31/3/2026 பங்குனி உத்திரம் நட்சத்திர தினங்களில் போகர் சித்தகுரு பெருமான் உரைத்த வாக்கு.
வாக்குரைத்த ஸ்தலம்:வேலோடிய மலை முருகன் ஆலயம்.
வேலோடு மலை முருகன் ஆலயம், சித்தான்டி, மட்டக்களப்பு .கிழக்கு மாகாணம், இலங்கை.
அகிலமெல்லாம் ஆளுகின்ற இறைவா போற்றி!!!!!.
போற்றியே பணிந்தேனே, பணிந்தேனே,!!!!..
செப்புகின்றேனே, போகனவனே!!!
இதை எத்தனை???, எத்தனை??, ஏது, எவை என்று புரிந்து கொள்ள இன்னும் கூட பின் எங்கு?? எதை???. பின் முருகன் எதை? எதை?? எதற்கு?? எதற்கு?? பின் மனிதன் ஆசைப்பட்டானோ!?!???!
அவையெல்லாம் பின் அறிந்தும், பின் அதாவது மனதில் உள்ள என்ன? ஏது பின் மனிதருக்கு தோன்றுகின்றதோ அவ்வரத்தை எல்லாம் குழந்தை ரூபத்தில் முருகன் அழகாக கொடுத்துக்கொண்டே!!, கொடுத்துக்கொண்டே வந்து !!!
எதற்கு?, ஏது? என்று புரியாமலும்.
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்.
மனிதர்கள் இதுவரை இறைவனைப் பற்றி புரிந்து கொள்ளவே இல்லை.. ஆனாலும் மனிதர்கள் எதை எதை ஆசைப்படுகிறார்கள் அதை எல்லாம் முருகன் அறிந்து வைத்திருக்கின்றார்.. முருகன் குழந்தை உருவமாகவே இருக்கின்றார் மனிதர்கள் ஆசைப்படுகின்ற விஷயத்தை வரமாக கொடுத்துக் கொண்டே வருகின்றார்.
ஆனாலும் அறிந்தும் இவை என்று நினைக்க, ஆனாலும் இதன் கீழே ஒரு ஏழை!!, ஏழையவன் அறிந்தும் ஏது என்று தெரியாமலே,
ஆனாலும் இவனுக்கு சொந்த பந்தங்கள் பின் அதாவது சில உயிரினங்களே
, அவ் உயிரினங்களை எல்லாம் வந்து மேய்ப்பான் இங்கு.
அறிந்தும், அதாவது மாடுகள்!!, இன்னும் எதை எதை என்று அறிய. இதுதான் அவனுக்கு சொந்த பந்தம்.
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
இங்கே வேலோடு மலை அருகே இருக்கும் ஊரில் ஒரு ஏழை வசித்து வந்தார்.. அவருக்கு வெளியுலகம் எதுவும் தெரியாது.. அவர் ஆடு மாடு மேய்ப்பவர் ஆடு மாடுகளை உலகம் என வாழ்ந்து வந்து இங்கு வேலோடு மலையில் இருக்கும் காட்டுப்பகுதிகளில் மாடுகளை மேய்ப்பார்.
ஏன் எதற்கு இவைதன் பின் அதாவது இவர்கள் பின் தாய் தந்தையும் கூட இங்கே, ஏது என்று தெரியாமலும் கூட.
ஏனென்றால் பின் இங்கு ஒரு மூலிகை இருக்கின்றது, அதை தொட்டுவிட்டால் நிச்சயம் பின் அதாவது நீங்கள் மறைந்து விடுவீர்கள்.
ஆனாலும் இவ்வாறு தான் தெரியாமல் அவர்களும் இங்கு ஜீவராசிகளை பின் மேய்க்க அவர்களும் தெரியாமல் பின் அதாவது என்னவோ புதுமையாக இருக்கின்றது என்று மூலிகையை தொட அவர்களும் பின் அதாவது மாயமாக போய்விட்டனர்.
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
ஆடு மாடுகளை மேய்க்கும் அந்த ஏழைக்கு பெற்றோர் இருந்தனர்.
ஒரு நாள் இங்கு மாடு மேய்க்க வந்த பொழுது. வேலோடு மலை.காட்டுப்பகுதிகளில் ஒரு மூலிகை இருக்கின்றது அந்த அந்த மூலிகை என் ஸ்பரிசம் பட்டாலே நாம் மறைந்து விடுவோம் நம்மளுடைய உருவம் யாருடைய கண்களுக்கும் தெரியாது.
அந்த ஏழையின் பெற்றோர்கள் ஏதோ புதுமையாக ஒரு மூலிகை இருக்கின்றது என்று அதை தொட்டுவிட அவர்கள் மறைந்து போய்விட்டார்கள்.
இதனையும் எதை என்று அறிய, ஆனாலும், ஆனாலும் அவந்தன், ஆனாலும் பின் அதாவது தன் பெற்றோரை அழைத்து அழைத்து!!!... பின் குரல் மடுத்தும் ஏது என்று அறிய பல வகையிலும் கூட பின் அதாவது நிச்சயம் தன்னில் அறிந்தும் இவை என்று உணர்ந்த நிச்சயம் பின் செவிக்கு கேட்கும்.
சுவடி போதும் மைந்தனின் விளக்கம்.
பெற்றோர்கள் மறைந்து விட்டதை கண்டு அந்த ஏழை மாடு மேய்ப்பாளர் கத்திக் கூப்பாடு போட்டார் பெற்றோர்கள் எங்கு எங்கு என்று தேடினார்.
இந்த மூலிகை தொட்டால் மறைந்து விட்டாலும் மற்றவர் பேசுவது காதுகளுக்கு கேட்கும்... அவர்கள் பேசிக் கொள்வதும் கேட்க முடியும் ஆனால் அவர்கள் உருவத்தை பார்க்க முடியாது.
இதே போல எத்தனை??? எத்தனை?? மனிதர்கள் இங்கு வந்து அதை தொட்டு மாயமாகிவிட்டனர்!! இன்றும் பேசிக்கொண்டுதான் இருக்கின்றார்கள் நடுஜாமத்தில் உறங்குகின்ற பொழுது அவர்கள் பின் குரல் இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கின்றது.
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
இந்த வேலோடு மலைக்கு... பல மனிதர்கள் இப்படி வந்து தெரியாமல் அந்த மூலிகையை தொட்டு மறைந்து விட்டார்கள் அவர்கள் இன்னும் இருக்கின்றார்கள்.. அவர்கள் எல்லாம் பேசிக் கொள்வது நடு இரவில் தெளிவாக கேட்கும்.. அப்படி மறைந்து விட்ட மனிதர்கள் இன்னமும் பேசிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.
எவை? இவையும் ஒரு விளையாட்டே.
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
இதுவும் இறைவனின் திருவிளையாடல்கள்.
எத்தனை, ஏது என்று அறிய இதே போலத்தான் பின் அதாவது பின் ஆனாலும் இவர்களும் ஏது என்று அறிய ஆனாலும் அவனும் பின் தேடினான் எங்கு? தாய் தந்தையர் என்று!!.
ஆனாலும் ஏதோ மேய்க்க அறிந்தும் ஏது என்று புரிய ஆனாலும் பின் தாய் தந்தையரை இழந்துவிட்டோம்...
ஏன்? எதற்கு? இச் ஜீவராசிகள் என்று அப்படியே விட்டுவிட்டான்!!!
ஆனாலும் அவ் ஜீவராசிகள் அனுதினமும் பின் அதாவது அனைத்தும் மேய்ந்து தானாகவே மீண்டும் இவனிடத்திலே வந்துவிடும்.
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்.
காணாமல் போன தன் தாய் தந்தையை தேடி தேடி பார்த்தார்..
தன் பெற்றோரை எங்கும் காண முடியவில்லை என்ற விரக்தியில் மாடுகளையும் மேய்ப்பதை நிறுத்தி அப்படியே காட்டில் விட்டு விட்டு சென்று விட்டார்.. ஆனாலும் பழக்க தோஷத்தில் மாடுகள் எல்லாம் தானாகவே இங்கு இருக்கும் காடுகளில் வந்து மேய்ந்து விட்டு தானாகவே அவருடைய இருப்பிடத்திற்கு சென்று விடும்.
ஏது எதை என்று புரிய இவ்வாறாகவே அறிந்தும் கூட பின் அதாவது பின் அவ் பின் ஜீவராசிகள் மேய்ப்பவன் பல பின் ஏது என்று புரியாமல் கூட அப்படியே நிச்சயம் தன்னில் ஏது என்று உணர!!!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
அவருக்கு ஒன்றும் புரியவில்லை பெற்றோர்கள் திடீரென்று காணாமல் போய்விட்டார்கள்.. நாம் என்ன செய்வது ஏது செய்வது என்ற குழப்பத்திலேயே இருந்தார்.
ஆனாலும் அறிந்தும் எதை என்று புரிய எவை என்று கூற அதாவது பின் பாதளலோகம் என்று உலகம் கூட இதன் பின் ஏது என்று கூற இங்கு அறிந்தும் கூட பின் அதாவது இங்கிருந்து எங்கெங்கோ பின் நீர்நிலைகள் சென்று கொண்டே தான் இருக்கின்றது.
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
இங்கே வேலோடு மலைக்கு கீழே பாதாள லோகத்தின் வழி பாதை உள்ளது இங்கிருந்து அடியில் நீர்நிலைகள் இங்கிருந்து பல இடங்களுக்கு எல்லாம் சென்று கொண்டே இருக்கின்றது...
ஏது என்று உணர!! இதனாலே பின் அவந்தனும் உறங்குகின்ற பொழுது பின் இதுவும் கூட பின் நீர் சத்தம் கேட்டது!!
பின் அதாவது பலத்த ஓசையினாலே!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
இப்படி ஒரு நாள் இங்கேயே அவர் தங்கி விட உறங்கும் பொழுது நிலத்திற்கு அடியேன் நீர்நிலைகள் நீரோட்டத்தின் சலசலவென பெரும் சத்தம் இவருக்கு கேட்டது
ஏது எவை என்று அறிய ஆனாலும் இவை தனக்கு எத்தனை? எத்தனை?
ஆனாலும் இப்படி சரி!!! கண்டுகொள்ளாமல் மீண்டும் எழுந்து பின் வழி இல்லை பின் உணவு சமைக்கலாமா??? என்று!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
அவருக்கு இரவில் நீர் நிலைகளின் சத்தம் கேட்டாலும் அவருக்கு அந்த சத்தத்தின் மீது பெரிய ஈடுபாடு வரவில்லை ... அதை கண்டுகொள்ளவும் இல்லை
சரி இன்னும் எத்தனை நாட்கள் இப்படி இருக்க போகின்றோம் நாமும் உணவு உண்ண வேண்டும் சமைக்கலாமா என்ற எண்ணம் வந்தது.
ஆனாலும் ஏன்? தாய் தந்தையே போய்விட்டனர்!!! ஆனால் நாம் ஏன்????உணவு சமைக்க வேண்டும்??? ஏன்? உண்ண வேண்டும்?? என்பதை எல்லாம் பின் அறிந்து அறிந்து ஏது என்று அறிய!!
அதனால் பின் இப்படியே பின் அறிந்தும் ஏது என்று தெரியாமலும் கூட அதாவது விட்டு விடுவோம் என்று!!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
நாமும் தனியாக இருக்கின்றோம் நம்முடன் இருந்தா தாய் தந்தையை காணவில்லை நமக்கு மட்டும் ஏன் உணவு சமைத்து உண்ண வேண்டும்... அவர்களோ காணாமல் போய்விட்டார்கள் எதற்காக சமைக்க வேண்டும்? எதற்காக சாப்பிட வேண்டும்? என்று சமைக்கும் எண்ணத்தை கைவிட்டு அமைதியாகிவிட்டார்.
ஏது எவை எது என்று புரிய ஆனாலும் இப்படியே அறிந்தும் ஆனாலும் பலத்த காற்று இதுவும் முருகனுடைய வேலையே !!!
அறிந்தும் ஏது என்று புரிய இதை தன் பின் உணர பின் ஆரம்பிக்கின்ற பொழுது !!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
அந்த ஏழை மாடு மேய்ப்பவர் இப்படி தனியாக இருக்கும் பொழுது முருகன் தன்னுடைய திருவிளையாடலை ஆரம்பித்தார்.
பலத்த காற்று வீச வைத்தார்.
ஆனாலும் பல வகைகள் அறிந்தும் கூட பின் மூலிகை அதாவது கற்பூர வாசனையாக தோன்றியது!!
பின் இதைக்கூட தானாகவே பின் இப்பொழுதெல்லாம் இறைவனுக்கு நீங்கள் பின் கற்பூரத்தை ஏற்றுகின்றீர்கள்!! அறிந்தும் !!
ஆனாலும் அப்படியே பின் அதன் தன்மையும் கூட இங்கு ஒரு பின் செடி அழகாக இருக்கின்றது!!
பின் அதுவும் ஏது என்று அறிந்தும் கூட பின் அமாவாசை அதாவது பௌர்ணமி தன்னில் கூட அழகாக பின் ஒளி வீசும் !!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
முருகனுடைய திருவிளையாடல் இங்கு பலமாக காற்று வீசியது... இங்கு பல மூலிகைகள் இருக்கின்றன பல விசித்திரமான நறுமணம் உள்ள மூலிகைகளும் இருக்கின்றன.. அப்படி ஒரு மூலிகை கற்பூரம் மணக்கும் மூலிகையாக இருக்கின்றது... அந்த மூலிகையும் கற்பூர மணம் வீசும்.. மட்டுமில்லாமல் அமாவாசை பௌர்ணமி தினங்களில் அது ஒளிரும் அதாவது இரவில் ரேடியம் போல விளக்கு ஏற்றி மண்ணில் வைத்ததைப் போல ஒளிரும் தன்மை உடையது.
அதை சுவாசிக்கவே அதாவது பின் அனைவரும் அறிந்தும் புரிந்தும் கூட!!
அதனால் அதை அவன் சுவாசித்து விட்டான்!!! சுவாசித்து விட்டான் பின் அனைத்தும் ஏது என்று அறிய பின் அதாவது பின் உணர்ந்தும் கூட இப்படியே !!
ஆனாலும் சுவாசித்து அதனால் எங்கேயோ சென்று அடைவோம்!!! என்பதை ஏது என்று அறிய இங்கு அழகாகவே பின் அறிந்தும் கூட !!!
இங்கிருந்து தான் அது.
ஏது எவை என்று அறிய ஆனாலும் இதை தன் அறிய ஆனாலும் பின் அறிந்தும் உணவே உட்கொள்ளவில்லையே!! என்று பின் என்று இருந்தவனுக்கு உணவு வருகின்றது தானாகவே.
இவை!! இவைதன் கூட அறிந்தும் ஏது என்று புரிய இவ்வாறாகவே தாய் தந்தையை பின் எண்ணினான்!!
பின் தாய் தந்தையரும் பின் வந்துவிட்டனர்.
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்.
அந்த ஏழை மாடு மேய்ப்பவர் கற்பூரம் மணம் வீசும் மூலிகையை சுவாசித்து விட்டார்... அவருக்கு பல விஷயங்கள் புரிய ஆரம்பித்தது இது சுவாசிக்கும் பொழுது அவருடைய நிலை எங்கோ செல்லப் போகின்றது என்பதை உணர முடிந்தது.
சமைக்க வேண்டாம் என்று முடிவு எடுத்தவருக்கு பசி இருந்தது நாம் உணவு உட்கொள்ளவில்லையே என்று நினைத்த பொழுது அவர் முன்பாக தானாகவே உணவு வந்தது.
இதை கண்டதும் நாம் மனதில் உணவை நினைத்தோம் உணவு நம் முன்பாக வந்துவிட்டது.. அதேபோல் நம் தாய் தந்தையை நினைப்போம் என்று நினைத்த பொழுது மறைந்திருந்த மாயப்பொருளாக இருந்த அவருடைய பெற்றோர்களும் அவர் முன்பாக வந்து விட்டார்கள்.
இந்த சம்பவம் இங்குதான் வேலோடு மலையில் நடந்தது.
இதை தன் ஏது என்று அறிய ஆனாலும் இவ்வாறாகவே பின் கட்டி அணைத்துக் கொண்டான்!!
ஏதோ ஒரு சக்தி இருக்கின்றது இங்கு என்று தெரிந்து கொண்டு!!...
அறிந்தும் புரிந்தும் ஏதாவது அனுதினமும் இங்கு வந்து தவங்களை மேற்கொண்டான்!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
மறைந்திருந்த அவரது பெற்றோர்கள் முன்பாக வந்தவுடன் அவர்களை கட்டிப்பிடித்துக் கொண்டு சந்தோஷப்பட்டு அதன் பிறகு... இங்கு ஏதோ ஒரு அதிசய சக்தி இருக்கின்றது என்பதை அவர் தெரிந்து கொண்டார். இதனால் தினமும் மாடு மேய்க்க வரும் பொழுது இங்கு அமர்ந்து தியானங்கள் செய்யத் தொடங்கினார்.
அறிந்தும் ஏது என்று அறிய ஆனாலும் இவனுக்கு தெரிந்தது இவ்வுலகத்தில் வாழ அப்பொழுதெல்லாம் நகையில்தான்!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
பண்டைய காலத்தில் பணம் என்ற ஒரு பொருள் இல்லை நகையை வைத்து தான் மதிப்பு... இவர் வாழ்ந்த காலகட்டத்திலும் அதாவது இந்த சம்பவம் நடந்த கால சமயத்திலும் பணம் காசுகள் என்று ஒன்று இல்லை... அதற்குப் பதிலாக மதிப்பு வாய்ந்த நகைகள் தான் அனைவரும் பயன்படுத்தினார் பண்டமாற்று செய்தனர்..
அறிந்தும் ஏது என்று புரிய ஆனாலும் நினைத்தான்!!! பின் தியானம் அதாவது செய்கின்ற பொழுதே பின் அனைத்தும் அதாவது பின் தங்க ஆபரணங்கள் பின் அனைத்தும் உடம்பில் ஏற வேண்டும் என்று!!!
ஆனாலும் அனைத்தும் ஏறிவிட்டது.
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
இப்படி அந்த காலகட்டத்தில் நகைகளுக்குத் தான் மதிப்பு என்பதை தெரிந்து வைத்திருந்த அவர் தியானம் செய்யும் பொழுது எனக்கு நகைகளாக வேண்டும் நிறைய நகைகள் எனக்கு வேண்டும் என்று வேண்டிக் கொண்டே தவம் செய்தார்.
அப்படி வேண்டிக் கொண்டு தவம் செய்த பொழுது அவரது உடல் முழுக்க தங்க ஆபரணங்களாக.. நகைகளாக மாலைகளாக நிரம்பி விட்டது.
ஆச்சரியம்!! இவந்தனக்கு!!! இன்னும் ஏது என்று அறிய ஆனாலும் இப்படியே பின் பல பல பல வழிகளில் கூட பின் ஏது என்று அறிய ஆனாலும் இங்கு எதை என்று புரிய இவ்வாறாக அறிந்தும் அறிந்தும் பல வகைகளில் கூட நிச்சயம் எண்ணற்ற பின் இரத்தினங்கள் அனைத்தும் பின் இவனுக்கு கிடைத்தது.
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
இப்படி அவர் தியானங்கள் செய்து நகைகளாக கிடைத்தவுடன் பிரமித்து போய் இன்னும் நகைகள் ரத்தினங்களை எல்லாம் வேண்ட அவையெல்லாம் இவருக்கு அதிகமாக கிடைத்தது.
ஏது என்று அறிய ஆனாலும் பின் இவ்வளவு வைத்து இவனுக்கு என்ன தெரியும் ???? பின் செலவு செய்ய!????
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
காட்டில் மாடுகள் மேய்த்துக்கொண்டு இருப்பவருக்கு இத்தனை ஆபரணங்கள் ரத்தினங்கள் கிடைத்தவுடன் இதை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்றே அவருக்கு தெரியவில்லை... இதனால் காட்டிலிருந்து அருகில் இருக்கும் ஊருக்கு சென்றார் ஊருக்கு சென்று அனைவருக்கும் கொடுப்போம் என்று எண்ணி சென்றார்.
ஏது என்று அறிய ஆனாலும் பின் அதாவது ஊருக்குள் செல்வோம்!!
ஏதாவது பின் இது கொடுக்கும் பின் ஏது என்று அறிய அனைவருக்கும் கொடுப்போம் என்று எண்ணினான்.
எல்லாருக்கும் கொடுப்போம் என்று. இதை ஏது என்று அறிய இவ்வாறெல்லாம் சென்று கொண்டிருந்தே!!!
இதை தன் ஒருவன் பார்த்துவிட்டான்!!
இவந்தன் ஏன்? எதற்கு? யாருமே என்று தெரியாது!!!
என்றெல்லாம் இவன் திருடிக்கொண்டு வந்துவிட்டான் என்று இவனை சிறையில் அடைத்துவிட்டனர்.
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
இப்படி ஊருக்குள் புதிதாக வந்து அனைவருக்கும் நகைகளை கொடுத்த பொழுது அந்த ஊரில் இருக்கும் ஒரு காவலாளி பார்த்துவிட்டு இவன் யார் புதிதாக இருக்கின்றான் இவனிடம் இத்தனை தங்க நகைகள் இருக்கின்றது ஒருவேளை இவன் திருடனாக இருப்பான் என்று மாடு மேய்ப்பவரை பிடித்து அரசாங்கத்தில் இவன் திருடன் என்று சொல்லி சிறையில் அடைத்து விட்டார்கள்.
ஏது என்று அறிய ஆனாலும் இவனுக்கு பின் சிறை என்பது ஏதுவென்றே தெரியவில்லை!!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்.
காட்டில் இருந்து ஊருக்கு வந்து அவரை சிறையில் அடைத்தாலும் அவருக்கு சிறை என்றால் என்ன என்பது கூட தெரியவில்லை.
உணர்ந்து இவை ஏது என்று அறிய ஆனாலும் அறிந்தும் இதை என்பது என்ன என்றெல்லாம் பின் அறிந்து ஆனாலும் அனைத்தும் ஏது என்று அறிய இவ்வாறாக பின் அதாவது பின் இங்கு ஒரு அரண்மனையும் இருந்தது!!
பின் அதாவது ஏது என்று புரிய பின் அரண்மனையில் அதாவது பின் இளவரசியாக அனைத்தும் ஏது??? பின் இவை இவ்வளவு?? பின் நகைகள் எங்கு ?? என்று கிடைத்தது இவனுக்கு!???
என்றெல்லாம்!!
இவனை அழைத்து வாருங்கள் என்றெல்லாம் !!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்.
இவரை சிறையில் அடைத்த அரசின் அரண்மனையும் அருகில் இருந்தது இப்படி ஒருவன் ரத்தினங்கள் விலை மதிக்க முடியாத தங்க ஆபரணங்களுடன் வந்திருக்கின்றான் என்ற தகவல் அந்த நாட்டின் இளவரசிக்கும் தெரிய வந்தது!!
அவனை அழைத்து வாருங்கள்!! என்று இளவரசி கட்டளை இட்டார்
அவனிடம் இருக்கும் நகைகள் எல்லாம் மிகவும் உயர்ந்தவை இப்படிப்பட்ட நகைகள் எப்படி இவனுக்கு கிடைத்திருக்கும் என்பதை எல்லாம் அறிய அவனிடம் விசாரணை செய்ய வேண்டும் என்று
சிறையிலிருந்து அவனை அழைத்து வர சொன்னார்.
அடித்து மீண்டும் அவனை வெளியேற்றி பின் அதாவது வீரர்களே அறிந்தும் அதாவது அவனை பின் அடித்து எங்கே எடுத்தான்??? என்று காண்பிக்கச் சொல்!! என்றெல்லாம்!!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
சிறையில் இருந்து அரசபைக்கு அழைத்து வரப்பட்ட அவரிடம் விசாரணை நடந்தது உனக்கு இந்த நகைகள் எல்லாம் எங்கிருந்து கிடைத்தது???
எங்கிருந்து எடுத்தாய் என்பதை சொல் நீ காண்பிக்க வேண்டும் என்று அவரை அரண்மனையில் இருக்கும் இளவரசியும் அரசபை ஆட்களும் அவரிடம் விசாரணை செய்ய அவரும் உண்மையைச் சொல்லி இங்கு அழைத்து வந்தார்.
அறிந்தும் அப்படியே அறிந்தும் இங்கே நிச்சயம் அனைவரும் வந்தனர்.
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்.
அந்த மாடு மேய்க்கும் ஏழையானவர் இளவரசியையும் அரண்மனை காவலாளிகளையும் இங்கு அழைத்து வந்து இங்கு தான் எனக்கு நகைகள் கிடைத்தது என்று சொல்ல அதாவது இந்த இடத்தில் வேலோடு மலையில் கிடைத்தது என்று சொல்லி விட்டார்.
ஏது எவை என்று அறிய இங்குதான் என்றெல்லாம்!!!
அறிந்தும் எதை என்று புரிய ஆனாலும் இவைதன் உணர அறிந்தும் ஏது என்று புரிய ஆனாலும் இவ்வாறெல்லாம் பின் இறங்கி ஏது என்று அறிய ஆனால் பின் இங்குதான்!!
ஆனாலும் இங்கும் ஒரு உலகம் அறிந்தும் கூட பின் அடியில் கூட!!!
அவந்தனும்!! ஏது என்று இங்குதான் எடுத்தேன் என்று சொல்லிவிட்டான் அவனும் !!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
இங்குதான் எனக்கு நகைகள் கிடைத்தது என்று அவர் இளவரசியிடம் சொல்ல இளவரசியின் ஆணைப்படி காவலாளிகள் இறங்கி பார்த்தபொழுது உள்ளே ஒரு தனி உலகம் இயங்கிக் கொண்டிருப்பதை பார்த்தனர்.
இதை இளவரசி இடம் அதாவது ஒரு குகை போன்று சுரங்கப்பாதை செல்கின்றது இன்று இளவரசியிடம் சொல்ல இளவரசியும் உள்ளே சென்று என்ன இருக்கின்றது என்று பாருங்கள் என்று காவலாளிகளுக்கு கட்டளை இட்டார்.
ஆனாலும் வீரர்களை அறிந்தும் ஏது என்றறிய அனைவரும் பின் இங்கே செல்லுங்கள்!!! என்ன இருக்கின்றது??? என்று தேடி வாருங்கள் என்று இளவரசியின் கட்டளை!!!
பின் பல வழிகளில் கூட பின் வீரர்கள் அதாவது இறங்கினர்!! இறங்கினர்!! இறங்கிக் கொண்டே இருந்தனர்!!
ஆனாலும் பின் ஏது என்று அறிய மீண்டும் சென்றவர்கள்.....!?!?!?!?!?!
ஆனாலும் அழைத்தும் அழைத்தும் வெளியே வரவில்லை!!
ஏது என்று அறிய போய்க்கொண்டே இருந்தது!!...
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
இளவரசியின் கட்டளைப்படி அந்த குகையில் சுரங்கப் பாதையில் உள்ளே இறங்கி செல்ல செல்ல உள்ளே போய்க்கொண்டே இருந்தது நீண்டு சென்று கொண்டே இருந்தது... மேலிருந்து ஒவ்வொரு வீரர்களாக அந்த குகைக்கு உள்ளே இறங்கி கொண்டே இருந்தனர்... ஆனால் சென்றவர்கள் யாரும் திரும்ப வரவில்லை மேலிருந்து குரல் கொடுத்து கூப்பிட்டாலும் யாரும் திரும்ப வரவில்லை.
எதை என்று அவர்களும் ஏது என்று அறிய இன்னும் பின் அப்படியே ஏது என்று கூட இங்கு செல்பவர்கள் அப்படியே பொம்மையாக மாறிவிடுவார்கள் அவ்வளவுதான்!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்.
அந்த குகைக்குள் உள்ளே செல்பவர்கள் பொம்மைகளாக மாறிவிடுவார்கள் யாரும் திரும்பி வர முடியாது.
ஆனாலும் இளவரசியும் இவனை பார்த்தாள்!!!
இளவரசியும் ஏது என்று அறிய அதாவது இருவரும் கூட!!!
பின் போனவர்கள் ஏது பின் வரவில்லை எவை என்று அறிய!!!
ஆனாலும் உண்மைச் சொல்!!!
ஒத்துக்கொள்!!!
போனவர்கள் மீண்டும் எங்கு??? எதை என்று அறிய!!!
ஆனாலும் இவந்தன் அனைத்தும் உண்மை சொல்லிவிட்டான்!!
இதுபோல் தவம் செய்தால் பின் ஞானம் ஏது என்று அனைத்தும் கிட்டும் உனக்கும் கூட என்று இளவரசியை பார்த்து இவந்தன்!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்.
அந்த இளவரசிக்கு இவர் மீது சந்தேகம் வர ஆரம்பித்து விட்டது ஏனென்றால் இவர் காட்டிய அந்த குகைக்குள் சென்ற ஆட்கள் யாரும் திரும்ப வரவே இல்லை சத்தம் போட்டு பார்த்தாலும் பதில் இல்லை... இதனால் இளவரசி மாடு மேய்ப்பவரிடம்... உண்மையைச் சொல்... உள்ளே சென்றவர்கள் எங்கு போனார்கள் என்ன ஆனார்கள்?? என்று கேள்விகளாக கேட்க!!
அந்த சமயத்தில் மாடு மேய்ப்பவர் இளவரசியிடம் நடந்த உண்மையை சொல்லிவிட்டார்.
அதாவது நான் இங்கே அமர்ந்து தியானங்கள் செய்தேன் எனக்கு மனதில் என்ன தோன்றியதோ எனக்கு என்ன விருப்பமோ அதை கேட்டேன் அது இங்கு எனக்கு கிடைத்தது.
இளவரசியே அதனால் நீங்களும் இங்கு அமர்ந்த தியானம் செய்யுங்கள் உங்களுக்கு எல்லாம் கிடைக்கும் ஞானமும் கிடைக்கும் என்று மாடு மேய்ப்பவர் இளவரசியிடம் சொல்லிவிட்டார்.
ஏது எவை என்று புரிய இவ் ராணியும் பின் அழகாக உட்கார்ந்து ஏது என்று அறிய பின் இது போலவே!!!தவம்!!
ஆனாலும் பின் ராணிக்கும் அனைத்தும் வந்தது அதேபோல!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
மாடு மேய்ப்பவரின் சொன்ன உண்மையை கேட்டு இளவரசியும் இங்கே அமர்ந்து தவம் செய்தார்.. இளவரசி தவம் செய்த பொழுது அவர் மனதில் என்ன நினைத்தாரோ அது எல்லாம் எப்படி மாடு மேய்ப்பதற்கு நகைகளாக கிடைத்ததோ அதேபோல் இளவரசி விரும்பியது எல்லாம் கிடைத்தது.
ஆனாலும் ஏதோ ஒரு சக்தி இருக்கின்றது என்று உணர்ந்து கொண்டாள்!!
அறிந்தும் கூட பின் இறைவனே என்று!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்.
அந்த இளவரசிக்கு அனைத்தும் புரிய ஆரம்பித்தது இங்கு ஏதோ ஒரு சக்தி இருக்கின்றது அந்த சக்தி இறைவனுடைய சக்தி என்பதை புரிந்து கொண்டார் அந்த இளவரசி.
ஆனாலும் இவள்தனும் கூட இறைவன் பின் சக்தியில் ஊறியவள் தான்!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்.
அந்த இளவரசியும் இறைவனை நம்புபவர் இறைவன் மீது அதிக பக்தி கொண்டவர்.
இளவரசிக்கும் இறைவன் மீது அளவுகடந்த பக்தி.
பின் உள்ளே போனவர்களும் வந்த பாடில்லை!!!
ஏது என்று அறிய மீண்டும் கீழே இறங்கி ஏது என்று அறிய அனைவருக்கும் இப்பொழுது யான் பின் அதாவது இளவரசி !! இளவரசி பதவியை விலகுகின்றேன்!! அதனால் நீங்களே ஆட்சி செய்து கொள்ளுங்கள் யான் செல்கின்றேன் என்று!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
இளவரசி இறைவனின் சக்தியை புரிந்து கொண்டு சரி உள்ளே குகைக்குள் சென்றவர்கள் யாரும் திரும்ப வரவில்லை... நாமே இறங்கிப் பார்ப்போம் என்று முடிவு எடுத்து... அங்கு கூடியிருந்த அரசபை ஆட்களிடம் நான் என்னுடைய இளவரசி பட்டத்தை துறக்கின்றேன்.
நீங்களே ஆட்சி செய்து கொள்ளுங்கள் இங்கு என்ன இருக்கின்றது என்பதை நான் பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்து இளவரசி பட்டத்தை துறந்து விட்டார்.
இவை தன் ஏது என்று அறிய இவ்வாறாக பல வகைகளில் கூட இங்கு அமர்ந்து தியானம் செய்தாள் இளவரசி நலமாகவே!!
இதனால் பின் போனவர்கள் வரவில்லையே!!! என்று மீண்டும் தவங்கள்! செய்து!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
இளவரசி பட்டத்தை துறந்த அந்த பெண்மணி உள்ளே சென்றவர்கள் திரும்ப வரவில்லையே என்ற கவலை கொண்டு இருந்தாலும் தவத்தில் இங்கே ஆழ்ந்து விட்டார்...
ஆனாலும் பின் இறைவா!!! உன்னை நம்பியே செல்கின்றேன்!! மீண்டும் என்னை மேல்நோக்கி அழைத்துச் செல் என்று சொல்ல!!
பின் மீண்டும் அதாவது பின் இதனிலே உள்ளே சென்றாள்!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
இளவரசி பட்டத்தை துறந்த அந்த பெண்மணி இங்கு தவம் இயற்றிக்கொண்டு உள்ளே சென்றவர்கள் யாரும் வரவில்லை என்று வேண்டிக் கொள்ள அது நடக்கவில்லை அதனால்.... இறைவா கடவுளே உங்களை நம்பி உள்ளே குகைக்கு உள்ளே செல்கின்றேன் நானும் உள்ளே சென்று காணாமல் போய் விடக்கூடாது மீண்டும் நான் மேலே வர வேண்டும் என்னை மேலே நீங்கள் அழைத்துச் செல்ல வேண்டும் என்று வேண்டிக் கொண்டு குகைக்குள் சென்றாள்.
அறிந்தும் ஏது என்று புரிய பின் உள்ளே சென்று பார்த்தால் பின் அத்தனை வீரர்களும் பொம்மைகளாக மாறி இருந்தனர்.
ஏது எவை என்று புரிய ஆனாலும் இவர்களும் ஏது என்று அறியாமலும் புரியாமலும் இருந்தனர்!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
குகைக்குள் சென்ற முன்னாள் இளவரசி அந்த பெண்மணி உள்ளே சென்று பார்த்த பொழுது உள்ளே இறங்கி சென்ற காவலாளிகள் அனைவரும் பொம்மைகளாக மாறி இருந்தார்கள்... அதாவது சிலையாக இருந்தனர்.
இருந்து என்ன?? பின் அறியாமலும் பின் சிந்தனைகள் ஏது என்று அறிய!!
அறிந்த பின் எவ்வாறு உண்மைதனை பின் விளக்க எப்படி???????
வந்துவிட்டோம்
இனிமேலும் இனிமேலும் சென்றாலும் பின் நம்மை நம் தனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் இவர்கள் என்றெல்லாம் யோசித்தாள் இளவரசி!!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
உள்ளே சென்ற முன்னாள் இளவரசி உள்ளே சிலையாக இருப்பதை பார்த்து பல யோசனைகள் வந்துவிட்டது இனி மேலே சென்று இவர்கள் எல்லாம் பொம்மையாக மாறிவிட்டார்கள் என்று உண்மையை சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை எல்லாம் யோசித்து இங்கேயே இருந்து விடுவோம் என்று அதாவது குகைக்குள்ளே இருந்து விடுவோம் என்று எண்ணிவிட்டார்.
இப்படியே பல வகையில் கூட ஆனாலும் அங்கே தவங்கள் புரிந்தாள்!! அறிந்தும் !!
இதனால் ஏது என்று அறிய ஆனாலும் அனைவரும் பின் கண் விழித்தனர்
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
இப்படி அந்த இளவரசி குகைக்கு உள்ளேயே தவங்கள் புரிய தொடங்கி விட்டார் இவர் தவம் புரிய புரிய சிலைகளாக பொம்மைகளாக இருந்த வீரர்கள் அனைவரும் உயிர் பெற்று செயல்பட தொடங்கி விட்டனர்.
ஆனாலும் ஏது என்று அறிய சரியாகவே அவ் இளவரசி ஆட்சியை நடத்தினாள்!!
இதனால் அறிந்தும் ஏது என்று கூட இன்னும் நினைத்தால் அதாவது இங்கே உள்ளேயே பின் இருந்து ஆட்சி செய்தாள் பின் அறிந்தும்!!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்.
இப்படி குகைக்குள்ளே தவங்கள் செய்து கொண்டே அனைத்தையும் தெரிந்து கொண்டு அறிந்து கொண்டு உள்ளே இருந்து கொண்டு நாட்டை ஆட்சி புரிந்தார்.
இறைவனும் தங்கி நின்று இத்தேசத்தை காப்பான் என்பது அவ்வளவரசியின் நல்ல எண்ணத்தோடு அதேபோல் அனைத்தும் உயிர் பெற்று இன்றளவும் இளவரசி அறிந்ததோடு அங்கே பின் தவங்கள் செய்து பின் அனைவரும் பின் இத்தேசத்தை மறைமுகமாக காத்துக்கொண்டுதான் இருக்கின்றாள் பின் உள்ளே.
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
அந்த இளவரசிக்கு ஒரு எண்ணம் தோன்றியது!!
நாம் இங்கே தவம் செய்து வேண்டிக் கொண்டதெல்லாம் நடக்கின்றது.
இதனால் இந்த நாட்டில் இறைவனுடைய முழு அனுக்கிரகமும் வேண்டும் இறைவன் இந்த நாட்டிலேயே இருக்க வேண்டும் இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற நல் எண்ணத்தோடு என்று அங்கேயே அமர்ந்து தவங்கள் செய்ய தொடங்கி விட்டார் இன்றளவும் அவருடைய தவம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது இறைவனுடைய அனுக்கிரதோடு அனைவரும் உள்ளே இருந்து மறைமுகமாக இந்த நாட்டை காப்பாற்றிக் கொண்டுதான் வருகின்றார்கள்.
இதற்கிடையே
இவ்வாக்கின் இடையே.. இடைமறித்து அந்த இளவரசியின் பெயர் என்ன??? என்று அருகில் இருந்த ஒரு அடியவர் போகர் பெருமானிடம் கேள்வியாக கேட்க!!
அறிந்து!!...அப்பா அறிந்தும் எதை என்று அறிய ஆனாலும் இப்பொழுது தேவையில்லையப்பா !!!அறிந்தும்
ஏன்? எதற்கு? இவ்வாறாக சொல்கின்றேன் என்றால் இதற்கும் பல அர்த்தங்கள் உண்டு!!
வருங்காலத்தில் யான் உரைப்பேன்!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
போகர் பெருமான்... அவர் யார் அவருடைய பெயர் என்ன என்பது இப்பொழுது தேவையில்லை இதற்கு பல அர்த்தங்கள் இருக்கின்றது வரும் காலத்தில் அவர் யார் என்பதை மறுவாக்கில் கூறப்போகின்றார்.
ஏது என்று புரிய இவ்வாறாக இளவரசி இன்னும் கூட ஆட்சி நடத்திக் கொண்டே!!!!
இதனால் வருவோருக்கெல்லாம் பின் அனைத்தும் கிடைக்கச் செய்வாள் அறிந்தும் !!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
இங்கே வேலோடு மலையில் அடியில் இருக்கும் குகையில் தனி உலகத்தில் அந்த இளவரசி இன்னும் தவம் செய்து கொண்டே இருக்கின்றார் அவருடைய ஆட்சி நடந்து கொண்டு இருக்கின்றது... இதனால் இங்கு வருவோருக்கெல்லாம் அனைத்தும் கிடைக்கச் செய்வார் அவர்.
ஏது என்று உணர இன்னும் கூட அறிந்தும் ஆனாலும் உள்ளே ஏது என்று புரிய பல!!....பின் அதாவது இப்பொழுதும் கூட வைரங்கள் பின் முத்து பவளங்கள் என்றெல்லாம் பின் இருக்கின்றது !!
அப்பா அறிந்தும் கூட அதன் மேல்தான் நீங்கள் நடந்து வந்தீர்கள் அவ்வளவுதான்!!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
எப்பொழுதும் இந்த வேலோடு மலையின் அடியில் பல பொக்கிஷங்கள் வைரங்கள் தங்கங்கள் முத்து பவளங்கள் என கொட்டி கிடைக்கின்றது.
நீங்கள் அதாவது சுவடி ஓதும் அகத்தியர் மைந்தன் உடன் வேளோடு மழைக்கு வந்த இலங்கை அகத்தியர் அடியவர்கள் நடந்து வந்த பாதைக்கு அடியில் எல்லாம் பொக்கிஷங்கள் இருக்கின்றன அதன் மீது தான் நீங்கள் நடந்து வந்தீர்கள் என்று போகப் பெருமான் கூறுகின்றார்.
ஆனாலும் பின் தெரியாமல் யார்? ஏது என்று அறிய வந்தாலும் அவர்களுக்கு வினையே.
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
இங்கு உண்மையான பக்தியோடு வராமல் வேறு விஷயங்களுக்காக ஆசைப்பட்டு வந்தால் அவர்களுக்கு வினைகள் ஏற்படும். கஷ்டங்கள் ஏற்படும் இறைவன் தண்டனை தருவார்.
ஏது இவை என்று அறிய இன்னும் பின் எதை என்று அறிய இன்னும் ஞானிகள் இங்கு தவம் செய்து கொண்டிருக்கின்றார்கள்
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
இங்கே மறைமுகமாக பல ஞானிகள் யார் கண்களுக்கும் தெரியாமல் தவம் செய்து கொண்டே இருக்கின்றார்கள்.
ஆனாலும் பின் அழகாக பின் இன்னொரு விஷயத்தையும் கூறுகின்றேன்!!... அவ் இளவரசியும் கூட பௌர்ணமி அமாவாசை திதியில் கூட அழகாக பின் ஐந்து பின் தலை நாகமுடனே வந்து பின் முருகனை வணங்கிட்டு செல்வாள்.
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
வேலோடு மலைக்கு அடியில் இருக்கும் குகையில் தவக்கோலத்தில் இருக்கும் அந்த இளவரசி... ஒவ்வொரு மாதத்திலும் அமாவாசை பௌர்ணமி நாட்களில் குகையில் இருந்து மேலே வந்து இங்கு வேலோடு மலையில் வீற்றிருக்கும் முருகனை தரிசனம் செய்து வணங்கி செல்வார்.. அவருடன் ஒரு ஐந்து தலை நாகமும் உடன் வரும்.
அப்பப்பா!!! ஏது என்று அறிய இதனால் பல விஷயங்கள் இருக்கின்றது!!
சில ரகசியமான இடங்களுக்கு பின் முருகன் அழைத்தால்தான் உண்டு!!
இல்லையென்றால் இல்லை!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
இங்கு பல அதிசயங்கள் ரகசியங்கள் இருக்கின்றது என்று போகர் பெருமான் சொல்கின்றார்.. இப்படிப்பட்ட ரகசியமான அதிசயமான இடங்களுக்கு வருவதற்கும் புண்ணியங்கள் தேவை முருகனின் அனுமதி தேவை... முருகனே அழைத்தால் மட்டும் தான் இது போன்ற அதிசய ஸ்தலங்களுக்கு வர முடியும்.
அவர் அதாவது முருகன் அனுமதி மறுத்துவிட்டால் யாராலும் இங்கு வர முடியாது.
முருகன் அழைத்தால்தான் உண்டு!!
அறிந்தும் ஏது என்று அறிய அவை பின் ஏது ஆனாலும் சில மனிதர்கள் இப்படி செப்பிவிட்டால் எடுத்து விடலாம் என்று! என்று!!
ஆனாலும் பின் முருகன் அழைத்து வந்து பின் உங்களுக்கு அனைத்தும் பின் கொடுக்கலாம்!!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
ஆனாலும் சில மனிதர்கள் ரகசியங்களை இப்படி சொல்லிவிட்டால் இங்கு செல்லலாம் எடுத்து விடலாம் என்று நினைக்கலாம்... ஆனால் அதெல்லாம் நடக்காது.
உண்மையான பக்தி உள்ளவர்கள் முருகனின் அருள் ஆசி பெற்றவர்களுக்கு முருகனே இங்கு அவர்களை அழைத்து உங்களுக்கு முருகனே உங்களுக்கு வேண்டியதை கொடுக்கலாம்.
சில ரகசியங்கள் உண்டு சில தீய இடங்களும் உண்டு அங்கு சென்றாலும் பின் அறிந்தும் சில சிலவற்றை கூட இழக்க நேரிடும்!!
ஆனாலும் பின் அவ்விடத்திற்கும் ஏது என்று அறிய அவ்விடமும் இங்குதான் உள்ளது.
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
இந்த உலகத்தில் பல ரகசியங்கள் இருக்கின்ற இடங்கள் இருக்கின்றது... இறைவனுடைய சக்திகள் இருக்கும் இடமும் இருக்கின்றது தீய சக்திகள் அதாவது துஷ்ட சக்திகள் இருக்கின்ற இடமும் இருக்கின்றது அங்கெல்லாம் தெரியாமல் சென்றால்... நமக்கு பேர் இழப்புகள் ஏற்படும்... இப்படிப்பட்ட இடங்கள் அதாவது தீய சக்திகள் இருக்கின்ற இடங்களைப் பற்றி குருநாதர் அகத்தியர் பெருமான் இந்தோனேசியா பாலி தீவுகளில் உரைத்த வாக்குகளில் தீய சக்திகள் இருக்கும் இடத்தையும் குறிப்பிட்டதை இங்கு அனைவரும் உணர்ந்து கொள்ளவும்.
இப்படி மனிதர்களுக்கு தெரியாத பல ரகசிய இடங்களில் தீய இடங்களும் இருக்கும் .
அங்கு மனிதர்கள் சென்றால் சில சக்திகள் முதல் கொண்டு இலக்க நேரிடும்.
அதேபோல் இங்கு இப்படி ரகசியமான அதிசயமான அதாவது வேலோடு மலையில் பல அற்புதங்கள் இருந்தாலும் இதற்கு அருகிலேயே ரகசியமாக தீய இடமும் இருக்கின்றது.
இங்குதான் உள்ளது!!!.... உண்மையாக அறிந்தும் கூட முருகனை நினைத்து நினைத்துச் சென்றால் அவ்விடத்தில் பின் நிச்சயம் செல்லலாகாது!!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்.
இங்கு வேலோடு மலைக்கு வரும் பக்தர்கள் முருகன் மீது உண்மையான பக்தி கொண்டு முருகனை நினைத்துக் கொண்டு இருந்தால் இங்கு வந்தால் முருகனுடைய அருளால் இங்கு இருக்கும் தீய இடத்திற்கு செல்ல முடியாது முருகனை தடுத்து விடுவார் . அந்த தீய இடங்களுக்கு செல்ல முடியாதவாறு தடுத்து நிறுத்தி ஆட்கொண்டு விடுவார்.
அறிந்தும் எப்படி இளவரசி ஏது என்று அறிய பின் பேர் பெற்றாளோ!!!!!!.....
அதுபோல் நிச்சயம் பின் இங்கு வந்திட்டு சென்றாலே பேர் பெறுவீர்கள்!!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்.
இங்கு வந்த இளவரசி எப்படி அழியாமல் தவம் செய்து நல்லாட்சிகள் புரிந்து பேர் பெற்றாரோ அதேபோல இங்கு உண்மையான பக்தியோடு நல்ல எண்ணத்தோடு அதாவது அந்த இளவரசி இந்த நாடு காக்கப்பட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இறைவனை வேண்டி தவம் செய்தார் அதேபோன்று சுயநலமாக இல்லாமல் பொதுநலமாக இருந்து இங்கு வந்து வேண்டிக் கொண்டால் இளவரசி பெற்ற நற்பேறு நாமும் பெற முடியும்.
ஆனாலும் அறிந்தும் !!!
ஆனாலும் இவை தன் கூட பின் ஏது என்று அறிய இன்னும் ரகசியங்கள் உள்ளது!!
போதும் இப்பொழுது!!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்.
போகர் பெருமான் சொல்கின்றார் இங்கு பல ரகசியங்கள் உள்ளது அதில் சில ரகசியங்களை இப்பொழுது கூறிவிட்டேன் இப்பொழுது இது போதும் மீண்டும் ரகசியங்களை பார்க்கில் கூறுவேன் என்று சொல்கின்றார்.
ஆனாலும் மறைமுகமாக பின் இன்றும் இளவரசி நிச்சயம் வருவாள்!!!
ஏது என்று அறிய ஆசீர்வாதங்கள் கவலைகள் இல்லை அனைவருக்கும்.
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
இந்த பங்குனி உத்திரத்தில் அந்த இளவரசி குகையில் இருந்து தவத்தில் இருந்து இந்த வேலோடு மலை முருகனை தரிசிக்க மேலே இன்று வருவார்.
அனைவருக்கும் ஆசிர்வாதங்கள் உண்டு அதனால் யாரும் கவலைப்பட வேண்டாம்.
ஏது என்று அறிய உண்மையான பக்தி உள்ளவர்களை பின் தானாகவே பார்த்திட்டு சென்றுவிடும்!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
அப்படி வருகின்ற இளவரசி உண்மையான பக்தர்களை தன்னுடைய கண்களால் பார்ப்பார்.. பார்த்துவிட்டு ஆசிர்வதித்து சென்றுவிடுவார்.
ஏது எவை என்று அறிய மனித ரூபமாகவும் எடுக்கலாம்!!! பேசிட்டும் செல்லலாம்!!! இவையெல்லாம் நடந்திருக்கின்றது
இங்கு
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்.
அப்படி குகையிலிருந்து மேலே வரும் இளவரசி ஏதாவது ஒரு சாதாரண பெண்மணி போல அல்லது மனிதன் போல ரூபத்தில் வரலாம்.
இங்கு வரும் உண்மையான பக்தர்களிடம் பேசிவிட்டும் செல்வார்... இதெல்லாம் ஒரு வழக்கமான ஒரு நடைமுறையாக நடந்திருக்கின்றது இங்கு.
அறிந்தும் அப்படி பின் பேசிட்டு ஏது என்று அறிய இன்னும் ரகசியங்கள்!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்.
இப்படி ஏதாவது ஒரு ரூபத்தில் இளவரசி வந்து உண்மையான பக்தி உள்ளவர்களிடம் பேசி விட்டு சென்றால் அவர்களுக்கு பல ரகசியங்கள் தெரியவரும்.
இதனாலே இங்கும் பின் நீரும் எதை புரிய இன்னும் பின் உலகமும் பின் ஒரு பின் அதாவது அவ்வுலகத்திற்கு இவ்வளவரசி தான்!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
இந்த வேலோடு மலைக்கு கீழே பாதாள உலகம் போன்று ஒன்று இருக்கின்றது அல்லவா அந்த உலகத்தில் நீர்நிலைகள் உற்பத்தியாகி சென்று கொண்டே இருக்கின்றது கீழே ஒரு உலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது அந்த உலகிற்கு இப்பொழுதும் அவர்தான் இளவரசி.
ஆட்சி ஏது என்று புரிய இவ்வாறாகவே பல பல வடிவங்களில் கூட பின் இன்னும் ஏது என்று அறிய இதை தன் காண பின் அதாவது தவங்கள் செய்து செய்து சித்தர்களை அனைவரையும் உள்ளே அழைத்தாள் அவள் !!
அனைத்தும் இத்தேசத்தின் நன்மைக்காகவே !!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
இப்படி உள்ளே தவம் செய்து கொண்டிருக்கும் அந்த இளவரசி அவருக்கு இந்த நாட்டின் மீது பலமான அக்கறை... இதனால் அவர் தவம் செய்யும் பொழுது இந்த நாட்டை காப்பதற்கு தவத்தில் சித்தர்கள் அனைவரும் உள்ளே வரவேண்டும் என்று பல வடிவங்களில் தவம் செய்து சித்தர்களை உள்ளே வரவழைத்து அனுகிரகம் பெற்றார்...
இங்கே அனைத்து சித்தர்களும் வரவேண்டும் என்று வேண்டிக்கொண்டு தவம் செய்து சித்தர்களை வரவைத்து இந்த நாட்டை காப்பாற்றுவதற்காக பொதுநலமாக இந்த நாட்டின் நன்மைக்காக வேண்டிக் கொண்டார்.
ஏதோ ஒன்று எதை என்று புரிய இதனாலே அவ் இளவரசிக்கும் கூட இன்னும் ஏது என்று அறிய சித்தர்களும் ஞானிகளும் பெரும் போராட்டமாகவே இவ்தேசத்தை பின் ஒரு பெண் தான் பின் ஏற்று நடத்த வேண்டும் என்று!!
இன்னும் பின் அவ் இளவரசிக்கு ஆவல் நிலை!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
அந்த இளவரசி அவருக்கு ஒரே ஒரு எண்ணம் அதுவும் பொது நலமாக இந்த நாட்டை நல்படியாக காக்க வேண்டும் இதை ஒரு போராட்டமாகவே எடுத்துக் கொண்டு போராளி போல் போராடிக் கொண்டு இந்த நாட்டை ஒரு பெண்தான் ஆட்சி செய்ய வேண்டும் என்று சித்தர்களிடமும் வேண்டிக்கொண்டு தவம் செய்து வருகின்றார்..
இது அவரின் மனதில் ஒரு ஆவலாக இருக்கின்றது.
ஏது இவை என்று அறிய இதனால் அறிந்தும் புரிந்தும் கூட இதனாலே நிச்சயம் உங்களுக்கு தேவையானதை அழகாக கிடைக்கச் செய்வான் முருகனே!!!
கேட்டுத்தான் பெற வேண்டும் என்று இல்லை!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்.
உங்கள் அனைவருக்கும் முருகனுடைய ஆசிர்வாதம் உண்டு உங்களுக்கு என்னென்ன வேண்டுதல்கள் தேவைகள் அனைத்தையும் முருகனே செய்து கொடுப்பார்
முருகனிடம் எதையும் கேட்க தேவையில்லை... அவருக்கே தெரியும் யார் யாருக்கு என்னென்ன தரவேண்டும் என்று!!
அவரிடம் கேட்டுப் பெறக்கூடிய அளவுக்கு இல்லை.
அதனால் முதலிலே சொன்னேனே!!! ஒருவனுக்கு ஒன்றுமே தெரியவில்லை!!
அவனுக்கு அனைத்தும் கிட்டிற்று இதுதான் பின் உலக நீதி!!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
போகர் பெருமான் சொல்கின்றார்... ஒரு ஏழை மாடு மேய்ப்பாளர் அவருக்கு ஒன்றுமே தெரியாது ஆனால் அவருக்கு முருகன் அனைத்தையும் கொடுத்தார்.... இப்படித்தான் முருகன் அனைத்தும் கொடுப்பார் இதுதான் உலக நீதி இறைவனின் நீதி.
இதே (போல்) ஆனாலும் உங்களுக்கு தேவையானதை தான் முருகன் வழங்குவான் சொல்லிவிட்டேன்!!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்.
அவருக்கு எப்படி முருகன் கொடுத்தாரோ அதேபோல் உங்கள் அனைவருக்கும் முருகன் கொடுப்பார்.
இன்னும் ஏது என்று புரிய இவ்வாறாகவே அறிந்தும் இதை என்று அறிய இதனால்தான் மண்ணோடு மண்ணாக மேலே!!!
ஆனாலும் கீழே உலகம் ஒன்று!!!!
கீழே
ஒரு உலகம் ஒன்று இருக்கின்றது!!
ஆனாலும் யார்? எதை என்று அனைவரையும் அழைப்பதில்லை முருகன்
இதனாலே சில ஆட்களை தேர்ந்தெடுக்கின்றான் முருகன்!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
நாம் பார்க்கும் பொழுது ஒரே மண்ணாக காட்டுப்பகுதியாக இருக்கின்றது மேலே மண்ணும் காடும் இருக்கின்றது ஆனால் அடியில் கீழே ஒரு உலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது.
ஆனாலும் இங்கு அனைவரையும் வர வைப்பதற்கு முருகன் யாரையும் அழைப்பதில்லை அவர் யார் யாரை வர வைக்க வேண்டும் என்று நினைக்கின்றாரோ அவர்களை இங்கு வர முடியும் முருகன் தேர்ந்தெடுக்கும் மனிதர்கள் மட்டும்தான் இங்கு வர முடியும்.
இதனாலே பல ஞானிகளும் இன்னும் கூட தவம் செய்து கொண்டே!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
இங்கே இன்னும் பல ஞானிகள் சித்தர்கள் மறைமுகமாக தவம் செய்து கொண்டே வருகின்றார்கள்.
இதனாலே அனைவரும் ஏது என்று புரிய கவலைகள் வேண்டாம்!!
இன்னும் ரகசியங்கள் இருக்கின்றது ஒவ்வொன்றாக தெரிந்து கொள்ள வேண்டும் அனைத்தும் தெரிந்து கொண்டாலும் நிச்சயம் நீங்கள் பைத்தியக்காரர்கள் ஆகிவிடுவீர்கள்!!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
யாரும் கவலைப்பட வேண்டாம் இன்னும் ரகசியங்கள் எல்லாம் இருக்கின்றது ஒவ்வொன்றாக வாக்கில் சித்தர்கள் கூறுவார்கள்... ஒரே அடியாக அனைத்தையும் தெரிந்து கொண்டால் குழப்பிக்கொண்டு நாம் பைத்தியமாகி விடுவோம்.. ஆனால் சித்தர்கள் ஒவ்வொரு ரகசியங்களையும் ஒவ்வொரு வாக்கிலும் அதாவது ஒன்றாம் வகுப்பு இரண்டாம் வகுப்பு பாட திட்டங்கள் போல ஒவ்வொன்றாக நமக்கு ரகசியங்கள் எல்லாம் சொல்லப் போகின்றார்கள்.
எம்முடைய ஆசிகளோடே!!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
அதாவது போகப் பெருமானின் ஆசிர்வாதத்தோடு ஒவ்வொரு ரகசியங்களும் நாம் தெரிந்து கொள்ள முடியும்.
இதை என்று அறிய எவ்வாறாக நின்றின்று அறிந்தும் போதுமில்லை இதை தன் அறிந்தும் பின் போதாதது ஏது? எதை என்று உணராமலும் உணர்ந்தும் கூட அழகாகவே இருக்கின்றார் இருக்கின்றானே பின் மனதில் அழகாகவே வேலோடே!!! மயிலோடே!! அறிந்தும்!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
மனம் முழுவதும் முருகன் என்றாலும் இன்னும் போதவில்லை... முருகனை உணர்ந்தாலும் உணராவிட்டாலும் அழகாகவே இருக்கின்றார் முருகன் மனதில் வேலோடும் மயிலோடும்.
ஏனைய பின் சித்தர்கள் எதை எதை என்று அறிய உயிர் பின் போனவனையும் உயிர்ப்பிக்கும் மலை ஏது என்று அறிந்தும் புரிந்தும் இவை என்று உணர இங்கே பல மூலிகைகளடா.
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
சித்தர்களின் வாசம் இருக்கும் மலை இந்த வேலோடு மலை.. இந்த மலையில் இறந்தவர்களையும் உயிருடன் திரும்பக் கொண்டு வரும் சக்தி வாய்ந்த மூலிகைகள் இங்கே இருக்கின்றது.
இதனாலே இம் மலையை தொட்டவன்!! எப்பொழுதும் வென்றவன் ஆவான்!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
இப்படி பல அதிசயங்கள் இருக்கும் இந்த வேலோடு மலைக்கு வந்தவர்கள் அனைவரும் வெற்றியாளர்கள். அனைத்திலும் வெல்வார்கள்.. ஆனாலும் இங்கு வருவதற்கு முருகனுடைய அனுமதி வேண்டும் முருகனுடைய அனுமதி பெற்றவர்கள் தான் இங்கு வர முடியும்.
நீங்களும் தேடி தேடி அலைந்தவர்கள் தானே !!!...
அதனாலே வந்தேனே!!!....
சொல்ல வந்தேனே!!!....
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
சுவடி ஓதும் அகத்திய மைந்தன் திரு ஜானகிராமன் ஐயாவுடன் வேலோடு மலைக்கு சென்ற இலங்கை அகத்தியர் அடியவர்களுக்கு போகர் பெருமான்.. நீங்களும் சித்தர்களை தேடி தேடி அலைந்தவர்கள் தான் சித்த மார்க்கத்தில் ஜென்மம் ஜென்மமாக வந்தவர்கள் தான் அதனால்தான் உங்களுக்கு இதை சொல்கின்றேன் என்று வாக்கில் கூறுகின்றார்.
இதனாலே பக்குவம் வேண்டும் !!
பக்குவம் வேண்டும்!!
அவ் பக்குவம் தேவை உணர அறிந்தும் பல இன்னல்களை பின் சந்தித்தே பெறுவது அவசியம் அவசியம்!!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்.
மேலும் சித்த நிலையை புரிந்து கொண்டு நடப்பதற்கு பல பக்குவங்கள் வேண்டும்.. அப்படி பக்குவம் அடைவதற்கு பல சோதனைகள் கஷ்டங்களை சந்திக்க வேண்டும் அப்படி கஷ்டங்களை சோதனைகளை சந்தித்தால் தான் கடந்தால்தான் பக்குவத்தை பெற முடியும்.
இவையெல்லாம் வந்தாலே யாங்கள் உங்களை நெருங்குவோம்!!
எப்பொழுது ?? பின் அவமானம் படு தோல்வி!! இழிசொல்!!! இவையெல்லாம் யார் ஒருவனுக்கு கிட்டுகின்றதோ என் அருகில் வந்து கொண்டிருக்கின்றான் என்று அர்த்தம்.
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
உங்களுக்கு வாழ்க்கையில் கஷ்டங்கள் வருகின்றது சோதனைகள் வருகின்றது அதாவது அவமானம் படுதோல்வி கெட்ட பெயர் இழிவான பேச்சுக்கள் இதெல்லாம் யார் ஒருவர் கடந்து செல்கின்றாரோ அவர்கள் சித்தர்கள் அருகில் இருக்கின்றார்கள் அதாவது சித்த மார்க்கத்தில் அவர்கள் வழி நடக்கின்றார்கள் என்பது பொருள்.
ஏனென்றால் சகிப்புத்தன்மை சித்த மார்க்கத்தில் தேவை சோதனைகளை கடக்க வேண்டும் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும் இதனால் தான் பக்குவங்கள் ஏற்படும் பக்குவம் அடைய அடைய சித்தர்கள் வழியில் முன்னேறி சென்று கொண்டிருக்கின்றோம் என்று அர்த்தம் ஆகும்.
நெருங்கி!! அறிந்தும் பின் நெருப்பு அறிந்தும் படும் அவன் மேல்!!
இன்னும் அறிந்தும் உயர்வான்!!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
இப்படி வாழ்க்கையில் சகிப்புத்தன்மையோடு சோதனைகளை கடந்து வரும் பொழுது... எங்களை நெருங்க முடியும் எங்களை நெருங்கும் பொழுது எங்கள் அக்னி அதாவது சித்தர்களின் ஜோதி பிரகாசம் உங்கள் மீது படும்...
அப்பொழுது உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் கிடைத்து உயர்ந்து நிற்பீர்கள்.
இதை என்று அறிய இன்னும் (மூலிகைகள்) வாசனை ஏது என்று அறிய உடம்பிற்கு மட்டுமே!!! அதாவது பின் உடம்பிற்கு மட்டுமே அதை நீங்கள் பின் உணர அவசியமே இல்லை!!
மூலிகைகளின் வாசனை!!
மூலிகை காற்று!!
எதை ஏது என்று அறிய பரிசுத்தமான அறிந்தும் அவையெல்லாம் இங்கு ஏது என்று அறிய பல வகையிலும் நீங்களும் வந்திருக்கின்றீர்கள் அல்லவா எப்பொழுதோ உள்வாங்கி விட்டீர்கள்!!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
இங்கே பல அதிசயமான மூலிகைகள் இருக்கின்றது என்று போகர் பெருமான் கூறினார் அல்லவா அதை நீங்கள் எது எப்படி என்பதை அறிய வேண்டியதில்லை... மூலிகையின் பரிசம் அதாவது மூலிகைகள் வெளியிடும் காற்று அதனுடைய வாசனை மூலிகை காற்று நீங்கள் அடிக்கடி இங்கு வேலோடு மலைக்கு வந்திருக்கிறீர்கள் அல்லவா... அப்பொழுது உங்களுக்கே தெரியாமல் நீங்கள் இந்த மூலிகை காற்றை சுவாசித்து உள்ளீர்கள் இந்த மூலிகை காற்று உங்களுக்குள் சென்று விட்டது.
இதனால் இன்னும் வருங்காலத்தில் யோகம்!!
உண்மைதனை கூட மந்திரங்களை கூட உருவேற்றி உலகத்தை வெல்லலாம்!!!
(மந்திர சித்தி)
ஆனாலும் பின் சக்திகள் கிடைக்கும்!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
சுவடி ஓதும் அகத்திய மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா அவர்கள் இலங்கை அகத்தியர் அடியவர்களை பார்த்து நீங்கள் அடிக்கடி இங்கு வந்துள்ளீர்கள் அதனால் உங்களுக்கு தெரியாமல் இங்கு இருக்கும் மூலிகைகளின் காற்றை சுவாசித்து இருக்கின்றீர்கள் அதனால் உங்களுக்கு வருங்காலத்தில் யோகமாக அமையப் போகின்றது.
நீங்கள் மந்திர ஜபம் செய்தால் மந்திரத்தை உருவேற்றினால் உங்களுக்கு மந்திர சித்தி பலிதம் ஆகும்
மந்திர சக்தி உங்களுக்கு கிடைக்கும்.
அதற்கு உயிர் பின் முருகன் தான் கொடுக்க வேண்டும்!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்.
உங்களுக்கு மந்திர சித்தி கிடைத்து மந்திரங்களை உருவேற்றினாலும் சக்திகள் கிடைத்தாலும் அது செயல்பட அந்த மந்திரங்களுக்கு சித்திகளுக்கு உயிர் தருவது முருகன் தான்...
அறிந்தும் ஆனாலும் சோதனைகளை கடந்து தான்!!!அறிந்தும்!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
முருகன் சாதாரணமாக மந்திர சித்திக்கு உயிர் கொடுத்து விட மாட்டார் நீங்கள் பல சோதனைகளை கடந்தால் தான் உங்களுக்கு மந்திர சித்தியும் கிடைக்கும் சக்தியும் கிடைக்கும் மந்திர சித்தி பலிதமும் ஆகும்.
கவலைகள் வேண்டாம்!!! அனைவருக்கும் எம்முடைய ஆசிகள்!! உங்களை பலமுறை பல இடத்தில் பார்த்திட்டேன்!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்.
யாரும் கவலை கொள்ள வேண்டாம் உங்கள் அனைவருக்கும் போகர் பெருமானின் சித்தர்களின் ஆசிர்வாதங்கள்... அதாவது இலங்கையில் இருக்கும் அகத்தியர் அடியவர்கள் அடிக்கடி இங்கு வேலோடு மலைக்கு வந்து செல்லும் பொழுது பலமுறை உங்களை பல இடங்களில் போகர் பெருமான் பார்த்து உள்ளார் ஆசிர்வாதமும் தந்திருக்கின்றார்.
என்னுடைய ஆசிகள் இருக்கும் இருக்கின்ற பொழுது கவலை இல்லை!!
அனைத்தும் பின் மிதித்து வாருங்கள்!!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
போகர் பெருமானின் பரிபூரண ஆசீர்வாதங்கள் இருப்பதால் நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம்... தடை தாமதங்களை அனைத்தையும் மிதித்து ஏறி வாருங்கள் மேலே.
ஏது!!! என்று ஏதும் கொடுக்கவில்லையே என்று பின் ஏங்கி விடாதீர்கள் !!!
நிச்சயம் பின் யாங்கள் இருக்கின்றோம் உங்களுக்கு துணையாக!! சித்தர் வழியில் வருவோருக்கும் பின் அதாவது அனுக்கிரகம் ஏது என்று புரிய முன்ஜென்மத்திலிருந்தே!!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
சோதனைகள் நடக்கும் பொழுது உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லையே என்று.. ஏக்கம் அடைய வேண்டாம் உங்களுடைய முயற்சியை பக்தியை காட்டிக் கொண்டே இருக்க வேண்டும்... இப்படி இருப்பவர்களுக்கு சித்தர்கள் துணையாக இருப்பார்கள் சித்தர்கள் வழியில் வருவோருக்கு அதாவது அனுகிரகம் எப்பொழுதும் இருக்கும்
சித்தரை வணங்குவதற்கும் சித்தர் வழியில் வருவதற்கும் பூர்வ ஜென்ம புண்ணியம் தேவை... முன் ஜென்மத்திலேயே சித்த மார்க்கத்தில் தொடர்புகள்.. இருப்பதால் முன் ஜென்மத்திலேயே இருந்து அனுக்கிரகம் ஆசிகளும் இருந்து கொண்டே இருக்கின்றது..)
அறிந்தும் ஏது என்று அறிய இதனால் கவலை கொள்ள வேண்டாம் சித்தன் வழி ஒரு பைத்திய வழி அவ்வளவுதான்!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்.
இதனால் யாரும் கவலை கொள்ள வேண்டாம் சித்தர்கள் வழி ஒரு பைத்திய வழி !! சித்தன் போக்கு சிவன் போக்கு.... வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்கள் வந்தாலும் விடாப்பிடியாக பிடித்துக் கொண்டு சென்றாலே போதும்.
ஆனாலும் அறிந்தும் ஏது என்று புரிந்து கொள்ளுங்கள்!!
அறிந்தும் வெற்றி உண்டு!!!
ஆனாலும் உங்களுக்கு என்ன தேவை? நீங்கள் என்ன இன்பமாக விரும்புகின்றீர்களோ அதை தடுத்து நிறுத்தி பின் கடைசியில் கொடுப்போம் அவ்வளவுதான் !!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
அனைவரும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் அனைவருக்கும் வெற்றி உண்டு.
நீங்கள் என்னென்ன ஆசைப்படுகிறீர்கள்?? உங்களுக்கு எது எது கிடைத்தால் சந்தோஷம் என்று நினைக்கின்றீர்கள்?.... அவையெல்லாம் உடனடியாக கொடுத்து விடாமல் தடுத்து ஆட்கொண்டு சோதனைகளை கொடுத்து பக்குவங்களை கொடுத்து கடைசியாக நீங்கள் விரும்பியது அனைத்தையும் தருவார்கள் சித்தர்கள்.
கவலைகள் கொள்ள வேண்டாம்!!! அனைவரையும் உங்களை பார்த்தவன் ஜென்ம ஜென்மமாகவே!!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
யாரும் கவலைப்பட வேண்டாம்... போகர் பெருமான் நீங்கள் முற்பிறவுகளில் எடுத்த பல ஜென்மங்களில் எல்லாம் உங்களைப் பார்த்து இருக்கின்றார் ஏனென்றால் ஒரு ஜென்மத்தில் சித்தர் வழியில் யாரும் அவ்வளவு சீக்கிரம் வர முடியாது ஜென்மம் ஜென்மமாக தொடர்பு இருந்தால் மட்டுமே சித்தர் வழியில் வர முடியும் சித்தரை வணங்க முடியும் அதுவும் சித்தரின் அனுமதியோடு... அவர்கள் அனுமதித்தால் மட்டும் தான் அவர்கள் மீது பக்தியே நாம் காட்ட முடியும்... உங்கள் அனைவரையும் ஜென்மம் ஜென்மமாக பார்த்திருக்கின்றேன் என்று போகர் பெருமான் சொல்கின்றார்... நீங்கள் முன் ஜென்மத்தில் சித்தரை வழிபட்டு உள்ளீர்கள்.
அப்பப்பா!!! அறிந்தும் கவலைகள் வேண்டாம்!!
இன்னும் ரகசியங்கள் உள்ளது பல கோடி ரகசியங்கள் இங்கு உள்ளது!!
எதை யான் செப்பிவேன்?????...
யாரும் கவலை கொள்ளாமல் இருங்கள் இன்னும் பல கோடி ரகசியங்கள் இந்த உலகத்தில் இருக்கின்றது இன்னும் இந்த வேலோடு மலையில் இன்னும் கோடி ரகசியங்கள் இருக்கின்றது...
எந்த ரகசியத்தை நான் சொல்லுவேன் எதை விடுவது?? எதைச் சொல்வது??? என்று போகர் பெருமான்... இந்த இடத்தின் மகிமையைப் பற்றி சிலாகித்துக் கூறுகின்றார்.
இங்கிருந்து ஏது வட்டமாக பின் இணையுங்கள்!!
முருகனின் பின் திரு உருவங்களையும் கூட!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
அதாவது போகர் பெருமான் சொல்கின்றார் இலங்கை நாட்டில் இருக்கும் முருகனின் படை வீடுகள் ஆலயங்களை மேப்பில் வரைந்து பார்க்க சொல்கின்றார்)
திரு அவதாரத்தைக் கூட தெரியும் அப்பொழுது!!!
(அடியவர்கள் இலங்கையில் இருக்கும் அறுபடை வீடுகள் கதிர்காமம் என இணைத்து பார்த்த பொழுது வேல் வடிவத்தில் வந்தது அடியவர்கள் அனைவரும் ஆச்சரியமுற்றனர்)
கவலை கொள்ள வேண்டாம்!!!
இன்னும் ஞானிகள் எல்லாம் இருக்கின்றனர் !!
தங்கி !!
ஏது என்று புரிய அனைத்தும் பின் எப்பொழுதோ ஆசீர்வாதங்கள் பல கோடியப்பா!!
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
இன்னும் சூட்சுமமாக இங்கு பல ஞானிகளில் தங்கி இருக்கின்றார்கள்... அவர்களுடைய ஆசிர்வாதங்கள் பல கோடி அவர்களுடைய ஆசிர்வாதங்களை நீங்கள் எப்போதும் பெற்று விட்டீர்கள்.
உண்மை ஏது என்று அறிய இன்னும் தெரிந்து கொள்ளுங்கள்!!
ஒவ்வொன்றாக சொன்னால்தான் புரியும் எம்முடைய ஆசிகள் இப்பொழுது அனைவருக்கும்.
சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்
உண்மையை ஒவ்வொன்றாக ஒவ்வொரு வாக்கிலும்.. சித்தர்கள் போகர் பெருமான் அகத்தியர் பெருமான் கூறப்போகின்றார்கள்... ஒவ்வொன்றாக அனைவரும் தெரிந்து கொள்ள முடியும்... ஒவ்வொன்றாக தெரிந்து கொண்டால் தான் உங்கள் மனதில் தங்கி நிற்கும் புரிந்து கொள்ள முடியும் ஒரேடியாக சொல்லிவிட்டால் புரிந்து கொள்ள முடியாமல் குழப்பிக் கொண்டு விடுவோம் அதனால் ஒவ்வொன்றாக நமக்கு ஒவ்வொரு ரகசியமாக நமக்கு வாக்குகளில் தெரிவிக்க போகின்றார்கள் சித்தர்கள். இப்போது அனைவருக்கும் ஆசிர்வாதம் தந்துவிட்டார்.
ஆசிகள்!!! ஆசிகள்!!!!!
வேலோடு மலைக்கு செல்லும் பயண வழி குறிப்பு
இலங்கை மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்குச் செல்லும் வீதியில் உள்ள வந்தாறுமூலைக்கும், சித்தாண்டிக்கும் இடையில் மாவடிவேம்பு என்னுமிடம் அமைந்துள்ளது. இங்கிருந்து தென்மேற்குப் பக்கமாகச் செல்லும் வீதி சந்தனமடு ஆறு வரை செல்கிறது. இப்பகுதியில் மிகப்பெரிய பசுமையான வயல் நிலங்கள் காணப்படுகின்றன. இங்கிருந்து மேற்குப் பக்கத்தில் சுமார் 3 கி.மீ தூரத்தில் உள்ள சந்தனமடு ஆறு வரை இவ்வயல் நிலங்கள் உள்ளன. இவ்வயல் நிலப்பகுதி தெற்குப் பக்கத்தில் மகாஓயா வீதியில் உள்ள இலுப்படிச்சேனை வரை சுமார் 11 கி.மீ தூரம் வரை காணப்படும் மிகப்பெரிய வயல் களனியாகும். சுமார் 36 சதுர கி.மீ பரப்பளவில் இப் பகுதியில் நெல் பயிர் செய்யப்படுகிறது.
சந்தனமடு ஆற்றைக் கடந்து அக்கரைக்குச் செல்லும் துறை அமைந்துள்ளது. இதுவே முறாக்கமடுத் துறையாகும். ஆனால் பொதுவாக மக்கள் இத்துறையை சந்தனமடு ஆற்றுத்துறை என அழைக்கின்றனர். ஆனால் சந்தனமடு ஆற்றுத்துறை இங்கிருந்து வடக்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. ஆற்றைக் கடந்தவுடன் வேரம் திடல், இலுக்குப் பொத்தானை ஆகிய கிராமங்கள் ஊடாகச் செல்லும்போது அடர்ந்த காடு காணப்படுகிறது. காட்டுக்குள் சிறிது தூரம் சென்றதும் ஒரு மலையடிவாரத்தைக் காணலாம். இங்கு சுமார் 60 அடி உயரமான தட்டையான பரந்த இரண்டு மலைகள் காணப்படுகின்றன. இவற்றில் ஒரு மலையின் உச்சியில் முருகன் கோயில் அமைந்துள்ளது. அதுவே வேலோடும் மலை .
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில், மாவடிவேம்பு மற்றும் சித்தாண்டிக்கு அருகில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலம் வேலோடு மலை (அல்லது வேலோடும் மலை) ஆகும். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுகள் பழமையான தொல்லியல் சான்றுகளையும், சித்தர்களின் ஆன்மீக வரலாற்றையும் கொண்டுள்ள இத்தலம், ஒரு புகழ்பெற்ற வழிபாட்டுத் தலமாகவும் விளங்குகிறது.
அமைவிடம்: மட்டக்களப்பில் இருந்து கொழும்பு செல்லும் வழியில், வந்தாறுமூலைக்கும் சித்தாண்டிக்கும் இடையே உள்ள மாவடிவேம்பு பகுதியிலிருந்து தென்மேற்காகச் சென்று இத்தலத்தை அடையலாம்.
வழிபாட்டுத் தலங்கள்: இந்த மலையைச் சுற்றி சிவன் கோவில், சிவலிங்கங்கள் முருகப் பெருமான் ஆலயம் மற்றும் 18 சித்தர்களின் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
சித்தர்களின் குரல் அறக்கட்டளை மற்றும் தேவஸ்தானத்தின் சார்பில் இங்கு தொடர்ச்சியான சித்தர்கள் வேள்வி, யாகங்கள் மற்றும் தியான வழிபாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
நீங்கள் இத்தலத்திற்கு நேரில் சென்று வரத் திட்டமிட்டால், மட்டக்களப்பு நகரத்திலிருந்து சித்தாண்டி பகுதிக்குரிய உள்ளூர் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி பயணிக்கலாம்.
https://share.google/x0IT7vbR1B3LPceqS
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)

.jpeg)
.jpeg)


No comments:
Post a Comment