​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 23 July 2026

சித்தன் அருள் - 2254 - சித்தர் புலம்பல்கள்!


"சித்த மார்கத்தில்" நுழைந்து கவனித்த பொழுது, பல நேரங்களில் சித்தர்கள் உதிர்த்த அறிவுரைகள், உங்கள் அனைவருக்காக!
  1. மனம் ஒன்று படவேண்டும், தினமும் த்யானம் செய்.
  2. எண்ணம் கரைந்து மௌனமாக வேண்டும், புருவமத்தியில் கவனத்தால் ஓம் என்று எழுது.
  3. முகம் மறக்க வேண்டும், உன் முகத்திலிருந்து தொடங்கு.
  4. எதற்கும் பயப்படாத மனம், ஆன்மீகத்துக்கு வேண்டும். இறையை உள் அமர்ந்து.
  5. மந்திரம், ஜபம், யாகாதி கர்மங்கள் யாருக்கு தேவை என கண்டுபிடி, செயல்கள் தெளிவாகும்.
  6. அதிர்வலைகளே, சக்தி இருப்பின் சாட்சி.
  7. பிரார்த்தனை நியாயமானால், உடன் நிறைவேற்றப்படும். பொதுநலமானால், யோசிக்கும் பொழுதே நடந்துவிடும்.
  8. நம் செயல்களுக்கு சாட்சி பூதம் நாராயணன்.
  9. அனுபவிக்க விதித்து கர்மக் கயிற்றுடன் அனுப்பியது சிவம்.
  10. கிரிவலம், ஒரு கர்ம கயிற்றை அவிழ்த்து இறைவனை கட்டுகிறது.
  11. பசியாற்றுபவன், பசிக்காமல் இருக்கும் நிலை அடைவான்.
  12. எப்படி வாழ்ந்தால் இறைவனுக்கு பிடிக்குமோ,  அப்படி வாழ்வது, இறை, சித்தர்கள் அருகாமையை கொண்டு தரும்.
  13. எளிய வாழ்வு, சுமப்பது எளிது. கர்மாவும் சேராது.
  14. கர்மபரிபாலனம், கர்மபரிவர்த்தனம் என இரண்டு உண்டு.
  15. கைநீட்டுபவனிடம் இல்லை என்று கூறாதே.
  16. வீட்டை விட்டு, கோவிலை விட்டு செல்லும் பொழுது "உத்தரவு" என கூறி செல்.
  17. விளக்கு ஏற்றும் பொழுதும், தீபத்தை குளிரவைக்கும் பொழுதும், பிரணவத்தை ஓது.
  18. பூர்வ ஜென்ம எதிரிகள், இப்பொழுது நண்பர்கள், பூர்வ ஜென்ம நண்பர்கள் இப்பொழுது எதிரிகள் - இருவரும் நம் கர்மாவை கழிக்க வந்தவர்கள்.
  19. எதற்காக ஒரு இடம் செல்கிறோம் என்று தெரியாமலே இருந்தால், அமைதியாக நடப்பவைகளை கவனி. மிகப்பெரிய பாடங்கள் அங்கு கற்பிக்கப்படும்.
  20. இறைவன் திருவடியன்றி, எதுவும் நிலையில்லாதது.
  21. மரணம் இறைவன் தீர்மானித்தது, முன்னரே தெரிய வந்தால் கூறி பிரம்மஹத்தி தோஷத்தை வாங்கிக் கொள்ளாதே.
  22. த்யானத்தில் உள்ளே சிவத்தை பார்ப்பதே அதோமுகம்.
  23. இறந்த பின் உடல் பஞ்சபூதத்தில் சேரும், ஆத்மா பராபரத்தில் சேரும்.
  24. உறவுகள் கேட்டு வாங்கி வந்ததல்ல. நம் கர்ம கழிவுக்காக வந்தவர்கள்.
  25. ஒரு உயிரை மாய்க்க ஆயுதம் தேவை இல்லை. தவ வலிமையுடையவனின்  வாக்கே போதும்.
  26. ஒருவனுக்கு இரு ஜாதகங்கள், பிறந்த பொழுது, நிகழ் காலம். இரண்டையும் பார்ப்பவன், கர்மாவை சரியாக பார்ப்பான்.
  27. தினமும் பஞ்ச பூதங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
  28. அஷ்ட திக்கை கட்ட தெரிந்தவனை அணுகுவது கடினம்.
  29. மனிதனிடம் பேசுவதே, கர்ம பரிவர்த்தனை நடத்தும்.
  30. இறந்த மனிதன் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டால், அவ் உறுப்புகள் பஞ்ச பூதத்துக்கு வந்து சேரும் வரை அந்த ஆத்மா அலைய வேண்டி வரும்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

5 comments:

  1. நன்றி ஐயா, 30வது வரிகள் மட்டும் சிறிது ஐயத்தை உண்டாக்குகிறது..

    உடல் உறுப்பு தானம் சுயமாகவோ அல்லது உறவினர்களாலோ கொடுக்கபடுவது கூட ஏற்கனவே தீர்மானிக்கபட்டவை தானே!?

    ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
    Replies
    1. கொடுப்பவரின் கர்மாவுக்கு ஏற்ப கொடுக்கப்பட்டு விதித்து வாங்கி வந்ததை மனிதன் தீர்மானித்து பிறருக்கு கொடுக்கும் பொழுது கொடுத்தவன் முதலில் இறந்தால், அவன் வாங்கி வந்த உறுப்புகள் அதற்கு பின்னரும் பூமியில் வாங்கியவர் உடலில் உயிர் வாழ்வதால், வாங்கியவர் இறந்து அந்த உடல் பஞ்சபூதங்களை சேரும் வரை, கொடுத்தவரின் ஆத்மா அலைந்து திரிய வேண்டியது தான். ஆகவே, உயர் நிலைகளுக்கோ, மறுபிறவிக்கோ செல்கிற தகுதியை இழக்கிறது. நம்முடைய எந்த சாஸ்த்திரத்திலும் உடல் உறுப்பு தானம் பற்றி கூறப்படவில்லை. [இதை பற்றி சென்ற வார சத்சங்கத்தில் நிறைய பேசினோமே!]

      Delete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
    14th point please explain ayya

    ReplyDelete
    Replies
    1. கர்மபரிபாலனம் என்றால் விதித்த கர்மாவை நாமே அனுபவித்து தீர்ப்பது. கர்மபரிவர்த்தனம் என்றால், ஒருவருக்கு விதிக்கப்பட்ட கர்மா, முழுவதுமாகவோ, ஒரு பகுதியோ பிறருக்கு போய் சேர்ந்து அவர் அனுபவிப்பது.!

      Delete