வாக்குரைத்த தேதி: 16 அக்டோபர் 2026
வாக்குரைத்த நாள்: கன்னி திங்கள் , புரட்டாசி மாதம், வெள்ளிக்கிழமை
வாக்குரைத்த இடம்: அகத்திய மாமுனிவர் யாத்திரை குழுவினருக்கு சென்னையில் உரைத்த வாக்கு.
வணக்கம் அடியவர்களே, அகத்திய மாமுனிவர் யாத்திரை குழுவினருக்கு சென்னையில் உரைத்த வாக்கு அதனில் ஒரு மந்திரம் பொதுவாக வழங்கப்பட்டது. தற்போது நவராத்திரி நடந்துகொண்டு உள்ளது. எனவே இவ் மந்திரத்தை மட்டும் அடியவர்கள் பலன் பெற இங்கு வழங்குகின்றோம். முழு வாக்குகள் பின்னர் வெளிவரும் என்று அறிய தருகின்றோம். வாருங்கள் வாக்கின் உள் செல்வோம்.
உலகத்தை அழகாக வழிநடத்தும் இறைவா, இறைவி போற்றியே, மனதில் நிறுத்தியே உரைப்பேன், போகனவன்.
போகர் சித்தர்:- நன்மையே நடக்கும், அதாவது என் பிள்ளையைப் பிடித்துக் கொள்ளுங்கள், அழகாக.
போகர் சித்தர்:- என் தாய்க்கும் நிச்சயம் பின் நல் விதமாகச் செய்யுங்கள், போதும்.
போகர் சித்தர்:- இதைத் தன் அங்க இருப்பவர்களுக்கு ஏதாவது இனிப்பை தானம் செய்யுங்கள். அதாவது தானம் என்று பின் எதை என்று நினைக்கக்கூடாது.
போகர் சித்தர்:- இதை தன் அறிய இதனால் அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். அறிந்தும் இதை தன் அறிய அழகாக புவனேஸ்வரி பின் அறிந்தும் என் அன்னையாக பின் அறிந்தும் அவள் நாமத்தை பின் செப்பி வர நன்று.
***** ஓம் ஐம் க்லீம் புவனேஸ்வரி தாயே வருக. *****
***** குறைகள் நீக்குக. *****
***** எப்பொழுதும் என் உள்ளத்தில் குடியிருக்க. *****
***** குடியிருந்து காக்குக. *****
***** காத்து அருளுக. *****
***** மக்கள் அனைவரும் செழிப்புடன் வாழ. *****
***** ஓம் மம மம வசி மம வசி ஐம் க்லீம் புவனேஸ்வரியே நமஹ. *****
எனும் மந்திரத்தை உள்ளத்தில் ஒலிக்கட்டும். ஆசிகள், ஆசிகள்.
ஓம் ஸ்ரீ லோபாஉத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

No comments:
Post a Comment