அன்புடன் அகத்திய மாமுனிவர் புரட்டாசி மாதம், 01/10/2026 அன்று இலங்கையில் உள்ள கொட்டகலை - பத்தனை தமிழ் வித்தியாலயத்தில் உரைத்த கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 1
வாக்குரைத்த தேதி: 01 அக்டோபர் 2026
வாக்குரைத்த நேரம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை
வாக்குரைத்த இடம்: நுவரெலியா கல்வி வலயம். கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம்.கொட்டகலை ஹட்டன் நகரம் .
Google map link :- https://maps.app.goo.gl/dyqQ3AyUgJvM2hG46
வணக்கம் அன்பு அகத்திய மாமுனிவர் அடியவர்களே, சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, அகில இலங்கை அகஸ்திய மன்றம் குழுவினர் ஏற்பாடு செய்த கொட்டகலை பத்தனை தமிழ் வித்யாலயத்தில் , அகத்திய மாமுனிவர் அருளால் ஜீவ நாடி வாசித்து சிவபுராணம் முற்றோதல் செய்து கூட்டு பிரார்த்தனை இடம்பெற்றது. வாருங்கள் இவ் வாக்கின் உள் செல்வோம்.
சுவடி ஓதும் மைந்தன்:- ஜீவநாடி என்பது இதுதான். எல்லாரும் பார்த்துக்கோங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- இது ஒரு புத்தகம் மாதிரி தான்; நீங்கள் எப்படி அந்த புத்தகத்தில் படித்து, பல பாடங்களை படித்து, தேர்வில் வந்து எழுதுறீங்களோ, அதுக்கு தகுந்தார் போல் மார்க் ஆசிரியர்கள் கொடுத்து, சரியான மார்க் எடுத்தா, உயர்ந்த பதவி எல்லாம் அடையலாம். அதே போலத்தான்… இந்த சித்தர்களும் உலக நன்மைக்காக, இந்த உலகத்தில்… கலியுகம் இது வந்து. பல அழிவுகளும், பல எதிர்வினைகளை ரொம்ப சந்தித்து வந்து, அதனால உலகத்தை தலை நிமிர செய்யவும், தர்மத்தை தலை காக்கவும், சித்தர்கள் வந்து இந்த ஓலைச்சுவடியில் வந்து சொல்வார்கள். ஆனா என்ன சொல்வார்கள்னே தெரியாது. படிச்சா தான் தெரியும். அதனால நீங்கள் எல்லாம் குழந்தைகள். அதனால இந்த குழந்தைகளுக்கு ஏற்ப தான் அகத்தியர் சொல்வார். "உங்கள் மனதை எல்லாம் அறிந்தவர் இறைவன்." அதற்கு தகுந்தார் போலத்தான் எல்லாமே சொல்வார். பார்ப்போம்.
ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன், அகத்தியன்.
அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்.
குருநாதர்:- முதலில், பின் அதாவது பாடல்களை சரியாக, பின் அதாவது முதலில், பின் அதாவது எவ்வாறு என்பதை எல்லாம் வகுப்பில், அதாவது காலையில் எவ்வாறு தொடங்குகின்றீர்களோ, அதே போல் தொடரட்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அகத்திய பெருமான் என்ன சொல்றாருன்னா, முதல்ல வந்து எப்படி நீங்க வந்து காலையில வந்து தொடங்குறீங்களோ, அதே மாதிரி தொடங்கட்டும்ன்றாரு. வந்து பாடுங்கள்.
தமிழ் வித்யால பள்ளி மாணவ, மாணவிகள்:- ( இவ் தமிழ் வித்யாலயத்தின் பள்ளி வாழ்த்துப் பாடல் - பாடசாலைக் கீதம் அதனை அனைவரும் அழகாக பாட ஆரம்பித்தனர்… )
அழகாக குழந்தைகளே, உங்களுக்கு என்ன தேவையோ அதை நிச்சயம் இறைவன் கொடுப்பான்.
அதேபோல் ஒவ்வொரு மனதிலேயும் கூட, நிச்சயம் எவ்வாறு என்பதையெல்லாம் நிச்சயம் லட்சியங்கள் வேண்டும்.
குருநாதர்:- லட்சியங்கள் பின் இவ்வயதிலிருந்தே கடைபிடிக்க நன்று.
சுவடி ஓதும் மைந்தன்:- என்ன சொல்றாருன்னா, எல்லாரும் குழந்தைகளே, என்னுடைய ஆசிகள். எல்லாத்தையும் இறைவன் கொடுப்பதற்கு தயார். அப்ப ஒவ்வொருவருக்கும் லட்சியங்கள் வேண்டும். என்ன வேண்டும்?
மாணவ,மாணவிகள்:- லட்சியம் வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன்:- என்ன லட்சியம் வேண்டும்?...
மாணவ - மாணவிகள்:- ( அமைதி )
குருநாதர்:- எதை, இவைத்தன் புரிந்து கொண்டு, குழந்தைகளே, உலக நன்மையை வேண்டி, உலகை காப்பதற்கு நிச்சயம் நீங்கள் அனைவருமே பின், அதாவது குழந்தை பருவத்திலிருந்தே, மிக அறிவுகள், இன்னும் ஒழுக்கங்கள், இன்னும் பல வழியில் கூட, நன்றாக வந்தால்..
குருநாதர்:- இவ் அழகாக,
******* பின் நிச்சயம் இச்சிறு வயதிலே *******
******* உலகத்தை காக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டால், *******
குருநாதர்:- ******* இறைவன் தானாக வந்துவிடுவான். *******
சுவடி ஓதும் மைந்தன்:- இந்த சின்ன வயதிலேயே எல்லாருக்கும்…. என்ன மனசுல தோணணும்?..... இந்த உலகத்தை காக்கணும். இந்த உலகத்துக்கு பல நன்மைகள் செய்யணும். அப்படி வந்து, இந்த வயசுலயே உங்களுக்கு வந்து…… மனசுல நினைச்சிட்டீங்கன்னா, இறைவன் என்ன பண்ணுவாரு? என்ன பண்ணுவாரு? கொடுத்துருவாரு. எல்லாத்தையும் கொடுத்துருவாருன்றாரு. சரிங்களா?
சுவடி ஓதும் மைந்தன்:- யார் ஒருவர் இந்த நாட்டிற்காக போராடலாம், இந்த நாட்டை காப்பாற்றலாம் என்றெல்லாம் யார் ஒருத்தர் நினைக்கிறீங்களோ, அவர்களை தேர்ந்தெடுத்து, இறைவன் பல அருளாசிகள் கொடுத்து, மிகப்பெரிய நிலையில் வைப்பார். சரிங்களா, குழந்தைகளே?
குருநாதர்:- நல்விதமாகவே, எம்முடைய ஆசிகள்.
குருநாதர்:- ஒன்றும் தெரியாமல் இருந்தாலும், குழந்தைகளே, நிச்சயம் எம்முடைய ஆசிகள். சித்தர்களின் ஆசிகள், பரிபூரணம்.
குருநாதர்:- முதலில், பின் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். ஒழுக்கத்தை கடைபிடித்தாலே அனைத்தும் வரும். இவையெல்லாம் ஏற்கனவே சொல்லப்பட்டது.
சுவடி ஓதும் மைந்தன்:- முதல்ல டிசிப்ளின். பெரியோர்கள் என்ன சொல்லிருக்காங்க? அதுதான் அகத்தியர் சொல்றாரு. ஏற்கனவே சொல்லிட்டாங்கப்பா, திருப்பி நான் சொல்றேன். முதல்ல என்ன பண்ணனும்?
மாணவ மாணவிகள்:- ஒழுக்கம்.
சுவடி ஓதும் மைந்தன்:- ஒழுக்கம். ஒழுக்கத்தை கடைபிடிக்கணும். அந்த ஒழுக்கத்தை கடைபிடிச்சாலே எல்லாமே தானா வந்துடும்.
குருநாதர்:- ஒழுக்கம். எதை, எது என்று புரியும். ஆனால் கலியுகத்தில், நிச்சயம் பின் பல கல்வி சாலையில், ஒழுக்கத்தை பற்றி, நிச்சயம் தன்னில் கூட, பின் தெரிவிப்பதில்லை. இதனால் நிச்சயம் தன்னில் எவ்வாறு என்பதை எல்லாம்.
குருநாதர்:- இதனால் நிச்சயம் ஏனென்றால், சிறுவர்கள் தான் அடுத்த கட்ட, நிச்சயம், அதாவது நிச்சயம் இவ்வுலகம் பின் காப்பதற்கு பயன்படுகின்றார்கள்.
சுவடி ஓதும் மைந்தன்:- சில கல்லூரிகளில், சில கல்விசாலையில், ஒழுக்கத்தை பற்றி யாரும் கற்பிப்பதில்லை. அதனால, எந்த ஒரு கல்வி, எங்க ஒரு ஒழுக்கத்தை சரியாக சொல்லி தராங்களோ, அவங்க வந்து மேன்மை… அந்த பிள்ளைகளும் மேன்மை பெறுவார்கள்.
சுவடி ஓதும் மைந்தன்:- அடுத்து, இவ்வுலகத்தை காக்க, குழந்தைகள் மூலமாகத்தான் கொண்டு வரணும்ன்றாரு சித்தர்கள். அப்ப நீங்க வந்து நல்லா, இந்த நாட்டுக்கு நல்ல மனதோட, நல்ல இறைவனை வேண்டி இருந்தா, உங்களை தேர்ந்தெடுத்து, உலகத்துக்கு பல நன்மைகளை செய்ய வைப்பார்ன்றார்.
குருநாதர்:- இதை ஏது என்று புரிய இன்னும் பல ஞானிகளை பற்றி யான் சொல்கின்றேன். ஞானிகளை பற்றி இன்னும் தெரியாமல்.
குருநாதர்:- குழந்தைகளே, உங்களுக்கு புரியும் படியே எடுத்துரைக்கின்றேன்.
குருநாதர்:- எவ்வாறு கீழ்நிலையிலிருந்து மேல்நிலை சென்றார்கள் ஞானியர்கள் என்றெல்லாம், நிச்சயம் இப்பொழுது சொல்ல போகின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன்:- கீழ நிலையிலிருந்து ரொம்ப கஷ்டப்பட்டதிலிருந்து, எப்படி எல்லாம் ஞானிகள்…. ஞானிகள் ஆனார்கள் என்றெல்லாம், இப்பொழுது நான் உங்களுக்கு சொல்ல போறேன்.
குருநாதர்:- ஏனென்றால், உலகம் பல இயற்கை சீற்றங்களால், நிச்சயம் ஏது என்று புரிய, அடிக்கடி, நிச்சயம் மழை, இன்னும் பல வகையில் கூட. ஆனாலும் எது என்று புரிய, அவையெல்லாம், நிச்சயம் தன்னில் கூட, உங்களை போன்று சிறுவர்களால் காக்க முடியும்.
குருநாதர்:- ஏன்? எதற்கு? அனைவரும் ஒன்றாக சேர்ந்து, இறைவனிடத்தில், நிச்சயம் தன்னில் கூட, அதாவது மன்றாடினால், நிச்சயம் இறைவனே மனமிறங்குவான். பல அழிவுகளை தடுப்பான். குழந்தைகளே.
சுவடி ஓதும் மைந்தன்:- நிச்சயமாக உலகத்தில் சீற்றங்கள் பல வகை வருது. அது (எல்லாம் இங்க உங்களுக்கு) சொல்லல. சரியா குழந்தைகளே? அகத்தியர் வந்து சிலவற்றை (இங்க ) சொல்லிட்டார். ஏன்னா, உங்களுக்கு புரியாத, புரியாதுன்னு சொல்லிட்டு, பல அழிவுகள், இறைவன் மனிதன் சரியில்ல, இப்படி சரியில்லன்னு சொல்லிட்டு, பல அழிவுகள்.
சுவடி ஓதும் மைந்தன்:- அதனால, நீங்கள் சிறு குழந்தைகள், கண்டிப்பாக, எல்லா குழந்தைகளும், உலகத்தில் உள்ள எல்லா குழந்தைகளும், உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்று, இறைவனிடம் மன்றாடினால், அப்பா !!!!! எல்லாரும் நன்றாக இருக்கணும். எல்லா ஜீவராசிகளும் நன்றாக இருக்கணும் என்பதெல்லாம் நீங்கள் மன்றாடினால், இறைவன் கண்டிப்பாக மனம் இறங்குவார். பல அழிவிலிருந்து தடுப்பார்.
குருநாதர்:- இதனால்தான், இவ்வாறாக பல வகையான, நிச்சயம் பின், ஏது என்று கூற, பின் பிரார்த்தனை, நிச்சயம் பிரார்த்தனை கூட்டங்கள் ஏற்படுத்த வேண்டும்.
குருநாதர்:- இவ்வாறாக, இறைவனிடம், அனைவரும் ஒன்று சேர்ந்து, அதாவது, பின், நிச்சயம் தன்னில், ஏது தெரியாமல், பின், அதாவது, பின், நிச்சயம் தன்னில் கூட, பின், அதாவது, இறைவன், அதாவது, இறைவன் எங்கு குடியிருப்பான் என்றால், நிச்சயம் தன்னில் கூட சொல்வார்கள் பெரியோர்களே.
குருநாதர்:- அதாவது, நிச்சயம் பின், நல் மனதில் கூட, அதாவது, நீங்கள் குழந்தைகள், அதாவது, நிச்சயம் ஒன்றும் தெரியாதவர்கள், உங்கள் மனதிலே, இறைவன் குடி கொண்டிருக்கின்றான்.
குருநாதர்:- இதனால், அனைவரும் சேர்ந்து, இறைவா, மக்களை காப்பாற்றுங்கள். பின், அழிவிலிருந்து என்பதை எல்லாம், நிச்சயம் தன்னில் கூட, பின், மனதார நினைத்தாலே, இறைவனுக்கு, உங்கள் மனதிலே இருக்கும் இறைவனுக்கு நன்றாக கேட்கும்.
குருநாதர்:- ஆனால், இப்படியும் குழந்தைகளா !!!!! உலகத்திற்காக, இப்படி வேண்டிக்கொள்கின்றார்களே !!!!! என்று, ஆனந்த கண்ணீர், பின், விடுவான், இறைவன். நிச்சயம் காப்பான் உலகத்தை.
சுவடி ஓதும் மைந்தன்:- ஐயா, புரியுதுங்களா? என்ன சொல்றாருன்னா, ஒன்றும் தெரியாத மனதில்தான், இறைவன் குடி கொண்டிருப்பார். அப்ப நீங்க அந்த ஒன்னும் தெரியாத, அந்த இறைவன் வந்து, மனசுல குடி கொண்டிருக்கும் பொழுது, எல்லாருக்காக வந்து, நினைச்சு, உலகத்துல நன்மை வேணும், நன்மை நடக்கணும்னு சொல்லிட்டு, வந்து, அழிவிலிருந்து காக்கணும்னு சொல்லிட்டு, ஒன்றும் தெரியாத இந்த மனதில் வந்து, இறைவன் இருக்கின்றான்.
சுவடி ஓதும் மைந்தன்:- அப்ப நீங்கள் செய்யும் எல்லாரும், இது மாதிரி நினைச்சு, மக்களுக்காக வேண்டும் பொழுது, இறைவன் மனதிலிருந்தே கேட்பார். ஆனந்தப்படுவார் இறைவன். அடடா, இப்படி குழந்தைகள் சொல்கின்றதே என்று, இறைவன் ஆனந்தப்பட்டு, நிச்சயமாக தடுப்பார்.
சுவடி ஓதும் மைந்தன்:- இன்னும் பிரார்த்தனைகள், இதுபோல் பல இடங்களில் கொண்டு செல்வோம் என்று, அகத்தியர் கூறியிருக்கின்றார். கண்டிப்பா, அகத்தியர் சொல்வது, நிச்சயமாக நடக்கும்.
குருநாதர்:- இதை அறிவித்து, நிச்சயம் அனைவரும் நலமாக, பின் இருக்க, நிச்சயம், பின், அதாவது, உலக நன்மை, உலக நன்மைக்காக, நிச்சயம், பின், இறைவனிடத்தில், அதாவது, ஈசனிடத்தில் வேண்டி, அனைவரும் சிவபுராணத்தை, நிச்சயம் தன்னில் கூட படியுங்கள்.
குருநாதர்:- அதாவது, இவ் தேசத்தை காக்கவும், இவ் தேசத்தில், நிச்சயம், மனிதன், மனிதன், சமயங்களால், அடித்து கொள்வான். யான் பெரியவன், என் சமயம் பெரியது என்றெல்லாம்.
குருநாதர்:- நிச்சயம், இதனால், அவையெல்லாம் வரக்கூடாது. இன்னும் இயற்கை சீற்றங்கள், அவையெல்லாம் வரக்கூடாது என்றெல்லாம், இறைவனை வேண்டி, சிவபுராணத்தை, அழகாக பாடுங்கள்.
குருநாதர்:- ஈசன் கேட்பான், நிச்சயம், உங்களுக்கு தேவையானதை கொடுப்பான். கவலைகள் வேண்டாம். உங்கள் நிலைமை அனைத்தும் எங்களுக்கு புரிகின்றது. நிச்சயம், உங்கள் நிலைமைகளை மாற்றி, அனைத்தும் யாங்கள் கொடுக்க தயார். பின், நிச்சயம், நீங்கள் மற்றவர்களுக்காக வேண்டுங்கள். யாங்கள் உங்களுக்கு என்ன வேண்டுமோ, அதை யாங்கள் செய்வோம். மறைமுகமாக.
மாணவ மாணவிகள்:- ( அவர்களுக்குள்ளே உரையாட ஆரம்பித்தனர் )
அடியவர்:- உங்க கையில கொடுத்திருக்கிற ரெண்டு படமும் யார் யாருன்னு தெரிஞ்சுக்கணும். ஒன்னு சித்தர்களுக்கெல்லாம் தலையான சித்தரான அகத்தியர் அப்பாவுடைய படம். மற்றது ஈழத்து சித்தர் பெரியானைக்குட்டி சித்தருடைய படம். அதை வாங்குறது மட்டும் இல்ல, நீங்க உங்களுடைய பூஜை அறையில வச்சு, அவங்களை வேண்டிக்கணும். ஆகவே, எல்லாரும் இந்த உலக நன்மைக்காகவும், இந்த நாட்டின் நன்மைக்காகவும், சிவபுராணத்தை பாடி, உலகத்துல எல்லா மக்களும் நல்லா இருக்கணும்னு வேண்டிக்குவோம். நாங்க மத்தவங்களுக்கு வேண்டும் பொழுது, அதனுடைய பலன் உங்களுக்கு கிடைத்து, உங்களுக்கும் வாழ்க்கையில, நீங்க என்னென்ன நினைக்கிறீங்களோ, அத்தனை விஷயமும் நடக்கும்னு அப்பா சொல்றாரு. ஆகவே, அனைவரும் சிவபுராணம் படிங்க.
நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க
…………………………
…………………………
…………………………
சிவபுராணம் பாட ஆரம்பித்தனர்…..
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)

No comments:
Post a Comment