாரு…. சிங்கப்பூர் நோக்கி போயிட்டாரு…. அவர் வந்து… அப்ப அங்க போன உடனே, அந்த பணத்துக்கு மதிப்பு இப்ப அதிகமாயிடுச்சு.  எப்போ இருந்து?  முன்னாடி ஒரு காலத்தில் நடந்தது. இந்த காலம் இப்ப இல்ல.  ஐயா புரியுதுங்களா?

குருநாதர்:-  அப்பனே இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட அங்கும் பயந்து ஓட,  நிச்சயம் தன்னில் கூட, எதை என்று புரிய,  நிச்சயம் கடைசியில்  எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட எவ்வாறாக பின் அதாவது ஓடி எவை  என்று… 

****** அகத்தியனே !!!!!! எது என்று புரிய இப்படி விளையாடுவதா? ******  

******  நிச்சயம் முருகா நீ சிறு வயது அதனால் விளையாடித்தான் ஆகவேண்டும். ****** 

******  உன் தாய் வீட்டுக்கு சென்று விடு என்று,  நிச்சயம் எவை  கூட அங்கும் அதை என்று புரிய  நிச்சயம் எவை  என்று சென்று விட்டான். ****** 

சுவடி ஓதும் மைந்தன்:-  அப்ப தாய் வீடுனா…. என்ன சொல்றாரு?

அடியவர்கள் :-  ( …ஆழ்ந்த சிந்தனை…)

சுவடி ஓதும் மைந்தன்:-   தாய்லாந்து அய்யா. 

அடியவர்கள் :- (ஆச்சரியத்தில்) ஓ …தாய்லாந்து….

சுவடி ஓதும் மைந்தன்:-   தாய் வீட்டுக்கு போய்டுப்பா… 

சுவடி ஓதும் மைந்தன்:-  அது யாருடைய வீடு ?

அடியவர் :- முருகனின் வீடு..அவங்க அம்மா வீடு…

குருநாதர்:-  எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட எவ்வாறெல்லாம் , ஆனாலும் அங்கு சென்று எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட எவ்வாறெல்லாம் எதை என்று புரிய, ஆனாலும் அக்கிரமங்களும் அநியாயங்களும் இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட பின் உலகத்திற்கு சேவைகள் செய்ய , இறைவனின் பெயரை  எதை என்று கூட பின் மாற்றி , தவறுகள் பல பல. 

குருநாதர்:-  இதனால்தான் அழிவுகள் நிச்சயம் நிச்சயம் தன்னில் கூட பின் எதை என்று புரிய இவ் மூன்று  எவை என்று முடிவு எடுத்து விட்டான் ஈசன். இவ் மூன்றிற்கும்  எவை என்று அறிய நிச்சயம் ( மருந்துகள் ) தர வேண்டும், எவ்வாறு அழிவுகள் தரவேண்டும் என்று. 

குருநாதர்:- ஆனாலும் அதற்காகத் தான் நிச்சயம் தன்னில் கூட ஈசனுடன் போராடிக் கொண்டிருக்கின்றேன் வேண்டாம் வேண்டாம் என்று. 

அடியவர்:- அதாவது என்ன சொல்றார் என்றால், அம்பாளுடைய வீடு. ஆனால் இன்று தாய்லாந்து என்று எல்லோருக்கும் தெரியும்…தாய்லாந்து என்ன என்று. ஆனால் ஈசன் வருந்துகிறார். இந்த மூன்று ஊரையும் அழித்து விடுவோம் என்று… தாய்லாந்து , மலேசியா, சிங்கப்பூர். உலக வரைபடத்தில் பார்த்தால் வரிசையாக வரும். 

குருநாதர்:- ஏது என்று புரிய நிச்சயம் தன்னில் அழகாக நிச்சயம் தன்னில் கூட,  என் அன்னை எவை என்று புரிய, அதாவது பின் புவனேஸ்வரி நிச்சயம் தன்னில்  அங்கு  குடி கொண்டிருந்தாள். இதனால் நிச்சயம் தன்னில் எவ்வாறு என்பதெல்லாம்,  முருகன் அங்கே சென்றான். 

குருநாதர்:-  ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட, எவை என்று கூட, மனிதர்கள் நிச்சயம் தன்னில் எதை என்று புரிய அவ் அம்பாளை அப்படியே சாய்த்து விட்டார்கள். அழித்தும் விட்டனர். 

குருநாதர்:-  இதனால் நிச்சயம் தன்னில் கூட, விநாயக பெருமான் கோபம் கொண்டு , இவ் தேசத்தில் உள்ள பெண்கள் நிச்சயம் தன்னில் கூட, எவ்வாறு ஒரு பெண்ணை நிச்சயம் அசிங்கப்படுத்தினார்களோ, அதே போல் ஆகுங்கள் என்று  நிச்சயம் தன்னில் கூட சாபம் விட்டு வந்துவிட்டான் விநாயக பெருமானே. இதனால் நிச்சயம் வருங்காலத்தில் அதையும்  அங்கேயும் சென்று மாற்றுவோம். ஆசிகள்.

சுவடி ஓதும் மைந்தன்:- அதாவது என்ன சொல்றார் என்றால்….ஒரு அம்பாள் கோயில் அங்க இருந்திருக்கின்றது வந்து. எல்லாரும் சேர்ந்து என்ன செய்தார்கள்? 

அடியவர்:-  அசிங்கப்படுத்தி அழித்துவிட்டார்கள். 

சுவடி ஓதும் மைந்தன்:- ஆமாம். அசிங்கப்படுத்தி அழித்துவிட்டார்கள். அப்ப விநாயக பெருமான் கோபம் கொண்டு, தாய்லாந்துக்கு கோபத்துடன்  போய்ட்டு, ஒரு பெண்ணை இந்த மாதிரி அசிங்கப்படுத்துகின்றீர்களே, இப்படி அவமானப்படுத்துகிறார்களே என்று கோபத்துடன் சாபம் விட்டு வந்துவிட்டாராம்.  

அடியவர்:-  அதாவது தாய்லாந்தில் பெண்கள் ஏன் அப்படி இருக்கின்றார்கள் என்றால் விநாயக பெருமானின் சாபம்…நேற்றும் நான் அய்யாவிடம் கேட்டுக்கொண்டிருந்தேன்…அய்யா தாய்லாந்தில் என்ன தான் சாபம் என்று நேற்றுதான் பேசிக்கொண்டிருந்தோம். 

சுவடி ஓதும் மைந்தன்:-  அதனால வந்து ஒரு பெண்ணை நீங்க இந்த மாதிரி அவமானப்படுத்துகின்றீர்களே, நியாயமா?  என்று விநாயக பெருமான் என்ன செய்துவிட்டாராம்? 

அடியவர்:-  விநாயக பெருமான் அவங்க ஏன் சாபம் அங்க அப்படி கொடுத்தாங்கன்னா,  அங்குள்ள பெண்கள் கூட தடுத்திருக்க மாட்டார்கள். அதனால் பெண்களுக்கு சாபம். 

குருநாதர்:- அப்பனே நிச்சயம் தன்னில் கூட வருங்காலத்தில் இதையும் மாற்றுவேன் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட  ஏது என்று புரிய அப்பனே .  

சுவடி ஓதும் மைந்தன்:-  வருங்காலத்தில் திருப்பியும் என்ன பண்ணுவாராம்? 

அடியவர்:- அதையும் மாற்றுவார்.

சுவடி ஓதும் மைந்தன்:-  அன்பாக விநாயகப் பெருமானிடம் வந்து… ( முறையிட்டு )  திருப்பியும் கேட்டு மாற்றுவோம்.

குருநாதர்:-  ஆனாலும் அப்பனே நீங்கள் அப்பனே உறுதியாக இருக்க வேண்டும் அன்பால்.

சுவடி ஓதும் மைந்தன்:-  ஆனாலும் நீங்கள் என்ன பண்ணனும் ?

அடியவர்:-  அன்பால் உறுதியாக  இருக்க வேண்டும்.  

சுவடி ஓதும் மைந்தன்:-  அன்பால் உறுதியாக இருக்க வேண்டும்.  அப்பதான் நான் விநாயகப் பெருமானிடம் இதெல்லாம் சொல்ல முடியும் அப்பா. 

குருநாதர்:-  அப்பனே, இதனால் நிச்சயம் தன்னில் கூட, அனைத்தும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பின் பூலோகத்தில் உள்ள அனைத்தும் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பின் சென்று, அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே பல விளக்கங்களை யான் தெரிவித்திருக்கிறேன் என்பேன் அப்பனே. 

குருநாதர்:-  ஆனால் நன்றாக வாழ்ந்தார்கள். ஆனாலும் காலப்போக்கில் அப்பனே இப்படித்தான் இருக்கவேண்டும்  என்றெல்லாம் மனிதனுக்கு சொல்லி சொல்லி. ஆனாலும் அப்பனே பின் அது நிச்சயம் மாறி விட்டது என்பேன் அப்பனே. 

குருநாதர்:-  மீண்டும் அப்பனே எவை என்று சொல்வதற்கு அப்பனே எவை என்று அறிய வந்திருக்கின்றேன் அப்பனே. அவ்வளவுதான் என்பேன் அப்பனே. 

அடியவர்:- அதாவது பல காலம் நாங்கள் உரைத்தோம். எல்லாம் கேட்டு நடந்த மனிதன் , கடைசியாக இப்போது கலிகாலத்தில் மீண்டும் மனிதன் தலைகீழாக மாறி விட்டான். திரும்பவும் நாங்கள் முதலில் இருந்து சொல்ல வந்திருக்கின்றோம். 

சுவடி ஓதும் மைந்தன்:- முதலில் எல்லோருக்கும் அகத்திய பெருமான் சொல்லிக்கொடுத்து , எல்லோரின் மனதை மாற்றி விட்டாராம். எல்லோரும் நல்லவர்களாக இருந்தாங்களாம். இப்போ திருப்பி என்ன ஆயிடுச்சு?  எல்லோரும் மனிதர்கள் தீய எண்ணத்துடன்? 

அடியவர் :- இந்த கலியுக வாழ்க்கை 

சுவடி ஓதும் மைந்தன்:-  ஆமா. இந்த கலியுக வாழ்க்கை எல்லாருமே மாறிட்டாங்கப்பா. திரும்பவும் எனக்கு வேலை கொடுத்துட்டாங்கப்பான்னு சொல்றார். யாரு? 

அடியவர்கள்  :- அகத்திய பெருமான்.  

அடியவர் :-  அதனாலதான் இந்த சுவடியில் வந்து நான் செப்பிக்கொண்டிருக்கிறேன் என்று சொல்றார்.

சுவடி ஓதும் மைந்தன்:- சொல்லிக்கொண்டிருக்கிறார்.

குருநாதர்:-  எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட ஈசனும் எவ்வாறு என்பதெல்லாம் பரிபூரணமாக அனுப்பினான். மக்களை பார்த்து வா. பின் மக்களுக்கு சேவை செய் என்று. 

குருநாதர்:-   அனைத்தும் மாற்றிவிட்டு, பின் அதாவது பின் தேவலோகத்திற்கு சென்று, ஈசனே !!!!! கட்டளைப்படி, அனைவரும் நல்லோர்களாக ஆகிவிட்டார்கள். மாற்றிவிட்டேன். எதை என்று புரிய  நிச்சயம் தன்னில் , நீங்கள் சொல்வது போல், நிச்சயம் அனைவரும் பின் நல்லோர்களாக என்று பின் பெருமை. 

குருநாதர்:-   எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட பெருமை. அகத்தியனே !!!!! என்று பின் ஈசனும், எதை  என்று கூற.  ஆனாலும் நிச்சயம் இக் கலியுகத்தில் அழைத்து, நிச்சயம் தன்னில் கூட பின் அகத்தியனே !!!!! இப்படி செய்துவிட்டாயே. எதை என்று அனைவரையும் மாற்றினாய். 

குருநாதர்:-  மீண்டும் எப்படி இருக்கின்றார்கள், பூலோகத்தை பார் என்று? தலை குனிந்தேன். மீண்டும் ஒரு வாய்ப்பை கொடு. 

குருநாதர்:-  பின் ஈசனாரே!!!!! நிச்சயம் தன்னில்  மீண்டும் மக்களை பின் காக்கின்றேன் என்று முடிவெடுத்து வந்திருக்கின்றேன், அப்பா.

அடியவர் :- அதாவது என்ன சொல்றார்னா, ஈசன் வந்து இப்ப இருக்கிற நிலைமைக்கு உலகத்தை அழிக்கணும்னு இருக்கிறார். ஆனா முன்னாடி என்ன நடந்ததுன்னா, அவர் சொன்னதை எல்லாம் கேட்டு நல்லவரா இருந்தாங்க. இவரும் பெருமையா போய் சொல்றாரு, நான் மக்களை மாற்றிட்டேன். தலை நிமிர்ந்து நிற்கிறார்கள் என்று. ஆனால் இப்ப நிலைமையை பார்த்து ஈசன் கேட்கிறார், அகத்தியா, என்ன நடக்குதுப்பா? என்று. எனவே அகத்தியன் நான் தலை குனிந்து நிற்கிறேன். இருந்தாலும் ஒரு வாய்ப்பு கேட்டு வந்திருக்கிறேன். இல்லாட்டி ஈசன் கண் அசைத்தால், அவ்வளவுதான் ….அஞ்சு பூதம் கூட ரெடியா இருக்கு…  அழிவுக்கு.

சுவடி ஓதும் மைந்தன்:-  ஈசன் கேட்கின்றார்.   எப்பா அகத்தியா, நீ உலகத்தை திருத்துன. எல்லாம் நல்லவரா இருந்தாங்க. திருப்பி என்னப்பா இப்படி ஆகிட்டாங்க. பாருப்பா, மனுஷனை, பூலோகத்துல மனுஷனை பாருப்பான்னு யாரு கேட்கிறாங்க?

அடியவர் :- ஈசன் கேட்கிறார்.

சுவடி ஓதும் மைந்தன்:-  ஈசன் வந்து அகத்தியரிடம் கேட்டகின்றார்.   நான் உனக்கு திருப்பி ஒரு சான்ஸ் கொடுக்கிறேன். பூலோகத்தை போயிட்டு பாத்திட்டு வா என்று. உடனே அகத்திய பெருமான் என்ன கேட்டார் ஈசனாரிடம் ?

அடியவர் :- ஒரு வாய்ப்பை கொடுங்கள்.

சுவடி ஓதும் மைந்தன்:-   திருப்பி என்ன பண்றாரு, அகத்தியர் திருப்பி வந்திருக்கார். மக்களை  ஏதோ ஒரு மூலமா வந்து… நல்ல மனசு ஏற்படுத்தி, மக்களை காப்பாற்றி, என்ன பண்ணிருக்காரு?  

சுவடி ஓதும் மைந்தன்:-  திருப்பியும் மக்களை காக்க பூலோகத்திற்கு வந்திருக்கிறார். 

குருநாதர்:- இதனால அப்பனே, நிச்சயம் எவ்வாறு என்பது எல்லாம், நிச்சயம் ஒரு மந்திரத்தை வழங்கிவிட்டேன் அப்பனே. அதை நிச்சயம் மறக்கக் கூடாது. சொல்லிவிட்டேன். அனைவரும்.

அடியவர் :-  அகத்திய பெருமான் உரைத்த அன்னை புவனேஸ்வரி மந்திரத்தை எல்லாரும் தினமும் சொல்ல வேண்டும். மறக்கக்கூடாது என்று சொல்கின்றார்.

குருநாதர்:- அவை மட்டுமில்லாமல், நிச்சயம் தன்னில்  கூட, கணபதி மந்திரத்தை யான் கொடுக்க போகின்றேன் இப்பொழுது.

**** ஓம் கம் கணபதே நம **** 
**** ஓம் கங்  கணபதே நம **** 

எனும் மந்திரத்தை, பின் நிச்சயம் சொல்லிக்கொண்டே இருங்கள். 

சொல்லிட்டு…. 

அதே போல், நிச்சயம் தீபத்தை, பின் இறைவனாக எண்ணிக்கொண்டு…..

****   எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட, எவ்வாறாக பின் கணபதியை, பின் அவ் தீபத்தின் வழியே பாருங்கள். ****  

****  நிச்சயம் தன்னில் கூட, வெற்றிகள் உண்டு.  ****  

அடியவர் :- அதாவது ஒரு தீபத்தை ஏற்றி, அந்த தீப ஜோதியில, விநாயகப் பெருமானை உருவகப்படுத்தி, இந்த மந்திரத்தை சொல்லணும். இதுல இன்னொரு சிறப்பு  என்னன்னா, பொதுவா மந்திரம் புக்குல  படிச்சு நாம சொல்லுவோம். ஆனா பயன் தருமான்னு தெரியாது. இது குரு உபதேசம். குரு சொல்லி ஒரு மந்திரம் சொல்லிக்கொடுத்தா,  அதுக்கு ஈடு இணையே கிடையாது. இங்க ரெண்டு மந்திரத்தை அகத்திய பெருமான் சொல்லியிருக்கிறார். அதை பயன்படுத்துவது நம் கையில் மட்டுமே.

சுவடி ஓதும் மைந்தன்:- புரியுதா ஐயா ? இதையும் நீங்க வந்து எழுதிக்கணும். ஐயா  இதெல்லாம் யாரும் கொடுக்க மாட்டாங்க ஐயா. நீங்க என்ன பண்ணனும்?

அடியவர் :-  அதாவது டெய்லி பிராக்டிஸ் பண்ணனும் எல்லோரும்.  வாக்கு தட்டச்சு செய்து எல்லோருக்கும் ஷேர் பண்ணுவோம்.

சுவடி ஓதும் மைந்தன்:- எல்லாருக்கும் என்ன பண்ணனும்? பொதுவிலேயே இப்போது மந்திரத்தை கொடுக்கின்றார்.  அப்பலாம் வந்து ஒருத்தர் தேர்ந்தெடுத்து கொடுப்பாங்க மந்திரத்தை. இப்ப எல்லாரும் நல்லா இருக்க என்ன பண்ணுறார் வந்து?  இந்த வச்சுக்கோங்க. வாழுங்க என்று சொல்றார். 

குருநாதர்:-  அப்பனே, நிச்சயம் தன்னில்  கூட, இவ்வாறாக  நிச்சயம் எவ்வாறு என்பதெல்லாம். இதனால் அப்பனே, எதை என்று குறித்து அப்பனே நல்வழி ஆகவே. அப்பனே, நிச்சயம் தன்னில்  கூட, இவ் தேசம், அப்பனே, சிறப்பு. 

குருநாதர்:-   இதனால் அப்பனே, இவ் தேசதில், அப்பனே, நிச்சயம் தன்னில்  கூட, இவ் மூ-தேசத்தில் (மூன்று தேசம்)  கூட, அப்பனே, அனைவருமே குள்ளர்கள்தான் என்பேன் அப்பனே, நிச்சயம் தன்னில்  கூட.

குருநாதர்:-   அப்பனே, இவையெல்லாம் மாற்றி, அப்பனே, நிச்சயம் தன்னில்  கூட, இப்பொழுது மாற்றி, மனதையும் மாற்றிவிட்டார்கள். மனிதர்கள் என்பேன் அப்பனே.

அடியவர் :-  அதாவது இந்த மூன்று தேசங்கள், அந்த தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், மூன்றும் ஒரே மாதிரி…. குள்ள மனிதர்களாகத்தான் இருந்தார்கள்.

சுவடி ஓதும் மைந்தன்:-  இந்த மூணு தேசத்துக்கு எல்லாமே குள்ள மனிதர்கள் தான் இருந்தாங்க. ஆனா ? 

அடியவர் :- இப்ப அந்த மனிதர்கள் மாறிட்டாங்க. அவர்கள் மனநிலையும் மாறிவிட்டது. 

சுவடி ஓதும் மைந்தன்:-  எல்லாருமே height ஆக பிறக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா மனசு என்பது? 

அடியவர் :-  மாறிவிட்டாங்க. குள்ளமாக இருந்த போது கூட நல்லவர்களாக இருந்தார்கள். ஆனால் இப்பொழுது மாறிவிட்டது.

சுவடி ஓதும் மைந்தன்:-  மாறிவிட்டது. எல்லாரையும் மாற்றி விட்டார்கள்…

குருநாதர்:-  இதனால் தான் அப்பனே, நிச்சயம் தன்னில்  கூட, ஏது என்று புரிய, இதனால் அப்பனே, நிச்சயம் தன்னில்  கூட, எவை என்று புரிய 

குருநாதர்:-  ஆனாலும் அப்பனே, நிச்சயம் தன்னில்  கூட, நான்முகன்  அப்பனே, நிச்சயம் தன்னில்  கூட, இங்கு ஏது என்று அறிய அப்பனே, நிச்சயம் தன்னில்  கூட, அதை எதை என்று புரிய இதனால் அப்பனே, எவ்வாறு என்பதெல்லாம் , அப்பனே, நிச்சயம் தன்னில்  கூட, பின் மற்றொரு கண், அப்பனே, இவை இந்த கண்கள் மூன்று, அப்பனே, கண் என்றால், அப்பனே, நிச்சயம் தன்னில்  கூட, பின் இங்கும் அப்பனே, பின் அதற்கும், அப்பனே, பின் நான்முகன். 

சுவடி ஓதும் மைந்தன்:-  இந்தோனேசியா  பற்றி சொல்லிட்டார். நான்முகன் யார்?

அடியவர் :-  பிரம்மன்.

சுவடி ஓதும் மைந்தன்:- பிரம்மன். முக் கண்ணன்னா…. இன்னும் யார் ஒருத்தர் வந்து? 

அடியவர் :-   ஈசன்.

சுவடி ஓதும் மைந்தன்:-  இந்தோனேசியாவும் ஒரு கண். அதான் பிரம்மன். இதெல்லாம் சேர்ந்தது என்ன ஆகுது? பிரம்மன். ஐயா புரியுதுங்களா? 

சுவடி ஓதும் மைந்தன்:-  தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா. இதெல்லாம் சேர்ந்ததுதான்? 

அடியவர் :-  பிரம்மம்.

சுவடி ஓதும் மைந்தன்:-  பிரம்மம். ஒரு பிரம்மம் என்று சொல்கின்றார். 

குருநாதர்:-  நிச்சயம் தன்னில்  கூட முதலில் பின் இறைவன். இப்பிரம்மத்தை தான் கை வைப்பான்.

அடியவர் :-   அதாவது இறைவன் அவர் ஏதாவது பண்ணனும்னு நினைச்சாருன்னா முதல்ல இங்கதான் பண்ணுவார்.

சுவடி ஓதும் மைந்தன்:-  இங்கதான் பண்ணுவார். ஒன்னு மலேசியால பண்ணுவார். இல்ல தாய்லாந்துல பண்ணுவார். இல்லனா என்ன பண்ணுவாரு?

அடியவர் :-  இந்தோனேசியா.

சுவடி ஓதும் மைந்தன்:- இந்தோனேசியால பண்ணுவார். இல்லனா என்ன பண்ணுவாரு?

அடியவர் :-   சிங்கப்பூர்.

சுவடி ஓதும் மைந்தன்:- சிங்கப்பூர்ல பண்ணுவார். ஐயா புரியுதுங்களா ?

அடியவர் :-   அதாவது இறைவன் கை வைப்பார்  என்றால்….

குருநாதர்:- அப்பனே, இதனாலதான் அப்பனே, எதை என்று புரிய நிச்சயம் தன்னில்  கூட, அப்பனே, பின் ஏது என்று புரிய இதனாலதான் இறைவனை சாந்த படுத்த, அப்பனே, நிச்சயம் தன்னில்  கூட, அப்பனே, நல் மனதாக இருங்கள் அப்பனே. அப்பனே,சொல்லிவிட்டேன். இவ் அப்பனே பின் பிரம்மாவை தேடி, எவ் மூலையிலிருந்தும் வருவானப்பா. ஏனென்றால் எழுதி வைத்தது அவன். 

சுவடி ஓதும் மைந்தன்:-  சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா -  உலகத்துல நீ எந்த மூலையில் இருந்தாலும், கண்டிப்பாக நீ இங்க இருந்தே வரணும்ன்றாரு. விதி இதுதான் என்று சொல்கின்றார்.  விதி எழுந்து யாரு? பிரம்மா. இந்த பிரம்மாவை தேடி வந்தே ஆகணும். இங்க இருந்தவர் யார்?

அடியவர் :-  பிரம்மா.

சுவடி ஓதும் மைந்தன்:-  பிரம்மா. அப்ப நீ உலகத்துல எந்த தேசத்துல இருந்தாலும்? 

அடியவர்கள்:- இங்கதான் வரணும். 

சுவடி ஓதும் மைந்தன்:-  இங்கதான் வரணும்.  யார்? எந்த நாட்டுக்கு ? 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment