1/5/2026 அன்று குருநாதர் அகத்திய பெருமான் சித்ரா பௌர்ணமி அன்று உரைத்த வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம்: மங்கல தேவி கண்ணகி கோயில்.தேனி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள பளியன்குடியிலிருந்து சுமார் 6 முதல் 7 கி.மீ தொலைவிலும், கேரள மாநிலம் குமுளியிலிருந்து (தேக்கடி) சுமார் 15 கி.மீ தொலைவிலும் அடர்ந்த வனப்பகுதி. தமிழ்நாடு-கேரளா எல்லையில்.
ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன்.
அப்பனே, ஆசிகள், கவலைகள் வேண்டாம், அப்பனே.
ஏன்?, எதற்கு? இவ் மாற்றங்கள்??? என்பதையெல்லாம்!!....
வருங்காலத்தில், அப்பனே, அழகாகச் சொல்வேன்;
கவலைகள் வேண்டாம், அப்பனே.
ஒவ்வொரு பிறப்பிலும், அப்பனே, பல வகையான, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட துன்பங்கள். ஏற்று, ஏற்று, அப்பனே, மனிதன் ஏது என்று தெரியாமலும், எதை என்று புரியாமலும் வந்து வந்து, அப்பனே, பின் பிறவி கடனை!?!?!?!?!?!?!........
அப்பனே, என்னவென்று அறியாமலே சென்று விடுகின்றான், அப்பனே.
இதனால் என்ன??, ஏது ?? என்று அறிய, இதனால், அப்பனே, நல்விதமாகவே அறிந்தும் புரிந்தும் கூட, அப்பனே, மக்கள், அப்பனே, இன்னும் ஏது என்று கூட கலியுகத்தில் தெளிவு, தெளிவு பெறப் போவதில்லை. அப்பனே,
இதனால் நிச்சயம் தன்னில் கூட அங்கங்கு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக, நிச்சயம் தன்னில் கூட ஞானிகள், அப்பனே, இருக்கின்றார் அல்லவா?
அவர்கள் நிச்சயம் தன்னில் கூட எழுந்து!!!, அப்பனே,
(குருநாதர் ஒவ்வொரு ஞானிகளையும் ஜீவ சமாதியில் அடைந்துள்ள மகான்களையும் இந்த உலகத்தையும் மனிதர்கள் நல்வாழ்வு பெறுவதற்கு காப்பாற்றுவதற்கு எழுப்பிக் கொண்டிருக்கின்றார்)
, மக்களை, அவர்களும் மக்களுக்கு அப்பனே, இன்னும் ஒரு வாய்ப்பை, அப்பனே, பின் அதாவது சந்தர்ப்பத்தை கொடுப்பார்கள், அப்பனே.
இல்லையென்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இன்னும் கடினம் தானப்பா வாழ்க்கை வாழ்வது என்பேன், அப்பனே.
இவையே யான் எடுத்துரைத்துக் கொண்டே வருகின்றேன். அப்பனே, நலங்களாகவே!!
வெற்றிகளும், அப்பனே, எதை என்று புரிய, அப்பனே. இதைப் போலத்தான், அப்பனே, !!!
பின் எவை என்று கூட இத்தேவி அறிந்தும், அப்பனே, நல்விதமாக, அப்பனே, எவ்வாறோ, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட!!!
இவ்வாறாக, நிச்சயம் தன்னில் கூட பின் கலியுகத்தில் எவ்வாறெல்லாம் நடந்தது??? என்பதை எல்லாம் அறிந்தும் கூட,
(கண்ணகி தேவி சரித்திரம்)
எதை என்று அறிய கோபத்தில் சாபம் விட்டுவிட்டாள்.
ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட பின் பல, பின் ஞானிகளும் கூட இவ்வாறு, நிச்சயம் தன்னில் கூட, அதாவது கற்புக்கரசி ஆக நீ இருந்தாய்.
ஆனாலும், இப்படி சாபம் விட்டுவிட்டால், நிச்சயம் தன்னில் இவை தொடர்ந்து வருமே,!...........
எதை என்று புரிய,
இதனால் பின் இவ்வாறு பின் மடிவார்கள், அதாவது வாடுவார்கள் மனிதர்கள் என்பதெல்லாம்.
ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய, அதாவது கற்புக்கரசியே!!!!!அறிந்தும், இதை நீ நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட இவ்வாறாகவே அறிந்தும்,
ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட எவ்வாறெல்லாம், நிச்சயம் தன்னில் இவ்வாறாக, நிச்சயம் தன்னில் கூட பின் சாபத்தையும் இட்டுவிட்டாய்.
இதனால் பின் வருவோருக்கெல்லாம் !!.......இவ்வாறாக பின் சாபங்கள் தொடர்ந்து போவதால் எவ்வாறு??, நிச்சயம் தன்னில் நியாயம்????.
(ஞானியர்களும் ரிஷிகளும் கண்ணகி தேவியை பார்த்து... நீங்கள் சாபம் விட்டு விட்டீர்கள் அது மனிதர்களுடைய வாழ்க்கையை பாதிக்கும் என்றெல்லாம் கண்ணகி தேவியிடம் கலியுகத்தில் இனி பிறந்து வரும் மனிதர்கள் அனைவருக்கும் இந்த சாபம் பெண் சாபம் அனைத்தும் இருக்கும் இதற்கு தீர்வை நீயே தா தேவி!! தாயே!! என்றெல்லாம்)
இதனால் பின் பல வழியில் கூட சாபங்கள், பெண் சாபங்கள் பெற்று மனிதன், அதாவது பெண்களால் ஏது என்று அறிய இன்னும் பல வகையில் கூட மனம், அதாவது உளைச்சலாகி பின் நொந்தும், பின் அதாவது இறந்தும், இறக்கும் அளவிற்கும் கூட ஏது என்று போய்விடுவான்.
இதனால் பின் ஏதாவது, பின் நீயே, அதாவது கற்புக்கரசியே!!!! நீயே முடிவை எடு!!! என்றெல்லாம்,
கண்ணகி தேவி:
நிச்சயம் தன்னில் கூட பின் அழகாக முனிவர்களே!!!!
நிச்சயம் கலியுகத்தில் ஏது என்று அறிய இவ்வாறத்தான் மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.
இதனால் பின் வரட்டும், அதாவது பல வகையில் கூட பல இடங்களில் யான் தெரியாமல் இருப்பேன்.
(கண்ணகி தேவி மறைமுகமாக பல இடங்களில் கோயில் கொண்டிருக்கின்றார் அங்கெல்லாம் மனிதர்கள் தேடி தேடி செல்ல வேண்டும்... குறிப்பாக கேரளத்தில் ஒரு ஐதீகம் நிலவுகின்றது ஆற்றுக்கால் பகவதி கொடுங்கலூர் நீலி பகவதி தேவி உட்பட பகவதி சேத்திரங்கள் கண்ணகியின் தேவியின் தவக்கோலத்தில் அமர்ந்திருக்கும் சேத்திரங்கள் என ஐதிகமாக அறியப்படுகின்றது)
அவ்விடத்திற்கெல்லாம், நிச்சயம் தன்னில் கூட மனிதன் தேடி வந்தால் எப்படியாவது, நிச்சயம் தன்னில் கூட, அதாவது பின் அறிந்தும் கூட, அதாவது பின் சாபங்கள் விலகும்.
(கண்ணகி தேவி எங்கெங்கு இருக்கின்றார் என்பதை கண்டு உணர்ந்து மனிதர்கள் அங்கு சென்றால்தான் இந்த சாபங்கள் தீரும்)
இதை என்று கூட, இதனால் பின்!!...
இத் தேவியும் கூட இப்படி ஞானிகளிடம் பின் அறிந்தும் கூட, பின் அதாவது யானும், அதாவது கோபத்தில் சாபத்தை விட்டுவிட்டேன்.
ஆனாலும், மனிதனுக்கும் அறிவில்லை, புத்தி இல்லை என்றெல்லாம்,
எதை என்று புரிய, இதனால் நிச்சயம் தன்னில் கூட அழகாக முனிவர்களே!!! சொன்னீர்கள்.
இதனால் நிச்சயம் அங்கங்கு யான் அமர்ந்திருப்பேன், பின் தெரியாமலும் கூட.
இதனால் அங்கங்கு தேடி வரட்டும், நிச்சயம் யானே, அதாவது மனதை மாற்றி சாபங்களை நீக்கி, அவனுக்கு புத்துணர்ச்சியும் கொடுத்து, அனைத்தும் கொடுக்கின்றேன்.
நலங்களாகவே, நலங்களாகவே.
இதனால் அனைந்தும், அனைத்தும், பின் நன் முறைகளாகவே ஆக்குவேன்.
இதனால் பின் அறிந்தும் கூட, இதனால் யானே, பின் மறைந்து!! பல இடங்களுக்கெல்லாம், நிச்சயம் ஆனாலும் மறைந்திருப்பேன்.
கலியுகத்தில் பின் தேடி வரட்டும்,
ஏனென்றால் மனிதன் தெரிந்தும் தான் தவறுகள் செய்கின்றான்.
(மனிதர்கள் இது தவறு என்பதை தெரிந்து கொண்டே தவறுகளை மீண்டும் மீண்டும் செய்கின்றார்கள்)
பின் ஏது என்று அறிந்தும் கூட,
இதனால் நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது யான் தெரியாமல் அங்கங்கு நிற்பேன்.
(இதனால் நான் தெரியாமல் என்னை நான் தான் கண்ணகி என்று வெளிப்படுத்தாமல் மறைமுக பொருளாக இருப்பேன் தேடி வருபவர்களுக்கு சாபங்கள் தீரும் என தேவியின் சாப விமோசன வாக்கு)
பின் வந்தால் அறிந்தும் கூட, பின் அழகாக சாபங்கள் நீங்கும்,
பின் வெற்றிகளும் பெறலாம்.
நிச்சயம் தன்னில் கூட, பின் அனைத்தும் பெறலாம்.
இதனால் தேடி வரட்டும்,
அதாவது நிச்சயம் தன்னில் கூட, பின் இறைவன் இருக்கின்றான்.
புலவர்களே!!!!, நிச்சயம் முனிவர்களே!!!, தேவாதி, பின் தேவர்களே,!!! அனைவரும் ஏது என்று கூட, பின் நீங்களே பாருங்கள். மனிதன் எப்பேர்ப்பட்டவன் என்று அறிந்தும் கூட,
இதனால் எதை என்று அறிய, பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட யோசிக்க மாட்டான். சட்டம் ஒழுங்கும், பின் ஏது என்று, பின் அறிந்தும், புரிந்தும் கூட, இவ்வாறாக நிச்சயம் ஒழுக்கம், பின் கெட்டு, பின் ஏது என்று கூட,
குருநாதர் அகத்திய பெருமான் நம்மிடம் உரைக்கும் வாக்கு
இவ்வாறு சாபத்தால் தான் நிச்சயம் தன்னில் கூட இப்பொழுதெல்லாம், பின் ஒழுங்கும் கூட, பின் சட்டம் ஏது என்று அறிய, நிச்சயம் தன்னில் ஒழுங்காகவில்லை.
வருங்காலத்தில்
இப்படித்தான் நிச்சயம் தன்னில் பொய் சொல்பவர்களும் தப்பித்துக் கொள்வார்கள்.
ஆனாலும், நிச்சயம் தன்னில் இத் தேவி எதை என்று கூட தன் கட்டுப்பாட்டில் பின் வைத்துள்ளாள்.
இதனால் தவறான, பின் ஏது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, பின் (நிரபராதிகளுக்கு)
தண்டனை சட்டங்கள் கொடுப்பவர்களுக்கெல்லாம், நிச்சயம் நோய் நொடிகளை பின் உருவாக்கி, நிச்சயம் தன்னில் கூட, பின் அவர்கள் ஏது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, பின் அடியோடு, பின் அழித்திட, அழித்திட, பின் ஏது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட இக் கலியுகத்தின் சாபமாகவே இருக்கின்றது.
இதனால், பின் நிச்சயம் தன்னில் கூட அரச பதவி வகிப்பவர்களும் சரியாக நீதி நேர்மையோடு வாழ்ந்தால் மட்டுமே, நிச்சயம் எக்குறைகளும் வராது.
இல்லையென்றால், பின் அக் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குறை வரும் என்பதை எல்லாம், நிச்சயம் பின் இக் கண்ணகி, பின் சாபத்தினாலே ஏற்பட்டது.
இதை தன் நிச்சயம் எப்பொழுதும் அறிந்தும், ஏது என்று கூட அச் சாபத்தால், நிச்சயம் தன்னில் கூட நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இப்பொழுதும் கூட
அச் சாபம் தீரவே இல்லை.
இதனால்தான், நிச்சயம் தேவியையும் கூட எழுப்ப வந்தேன், அப்பனே.
(ஏற்கனவே நம் குருநாதர் மனித குலத்தின் மீது கருணையோடு ஒவ்வொரு ஞானிகளையும் ஜீவசமாதி அடைந்திருக்கும் சித்தர்களையும் எழுப்பி இந்த உலகத்தை காப்பாற்றுவதற்கு பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார் அதே போல கண்ணகி தேவியையும் எழுப்பி தேவியின் அருள் அனைவருக்கும் கிடைத்து சாபங்கள் தோஷங்கள் தீர்ந்து நன்றாக வாழ்வதற்கு குருநாதர் அருள் செய்து கொண்டிருக்கின்றார்)
இதனால், பின் நன்கு முறைகளாகவே, நிச்சயம் தன்னில் கூட,
இதனால் ஒவ்வொரு ஏது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, பின் ரிஷியின் சாபமும், பின் குருமார்களின் சாபமும் இருப்பதால், மனிதன் எப்படி ஏது என்று அறிய, பின் வாழ்வான்.
(ஒவ்வொரு ஞானி அவர்களும் இந்த உலகத்தை திருத்த வந்த பொழுது மனிதர்கள் அவர்களுடைய உபதேசத்தை கேட்காமல் அவர்கள் காட்டிய வழியை பின்பற்றாமல் நடந்து கொண்டதால் அவர்களுடைய சாபங்கள் நமக்கு தலைமுறை தலைமுறையாக வந்து கொண்டே இருக்கின்றது அவர்கள் கொடுத்த சாபத்தினை தீர்க்க அவர்களிடம் சரணாகதி அடைந்தே தீர வேண்டும் அனைவரும்)
ஆனாலும், இவை சாபங்கள் எல்லாம் மனிதன் தான் பெற்றுக் கொண்டான்.
(அவர்கள் உபதேசங்களை எல்லாம் கேட்காமல் போனது தான் கலியுகத்தில் தலைமுறை தலைமுறையாக சாபங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது அனைவருக்கும்!
இதை மனிதர்கள் தான் இதை ஏற்படுத்திக் கொண்டது)
இச் சாபங்கள் எப்படி விலகும்???
என்பவை எல்லாம்,??!?..........
இதனால்தான் அங்கங்கும் இருக்கும். பின் அவர்களே!!!......(ஜீவ சமாதியில் இருக்கும் ஞானிகள் சித்தர்கள் மகான்கள் தேவிகள்)
அச் சாபங்களை ஏது என்று புரிய, நிச்சயம் தந்து கொடுத்தார்கள் அல்லவா?
ஆனாலும், இச்சாபத்திற்கு யாரும் காரணம் என்றால், மனிதனே காரணம் அறிந்தும் கூட.
இதனால், நிச்சயம் மனிதன் தெளிவாகட்டும்,
புத்திகள் மாறட்டும் என்பதற்கிணங்க!!! எவ்வாறெல்லாம் சாபங்கள் மனிதர், அதாவது நிச்சயம் இட்டார்களோ, பின் அதாவது, பின் புலவர்கள் இன்னும் எதை என்று கூட, பின் ஞானிகள் இன்னும் ரிஷிகள், பின் அவர்களையே எழுப்பி, பின் அதனையும் நிச்சயம் தன்னில் கூட சமநிலைப்படுத்தி, பின் மனிதனை, பின் வாழச் செய்வோம்.
(ஜீவசமாதிகள் உறங்கிக் கிடக்கும் ஞானியர்களையும் மகான்களை எழுத்தில் அவர்களிடம் ஆசிகள் வாங்கித் தந்த மனிதர்கள் நலமாக வாழ வழி செய்கின்றார்கள் சித்தர்கள் நம்மை வாழவைக்கும் தெய்வம் குருநாதர் அகத்தியர் பெருமான் போராடிக் கொண்டிருக்கின்றார் இதற்காக)
ஒரு சந்தர்ப்பத்தை கொடுப்போம் என்பதை எல்லாம், அப்பனே,
நிச்சயம் சித்தர்கள் தீர்ப்பு !! சீர்திருத்த ரகசியமாகவே உள்ளது என்பேன், அப்பனே !!!
இதனால், அப்பனே, எண்ணற்ற!!!!¡!.............
(மனிதர்கள் மீது ஏராளமான எண்ணற்ற சாபங்கள் உள்ளது)
ஏது என்று அறிய, அப்பனே, பின் அதாவது, நிச்சயம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சாபம் விட்டுச் சென்றிருக்கின்றார்கள்.
இதனால், அப்பனே, நிச்சயம் அதாவது ரிஷிமார்களும் இன்னும் குருமார்களும் கூட, அப்பனே,
இப்படி இருக்க!!!..... எவ்வாறப்பா??? மனிதன் நிம்மதியாக வாழ்வான்,?????
நீங்களே சொல்லுங்கள்.
ஆனாலும், இச் சாபங்கள் பின் இட்டிட்டால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் பலித்தே தீரும் என்பேன், அப்பனே.
இதனால்தான், அப்பனே, இச் சாபங்கள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட முடிவு பெறாதப்பா.
அப்பனே, இவையும் பின் தீர்க்கவும் முடியாதப்பா.
அதனால்தான், அப்பனே, தெய்வங்களிடத்தில் சென்றாலும், அப்பனே, சாபங்கள் தொடர்ந்து வருவதால், அப்பனே, எவையும், அப்பனே, நிச்சயம் தன்னில் மனிதனுக்கு நடப்பதில்லை என்பேன், அப்பனே.
மெதுமெதுவாகவே, அப்பனே, , நடக்கின்றது.
அதனால், அப்பனே, பின் அதற்குள்ளே, அப்பனே, வயதும் ஆகிவிடுகின்றது.
இதனால், அப்பனே, என்ன பயன்,?????
ஏது என்று புரிய, அப்பனே. இதனால், அப்பனே, பின் நல்விதமாக, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது, சாபங்களை இட்டோர்களை எல்லாம், அப்பனே, அழைத்து வந்து, அப்பனே, இப்படித்தான் மக்கள், பின் வாழ்வார்கள்.
அதாவது, சிறிது, அப்பனே, பின் மனிதரையாவது காட்ட வேண்டும்.
நல்லெண்ணங்களோடு இருக்கின்றார்கள் என்று!!!, அப்பனே, பின் அவர்களை காட்டி, அப்பனே, நல்விதமாக, அப்பனே, நிச்சயம் தன் ஏது என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
(சாபமிட்ட ஞானியர்கள் தேவிகள் இவர்களை குருநாதர் எழுப்பி இவர்கள் முன்பு இந்த உலகத்தில் நல்ல மனிதர்களும் இருக்கின்றார்கள் .. கலியுகத்தில் மனிதர்கள் இப்படித்தான் வாழ்கின்றார்கள் இவர்களுக்கு மனமிறங்கி .இவர்களுக்காவது சாபத்தை நீக்கி அருள் தாருங்கள் உலகை காப்பாற்றுங்கள்... என்று!! குருநாதர் இந்த உலகத்தை அழிவிலிருந்து காப்பாற்ற போராடுகின்றார்)
இதனால்தான், அப்பனே, மக்களுக்கு தெளிவுபடுத்தவே, அப்பனே, சித்தர்கள் வந்து, அப்பனே, இப்படி வாழ்ந்தால், நன்மை பெறுவோம் என்பதை எல்லாம் எடுத்துக்கூறிக்கொண்டு, எடுத்துக்கூறிக் கொண்டு, அப்பனே, வந்து கொண்டே இருக்கின்றோம். அப்பனே,
(மனித குலம் நல்முறையாக வாழ்வதற்கு சித்தர்களின் வாக்குகள்)
நலங்களாகவே.
ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட எதை என்று புரிய, அதாவது, நிச்சயம் அதிக சாபங்களை பெற்றோர் என்னை நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது, பின் தேடி வரமாட்டார்கள் என்பவை எல்லாம், அப்பனே, ரிஷிமார்களுக்கும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் ஏது என்று கூட, பின் பல பல வழிகளில் குருமார்களுக்கும் கூட, அப்பனே, பின் முனிவர்களுக்கும் கூட, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் சாபங்களோடு எதை என்று அறிய, நிச்சயம், அதாவது, நிச்சயம் ஏது என்று புரிய, இவ்வாறாக, பின் பல சாபங்களை, பெற்றோர், நிச்சயம் தன்னில் கூட என்னை தேடியும் வர முடியாது என்பதற்கே, நிச்சயம், பின் தேவியும் கூட.
(அதிக அளவு சாபம் பெற்றவர்கள் தேவியரின் ஆலயத்திற்கும் குரு முனிவர்கள் சித்தர்கள் ஜீவசமாதி களுக்கும் தேடிச் செல்ல முடியாது)
இதனால், இவ் மகா தேவியை எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட. இதனால், பின் பாவங்களை தொலைக்க எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட மீண்டும் வரவழைப்போம்.
பின் பெண் சாபத்தின் எவை என்று புரிய, பின் கலியுகத்தில் மக்கள் பலர் பெற்றுள்ளார்.
இதனால், நிச்சயம் தன்னில் கூட பெண் சாபத்தால், நிச்சயம் தன்னில் கூட, பின் எவை என்று கூட, பெண்களால், நிச்சயம் மனக்குழப்பம் எதை என்று கூட இன்னும் எவை எவை தோன்றும்.
இதனால், இத் தேவியை எது என்று புரிய, நிச்சயம், பின் எழுப்புதால், நிச்சயம் ஏது என்று கூட, பின் மனமகிழ்ந்து ஆசிகள் கொடுப்பதால் சில ஏது என்று புரிய, பின் அதாவது, நல்விதமாகவே அறிந்தும் கூட பல தோஷங்கள் மறையும். நல்விதமாக வெற்றிகளும் கிட்டும் எதை என்று கூட,!!
பின் அறிந்தும் கூட. இதனால் நலங்களே ஏற்படும். அப்பனே,
பின் ஆசிகள், அப்பனே, தேவின் அருளும் கூட.
அதனால், அப்பனே, இன்றளவும் கூட, பின் சித்தரை பௌர்ணமி தன்னில் கூட எங்களுடைய ஆசிகள் அனைவருக்குமே, அனைவருக்குமே ஆசிகள், ஆசிகள் மீண்டும் வந்து உரைக்கின்றேன். ஆசிகள்.
ஆலயம் பற்றிய விபரங்கள்.
புராண சிறப்புமிக்க மங்களதேவி கண்ணகி கோவில் மேற்குதொடா்ச்சி மலையில் அமைந்துள்ள மேகமலை வனஉயிரின சரணாலாயத்தின் முகட்டில் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு தமிழகத்திற்கு மலையேற்றம் மூலமே செல்ல வழிகள் உள்ளது. மேலும், இத்தலத்திற்கு கேரள மாநிலத்திலிருந்து குமுளி வழியாக மலை ஈப்பு பயணமூலம் செல்ல வழிகள் உள்ளது. இக்கோவில் திருவிழா, சித்திரை முழுநிலவு தினத்தில் மிகச்சிறப்பாக கொண்டாப்படுகிறது. தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களிலிருந்து பரவலாக இத்தலத்திற்கு சென்று வழிபடுகின்றனா். மேகமலை வன உயிரின சரணாலாயத்தின் அடிவாரத்தில் உள்ள பளியன்குடி குக்கிராமம் வரை சாலை வழிகள் மற்றும் பேருந்து வசதிகள் கம்பம் நகரிலிருந்து உள்ளது. இடைப்பட்ட தூரம் 17 கி.மீ மேலும், பளியன்குடியிலிருந்து மங்கதேவி கண்ணகி கோவிலுக்கு இடையில் உள்ள தூரம் 6.6 கி.மீ முற்றிலும் மலையேற்றம் பயணம் மட்டுமே மேற்கொள்ள முடியும். சித்திரை முழுநிலவு தினத்தில் மட்டும் வழிபட அனுமதி வழங்கப்படும்.
இடுக்கி மாவட்டத்தின் எழில்மிகு அழகில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற மதத் தலம் மங்களா தேவி கண்ணகி கோயில் ஆகும். இங்குள்ள பிரதான தெய்வம், சிலப்பதிகாரம் எனும் தமிழ் காவியத்தின் மையக் கதாபாத்திரமான கண்ணகி என்ற புகழ்பெற்ற தமிழ்ப் பெண் ஆவார் . இக்கோயில், பண்டைய தமிழகத்தின் மன்னரான சேரன் செங்குட்டுவனால் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வண்ணத்திப்பாரையில் கட்டப்பட்டு, 'கண்ணகி கோட்டம்' அல்லது மங்களாதேவி கண்ணகி கோயில் எனப் பெயரிடப்பட்டது. இக்கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,337 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது மற்றும் அதன் பாண்டிய கட்டிடக்கலைக்குப் புகழ் பெற்றது. கோயிலின் சுற்றுச்சுவர்களும், படிகளும் பெரிய கற்களால் கட்டப்பட்டுள்ளன. ஏப்ரல்/மே மாதங்களில் வரும் சித்திரபௌர்ணமி பண்டிகையின் போது மட்டுமே இக்கோயில் திறந்திருக்கும். அடர்ந்த பெரியார் புலிகள் காப்பகத்தின் நடுவில் அமைந்துள்ள இந்தத் தலம், அதன் அழகான சுற்றுப்புறத்திற்கும் பரந்த பசுமையான வனப்பகுதிக்கும் பெயர் பெற்றது.
தமிழக - கேரள எல்லைப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோவில், புகழ்பெற்ற 2000 ஆண்டுகள் பழமையான வரலாற்றுத் தலமாகும். இது தேனி மாவட்டம் கூடலூர் பளியங்குடியிலிருந்து 7 கி.மீ தொலைவிலும், கேரள மாநிலம் குமுளியில் இருந்து சுமார் 14 கி.மீ தொலைவிலும், கடல் மட்டத்திலிருந்து சுமார் 1337 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது
.வரலாறு மற்றும் முக்கியத்துவம்:தோற்றம்: சிலப்பதிகாரத்தின் நாயகியான கண்ணகிக்கு, சேரன் செங்குட்டுவன் மன்னன் இந்த கோவிலை எழுப்பினான்
.கட்டுப்பாடு: தமிழக எல்லையில் அமைந்திருந்தாலும், இக்கோவில் தற்போது கேரள மாநில தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
பயண வழிகள்:நடைபாதை (தமிழ்நாடு): தேனி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள பளியன்குடி வழியாக வனப்பகுதி வழியாகச் செல்லும் 6 முதல் 7 கி.மீ தூர நடைபாதை வழியாக மலையேற்றம் (Trekking) செய்து அடையலாம்
.வாகனம் (கேரளா): கேரள மாநிலம் குமுளியிலிருந்து பெரியாறு புலிகள் சரணாலயம் வழியாக ஜீப் போன்ற வாகனங்கள் மூலம் செல்லலாம்.
வழிபாட்டு முறைகள்:இக்கோவில் பெரியாறு வனவிலங்கு சரணாலயத்திற்குள் அமைந்துள்ளதால், ஆண்டு முழுவதும் பொதுமக்கள் செல்ல வனத்துறையின் முன் அனுமதி பெற வேண்டும்.
சித்ரா பௌர்ணமி அன்று மட்டுமே பொதுமக்களுக்கு வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது
ஶ்ரீ மங்களதேவி கண்ணகி கோவில், தமிழ்நாடு https://share.google/qVyA3WkweSYJ4Abg6
வான் வழியாக மதுரை விமான நிலையம் அருகில் உள்ளது .
தொடர்வண்டி வழியாக மதுரை ரயில் நிலையம் அருகில் உள்ளது .
சாலை வழியாக
மதுரை - உசிலம்பட்டி -ஆண்டிபட்டி வழியாக தேனி வந்து அடையலாம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)

.jpeg)


No comments:
Post a Comment