​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 16 October 2026

சித்தன் அருள் - 2344 - அன்புடன் அகத்தியர் - கொட்டகலை வாக்கு - 2 !


ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 

அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். 

( பகுதி 1..அதன் தொடர்ச்சியாக…) 

குருநாதர்:- அழகாக குழந்தைகளே, நிச்சயம் தன்னில் கூட, கல்வி என்பது சாதாரணம் இல்லை. 

இக்கல்வியால் சாதித்தவர்கள் பலர்…. பலர். 

அப்பொழுதெல்லாம் எதை என்று கூற, பாடசாலைகள்…

இப்பாடசாலைகள்—நிச்சயம் இறைவனை நோக்கியே இருந்தது. 

குருநாதர்:-   இறைவனை நோக்கியே இருந்து, பல வழிகளிலும் கூட  பல பின்  நிச்சயம் ஆசிரியர்கள் இறைவனைப் பற்றி சொல்லிச் சொல்லி, பின் நிச்சயம் மாணாக்கருக்கெல்லாம் இறைபக்தியை உணர்த்தி, அனைவரையும் பக்தியில் மிதக்க வைத்தனர். 

இதனால் உலகம் செழிப்படைந்தது. 

உலகத்தில் உள்ள மக்களும் செழிப்படைந்தனர். 

ஆனால் காலப்போக்கில் அவையெல்லாம் மாறிப் போயிற்று. 

குருநாதர்:-  மாறிப் போனதால், நிச்சயம் தன்னில் கூட இறைவனும் மாறிக்கொண்டே வருகின்றான்.

அடியவர்:- ஒரு காலத்துல வந்து, பள்ளிக்கூடங்கள்ல வந்து, இறை வழிபாடும் ஒழுக்கமும் தொடர்ந்து இருந்ததாம். ஆனா காலப்போக்குல என்ன ஆச்சு? நம்ம வந்து இறை வழிபாட விட்டுட்டோம். இறை வழிபாட விட்டதுனாலதான்… இப்ப வந்து… நிறைய இடங்கள்ல வந்து… இந்த பிரச்சனைகள் வந்து காரணமா இருக்குது. 

குருநாதர்:- இதனால், நிச்சயம் தன்னில் கூட மீண்டும் இறைபக்தியை பின்—அதாவது பின் ஊற்றினால் மட்டுமே அனைத்தும் செழிப்படையும்.  இல்லையென்றால், நிச்சயம் பின்—அதாவது எது என்று புரிய…

அடியவர்:- அதாவது நம்மளுடைய எதிர்காலம் சிறப்பா அமையணும்னா, இறைபக்தி ரொம்ப முக்கியம். இறைபக்தியாலதான் நம்மளுடைய வளமான ஒரு எதிர்காலத்தை நம்ம பெற்றுக்கொள்ள முடியும். 

குருநாதர்:- ஆனால் பல கல்வி நிலையங்களில் கூட, நிச்சயம் இறைபக்தியை பின், நிச்சயம் இக்கலியுகத்தில் பின்—அதாவது சொல்வதில்லை. 

குருநாதர்:-  இதனால் பல வழிகளிலும் கூட பின்—அதாவது பின், நிச்சயம் பின் குழந்தைகளுக்கு நிச்சயம் வினைகள் எது என்று புரிய. இதனால், நிச்சயம் தன்னில் கூட. 

குருநாதர்:- அதனால், இறைபக்தி என்பது மிக மிக அவசியம். 

குருநாதர்:-  இதனால் இன்னும் பல வழிகளிலும் கூட, அதாவது அறிவியல் நுண்—அதாவது செயற்கை அறிவியலை  வைத்துக்கொண்டு, மனிதனின் பின் உள்ளுறுப்புகள் எல்லாம் கெடுத்துக் கொண்டிருக்கின்றான் மனிதன். 

ஆனால் இவைதன்  எப்படி? 

ஆனால் பின் அவையெல்லாம் சில காலங்கள் செயல்படும். பின், அதாவது நிச்சயம் அவ்வாறு செயல்பட்டு, மனித மூளையும் கூட நிச்சயம் கொன்றுவிடும். 

அப்பொழுது மனிதன் என்ன செய்வான் என்றே தெரியாமல் செய்வான். 

இவையெல்லாம் வருங்காலத்தில் நிச்சயம் வரப்போகின்றது. 

குருநாதர்:-  அதனுள்ளே, நிச்சயம்—அதாவது குழந்தைகளுக்கு மனப்பக்குவத்தை ஏற்படுத்தி, இறை பலத்தை  ஊட்டி விட்டால், நிச்சயம் அனைத்தும் நலமாகும். 

உங்கள் பெற்றோர்களும் நிச்சயம் நிம்மதி அடைவார்கள். 

ஏனென்றால் வருங்காலம் நிச்சயம் அப்படித்தான் இருக்கின்றது. 

***** இதனால்தான் இறைபலங்கள் அதிகம் தேவை. ***** 

*****  இறைபலங்கள் வந்துவிட்டால், புத்திசாலித்தனம் பெருகிவிடும். ***** 

*****  இறைபலம் வந்துவிட்டால், அறிவுகள் பெருகிவிடும். ***** 

*****  அதாவது புத்திசாலித்தனம் வந்துவிட்டால், எது என்று புரிய. நிச்சயம் அனைத்தும் கிடைத்துவிடும். ***** 

குருநாதர்:- இதனால், நிச்சயம் அறிவுகள் மேம்பட வேண்டும். 

அதாவது அறிவுகள் மேம்பட வேண்டும் என்றால், ஒரே வழி, நிச்சயம் தன்னில் கூட இறைவனுடைய பாதையே… 

இறைவனுடைய பாதையை பிடித்துக் கொண்டால், அறிவு தானாக செயல்படும். 

அவ்வறிவு நிச்சயம் பன்மடங்கு, நிச்சயம் உதவிகள்… இவ் நாட்டிற்கு தேவைப்படும். 

அப்படி இல்லை என்றால், செயற்கை அறிவை பயன்படுத்தினால், உலகம் அழிவு நிலைக்கு சென்று கொண்டே இருக்கின்றது. 

இன்றைய காலகட்டத்தில், செயற்கை அறிவைத்தான் மாணாக்கருக்கு செப்புகின்றார்கள், எதை என்று புரிய. 

குருநாதர்:-  இதனால்தான் அழிவுகள் பலமாக வந்து கொண்டே இருக்கின்றது. 

அடியவர்:- இப்ப வந்து… நம்ம வந்து.. செயற்கை அறிவுல இருக்கோமாம். நம்மளுடைய அறிவை விட்டுட்டு, செயற்கை அறிவுல போய்க்கொண்டிருக்கிறோம். அதனாலதான் இந்த செயற்கை அறிவுல இருந்து வெளிய வரணும்னு சொன்னா, இறைபக்தியோட நாம் போகும் பொழுதுதான், உண்மையான அறிவு என்ன அப்படின்னு நமக்கு தெரிய வரும். 

அடியவர்:- அந்த உண்மையான அறிவோட நம்ம வளரும் பொழுதுதான் பெற்றோர்களுக்கும் சந்தோஷம். இல்லாட்டி, எதிர்காலத்துல உங்களால பெற்றோர்களுக்கும் கவலை தான் வரும். 

அடியவர்:- அதனாலதான் நம்ம வந்து எப்பயுமே இறைபக்தியோட, உண்மையான அறிவோட வளரணும். 

குருநாதர்:-  நல்ல விதமாகவே, இவ்வாறாக, நிச்சயம் தன்னில் கூட ஞானம் பெறுவதற்கு உங்களுக்கு அழகாக ஆசிகள் கொடுத்து விடுகின்றேன். கவலைகள் வேண்டாம், குழந்தைகளே. 

அடியவர்:- உங்க எல்லாருக்கும் நல்லபடியா ஆசீர்வதிக்கிறாராம். எல்லாரும் நல்லா இருப்பீங்கன்னு அப்பா சொல்றாரு. 

குருநாதர்:- எதை ஏது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட முதலில் தேவை. அனைவருக்குமே நாட்டை காப்பாற்ற, நிச்சயம் தன்னில் கூட எண்ணங்களை பின் பலப்படுத்த வேண்டும். அனைவரும் சொல்லுங்கள்.

( இப்போது சுவடி ஓதும் மைந்தன் சொல்ல சொல்ல , அனைத்து மாணவ , மாணவிகளும் அதனை உறுதி மொழியாக சொல்ல ஆரம்பித்தனர்…)  

சுவடி ஓதும் மைந்தன்:-   என் நாட்டிற்காக யான் உழைப்பேன். 

அடியவர்:- இங்க பாருங்க, எல்லாரும் நல்ல எண்ணங்களை வளர்த்துக்கணும். இந்த நாடு நல்லா இருக்க, நம்ம எல்லாம் உழைக்கணும்னு சொல்லணும். அவர் எல்லாத்தையும் சொல்ல சொல்றார். இந்த நாட்டுக்காக நாங்க உழைப்போம் அப்படின்னு சொல்லுங்க. 

மாணவ, மாணவிகள்:- என் நாட்டுக்காக நாங்கள் உழைப்போம்.

குருநாதர்:-  என் நாட்டை நிச்சயம் பல வழிகளில் கூட பின் காப்போம். 

மாணவ , மாணவிகள் :- என் நாட்டை நிச்சயம் பல வழிகளில் கூட பின் காப்போம். 

குருநாதர்:-   நல்விதமாகவே இறைபலத்தை  உருவாக்கச் செய்வோம். 

மாணவ , மாணவிகள் :-  நல்விதமாகவே இறைபலத்தை  உருவாக்கச் செய்வோம். 

குருநாதர்:-   பின், இறைவனை தொழுது, நல்விதமாக யாங்களும் நன்றாக இருந்து, மற்றவர்களுக்கும் நல்லது செய்வோம்.

மாணவ , மாணவிகள் :-   பின், இறைவனை தொழுது, நல்விதமாக யாங்களும் நன்றாக இருந்து, மற்றவர்களுக்கும் நல்லது செய்வோம்.

குருநாதர்:-   அனைவருக்கும் பின், இறை நாமத்தை சொல்லிக் கொடுப்போம் யாங்கள். 

மாணவ , மாணவிகள் :- அனைவருக்கும் பின், இறை நாமத்தை சொல்லிக் கொடுப்போம் யாங்கள். 

குருநாதர்:-  பொய்கள் பின் பேசமாட்டோம். 

மாணவ , மாணவிகள் :- பொய்கள் பின் பேசமாட்டோம். 

குருநாதர்:-  உண்மையே பேசுவோம். 

மாணவ , மாணவிகள் :- உண்மையே பேசுவோம். 
 
குருநாதர்:-   நல் ஒழுக்கமாக இருப்போம். 

மாணவ , மாணவிகள் :-  நல் ஒழுக்கமாக இருப்போம். 

குருநாதர்:-   அனுதினமும் இறைவன் பாடலை அதிகாலையில் பாடுவோம். 

மாணவ , மாணவிகள் :- அனுதினமும் இறைவன் பாடலை அதிகாலையில் பாடுவோம்.

குருநாதர்:-  அனைத்து ஜீவராசிகளும் தன் ஜீவராசிகளாக எண்ணுவோம். 

மாணவ , மாணவிகள் :- அனைத்து ஜீவராசிகளும் தன் ஜீவராசிகளாக எண்ணுவோம். 

குருநாதர்:-   அனைவரும் ஒன்றே என்று செயல்படுவோம். 

மாணவ , மாணவிகள் :- அனைவரும் ஒன்றே என்று செயல்படுவோம். 

குருநாதர்:-   அனைத்து ஜீவராசிகளும் பின், எங்களுக்கு சொந்தம் என்றே. 

மாணவ , மாணவிகள் :- அனைத்து ஜீவராசிகளும் பின், எங்களுக்கு சொந்தம் என்றே. 

குருநாதர்:-   உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் எமக்கு சொந்தமானவை என்று நினைப்போம். 

மாணவ , மாணவிகள் :- உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் எமக்கு சொந்தமானவை என்று நினைப்போம். 

குருநாதர்:-   அப்படி தெரியாதவர்களுக்கும் யாங்கள் சொல்லிக் கொடுப்போம். 

மாணவ , மாணவிகள் :- அப்படி தெரியாதவர்களுக்கும் யாங்கள் சொல்லிக் கொடுப்போம். 

குருநாதர்:-   பொய் பேசுதல் பாவத்தை சேர்க்கும் என்று அனைவரிடத்திலும் தெரியப்படுத்துவோம். 

மாணவ , மாணவிகள் :- பொய் பேசுதல் பாவத்தை சேர்க்கும் என்று அனைவரிடத்திலும் தெரியப்படுத்துவோம். 

குருநாதர்:-   உண்மை பேசுவதால் புண்ணியம் ஏற்படும் என்று அனைவருக்கும் தெரிவிப்போம். 

மாணவ , மாணவிகள் :- உண்மை பேசுவதால் புண்ணியம் ஏற்படும் என்று அனைவருக்கும் தெரிவிப்போம். 

குருநாதர்:-   நற்பண்புகளை அனைவரிடத்திலும் சொல்வோம். 

மாணவ , மாணவிகள் :- நற்பண்புகளை அனைவரிடத்திலும் சொல்வோம். 

குருநாதர்:-   தாய் தந்தையர் என்ன சொல்கின்றார்களோ, அதை பின்பற்றுவோம். 

மாணவ , மாணவிகள் :- தாய் தந்தையர் என்ன சொல்கின்றார்களோ, அதை பின்பற்றுவோம். 

குருநாதர்:-   தாய் தந்தையர் பின், பேச்சை மீறினால் பாவம் வந்துவிடும் என்று நிச்சயம் நீங்கள் பின் நினைக்க வேண்டும். குழந்தைகளே. 

குருநாதர்:-   முதலில் பின், அனைவருக்கும் சொல்கின்றேன். தாய் தந்தையர் பின், அதாவது காலை தொட்டு வணங்கி, பின் வகுப்பறைக்கு வரவேண்டும். இதை யாங்கள் செய்வோம் சத்தியமாக. 

மாணவ , மாணவிகள் :- (………அவ்வாறே உரைத்தனர்…………) 

குருநாதர்:-  இல்லத்தில் இது இதுபோல் செய்து, குருவையும் கூட வணக்கம் செய்வோம் என்றெல்லாம். 

குருநாதர்:-  அடுத்து குருவுக்கு வணக்கம். 

மாணவ , மாணவிகள் :- (…………………) 

குருநாதர்:-   அடுத்து அனைத்தும் தானாகவே வந்துவிடும். 

மாணவ , மாணவிகள் :- (…………………) 

குருநாதர்:-   நிச்சயம் சொல்லுங்கள், தாய் தந்தையர் காலடியில் யாங்கள் அனுதினமும் விழுவோம் என்று. 

மாணவ , மாணவிகள் :- (…………………) 

குருநாதர்:-  குருவிற்கு மதிப்பளிப்போம். 

மாணவ , மாணவிகள் :- (…………………) 

குருநாதர்:- குரு சொல்வதை நன்றாக கேட்போம். 

மாணவ , மாணவிகள் :- (…………………) 

குருநாதர்:-  குருவின் பேச்சை தட்டாமல் கேட்போம். 

மாணவ , மாணவிகள் :- (…………………) 

குருநாதர்:- குருவின் பேச்சை தட்டாமல் கேட்போம் மீண்டும்… மீண்டும் 

சுவடி ஓதும் மைந்தன்:-   குரு என்றால் யாரு? 

மாணவ , மாணவிகள் :-  எங்கள் ஆசிரியர்கள். 

குருநாதர்:- ஆசிரியர் சொல்வதை யாங்கள் அழகாக ஏற்று, அதன்படியே நடப்போம். 

மாணவ , மாணவிகள் :- (…………………) 

குருநாதர்:- குருவின் பின் சொல்லை கேட்டால் உயர்ந்து விடலாம். 

மாணவ , மாணவிகள் :- (…………………) 

குருநாதர்:- சொல்லுங்கள், பார்ப்போம். முதலில் யாருக்கும் மரியாதை அளிக்க வேண்டும்?. 

சுவடி ஓதும் மைந்தன்:-  உங்களுக்கு கேட்கிறார் அகத்திய பெருமான். முதல்ல யாருக்கும் மரியாதை அளிக்க வேண்டும்?

மாணவ , மாணவிகள் :-  தாய் தந்தைக்கு…

சுவடி ஓதும் மைந்தன்:-  கரெக்ட். 

குருநாதர்:-  அடுத்து? 

சுவடி ஓதும் மைந்தன்:-  அடுத்து என்ன? 

மாணவ , மாணவிகள் :- ( குருவுக்கு) 

குருநாதர்:-  பின், இவையெல்லாம், இவை இரண்டே போதும். இவை இரண்டே போதும். இவை தன் சரியாக கடைபிடித்தால், இறைவன் உங்களிடத்தில் வந்து, உங்களுக்கு என்ன தேவையோ, அதை கொடுப்பான். 

குருநாதர்:-  இதனால் இதை செய்யாமல், நிச்சயம் தன்னில் கூட கல்விகள் எவை என்று பயின்றாலும், நிச்சயம் தன்னில் கூட இறைவன் எதையும் ஏற்க போவதில்லை. அதனால் சரியாக இதை கடைபிடிங்கள். 

அடியவர்:- நீங்க வந்து வீட்ல அம்மா அப்பாவையும், குருமாரையும் வழிபடாம, கல்வி படிச்சீங்கன்னு சொன்னா, அந்த கல்வி உங்களுக்கு பயன்படாது. ஆகவே, நீங்க கட்டாயமா வீட்ல இருக்கிற அம்மா அப்பாவுக்கு மரியாதை கொடுத்து, அவங்களுக்கு வணங்கி, அதே மாதிரி பாடசாலையில் உங்களுக்கு படிச்சு கொடுக்கிற குருமாரை வணங்கி, பணிஞ்சு, அவங்களுக்கு கொடுக்கிற மரியாதையும், அந்த வணக்கமும் தான் உங்க கல்வி என்ன செய்யும்?  உங்களுக்கு மேன்மை கொடுக்கும். 

குருநாதர்:-   அவை மட்டுமில்லாமல், எது என்று புரிய, நிச்சயம் பின் குருவின் பேச்சை உயிர் மூச்சாக கொள்பவர்களுக்கு, நிச்சயம் அறிவு பலப்படும். 

குருநாதர்:-  குரு பேச்சை கேட்கவில்லை என்றால், வாழ்க்கையும் நிச்சயம் அவ்வளவுதான் என்று தீர்மானிக்க வேண்டும். 

குருநாதர்:-  இதனால், நிச்சயம் மீண்டும் சொல்லுங்கள். உலகத்தில் உள்ள அனைவருமே, பின் என் சகோதரிகள், சகோதரர்கள் என்று. 

சுவடி ஓதும் மைந்தன்:-  எல்லாரும் சொல்லுங்க. 

மாணவ , மாணவிகள் :- (…………………) 

குருநாதர்:- என் உடன் பிறந்தோர்களுக்காக நான் இறைவனிடத்தில் முறையிட்டு, பின் அனைவரையும் காக்க போராடுவேன். 

மாணவ , மாணவிகள் :- (…………………) 

குருநாதர்:- என் சகோதரிகள், என் சகோதரர்கள் நன்றாக இருக்க, நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்வேன் அனுதினமும் என்று சொல்லுங்கள் உறக்க.

மாணவ , மாணவிகள் :- (…………………) 

குருநாதர்:- உலகத்தில் உள்ள அனைவருமே, அதாவது எதை என்று புரிய, அனைவருக்காகவும் உழைப்பேன். 

சுவடி ஓதும் மைந்தன்:-  உலகத்தில் உள்ள அனைவருக்காகவும் யான் உழைப்பேன். 

மாணவ , மாணவிகள் :- (…………………) 

குருநாதர்:- உலகத்தில் உள்ள அனைத்து, பின் அதாவது குழந்தைகளும் எங்களுக்கு சொந்தமே. 

மாணவ , மாணவிகள் :- (…………………) 

குருநாதர்:-  அச் சொந்தங்களுக்காக யாங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம். 

மாணவ , மாணவிகள் :- (…………………) 

குருநாதர்:-  அனைவருக்கும் நல்லறிவை வேண்டும் என்று இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்வோம். 

மாணவ , மாணவிகள் :- (…………………) 

குருநாதர்:-  அனைவரும் நன்றாக இருக்க வேண்டும். நோய்கள், நொடிகள் இன்று நன்றாக இருக்க வேண்டும் என்று உலகத்தில் உள்ள அனைவருக்காகவும், அனுதினமும் நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். குழந்தைகள், உங்கள் மனது இறைவன் பின் எளிதாக எடுத்துக்கொண்டு, அனைத்தும் நிச்சயம் தருவான். மறந்து விடாதீர்கள் குழந்தைகளே!!!!! 

அடியவர்:- நீங்க பிரார்த்தனை செய்யும் பொழுது, இந்த உலகத்தில் இருக்கிற எல்லாரும் நல்லா இருக்கணும்னு பிரார்த்தனை செய்ய சொல்றாரு. அந்த பிரார்த்தனையே என்ன செய்யும், உங்களை உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்லும். 

குருநாதர்:-  எதை ஏது என்று புரிய, அனைவருக்கும் மீண்டும் சொல்கின்றேன். லட்சியம் வேண்டும். லட்சியம் வேண்டும். 

குருநாதர்:- லட்சியம் வேண்டும். நிச்சயம் உலகத்தை காக்க, நிச்சயம் எதை என்று புரிய, பின் உலகத்தை காப்பேன் என்று, நிச்சயம் இறைவனிடத்தில் முறையிட வேண்டும் நீங்கள் அனைவரும். 

குருநாதர்:-  அனைவரும் ஒன்றே. 

குருநாதர்:-  எதை ஆனால் மனிதன் அதை புரிந்து கொள்வதே இல்லை. உலகத்தில் இதனால்தான் பிரச்சனைகள். பின், அனைவரும் ஒன்றே என்று எண்ண வேண்டும். 

குருநாதர்:-  நல்விதமாகவே உங்களை, பின் அதாவது எங்களுடைய ஆசிகள் கொடுத்து, உங்களுக்கு பலமாக, நிச்சயம் பொருள் பலமும், அருள் பலமும் கொடுக்கின்றோம். கவலைகள் வேண்டாம். தெரிந்தும் தெரியாமலும் வந்து உட்கார்ந்து இருக்கின்றீர்கள். ஆனாலும், கவலைகள் வேண்டாம். ஆசிகள் கொடுத்து விடுவோம். ஆனால் யான்  சொல்லியதெல்லாம் நீங்கள் கடைபிடிக்க வேண்டும். 

அப்ப, அவர் என்ன சொல்லி இருக்காரு? தாய் தந்தையரை மதிக்கணும். உங்களோட குருமாரை மதிக்கணும். நீங்க வேண்டும் பொழுது, இந்த உலகத்துக்கு எல்லாத்தையும் சேர்த்து, எல்லாரும் நல்லா இருக்கணும்னு வேண்டிக்கணும். 

ஆகவே, நல்ல ஒழுக்கத்தோட உலகத்துக்காக வேண்டி, நீங்க சரியான பாதையில் போகும் பொழுது, அகத்தியர் அப்பா உங்களுக்கு எல்லாவிதமான நன்மையும் செய்வாரு. அவர் வாக்கு கொடுத்திருக்காரு. ஆகவே, இது எத்தனை பேர் மனதுல பதிஞ்சிருக்கோ தெரியல. எல்லாரும் பதிச்சு வச்சுக்கோங்க. நிச்சயமா, உங்க வாழ்க்கை நல்லா இருக்கும்னு ஆசி வழங்கி இருக்காரு. 

குருநாதர்:-   அவை மட்டுமல்லாமல், உங்கள் தாய் தந்தைகள் எவ்வாறு என்பதெல்லாம் உழைக்கின்றார்கள். நிச்சயம், தன்னில் கூட. நீங்கள் படும் பாடுகள்  எதை என்று புரிய, அனைத்தும் யான் உணர்ந்து வைத்திருக்கின்றேன். 

இதனால், உங்களுக்கு இன்னும் பின் மென்மேலும், ஏனென்றால், பின் ஒன்றும் இல்லாத எதை என்று புரிய, பின் நிச்சயம் தன்னில் கூட மனதிற்கு, அதாவது ஒன்றுமே தெரியாத மனதுக்குத்தான் இறைவன் எளிதில் வந்து இறங்கி, அனைத்தும் செய்வான். 

கஷ்டங்கள் எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட 

குருநாதர்:- ***** யார் ஒருவன் கல்விச்சாலையில் அதிகம் கஷ்டப்படுகின்றானோ, அவன் அதிக அளவு உயர்வை பெறுவான். சொல்லிவிட்டேன். ***** 

அடியவர் :- ( மாணவ, மாணவிகளுக்கு அழகாக எடுத்துரைத்தார்கள் ) அப்பா சொல்றாரு, உங்களோட தாய் தந்தை எல்லாம் எவ்வளவு கஷ்டப்படுறாங்க, அப்படிங்கறது அவருக்கு தெரியும். ஆகவே, அப்படி கஷ்டப்பட்டு, அவங்களுடைய உழைப்புல நீங்க எல்லாம் வந்து படிக்கிறீங்கன்னு சொன்னா, உங்களுடைய உயர்வுக்கு நிச்சயமா அப்பா அருள் புரிவாரு. யாரு கஷ்டப்பட்டு இங்க படிக்கிறீங்களோ, எனக்கு கஷ்டம் கூடதா இருக்குது. அப்படி எல்லாம் நினைச்சு இருந்தாலும், நீங்க அந்த கஷ்டத்தோட படிக்கும் பொழுது, நிச்சயமா உங்களுக்கு ஆசியும் , உங்களை மிக உயர்ந்த இடத்துல வைக்கிறதுக்கு, அப்பா உங்களுக்கு ஆசீர்வதிப்பார். 

குருநாதர்:-  ஈசன் எதை என்று புரிய, பல வழியில் கூட நாடகத்தை நடத்தி உள்ளான். அவ் நாடகத்தில் எது என்று புரிய, அதனால், நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு என்பதை கூட தெரிந்து கொள்ளுங்கள். பல ஞானிகள் பற்றி எதை என்று புரிய, அதாவது சரியாகவே புரிந்து கொண்டு நடந்து கொண்டால், வெற்றி உங்களை, பின் அதாவது அழகாக, நிச்சயம் ஏதோ எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட கவலைகள் வேண்டாம். உயரிய ஞானத்தை யான் கொடுக்கின்றேன். 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment