ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் லோபா முத்திரையோடு.
( பகுதி 4 அதன் தொடர்ச்சியாக……)
சுவடி ஓதும் மைந்தன்:- ஒன்று மலேசியா வரணும். இல்லையென்றால் சிங்கப்பூர் வரணும். இல்லையென்றால் தாய்லாந்து வரணும். இல்லையென்றால் இந்தோனேசியா வந்தே ஆகணும் என்று சொல்கின்றார். பிரமனை ? விதியை மாற்ற…. ( இவ் நான்கு தேசங்களும் விதியை மாற்றும் வல்லமை கொண்டது )
குருநாதர்:- அப்பனே, இன்னும் ரகசியங்கள் எல்லாம் உரைக்கின்றேன் அப்பனே. நேரம் அப்பனே உங்களுக்கு கூட, அப்பனே எதை என்று உறக்கங்கள்.
சுவடி ஓதும் மைந்தன்:- எல்லோருக்கும் 'உறக்கம்' வேணும்ப்பா, 'உறக்கம்' வேணும்; சீக்கிரம் ஆகணும்னு சொல்லி சொல்றாரு.
அடியவர்கள் :- ( சிரிப்புகள்…)
குருநாதர்:- அப்பனே எதை என்று புரிய, இன்னும் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பின் இரண்டு மாதம் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஏது என்று புரிய இன்னும் அப்பனே, வாக்குகள் இங்கு செப்புவேன் அப்பனே.
குருநாதர்:- அனைவரும் ஒன்று சேர்ந்து, அப்பனே, உலக நன்மைக்காக நீங்கள் வேண்ட வேண்டும் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர்:- சொல்லிவிட்டேன் அப்பனே என் பக்தர்களுக்கு, அப்பனே, எவை என்று கூற இவைதன் அப்பனே, பின் கட்டளையாகவே இடுகின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன்:- உலக நன்மை வைக்கணும்னு, மீண்டும் இரண்டு மாசம் எல்லாம் சேர்ந்து, நீங்க என்ன பண்ணனும்?
அடியவர்:- பிரார்த்தனை செய்யணும்.
குருநாதர்:- அப்பனே, எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட, இதனால் தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஏது என்று புரிய அப்பனே, எவை என்று புரிய , அப்பனே, நிச்சயம் தன்னில் கூட…..
குருநாதர்:- மனிதன் எங்கிருந்து தோன்றினான் என்பது யாருக்காவது தெரியுமா அப்பா?
அடியவர்:- எல்லாரும் சயின்டிஃபிக் தேடி சொல்லுவாங்க. ஆனா, நிஜமா தெரியுமான்னு கேட்கிறார்.
சுவடி ஓதும் மைந்தன்:- யாருக்காவது தெரியுமா?
குருநாதர்:- அப்பனே, அப்பொழுதெல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஒன்றாகத்தான் இருந்து என்பேன் அப்பனே.
குருநாதர்:- ஆனாலும் , கடல் சீற்றங்களாலும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எங்கெங்கோ மாறிவிட்டது.
***** அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, நான்முகன் இருந்தே தோன்றினான் மனிதன். *****
சுவடி ஓதும் மைந்தன்:- பிரம்மாவில் இருந்து தான் தோன்றினான் மனிதன். அப்ப, பிரம்மாவை குறிக்கும் இடங்கள்..சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா…
அடியவர்:- அந்த நன்கு தேசங்களும் எல்லாம் ஓன்றாகத்தான் இருந்துச்சு. ஆனா, இப்ப இந்த கடல், இந்த இயற்கை சீற்றங்களால எல்லாம் பிரிஞ்சுடுத்து. அப்படின்னு.
குருநாதர்:- அப்பனே, நிச்சயம் பார்த்தால் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஏது என்று புரிய, மனிதன் போலே, அப்பனே, நிச்சயம் அனுமானும் வேலை செய்வான் அப்பனே. பார்த்திருப்பீர்கள் நீங்கள்.
சுவடி ஓதும் மைந்தன்:- அப்ப, இந்த தேசத்துல வந்து, அனுமான் என்று என்ன குறிக்கின்றார் இங்க? யாராவது சொல்லுங்க பார்ப்போம்?
அடியவர்கள் :- குரங்குகள்…
சுவடி ஓதும் மைந்தன்:- குரங்குகள் இருக்குல்ல …அதாவது அனுமான்கள்… அப்ப, மனிதன் போலே, அவங்களும் செய்வாங்களாம் எல்லாம்… இந்த நாலு தேசத்திலேயே நீங்க பார்த்தீங்கன்னா, அனுமான் இருக்காருன்னா, அது வந்து—
அடியவர், அடியவர்கள் :- ஆஞ்சநேயர்.
சுவடி ஓதும் மைந்தன்:- ஆஞ்சநேயர். இங்க இருப்பார் இல்லையா? அப்ப, மனிதன் எல்லாம் என்னதான் சேட்டை செய்றானோ. அதுபோல் இந்த 4 தேசத்திலும் செய்வ்வார். அப்ப, இங்கிருந்து தான் நீங்க வந்து கண்டுபிடிச்சுக்கலாம் என்று சொல்கின்றார். இங்க தான் மனிதன் வந்து?
அடியவர்:- தோற்றம். மனிதன் தோன்றினான்.
# மலேசியாவில் உள்ள பத்துமலை முருகப்பெருமான் சிலை 42.7 மீட்டர் (140 அடி) உயரம் கொண்டது, இது உலகின் மிக உயரமான முருகப்பெருமான் சிலைகளில் ஒன்றாகும்.
குருநாதர்:- அப்பனே எதை என்று அறிய நிச்சயம் முருகன் இருக்கின்றானே, பெ….ரி….ய…. முருகன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, இவ் “நான்” எவை என்று புரிய அப்பனே “முகனுக்கும்” அப்பனே இங்குதான் அப்பனே ஆராய்ச்சி கூடமே யான் அமைத்தேன் அப்பனே.
***** இன்னும் இருக்கிறது அப்பா. *****
***** அப்பனே, உள்ளே சென்றால், அப்பனே, இன்னும், அப்பனே, நிச்சயம் குவிகள் அப்பனே பின், ஆனாலும் சிறு துளை தான் செல்ல முடியும் என்பேன் அப்பனே. சொல்கின்றேன் அப்பனே. *****
***** இது ஆராய்ச்சியாளர்கள் விட்டுவிட்டார்கள் அப்பனே. *****
***** அப்பனே, இன்னும் அதை விட்டுவிட்டால், மனிதன் இதையும் அழித்து விடுவான் என்று அமைதியாக சென்று விட்டார்கள் அப்பனே.*****
அடியவர்:- அதாவது, இந்த பத்துமலையில் தான் இந்த ஆராய்ச்சி கூடம் இருக்கிறது. அது போகிற வழி ஒரு சிறு துளைதான். ஏன்னா, மனிதன் ஒரு நாள் அதை அழித்து விடுவான்.
சுவடி ஓதும் மைந்தன்:- உள்ள போகலாமாம். அந்த மலைக்குள்ள இன்னும் உள்ள போயிட்டே இருக்குல்லாமாம். ஆனால், அது வந்து போகாதபடி பண்ணிருக்காங்க. அரசாங்கமோ யாரோ, தெரிஞ்சோ தெரியாமலோ தெரியல.
அடியவர்:- ஏதோ ஒரு இறை காரணத்தால, அது வந்து தடுக்கப்பட்டுள்ளது. இல்லாட்டி, மனிதனை அழித்து விடுவான். சுயநலத்துக்காக அழித்து விடுவான்.
சுவடி ஓதும் மைந்தன்:- அழித்து விடுவான். அதனால, அங்க வந்து, அது வந்து… இன்னும் கூட வந்து ஆராய்ச்சி கூடம் இருக்குது என்று சொல்கின்றார்.
குருநாதர்:- அப்பனே, இன்னும் அப்பனே, பின் கண்டுபிடித்தது அப்பனே, பின் பல அப்பனே நிச்சயம் எவ்வாறு என்பதை கூட ஆயிரம் ஆண்டுகளுக்கு அப்பனே நிச்சயம் தன்னில் கூட முன்பே, அப்பனே.
குருநாதர்:- ***** நிச்சயம் பின் பணம் அப்பனே, இப்பொழுது கூட பணம் வந்து கொண்டே தான் இருக்கின்றது என்பேன் அப்பனே. *****
அடியவர்:- அதாவது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே பல கண்டுபிடிப்புகள் நிகழ்த்தி உள்ளார்கள். அது எப்படின்னா, பணம் எப்படி வரும்? அப்படின்னு சொல்லிட்டு. இன்னும் பணம் வந்து கொண்டே தான் இருக்கு இவ் தேசத்திற்கு.
குருநாதர்:- அப்பனே, எதை என்று புரிய அதனால்தான் அப்பனே, பின் நான்முகன் என்பேன் அப்பனே.
குருநாதர்:- இதனால் அப்பனே இங்கு அப்பனே ஓன்றும் இல்லாதவன் கூட வந்தால், அப்பனே, பின் ஒரு மிக பெரிய உயர் இடத்தை வகித்துவிடுவான் என்பேன் அப்பனே.
குருநாதர்:- அதுபோன்று, அப்பனே, ஏற்படுத்தி இருக்கின்றேன் அப்பனே, பின் மக்களுக்காகவே யான்.
குருநாதர்:- ஆனாலும் இன்று மாறிவிட்டது அப்பனே அனைத்தும்.
சுவடி ஓதும் மைந்தன்:- அதாவது, சாதாரண மனிதனுக்கு கூட, பிரம்மா….. சாதாரண மனிதன்….அவனுக்கு காசு இல்ல, ஒண்ணுமே இல்ல. ஆனா, இங்க வந்தாங்கன்னா என்ன பண்ணுவாங்க?
சுவடி ஓதும் மைந்தன்:- செழிப்பாக பெரியாளாக மாறிவிடுவாங்க. அது மாதிரி இங்க இருக்குதாம்…
அடியவர்:- இந்த தன்மை கொண்டது இந்த பூமி.
அடியவர் 1:- நான்கு நாடும்?
அடியவர்:- இந்த நான்கு நாடும்.
குருநாதர்:- அப்பனே, எதை என்று புரிய இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட தர்மம் காக்கப்பட வேண்டும். எப்பொழுதும் அப்பனே. சொல்லிவிட்டேன் என்பேன் அப்பனே.
குருநாதர்:- தர்மத்தின் பாதையில் சென்றால் கடினமாகத்தான் இருக்கும். அப்பனே, ஆனால், அதன் சுவை இனிப்பு அப்பா , இனிப்பு.
அடியவர்:- அதாவது, தர்மத்துல போனா, கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும். ஏன்னா, முன்னேற்றம் மாதிரி கிடைக்காது. எல்லாம் கேலி பண்ணுவாங்க.
சுவடி ஓதும் மைந்தன் விளக்கங்கள் சுருக்கம் :- ( தர்மம் என்பது கிணற்றை தோண்டினால் தண்ணீர் வருவது மாதிரி — தொடர்ந்து செய்தால் நல்ல பலன் தரும். பெரிய தர்மம் செய்கிற ஒரு குடும்பம். அவர்களை பற்றி அங்கு எடுத்துரைத்தார். உலகத்தில் சிலருக்கே இப்படிப் பட்ட எண்ணங்கள் வரும், அதனால் தர்மம் ஒரு பயணம் போல தொடர வேண்டும். சின்ன உதவிகளும் தர்மமே… ஒரு எறும்பு , ஒரு மீன், அவைகளுக்கு தண்ணீர், உணவு கொடுத்தாலும் அது தர்மம். )
குருநாதர்:- அப்பனே இதனால் கவலைகள் வேண்டாம் அப்பனே. உங்களுக்கு என்ன தேவையோ, அதை யான் கொடுக்கின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன்:- அதனால யாரும் கவலைப்பட தேவையில்லை. உங்களுக்கு என்ன தேவையோ அதை அகத்தியர் கொடுப்பார்.
குருநாதர்:- அப்பனே, எதை என்று அறிய நீங்களும் எண்ணிக் கொள்ளுங்கள். இதையே பலமுறை யான் சொல்லி இருக்கிறேன், அப்பனே. மீண்டும் இதேதான் சொல்வேன்.
குருநாதர்:- அப்பனே, உங்கள் பிள்ளைகளாக இருந்தாலும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, ஏதாவது நிச்சயம் வாங்கி கொடு. வாங்கி கொடு என்றால், அப்பனே, நிச்சயம் நீங்கள் வாங்கி கொடுத்து விடுவீர்களா என்ன? அப்பனே, யோசிப்பீர்கள் அல்லவா?
குருநாதர்:- இக்குழந்தைக்கு இது பின் வாங்கி தரலாமா? வேண்டாமா? என்று.
குருநாதர்:- அதேதான், அப்பனே, நிச்சயம் எனை பின் தந்தையே !!!!! தந்தையே !!!!! என்று அழைத்தவர்களுக்கெல்லாம், அப்பனே, நிச்சயம் அதாவது, கொடுக்க வேண்டுமா? இல்லையா? என்று யோசித்து தான் யான் கொடுப்பேன்.
அடியவர்:- இப்போ குழந்தைங்க சாக்லேட் கேட்டவுடனே வாங்கி கொடுத்துறோமா? யோசிப்போம். குழந்தைக்கு கெட்டுடும். நல்லதா, இல்லயா ? அப்படின்னு யோசிப்போம். அதேபோல அகத்திய பெருமானும் கேட்டாலும், கொடுப்பார். கொடுக்க வேண்டிய நேரத்தில் அவருக்கு அப்பவே நிலைக்கும். அவருக்கு நல்லது என்று. அதுக்காக பொறுத்திருங்க என்றுதான் சொல்றார். நிச்சயம் கொடுப்பேன்.
சுவடி ஓதும் மைந்தன்:- அது செய்தே தீருவேன். ஆனாலும் கொஞ்சம் லேட் ஆகும்.
குருநாதர்:- எதை என்று புரிய இன்னும் ரகசியங்கள் இருக்கிறது. அதனால் ரகசியங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். என் பக்தர்கள், எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் எவை என்று புரிய மற்றவர்களுக்கும் சொல்ல வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன்:- பல ரகசியங்கள் என் பக்தர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த ரகசியங்கள் சொல்லியும் மத்தவங்களுக்கும் நீங்க பகிரணும்.
குருநாதர்:- அப்பனே, எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதாவது அப்பொழுதுதான் எதை என்று புரிய, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, நீங்கள் படித்ததை, அப்பனே, அப்படியே அப்படியே அப்பனே பரீட்சையில் எழுதி இருக்கிறீர்கள் என்பேன் அப்பனே. ஆனாலும் அப்பனே எதை என்று புரிய அப்பனே அப்பொழுதுதான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே எவை என்று, அடுத்த வகுப்பிற்கு நீங்கள் செல்லலாம் என்பேன் அப்பனே. இல்லை என்றால்?.....
அடியவர்:- அதாவது அப்பதான் நீங்கள் முன்னேற முடியும் என்று சொல்கின்றார். அடுத்த நிலைக்கு நீங்கள் வரமுடியும் என்று சொல்கின்றார்.
குருநாதர்:- அப்பனே, அடுத்த நிலைக்கு செல்ல வேண்டுமானால், அப்பனே, நீங்கள் நிச்சயமாக உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே.
குருநாதர்:- இததேசத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள், அப்பனே. எனை நினைத்து நினைத்து, ஆனால்இததேசத்தைப் பற்றிய ரகசியங்கள் தெரியவே இல்லை என்பேன் அப்பனே. எப்படி அப்பா? நிச்சயம் அப்பனே, நிச்சயம். மற்றவர்கள் கேட்டால் என்ன சொல்வான்?....... அகத்தியனா?...... பொய் என்று தான் சொல்லிக்கொண்டு திரிவான்.
குருநாதர்:- இதனால்தான் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பின் அனைவரும் எவை என்று புரிய, நிச்சயம் ஏது என்று புரிய, அப்பனே ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்காக, ஒவ்வொரு வேலைக்காக வந்து இருக்கிறீர்கள் அப்பனே.
குருநாதர்:- அவ் வேலையை யான் நிச்சயம் சொல்வேன் அப்பனே. இல்லையென்றாலும் அப்பனே, உங்கள் சொப்பனத்திலும் காட்டுவேன் அப்பனே.
குருநாதர்:- உங்களுக்குள்ளே அப்பனே, நுழைந்து யான் தெரிய வைப்பேன் என்பேன் அப்பனே.
அடியவர்:- அதாவது ஒவ்வொரு பிறவிக்கும் ஒரு காரணம் இருக்கும். அதை என்னன்னு நான் உணர்த்துவேன். உங்களை கனவுல வந்தா கூட சொல்லுவேன், இல்ல உங்களை உள் நுழைந்து கூட சொல்லி காட்டுவேன். காட்டியே தீருவேன். உங்கள் பணி இதுதான் என்று அவர் சொல்லியே தீருவார் என்கின்றார்.
குருநாதர்:- அப்பனே, ஏன் மந்திரங்கள் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எவை என்று ஒவ்வொரு நரம்பிற்கும் அப்பனே நிச்சயம் வேலை உண்டு என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட .
குருநாதர்:- அப்பனே இவ்வாறாக, அப்பனே நிச்சயம் இவ் மந்திரங்கள் எல்லாம் சொல்கின்ற பொழுது, அப்பனே, நிச்சயம் எவை என்று கூற அப்பனே பின் நிச்சயம் உனை நீயே , அப்பனே, பின் எதை என்று கூற அவ் நரம்பு சிறு சிறிதாக அசையும் என்பேன் அப்பனே.
குருநாதர்:- இவ்வாறு, அப்பனே, பின் அசைகின்ற பொழுது, பின் உன்னுள், அப்பனே, ஒரு ஒளி தோன்றி, அவ் ஒளி உண்மை நிலை காட்டும் என்பேன் அப்பனே. அவ்வளவுதான் என்பேன் அப்பனே.
அடியவர்:- அதாவது மனிதனின் உடம்பில் 72,000 நாடி நரம்புகள் உள்ளது. இந்த மந்திரங்கள் சொல்ல சொல்ல சில நரம்புகள் வந்து அசையும். அந்த நரம்புகள் அசைய, அசைய மட்டும் அந்த குண்டலி சக்தி என்பது எழும்பி, ஜோதியா வந்து உங்களை உணர முடியும். உண்மையை உங்களுக்கு காட்டுவேன், அப்படின்னு சொல்றார்.
குருநாதர்:- அப்பனே, இதுபோலத்தான் என் பக்தர்களுக்கு சொல்லி சொல்லி, அப்பனே, அவனையும் தட்டி எழுப்பி, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட மற்றவர்களுக்கு சேவை செய்ய வைப்பேன் என்பேன் அப்பனே.
குருநாதர்:- நிச்சயம் தன்னில் கூட அப்பனே கவலைகள் வேண்டாம், என்பேன் அப்பனே.
அடியவர்:- அதாவது என்ன சொல்றாருன்னா, இந்த உண்மை தெரிஞ்சிருச்சுன்னா, உங்களுக்கு நீங்களே சேவை செய்ய ஆரம்பிச்சுருவீங்க.
குருநாதர்:- எனை நம்பியோருக்கு, அதாவது சித்தனை நம்பியோருக்கு, அப்பனே, ஒரு பொழுதும் தீங்கு செய்வதில்லை அப்பனே.
குருநாதர்:- ஆனாலும், அப்பனே, சிறிது தாமதமாக நடக்கும் அனைத்தும். அவ்வளவுதான் என்பேன் அப்பனே.
குருநாதர்:- துன்பம் என்பது, அப்பனே நிச்சயம் எதை என்று கூற , அப்பனே பின் ஒவ்வொரு, அப்பனே நிச்சயம், அனுபவம் என்பேன் அப்பனே.
அனுபவ பாடம் எங்கே கற்றுக்கொள்ள முடியும் ?
அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே, பின் எவ் காசுகள் கொடுத்து கற்றுக்கொள்ள முடியும் அப்பனே?
***** இதனால் தான் அப்பனே என் பக்தர்களை அப்பனே, வருவோரெல்லாம் பின் *****
***** ஏமாற்றியவனிடம் அப்பனே, விடுவேன். *****
***** பொய் சொல்பவனிடம் விடுவேன். *****
***** நம்பிக்கை துரோகம் செய்பவனிடம் விடுவேன். *****
***** ஏனென்றால், அனுபவம் வேண்டும் அல்லவா, அப்பா? *****
அடியவர்கள்:- ( பலத்த சிரிப்புகள்……………….. )
சுவடி ஓதும் மைந்தன்:- அப்ப, அனுபவ பாடம் எங்க படிக்கலாம்? என்று கேட்கின்றார் வந்து.
சுவடி ஓதும் மைந்தன்:- அனுபவ பாடம் எங்க படிக்கிறது?
சுவடி ஓதும் மைந்தன்:- யாராவது காசு கொடுத்து படிக்க முடியுமா?
சுவடி ஓதும் மைந்தன்:- அதுக்கு காலேஜ் இருக்கா?
சுவடி ஓதும் மைந்தன்:- இல்ல.
சுவடி ஓதும் மைந்தன்:- அப்ப, அனைவரும்….. என் பக்தர்களை என்ன தெரியுமா நான் பண்ணுவேன்?
சுவடி ஓதும் மைந்தன்:- என் பக்தர்களை, பொய் சொல்றவங்க கிட்ட அனுப்புவேன். நம்பிக்கை துரோகம் (சிக்க) வச்சு, நம்பிக்கை துரோகம் செய்யறவங்க கிட்ட அனுப்புவேன். ஏமாற்றுபவன் கிட்ட அனுப்புவேன். ஏன்னா….. எதுக்காக அனுப்புறேன் ? நீ அனுபவம் கத்துக்கணும். அதனால, அப்படி அனுப்பிடுவேன் நானு.
அடியவர்:- அப்பதான் உண்மை புரியும்.
சுவடி ஓதும் மைந்தன்:- உண்மையான பக்தர்கள்… அகத்தியர் பக்தர்களிடம் யார் வருவாங்க? அகத்தியர் என்ன பண்ணுவாரு?
சுவடி ஓதும் மைந்தன்:- ஏமாத்துறவன் கிட்ட தள்ளுவாரு.
சுவடி ஓதும் மைந்தன்:- நம்பிக்கை துரோகம் செய்றவன் கிட்ட தள்ளுவாரு.
சுவடி ஓதும் மைந்தன்:- அப்புறம், பொய் சொல்றவன் கிட்ட தள்ளுவாரு. இன்னும் வந்து,
அடியவர்:- அதாவது எல்லாமே ஒரு கஷ்டமான அனுபவமாகத்தான் வரும்.
சுவடி ஓதும் மைந்தன்:- அப்ப, நாம என்ன பண்ணுவோம்…?
சுவடி ஓதும் மைந்தன்:- அது மாதிரிதான் நான் தள்ளுவேன். ஏன் தள்ளுவேன்? அனுபவ பாடத்தை நீ கற்றுக்கணும்னா?
சுவடி ஓதும் மைந்தன்:- உணர முடியும். எவ்வளவு பெரிய வார்த்தை பாருங்க. இப்ப நம்ம என்ன பண்றது? அப்ப, நம்ம தான் எச்சரிக்கையா இருக்கணும். ( மைந்தனுக்கு சிரிப்பு அடக்க முடியவில்லை )
குருநாதர்:- அப்பனே, எதை என்று புரிய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, நீங்கள்….ஒன்றை சொல்கின்றேன் அப்பனே.
குருநாதர்:- அதாவது, பெரும் கல்வி கற்பதற்கே பல லட்சங்கள் செலவு செய்கின்றீர்கள் என்பேன் அப்பனே. இதனால், அனுபவ பாடங்கள் நீங்கள் கற்பதற்கு, அப்பனே, செலவு செய்திருக்க வேண்டும் என்று எண்ணிக்கொள்ளுங்களேன்.
அடியவர்கள் :- ( சிரிப்புகள் )
சுவடி ஓதும் மைந்தன்:- பெரிய பெரிய படிப்பு எல்லாம் படிக்கிறீங்க. லட்சக்கணக்குல செலவு செஞ்சு படிக்கிறீங்க இல்ல?. அனுபவ பாடத்தை வந்து படிக்கிறதுக்கு. ஒருத்தனை ஏமாத்துறேன்னா, பரவாயில்லை. பீஸ் கொடுத்துட்டேன்னு நினைச்சுக்கோங்க. ‘
அடியவர்கள் :- ( சிரிப்புகள் )
சுவடி ஓதும் மைந்தன்:- ஐயா, புரியுதுங்களா? ஐயா இப்படித்தான் நினைக்கணும் என்று சொல்கின்றார்.
சுவடி ஓதும் மைந்தன்:- இது ஜீவ நாடிங்க அய்யா. ஏன்னா, மக்களுக்கு புரிய வைக்கணும். உண்மை எனக்கு தெரியல. கலியுகத்துல வந்து, அதனால ஏதோ ஒரு சித்தர்கள் தான் வந்து என்ன பண்ணறாங்க ? எடுத்து உரைகின்றார்கள்
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( அகத்திய பெருமான் அருளால் கிடைத்த ஜீவநாடி என்பது மிகப் பெரிய பாக்கியம்; அது யாருக்கும் சாதாரணமாக வராது. ஒருவர் வாழ்நாளில் செய்த புண்ணியம், பக்தி, நல்ல மனம், கோயில் வழிபாடு, பரிகாரம், இறைவனைத் தேடிய பயணம்—இவை எல்லாம் சேர்ந்து தான் இந்த அருள் கிடைக்கும். அகத்தியர் எப்போதும் பார்த்துக் கொண்டே இருப்பார்: “இவர் எப்படி நடக்கிறார்? இவர் என்ன செய்கிறார்?” என்று. வாழ்க்கையில் எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும், இறுதிக் கிளைமாக்ஸில் தான் அருள் வெளிப்படும். கணபதி, புவனேஸ்வரி போன்ற தெய்வங்களின் மந்திரங்களை அகத்தியர் தாமே அருளி கொடுக்கிறார். மந்திரங்கள் நீங்க என்ன பண்ணனும்? அதை நீங்க டெய்லி ஜெபிக்கணும். இதன் மொத்தப் பொருள்—எல்லாமே அகத்தியரின் கருணை; அகத்திய பெருமான் அவர் அருளால் தான் இந்த அரிய பாக்கியம் நமக்கு வந்து சேருகிறது. )
குருநாதர்:- அப்பனே, சொல்வது அதாவது, ஒரு ஆசிரியர் சொன்னால், நிச்சயம் நீங்கள் கேட்க வேண்டும், அப்பனே.
குருநாதர்:- அப்பாடத்தை சரியாக, அப்பனே, பின் படித்து வந்து எழுதினால் அப்பனே, யான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட மதிப்பெண் கொடுப்பேன். அவ்வளவுதான். எதை பற்றியும் நீங்கள் சிந்திக்க கூடாது.
அடியவர் :-அதாவது, அவர் சொன்னதை செய்யணும்னு சொல்றாரு.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)

ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
ReplyDelete