​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 14 June 2026

சித்தன் அருள் - 2229 - அன்புடன் அகத்தியர் - திருமூலர் சித்தபெருமான் உரைத்த வாக்கு!




30/3/2026 அன்று திருமூலர் சித்தபெருமான் உரைத்த வாக்கு.

வாக்குரைத்த ஸ்தலம்: இராவணன் புகழ் திருகோணமலை மாதுமையாள் சமேத கோணேசுவரப் பெருமான் ஆலயம். இலங்கை.

இவ் வாக்குதனை செய்யுள் வடிவத்தில் பாடலாக உரைத்தார்.. திருமூலர் சித்த பெருமான்!!

புவி தன்னை அழகாக இயக்கி கொண்டிருக்கும் இறைவா!!! போற்றி!!!!!

போற்றியே பணிகின்றேனே!!!

மூலனவனே!!! தெரிவிக்கின்றேனே வாக்குகளை.

அறிந்தும் எதையென்றும் உணராத நின் நின்று அருளை எப்பொழுது பின் பெற்றார்களே?? மனிதர்களே!!!!

விளக்கம் 

ஈசனே உங்களை முழுமையாக உணர்ந்து கொள்ளாத மனிதர்கள் எப்போது அருள் பெற்றார்கள்?????

உங்களை உண்மை பொருளை உணர்ந்து கொண்டவர்களுக்கே உங்கள் அருள் கிடைக்கும்.







 உண்மையென ஞானம் எங்கிருந்து வந்தது? 


அன்று ஏது அந்த அங்கமாக வந்து நின்றாயே, நின்றாயே இங்கு, 


அங்கங்கு நின்றாயே!! அருள் கூர்ந்து மக்களுக்கு ஒளியாகவே எதிர்த்து நின்று பின் அறிந்தும் ஒன்றிணை மக்கள் தன்னை பின் அறியாத முடியாத பட்சத்தில் பின் இருந்தொன்று இன்று.



விளக்கம் 


இன்றைய காலகட்டத்தில் உண்மையான ஞானம் எங்கு இருக்கின்றது???


உண்மையான ஞானத்தையும் அருளையும் தருவதற்கு இங்கும் அதாவது திருகோண மலையிலும் ஒவ்வொரு தலங்களிலும் கோயில் கொண்டு நின்றிருக்கும் ஈசா!!!


எதையும் அறிந்து கொள்ள முடியாத மக்களுக்கு ஒளி ரூபமாக அருள்தா!! ஈசனே!!!





 இன்றென்று எதையென்று பிரதோச காலத்தைப் போற்றுபவனே,



விளக்கம்


பிரதோஷ காலங்களில் நர்த்தனம் புரியும் ஈசனே






 அறிந்தும் எதையென்றும் அறியாத வகையிலும் கூட நின்று அருள் புரி ஈசனே!! எம் ஈசனே!!!.


 தலை காக்கும் ஈசனே,!!!



விளக்கம் 


 எதையும் அறியாத நிலையில் மனிதர்கள் உள்ளார்கள். அவர்களுக்கெல்லாம் அருள் புரிவாய் ஈசனே... தலைமுறையைக் காக்கும் ஈசனே.





 அறிந்தும் எத்தனை? பின் கோடி மனிதர்கள் எத்தனை பாவத்தைப் பின் சுமந்து வந்து நின்று பின் இருந்தாலுமே,....



 அவர்களுக்கெல்லாமே அருள் புரிந்து அனைத்தும் நல்குவாயே ஈசனே.



விளக்கம் 


கோடி கோடி மனிதர்கள் கோடி கோடியாய் பாவத்தை சுமந்து கொண்டிருக்கின்றனர்... அவர்கள் பாவங்களை நீக்கி அருள் புரிவாய்.. அனைத்தும் தருவாய் ஈசனே



 என்றென்றும் மனதில் அனைத்தும் இருக்கும் இறைவனை அறிந்து தாம் மகிழ்ந்து பாடுவோமே, பாடுவோமே சிவபுரனே. 




விளக்கம் 


எங்களுடைய மனதில் நிரந்தரமாய் குடி கொண்டிருக்கும் இறைவா உங்களை நினைத்து நினைத்து மகிழ்ந்து நாங்கள் பாடுவோம் சிவ புரனே.






அறிந்தும் கூட ஒன்று அறிந்து எதனென்றும் அறியாத வகையிலும் நின்றின்று மனிதனைப் பின் காக்க என்றென்றும் ஓடி வந்து மனிதனைப் பின் திருத்தி திருத்தி பக்குவப்படுத்தி அருள் கூர்ந்து ஈயனும். ஐயனே!!! 



விளக்கம்


ஒன்றுமே தெரியாமல் ஒன்றுமே அறியாமல் இருக்கும் மனிதர்களை காப்பதற்கு நீங்கள் வரவேண்டும் மனிதர்களை திருத்தி பக்குவம் தந்து அருள் தர வேண்டும் ஐயனே!!





அருளாசி பெறு!!!!, அறிந்தும் எதையென்று மனிதனே, அருளாசி பெறு பின் மனிதனே!!.



 அனுதினமும் ஆசி பெறுக!!!! பின் மனதில் நிறுத்தி எதையென்று அனைத்தையும் நீக்கு, அனைத்தையும் நீக்கு.


எண்ணிய எண்ணங்கள் அனைத்தையும் நீக்கு மனதில் மனிதா.


விளக்கம் 


மனிதர்களே அருள் பெறுங்கள்..


ஈசனை மனதில் நிறுத்துங்கள். 


உங்கள் மனதில் இருக்கும் மாய எண்ணங்களை எல்லாம் நீக்குங்கள். 


உங்கள் மனதில் முழுமையாக ஈசனை நிறுவுங்கள். 


நல் எண்ணங்களை எண்ணுங்கள்.


நீங்கள் எண்ணுவதெல்லாம் யோசிப்பதெல்லாம் ஈசனுக்கு தெரியும் என்று இருங்கள்.





 எண்ணிய எண்ணமெல்லாம் ஈசன் பின் அறிந்தவனே அனைத்தும்.



 எண்ணிய எண்ணங்கள் ஈசன் பின் அறிந்து பின் மனிதனுக்குப் பின் கொடுத்தால் நன்று!!! நன்று!!!


 அதுவே நன்று. அதுதான் புண்ணியம் ஆகுமே,!!!


 ஆகுமே எம் ஈசனே.!! 




விளக்கம் 


மனிதர் நல்லெண்ணங்களை மனதில் விதைத்து யோசித்தாலே... ஈசன் அந்த எண்ணங்களை அறிந்து மனிதர்களுக்கு அருளிடுவார் அதுதான் உங்களுக்கு நன்மை நன்மை.





அறிந்து பின் உன் உள்ளத்தைப் பின் அறிந்து!!! எதையென்றும் அறியாமல் இருந்தும் மக்களைப் பின் காப்பாற்றி நின்று!!!....


 அனைத்திலும் பின் எதிலும் நின்று போராட மனிதனுக்கு தகுதிகள் இல்லாமல் போகுமே. 




விளக்கம் 


உங்களைப் பற்றி தெரிந்தும் தெரியாமல் இருக்கும் மக்களை காப்பாற்றுங்கள்.. ஏனென்றால் வாழ்க்கையில் போராடி வாழ்வதற்கு மனிதர்களுக்கு தகுதியில்லாமல் போய்க் கொண்டிருக்கின்றது.


உற்ற துணை பின் யார்??? என்று பின் மனிதனுக்குத் தெரியவில்லையே சிவபுராணனே.




 அதையும் கூட முழு மனதோடு மனிதனுக்கு ஈந்து, மனிதனுக்கு ஈந்து அனைத்தையும் தருக!!! வளம் தருக!!!


 யோசிக்கும் திறனையும் கொடுக்க சிவபுரனே. நன்று!! நன்று!!!




விளக்கம். 



இறைவன் தான் உற்ற துணை இறைவன் தான் துணைவன் என்பது மனிதர்களுக்கு தெரியவில்லை.. அனைவரும் மாயைகளில் சென்று கொண்டிருக்கின்றார்கள்.


இறைவன்தான் துணை என்பதை மனிதர்களுக்கு புரிய வைத்து.. முழுமையாக மனிதர்களுக்கு.. அருள் தர வேண்டும் 


உங்களையே நினைக்கின்ற மனம் தர வேண்டும்..


நல் யோசனைகள் யோசிக்கும் சக்தியை தர வேண்டும் சிவ புரனே.. இப்படி செய்தாலே நன்மை. நன்மை.


 எதையென்று அனைத்தும் வந்து உன் அடியார்கள் இங்கு பாடினார்களே!!!, அழியும் தருவாயில் பாடினார்களே!!!!!.



 அனைத்தும் கூட நீயும் அதைப் பின் அறிந்து பின் காத்தாயே,!!!!


 காத்துப் பின் இரட்சித்துப் பின் அறிந்தும் கூட பின் மனதை மாற்றி தெளிவுகள் படுத்தி பின் நின்று நின்று அனைத்தையும் கொடுத்தாயே.



விளக்கம் 


திருகோணமலை அந்நியர் படையெடுப்பால் அழிய நேரிட்ட பொழுது அடியவர்கள் அனைவரும் ஒன்று கூடி பக்தியால் ஈசனை தொழுது பாடினார்கள்.. அழிவிலிருந்து காத்து அனைத்து.. மனிதர்களின் மனதையும் மாற்றி தெளிவுகள் தந்து அனைவருக்கும் அருளாசிகள் செய்த ஈசனே.



 மக்கள் கலியுகத்தில் எவை எவையென்று தெரியாமல் அலைந்து திரிந்து எதனை என்றும் அறியாமல் இருந்தாலுமே!!!......


, அப்படி ஏது என்று ஏது என்று உணராமல் இருந்தாலும் அத்தனையும் தெளிவுபடுத்த வா!! சிவபுரனே.


 தெளிவுபடுத்த வா!! சிவபுரனே.



விளக்கம் 


கலியுகத்தில் மனிதர்களுக்கு எது நன்மை? எது தீமை? எது உண்மை? எது பொய்? என்பது தெரியாமல் மனிதர்கள் அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றனர். 


இப்படி புரியாமல் தெரிந்து கொண்டிருக்கும் மனிதர்களை புரிய வைத்து தெளிவுகள் தந்து காப்பாற்ற சிவப்புரனே.





 இன்னும் தான் எதை என்றும் அறியாத வகையில் மனிதன் தவழ்கின்றானே,!...


 மனிதன் பொய் சொல்லி தவழ்கின்றானே!!...


, பாவத்தைச் சேர்த்துக் கொண்டிருக்கின்றானே!!!.......



. அப்பாவத்தை எப்படி?? பின் முழு மனதோடு பின் அறிந்து எதை என்றும் அறிய பின் உமக்கு தெரியும் சிவபுரனனே!!. சிவபுரனனே!!



 அதையும் பின் அகற்ற வா!! பின் சிவபுரனனே.





விளக்கம் 


நான் யார்??? தான் யார் ???என்பதே மனிதர்களுக்கு இதுவரை தெரியவில்லை!!.. எதற்காக பிறவி என்பதும் தெரியவில்லை... மனிதர்கள் அனைவரும் பொய்யிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.. பாவங்களை அவர்களுக்கே தெரியாமல் சேர்த்துக் கொண்டிருக்கின்றனர். 



அந்தப் பாவத்தை எப்படி அழிப்பது என்பது உங்களுக்கு மட்டுமே தெரியும் சிவப்புரனே..


அந்தப் பாவத்தை எல்லாம் அகற்றி மனிதர்களை நல்வாழ்க்கை படுத்த வா சிவப்புரனே.






 மனிதனுக்கு தீய சக்திகளை பின் அகற்றி பின் நல் சக்திகள் புகுத்தி தர்மத்தைப் பின் காக்க பின் மனிதர்களை எதையென்றும் அறிந்தும் கூட படைத்திடுவாயே.




விளக்கம்

மனிதர்களுக்குள் இருக்கும் தீய சக்திகளை நீக்கி நல்ல சக்திகளை புகுத்துவதற்கும் தர்மத்தை காப்பதற்கும்... ஞானிகள் மகான்கள் போன்றோரை.. மனிதர்களை திருத்துவதற்கு படைத்து அருள் புரிவாய் சிவனே.




 இன்னும் பின் எத்தனை?? எத்தனை??? ஞானிகள் உன்னைப் போற்றி நின்று துதித்துக் கொண்டிருக்கின்றார்களே.



 அகத்தியன் விரும்பியபடி அவர்களையும் கூட பின் எழ வைத்து எழ வைத்து பின் எழுப்பி பின் அருளிடு பின் சிவபுராணனே.



விளக்கம். 


குருநாதர் அகத்திய பெருமான் ஏற்கனவே வாக்குகளில் நல்கிய படி 


ஜீவ சமாதிகளில் இறைவனை நினைத்து தவம் இயற்றிக் கொண்டிருக்கும் ஞானியர்களை எழுப்பி அவர்களுடைய அருளால் இந்த உலகம் நல்ல முறையாக இயங்குவதற்கு அகத்தியர் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்.. அகத்தியரின் சாசனப்படி அந்த ஞானியர்களை நீங்களும் எழுப்பி அருள் செய்ய வை சிவபுராணனே.






 அன்பாக அமர்ந்திட்டு மனதில் பின் தோன்றும் பின் ஈசனாரே!!!!!!


 பார்வதியே பின் அறிந்தும் எதை என்றும் அறிய பின் உலகத்தில் இருக்கும் அனைத்துப் பின் குழந்தைகளையும் பின் காப்பாற்று!!!!


 என்று உத்தரவிட்டு நீயும் கூட மௌனம் பின் சாதித்துக் கொண்டாயே.



விளக்கம்


சித்தர்கள் எங்கள் மனதில் அன்பாக அமர்ந்து அருள் பாலிக்கும் ஈசனாரே !!!


ஏற்கனவே அமர்நாத்திலும்.. கைலாயத்திலும் கங்கோத்திரியிலும்... ஈசனிடத்தில் குழந்தைகளை காப்பாற்று என்று பார்வதி தேவி வேண்டிக்கொண்டார்... அழிவிலிருந்து இந்த உலகத்தை காப்பாற்ற வேண்டும் ஈசனே அனைத்தும் உங்களுடைய குழந்தைகள் தான். அதனால் நீங்கள் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் ஈசன் இடத்தில் வைத்துவிட்டு... தற்பொழுது பார்வதி தேவியே நீங்கள் இப்பொழுது மௌனமாக இருக்கிறீர்கள். 



என்ன நடக்கும் என்பதெல்லாம் உங்களுக்கு தெரியும் தேவியே.. அனைத்தும் அறிந்தது உங்களது உள்ளம். 


இதனால் மனிதர்களுக்கு தெளிவை தருவதற்கு ஓடோடி வாருங்கள். 






 அறிந்தது உனது உள்ளம் !!....


எதையென்று பின்று பின் எதனென்று பின் மனிதனுக்கு தெளிவுகள் படுத்த பின் ஓடோடி வா.



 அறிந்து எதை என்று புரிய நின்றும் கூட அறி என்று பின் காளையின் (நந்தி வாகனத்தில்)

பின் பின் மேலென்று பின் எதை என்று அறிய பின் அனைத்திற்கும் மேலாக அருள புரிய மனிதனுக்கு ஓடோடி எதை என்று அறிய பின் காளையின் மேலே பின் பார்வதியும்!!!........ எதை என்று சிவபுராணனே பின் அன்னையும் தந்தையுமாக ஓடோடி வா !!! சிவபுராணனே.



விளக்கம் 


மனிதர்களுக்கு அருள் புரிவதற்கு... காலை வாகனம் நந்தி வாகனத்தில் அம்மையப்பனாக வாருங்கள் சிவனே பார்வதி தேவியே






 அறிந்தும் எதனுள்ளம் எதனென்று தெரிவித்து எதனென்றும் அறியா மூலப் பொருட்களுக்கு அலைகின்றானே மனிதனே.!!! திரிகின்றானே மனிதனே !!!


அத்தனையும் தோல்வி என்று மீண்டும் பின் குழப்பத்தில் இருந்து!!!...



 அக் குழப்பத்தை நீக்கிடவே அருளிடுவாயே.!!!



 அருளிடுவாயே!!! எம் ஈசனாரே !! எம் ஈசனாரே.................




விளக்கம். 


மனிதர்கள் நாம் என்ன நினைக்கின்றோம் நமது உள்ளத்தில் என்ன நினைக்கின்றோம் என்பது தெரியாமலே மாயா பொருள்கள் மீது நாட்டம் கொண்டு இச்சை கொண்டு அழிகின்ற பொருளின் மீது ஆசை கொண்டு மனிதர்கள் தெரிகின்றார்கள். 


இதன் பின்னாலே சென்றால் அனைத்திலும் தோல்வியை ஏற்படும் குழப்பங்கள் ஏற்படும் 


அந்த குழப்பங்களில் இருந்தும் தோல்விகளில் இருந்தும் காப்பாற்றுவதற்கு அருள் தா ஈசனாரே.





 அன்பென்று ஒன்றுதனை மனிதனுக்குப் புகுத்துவாயே. 

பின் உன் மேலே அறிந்தும் கூட!!



விளக்கம் 


மனிதர்களுக்கு அன்பு என்றால் என்னவென்று தெரியவில்லை யார் மீது அன்பு காட்ட வேண்டும்?? என்பதும் தெரியவில்லை இறைவன் மீது அதாவது உங்கள் மீது அன்பு காட்ட வேண்டும் என்ற எண்ணத்தை மனிதர்களுக்கு தர வேண்டும்!.




 அனைத்தும் பின் நீதானே!!!

 பின்பு செய்தால் அன்பென்று பாதையைப் பிடித்துக் கொண்டு வருவாய் மனிதனே. 




விளக்கம் 

அன்பே சிவம் சிவமே அன்பு என்பதை மனிதர்கள் புரிந்து கொண்டால் அன்பின் வழியிலே இறைவனை அடையும் வழியை பிடித்துக் கொண்டு மனிதர்கள் வந்து விடுவார்கள்.





அன்பென்ற பாதையை யார்? மீது யார்? என்று எதன் எதனை மேல் வைத்து எது என்று புரியாமல் தவிக்கின்றானே. மனிதன் தவிக்கின்றானே.



விளக்கம். 


யார் மீது அன்பு காட்ட வேண்டும்?? என்பதே மனிதர்களுக்கு தெரியவில்லை இதுநாள் வரை!!


மாயை மீது அன்பு வைத்து மனிதர்கள் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.




 அவ் அன்பைப் பின் எதனை? எதனையோ? பயன்படுத்தி அங்கங்கு இருந்து வைத்து வைத்து தோல்விகள் அடைந்து பின் முக்கியமான எதை என்று கூட எங்கு? மனிதன் பின் அன்பை வைத்திருக்க வேண்டும்?????....


 அதனையும் கூட மறந்து விடுகின்றானே. மறந்து விடுகின்றானே.




விளக்கம். 


உண்மையான அன்பினை எங்கு காட்ட வேண்டும் உண்மையான அன்பு எங்கு செலுத்த வேண்டும் என்பதை தெரியாமல் மறந்து மனிதர்கள் வாழ்வதால் வாழ்க்கையில் பல தோல்விகள்.. பல கஷ்டங்களை மனிதர்கள் அனுபவித்து வருகின்றார்கள்.





 ஈசனாரே !! பின் அறிந்தும் எதை என்றும் உணர்ந்த பின் அழிவுகள் எதை என்றும் அறிய பின் எதை என்று தடுக்க நீ எவையென்று புரிய!!!!....


 இப்படித்தான் கலியுகம் என்று பின் எப்பொழுதே எங்களுக்கு பின் வருடங்களில் எதை என்று புரிய இத்தனை இத்தனை கஷ்டங்கள் வந்து மனிதனைப் பின் ஆட்கொண்டு பின் இதன் மூலம் அழிவான் என்று ஏற்கனவே பின் உரைத்திட்டாயே.




விளக்கம் 


ஈசனார் கலியுகம் தொடங்குவதற்கு முன்பாக கலியுகத்தின் விதியில் கலியுகம் இப்படித்தான் இருக்கும்.. இந்தந்த காலகட்டங்களில் இப்படியெல்லாம் அழிவுகள் வரும்... மனிதர்கள் இப்படி எல்லாம் மாறிவிடுவார்கள் அதனால் அழிவுகள் ஏற்படும் அதனால் கஷ்டங்கள் ஏற்படும் என்பதை கலியுகம் தொடங்குவதற்கு முன்பாகவே.... சித்தர்கள் எங்களிடம் ஈசனாரை நீங்கள் தெரிவித்து இருந்தீர்கள்.





 ஆனாலும் இப்பொழுதும் எதை என்று அனைத்தும் தடுப்பதும் உன் கையிலே இறைவனே.




விளக்கம் 


கலியுகத்தில் ஏற்படும் அழிவை தடுப்பது உங்கள் கையிலே ஈசனே.





 முழு மனதோடு பின் ஆழ்ந்து பின் அறிந்தும் கூட உன்னையே நினைத்திட அருள் கொடுப்பாயே.

 மனிதனுக்கு அருள் கொடுப்பாயே.



விளக்கம். 


உங்கள் மீது முழுமையாக பக்தி கொண்டு உங்களையே நினைத்துக் கொண்டு இருக்கும் வரம் மனிதர்களுக்கு தர வேண்டும் ஈசனே.








 எதை என்றும் பின் உணராத மனிதனுக்கு உண்மைப் பொருளைப் பின் உணர்த்துவதற்கு அருள் கொடுப்பாயே.



விளக்கம். 


எதையும் புரிந்து கொள்ளாத மனிதர்களுக்கு உண்மை பொருளை புரிந்து கொள்ள அருள் தாருங்கள்.





 அருள் ஈந்து பின் அன்னையின் மடியில் பின் கருத்துடன் அருள் கூர்வாயே. 


விளக்கம்


அன்னையோடு உமா மகேஸ்வரனாய் திருக்கோலத்தில் அருள் பாலிக்கும் ஈசனே... அனைவரையும் கூர்ந்து கவனித்து அருள் தருவாய். 





கூர்ந்து பின் அறிந்தும் எதை என்றும் உண்மைதனைப் பின் அறிந்தும் எதை என்று புரிய!!!!



 உம் அருளாலே உண்மை தெரிவிக்க!!!...

 மனிதனுக்கு ஆரோக்கியங்கள்!!!


 வரும் காலங்கள் நோயோடு வந்து என்று தணித்திட!!!



விளக்கம். 


ஈசனுடைய அருளால் உண்மை மனிதர்களுக்கு தெரிந்து விட்டால் மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ்வார்கள் ஏனென்றால் வரும் காலத்தில் நோயோடு தான் வாழ வேண்டும் என்று கலியுகத்தில் விதி இருக்கின்றது. 


ஈசனுடைய அருளால் உண்மை பொருளை அறிந்து கொண்டால் நோய்கள் மனிதர்களுக்கு வராது வளராது.






 அனைத்தும் உன் பின் அறிந்தும் கூட அனைத்தும் பின் சொந்தங்கள்!!! அனைத்தும் பின் உயிரினங்கள் அனைத்தும் உன்னுடையதே!!!




விளக்கம். 


இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து ஜீவராசிகளும் உங்களுக்கு சொந்தம் நீங்கள்தான் அனைத்து உயிர்களுக்கும் தந்தையானவர்.





 சொந்த பந்தங்கள் மனிதனுக்குப் பின் எப்பொழுது? ஏது? என்று அறிய பின் உருவாக்கினானே.


உருவாக்கியதை எதை என்று நினைத்துப் பின் அதனின்றும் சந்தோஷப்பட்டானே மனிதன். 



அனைத்தும் என்றும் பொய் என்றும்!!!


 உண்மைதனைப் பின் நீதான் சொந்தம் என்று மனதில் பின் அன்போடு காட்ட ஓடோடி ஓடி வா!!!! காளையின் மீது ஓடோடி.  வா!!!!


 அருள் கூர்ந்தும் இறைவா !!!





விளக்கம். 


மனிதர்கள் எப்பொழுது தமக்காக சொந்த பந்தங்களை உருவாக்கினானோ!?.. அதன் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும் என்று நினைத்தான் ஆனால் அதன் மூலம் தான் அவனுக்கு துன்பம் ஏற்படுகின்றது என்பது அவனுக்கு தெரிவதில்லை. 



மனிதர்கள் ஏற்படுத்திய சொந்த பந்தங்கள் அனைத்தும் பொய். 


உண்மை பொருள் இறைவன் மட்டுமே இறைவன் மட்டுமே சொந்தம்...


மனித ஆத்மாக்களுக்கு இறைவனே சொந்தம்... என்ற உண்மையை அன்போடு மனிதர்களுக்கு காட்டுவதற்கு நன்றி வாகனத்தில் வாருங்கள் இறைவா. 


அருள் தாருங்கள் இறைவா.





மனதினின்று  மூலனே!!! உன் துதி பாடுகின்றேனே. அனுதினமும் உம்மையே துதி பாடுகின்றோமே. சித்தர்கள் அனைவரும் உம்மையே துதி பாடுகின்றோமே.




விளக்கம் 


என் மனதில் இருந்து திருமூலன் நான் உங்களை துதிக்கின்றேன்.. தினமும் சித்தர்கள் உங்களை துதிக்கின்றோம்.





 ஏன்? எதற்காக? எம் என்று எதை என்று கூட உம்மைப் பின் அருளாற்றல் பின் ஏற்றி ஏற்றி பின் அங்கும் இங்கும் அலைந்து இந்த கஷ்டங்களோடு உன்னைத் பின் பின் ஒரு திருத்தலங்கள் பின் திருத்தலங்களை உருவாக்கினார்களே.



விளக்கம். 


சித்தர்கள் எங்களுக்கு உங்களுடைய அருள் ஆற்றல்கள் கிடைத்து அந்த அருள் ஆற்றல்களை மனிதர்களுக்கு கிடைப்பதற்கு.. இந்த பூலோகத்தில் எல்லா இடங்களுக்கும் அலைந்து திரிந்து சென்று எங்கெங்கு சக்திகளை பகிரச் செய்ய முடியும் மனிதர்களுக்கு எங்கெங்கெல்லாம் சென்றால் அருள் கிடைக்கும் இறைவனின் ஆற்றல் எங்கெல்லாம் விடுகின்றது அதை எப்படி தக்க வைத்துக் கொள்ள வேண்டும் அதை எப்படி மனிதர்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்பதை எல்லாம் நாங்கள் கஷ்டப்பட்டு ஒவ்வொரு புனிதமான இடங்கள் இறைவனுடைய ஆற்றல்கள் தேக்கி வைக்கும் இடங்களாக பார்த்து பார்த்து ஆலயங்களை உருவாக்கினோம்.







 உருவாக்கி மனிதனுக்கு நல் போதி!!! போதித்து!!!

( நல் போதி !!. நல் உபதேசங்கள்)


 நல் எண்ணங்களை வளரச் செய்ய பாடுபட்டனரே.


 அப் பாடுபட்டதெல்லாம் அழியும் வண்ணம் வருகின்றதே!!!


 அதை நீயும் காப்பாயே. 



விளக்கம். 


பல திருத்தலங்களை சக்தி வாய்ந்த திருத்தலங்களை எல்லாம் உருவாக்கி மனிதர்களுக்கு நல் அருள்கள் உபதேசம் செய்வதற்கு பாடுபட்டோம்.



ஆனால் இப்பொழுது நாங்கள் கஷ்டப்பட்டதெல்லாம் அழிந்து கொண்டிருக்கின்றது. 


நாங்கள் உருவாக்கிய திருத்தலங்கள் எல்லாம் அழிந்து கொண்டிருக்கின்றது. 


அதை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்.





பின் எவையென்றும் அறிய நின் பின் உன்னையே நினைத்துக் கொண்டு!! உன்னையே நினைத்துக் கொண்டு!! 

எதை என்று ஞானிகள் பலவற்றை செய்தனரே. 



அதுவும் கூட அழிதல் அழிவு என்றே வருகின்றதே!!!!!


 அதையும் தடுத்திட நீதான்!!! அறிந்தும் கூட  பின் எவையென்றும் அன்னையும் தந்தையும் கூட!!!!



விளக்கம். 


உங்கள் மீது பக்தி கொண்டு உங்கள் மீது அன்பு கொண்டு உங்களுடைய அருளைப் பெற்றுக் கொண்டு ஞானியர்கள் ஒவ்வொரு இடங்களிலும் புனித ஸ்தலங்களை உருவாக்கினார்கள்... அந்த ஸ்தலங்கள் எல்லாம் தற்பொழுது அழிந்து கொண்டிருக்கின்றது..


அழிவிலிருந்து தடுப்பதற்கு அன்னையும் தந்தையும் அம்மையப்பனாக வாருங்கள்.





 எவையென்றும் அறியாத வகையிலும் கூட மனிதனுக்கு புத்திகள் பின் மாறுமே!!! மாறுமே.!!



 அதனையும் நீயும் கூட பொறுத்தருள் ஈந்து!!!.....

 அறிந்தும் கூட அனைத்தையும் கூட பொறுத்தருள் ஈந்து புத்திகள் மனிதனுக்கு ஈவாயே. 

சிவபுரனே!!!



விளக்கம் 


மனிதர்களுடைய மனம் ஒரு குரங்கு போல அடிக்கடி புத்திகள் மாறிக்கொண்டே இருக்கும் எண்ணங்கள் மாறிக்கொண்டே இருக்கும். 


அதையெல்லாம் மன்னித்து பொறுத்து மனிதர்களுக்கு புத்தியை தாருங்கள் சிவப்புரனே.




 என் மனதில் இருக்கும் அன்பானவனே!!!

 அறிந்தும் கூட எவையென்று புரிய என் மனதில் பின் வாழ்பவனே!! வாழ்பவனே!!!


 ஒப்பில்லாததை அனைத்தும் அளிப்பவனே!!!


 அனைத்திற்கும் பின் உயிராக இருப்பவனே!!!


 அனைத்திலும் இருப்பவனே!!!


 எங்கு? எதில் ? பின் எத்தொழிலும் எதை என்றும் அறிய பின் எங்கு உன்னைப் பின் நினைத்தாலும் வருபவனே!!!




விளக்கம். 


என் மனதிலும் சித்தர்கள் மனதிலும் வாழ்பவரே... யாராலும் ஈடு செய்ய முடியாத யாராலும் கொடுக்க முடியாத அருளையும் ஆசிகளையும் தருபவரே. 


எல்லாமாக இருப்பவரே.. ஏகனாக இருப்பவரே அனேகனாக இருப்பவரே 


சர்வமும் நீயே சகலத்திலும் நீயே அனைத்து பொருள்கள் அனைத்து ஜீவராசிகளிலும் உயிராய் இருப்பவரே. 



யார் யார் எங்கெங்கு என்னென்ன செய்து கொண்டு இருந்தாலும் உங்களை நினைத்தாலே கருணை உள்ளம் கொண்டு உடனடியாக பிரசன்னமாகி அருள் பாலிப்பவரே தாயுமான சுவாமியாய்... வருபவரே.





 அதை மனிதனுக்கு இன்னும் கூட கலியுகத்தில் தெரிவிப்பாயே!!! தெரிவிப்பாயே!!!!



விளக்கம் 

தோன்றா துணையனாய் எப்பொழுதும் துணை வரும்.. உங்கள் மகிமை மனிதர்களுக்கு தெரியவில்லை இந்த கலியுகத்தில். 


உங்கள் கருணையை மனிதர்களுக்கு காட்டு... நினைத்த போதெல்லாம் வந்தருளும் உங்கள் கருணையை மனிதர்களுக்கு தெரிவிக்க வேண்டும் ஈசனே.



 தெரிவிப்பதற்கும் அறிந்தும் கூட

 எங்களை நீங்கள் தானே அனுப்பினீர்களே.!!!



 கலியுகத்தில் மறைந்திருந்து மனிதன் என்ன? என்ன? செய்யப் போகின்றான்????? என்பதைப் பின் (பார்த்து) சொல்லுங்கள்.... என்று எதை என்று கூற அங்கங்கு என்று எதை என்று அறிந்து அனுப்பினீர்களே.


 உலகத்திற்கு அனுப்பினீர்களே !!!




விளக்கம். 


உங்கள் கருணையை உங்கள் மகிமையை மனிதர்களுக்கு தெரிவிப்பதற்கு இறைவன் தான் உண்மை இறைவன் தான் நிரந்தரம் என்ற உண்மையை மனிதர்களுக்கு தெளிவுபடுத்த எங்களை அனுப்பினீர்கள். 



கலியுகத்தில் மனிதர்கள் எவ்வாறெல்லாம் வாழப் போகிறார்கள் என்பதை கவனியுங்கள் என்று கட்டளையிட்டீர்கள்.





அறிந்தும் கூட மனிதன் எதை எதையோ பின்பற்றி திருந்தவில்லையே திருந்தவில்லையே.!!!



 கோபத்தில் ஆளாக்கினானே உங்களை!!!


 எதை என்று புரிய உனை தனைப் பின் அறிந்தும் எதை என்றும் தந்தையே!!!!! பின் கோபத்தில் உங்களை ஆளாக்கினார்களே. மனிதர்கள் ஆளாக்கினார்களே!!!!



விளக்கம் 

கலியுகத்தில் மனிதர்கள் தர்மத்தோடு வாழவில்லை.. சகஜீவராசிகளை உயிர்களைக் கொன்று தின்று அநியாயங்கள் அக்கிரமங்கள் செய்து வாழ்கின்றார்கள் இதனால் உங்களுக்கு கோபம் வந்தது. 


உங்களை கோபத்திற்கு ஆளாக்கியவர்கள் மனிதர்களே.




 கோபத்தைப் பின் எறிந்து!!!!..... பின் அனைத்திற்கும் நல்குவாய்.


 அனைவரையும் சமநிலைப்படுத்துவாய். 


அனைத்தும் ஒன்றே!!! என்று பின் நிச்சயம் தன்னில் பின் உருவாக்குவாய்.!! உருவாக்குவாய்!!

 சிவபுரனனே!!!. 





விளக்கம் 


நீங்கள் கோபப்பட்டாலும் அனைவரும் உங்கள் பிள்ளைகளே நீங்கள் தான் தந்தை 


உங்களுடைய கோபத்தை தணித்து சாந்தமாய் உங்கள் குழந்தைகளுக்கு அருள் அனைத்தும் தாருங்கள் .


மனிதர்களிடையே இருக்கும் ஏற்ற தாழ்வினை மாற்றி அனைவரும் சமம் என்பதை அருள் செய். 


அனைத்தும் ஒன்று சகல ஜீவராசிகளும் ஒன்று என்பதனை அனைவருக்கும் மனதில் புரிய வைத்து பிறர் நலம் பேண வேண்டும்.. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் பாட்டின்படி அனைவரும் வாழ்வதற்கு அருள் செய் சிவபுரணனே.




 பல பல ஞானியர்கள் அறிந்து உமையும் இன்று உம்மை எதை என்று கூற.....


இக் கடலடியில்


(திருக்கோணமலை கடலுக்கு அடியில்)


 பல ஞானிகள் பின் எவையென்றும் அறிந்தும் கூட கலியுகத்தை காக்க ஓடோடி வா !!!!!  ஈசனே!!!! என்று தவம் புரிகின்றனர். 



அருளும் !!! எதை என்றும் அருளிடும் பின் இறைவா!!!! இறைவா !!!!அருளும் இறைவா.!!!


விளக்கம் 


திருகோணமலை கடலில் அடியில் பல ஞானிகள் இந்த உலகத்தை கலியுகத்தில் அழிவிலிருந்து காப்பாற்றுவதற்கு எங்கள் வரவேண்டும் அருள் தர வேண்டும் அருள் தர வேண்டும் சிவனே என்று கடலுக்குள்ளே தவத்தில் நித்திய தவத்தில் இருக்கின்றார்கள்.

அருள் தாருங்கள் இறைவா. வரம் தாருங்கள் இறைவா.




 எப்பொழுதும் மனிதனுக்கு எவையென்றும் தெரியாது!!! எவையென்று சிறு குழந்தை போல் இருந்து பின் தவறு செய்கின்றானே.



 அதைப் பின் திருத்திட வா.  !! வா !!  வா !! வா!! அருள் கூர்ந்து!!!  ஈவாய் ஈவாய் காளையின் மேல் ஏறி அமர்ந்து ஏறி எதை என்று புரிய அன்னையும் தந்தையுமாக வா !!வா!!. 



விளக்கம் 

மனிதர்கள் சிறு குழந்தைகள் போல் எதுவும் தெரியாமல் தவறுகள் செய்து விடுகின்றார்கள். 


மனிதர்கள் தவறுகள் செய்யாமல் இருக்க அவர்களை திருத்துவதற்கு வாருங்கள் அம்மையப்பனாக நந்தி வாகனத்தில் வாருங்கள்.




எதை என்றும் புரிந்த நிலைக்கு ஏது என்று அறியாத பின் வண்ணம் என் உள்ளம் புகுந்தாயே!!! என் உள்ளம் புகுந்தாயே!!!!



விளக்கம். 


உங்கள் அருள் என்ன உங்கள் கருணை என்ன என்பதை திருமூலன் நான் புரிந்து கொண்டேன் உங்களை அறிந்து கொண்டேன் இதனால் என் உள்ளத்தில் வந்து குடி கொண்டாய் இறைவா.


உங்களை முழுமையாக புரிந்து கொண்டதால் என் உள்ளத்தில் நீங்கள் அமர்ந்து கொண்டு ஆட்சி புரிகின்றீர்கள்.





சித்தர்கள் பின் உமக்கு எது என்றும் அறிய ஏது என்று  கூட அறிய நீ பின் பின் முடிவெடுப்பது எவையென்று அறிந்து!!!!


 அவ் முடிவிற்கு தக்கவாறு யாங்கள் தம் நிச்சயம் தன்னில் மனிதனை திருத்திடுவோமே திருத்திடுவோமே.



 நல்முடிவு பின் எடுத்து எடுத்து கலியுகத்தில் இப்படித்தான் வாழ வேண்டும் என்று எங்களுக்கு அருள் கூர்ந்து கூர்ந்து!!! எங்களுக்கு அருள் கூர்ந்து !கூர்ந்து!


 அறிந்தும் உனதுள்ளம் எதை என்றும் புரிய பின் எமது உள்ளங்கள் நீ என்று அருளுவாயே.




விளக்கம் 


ஈசனாரே நீங்கள் என்ன முடிவு எடுத்துள்ளீர்கள்? என்ன முடிவு எடுப்பீர்கள்?... என்பதெல்லாம் சித்தர்கள் எங்களுக்கு நாங்கள் அறிவோம்.. உங்கள் முடிவின்படி உங்களுடைய கட்டளைப்படி... நிச்சயம் நாங்கள்.. எங்கள் சேவையை தொடர்வோம் மனிதர்களை திருத்திடுவோம்.



நீங்கள் நல்ல முடிவாக எடுக்க வேண்டும் சிவனே... கலியுகத்தில் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற விதியை எங்களுக்கும் வகுத்து தந்துள்ளீர்கள் மனிதர்களுக்கு எப்படி வாழ வேண்டும் என்பதை காட்டுவதற்கு!! மனிதர்களுக்கு அதையெல்லாம் வாக்குகளில் எப்படி வாழ வேண்டும் என்பதை எடுத்துக் கூறி மனிதர்களை திருத்துவோம். 



சித்தர்கள் எங்களுக்கு நீங்கள் அருள் கூர்ந்து அருள் தந்து.. உங்கள் உள்ளம் என்ன என்பது எங்களுக்கு தெரியும் எங்களது உள்ளம் என்ன என்பது உங்களுக்கும் தெரியும்.. உங்கள் எண்ணமே எங்கள் எண்ணம் அந்த எண்ணத்தின் படி வழிநடத்த அருள் செய்வாய்.




 எங்கள் உள்ளங்கள் எல்லாம் நீயே!!! இருந்திருப்பாயே எப்பொழுதும் இருந்திருப்பாயே. !!!


வழிகள் பின் நடத்திடுமே!!!



விளக்கம். 


சித்தர்கள் எங்கள் உள்ளத்தில் நிரந்தரமாய் குடி கொண்டிருக்கும் இறைவா.. நீங்கள் அனைவரையும் வழி நடத்துங்கள்.






 நடத்திட!! எதை என்றும் புரிந்தும் அறிந்தும் கூட!!!..... எங்கெங்கும் ஞான தீட்சங்கள் உருவாகின்றதே!!!!!



விளக்கம். 


இறைவா நீங்கள் வழி நடத்துங்கள்.. நீங்கள் வழி நடத்திட நடத்திட இந்த உலகத்தில் ஞான தீட்சங்கள் உருவாகும்.. ஞானங்கள் அனைவருக்கும் கிடைக்கும்.



 உருவாகி!!.. எதை என்றும் புரியாத நிலையில் பின் மனிதன் எதை என்றும் உணராத தன்மையாக இருந்தாலும்!!.....


 அதை நீ பின் உணர்த்துவதற்கு எதை என்றும் புரியாத அமுதத்தை வழங்கு இறைவா.!!


 உன் அமுதத்தை வழங்கு பின் இறைவா.!!!



விளக்கம். 


ஞான தீட்சங்கள் உருவாக... உருவாக மனிதர்கள் எதை என்று புரியாத நிலையில் இருந்தாலும்... உங்களுடைய ஞானங்களை ஞான தீட்சங்களை மனிதர்கள் புரிந்து கொள்வதற்கு... உங்களுடைய அமுதமான அருளை ஆசிகளை அருள் அமிர்தம் சிவ அமிர்தத்தை அனைவருக்கும் தாருங்கள்.







 மனிதனுக்கு செம்மையான அறிவையும் புத்தியும் கொடுத்தும் எதை என்றும் நிற்காத அருளிக்கும் எதை என்று புரியாத வகை நின்றாலும் !!....



விளக்கம். 


மனிதர்களை படைக்கும் பொழுதே புத்தியை கொடுத்து அறிவை கொடுத்து அனுப்பினாலும் அருள் ஆசிகள் கொடுத்து அனுப்பினாலும்.. அதை மறந்து மனிதர்கள் புரியாமல் வாழ்ந்து வருகின்றார்கள்.





அருள் ஈந்து பின் உமை பின் எதை என்று புரிய உமை என்று அறிய பின் எப்பொழுதும் எதை என்று அனைத்திற்கும் நீயாக காரணத்தை!!!


 ஏது என்று அனைத்திலும் பின் நீயே!! என்று பின் உரைத்திட எதை என்று எங்களுக்கும் பின் பரிசுத்தமான உன் ஆற்றலை  எப்பொழுதுமே தந்திருக்கின்றாயே!!

 தந்து தந்து இருக்கின்றாயே.





விளக்கம். 


மனிதர்களுக்கு அருளும் அறிவையும் நீங்கள் படைக்கும் பொழுதே தந்தாலும்... மனிதர்களுக்கு தெரியவில்லை எதுவும். 


அனைத்திற்கும் காரண கர்த்தா நீங்கள் தான் என்பது மனிதர்களுக்கு தெரியவில்லை சர்வமும் நீயே சகலமும் நீயே என்பது அறிந்திருக்கவில்லை மனிதர்கள்.



இறைவா உங்கள் அருளாலே இந்த உலகம் இயங்குகின்றது .




அனைத்திலும் நீங்கள் தான் இருக்கின்றீர்கள்.. உங்களுடைய பரிபூரண ஆற்றல் சக்தியை எங்களுக்கும் தந்து இருக்கின்றீர்கள் அதாவது சித்தர்கள் எங்களுக்கும் இந்த உலகத்தை வழிநடத்தும் சக்திகளை தந்திருக்கிறீர்கள்.




 அதையும் கூட பின் எங்களை நீயும் இப்பொழுது கலியுகத்தில் அப்படியே பின் நில்லும்!! என்று சொல்லிவிட்டாயே.


விளக்கம்.

நீங்கள் இந்த உலகத்தை வழிநடத்த எங்களுக்கு தந்த ஆற்றலை சக்திகளை மனிதர்களுக்கு தந்து மாற்றுவதற்கு நாங்கள் தயாரான பொழுது கலியுகத்தில்


ஆற்றல்களை மனிதர்களுக்கு தர வேண்டாம்!! என்று எங்களை நிறுத்தி விட்டீர்கள்)






 யாங்கள் என்ன செய்வோமே!????????


 உம்மை தானே நினைத்து நினைத்து உருகின்றோமே!!!!



விளக்கம். 


நீங்கள் மனிதர்களுக்கு தர வேண்டாம் என்று நிறுத்தி விட்டீர்கள் இனி நாங்கள் என்ன செய்வோம்??.. உங்களையே நினைத்து உருகிக் கொண்டிருக்கின்றோம் மனதை மாற்றி அருள் தாருங்கள் என்று வேண்டிக் கொண்டு இருக்கின்றோம்.




 ஆற்றலை எதை என்று கொடுத்த பின் அவை பின் செலவு செய்யாமல் அப்படியே காத்திருங்கள்!! என்று!!


விளக்கம் 


இறைவன் மனிதர்களுக்கு வழிநடத்த கொடுத்த ஆற்றலை அப்படியே நிறுத்தி வையுங்கள் என்று சொல்லிவிட்டீர்கள் நீங்கள்.






காத்திருங்கள்!! என்பதற்காகவா!?!?!?!?!? உன்னை யாங்கள் பின் துதித்து பாடினோமே.



விளக்கம். 


அனைத்து சக்திகளையும் கொடுத்து உலகத்தை வழிநடத்தும் பரிபூரண ஆற்றலையும் தந்து கடைசி நேரத்தில் நீங்கள் இப்படி எங்களை நிறுத்தி விட்டீர்கள்... இதற்காகவா இறைவா உங்களை வேண்டி கெஞ்சி பிரார்த்தனை செய்து துதி பாடி வணங்கிக் கொண்டிருக்கின்றோம்????




 நிச்சயம் அவ்வாற்றலை கலியுகத்தில் பின் பயன்படுத்தவில்லை என்றால் அனைத்தும் அழித்திடுமே.


 அனைத்தும் பின் மனிதன் அழித்திடுவானே.




விளக்கம். 


நீங்கள் தந்த பரிசுத்தமான ஆற்றலை இந்த உலகத்திற்கு பயன்படுத்துவதற்கு மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்கு உபயோகப்படுத்தாவிட்டால் கலியுகத்தில் அனைத்தும் அழிந்துவிடும்..


அநியாயம் அக்கிரமங்கள் பெருகி மனிதர்கள் அனைத்தையும் அழித்து விடுவார்கள்...


மனிதர்கள் செய்யும் தவறினால் சகல ஜீவராசிகளும் அழிந்துவிடும்.






 அறிந்தும் கூட எவை செய்ய வேண்டும்??


 நிச்சயம் தன் ஓடோடி உம்மிடத்தில் வந்தோமே. 


வந்தோமே சித்தர்கள் யாங்கள் தான்!!!




விளக்கம். 


இதற்கு என்ன தீர்வு?? இதற்கு என்ன வழி?? இனி என்ன செய்ய வேண்டும்??.. என்பதற்காக சித்தர்கள் உங்களிடத்தில் சரணடைந்திருக்கின்றோம் உங்களிடத்தில் வந்திருக்கின்றோம். 









 நிச்சயம் தன்னில் எவை? எவை? செய்ய எவை ?எவை? என்று அறிய!!!


 உனதன்று எதை என்று புரிய எங்களுக்கு அருள் கூர்ந்து இதைச் செய்ய?? அதைச் செய்ய!!! என்று நிச்சயம் தன்னில் உள்புகுந்து பின் எதை என்று கூற!!


 என்றுமாறு கட்டளை இடு!! இடு !! தந்தையே!!!!


. கட்டளை இடு!! இடு!! தந்தையே.!!



விளக்கம். 


எல்லோரும் இனி என்ன செய்ய வேண்டும்? எப்படி வாழ வேண்டும்?... எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும்... என்பதை எங்களுக்கு கட்டளை இடு இறைவா 


உங்கள் அருள் வேண்டும் இறைவா...


என்ன செய்ய வேண்டும் என்பதை எங்களுக்குள் புகுத்து எங்கள் தந்தையே எங்களுக்கு கட்டளை தாருங்கள் தந்தையே. 











 இதனையும் தன் மக்களுக்கு ஏது என்று அறிய கலியுகத்தில் இன்னும் தானே பின் அழிகின்ற நிலைக்கு!!! அழிகின்ற நிலைக்கு!!



விளக்கம். 


இறைவா எல்லாம் உங்கள் மக்கள் உங்கள் குழந்தைகள் கலியுகத்தில் நீங்கள் இப்படி கட்டளை இடாமல் அனுமதி தராமல் இருந்தால் இன்னும் மனிதர்கள் அழிந்து விடுவார்கள்.. அழிந்து கொண்டே இருக்கின்றார்கள்.


கட்டளை இடங்கள் தந்தையே அனுமதி தாருங்கள் தந்தையே.




 ஆனாலும் உன் பக்தர்கள் என்றால் ஞானிகள் இருக்கின்றார்களே!!!



. அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் !!!


ஒரு சந்தர்ப்பத்தை கொடு பின் சிவபுரனனே. சிவபுரனனே!!!



விளக்கம்.


இறைவா 


சித்தர்களும் உண்மையான ஞானிகளும் மகன்களும் உங்கள் மீது பக்தி காட்டும் நல் ஆத்மாக்களும் இருக்கின்றார்கள்.. அவர்கள் மனிதர்களை திருத்துவதற்கு பார்த்துக் கொள்வார்கள். 


ஒரே ஒரு வாய்ப்பை கொடு சிவபுராணனே.. இந்த உலகம் திருந்தி மீண்டும் நல்வாழ்க்கை வாழ ஒரு சந்தர்ப்பத்தை தாருங்கள்.




 நால்வர்களும்!!


 (சமய குரவர்கள் நான்கு பேர் அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் ஞானசம்பந்தர் திருகோணமலை யில்)



உன்னை இங்கு போற்றிப்!! போற்றி!!


 இத்தவத்தின் வலிமையால் என்னென்ன? தேசத்தை காக்க நால்வர்களும் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்களே. 






அறிந்தும் கூட அவர்களுக்கும் ஞானம் இன்னும் கொடுத்து மக்களைப் பின் தன் திசையில் பின் திருப்பிட அருள் கூர்ந்து இன்னும் இன்னும் ஆற்றலை பெருக்கி பெருக்கி அறிந்தும் கூட எதை என்று புரியும் வண்ணம் அனைத்தும் பின் அளித்திடு!!!! சிவபுரனனே!!!.



விளக்கம் 


நாயன்மார்களும் அனுதினமும் திருகோணமலையில் வந்து உங்களை வணங்கி துதி பாடிக் கொண்டிருக்கின்றார்கள் உங்களுடைய ஞானத்தையும் அருளாசிகளையும் அனைவருக்கும் மனிதர்கள் அனைவருக்கும் மனதில் மாறுதல்களை ஏற்படுத்தி அருள் ஆசிகள் ஞானத்தை தந்து இந்த தேசத்தை காப்பாற்றுங்கள்)





 சிவபுரனனே!!!!

எதை என்றும் புரியாமல் நாளும் அனைத்தும் கூட அனைத்தும் கூட உமையே (உமையவள்) நீ அறிந்தும் கூட எதை என்று கூட அனைத்துமே உமக்கு தெரிந்திருக்குமே.



விளக்கம்.


தேவியே உமையவளே.. உங்களுக்கு அனைத்தும் தெரியும்...


அனைத்தும் தெரிந்து கொண்டு ஈசனார் எங்களை அமைதியாக இருங்கள் என்று சொல்லிவிட்டார். 


ஒவ்வொரு நாளும் என்னென்ன நடக்கின்றது என்பது உங்களுக்கும் தெரியும் தேவியே. 


இதனால் தந்தையான ஈசனிடம் எடுத்துச் சொல்லுங்கள் இந்த உலகத்தை காப்பாற்ற வேண்டும் 

மனிதர்களை காப்பாற்ற வேண்டும் 


மனிதர்களின் கர்மா வினைகளை அகற்ற வேண்டும்.






 எங்களைப் பின் அப்படியே அமைதியாக இரு என்று சொல்லிவிட்டாயே.



 தாயே!! நீயே எடுத்துக் கூறு. 


தாயே நீ ஈசனிடம் எடுத்துக் கூறு. 


தாயே நீயே!! தந்தையிடம் எடுத்துக் கூறு.!!


எடுத்துக் கூறி அனைத்து வினைகளையும் களை!!!! (களையச்செய்)


 மனிதனின் அனைத்து வினைகளையும் களை!!!!!



 கலியுகத்தில் பின் வினைகளை சேர்த்துக் கொண்டிருக்கின்றானே. மனிதன் சேர்த்துக் கொண்டிருக்கின்றானே. !!!



அவையும் எதை என்றும் புரிய எதை என்றும் அறிய இவை என்று புரிய பின் அவை என்றும் அழிக்கப் பின் எதை என்று அறிய!!!


 பாவத்தை நிச்சயம் அழித்திடு!!!! பின் தந்தையே!!!


 தானாக உணர்ந்து பின் கொள்வானே. மனிதன் தன்னையே பற்றி சிந்திப்பானே.



விளக்கம் 


கலியுகத்தில் மனிதர்கள் அதிக பாவங்கள் அதிக வினைகளை சேர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்...


அதையெல்லாம் தந்தையே ஈசனே அழித்து விடுங்கள். 

மனிதர்களுடைய கர்மா மற்றும் பாவங்கள் வினைகள் முழுமையாக அழிந்தால் தான்...


தான் யார்??? என்பதை மனிதர்கள் உணர்ந்து கொள்ள முடியும்... தான் யார்?? எதற்காக இந்த பிறவி இந்த ஆத்மா என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி யோசிக்க முடியும்.





 அறிந்தும் கூட அறிந்தும் கூட இத் (திரு) கோண மலையில் தன்னில் கூட பின் அனுதினமும் அதிகாலையில் வந்து பல ஞானிகள் உன்னைப் போற்றி துதிக்கின்றனர்.


 மலையில் தன்னைப் பின் இராவணனும் பின் ராமனும் பின் சீதையும் கூட அனுதினமும் பல பல வழியில்!!!கூட அவர்களுடைய சீடர்களும் இங்கு வந்து உன்னைத் தொழுகின்றார்களே!!!.


இத்  தேசத்தை (இலங்கையை) நலமாக காக்கப் பின் தொழுகின்றார்களே செய்கின்றார்களே.


 எதை எதை என்று அறிய மக்களுக்கு இன்னும் தன்னில் கூட உன் லீலையை பின் அறிந்தும் கூட என்று புரியப் பின் அருள் ஈந்து கூர்ந்து கவனித்து பார்த்தால் எங்களுக்கும் பின் எதை என்று அறிய கட்டளை இடு.

 பின் தந்தையே!!

 தாயே!!! நீயும் எடுத்துக் கூறும்.!!

 தாயே நீயே எடுத்துக் கூறும்.!!

அனைத்தும் பின் உந்தனுக்கே சொந்தம். தந்தையே!!! அனைத்துமே உந்தனுக்கே சொந்தம்!!. 

அதை அறியாத மூடர் எதை என்றும் அறியா கர்மத்தில் சேர்கின்றானே.

முதலில் பின் அனைத்திற்கும் நீயே!! என்று !! நீயே என்று!! காட்டு. 

உலகத்திற்கு நீயே!!! என்று காட்டு!!!.

ஆசிகள்!! ஆசிகள்!!!.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment