அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 24/05/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 6
நாள், நேரம் : 24/05/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை
முழு நிகழ்வின் நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=1
இடம் : உலக நன்மைக்காக 10 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.
===========================
# இவ் 6ஆம் பகுதி வாக்கின் நேரலை:- https://youtu.be/NqRaI13qIDU?t=20601
===========================
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
குருநாதர் :- தாயே, நிச்சயம், அவரவர் ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்யச் சொல்.
சுவடி ஓதும் மைந்தன்:- சொல்லிக்கொடுமா? எல்லாரும் ஒரு நிமிடம் தியானம் செய்யச் சொல்; எதுவும் வரக்கூடாது, இறைசன் நினைச்சு.
சிவ குழந்தை அன்னை வாக்கு :- எல்லாரும் கண்ணை மூடி பிரார்த்தனை செய்யுங்க. உங்கள் இஷ்ட தெய்வத்தை மனசுல நினைச்சுக்கிட்டு, கண்டிப்பா வந்து— நீங்க கூப்பிட்டீங்கன்னா கண்டிப்பா வருவார். நல்லா அமைதியா எல்லாரும் தியானம் செய்யலாம்.
===========================
# உலக நன்மைக்காக ஒரு நிமிடம் பிரார்த்தனை
===========================
கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( அனைவரும் கண்களை மூடி , தியானித்து , உலக நன்மைக்காக ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்தனர் )
குருநாதர் :- தாயே, அழகாக அறிந்தும் இன்னும் என்னென்ன எடுத்து கூறுகின்றாயோ, பின் கூறு. இக்குழந்தை அழகாக பார்த்திருப்பான்.
சுவடி ஓதும் மைந்தன்:- அம்மா, இன்னும் வந்து நீங்க— இணைஞ்சு இருக்கா, நல்லா? உடம்புல? இன்னும் அகத்தியர் வந்து— ஜூஸ் குடுங்க, ஐயா, ஜூஸ் குடுங்க, ஐயா. அழகா, அகத்தியர் வந்து— குடி, குடிங்கம்மா.
சிவ குழந்தை அன்னை :- ( தொடர்ந்து பேசியதால் களைப்பை நீக்க , புத்துணர்ச்சி அளிக்க பழச்சாறு கொடுத்தனர் அடியவர்கள். அம்மையும் அருந்தி பின் வாக்கு கூற ஆயத்தமானார்கள் )
மதிய உணவு அறிவிப்பு:- ஐயா, மதியம் அன்னம்பலிப்பு சாதுக்களுக்கு நிறைவடைந்தது; மற்ற அடியார்கள் வந்து சாப்பிட வரலாம். முதியவர்களுக்கு டோக்கன் கொடுத்திருப்பாங்க; அவங்க முதல்ல வாங்கம்மா. சாப்பிட, ஐயா, வாங்க. சிவாய நம.
சிவ குழந்தை, குருநாதர் அன்னையின் அனுபவ விளக்கங்கள் :-
(நேரலை - https://youtu.be/NqRaI13qIDU?t=20818 )
நான் வந்து என்ன பண்ணேனா வீட்ல எல்லாம் தனியா இருக்கும்போது எனக்கு ஒருத்தங்க வந்து அண்ணாமலை சிவபெருமான சிவனோட சிலைய வந்து கிப்ட்டா தந்தாங்க. நான் வந்து வீட்ல ஏதாவது தனியா இருக்கும்போது பார்த்துகிட்டு மனசுக்குள்ள ஏதாவது பேசிக்கிட்டே இருப்பேன்.
என்ன கேப்பேன்னு தெரியுமா? உனக்கு என்ன அவ்வளவு பிடிக்குமா அப்படின்னு கேப்பேன். நீ எவ்வளவு அதாவது…
சித்திரா பௌர்ணமி அன்னைக்கு வெள்ளிக்கிழமை அதுவும் நாங்க அண்ணாமலைக்கு வரணும்னு நினைச்சிட்டு இருந்தோம். அப்ப பார்த்து சரியா வந்து ஒருத்தங்க வந்து எனக்கு வந்து கிப்ட் பண்ணாங்க. அண்ணாமலை சிவபெருமான் ஸ்டாச்சுவ ( சிலை ) அப்போ எனக்கு ஒரே அழுகையா வந்துச்சு.
அப்ப என் மனசுக்குள்ள தோன்றியது, உனக்கு என்ன அவ்வளவு பிடிக்குமா? பரவாயில்ல நீயே என்ன தேடி வந்துருக்க.
இந்த சீதாராமன் படத்துல அதாவது…அதுல என்னன்னா அவ பாட்டு லெட்டர் போட்டுக்கிட்டே இருப்பா… அவன் மட்டும் போடுவான் இவன் போடவே மாட்டான் ஓகேவா அதே மாதிரிதான் நான் பாட்டு ஒரு சைடு நான் சொல்லிக்கிட்டே இருப்பேன். ஆனா அன்னைக்கு தான் எனக்கு ரிப்ளை வந்துச்சு. உன்ன எனக்கு அவ்வளோு பிடிக்கும் அப்படின்னு.
கேட்கும்போது எனக்கு ரொம்பவே அழுகையா வந்துச்சு. ஒரு பக்கம் ஆனந்தமா இருந்துச்சு. என்ன சொல்றேன்னே தெரியல.
எனக்கு எப்படி, எப்படா இந்த இந்த ஜென்மம், இந்த பிறவியை முடிப்போம்னு இருக்கு.
அடியவர்கள் :- ( கை தட்டல்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- அய்யா இப்படி எல்லாம் எண்ணங்கள் வரணும். இந்த எண்ணங்கள் வரணுங்க ஐயா. மனிதன் பிறந்தால் சும்மா அதுக்காகவும், இதுக்காகவும் ஆசைப்பட்டு எல்லாம் இருக்கக்கூடாது. (நல்ல) எண்ணங்கள் வரணும். இறைவன் இந்த பிறவி போதும்டான்னு வரணும். இது கொடுத்தது எனக்கு இதுவரைக்கும் போதும்டான்னு சொல்லிட்டு வரணும். எல்லாம் வரணும்.
(நல்ல) எண்ணங்கள் வரணும். மேன்மையா இருக்கணும். இறைவனிடத்தில் அது வேணும், இது வேணும்னு கேட்கக்கூடாது. கேட்கக்கூடாது. எதுவுமே கேட்கக்கூடாது.
சிறு குழந்தைகள் இறைவனை வணங்கினால் நிச்சயம் உடனடியாக கொடுப்பார்கள் இறைவன் அதனால வந்து……
===========================
# அம்மா அழகாக ஈசனை உருக பாடு.
===========================
குருநாதர் :- அம்மா அறிந்தும், பாடலை அழகாக ஈசனை உருக பாடு.
சுவடி ஓதும் மைந்தன் :- ஈசனை உருகி பாடுன்றார். எல்லாரும் நல்லா இருக்கணும். நாட்டுல இது மாதிரி நடக்க போகுது. அவங்கல்லாம் நல்லா இருக்கணும்னு சொல்லிட்டு, மனம் உருகி…… அப்பா!!!!! காப்பாத்துப்பா என்று நீங்க பாட்டு பாடுங்க.
===========================
# உலகோருக்கு சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னை பாடிய பாடல் - திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் - 38
===========================
நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=20964
நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த
கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
குருநாதர் அன்னையின் பாடல் விளக்கங்கள் :-
அதாவது இந்த பாடலுக்கு என்ன பொருள் அப்படின்னா, நாளென் செய்யும் வினை தான் என் செய்யும். அதாவது நாள், நாள் அப்படின்னா இப்போ ஒரு ஒரு நாள் இருக்கு இல்லையா, இன்னைக்கு வந்து நவமி, நாளைக்கு தசமி, அஷ்டமி, நவமி.
இந்த மாதிரி நல்லது தரக்கூடிய நாள்களும் இருக்கு, கெட்டது தரக்கூடிய நாள்களும் இருக்கு. அதைத்தான், எந்த நாளாக இருந்தாலும், நான் உன்னை வழிபாடு செஞ்சேன்னா, அந்த நாள் எல்லாம் என்னை என்ன செய்யும்? அதுதான். நாளென் செய்யும்.
வினை தான் என் செய்யும்; எந்த வினையும் உன்னை நான் வழிபாடு செஞ்சா, என் பக்கத்துல கூட வராது, அப்படின்னு பாடி இருக்கார்.
நாளென் செய்யும் வினை தான் என் செய்யும்; உன்னை நாடி வந்த கோளென் செய்யும்.
அதாவது கோள்கள் இருக்கு இல்லையா, ராகு, கேதுன்னு, தீமையை விளைவிக்கக்கூடிய கோள்களும் கூட என்கிட்ட வரவே முடியாது. ஏன்னா நீ தான் என் கூடயே இருக்கே. நீ என்னை ஆட்கொண்டுட்டு இருக்கும்போது, ஏதாவது துன்பம் என்னை வந்து நெருங்குமா, அப்படின்னு அவ்வளவு அழகா இந்த பாடல்ல வந்து இயற்றி இருக்காங்க.
அப்படி ஏதாவது எனக்கு ஒரு துன்பம் வரும் பொழுது, இந்த பாட்டுல பார்த்தீங்கன்னா, நாளென் செய்யும் வினை தான் என் செய்யும்; என்னை நாடி வந்த கோளென் செய்யும்; கொடும் கூற்றென் செய்யும்; குமரேசன் இருத்தாளும்; சிலம்பும் சதங்கையும் தண்டையும்; சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடனே.
இந்த மாதிரி என்ன பிரச்சனை வந்தாலும், அவருடைய தண்டை, அவருடைய ஆறு முகங்கள், அவருடைய தோள்கள், தண்டை, சிலம்பும் சதங்கையும், இந்த மாதிரி நிறைய விஷயம், நீ வந்து என் முன்னாடி வந்து, இந்த மாதிரி ஒரு பிரச்சனைன்னு வந்தா, நீ கண்டிப்பா என் முன்னாடி வந்து, நீ நிப்ப. அப்படின்னு அவ்வளவு ஒரு நம்பிக்கையா பாடி இருக்காங்க.
===========================
# குருநாதர் அன்னையின் “சரவணபவ” அறுகோண நட்சத்திர விளக்கங்கள்
===========================
குருநாதர் அன்னையின் விளக்கங்கள் :- இதுக்கு, அதாவது முருகப்பெருமானுக்கு ரெண்டு வந்து, ரெண்டு மனைவிகள் இருக்காங்க. வள்ளி, தெய்வானை இல்லையா. வலதுபுறம் இருப்பது வள்ளி, இடதுபுறம் இருப்பது தெய்வானை.
நம்ம ஒரு வீட்ல எல்லாரும், நம்ம எல்லாரும் கோலம் போடுவோம். என்ன கோலம்? இப்படி நட்சத்திர கோலம் போடுவோம் இல்லையா, மேல ஒரு முக்கோணம் போடுவோம், கீழ பார்க்க ஒரு முக்கோணம் போடுவோம். இந்த நட்சத்திர கோலத்துக்கு என்ன அர்த்தம்னு தெரியாமலே, நாம எல்லாரும் போட்டு வரோம் இல்லையா, அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?
முருகருடைய ரெண்டு மனைவிகள் யாரு? வள்ளி, தெய்வானை. இந்த வள்ளி யாரு அப்படின்னா, மண்ணுலக சக்தியானவள் வள்ளி, விண்ணுலக சிந்தியானவள் தெய்வானை. அதாவது மண்ணிலேயே பிறந்து, மண்ணிலேயே வளர்ந்து வந்தவள் தான் வள்ளி.
வானத்துல, விண்ணுல பிறந்து, விண்ணிலேயே வளர்ந்து வந்தவள் தெய்வானை. இந்த ரெண்டு சக்திகளை தான் இந்த கோலம் குறிக்கிறது.
அதாவது மேல பார்க்க போட்ட முக்கோணம், விண்ணுலக சக்தியை குறிக்குது. கீழ பார்க்க போட்ட முக்கோணம், மண்ணுலக சக்தியை குறிக்குது. இதுதான் இந்த கோலத்தோட அர்த்தம்.
இப்படி போட்டு, நம்ம சரவணபவ போட்டு, நம்ம முருகரை அவ்வளவு அழகா நம்ம வழிபடுறோம். புரியுதா, இந்த கோலத்துக்கு அர்த்தம் என்னன்னு?
அனைத்து அடியவர்கள் :- ( புதிய புரிதலால் , மகிழ்ச்சி அடைந்து கை தட்டல்கள் )
===========================
# எங்கும் இருக்கும் இறைவனை ஏன் ஆலயத்தில் சென்று வழிபட வேண்டும்?
===========================
குருநாதர் அன்னையின் விளக்கங்கள் :- இதே போல, இறைவன் வந்து எங்கதான் இருக்காருன்னு சொல்லவே முடியாது. அவர் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார், என்னிலும் இருப்பார், உன்னிலும் இருப்பார், இங்கேயும் இருப்பார், அங்கேயும் இருப்பார், எங்க வேணாலும் இருப்பார். இந்த மைக்கா இருப்பாரு, இந்த மேடையா இருப்பாரு, இந்த ஸ்டாண்டா இருப்பாரு, என்ன வேணாலும் இருப்பார் இல்லையா, இறைவன்.
அப்போ நம்ம எல்லாம் ஒரு கேள்வி வரும், என்ன? அப்ப இங்க இருந்தே சாமி கும்பிடலாம்ல, எதுக்கு நம்ம கோவிலுக்கு போய் கும்பிடுறோம் அப்படின்னு இல்லையா?
அதுக்கு என்ன அர்த்தம்னா, பசு நமக்கு பால் தருது, அதோட உடம்புல இருந்து தான் அந்த பால் எல்லாம் சுரக்குது. அதுக்காக எங்க இருந்து கரந்தாலும் பால் வருமா? வராது. காது பிடிச்சு கரந்தா பால் வருமா? வராது. அதோட மடியில் இருந்து கரந்தால் மட்டுமே பால் வரும்.
அதேபோல தான், அவர் எங்கேயும் நீக்கமற நிறைந்து இருந்தாலும், அவர் திருக்கோவிலில் வந்து, அவரை வணங்கும் பொழுது, நமக்கு அதீத பலன் கிடைக்குது.
அனைத்து அடியவர்கள் :- ( புதிய புரிதலால் , மகிழ்ச்சி அடைந்து கை தட்டல்கள் )
===========================
# ஒற்றுமைக்காக கொண்டு வரப்பட்டது தான் தேர் திருவிழா
===========================
குருநாதர் அன்னையின் விளக்கங்கள் :- அதனாலதான், கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் அப்படின்னு பெரியவங்க சொல்லுவாங்க இல்லையா? அதாவது இப்போ ஒரு ஊர்ல ஒரு கோயில் இருந்துச்சுன்னா, அங்க ஒற்றுமை இருக்கும், பண்பு இருக்கும் இல்லையா?
எல்லாரும் ஒற்றுமை. இப்போ ஒரு திருவிழா நடத்துறாங்கன்னா, என்ன பண்ணனும்? தேர் திருவிழா. அதுக்கு ஒருத்தங்க மட்டும் இருந்து இழுக்க முடியுமா? முடியாது.
எல்லாரும் ஒற்றுமையா இருந்தா மட்டும்தான் தேரை இழுக்க முடியும். அதாவது ஒற்றுமைக்காகவே கொண்டு வரப்பட்டது தான் இந்த தேர் திருவிழா. எல்லாரும் சேர்ந்து இழுத்தால் தானே தேர் நகரும்.
===========================
# கோவிலை வைத்து ஒழுக்கம் வளர்கிறது.
===========================
குருநாதர் அன்னையின் விளக்கங்கள் :- ஆக, கோவிலை வைத்து ஒழுக்கம் வளர்கிறது. ஒழுக்கம்னா, கோவிலுக்கு எப்படி வரணும்? நல்லா குளிச்சு, சுத்தமான ஆடையை அணிஞ்சு தான் வரும். குளிக்காதவன் கூட கோவிலுக்கு வரணும்னா, என்ன பண்ணனும்? குளிச்சு தான் வரணும். அப்படின்னுட்டு, அன்னைக்கு அதை குளிப்பான் இல்ல. ஆக, கோவிலை வைத்து, ஒழுக்கம் வளர்கிறது. கோவிலை வைத்து ஒற்றுமை வளர்கிறது. கோவில் ஒரு மனிதனுக்கு நல்ல பண்பை மறைமுகமாக தருகிறது.
அனைத்து அடியவர்கள் :- ( புதிய புரிதலால் , மகிழ்ச்சி அடைந்து கை தட்டல்கள் )
===========================
# கோவிலை வைத்து நம்ம மனம் அமைதி, ஒரு நிம்மதி அடையுதுங்க.
===========================
குருநாதர் அன்னையின் விளக்கங்கள் :- கோவிலுக்கு வந்தா அமைதியா இருக்கணும். கோவிலை சுத்தமா வச்சுக்கணும். நாம அமைதியா இருந்தாதானா கோவிலும் அமைதியா இருக்கும். கோவில் அமைதியா இருந்தாதான் நம்ம மனமும் அமைதியா இருக்கும். அங்க இருக்கிற இறைவன் மீது நம்ம மனம் அப்படியே லைக்கிறது. அவருடைய அலங்காரம், தீபாராதனை, வழிபாடு, மந்திரங்கள், இதெல்லாம் பார்க்கும்போது, இதெல்லாம் கேட்கும்போது, நம்ம மனம் ஒரு அமைதி, ஒரு நிம்மதி அடையுதுங்க.
அனைத்து அடியவர்கள் :- ( புதிய புரிதலால் , மகிழ்ச்சி அடைந்து கை தட்டல்கள் )
===========================
# ஆலயம் என்பதன் பொருள் என்ன?
===========================
குருநாதர் அன்னையின் விளக்கங்கள் :- ஆலயம் என்பதன் பொருள் என்னன்னு யாருக்காவது தெரியுமா? அதாவது ஆன்மா, ஆன்மா லயிக்கின்ற இடம் தான் ஆலயம். அதாவது ஆன்மா, ஆ லயம், லயிக்கின்றது. அதனால, லயம். அதனாலதான் ஆலயம் அப்படின்னு பொருள் வச்சிருக்காங்க.
ஆக, நம்ம இந்த சிவபெருமானை வணங்கி, நம்ம கண்டிப்பா அவர் மீது லயிக்கணுமா? அவருடைய அலங்காரத்தை பார்த்து, பொன்னார் மேனின்னு எவ்வளவு அழகா இருக்காரு அப்படின்னு நினைக்கணுமாம். அப்படி அவருடைய மனம் உருக்கி நம்ம வேண்டணுமாம். அப்படி வேண்டனும்னா, என்னைக்காவது ஒரு நாள் அவர் வந்து, ச இவன் என்னடா ரொம்ப நாள் நம்மள தொல்லை பண்ணிக்கிட்டே இருக்கானே, சரி அவன் கூப்பிடுறோம், ஒரு நாள் போய்தான் பார்ப்போமே, அப்படின்னு ஒரு நாளாவது என்னன்னு கேட்பாராம்.
அதனால, கண்டிப்பா எல்லாரும் நம்ம வந்து என்னதான் வேலை வேலையா இருந்தாலும், அவரை நினைச்சுக்கிட்டே இருக்கணுமாம். சிவா, நீ வந்து என்னை இப்படி எவ்வளவு அழகா படைச்சிருக்க பாரு, எனக்கு காது கேட்குது, எனக்கு வாய் பேச முடியுது, என்னால எவ்வளவு பார்க்க முடியுது, நீ வந்து ரொம்ப நல்லவரு அப்படின்னுட்டு, ஏதாவது அவரை நினைச்சுக்கிட்டே இருக்கணுமாம். அப்படி நினைச்சோம்னா, கண்டிப்பா ஒரு நாள் இவன் ரொம்ப நாள் கூப்பிட்டுட்டே இருக்கான், பாவம், ஒரு நாள் போவோமே, அப்படின்னுட்டு வருவாரு.
அனைத்து அடியவர்கள் :- ( புதிய புரிதலால் , மகிழ்ச்சி அடைந்து கை தட்டல்கள் )
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
குருநாதர் :- அம்மையே, அப்பனே, எதை என்று புரிய, உங்களுக்கு எது தேவை? ஞானம் வேண்டுமா, எவை என்று புரிய, இப்பொழுது பார். இக்குழந்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாரும் கேட்கிறார், உங்களுக்கு என்ன வேணும்னு. ஞானம் வேண்டுமா? மத்தது ஏதாவது வேண்டுமா?
குருநாதர் :- தாயே, நிச்சயம் அறிந்தும் கூட, எவை என்று அறிய, சிறுபிள்ளை போல் யான் இருக்கின்றேன். அதனால் நீ பாடினால், சித்தர்கள் இவர்களுக்கு ஞானத்தை கொடுப்பார்கள். உலகத்திற்கும் ஞானத்தை கொடுப்பார்கள். நிச்சயம் பாடு, ஈசனை நோக்கி.
சுவடி ஓதும் மைந்தன் :- ஜீவனாடி குட்டி, ஜீவனாடில வரதும் ஒரு பெரும் புண்ணியம். அகத்தியர் வந்து நீங்க பாடுறதும் ஒரு புண்ணியம். அதனால ஒரு புண்ணியத்தை கொடுத்திருக்கார். நீங்க பாடுங்க.
===========================
# இதனிடையே உணவருந்த அழைப்பு விடுத்தார்கள்
===========================
அடியவர் 3:- ஐயா, ஒரு நிமிஷம். சாப்பிடாத அடியவர்கள் கீழே உணவு உண்ண வரும்படி கேட்டுக்கறாங்க. அதனால உணவு அருந்தக்கூடிய தேவையுள்ள அன்பர்கள், பசி உள்ளவர்கள் கீழே வாங்க. ஓம் நமசிவாய.
சுவடி ஓதும் மைந்தன் :- பசி, பசி. இந்த குழந்தை வார்த்தை கேட்டா பசி எல்லாம் பறந்து போயிடும். இந்த குழந்தையை வந்து பாடல் கேட்டால், பசி எல்லாம் தான் பறந்துரும். என்ன ஒரு சின்ன வயசுல ஞானம். இதெல்லாம் கேட்டோம்னா பசியே இல்லைங்க ஐயா.
===========================
# செவிக்கும் , வயிற்றுக்கும் உணவு ஈயப்படும் அதிசயம்.
===========================
# அன்னையின் வார்த்தைகள் அனைத்தும் தங்கம் வைரம்…
===========================
அடியவர் 3:- செவிக்கு உணவு இல்லாதபோது, சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும். இங்க செவி உணவு.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, செவிக்கும் இங்க வந்து ஈயப்படுது. வயிற்றுக்கும் ஈயப்படுது. அப்படியாப்பட்ட ஒன்னொன்னு சொல்றத பார்த்தா, அப்படியாப்பட்ட வார்த்தைகள் கோல்டு, டைமண்ட்.
அடியவர் 3:- ( அன்னைக்கு பழ சாறு அளித்தனர் )
சுவடி ஓதும் மைந்தன் :- பாடு குட்டி. இறைவன் நல்ல சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கார். பாடு.
அடியவர் 3:- ( ஒரு பாடல் முன் மொழிந்தார் )
சுவடி ஓதும் மைந்தன் :- இதுல ஐயா, அந்த அம்மாக்கு எது வருமோ பாடட்டும். விடுங்க. அகத்தியர் கேக்குறது. இல்லனா, அகத்தியர் சொல்லுவாரு. விடுங்க ஐயா, பாடட்டும்.
குருநாதர் அன்னை:- ( அடுத்த பாடல் பாட ஆயத்தம் ஆனார்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாரும் ஐயா, எல்லாரும் ஒரு சின்ன குழந்தை பாடுது. நல்லா கை தட்டுங்க அய்யா. பாடு குட்டி.
உலகோருக்கு சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னை பாடிய பாடல்:- ( குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் என்ற பாடலை அருமையாக பாடினார்கள். அடியவர்கள் பின் வரும் காணொளியில் நேரலையில் அவசியம் கேட்கவும். )
பாடலின் நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=21589
===========================
# "அம்மா" என்று அழைத்தேனே !!!
# குழந்தாய் , என் அன்னை போல சொல்கின்றாயே!!!
===========================
குருநாதர் :- "அம்மா" என்று அழைத்தேனே. அதற்கு தகுந்தவாறே சொல்கின்றாயே, அதற்கு தகுந்தவாறே பாசத்தை பொழிகின்றாயே. பின் உலகத்தோர் நன்றாக இருக்க, மீண்டும் அனைவரும் சந்தோஷத்தில் ஆழ்த்து. முருகனும் சந்தோஷம் அடைவான். இவ் பாடலை மீண்டும் பாடு.
சுவடி ஓதும் மைந்தன் :- "முருகன் சந்தோஷம் அடைஞ்சாவே" இது நாங்க நினைச்சுக்கறது வந்து, அதை சாந்தப்படுத்துவார். அதனால, அவரும் நீ பாடுற பாட்டுல சந்தோஷம் அடைஞ்சிடுவார். பாடுங்கம்மா.
ஐயா, நல்லா வந்து மனசார நினைச்சுக்கோங்க. உலகத்து நல்லா இருக்கணும்; அடுத்து நோய் நொடிகள் வரக்கூடாது, சண்டை வரக்கூடாது, பிரச்சனை வரக்கூடாதுன்னு சொல்லிட்டு, நல்லா வேண்டிக்கிட்டு, முருகனை நினைச்சு இந்த பாப்பா பாடுது. எல்லாரும் ஒரு தை தட்டுங்க, ஐயா.
அடியவர் :- எப்படி பாற்கடலை கடைஞ்சு அமிர்தத்தை எடுத்துக் கொடுத்தாங்களோ, அதேபோல அகத்திய பெருமான் இந்த அம்மாவை கடைஞ்சு, கடைஞ்சு, ரெக்வஸ்ட் பண்ணி, ரெக்வஸ்ட் பண்ணி, எல்லாருக்கும் புண்ணியத்தை வாங்கி கொடுக்கிறார்.
சுவடி ஓதும் மைந்தன் :- உங்களை அம்மா என்றாரு….
அடியவர் :- புண்ணியத்தை வாங்கி கொடுக்கிறாங்க, எல்லா பேருக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அம்மா என்றாரு— இதே பாட்டு பாடுங்க … இப்ப (குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்).
இரண்டாம் முறையாக உலகோருக்கு சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னை பாடிய பாடல்:- ( குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் என்ற பாடலை அருமையாக பாடினார்கள். அடியவர்கள் பின் வரும் காணொளியில் நேரலையில் அவசியம் கேட்கவும். )
பாடலின் நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=21829
கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( பலத்த சந்தோசத்துடன் , கைகள் மகிழ்வுடன் தட்டி , ரசித்து பாட ஆரம்பித்தனர். அடியவர்கள் மேல் உள்ள காணொளியில் நேரலையில் அவசியம் ரசித்து கேட்கவும். )
( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 24/05/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் …..)
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)
.jpeg)

No comments:
Post a Comment