அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 19.04.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 9
நாள் :- 19/04/2026 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் :- காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம் : உலக நன்மைக்காக 09 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.
===========================
# அன்புடன் தேரையர் சித்தர் வாக்கு - முந்தைய பகுதியின் தொடர்ச்சி
===========================
( இந்த பகுதி வாக்கு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. பொறுமையாக படித்து , நன்கு புரிந்து கொண்டால் , நமது பிறவியை கடக்கும் சூட்சும ரகசியங்கள் நன்கு புரியும். அவ்வப்போது இங்கு கொடுக்கப்பட்டுள்ள நேரலையையும் பார்த்து இந்த 9 பகுதி வாக்கினை உள் வாங்க மிக நலம். வாருங்கள் வாக்கின் உள் செல்வோம். )
===========================
# அருணகிரிநாத பெருமான் அங்கு உணவு அருந்திக்கொண்டிருக்கும் தருணத்தில்……
===========================
தேரையர் சித்தர் :- எதை என்று புரிய மறைமுகமாக அருணகிரி. இதனால் பின் பாடலை பாடுக, முத்தைத்தரு.
சுவடி ஓதும் மைந்தன்:- மறைமுகமா அருணகிரிநாதர் வந்து சாப்பிடுறார். அதனால முத்தைத்தரு அந்த பாடல் சொல்றார்.
அடியவர் :- அருணகிரிநாதர் வந்திருக்காங்களாம். மறைமுகமா சாப்பிட்டுட்டு இருக்காங்க. எல்லாரும் அருணகிரிநாதர் பாடலை சேர்ந்து பாடுங்க. அருணகிரிநாதர் வந்திருக்காங்க. சாப்பிட்டுட்டு இருக்காங்க. எல்லாரும் இந்த பாடலை பாடுங்க. மறைமுகமா வந்திருக்காங்களாம்.
பாடகர் :-
( முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்……….. என்ற பாடலை பாட ஆரம்பித்தார்கள் )
பாடல் நேரலை :- https://youtu.be/C5OQ5pL4GnY?t=22265
===========================
# பாடல் பாடி முடித்தவுடன் வாக்கு ஆரம்பமானது….
===========================
தேரையர் சித்தர் :- ஓதுக இதனையே.
சுவடி ஓதும் மைந்தன்:- இதையே படிக்க சொல்றாரு.திருப்பி எல்லாரும் இதையே படிங்க ஐயா.
பாடகர் :- ( மீண்டும் முத்தைத்தரு பத்தித் திருநகை பாடலை பாட ஆரம்பித்தார்கள் )
===========================
# பாடல் பாடி முடித்தவுடன் வாக்கு ஆரம்பமானது….
===========================
தேரையர் சித்தர் :- இறைத்தன் உணர, பின் மீண்டும் அவனே இருக்கின்றான். அவன் பிள்ளையோனைப் பற்றி அழகாக பாடுக.
சுவடி ஓதும் மைந்தன்:- அருணகிரிநாதர் பிள்ளை யார்? முருகர் தான் அவர் பிள்ளையா நினைச்சாரு. அதனால அவருடைய பாட்டு பாடவும்.
பாடகர் :- ( அருமையான முருகப்பெருமான் பாடல் பாட ஆரம்பித்தார்கள் )
பாடல் நேரலை :- https://youtu.be/C5OQ5pL4GnY?t=22547
===========================
# பாடல் பாடி முடித்தவுடன் வாக்கு ஆரம்பமானது….
===========================
வாக்கு நேரலை :- https://youtu.be/C5OQ5pL4GnY?t=22793
தேரையர் சித்தர் :- அடுத்து இதையும் சொல்வேன், எழுதிக்கொள்ளுங்கள்
( இப்போது அடியவர்கள் அங்கு “இ” கார வரிசை வார்த்தைகளை அழித்து , அடுத்த பாடத்திற்கு தயார் ஆனார்கள் )
===========================
# கடக ராசி பற்றிய பாடம் ஆரம்பமானது….
===========================
தேரையர் சித்தர் :- அடுத்து நான்கு மிக முக்கிய பங்கு. இவை தன். பின் எழுதுக.
சுவடி ஓதும் மைந்தன்:- ( கடக ராசியில் ) “ஈ” - இது வந்து மிக முக்கியமான இடம். ஈசன், இது மிக முக்கியமான இடம். ஐயா எழுதுங்க ஐயா. ஈல இருக்குது என்னன்னு எழுதுங்க ஐயா.
அடியவர் :- ( மேடையில் இருந்து கிழே இறங்கி , அடியவர்களிடம் சென்று ) சொல்லுங்கம்மா எல்லாம் சொல்லுங்க. ஈ அப்படின்ற வார்த்தை, வார்த்தைகள் என்னென்ன, அந்த எழுத்துல ஆரம்பிக்கக்கூடிய வார்த்தைகள் என்னென்னன்றத எல்லாரும் சொல்லுங்க. ஈ, ஒரு பாப்பா வந்து……
( இங்கு பல உரையாடல்கள் நடந்தன. அவற்றுள் சில வார்த்தைகள் இங்கு கிழே…. )
ஈசன்
ஈட்டி,
ஈகை,
ஈரம்,
ஈதல்,
ஈசானம்,
ஈர்ப்பு.
ஈசானம் சொல்லியாச்சு.
ஈங்கோய் மலை. (அருமையான ஸ்தலம்.)
ஈதல்.
ஈரோடு
ஈவல்
ஈர்ப்பு
ஈடில்லா.
ஈடு
(இது தவிர மேலும் சில வார்த்தைகளை அங்கு எழுதினார்கள். அவற்றை இங்கு இணைத்துள்ள எழுதுபலகை புகைப்படத்தில் காண்க)
சுவடி ஓதும் மைந்தன்:- ஓகே. படிக்கலாங்க ஐயா. படிக்கலாம்.
===========================
# சந்திர தேவன் மகிமைகள்
===========================
தேரையர் சித்தர் :- அறிந்தும் இவை என்று அறிய. எதை என்று அறிய, இவ்வாறாக அறிந்தும், அதாவது மூன்றையும் அனைத்தும் இறைவன் என்று அறிந்தவன், நான்காவதாக சந்திரன் வருகின்றான். அனைத்து திறமைகளும் கொடுத்து விடுவான்.
சுவடி ஓதும் மைந்தன்:- ( மேஷ ராசி “அ” , ரிஷப ராசி “ஆ” , மிதுன ராசி “ இ” ) இந்த மூணுல இறைவன் தான் எல்லாத்தையும் கொடுக்கிறாரு. ஐயா புரியுதுங்களா? எல்லாத்தையும். இந்த மூணும். அ, ஆ, இ…..
அடியவர் 2:- அகம் ஆண்டவன் இறைவன்.
சுவடி ஓதும் மைந்தன்:- அகம் ஆண்டவன் இறைவன். எல்லாத்தையும் இறைவன் தான் கொடுக்கிறார். இதெல்லாம் சொன்னீங்களே. இதெல்லாம் உணர்ந்தவன் கடகம். சந்திரன் என்ன பண்ணுவாராம்? உயர்ந்த பேராற்றல், ஆற்றலை, ஞானத்தை கொடுப்பாராம். ஐயா புரியுதுங்களா? ஐயா வந்து.
===========================
# இறைவனையே காண வைக்கும் சந்திர தேவன்
# அரசாட்சியும் செய்ய வைக்கும் சந்திர தேவன்
===========================
தேரையர் சித்தர் :- அறிந்தும் பின் ஈசனையே காண வைப்பான் சந்திரன்.
சுவடி ஓதும் மைந்தன்:- சந்திரனை யார் காண வைப்பார்? ஈசனையே காண வைப்பார்.
தேரையர் சித்தர் :- அறிந்தும் ஏது என்று அரசாட்சியும் செய்ய வைப்பான் அறிவின் வழியாக.
சுவடி ஓதும் மைந்தன்:- புத்தி நிறைய கொடுத்துருவாரு. இதை நீங்க உணர்ந்துட்டீங்கன்னா அ, அ, ஈ. இதுல இருக்குற மூணை நீங்க உணர்ந்துட்டீங்கன்னா அரசாட்சியும் கொடுப்பாரு. ஐயா புரியுதுங்களா? நீங்க வந்து புத்தி கொடுத்துட்டா என்ன பண்ணலாம்? அரசபதவில யோசிப்பாங்க, வேற லெவல்ல யோசிப்பாங்க இல்ல. அவருக்கு புத்தி தான் தேவை. அப்ப யாரு கொடுக்குறது? சந்திரன் வந்து என்ன பண்ணுவாராம் வந்து?
===========================
# புதன் தேவனுக்கும் பல படி மேலே சந்திர தேவன்
===========================
தேரையர் சித்தர் :- ஏது என்று அறிய இங்கு உணர்ந்தவன் அதாவது புதனே அனைத்தும் கொடுத்து விடுவான். ஆனால் அதற்கு மேலே சந்திரன் மனோகாரகன்.
சுவடி ஓதும் மைந்தன்:- ( மிதுன ராசி ) இங்கேயே ஆல்ரெடி எல்லாமே நீங்க பெற்றுட்டீங்க வந்து. எல்லாத்தையும் இறைவன் தான்டா கொடுக்கிறான்னு உணர்ந்துட்டோம்னா, எல்லாம் செஞ்சோம்னா, இவர் சந்திரன் என்ன பண்ணுவாரு?
அடியவர் :- இணையணும். ஒன்னு ஒன்னும் இணையணும்.
===========================
( இவ் வாக்கு தட்டச்சு செய்யும் வேளையில் , 2ஆம் தேதி ஜூன் மாதம் , 2026ஆம் ஆண்டு, கடக ராசியில், திருகணிதம் முறையில், குரு பகவான், கடக ராசியில் நுழைந்து விட்டார் என்று அடியவர்கள் அறிய தருகின்றோம். )
===========================
===========================
# ஏன் குரு பகவான் , சந்திர தேவன் வீட்டில் , கடக ராசியில் உச்சம் பெறுகின்றார்?
===========================
வாக்கு நேரலை :- https://youtu.be/C5OQ5pL4GnY?t=23126
சுவடி ஓதும் மைந்தன்:- மனோகாரகன். மனது வந்து என்ன பண்ணுவாரு? இதுதான்டா, இப்படித்தான்டா எடுக்கணும். தைரியம் வந்துரும் ஐயா. யாருக்கும் பயப்பட மாட்டார் வந்து. ஐயா புரியுதுங்களா? யாருக்கும் பயப்பட மாட்டார் ஐயா. கடகம் இங்க வந்து சந்திரன் அதான் சொல்றாரு வந்து. இறைவனுக்கு, இறைவனும் காண வைப்பார் வந்து. யாருக்கும் அடிமை இல்லை.
தேரையர் சித்தர் :- ஏது என்று புரிய, அதனாலதானே அங்கே உச்சம் பெறுகின்றான் குருவானவனே.
சுவடி ஓதும் மைந்தன்:- அதனாலதான் இங்க என்ன பண்றாரு?
அடியவர் :- கடகத்துல குரு உச்சம்.
சுவடி ஓதும் மைந்தன்:- கடகத்துல?
அடியவர் :- குரு உச்சம்.
சுவடி ஓதும் மைந்தன்:- குரு உச்சம் பெறுகிறார். அதனாலதான்ப்பா குரு வந்து இங்க உச்சம் பெறுகிறார் வந்து. இதுல எத்தனை எல்லாம் இறைவன் தான்டா செய்றான். துன்பம், இன்பம் எல்லாம், எல்லாமே இறைவன் தான்டா இங்க ஒரே கடவுள் தான் சொல்லிட்டு, வரதுக்கே, இதை உணர்ந்துட்டீங்கன்னா அடுத்து என்ன பண்றாங்க?
அடியவர் :- எல்லாத்தையும் கொடுக்கிறது கடவுள்தான். இருந்தாலும் ஒன்னு ஒன்னையும் உணர்ந்து உணர்ந்து நாலாம் இடத்துக்கு வர்றப்போ ஆட்சி, அதிகாரம்.
சுவடி ஓதும் மைந்தன்:- அதிகாரம் குரு.
அடியவர் :- கொடுப்பாங்க.
சுவடி ஓதும் மைந்தன்:- ஒரு குருவானவருக்கு எவ்வளவு ஆட்சி இருக்கும்? எவ்வளவு அதிகாரம் இருக்கும்?
===========================
# யானை பலம் - குரு பகவான் , சந்திர தேவன் வீட்டில் , கடக ராசியில்
===========================
அடியவர் :- அரசனையே ஆட்சி பண்றவர் தானே குரு.
சுவடி ஓதும் மைந்தன்:- அரசனையே ஆட்சி பண்றவர் தான் குரு. அதனாலதான் இங்க வந்து என்ன ஆகுது வந்து?
அடியவர் :- குரு உச்சமாகிறார்.
சுவடி ஓதும் மைந்தன்:- குரு உச்சமாகிறார்.
தேரையர் சித்தர் :- அறிந்து கூட பின் அதாவது யானை பலம்.
சுவடி ஓதும் மைந்தன்:- இங்க என்ன ஆகுது எல்லாருக்கும்?
அடியவர் :- யானை பலம்.
சுவடி ஓதும் மைந்தன்:- யானைஆகும் வந்து? மெறிச்சிடும் வந்து யானை வந்து. அப்ப என்ன ஆகுது வந்து? யானை பலம் வந்துருது. எல்லாருக்கும் யானை பலம் வருது.
தேரையர் சித்தர் :- இந்த யானை பலம் வந்துவிட்டாலே சூரியனை நெருங்கலாம்.
சுவடி ஓதும் மைந்தன்:- ஒருத்தருக்கு வந்து இந்த யானை பலம் வந்துவிட்டாலே அதுக்கு என்ன பண்ணலாம்?
அடியவர் :- சூரியனை எதிர்க்கலாம்.
சுவடி ஓதும் மைந்தன்:- சூரியனை வந்து?
அடியவர் :- எதிர்க்கலாம்.
சுவடி ஓதும் மைந்தன்:- நெருங்கலாம்.
அடியவர் :- நெருங்கலாம். நெருங்கலாம்.
தேரையர் சித்தர் :- உன்னை நீ யார் என்று அறியலாம்.
சுவடி ஓதும் மைந்தன்:- இதை ( கடக ராசி ) நீங்க இதை முடிச்சிட்டாலே அடுத்த சூரியனை நெருங்கலாம். உன்னை நீ யார் என்று அறியலாம்.
தேரையர் சித்தர் :- அறிந்தும் முன் ஜென்மங்கள் அனைத்தும் தெரியவரும்.
சுவடி ஓதும் மைந்தன்:- நீ முன் ஜென்மத்துல என்ன பண்ண, ஏது பண்ண, நம்ம யார் என்று என்ன வரும்? எல்லாமே தெரியவரும்.
தேரையர் சித்தர் :- இவ் ஜென்மத்திலும் பின் அனைத்தும் அறிந்து கொள்ளும் யோகம் ஏற்படும்.
சுவடி ஓதும் மைந்தன்:- இந்த ஜென்மத்திலயும்.
அடியவர் :- பழைய பிறவிகளை அறிந்து கொள்ளக்கூடிய.
சுவடி ஓதும் மைந்தன்:- அறிந்து கொள்ளக்கூடிய யோகமும் கிட்டும். எதிர்காலத்தை?
அடியவர் :- அறிந்து கொள்ளலாம்.
தேரையர் சித்தர் :- இதனாலே சந்திரனும் சூரியனும் அமாவாசை யோகமே. இருட்டிலே இருக்கின்றான் மனிதன். வெளிவரவில்லையே. இவ்விருட்டிலிருந்து வெளியேறுகின்ற பொழுது மீண்டும் ஆரோக்கியமான அறிந்து கூட மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்கின்றான்.
(நேரலை :- https://youtu.be/C5OQ5pL4GnY?t=23273)
சுவடி ஓதும் மைந்தன்:- அப்ப ஐயா இதுதான் அமாவாசைன்றாரு.
அடியவர் :- இருட்டு , வெளிச்சம்
சுவடி ஓதும் மைந்தன்:- சந்திரனோ சூரியனோ. இது அமாவாசைங்க ஐயா. ஐயா ரெண்டாவது சொன்னாருன்னா கடகம்.
அடியவர் :- அமாவாசை.
சுவடி ஓதும் மைந்தன்:- கடகமும் சந்திரனும் சூரியனும் வந்து. ஐயா அமாவாசை ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்தா என்ன ஆகும்?
அடியவர் :- அமாவாசை.
சுவடி ஓதும் மைந்தன்:- அமாவாசை.
அடியவர் 3 :- மனுஷன் இன்னும் இருட்டிலேயே இருக்கிறான்.
சுவடி ஓதும் மைந்தன்:- ஒன்னும் மனுஷனே இருட்டிலேயே இருக்கிறான் வந்து. இது கடந்தாகணும் ஐயா. இங்க இது வந்து கடந்தாகணும். ஆனால் திரும்பி என்ன ஆகுறான் வந்து?
அடியவர் :- இதெல்லாம் அறியணும். இதெல்லாம் அறியல.
சுவடி ஓதும் மைந்தன்:- அறியல.
அடியவர் :- யானை பலம் பெறுறாங்க. அடுத்து?
அடியவர் 3 :- வெளிச்சத்துக்கு சூரியன் நெருங்குறாங்க.
சுவடி ஓதும் மைந்தன்:- நெருங்குறாங்க. மீண்டும் என்ன பண்றாரு வந்து? இருட்டிலே?
சுவடி ஓதும் மைந்தன்:- முன் ஜென்மம் எல்லாமே தெரியவரும். இருட்டிலேயே வந்து மனுஷன் வந்து.
அடியவர் :- ஆனா உண்மை நிலைமை என்னன்னு கேட்டா நம்ம எல்லாம் இதெல்லாம் எதுவுமே தெரியாம இருட்டுல இருக்கிறோம்ன்றாங்க.
சுவடி ஓதும் மைந்தன்:- கரெக்ட். இதெல்லாம் எதுவுமே தெரியாம கடைசில என்ன ஆகுது ஐயா?
அடியவர் :- இருட்டுல இருக்கிறோம்.
சுவடி ஓதும் மைந்தன்:- எல்லாம் உனக்கு தெரியவரும். ஆனாலும் என்ன பண்றோம் நம்ம வந்து? இருட்டுலவே இருக்கிறோம். ஐயா புரியுதுங்களா? மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை என்ன பண்ணுகிறார் வந்து? இறைவன்?
அடியவர் :- கொடுக்கிறார்.
சுவடி ஓதும் மைந்தன்:- கொடுக்கின்றார்.
( https://youtu.be/C5OQ5pL4GnY?t=23337 )
===========================
# ஆதிகாலையில் ஆதி ஈசன் எழுப்பும் சங்க நாதம்
===========================
தேரையர் சித்தர் :- காதில், எழுந்திரு என்று ஊதுகின்றான் மீண்டும். அதாவது ஏது என்று புரிய சங்கை. அதனால்தான் பின் அதிகாலையிலே ஈசன் அதாவது சங்கை ஊதுவான் அனைவருக்கும் கேட்க. ஆனாலும் காதுகள் இருந்தும் கேட்கவில்லையே ஏன்? மாய மனிதன்.
அடியவர் :- ஆமா.
சுவடி ஓதும் மைந்தன்:- அப்ப திரும்பி என்ன பண்ணாரு? ஊது.
அடியவர் :- ஊ.
சுவடி ஓதும் மைந்தன்:- ஊ. இதுக்கு வந்துட்டார். இதெல்லாம் அறிஞ்சுக்கோடா. இங்க எல்லாம் வந்து திரும்பி நம்ம என்ன பண்ணுவோம் வந்து? அந்த இருட்டுல எல்லாம் அறிஞ்சும் நம்ம இருட்டுல இருக்கிறோம். என்னடா லைஃப் என்னடா இதுன்னு அறிஞ்சோம். ஆனா ஊதுவார். என்ன ஊதுவார்?
அடியவர் :- சங்கை ஊதுவார்.
சுவடி ஓதும் மைந்தன்:- சங்கை ஊதுவார். சங்க சத்தம் வந்து இதெல்லாம் வந்து இதெல்லாம் இந்திச் சனவே. சங்க சத்தம் வந்து ஐயா?
அடியவர் 3 :- கேட்கும்.
சுவடி ஓதும் மைந்தன்:- கேட்கும். அதிகாலையிலே?
அடியவர் 3 :- அதிகாலையிலே.
அடியவர்:- அதாவது அந்த பிரம்ம முகூர்த்தம் சூரியன் எழுந்துக்கூடிய நேரம் வந்து அதுவும் சூரிய நாதம் வந்து ஓம்கார நாதம்.
சுவடி ஓதும் மைந்தன்:- ஆமா.
அடியவர்:- சங்க நாதம். அந்த இறைவனுடைய இயக்க ஒளியானது அப்பதான் கேட்கும். அப்பதான் எந்திரிக்க சொல்றாங்க.
தேரையர் சித்தர் :- அறிந்தும் அப்பொழுது தியானங்கள் அமைதியாக செய்ய வேண்டும். அறிந்தும் கூட அதாவது அப்பொழுது சிலருக்கு கேட்கும். அனைத்தும் உணர்ந்தவன். இவையெல்லாம் வீடுகள் எல்லாம் கடந்து வந்தால்?
அடியவர்:- உண்மையா இதையெல்லாம் கடந்து வந்தவங்களுக்கு அந்த காலையில பிரம்ம முகூர்த்தம் எந்திரிச்சு தியானம் பண்றப்போ, அவனுக்கு சங்கநாதம் கேட்கும்ன்றாரு. அந்த ஓம்கார நாதம் கேட்கும் அப்படிங்கிறாரு.
சுவடி ஓதும் மைந்தன்:- ஆமா.
தேரையர் சித்தர் :- அதாவது ஏது என்று புரிய பின் கடகமும் சிம்மமும் மாறி மாறி வர மனிதனுக்கு மனக்குழப்பங்கள் தான் தோன்றும் மீண்டும்.
சுவடி ஓதும் மைந்தன்:- இது எல்லாமே?
அடியவர்:- மாறி மாறி.
சுவடி ஓதும் மைந்தன்:- சூரியனோ சந்திரனோ? மாறி மாறி வர. திரும்பியும்?
அடியவர்:- மனக்குழப்பங்கள்.
சுவடி ஓதும் மைந்தன்:- மனக்குழப்பங்கள்.
( https://youtu.be/C5OQ5pL4GnY?t=23432 )
தேரையர் சித்தர் :- அறிந்தும் ஏது என்று புரிய, அதாவது சூரியனை வெல்லத்தான் இப்பொழுது செப்பப் போகின்றேன் உங்களுக்கு.
சுவடி ஓதும் மைந்தன்:- ( சிம்ம ராசி ) இங்க வெல்றது தான் ரொம்ப கஷ்டம். இதெல்லாம் (மற்ற ராசிகளில்) விட எல்லாம் இறைவன்னு சொல்லிடலாம். ஆனால் இங்க வர்றது, அந்த சத்தம் கிடைக்கிறதும் எல்லாமே வந்து இங்கதான் சிக்கிக்கிறாங்கன்றாங்க வந்து.
தேரையர் சித்தர் :- அறிந்தும் அதை சுழி அப்பா.
சுவடி ஓதும் மைந்தன்:- அதை சுழி என்றார், அஞ்சாம் இடத்தை சுழி.
(மேஷம்) ஒன்னு, (ரிஷபம்) ரெண்டு, (மிதுனம்) மூணு, ( கடகம்) நாலு, (சிம்மம் ) அஞ்சு.
அடியவர்:- ரவுண்ட் பண்ணுங்க.
சுவடி ஓதும் மைந்தன்:- ரவுண்ட் பண்ணுன்றார்.
( அடியவர் அதேபோல சிம்ம ராசியில் சுழித்தார் )
( https://youtu.be/C5OQ5pL4GnY?t=23465 )
தேரையர் சித்தர் :- அப்பா உன் கணக்கு இங்கே தான் இருக்கின்றது அப்பா. இதை தெரிந்து கொண்டே ஆகவேண்டும். இவ் கணக்கை தெரிந்து கொண்டால், நேரடியாக வந்து விடலாம். அதாவது இறைவனை நோக்கி.
சுவடி ஓதும் மைந்தன்:- இங்கதான் திருப்பி என்ன பண்ணிரும் எல்லாமே தெரிஞ்சாலும் இறைவன் தான் எல்லா இது பண்ணாலும் கடைசில என்ன பண்றாரு? இங்க வந்தா லாக் ஆயிருக்கு ஐயா. எல்லாருக்கும் இங்க வந்துதான் லாக் ஆகுது.
அடியவர்:- செக், ஒவ்வொரு செக் இருக்கு.
சுவடி ஓதும் மைந்தன்:- ஒரு செக்.
அடியவர்:- இங்க ஒரு செக் இங்க மாட்டிக்கிறோம்.
சுவடி ஓதும் மைந்தன்:- இங்க மாட்டிக்கிறோம் வந்து.
===========================
# சிம்ம ராசி மண்டலம் - ரகசியங்கள் ஆரம்பம்
# 5ஆம் இடம் - பூர்வ புண்ணிய ஸ்தானம்.
===========================
தேரையர் சித்தர் :- இனிமேல் இதனைப் பற்றித்தான் சொல்லப் போகின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன்:- இனிமேல் இதைப் பற்றிதான் அஞ்சாம் இடத்தைப் பற்றிதான் அவர் சொல்லப்போறாரு.
தேரையர் சித்தர் :- இதனுள் ஏது என்று புரிய அனைவரும் அறிந்து கூட பின் அதாவது மனதை பின் பக்குவமாக வைத்துக் கொள்ளுங்கள்.
சுவடி ஓதும் மைந்தன்:- எல்லாரும் என்ன சொன்னாலும் மனசை பக்குவமா வச்சுக்கணும். எது சொன்னாலும் ஏத்திக்கிற சக்தியா இருக்கணும்னு சொல்லிட்டு இதைப் பற்றிதான் அடுத்து எக்ஸ்பிளைன் பண்ண போறாரு.
தேரையர் சித்தர் :- அறிந்தும் ஐந்தாம் இடத்தை கணித்துவிட்டால் அனைவருமே ஏது என்று புரிய அறிந்தும் கூட பின் அதாவது பாக்கியசாலிகளே
சுவடி ஓதும் மைந்தன்:- இந்த ஐந்தாம் இடத்தைப் பற்றி தெரிஞ்சுக்கினீங்கன்னா.
அடியவர் :- பூர்வ ஜென்ம புண்ணியம்.
சுவடி ஓதும் மைந்தன்:- பூர்வ ஜென்ம புண்ணியம் அதைப் பற்றி தெரிஞ்சுக்கினீங்கன்னா.
அடியவர் :- புண்ணியங்கள் பெருகும் அப்படின்றாங்க.
சுவடி ஓதும் மைந்தன்:- நீங்க வந்து யாரு?
அடியவர் :- பாக்கியசாலிகள்.
சுவடி ஓதும் மைந்தன்:- பாக்கியசாலிகள் என்றார் வந்து.
தேரையர் சித்தர் :- அப்பா அறிந்தும் இவ் ஐந்தாம் இடத்தை கடக்கப் போவது ஏது என்று புரிய பின் சாதாரணம் இல்லை. பல கோடி மக்கள் ஏது என்று அறிய அதாவது பின் இதிலே இதன் முன்னே இம்மாண்டி போகின்றார்கள்.
சுவடி ஓதும் மைந்தன்:- இந்த அஞ்சாம் இடத்தை கடக்கவே முடியாதுன்றார் வந்து.
அடியவர் :- ஆமா ஆமா.
சுவடி ஓதும் மைந்தன்:- இந்த அஞ்சாம் இடத்தை கடந்து போவதற்கு முன்பே என்ன பண்றாங்க வந்து எல்லாரும்?
அடியவர் :- நிறைய நிறைய அரசர்கள் எல்லாம் நிறைய மறுபிறவி பிறந்து பிறந்து தானே வந்துட்டு இருக்காங்க. இன்னும் அவங்களால புக்தி கிடைக்கல இல்ல.
சுவடி ஓதும் மைந்தன்:- அதனால வந்து இது கடக்கவே முடியாது.
( https://youtu.be/C5OQ5pL4GnY?t=23563 )
தேரையர் சித்தர் :- அறிந்தும் இவ் ஐந்தை தாண்ட முடியாதபோது பின் ஜாதகங்கள் எடுத்து திரிவார்கள் இவ் உலகத்தில். பின் அனைத்தும் ஏது என்று யான் சொல்ல.
சுவடி ஓதும் மைந்தன்:- இவ்வளவுதான் ஸ்டாப். இதை தெரியாம மனுஷன் என்ன பண்ணுவான்? ஜாதகத்தை தூக்கி போவான். நான் என்ன பண்றது? எனக்கு கஷ்டம் வந்துருச்சே. ஏது வந்துருச்சே. நான் என்ன பண்றது ஏது பண்றதுன்னு.
தேரையர் சித்தர் :- எதை என்று புரிய. இதனால் இங்கேதான் இங்கு வந்தவருக்கு முன்பு ஏது என்று அறிய அதாவது உன் ஆன்மா என்ன ஏது என்று தவறு செய்கின்றதோ அதை மீண்டும் இவ் உலகத்தில் தவறு செய்துவிட்டு ஏங்குகின்றது பாவத்தை கூட்டி.
சுவடி ஓதும் மைந்தன்:- ஐயா இதை எக்ஸ்பிளைன் பண்ணுங்க கொஞ்சம்.
அடியவர் 3 :- என்ன தப்பு பண்ணிட்டு வந்தோமோ அதை திருப்பி திருப்பி..
அடியவர் :- திருப்பி திருப்பி செய்கிறோம். அந்த இவரு நம்ம குருநாதர் சொன்னாங்க அந்த மேல இருந்து நம்ம நம்ம எல்லாரும் பிறந்த ராசி நட்சத்திரம் கிரகம் இருக்கு. அந்த கிரகத்திலிருந்து எல்லாம் சில தவறுகள் செஞ்சதுனால இங்க பூமியில வந்து விழுந்திருக்கோம். இந்த சிறைச்சாலையில. அப்போ அங்க என்ன தப்பு பண்ணி இங்க வந்து விழுந்தோமோ அதை செஞ்சுட்டு இருக்கோம்.
===========================
# 5ஆம் இடம் - வெல்லும் ரகசியங்கள்.
===========================
தேரையர் சித்தர் :- ஐந்தாம் இடம் வென்றாக வேண்டும். வென்றாவதற்கான வழிகள் இப்பொழுது கூறுகின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன்:- இந்த அஞ்சாம் இடத்தைப் பற்றி வென்றாகணும். நிச்சயமா இந்த அஞ்சாம் இடத்தைப் பற்றி நம்ம வெல்லணும்ன்றார் வந்து.
அடியவர் :- ஜெயிச்சாதான் தப்பிச்சு போக முடியும்.
சுவடி ஓதும் மைந்தன்:- அடுத்து ஈஸியா போக முடியும். இதெல்லாம் கடக்க முடியும்ன்றாரு.
அடியவர் :- கடக்க முடியும்.
சுவடி ஓதும் மைந்தன்:- இறைவன் யார்? உண்மை நிலை என்னென்ன இதெல்லாம் வந்து இருந்தாலும் கூட இங்க வந்து சிக்கிக்கிறாங்க வந்து. ஐயா புரியுதுங்களா?
அடியவர் :- ஐயா அதாவது இவங்க வந்து நம்ம பிறந்ததற்கு ஒரு காரணம் இருக்கு. ஆரம்பத்துல சொன்னாங்க இல்ல அந்த பிறந்ததற்குரிய காரணத்தை ஜெயிக்கிறதுக்குரிய வழியை சொல்லப்போறாங்க. எல்லா பேரும் தெரிஞ்சுக்கோங்க.
( https://youtu.be/C5OQ5pL4GnY?t=23651 )
தேரையர் சித்தர் :- அப்பா இவை அனைத்தும் கூட்டு இப்பொழுது.
சுவடி ஓதும் மைந்தன்:- இதெல்லாம் அ ஆ இ ஈ உ கூட்ட சொல்றோம்.
(இவ்விடத்தின் நேரலை :- https://youtu.be/C5OQ5pL4GnY?t=23669 )
தேரையர் சித்தர் :- அறிந்தும் அவ்வ விடத்தை யான் குறிப்பிட்டிருக்கின்றேன். அவ்வ விடத்தை.
(பின் வருமாறு எழுதினர்கள். இதனை இவ்விடத்தின் நேரலை பதிவில் பார்க்கவும். )
அ - 9
ஆ - 6
இ - 5
ஈ - 2
உ - 1
======
23
=======
தேரையர் சித்தர் :- அப்பா இவை (23) கூட்டு இரண்டும்.
அடியவர் :- இரண்டு + மூணு = அஞ்சு. ( 2+3 = 5)
===========================
# இறைவனின் பரமபதம் (ஏணியும் பாம்பும் ) விளையாட்டு
===========================
தேரையர் சித்தர் :- மீண்டும் பின்னே செல்.
சுவடி ஓதும் மைந்தன்:- அஞ்சுக்கே செல். புதன் யாரு?
அடியவர் :- புதன்.
( https://youtu.be/C5OQ5pL4GnY?t=23705 )
சுவடி ஓதும் மைந்தன்:- (மிதுன ராசியை சுட்டிக் காட்டி) திருப்பி இங்கேயே வந்துறோம்.
அடியவர் :- ஆமா. அறிவில்லாம அறிவில்லாம இறைவனை பார்க்க முடியாது.
சுவடி ஓதும் மைந்தன்:- திருப்பி இங்கே. ஐயா புரியுதுங்களா?
( அடியவர்களுக்கு சந்தேகங்கள் )
அடியவர் 3 :- புதன் பின்னே செல்லுன்னு இருக்காரு.
சுவடி ஓதும் மைந்தன்:- அதான்.
அடியவர் 3 :- இறைவன்ட்ட தான் வரணும்.
சுவடி ஓதும் மைந்தன்:- திருப்பி என்ன பண்ணுவோம்?
அடியவர் :- அதாவது புரியல. புரியலன்னா திருப்பி அங்க போயிடுவோம்ன்றாரா?
அடியவர் 3 :- புரியலன்னா இறைவன்ட்ட தான் போகணும்.
சுவடி ஓதும் மைந்தன்:- திருப்பியும் இறைவன்ட்ட.
அடியவர் :- திருப்பி அங்க போயிடுவோம். (கடக ராசி ) நாலாம் இடம் கடந்தாலும் அஞ்சாம் இடத்தை கடக்க முடியலன்னா திருப்பி மூணு அதாவது பரமபாதம் மாதிரி.
சுவடி ஓதும் மைந்தன்:- ஆமா.
அடியவர் :- ஒரு இடத்துக்கு போவாங்களா அந்த மாதிரி.
சுவடி ஓதும் மைந்தன்:- திருப்பியும் இங்கதான் வரணும்.
தேரையர் சித்தர் :- அப்பா இவ்விடத்தை கடக்க பல பிறவிகள்.
சுவடி ஓதும் மைந்தன்:- இந்த இடத்தை கடக்கவே ஒன்னு இதெல்லாம் கடக்க முடியாது. இன்னும் ஓம்காரம் யாருன்னும் தெரிஞ்சுக்க முடியாது. குரு யாருன்னும் தெரிஞ்சுக்க முடியாது. இன்பினிட்டி யாரும் தெரிஞ்சுக்க முடியாது. தெரிஞ்சும் தெரியாமலும் இங்க வந்துட்டோம்னா திருப்பி எங்க போயிடுறோம்? திருப்பி மூணாவது இடத்துக்கு தான் போய் விடுறோம்.
அடியவர் :- பிறவி எவ்வளவு கஷ்டம்ன்றத உணர்த்துறாங்க. பிறவி என்பது எளிது கிடையாது. அதை கடக்க முடியாது. பிறவிக் கடகலை நீந்துவார் நீந்தாதார் இறைவனடி சேராதார். சும்மாவா வச்சாரு திருக்குறள்ல.
சுவடி ஓதும் மைந்தன்:- முடியாது.
அடியவர் :- சொல்றாங்க எவ்வளவோ பிறவிகள் எல்லாம் திருப்பி திருப்பி பிறந்துட்டு இருக்கிறோம். அதை கடக்குறதுக்குரிய வழியை சொல்றேன்னு சொல்றாங்க.
சுவடி ஓதும் மைந்தன்:- சொல்றாரு.
தேரையர் சித்தர் :- அறிந்தும் ஐந்தாம் இடத்தைப் பற்றி நிச்சயம் யான் சொல்ல வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன்:- நிச்சயமா நான் வந்து ஐந்தாம் இடத்தை சொல்லே ஆகணும்.
அடியவர் :- நிறைய சூட்சுமம் இருக்குன்றாங்க.
தேரையர் சித்தர் :- அறிந்தும் அதை மீறி ஒன்றும் செய்ய முடியாது அப்பா. அஞ்சாம் இடத்தை மீறி.
அடியவர் :- ஜெயிக்காம ஒன்னும் பண்ண முடியாது. அதை தாண்ட முடியாம எங்கேயும் போக முடியாதுன்றாங்க.
எங்கேயும் போக முடியாது.
அடியவர் :- திருப்பி திருப்பி.
சுவடி ஓதும் மைந்தன்:- தாண்ட முடியாம திருப்பி அங்க வரும்.
அடியவர் :- ஆமா திருப்பி அங்க ஒரு பாம்பு கடிச்சு ( பிறவி முடிவடைந்து ) , திருப்பி (இறைவன்) புதன் கிட்ட தான் வந்து நிக்கணும்.
சுவடி ஓதும் மைந்தன்:- ஆமா.
தேரையர் சித்தர் :- அறிந்தும் அதாவது ஐந்தோன் யார் எதை என்று அறிய புரிகின்றதா?
சுவடி ஓதும் மைந்தன்:- ஐந்தோன் யாருன்னா ஐயா நமச்சிவாயங்க ஐயா.
அடியவர் :- ஐந்தெழுத்து மந்திரம்.
சுவடி ஓதும் மைந்தன்:- நமச்சிவாய போடுங்க இங்க
( மிதுன ராசி அருகில் நமச்சிவாய என்று எழுத சொன்னார்கள். அடியவர் அதேபோல எழுதினார் அங்கு).
( https://youtu.be/C5OQ5pL4GnY?t=23836 )
தேரையர் சித்தர் :- இப்பொழுது பின் ஆறு எழுத்து, ஐந்து எழுத்து, எட்டு எழுத்து.
சுவடி ஓதும் மைந்தன்:- (மிதுன ராசி அருகிலே) இங்கேயே எழுதுன்றாரு. நமச்சிவாய. ஓம் சரவணபவா. நமோ நாராயணா. ( அதேபோல அடியவரும் எழுதினார்கள்.
நமச்சிவாய - 5 எழுத்து
சரவணபவா - 6 எழுத்து
நமோ நாராயணாய - 8 எழுத்து
)
தேரையர் சித்தர் :- இவை அனைத்தும் கூட்டு.
அடியவர் 4 :- ( 5+ 6+ 8= 19. 19 என்று எழுதினார் அங்கு)
தேரையர் சித்தர் :- அறிந்தும் எது என்று புரிய இவை இரண்டும் கூட்டு.
அடியவர் 4 :- (19 = 1+9 = 10.
10 = 1+0 = 1. )
அடியவர் 4 :- ஒன்னு.
தேரையர் சித்தர் :- அப்பா அனைத்தும் ஒன்றே பாருங்கள் நீங்களே என்ன என்ன சந்தேகம்?.
அடியவர்கள் :- ( கைதட்டல்கள் )
சுவடி ஓதும் மைந்தன்:- இது மட்டும் தாண்ட முடியாதுங்க ஐயா. இதை இதை வந்து இத்தனை 12 கட்டம். மூணு கட்டமே நம்மளால தாண்ட முடியலைங்க ஐயா. எப்படிங்க ஐயா வாழப்போறோம் சொல்லுங்க ஐயா. மூணு கட்டமே தாண்ட முடியலைங்க ஐயா இன்னும் நம்மளால.
அடியவர் :- எல்லா மதங்களும் சைவம் வைணவம் எல்லாத்தையும் ஒன்னு.
சுவடி ஓதும் மைந்தன்:- எல்லாமே இதுலயே இருக்குது. எல்லாத்தையும் அல்லாஹ், புத்தர், இயேசு, குருநானக்கு, வேற சீக் எல்லாமே இந்த மூணுலையே இருக்குங்க ஐயா வந்து. மக்களுக்கு தெரியலைங்க ஐயா வந்து. அதனாலதான் சித்தர் பெருமக்கள் வந்து, இப்படியே இருந்தா நாடு வந்து நம்ம என்ன ஆகும் வந்து?
அடியவர் :- ஐயா அதனாலதான் திருப்பி திருப்பி பிறந்துட்டே இருக்கோம். இதை உணராதனால, இறைவன் ஒருவனே என்று உணர்றதுக்கே இத்தனை பிறவிகள் தாண்டிட்டே, இங்கேயே பிறந்துட்டு இருக்கிறோம்.
சுவடி ஓதும் மைந்தன்:- பிறந்துட்டு இருக்கிறோம். அப்ப இதை தாண்டாம இன்னும் எத்தனை காட்டுங்க? எப்பா ( கடகம் முதல் தனுசு வரை) ஒன்னு, ரெண்டு, மூணு, நாலு, அஞ்சு, ஆறு. அப்பதான் ஆல்பா பீட்டா காமா ( மகரம், கும்பம், மீனம் ) இது ஐயா ஓம்காரத்தை உணர முடியும் இங்கேயே நம்ம பிச்சு நிக்கிறோம். எப்படிங்க ஐயா.
அடியவர் :- இப்ப இதையெல்லாம் கடந்து தப்பிச்சு இங்க வந்ததுக்கு அப்புறம் இங்க சரியா படிக்கல.
சுவடி ஓதும் மைந்தன்:- ஐந்தாம் இடத்துல.
அடியவர் :- இறைவன் உடனே படிச்சவனை திருப்பி அனுப்பிச்சிடுறாங்க.
சுவடி ஓதும் மைந்தன்:- அஞ்சாம் இடத்தை பத்தி நம்ம நல்லா படிக்கணும்ன்றாரு. அஞ்சாம் இடத்துல படிச்சீங்கன்னா ..திருப்பி எங்க அனுப்புறாரு ஐயா.
அடியவர் :- திருப்பி அங்க அனுப்பிச்சிடுறாரு மேல அனுப்பிச்சிடுறாரு.
சுவடி ஓதும் மைந்தன்:- திருப்பியும் (மிதுனராசி) இங்கேயும் அனுப்புறாரு.
( https://youtu.be/C5OQ5pL4GnY?t=23969 )
தேரையர் சித்தர் :- அறிந்தும் ஏது என்று புரிய, இதனாலே ஏது என்று அறிய, அங்கே பின் ஞானக்காரனாக, அதாவது புத்தி உள்ளவனாக, பின் யார்?
சுவடி ஓதும் மைந்தன்:- புத்திகாரன் யார் இங்க? ஞானக்காரன் யாரு?
அடியவர் :- புதன், முருகன்.
சுவடி ஓதும் மைந்தன்:- விநாயகப் பெருமான். போடுங்க ஐயா விநாயகப் பெருமான் (மிதுன ராசி) இங்க.
( https://youtu.be/C5OQ5pL4GnY?t=23991 )
அடியவர் :- விநாயகப் பெருமான்.
சுவடி ஓதும் மைந்தன்:- ஐயா புத்தி கொடுப்பவர் ஞானக்காரர் யாரு?
அடியவர் :- விநாயகர்.
சுவடி ஓதும் மைந்தன்:- விநாயகர்.
தேரையர் சித்தர் :- அப்பா இதை உணராதவர், மீண்டும் அப்பா பின் பின்னே வந்தால், ராகுவும் கேதுவுமே உச்சம் அடைகின்றனர்.
சுவடி ஓதும் மைந்தன்:- இதெல்லாம் உணரலைன்னா, திருப்பி இங்க ( ரிஷப ராசியில் ) ராகு கேது வந்து என்ன பண்ணுவாரு?.
அடியவர் :- (ராகு கேது) உச்சம் அடையறாரு.
சுவடி ஓதும் மைந்தன்:- உச்சம் அடைவார் இங்க. ( ரிஷப ராசியில் ) ராகு கேது போடுங்க ஐயா.
( ரிஷப ராசியில் - “ராகு, கேது” என்று அவ்வாறே எழுதினார்)
( https://youtu.be/C5OQ5pL4GnY?t=24012 )
அடியவர் :- ரிஷபத்துல ராகு உச்சம்ல?
தேரையர் சித்தர் :- அறிந்தும் ஏது என்று புரிய இவ்வாறாக அறிந்தும் அதனால் மீண்டும் ( ரிஷப ராசியில் ) சுகபோகத்தை இவர்கள் இருவரும் ( ராகு, கேது) கெடுக்கின்றனர் .
சுவடி ஓதும் மைந்தன்:- ( ராகு, கேது) இவர் என்ன பண்றாரு மீண்டும்?
அடியவர் :- சுகபோகத்தை கெடுப்பாங்க.
சுவடி ஓதும் மைந்தன்:- திருப்பி வந்து இதை உணரலைன்னா வந்து என்ன பண்ணுவாரு வந்து.
அடியவர் :- ஏன்னா சுக்கிரன் தான் எல்லாத்தையும் கொடுக்கிறது.
சுவடி ஓதும் மைந்தன்:- ஆமா.
அடியவர் :- அங்கிருந்து கெடுக்குறாங்க உணராததால் தான்.
தேரையர் சித்தர் :- அறிந்தும் ஏது என்று அறிய பின் இவை மூன்றும், அதாவது மூன்றோடு இணைந்தால், நான்கோன் பின் அனைத்தும் விதி மாற்றுவான்.
சுவடி ஓதும் மைந்தன்:- ( இறைவன் ஒன்றே ) இதை நீங்க எல்லாம் ஒன்னுன்னு உணர்ந்துட்டீங்கன்னா, இங்க நான்கோன் நாலாயணம் என்ன பண்ணுவாரு? நல்லா இது விதியை யாரு மாத்துவாரு. நான்கோன் யார்? நான்கு தலைவன் யாருங்க ஐயா?
அடியவர் :- பிரம்மா.
சுவடி ஓதும் மைந்தன்:- பிரம்மா…. போடுங்க ஐயா இங்க.
அடியவர் :- நான்கோன் பிரம்மா. பயங்கர வேற லெவல் சிறப்பு.
( கடக ராசியில் - பிரம்மா என்று எழுதினார்கள் )
( https://youtu.be/C5OQ5pL4GnY?t=24068 )
தேரையர் சித்தர் :- அறிந்தும் எது என்று புரிய அனைவரும் ஏது என்று அறிய மீண்டும் சோம்பேறிகள் ஆகிவிட்டார்கள். இதனால் பாடலை பாடுக. பின் குஷி ஆகட்டும் பின்பு உரைப்பேன்.
அடியவர் :- இங்க பாருங்க எதுக்கு சொல்றாங்கன்னா, நம்ம எல்லாம் பிறவியில சிக்கிட்டு இருக்கிறோம். இதை உணராம பிறவியை கடக்க முடியாது. தயவு செஞ்சு இதை கவனிங்க. கவனிச்சாதான் பிறவியை கடக்க முடியறதுக்கு ஒரு எளிதான வழி சொல்றாங்க. சும்மா எல்லாம் சொல்லிக் கொடுக்கல. பிறவியை கடக்குறதுக்கு வழி சொல்லிக் கொடுக்குறாங்க. இதை நல்லா கவனிச்சு புரிஞ்சுகிட்டோம்னா, பிறவியை கடந்துரலாம். இல்லைன்னா திருப்பி திருப்பி பிறக்கணும். அதான் சொல்லாம சொல்றாங்க. அதுக்கு தான்ப்பா நாங்க இதை சொல்லித் தரோம்ன்றாங்க. சொல்லாம பிறவியை கடக்குறதுக்கு எளிதான வழி சொல்றாங்க.
அடியவர் :- ஐயா நீங்க சிவபுராணம் படிங்க ஐயா… (கர்மங்களை நீக்கி , சுபிட்சங்களும் அருளும், மகத்தான சிவபுராணம் கூட்டு பாராயணம் ஆரம்பமானது…… )
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 19.04.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் …….)
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

No comments:
Post a Comment