​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 10 October 2026

சித்தன் அருள் - 2338 - அன்புடன் அகத்தியர் - தொண்டீசுவரம் சிவாலயத்தில் உரைத்த வாக்கு - பகுதி 1



வாக்குரைத்த தேதி: 03 அக்டோபர் 2026
வாக்குரைத்த நாள்: கன்னி திங்கள் , புரட்டாசி மாதம்,  சனிக்கிழமை 

வாக்குரைத்த ஸ்தலம்: தொண்டீசுவரம் சிவாலயம்,  ஸ்ரீ ராம் ஆலய இடிபாடுகள் / தேவினுவாரா விஷ்ணு கோவில், தேவேந்திர முனை, மாத்தறை மாவட்டம், தெற்கு மாகாணம், இலங்கை. 

Address :- Sri Ram Temple Ruins / Devinuwara Vishnu Kovil, Dondra (தேவேந்திர முனை), Matara District, Southern Province, Sri Lanka. 

Google map link :-  https://maps.app.goo.gl/4B9vVXSx4LggRkZu8

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 

அப்பனே, எம்முடைய ஆசிகள். 

அப்பனே, பல ரகசியங்கள் இவ்வுலகத்தில் உள்ளதப்பா. 

ஆனாலும், அப்பனே, அவையெல்லாம் மனிதன் அறிந்து கொள்வதற்கு, அப்பனே, புண்ணியங்கள்—அதாவது தேவைப்படுகின்றது—அப்பனே, மிக்க அதிகமாகவே. 

அவையெல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எங்கள் பின் வந்தாலே, அப்பனே, புண்ணியத்தை அளித்து, அப்பனே, பல விஷயங்களை அப்பனே, பின் தெரிந்து, அப்பனே, தெரிவித்து, அப்பனே, நல்விதமாகவே, அப்பனே, பின் அவர்களுக்கு என்னென்ன தேவையோ, அதை யாங்களே கொடுப்போம்.

அவ்வளவுதான் என்பேன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 

குருநாதர்:- அப்பனே, இதனால், அப்பனே, முதலிலில், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின்—அதாவது விஷ்ணுவின், அப்பனே, பின்—வாகனம் எது? யாராவது சொல்ல முடியுமா? 

அடியவர்:-  கருடன்

குருநாதர்:- அப்பனே, எதை என்று புரிய, அனைவரும் அவ்வாறத்தான் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பேன்  அப்பனே. ஆனாலும், குதிரை என்பது எது?

சுவடி ஓதும் மைந்தன்:- குதிரை என்பது என்ன?

அடியவர்:-   அது ஒரு வாகனம். கல்கி வாகனம்.

குருநாதர்:-  அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, புரியும் அளவிற்குச் சொல் பார்ப்போம்.

அடியவர்:-   குதிரை என்பது கல்கி பகவானுடைய வாகனம். விஷ்ணுவுடைய பத்தாவது , கடைசி அவதாரம். அதன் வாகனம்.

குருநாதர்:-   அப்பனே, இதைத்தன், அப்பனே, எவ்வாறு வந்ததெல்லாம், அப்பனே, யாருக்காவது தெரியுமா?  என்றால், அப்பனே, நிச்சயம் தெரியாது. 

குருநாதர்:-  அப்பனே, இதைத்தன் அறிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எவ்வாறு என்பதை எல்லாம், அப்பனே, நிச்சயம் பின் அறிந்தும், பல வழிகளில் கூட…

இங்கிருந்து சரியாகவே, அப்பனே, 

பின், “பல லட்சம்” — அப்பனே, பின், நிச்சயம் “ஐந்து தொலைவில்” கூட, 

குருநாதர்:- அப்பனே, சரியாகவே, அப்பனே, பின், நிச்சயம் ஏழு—அப்பனே, பின்னே, ஒவ்வொன்றாக, அப்பனே, பின், கடல் என்று பிரிக்கப்பட்டுள்ளதப்பா.

அடியவர்:-  (தொண்டீஸ்வரம்) இங்கிருந்து கீழே.

சுவடி ஓதும் மைந்தன்:- (தொண்டீஸ்வரம்)  இங்கிருந்து கீழே,  ஏழு கடல் என்று சொல்லிட்டு பிரிக்கப்பட்டுள்ளது என்றார். 

குருநாதர்:- அப்பனே எதை என்று புரிய… 

அப்பனே, பின்—அங்குதான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட…

“விஷ்ணு” அழகாக, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட…

அப்பனே பின் அதாவது நிச்சயம் பின் — ”பால் நிறைந்த”..... 

அப்பனே, நிச்சயம் தன்னில் கூட…..

பின்—”நீரில்”, அப்பனே, 

பின், “அழகாக”, 

குருநாதர்:-  அப்பனே, பின், “அமர்ந்திருக்கின்றான்” என்பேன்  அப்பனே.

சுவடி ஓதும் மைந்தன்:-  ஐயா புரியுதுங்களா?

அடியவர்:-   புரியுது. ரொம்ப தூரத்துல இங்க இருந்து அந்த கடல் இருக்கு.

சுவடி ஓதும் மைந்தன்:-   தூரத்துல… 

அடியவர் 1:-   பால் கடல்ல பள்ளி கொண்டிருக்கிறார் .

சுவடி ஓதும் மைந்தன்:- ஆமா.

குருநாதர்:-  அப்பனே, இவை எதை என்று புரிய, அப்பனே, இதனால் அறிந்தும் கூட, அப்பனே, பின்—இதனால் நிச்சயம் தன்னில் கூட, பல வகையிலும்  கூட, அப்பனே, பின், நிச்சயம் பின்—நன்றாகவே, அப்பனே, செழிப்படைந்தது, அப்பனே.

குருநாதர்:-  இதனால், அப்பனே, எவ்வாறு என்பதை எல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, 

உலகம், அப்பனே, அழிவு, அப்பனே, பின்—வர, 

அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, 

எவ்வாறு என்பதை எல்லாம், அப்பனே. 

பின்—ஏது என்று, அப்பனே, சரியாக அங்கிருந்து, அப்பனே, சக்கரத்தை அனுப்பினான் என்பேன்  அப்பனே.

இங்கு, அப்பனே, பின் நின்று மீண்டும், அப்பனே, பின், திரும்பி அவனிடத்திலே சென்றுவிட்டது என்பேன்  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 

பின் விஷ்ணு, அப்பனே, அதாவது நிச்சயம் பின் ஆச்சரியப்பட்டான் என்பேன்  அப்பனே. 

எவ்வாறு என்பதை எல்லாம், அப்பனே, பின்—அதாவது இவ்வளவு சக்திகள் இதற்குப் பின் இருக்கின்றது. 

ஆனால் மீண்டும் நம்மிடையே, அதாவது வந்துவிட்டதே என்று…

பின் நிச்சயம் தன்னில் கூட, பின் தேவாதி, பின் தேவர்கள் கூட, நிச்சயம் தன்னில் கூட…

பின் இவ்வாறு, பின் எவ்வாறு என்பதெல்லாம், பின் நாராயணன் எவ்வளவு சக்தி படைத்தவன், எதை என்று புரிய… 

குருநாதர்:- மீண்டும் பின் அவை தன் பின் வந்துவிட்டதே, மீண்டும் என்பதற்கே, எதை கூற, பின் ஏது என்று அறிய, நிச்சயம் பின் ஆச்சரியம் அடைந்தனர். 

சுவடி ஓதும் மைந்தன்:- திருப்பியும்… ஐயா, புரியுதுங்களா இது?

சுவடி ஓதும் மைந்தன்:-  திருப்பி அவர் கிட்ட போயிட்டு இருக்குது அங்க.

குருநாதர்:-  இதைத்தன் அறிய, நிச்சயம் தன்னில் கூட மீண்டும் எதை என்று அறிய.. 

குருநாதர்:-  அறிந்தும், அதாவது நிச்சயம் ஈசன், நிச்சயம் எதை என்று புரிய, 

பின் அதாவது ஈசன் அங்கிருந்தே எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, 

இதனால் மனிதனின் எல்லைகள் எப்பொழுது, 

பின் அதாவது மீறி நிற்கிறதோ, 

அப்பொழுது நிச்சயம் தன்னில் கூட, 

பின் இறை எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூற, 

பின் அப்பொழுது, பின் குறைவாகிவிடும் என்பதை எல்லாம், 

குருநாதர்:-  இதனால் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும், 

அப்பொழுதே நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு என்பதை எல்லாம், 

மனிதனின் எண்ணங்கள் மாறிவிட்டது.

குருநாதர்:- இதனால் நிச்சயம் மீண்டும், பின் அதனால்தான் திரும்பி வந்துவிட்டது.

அடியவர்:- எண்ணங்கள் சரியில்ல.

சுவடி ஓதும் மைந்தன்:-  எண்ணங்கள் சரியில்ல. மனிதனோட வந்து அழிவுகளுக்கு வந்து ஆரம்பம் ஆயிடுச்சு. அதனால வந்து என்ன ஆயிடுச்சு?

அடியவர்:-  திரும்பி போயிடுச்சு.

குருநாதர்:-  இதைத்தன் அறிய, இவைத்தன் பின் ஈசனும் நிச்சயம் தன்னில் கூட நாராயணன் எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட 

ஆனாலும், அப்பனே, எங்களுக்கு இறைவன் என்பது ஒன்றேதான் என்பேன்  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 

ஆனாலும், இப்பொழுது சொன்னாலும், மனிதன் அதை புரிந்து கொள்ளும் சக்தி இல்லையப்பா, அப்பனே, போக போக சொல்கின்றோம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.

குருநாதர்:- அப்பனே, இதனால், அப்பனே, பின் நிச்சயம் எவ்வாறு, 

பின் ஈசனும் எதை என்று புரிய, 

பின் அதாவது நாராயணனை நோக்கி எதை என்று கூற, 

நிச்சயம் பின் மீண்டும், பின் அதாவது எதை என்று புரிய, நிச்சயம் பின் அதாவது சக்கரத்தை விட்டாலும், 

மீண்டும் உன்னிடத்தில் தான் திரும்பி வரப்போகின்றது என்று…

குருநாதர்:-  நிச்சயம் அனைவரும் எதை என்று கூற, நிச்சயம் தேவாதி, தேவர்களும், பின் பல வழிகளில் கூட, என்ன ஏது என்று புரிய, 

ஈசனாரே !!!!! இப்படி நிச்சயம் தன்னில் கூட, பின் விஷ்ணு எவ்வளவு சக்தி படைத்தவன். 

குருநாதர்:-  பின் எதை என்று கூற, மீண்டும், பின் விடுங்கள், பார்ப்போம் என்றெல்லாம், 

பின் நிச்சயம் யாங்கள் உனக்கு துணை இருப்போம் என்று, பின் அனைத்தும், பின் அதாவது எதை என்று கூற, அனைத்து லோகங்களில் உள்ள எதை என்று புரிய, பின் நிச்சயம் தன்னில் கூட நாராயணனுக்காகவே வந்து நின்றனர். 

குருநாதர்:- இதனால் அனைவரும் எங்கள் சக்தியை கொடுக்கின்றோம். மீண்டும் விடுங்கள் என்று விஷ்ணுவிடம்.

குருநாதர்:-   அப்பனே, எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, நல்விதமாக மீண்டும் சரி என்று எல்லாம், விஷ்ணு நிச்சயம் தன் எதை என்று அறிய, பின் எதை, அப்பனே, பின் சரியாக சக்கரத்தை, பின் விட்டானப்பா, 

மீண்டும் எதை என்று கூற, பின் அப்பனே, நல்விதமாகவே எதை என்று, நிச்சயம் தன்னில் கூட, 

அப்பனே, சிறிது நின்று மீண்டும், 

குருநாதர்:- அப்பனே, பின் எதை என்று திரும்பி, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட தன் கைக்கே வந்துவிட்டது. 

சுவடி ஓதும் மைந்தன்:-  (சக்கரம்) கொஞ்சம் நின்னது.திருப்பியும் ?

அடியவர்:- வந்துவிட்டது.

சுவடி ஓதும் மைந்தன்:-  (சக்கரம்)  திருப்பியும் (விஷ்ணு) அவர் கைக்கே வந்துவிட்டது.

குருநாதர்:-   எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட அனைவரும், பின் அதாவது பின் தேவர்களும், எவை, முனிவர்களும், ரிஷிகளும், நிச்சயம் பின்… 

ஈசனாரே !!!!! எவ்வாறு என்பதை எல்லாம், 

நிச்சயம் இப்படி என்றால், எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, 

குருநாதர்:-   இதனால் நிச்சயம் பின் ஈசனும் சரியாகவே அனைவரும் புரிந்து கொள்ளுங்கள். 

இதனால், அதாவது கலியுகம், பின் ஆரம்பமாகிவிட்டது. 

குருநாதர்:-  இதனால் நிச்சயம் எவ் முயற்சிகளும், நிச்சயம் வருங்காலத்தில், பின் நல்லோர்கள் எடுக்கும், பின் அதாவது நீங்களும், அதாவது ரிஷிகளும், முனிவர்களும், இன்னும் தேவர்களும் எடுக்கும் முயற்சிகள், நிச்சயம் தோல்வியில் முடிந்துவிடும். 

குருநாதர்:- இதனால் பின் என்ன முயற்சி செய்தாலும், தோல்வியே என்றெல்லாம். 

சுவடி ஓதும் மைந்தன்:-  அதனால் கலியுகம் ஆரம்பமாக போகுது.

சுவடி ஓதும் மைந்தன்:-  நீங்க என்ன செஞ்சாலும், என்ன மந்திரம் உச்சரித்தாலும், என்ன இது ஆனாலும்? அழிவு வருதுன்றார். 

குருநாதர்:-  இதைத்தன் அறிய, எவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட, 

அதாவது பின் காக்கும் எதை என்று புரிய, நிச்சயம் 

அனைத்தும் காக்கும் ஈசனாரே !!!!!  

நிச்சயம் தன்னில் கூட ஆனாலும், பின் உங்களால் முடியும் எதை என்று, நிச்சயம் 

குருநாதர்:- நிச்சயம் எதை என்று மீண்டும் நீங்கள் என்ன முயற்சி பின் செய்கின்றீர்களோ, பார்ப்போம் என்றெல்லாம். 

சுவடி ஓதும் மைந்தன்:-   அப்ப திருப்பியும் என்ன சொல்றாரு. எல்லாரும் தேவாதி தேவர்கள், எல்லாரும் ஈசனிடம் . … உங்களால முடியும். நீங்களாவது ஏதாவது? 

அடியவர்:- செய்யுங்கள்.

சுவடி ஓதும் மைந்தன்:-  செய்யுங்கள் என்று சொல்லிட்டு வந்து.

அடியவர்:-  ஈசனிடம்.

அடியவர்:-  ஈசனிடம் கேட்டார்கள். 

குருநாதர்:-   நிச்சயம் எவ்வாறு மீண்டும், பின் அமைதி காத்தான் ஈசன் ஒன்றும் சொல்லவில்லை. மௌனத்தை காத்தான். 

இதனால் நிச்சயம் பின் ரிஷிகளும், நிச்சயம் குருமார்களும், இன்னும் பல பல வழிகளில் கூட, பின் முனிவர்களும், தேவர்களும் எதை புரிய, நிச்சயம் 

பின் ஈசனாரே !!!!!  

நிச்சயம் மீண்டும் எங்கள் சக்திகள் எல்லாம், பின் அனைத்து எதை என்று கூற, பின் அதாவது ஹோமங்களும், நிச்சயம் இன்னும் மந்திரம், ஜெபங்கள் செப்பி, நிச்சயம் மீண்டும் இச்சக்கரத்துக்கு, அதாவது பின் விஷ்ணுவுக்கு, இன்னும் பின் ஒளியூட்டி, நிச்சயம் தன்னில் கூட எங்கள் வழி, பின் எதை, எதை என்று புரிய, பின் மீண்டும் அனுப்புவோம் என்றெல்லாம். 

இதனால் பல ஹோமங்களும், அவரவர், பின் அதாவது பின் ரிஷிகளும், பின் முனிவர்களும், தேவர்களும், இன்னும் பின் அவர்களுக்கு தெரிந்த மந்திரங்கள் எல்லாம், நிச்சயம் தன்னில் கூட, பின் பல பல வகைகளில் கூட, பின் அனைவரும் ஒன்று கூடி, நிச்சயம் பின் ஏது என்று புரிய, நிச்சயம் பின் அனைத்தும் செய்தனர். 

பின் எதை என்று கூற, ஈசனாரே !!!!! நீதான் பின் உதவி செய்யவில்லை. 

ஆனாலும் யாங்கள் பின் முயற்சிகள் பலவகைகளில்  எடுத்து, நிச்சயம் தன் மந்திர ஜெபங்களும், பின் ஹோமங்களும் நடத்தி, நிச்சயம் தன்னில் கூட உருவேற்றி இருக்கின்றோம். 

குருநாதர்:- இதனால் இச்சக்கரம் மீண்டும், பின் எதை அறிய, நிச்சயம் அனைவரும் காக்கும் என்று. 

சுவடி ஓதும் மைந்தன்:- மீண்டும் என்ன செய்றங்க ?

அடியவர்:- சக்கரத்துக்கு உரு ஏற்றி அனுப்புறாங்க… 

குருநாதர்:-  அப்பனே, எதை, எதை என்று புரிய, நிச்சயம் எவ்வாறு என்பதை எல்லாம் மீண்டும்….

பின் அழகாக விஷ்ணு எதை என்று கூற, பின் சரியாகவே, பின் வேகத்தில், அப்பனே, பின் எறிந்தான், என்பேன்  அப்பனே.

மீண்டும் இங்கு வந்தது என்பேன்  அப்பனே, நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட.

***** இதனால் அப்பனே, பின் அடியில் பதிந்தது, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. ***** 

அனைவரும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது 

வெற்றி பெற்றுவிட்டோம்… 

வெற்றி பெற்றுவிட்டோம் என்பதை எல்லாம், அப்பனே… 

குருநாதர்:-  ***** நிச்சயம் இன்னும், அப்பனே, பின் எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, பின் அடியும் மாற, அப்பனே, பின் மாறவில்லை என்பேன்  அப்பனே. ***** 

*****  நிச்சயம் அங்குதான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு என்பதை எல்லாம், இப்பொழுது திருத்தலம் எழுப்பி இருக்கின்றார்கள் என்பேன்  அப்பனே. ***** 

சுவடி ஓதும் மைந்தன்:-  அந்த சக்கரம் எரிந்து , கீழே பூமியில் விழுந்த அடி கூட வந்து இன்னும் மாறல. அந்த சக்கரம்  விட்டார்ல…. அது நேராக…. அந்த பாஸ்ட் வேகத்துல வந்து ….அங்க பதிஞ்சு விட்டது.

அடியவர் :- விழுந்திருக்கு.

சுவடி ஓதும் மைந்தன்:-  சக்கரம்  அது வந்து பதிஞ்சுச்சுனால….. இன்னும் அது வந்து…… அந்த இது கூட… (பூமியில் விழுந்த அடி) இன்னும் அப்படியே இருக்குதாம். 

குருநாதர்:-  அனைவரும் எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட பின் எங்கள் மந்திரங்களாலும் எதை என்று கூற யாங்கள் சாதித்தோம், யாங்கள் பின் சாதித்தோம் என்றெல்லாம்.

குருநாதர்:-  அப்பனே, மீண்டும் எதை என்று கூற, மீண்டும், பின் மெதுமெதுவாக, அப்பனே, மீண்டும், அப்பனே, பின் திரும்பி வந்துவிட்டது. 

சுவடி ஓதும் மைந்தன்:-  சக்கரம் அங்க பதிஞ்சு, மீண்டும் மெதுவா எழுந்து திருப்பி.. என்ன ஆயிடுச்சு?.

அடியவர்:- ரிட்டர்ன் ஆயிடுச்சு.

சுவடி ஓதும் மைந்தன்:-   ரிட்டர்ன் ஆயிடுச்சு என்று சொல்கின்றார்.

குருநாதர்:-  இதனால் பின் ஏன் எதற்காக, நிச்சயம் ஈசனாரே !!!!!  நிச்சயம் பின் உங்களை, அதாவது வணங்கிக் கொண்டிருக்கின்றோம், பின் யாங்கள் நிச்சயம், பின் ஏதாவது, பின் முடிவு கொடுங்கள். 

ஏனென்றால், நிச்சயம் தன்னில் கூட இவைதன் எவ்வாறாக, நிச்சயம் தன்னில் இப்பொழுதே, பின் பல அழிவுகள் எதை என்று, நிச்சயம் தன்னில் ஆனாலும், பின் நிச்சயம் ஏன் இவையெல்லாம் இப்படி திரும்பி வருகின்றது என்று, 

குருநாதர்:- நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக, எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, 

******* பின் ஏழு குதிரைகளான ******* 

நிச்சயம் எவ்வாறு என்பதை எல்லாம், நிச்சயம் தன்னில்… 

*******  ஏழு குதிரைகள் ******* 

நிச்சயம் தன்னில் கூட, பின் 

*******  விஷ்ணுவின் எதை என்று கூற, பின் வாகனங்களே என்பேன்  அப்பனே. ******* 

அடியவர் :- ஏழு குதிரை.

சுவடி ஓதும் மைந்தன்:-   ஏழு குதிரைகளோட இது என்னது?

சுவடி ஓதும் மைந்தன்:-   விஷ்ணுவினுடைய வாகனம் என்று சொல்கின்றார் வந்து.

அடியவர் :-  அப்போ ஏழு குதிரை சூரியனோட வாகனம் இல்லையா?.

குருநாதர்:- எதை, எது என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட, எவை என்று புரிய… அப்பனே, ஆனாலும் நிச்சயம் இதையும் தெரிந்து கொள்ளுங்கள் என்பேன்  அப்பனே.

சுவடி ஓதும் மைந்தன்:-  (விஷ்ணுவினுடைய வாகனம் ஏழு குதிரை)  இதையும் கட்டாயமா நீங்க…?

அடியவர் :-  தெரிந்து கொள்ளணும்.

குருநாதர்:- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது விஷ்ணுவிற்கு, அப்பனே..

பின் உதவியாக, அப்பனே….

நிச்சயம் தன்னில் பல ஹோமங்கள்…

பல பல நிச்சயம் தன்னில் கூட மந்திரங்கள் ஜெபிக்கின்ற பொழுது…

அப்பனே, பின் குதிரையில் , அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் எது என்று புரிய, 

அப்பனே, பின் அதாவது உலகத்தை, அப்பனே, ரிஷிகள் முதலில், அப்பனே, வலம் வந்து தான் என்பேன்  அப்பனே. 

குருநாதர்:- ******* நிச்சயம் இதனால், அப்பனே, அவனுடைய சொந்தங்கள், அப்பனே, நிச்சயம் பின் ஏழு குதிரைகள். *******

சுவடி ஓதும் மைந்தன்:- முதல்ல வந்து, விஷ்ணு பகவான் ஏழு குதிரை வச்சிருந்தார்.  அப்ப வந்து? 

குருநாதர்:-  அப்பனே, மலையும் ஏழு, அப்பனே, பின் கடலும் ஏழு என்றே வைத்துக் கொள்ளுங்கள் என்பேன்  அப்பனே.

சுவடி ஓதும் மைந்தன்:-  ஐயா எப்படிங்க இது?

அடியவர்:- ஏழு கடல், ஏழு மலை.

குருநாதர்:-  அப்பனே, பின் ஏழு வகையான, அப்பனே, நிலங்களும் என்று வைத்துக் கொள்ளுங்கள். 

அடியவர்:-  ம்….

குருநாதர்:-  அப்பனே, அனைத்தும் ஏழு, ஏழு என்று, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் பிரித்துக் கொள்ளுங்கள் என்பேன்  அப்பனே. 

குருநாதர்:-  முடிவு சரியாக வரும் என்பேன்  அப்பனே.

அடியவர்:-   சரி.

சுவடி ஓதும் மைந்தன்:-  எப்படிங்க ஐயா இது?  எனக்கும் புரியல?

அடியவர்:-    ஏழு கடல், ஏழு மலை, ஏழு நிலம், குறிஞ்சி, முல்லை  என்று சொல்லி.

சுவடி ஓதும் மைந்தன்:-  ஏழு, ஏழு…. மொத்தத்துல ஏழு, ஏழு என்று பிரித்துக் கொள்ளுங்கள்.

அடியவர்:-   எல்லாத்தையும் ஏழு, ஏழாக பிரிச்சிருக்காங்க.  சப்த(7)  ரிஷிகள் எல்லாமே ஏழு.

குருநாதர்:- அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட இதற்கும்…. அப்பனே, இன்னும், அப்பனே, சான்றுகள், அப்பனே, எங்கெங்கு, அப்பனே, பின் எது உண்மை என்பதை எல்லாம், அப்பனே, நிச்சயம் சொல்கின்றேன், அப்பனே…

சரியாக, அப்பனே. 

குருநாதர்:- ஏனென்றால், அப்பனே, பின் நிச்சயம் தன்னில் மனிதனுக்கு, அப்பனே, இவையெல்லாம், அப்பனே, சொன்னாலும் புரியாமல் நிலையில் இருப்பானப்பா..

இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட முதலில், அப்பனே, சில சில விஷயங்கள் சொல்லி சொல்லி தெளிவுபடுத்துதல், அப்பனே, பின் நிச்சயம் அவசியம்…

அதற்காகத்தான் தெளிவுபடுத்தி, அப்பனே, பின், பின், அப்பனே, உரைப்பேன், எதை என்று அறிய… 

அதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட..

ஆனால் மனிதன் முதலிலே, பின் இவையெல்லாம் தெரிவிப்பதில்லை (என்று நினைக்கின்றான்). 

(அங்கு அமர்ந்திருந்த அடியவரை ஒரு பார்த்து ) நீயும் கூட, அப்பனே, பின் நேற்று, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் எங்களுக்கு சொல்லவில்லையே என்று, அப்பனே, பின் சொல்லிக் கொண்டிருந்தாய் என்பேன்  அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, 

குருநாதர்:- இதனால் உண்மைதன், அப்பனே, முதலில் எதை, அப்பனே, கற்றுக்கொள்ள வேண்டுமோ, அதை கற்றுக்கொள்ள வேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன்:-  அது இப்படித்தான் சொல்றாரு பாருங்க. நேத்து கூட வந்து… 

அடியவர்:- ஆமா..நேற்று நாம் பேசியது…எங்களுக்கு சொல்லித்தரவில்லை என்று

சுவடி ஓதும் மைந்தன்:- எங்களுக்கு எதுவும் சொல்லல என்று. 

அடியவர்:- ஆமா..

சுவடி ஓதும் மைந்தன்:-  அதனால முதல்ல?. 

அடியவர்:-  பேசிக் ( அடிப்படை தெரிந்து கொள்ளவேண்டும்).
 
சுவடி ஓதும் மைந்தன்:- ஆமா..

குருநாதர்:- அப்பனே, பல வழிகளில் கூட எவ்வாறு எதை என்று புரிய, அப்பனே, 

இதனால் நிச்சயம் தன்னில் கூட, 

இதனால், அப்பனே, நிச்சயம் எவ்வாறு, பின் அதாவது ஏதாவது, பின் ஹோமங்கள் இன்னும்..

அப்பனே, பல மந்திரங்கள் இன்னும்… 

அப்பனே, பின் பல வழிகளில் கூட, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட.. 

*******   ஏதாவது, நிச்சயம், பின் எதை என்று கூட உலகத்திற்கு நன்மை செய்ய வேண்டுமானால்…*******  

*******   ரிஷிகளும், அப்பனே, குருமார்களும், இன்னும் முனிவர்களும், அப்பனே, தேவர்களும் கூட, அப்பனே, நிச்சயம் இவ் ஏழு குதிரைகள் தான் பயன்படுத்துவார்கள் என்பேன்  அப்பனே… *******  

*******  இதைத்தன் , அப்பனே, பின் உலகத்திற்கு பொதுவானவை. ******* 

குருநாதர்:- ******* அனைவருக்கும் சொந்தம் என்றே நினைத்துக் கொள்ளலாம். ******* 

சுவடி ஓதும் மைந்தன்:-   இந்த ஏழு குதிரைகளும்? 

அடியவர்:- எல்லாத்துக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். 

சுவடி ஓதும் மைந்தன்:-  எல்லாரையும்… எல்லாருக்கும் வந்து… பயன்படுத்திக் கொள்ளலாம். இது வந்து பொதுவானவை. 

அடியவர்:-  யாகங்கள் , பூஜைகள்… எல்லாம் சொல்லிட்டு வந்து, 

குருநாதர்:-  அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது பின் நாராயணனும் , அப்பனே, எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, மனம் வருந்தினாப்பா. 

எவ்வாறு என்பதை எல்லாம்…. 

இவ்வாறு, பின் சக்கரத்துக்கு எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட. 

இதனால், அப்பனே, பின் அதாவது நாமே செல்வோம் என்றெல்லாம் அப்பனே…

நீங்கள் யாரும், பின் வர தேவையில்லை. நிச்சயம் தன்னில் கூட எது என்று புரிய, பின் எவ்வாறு என்பதை எல்லாம்…. 

குருநாதர்:- யானே, பின் சக்கரத்தோடு செல்கின்றேன். பின் காக்கின்றேன் என்றெல்லாம், அப்பனே. 

அடியவர்:- விஷ்ணு வந்துட்டாரு.

சுவடி ஓதும் மைந்தன்:-  விஷ்ணு என்ன பண்ணாரு?

அடியவர்:-  நானே போறேன் என்று கிளம்பிட்டாரு.

சுவடி ஓதும் மைந்தன்:-  நானே போறேன். என்னதான் நடக்குது? என்னதான் நடக்குதுன்னு சொல்லி…. இந்த சக்கரத்தை நானே போயிட்டு…. இது பண்றேன் சொல்லிட்டு…. வந்து என்ன பண்ணாரு வந்து?  

அடியவர்:-  கிளம்பிட்டாரு

குருநாதர்:-  அப்பனே எதை என்று புரிய நிச்சயம் தன்னில்  ஆனாலும் அப்பனே அனைவரும் விடவில்லை நிச்சயம் தன்னில் கூட. 

ஏன் எதற்காக நிச்சயம் தன்னில் கூட ஈசன் உதவிடுவான். 

குருநாதர்:- அதனால் பின் செல்ல வேண்டாம் செல்ல வேண்டாம் என்றெல்லாம். 

சுவடி ஓதும் மைந்தன்:-  இப்ப என்ன சொல்றாரு எல்லாரும் வந்து… 

அடியவர்:- ஈசன் கோவப்பட்டுருவாரு போக வேண்டாம்.

சுவடி ஓதும் மைந்தன்:- பெருமாளே …நீங்க போக வேண்டாம். ஈசன் எல்லாம் பண்ணிருப்பாரு…அதனால  நீங்க போக வேண்டாம் என்று சொல்றாங்க…

குருநாதர்:-  நிச்சயம் எவை என்று கூற பின் எதை என்று புரிய பின் செல்வேன். 

ஏன் எதற்காக எவ்வளவு எதை என்று புரிய நிச்சயம் கூட ஆண்டுகள் நிச்சயம் தன்னில் கூட 

குருநாதர்:- எவ்வாறு இவ் சக்கரம் எதை என்று கூற, பின் அதாவது சக்கரத்தை ஒரு கையிலும் நிச்சயம் தன்னில் கூட …. அதாவது குதிரை ஏறினான் அழகாக. 

சுவடி ஓதும் மைந்தன்:-  சக்கரத்தை வைத்துக்கொண்டு ?

அடியவர்:- குதிரை ஏறிட்டார்…

சுவடி ஓதும் மைந்தன்:-   குதிரை ஏறிட்டார் 

குருநாதர்:-  எதை சரியாக எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் கடலை பின் கடலிலே  எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட. 

அப்பொழுது நிச்சயம் தன்னில் கூட பின் குதிரைக்கெல்லாம் மிக மிக சக்தி 

நிச்சயம் தன்னில் யானைகளுக்கும் மிக மிக சக்தி 

இன்னும் அப்பனே பின் சொல்கின்றேன் அப்பனே  நிச்சயம் தன்னில் கூட 

குருநாதர்:- பின் சிறு குழந்தைகளுக்கு போல அப்பனே சொன்னால் தான் புரியும் அப்பா பல விஷயங்கள் என்பேன் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன்:-   விஷ்ணு என்ன பண்ணாரு? ஒரு கையில சக்கரத்தையும்? 

அடியவர்:- குதிரையில ஏறி வந்துட்டாரு. 

சுவடி ஓதும் மைந்தன்:-  குதிரை ஏறி வராரு 

குருநாதர்:- அப்பனே எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட, சரியாக அப்பனே நிச்சயம் தன்னில் கூட, எல்லை அடைகின்ற  பொழுது, அப்பனே நிச்சயம் ஒரு கால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பின் உடைந்திட்டு அப்பனே பின் குதிரைக்கு. 

சுவடி ஓதும் மைந்தன்:-  கரெக்டா இங்க இருந்து வரும்போது 

அடியவர்:- கடல்ல இருந்து உள்ளுக்கு வரும்போது… ஒரு கால் உடைஞ்சிடுச்சு 

சுவடி ஓதும் மைந்தன்:-  ஒரு காலு வந்து 

அடியவர்:- (தொண்டீஸ்வரம் இங்கு கடல்) எல்லையை கடக்கும்போது உடைஞ்சுது 

சுவடி ஓதும் மைந்தன்:-   இந்த எல்லை… இங்க வருது… அங்கிருந்து எங்கேயோ லட்சம் கிலோமீட்டர் இருந்து வராரு. இங்க வரும்பொழுது… 

குருநாதர்:-  அப்பனே எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட சரியாகவே  அப்பனே 

பின் நிச்சயம் தன்னில் அறிந்து கூட 

இதனால் அப்பனே குதிரை, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, வேகம் அப்பனே பின் எதை என்று கூற… 

பின் முட்டி, எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, பின் மூன்றே கால்கள் தான்.

குருநாதர்:-  எதை என்று புரிய இதனால் அப்பனே பின் விஷ்ணுவிடம் இருந்த, 

பின் நிச்சயம் தன்னில் கூட,  அறிந்தும்..  

அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட சக்கரமானது, 

அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட, படு வேகத்தில், 

எவ்வளவு வேகத்தில் வந்ததோ, அவ்வளவு வேகத்தில் அப்பனே, நிச்சயம் எதை என்று அறிய , நிச்சயம் தன்னில் கூட, அப்பனே பின் சுற்றி  அப்பனே பின் பலமாக…. 

அப்பனே பின் அதாவது அப்படியே… 

குருநாதர்:-  அப்பனே ஏழு கடல் தாண்டி… ஏழு மலைக்கு சென்றுவிட்டது என்பேன் அப்பனே. 

அடியவர் :-  ஏழு மலை என்றால் இந்தியால இருக்கிற (திருப்பதி) ஏழு மலையா?

சுவடி ஓதும் மைந்தன்:-  அப்படியே இந்த பாஸ்ட்ல வந்து… அந்த மூணு கால்ல… அப்படி.. இப்படி… இப்படி ஒன்று முன்னாடி வந்து.. 

அடியவர்:- பேலன்ஸ் இல்லாம போயிடுச்சு. 

சுவடி ஓதும் மைந்தன்:-  அதான் ஒரு கால்ல முன்னாடி இது ஆயிடுச்சு பேலன்ஸ் இல்லாம இப்படி வளைஞ்சு உடையும் போது, அவர் கையில இருக்கிற சக்கரம் வந்து மிஸ் ஆயிடுச்சு. அப்படியே போயிட்டு என்ன ஆயிடுச்சு? 

அடியவர்:-  டைரக்சன் தப்பா போய்.. ஏழு மலைக்கு போயிட்டு… 

சுவடி ஓதும் மைந்தன்:-  நேரா அங்க போயிட்டு. எங்க?  

அடியவர்:-  திருப்பதி 

சுவடி ஓதும் மைந்தன்:-   திருப்பதி போயிடுச்சு. 

குருநாதர்:-  அப்பனே எதை ஏது என்று புரிய, அப்பனே நிச்சயம் தன்னில், எவ்வாறு என்பதை எல்லாம், அப்பனே.. சரியாகவே… அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே பின் அங்கும் எவை என்று கூற,  அப்பனே பின் அதாவது அவ் மலையில், அப்பனே பின் அடியில், அப்பனே பின் நிச்சயம் தன்னில் பதிந்துவிட்டது என்பேன் அப்பனே. 

அடியவர்:- அங்க போய் விழுந்துச்சு 

சுவடி ஓதும் மைந்தன்:-   அங்க போய் என்ன ஆச்சு வந்து? 

அடியவர் 1:- பதிந்துருச்சு 

சுவடி ஓதும் மைந்தன்:-  பதிந்துருச்சு 

அடியவர்:- திருப்பதில 

சுவடி ஓதும் மைந்தன்:-   திருப்பதில வந்து பதிந்துருச்சு  வந்து 

குருநாதர்:-  அப்பனே எதை என்று புரிய, அப்பனே நிச்சயம் தன்னில் எவ்வாறாக உண்மைகள் எல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் மனம் வருந்தினான் என்பேன் அப்பனே.

குருநாதர்:- நிச்சயம் சக்கரம் பின் எதை என்று புரிய பின் அதாவது நிச்சயம் பார்த்துக்கொள்ளலாம்.  ஆனால் குதிரை இப்படி ஆகிவிட்டதே என்றெல்லாம் அப்பனே. 

அடியவர்:- குதிரைக்கு இப்படி ஆயிடுச்சே… 

சுவடி ஓதும் மைந்தன்:-  சக்கரம் போனால் கூட பின்னால் பார்த்துக்கலாம்.  எப்படியாவது நம்ம கையில வரத்தான் போகுது எப்படியாவது சொல்லிட்டு வந்து 

அடியவர்:- இந்த வாகனம் இப்படி ஆகிடுச்சே என்று..

சுவடி ஓதும் மைந்தன்:-   ஆனால் வாகனம்? ….. பொதுவானது. உலகத்துக்கு பொதுவானது. எல்லாருக்கும் சொந்தமானது. எல்லாரும் பயன்படுத்திய ஏழு குதிரை …இப்படி வந்து இப்படி வந்து ஆயிடுச்சே!!!!

குருநாதர்:-  எதை எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அறிந்தும்  கூட பின் அதாவது அப்பனே ஒன்றை சொல்கின்றேன் அப்பனே. 

குருநாதர்:-  ******* குதிரை பேசியது என்பேன் அப்பனே. ******* 

சுவடி ஓதும் மைந்தன்:-  அந்த காலத்துல குதிரை பேசியது 

குருநாதர்:-  நிச்சயம் தன்னில் கூட 

பகவானே!!!!!!! உன்னை சுமந்து வந்தேன். 

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பின் கலியுகம் நிச்சயம் பின் தொடர்ந்து தொடங்கிவிட்டது. 

நிச்சயம் எவை என்று புரிய நிச்சயம் 

அதனால் நிச்சயம் என்னாலும் கூட முடியவில்லை 

எதை என்று அறிய என்றெல்லாம், 

குருநாதர்:-  *******  பின் கண்ணீர் சிந்தியது. ******* 

சுவடி ஓதும் மைந்தன்:-   அந்த குதிரை பேசியது…. 

அடியவர்:- அதுக்கு கண்ணீர் வந்துருச்சு. 

அடியவர் 1:- கலியுகம் வந்துருச்சுன்னு கண்ணீர் விடுது… 

சுவடி ஓதும் மைந்தன்:-  கண்ணீர் விடுது வந்து…. நான் நல்லா போயிட்டு இருப்பேன். ஆனாலும் எனக்கு என்ன ஆயிடுச்சு வந்து? 

அடியவர்:- கலியுகம் ஆரம்பிச்சிருக்கு… 

குருநாதர்:-   அப்பனே எதை எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது கண்ணீர் சிந்தியது குதிரையும் கூட. 

எதை என்று அறிய அப்பனே இவ்வாறாக நிச்சயம் கண்ணீர் சிந்தி, 

இதை தன் அறிய பின் அதாவது 

நாராயணனே!!!!!!! எவ்வாறு என்பதை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட 

******* இன்னும் என்னால் இதுவும் எவை என்று கூட கடக்க முடியவில்லை. ******* 

ஏனென்றால் மனிதனின் பின் எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட 

*******  பின் அழிந்து, எவை என்று கூட மனதில் எண்ணங்கள் தீயவை இன்னும் பல வழிகள் கூட, மனிதனுக்கு எண்ணங்கள் மாறப்போகின்றது.  ******* 

******* இப்பொழுதே காண்பிக்கிறது. ******* 

குருநாதர்:-  ******* இதனால் நிச்சயம் மீறி போகவில்லை என்னால். ******* 

அடியவர்:- இதுக்கு மேல போக முடியாது என்னால 

சுவடி ஓதும் மைந்தன்:-  அந்த மனுஷனுடைய எண்ணங்கள் இனிமேல் வந்து பெருக்கெடுத்து சரியில்லாமல் போகும். இதனால வந்து? 

அடியவர்:- இதுக்கு மேல போக முடியாது 

சுவடி ஓதும் மைந்தன்:- அதனால வந்து? 

அடியவர்:- போக முடியல 

சுவடி ஓதும் மைந்தன்:-  போக முடியல… என்னால் போக முடியலன்னு அழுகுது வந்து.. 

குருநாதர்:-   அப்பனே பின் அதாவது எப்பொழுது ஒரு ஜீவராசி அழுது அப்பனே பின் புலம்பியதோ அப்பொழுதே அப்பனே தன்னில் கூட மனிதனுக்கு எவை என்று கூட பின் அழிவு தொடங்கிவிட்டதே என்றே.

சுவடி ஓதும் மைந்தன்:- எப்பொழுது ஒரு ஜீவராசியே? 

அடியவர்:- அழுதுச்சோ…

சுவடி ஓதும் மைந்தன்:-  அன்னைக்கே அழிவு வந்து?

அடியவர்:- தொடங்கிடுச்சு.. 

குருநாதர்:-  எதை ஏது என்று புரிய நிச்சயம் எவ்வாறு என்பதை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட, பின் மீண்டும் எவை என்று புரிய, 

இதனால் பின் அறிந்து கூட, 

பின் அதாவது மீண்டும் என்னால் செல்லவும் முடியாது. 

குருநாதர்:-  நிச்சயம் எப்படி எது என்று நிச்சயம் தன்னில் அறிந்து கூட. 

சுவடி ஓதும் மைந்தன்:- அப்ப அதாவது பேசுவது வந்து அந்த குதிரை வந்து… மீண்டும் என்னால வந்து போக முடியாது. மூணு கால் வச்சு நான் போக முடியாது. 

குருநாதர்:- இதை தன் அறிய  வரத்தை கொடுக்கின்றேன் நிச்சயம் தன்னில் கூட. உன்னால் முடிந்த எதை என்று நிச்சயம் என்று எல்லாம் நிச்சயம் மறைந்து வாழ்  என்று. 

சுவடி ஓதும் மைந்தன்:-  விஷ்ணு ஒன்னு ஒரு வரத்தை கொடுக்குறாரு. நீ இங்கேயே எங்காவது மறைந்து வாழ்.. மறைந்து வாழ் என்றால் அதன் அர்த்தம் - அக் குதிரை அது தெரியாது. ஆனா இருக்குது வந்து. யார் கண்ணுக்கும்  தெரியாது.

குருநாதர்:-  எப்பொழுது உன் வலி  நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட பின் அதாவது நிச்சயம் எவ்வாறு என்பதை எல்லாம் உன் (கால்) வலிக்கு எங்கு சிறந்த பின் மருந்தாகின்றதோ, அங்கு சென்று அமர்ந்து விடு என்று. 

சுவடி ஓதும் மைந்தன்:- அப்ப உன்னை நான் வந்து யாருக்குன்னு நீ கண்ணுல தெரியமாட்ட. உன் வலி வந்து… எப்படி சொல்றாரு வந்து?

அடியவர்:-  உனக்கு எங்க போனா வலி கம்மியாகுது 

சுவடி ஓதும் மைந்தன்:-  கம்மியாகுறதோ அந்த இடத்துல நீ இருந்துடுன்னு சொல்லிட்டார்  வந்து… 

குருநாதர்:-  நிச்சயம் மன மிகுந்து, வருவோருக்கெல்லாம் வரத்தை தா என்றெல்லாம். 

அடியவர்:- ம்… வரம் கொடு என்று சொல்லிட்டார்.

சுவடி ஓதும் மைந்தன்:-  அப்ப வந்து.. நீ வரங்களுக்கு எல்லாம்… வரத்தை கொடு. வருவோருக்கெல்லாம் வந்து… வரத்தை கொடு. ஏதாவது வந்து… மனுஷன் ரொம்ப கஷ்டப்பட்டு எல்லாம் வருவான். வருவோருக்கெல்லாம் என்ன பண்ணு நீ?..... 

சுவடி ஓதும் மைந்தன்:- நீ வரத்தை கொடு. 

குருநாதர்:- எது எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அக்குதிரை அப்பனே பின் என்று கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட திருவண்ணாமலையில் தான் இருக்கின்றது என்பேன் அப்பனே.

சுவடி ஓதும் மைந்தன்:-  திருவண்ணாமலை வந்து… மறைந்தது… மறைஞ்சது வந்து… 

குருநாதர்:-  அப்பனே அதற்கு நிச்சயம் தன்னில் கூட பின் பறக்கும் சக்தியும் கொடுத்திருக்கின்றான் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே இன்னும் அப்பனே அங்குதான் இருக்கின்றது என்பேன் அப்பனே. 

******* மூன்று கால் உடனே அப்பனே. *******

*******  இதனால்தான் அப்பனே நிச்சயம் வருவோருக்கெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் பிழைத்துக் கொள்ளுங்கள்…. பிழைத்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் ஆசிகள் கொடுத்துக் கொண்டே இருக்கின்றது அப்பனே.  ******* 

ஈசன் அருளாலும்…. 

அப்பனே பின் பிரம்மன் அருளாலும்… 

விஷ்ணுவின் அருளாலும் என்பேன் அப்பனே. சொல்லிவிட்டேன் அப்பனே. 

உண்மைகள் பின் அப்பனே மனிதனுக்கு தெரிவதில்லை என்பேன் அப்பனே.

குருநாதர்:-  அதனால்தான் உண்மைகள் தெரிந்து கொண்டு வாழுங்கள் வாழுங்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றேன் அப்பனே.

அடியவர் :-  மத்த ஆறு குதிரை, விஷ்ணு கூட இருக்குது.  ஒரு குதிரை இங்க இருக்குது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

1 comment:

  1. அகத்தீசாய நம நன்றி அய்யா 🙇🏽‍♂️🙏🏽

    ReplyDelete