​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 9 October 2026

சித்தன் அருள் - 2336 - சித்தர் புலம்பல்கள் - 9!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

"சித்த மார்கத்தில்" நுழைந்து கவனித்த பொழுது, பல நேரங்களில் சித்தர்கள் உதிர்த்த அறிவுரைகள், உங்கள் அனைவருக்காக! 
  1. உணவை மனிதன் உண்ண வேண்டும். எந்த உணவும் மனிதனை உண்ணக் கூடாது.
  2. உணவு எனப்படும் இரை சரியாக இருந்தால், மாற்று இரை தேவையில்லை. அஃதாவது மாத்திரை தேவையில்லை என்பது உண்மையாகும்.
  3. அன்னம் இறைவன் கரத்தால் கொடுக்கப்படுகிறது. அதனிடம் மிகுந்த பவ்யம் வேண்டும்.
  4. மனித உணவுக்காக படைக்கப்பட்டது தானியங்கள் மட்டுமே.
  5. ஒரு மனிதன், செய்கின்ற வினையை நல்வினையாய் செய்துவிட்டுப்போ, என்பதே சித்தர்களின் வாக்கும், எண்ணமும்.
  6. ஒரு குடும்பத்தில் ஏற்படும் துர்மரணம், அவ் குடும்பத்தில், கடினமான ப்ரம்மஹத்தி தோஷம் உள்ளது என்பதற்கு சான்று.
  7. சித்த வழி தொண்டு செய்க, அவ்வழியில் இறையை காண்க.
  8. மனதை பெரும் முயற்சி செய்து அடக்கவே, சிறு முயற்சியாய் தினமும் பூஜை செய்ய வேண்டும்.
  9. சித்தர்கள் வாக்கை எளிமையாக எடுத்துச் சொல்லியும், உறவு, சுற்றம்,  நட்பு உணரவில்லை என்றால், அமைதியாக விலகி வந்து விடு. உனக்கு சித்தர்கள் வழி கைவல்யமாகப் போகிறது, அவர்களுக்கு இறை அனுமதிக்கவில்லை என்று அர்த்தம்.
  10. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வழி இறை வைத்திருக்கிறது, நீ உன் வழியை புரிந்து சென்றுவிடு.
  11. சித்தர்களை வணங்குவோர், நிறை குடம் தளும்பாது என்றிருக்க வேண்டும்.
  12. எவன் எப்படி வாழ்ந்தாலும், அதை கவனத்தில் கொள்ளாது, உண்மையை நன்றாக ஆய்ந்து, உணர்ந்து, சிந்தித்து பேசி , உள்ளதை கூறி, நல்லதை செய்து வாழும்கால், நலம் தொடரும்.
  13. ஒரு மனிதன் உழன்று, சிதிலப்பட்டு, பக்குவப்பட்டு, வேதனைப்பட்டு, கவலைப்பட்டு கஷ்டப்பட்டு தன்னை தானே மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் இறையின் எண்ணம்.
  14. ஒரு மனிதன்,  உள்ளதை உள்ளபடி கூறி வாழுங்கால் என்றென்றும் வெற்றியும் தன்னம்பிக்கையும் உண்டாகும். உள்ளதை கூறாது, அல்லதை கூறுங்கால் தொடர்ந்து பாப சேற்றிலே ஆழ்ந்து ஆழ்ந்து துன்பப்பட நேரிடும்.
  15. எவன் எப்படி வாழ்ந்தாலும் அது குறித்து கவனம் செலுத்தாது உண்மையை நன்றாக ஆய்ந்து, உணர்ந்து, சிந்தித்து பேசி உள்ளதை கூறி, நல்லதை செய்து வாழுங்கால் நலம் தொடரும்!
  16. பூர்வ ஜென்மத்து கர்மவினைகளுக்கு உண்டான மதிப்பெண்ணாகத்தான் இந்த வாழ்க்கையில் அனைத்தும் ஒரு மனிதனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஜென்மத்து கர்மாவுக்கான பலன்கள், பின்னர்தான் கொடுக்கப்படும்.
  17. ஓரளவு நல்ல ஆத்மா கால போக்கிலே தான் திருந்துவான் என்றால், அவன் போக்கிலே போகவிட்டு பின்னர் தான் சித்தர்கள் உணர்த்தி திருத்துவார்கள்.
  18. ஒரு மனிதன் ஆன்மீகத்தில் நுழைந்து பல விஷயங்களை செய்தாலும், பிற மனிதர்களோடு தொடர்பு கொள்ளும் பொழுது, அந்த மனிதனின் மனம் புண்படாமல், வார்த்தைகளை பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். இதுவே ஆன்மீகத்தின் முதல் பாடம்.
  19. எந்த மனிதனிடம், தேவை இல்லாமல் விவாதம், அபவாதம் போன்றவற்றை செய்து மன வேதனையை கொடுக்கிறானோ, அவனுக்கு, இவனின் அனைத்து புண்ணிய பலன்களையும் இவன் இழக்கிறான்.
  20. மௌனம் புண்ணிய விரயத்தை தடுக்கும்.
  21. மனம் உவந்து, மனமார, மனம் ஆறுதல் பெற செய்யும் காரியத்தில் தான் புண்ணியம் வரும்.
  22. ஒரு மனிதனுடைய பொருளை வேறொருவன் பறித்து செல்லும் பொழுதும், இழக்கும் பொழுதும், அவனுக்கு புண்ணியம் வருவதில்லை, மாறாக கர்மா கழிகிறது என்று பொருள்.
  23. ஒரு வார்த்தை இவன் பேசமாட்டானா என்று பிறர் எங்கும் வண்ணம், வார்த்தைகளை குறைத்தே பயன்படுத்த வேண்டும்.
  24. ஒரு மனிதனை பக்குவப்படுத்துவது என்பது ரசவாதத்தை விட மிக கடுமையானது.
  25. ஒரு மனிதன் தன் கடமையை ஆற்றுவதோடு, உடலுக்காக உழைப்பதோடு, உள்ளிருக்கும் ஆத்மாவிற்காகவும் உழைக்க வேண்டும். மனிதப்பிறவியின் உண்மையான நோக்கம் அதுதான்,
  26. ஒரு மனிதன் பிறனை மன்னிக்க கற்க, சித்தர்கள் அத்தனை வாக்கு உரைத்தும் ஒன்றையும் நடைமுறை படுத்தமாட்டார்கள் என்று உணர்ந்து, மனிதரை மன்னித்து மீண்டும் மீண்டும் வாக்கு உரைக்கிறோமே, அதை கண்டு படிக்க வேண்டும்.
  27. ஜுரஹரேஸ்வரர் லிங்கத்தை எங்கு கொள்கலத்தில் வைத்து பூஜா செய்கிறார்களோ, அதில் 12 நாழிகை தூய நீரை தேக்கி வைத்திருந்து பின் வெளியேற்றினால் காய்ச்சல் நன்றாக குறையும். அந்த நீரை சோதித்தால், அது அனலாக கொதிக்கும்.
  28. ஒரு நிலையை அடைந்த பிறகு, ஒருவனுக்குள் இருந்து செயல்படுவது பரம்பொருள் தான்.
  29. மலை ஏறி இறங்கும் பொழுது தேக அசதி, சோர்வை பொறுத்து சில கர்மாக்கள் குறையும். அதோடு மனம் ஒன்றி அங்கு இறைவனை வழிபட, அவன் கர்மாக்கள் குறைய வாய்ப்புண்டு.
  30. அதிரூப இறைவன் காட்சிகளை மஹான்களின் காட்சிகளை முழுமையாக அல்ல, ஓரளவு பார்த்தாலே, விழியில் பார்வை குறைவு ஏற்படத்தான் செய்யும்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

1 comment:

  1. அகத்தீசாய நம நன்றி அய்யா 🙇🏽‍♂️🙏🏽

    ReplyDelete