அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 19.04.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 10
நாள் :- 19/04/2026 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் :- காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம் : உலக நன்மைக்காக 09 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.
இவ் பகுதியின் நேரலை :- https://youtu.be/C5OQ5pL4GnY?t=25624
(இவ் பகுதி வாக்கு மிக நீண்ட , மிக மிக மிக அதி மிக முக்கிய பகுதி. இதன் முக்கியத்துவம் கருதி ஒரே பதிவாக இங்கு வெளியிடுகிறோம். எனவே அடியவர்கள் அவசியம் சற்று பொறுமையுடன் படிக்கவும்)
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
அப்பனே, நலன்கள். ஆசிகள்.
அப்பனே, இன்னும் அப்பனே, விளக்கமாக.
குருநாதர் :- ஆனாலும், அப்பனே, சூரியன் சரியாகவே சமநிலையில் இருப்பதால், அப்பனே, அனைவருக்கும் அப்பனே இன்றைய நாளில், ஆனாலும், அனைவருக்குமே ஒரு ஒரு அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் அன்பான ஆசைகள் தான் என்பேன் அப்பனே. இதனால், அப்பனே, ஏது என்று புரிய, இதனை அழகாக அப்பனே ஒவ்வொன்றாக அப்பனே பின் அப்படியே அமர்ந்திருந்து ஏது என்று கூட நீங்கள் எடுத்துச் செல்லுங்கள்.
( அங்கிருக்கும் அடியவர்களுக்கு காசியில், கங்கை அன்னையிடம் இருந்து எடுத்து வந்த காசுகளை அனைவருக்கும் கொடுக்க உத்தரவு பிறப்பித்தார்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- காயின்ஸ் தான் கொடுக்க சொல்றார். இப்ப சூரியன் வந்து சரியான நல்ல இடத்துல, ஒரு சமநிலையில் இருக்கிறார். அப்ப எல்லாருக்கும் அங்கே எல்லாரும் உட்காருறாங்க. காயின்ஸ் மட்டும் கொடுங்கன்றார். ஒருத்தர் ஒருத்தருக்கு. அம்மா, எல்லாரும் உட்காருங்க அப்படியே. காயின்ஸ் கொடுக்க சொல்றார். ஐயா, எல்லாரும் உட்காருங்க ஐயா.
===========================
# அங்கிருந்த அனைத்து கூட்டுப் பிரார்த்தனை அன்பு அடியவர்களுக்கு
===========================
# வெற்றி, வெற்றி, வெற்றி, வெற்றி, வெற்றி……
===========================
குருநாதர் :- அறிந்தும், அப்பா, ஏது என்று புரிய இதற்கும் அப்பனே சரி வகையான இதில் அப்பனே எப்படி ஏது என்று புரிய அப்பனே நலமாகவே இதற்கும் ஒரு மந்திரத்தை யான் சொல்கின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- இங்க பாருங்க ஐயா, இதுக்கும் ஒரு மந்திரத்தை சொல்றாருன்னு சொல்றார் அகத்தியர் வந்து. அதனால அது இந்த நேரத்துல கொடுக்க சொல்றார் அகத்தியர்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஸ்டார்ட் பண்ணுங்க. அப்புறம் வர வர கொடுத்துக்கலாம்.
அடியவர் :- பிரிச்சுக்கோங்க, முதல் மூணு நாலு பேர், நாலு பேர் போங்க, பிரிச்சுக்கோங்க, வாங்க, இன்னும் பிரிச்சு கொடுங்க.
( கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் காசுகளை கொடுக்க தயார் ஆனார்கள் )
குருநாதர் :- அறிந்தும், ஏது என்று புரிய கொடுக்கின்ற பொழுது “வெற்றி” என்று கொடு.
அடியவர் :- கொடுக்கும் போது வெற்றி, வெற்றின்னு சொல்லி கொடுங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- வெற்றி, வெற்றின்னு சொல்லி கொடுங்க.
அடியவர் :- இந்த நேரம் வந்து குருநாதர் அருமையான நேரம்னு சொல்லி இருக்காங்க, சூரியன் சமநிலையில் இருக்குன்றாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- சமநிலையில் இருக்கும் பொழுது எல்லாருக்கும் சர சொல்லி இருக்கார்.
(கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் குழுக்களாக பிரிந்து காசுகளை வெற்றி, வெற்றி, வெற்றி, வெற்றி, வெற்றி என்று கூறி கொடுக்க ஆரம்பித்தனர்)
அம்மை அடியவரின் சிவபுராணம் பாராயணம்:-
https://youtu.be/C5OQ5pL4GnY?t=26211
தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் - பதிகம் பாராயணம்
https://youtu.be/C5OQ5pL4GnY?t=26847
( முடிவில் மத்திய உணவு அழைப்பு ):-
அம்மை அடியவர்களின் அகத்திய மாமுனிவர் குருவடி சரணம் பாடல்:-
https://youtu.be/C5OQ5pL4GnY?t=27266
இதனை தொடர்ந்து திருக்கைலாய வாத்தியம் :-
https://youtu.be/C5OQ5pL4GnY?t=27645
மீண்டும் உணவு அருந்தி வந்தவர்களுக்கு - காசுகள் வழங்கப்பட்டது
https://youtu.be/C5OQ5pL4GnY?t=28755
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்
( செல்வம் பெருகவும், தீய சக்திகளை விலக்கவும் - அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய ஒரு சக்திவாய்ந்த பூஜை. இவ் வாக்கின் முதல் பகுதி பின் வரும் சித்தன் அருள் 2199 பதிவில் படித்து அறிந்து கொள்ளவும். )
https://siththanarul.blogspot.com/2026/04/2199-19042026-1.html
===========================
# சித்தன் அருள் 2199 தொடர்ச்சியாக…..
நேரலை :- https://youtu.be/C5OQ5pL4GnY?t=29875
===========================
===========================
# பூமி = “பு”ண்ணியம். மனிதன் = “பா”வம்.
===========================
குருநாதர் :- ஏது என்று அறிய அதாவது பின் அப்பா ஒன்றை உன்னை பார்த்தே சொல்கின்றேன். பின் அதாவது முதலில் பா, பு இதற்கு என்ன வித்தியாசம்?
சுவடி ஓதும் மைந்தன் :- “பா”க்கும் “பு”க்கும் என்ன வித்தியாசம்னு கேட்கிறார். ஐயா, சொல்லுங்க. ஏதாவது அப்படித்தான் எழுத்து வரும். ( அனைவரையும் பார்த்து ) அம்மா, நிறைய டேலண்ட் (தனித்திறமை ஆற்றல் ) வச்சிருக்கீங்க. அம்மா, அப்பதான்மா அகத்தியர் சொல்லுவார். அடுத்த லைன் எடுத்துட்டு வருவார். அம்மா, “பா”க்கும் “பு”க்கும் என்ன வித்தியாசம்?
அடியவர்கள் :- ( பல உரையாடல்கள் )
ஒரு அடியவர் :- ( பதில் சொன்னார்கள். இவ்விடத்தில் ஆடியோ ஒலி சரியாக பதிவில்லை. அதனால் இங்கு தட்டச்சு பதிவிடவில்லை )
குருநாதர் :- அப்பா, சரி, சரியாகத்தான் சொன்னாய்.
அடியவர்கள் :- ( சரியான பதில் சொன்ன அவ் அடியவருக்கு கைதட்டல்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- “பா”, “பு”.……. பாவம், புண்ணியம்
குருநாதர் :- அறிந்தும் ஏது என்று அறிய “பா” , பின் “பு” எதை என்று அறிய இதற்கும் அறிந்தும் கூட பின் அனைத்தும் எவை என்று கூற பின்பு “பு” என்று எதனை குறிக்கின்றீர்கள்? நீங்கள்
அடியவர்கள் :- ( அமைதி….சற்று நேரம் கழித்து….)
குருநாதர் :- அப்பா, பின் புவி எதை குறிக்கின்றது இங்கே? பின் ஆழ்ந்து சிந்தியுங்கள்.
அடியவர் :- பூமி. புண்ணியம்.
குருநாதர் :- அப்பா, புண்ணியம் பின் பூமியானால் மீதி என்ன நிற்கின்றது?
சுவடி ஓதும் மைந்தன் :- புண்ணியம் என்பது பூமி. மீதி என்ன நிற்கின்றதுன்னு கேட்கிறார்.
குருநாதர் :- அப்பா, அப்பொழுது பின் ஏது என்று அறிய பின் புவி தன்னில்தான் புண்ணியம். அனைவரும் மனிதர்கள் பாவம்.
அடியவர் 4:- பூமி வந்து புண்ணியம். மனுஷன் வந்து பாவம்.
சுவடி ஓதும் மைந்தன் :- (மனுஷன் வந்து ) பாவம். அப்ப பூமிதான் என்னது? அதான் புண்ணியம். அப்ப மனுஷங்கள் என்ன ஆகுது? இந்த பாவம்.
அடியவர் 3:- அப்ப பூமியில் தானே இருக்கோம்?.
===========================
# பூமித் தாயின் , பூமாதேவி அன்னையின் திருவடிகள் போற்றி ! போற்றி !!
===========================
# பின் வரும் வாக்கை படித்து நன்றியுடன், நம்மை தங்கி அருளும் அன்பு பூமித் தாயின் பாதங்களை வணங்குங்கள்.
===========================
https://youtu.be/C5OQ5pL4GnY?t=29994
குருநாதர் :- ஏன்? எதற்கு? இவ்புவி தன்னை அதாவது பூமி ஏது என்று அறிய பின் புண்ணியம் என்று சொன்னேன் என்றால் பின் நிச்சயம் தன்னில் கூட மனிதனை திருத்தி மேல் லோகத்திற்கு, அதாவது பின் ஏது என்று அறிய அறிய, பல வகையில் கூட பின் அனுப்புகின்றது. தேவலோகத்திற்கும் கூட.
சுவடி ஓதும் மைந்தன் :- ஏன் நான் வந்து அகத்தியர் சொல்றாரு? புண்ணியம்… இத்தனை பாவங்கள் பண்ணிட்டு இருக்கிற மனுஷங்களை அதை திருத்தி பூமி வந்து திருத்தி என்ன ஆகுதாம்?
அடியவர் :- எப்படி ஒரு சிறைச்சாலை வந்து அங்க சிறையில் இருக்கக்கூடிய அந்த கைதியை வந்து திருத்தி நல் மனிதனா வெளியில அனுப்புதோ? அதேபோல பூமியில விழுந்த நம்மள, திருத்தி, திருப்பி இறைவன் மேல அனுப்புறாரு. அதனாலதான் பூமின்றது புண்ணியம்ன்றாங்க.
அடியவர் 2 :- மனுஷங்களை பாவப்பட்ட மனுஷங்களை பூமியில வச்சாதான் புண்ணியமாய் மேல போகும். நம்ம வேற கிரகத்துல போயிருந்தா அவ்வளவுதான் கதை கந்தல். அதுக்கு தான் நம்மள பூமியில வச்சிருக்காங்க. அதனாலதான் சொல்றாரு.
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால வந்து என்ன பண்ணாங்க? வந்து
===========================
# ஏன் பூமியில் பல தெய்வங்கள் ? என்ன ரகசியம் ?
===========================
குருநாதர் :- இதனாலே அனைத்து ஏது என்று கூற இறைவன்கள் கூட இங்கு அவதாரம் எடுத்து, மீண்டும் எப்படி உணர்கிறார்கள் என்று மேலோகத்தில் சென்றுவிட்டார்கள். புரிகின்றதா? இதனால்தான் இத்தனை இத்தனை தெய்வங்கள் எங்கெங்கு எங்கு பார்த்தாலும் கண்ணுக்குத் தெரியாத தெய்வங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப மேலோகத்தில் நேரா பார்க்கலாம். இவங்களாவது தெரிஞ்சுக்கிறாங்களான்னு பார்க்கலாம்னு சொல்லிட்டு என்ன பண்ணாங்க? நேரா வர்றது. ஐயா, புரியுதுங்களா? இங்க வந்து அவதாரம் எடுக்குறது. இது பண்றது என்ன பண்றாங்க?
அடியவர் :- திருப்பி மேல,
சுவடி ஓதும் மைந்தன் :- திருப்பி மேல, மேல் லோகத்துக்கு போறது. அப்ப இது
அடியவர் 2 :- மனுஷன் பண்ண பாவத்தை கழிக்கிறதுக்கு,
சுவடி ஓதும் மைந்தன் :- கழிக்கிறதுக்கு. அப்ப இதையாவது புரிஞ்சுப்பாங்களா? மனுஷன் அப்படின்னு சொல்லிட்டு
அடியவர் :- இத்தனை தெய்வங்கள் இருக்கு. இத்தனை பேர் ஏன் இருக்காங்கன்னு கேக்குறேன். பாருங்க, நம்மள திருத்துறதுக்காக திருப்பி திருப்பி வந்துகிட்டே இருக்காங்க. ஒரு காலகட்டத்துல ஒவ்வொரு
சுவடி ஓதும் மைந்தன் :- ஒவ்வொரு ஆத்மாவும், ஒவ்வொரு புண்ணிய ஆத்மாவும்
அடியவர் :- அதனாலதான் இவ்வளவு அவதாரங்கள், இவ்வளவு கடவுள்கள், இவ்வளவு சித்தர்கள், முனிவர்கள், இவ்வளவு பேர் ஒவ்வொரு காலகட்டம் மனிதனை திருத்துறதுக்காக வராங்க, பிறப்பெடுக்கிறாங்க. பூமியில..
===========================
# ஏன் பூமியில் பல திருத்தலங்கள்?
# ஏன் பூமியும் ஒரு திருத்தலம்?.
===========================
குருநாதர் :- எதை என்று அறிய பின் ஏற்கனவே பின் சொன்னார்கள். சித்தர்கள் பின் திருத்தலம் எதை என்று அறிய அறிய மனிதன் பாவத்தை திருத்தி மேல் லோகத்துக்கு அனுப்பவே திருத்தலம்.
அடியவர் :- நிச்சயமா.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப?
அடியவர் :- பூமியும் ஒரு திருத்தலம் தான்.
சுவடி ஓதும் மைந்தன் :- பூமியும் ஒரு திருத்தலம்.
அடியவர் :- இங்க இருக்கிற ஆலயமும் ஒரு திருத்தலம்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆலயமும் ஒரு திருத்தலம். திருத்தி?
அடியவர் 2 :- அதனாலதான் புண்ணிய பூமி.
அடியவர் 4 :- திருத்தி அனுப்புறது
அடியவர் 2 :- அதனாலதான் பூமிக்கு புண்ணிய பூமி.
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால தான் இந்த பூமிக்கு… என்ன பூமி?
அடியவர் :- புண்ணிய பூமி.
சுவடி ஓதும் மைந்தன் :- புண்ணிய பூமி. ஒரு பேர் இருக்குது. புண்ணிய பூமி. ஏன் புண்ணிய பூமி? பாவப்பட்ட மனுஷன் எல்லாம் இந்த பூமியில விழுந்துட்டு, எல்லா ( பாவத்தையும் ) பூமியும் ஏத்துக்கிட்டு, திருப்பி சரி பண்ணி உங்களை அனுப்புது. பாரு,
அடியவர் :- பாவத்தை தொலைச்சு மேல ஏத்துது.
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால்தான் ?
அடியவர் :- இது புண்ணிய பூமி.
சுவடி ஓதும் மைந்தன் :- புண்ணிய பூமி.
===========================
# ஏன் பூமி சுற்றுவதை நம்மால் உணர இயலவில்லை ?
===========================
குருநாதர் :- ஏது என்று புரிய பாவம் எப்படி பின் மனிதனுக்கு தெரியாதோ? புண்ணியம் எப்படி பின் மனிதனுக்கு தெரியாதோ? அப்படி புவி சுற்றுவதும் மனிதனுக்கு தெரியாதுதான்.
அடியவர் 2 :- ( கை தட்டல்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- ஆமா, ஆமா. ஐயா, புரியுதுங்களா? பாவம் யாருக்காவது தெரியுதா?
அடியவர் :- தெரியாது.
சுவடி ஓதும் மைந்தன் :- புண்ணியம் யாருக்காவது தெரியுதா?
அடியவர் :- தெரியாது.
சுவடி ஓதும் மைந்தன் :- பூமி சுத்தது. பூமி சுத்தது யாராவது தெரியுதா?
அடியவர் :- உணரவும் முடியாது,
சுவடி ஓதும் மைந்தன் :- உணரவும் முடியாது.
அடியவர் 2 :- ஏன் தெரியாது?
அடியவர் 2 :- அதுவும் தெரியாது.
===========================
# பூமி சுற்றுவதை நாம் அனைவரும் உணர, கலியுகத்தில் முதன் முறையாக, நமக்கு கற்றுக்கொடுத்த கருணைக்கடல் திருவடிகள் போற்றி.
===========================
குருநாதர் :- அப்பனே எதை என்று அறிய பின் அனைவரும் கடல் அலைகள் ஏன் உருவாகின்றது? என்று யாருக்காவது தெரியுமாப்பா?
சுவடி ஓதும் மைந்தன் :- கடல் அலைகள் ஏன்? கடல் அலைகள் ஏன் வருதுன்னு யாருக்காவது தெரியுமா?
அடியவர் 2 :- யாருக்கும் தெரியாது.
குருநாதர் :- அப்பப்பா, மூளையை கசக்குங்கள். பின் உரைப்பேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- நீங்க மூளையை நன்கு கசக்கி, உண்மை சொன்னா, நான் அடுத்த லெவல் எடுத்துட்டு வருவேன் என்று சொல்றார். எதுக்கு அலைகள் கடல் அலை வருது?.
அடியவர் :- அது கடல் அழுத்தம். நடுப்பகுதியில அழுத்தங்கள் அதிகமா இருக்கிறப்போ, அது வெளியில வந்து அலையா வந்து அந்த அழுத்தம் அதிகமாய் வெளில வருது.
குருநாதர் :- அப்பப்பா, மனிதனுக்கு பின் புத்திகள் அப்பனே கீழ்த்தரமானவை தான். இருந்தும் சொல்கின்றேன் அப்பனே. படு வேகத்தில் புவி தன்னை சுற்றி வருகின்றது. அப்பொழுது நீங்களும் பாருங்கள். அதாவது நீரை ஊற்றுங்கள். ஏது என்று புரிய ஒரு எவை என்று ஒரு சட்டியில் கூட. அப்பொழுது பின்னர் சட்டியை திருப்புங்கள். அப்பொழுது பாருங்கள், நீர் எங்கு செல்கின்றது என்று?.
அடியவர் :- சூப்பர்! அழகாக ஒரு ஒரு சட்டியை வச்சு சுத்த சொல்றாங்க. சுத்துறப்ப தண்ணி எங்க போகுது? சிதறி வெளியில வரும்ல?
https://youtu.be/C5OQ5pL4GnY?t=30224
சுவடி ஓதும் மைந்தன் :- சிதறி வெளிய வருது . அதனாலதான் அலைகள். ஐயா, புரியுதுங்களா ஐயா யாருக்காவது?
அடியவர் :- அலை வர்ற காரணத்தை சொல்லிட்டாங்க. நம்ம என்னமோ நினைச்சுட்டு இருந்தோம். அறிவியல் ரீதியா என்னமோ அதெல்லாம் இல்ல.
சுவடி ஓதும் மைந்தன் :- அதெல்லாம் (உண்மை ) இல்ல.
அடியவர் :- சுத்துறதும், அது உணருது. அதன் மூலம் உணர்த்துறாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- அதன் மூலமா இறைவன் உணர்த்துகிறார். பூமி சுத்துதுன்னு உணர்த்துகிறார்.
அடியவர் :- பூமி என்பது அந்த சட்டி, அந்த சட்டிக்குள்ள இருக்கிற தண்ணி, பூமி சுத்துது. தண்ணி சிதறி வெளியில வர்றதுதான் அந்த அலை.
சுவடி ஓதும் மைந்தன் :- அலை. அப்ப பூமி சுற்றுகிறது என்பது உண்மை. அது எப்படி தெரிஞ்சுக்கிறது?
அடியவர் :- அலையை பார்த்து தான் தெரிஞ்சுக்கணும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அலையை பார்த்து தான்.
ஓதுவார் அடியவர் :- (ஆச்சரியத்துடன்) காலேஜ் லேயே சொல்லிக் கொடுக்கல ஐயா இதெல்லாம்.
அடியவர் :- ( சிரிப்புகள் )
சுவடி ஓதும் மைந்தன் :- இதெல்லாம், ஐயா, இதெல்லாம் வந்து ஏதோ நீங்க செய்த பாக்கியங்கள். எதுனா எல்லாரும் செய்த பாக்கியம் எனக்கும் தெரியாது. ஏதோ அகத்தியர் நீங்க சொன்னாதான் நானும் எனக்கும் தெரியப்போகுது. யார் உண்மை எல்லாம் இது மாதிரி எல்லாம் சொல்ல மாட்டாங்க. வந்து கோடி ரூபாய் கொடுத்தா இப்ப கூட இதெல்லாம் இருக்குதுன்னு, இப்படி எல்லாம் இருக்குதுன்னு இதை பார்த்தாதான் தெரியும். எல்லாருக்கும் யாருக்காவது தெரியுமாங்க ஐயா?
===========================
# இருவரை நடந்த அனைத்து கூட்டுப்பிரார்தனைகளுக்கும் தவறாமல் வருகை தந்த ஒரு அம்மை அடியவர் மூலம் அடுத்த மகத்தான பாடம்/வகுப்பு ஆரம்பமானது.
===========================
அம்மை அடியவர் :- (மேடையின் கீழே இருந்து கேள்வி ஒன்று கேட்டார்கள். ஆடியோ இல்லாததால் அவ் கேள்வியை இங்கு பதிவிட இயலவில்லை. )
குருநாதர் :- தாயே, எது என்று புரிய இரவில் நீ உண்ணுகின்றாயா? சொல்?
அடியவர் :- இரவுல நீங்க ஏன் சாப்பிடுறது இல்லன்னு கேக்குறாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- ஏம்மா, சாப்பிடுறது இல்ல. சொல்லுங்க. இதுக்கு சொன்னாருன்னா அகத்தியர் சொல்லுவார்.
அடியவர் 2 :- ஒரு மணிக்கு போய் பீச்ல போய் பாருங்க. தூங்காம, டெய்லி இரவுல தானே சுத்துதான்னு கேக்குறீங்க?. டெய்லி ஒரு மணிக்கு போய் பாருங்க. அலை வருதா இல்லையான்னு. என்னைக்காவது (இரவு) போயிருக்கீங்களா ஒரு மணிக்கு? அலைக்கு கண்ணுக்கு (தெரிந்ததா?)
குருநாதர் :- தாயே கேள்விகள் கேட்பது அறிவுபூர்வமாக இருக்க வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- கேள்விகள் கேட்பது அறிவுபூர்வமாக இருக்க வேண்டும்.
குருநாதர் :- எது என்று அறிய அவ்வாறு நீ நமச்சிவாய, நமச்சிவாய என்று சொன்னால், மற்றவன் உன்னை எளிதில் நமச்சிவாயன்னு என்ன செய்துவிட்டான். அவையெல்லாம் பொய் என்று சொல்லிவிடுவான். அதற்கு பதிலும் தெரியாது உனக்கு.
சுவடி ஓதும் மைந்தன் :- இது மாதிரி மாதிரி மூளை வச்சிருந்தோம்னா என்ன பண்ணுவாங்களாம்? நமச்சிவாய, நமச்சிவாய சொல்லி இருந்தா, ஆடே கடவுள் இல்லடா. ஏன்டா சொல்லிக்கிறேன்னு என்ன பண்ணுவாராம்? நம்ம மத்தவர் வந்து ஈஸியா நம்மள ஏமாத்திருவாங்கமா. நீங்க என்ன வச்சுக்கணும்? கரெக்டா பதில் வச்சுக்கணும். என்ன பண்ணனும்? நீங்க ஒரு பதில் வச்சுக்கணும்.
குருநாதர் :- தாயே, என்ன பதில் வைத்திருக்கின்றாய்? இப்பொழுது கூறு.
சுவடி ஓதும் மைந்தன் :- என்ன பதில்? இப்படி சொல்லுன்றாங்க.
அடியவர் 2 :- கேள்வி கேட்டீங்க. அந்த கேள்விக்குரிய பதிலை சொல்லுங்க.
குருநாதர் :- தாயே, எழுந்து வா.
சுவடி ஓதும் மைந்தன் :- அம்மா , வாங்கம்மா, வாங்க, வாங்க. அதெல்லாம் ஒன்னும் இல்ல. விடுங்க, எல்லா பேரும் எல்லாம் அப்படித்தான் இருக்கிறோம். யாரும் முன்னாடி எல்லாம் இல்ல. எல்லாம் ஒரே படியில தான் இருக்கோம். வாங்க.
அம்மை அடியவர் :- ( அங்கு மேடையில் மேலே வந்து அமர்ந்தார் )
குருநாதர் :- தாயே, எது என்று கூற பிற்பகுதியில் பின் தேரையன் உரைப்பான் என்று. ஆனாலும் யானே உரைக்கின்றேன். அப்பா, குடுவையில் தண்ணீர் இடு.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, எடுங்க ஐயா, கிளாஸ். ( ஒரு கண்ணாடி குடுவையை / கிளாஸ் எடுக்க சொன்னார்கள்)
சுவடி ஓதும் மைந்தன் :- அம்மா, அந்த பக்கம் வாங்க அம்மா. நீங்க தானே கேட்டீங்க.
(அம்மை அடியவர் சுவடி ஓதும் மைந்தனின் முன்னால், மேடையின் அமர்ந்தார்கள் )
https://youtu.be/C5OQ5pL4GnY?t=30381
அடியவர் :- வாங்க அம்மா………உட்காருங்க அம்மா…... குடுவையில தண்ணி ஊத்துங்க……. சும்மா ஒரு 100 ml, 200 ml ஊத்துங்க. போதும்.
===========================
# அம்மை அடியவர் குடுவையில் தண்ணீர் ஊற்றினார்கள்.
===========================
குருநாதர் :- எதை எவை என்று புரிய, அப்பா, அதில் கூட சரியாக அறிந்து கூட பின் ரசத்தை எடுத்து விடு.
===========================
( குருநாதர் கூட்டுப்பிரார்த்தனை குழுவினருக்கு முன்பே உத்தரவிட்டபடி , அடியவர்கள் வாங்கி வைத்திருந்த பாதரசத்தை இவ் குடுவையில் சுவடி ஓதும் மைந்தன் ஏற்கனவே இருந்த நீரின் உள்ளே கலந்தார்கள். இதன் பின்னர் வரும் வாக்கை அடியவர்கள் பின்வரும் நேரலையில் அவசியம் பார்க்கவும். )
இதன் நேரலை : - https://youtu.be/C5OQ5pL4GnY?t=30419
===========================
குருநாதர் :- அப்பா, அதனை கொடு. அவ் அம்மையிடம். எங்கு சென்று விட்டது (பாத) ரசம்?
( பாதரசம் ஊற்றப்பட்ட குடுவையை அம்மையிடம் கொடுக்க உத்தரவிட்டார்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- (பாதரசம்) எங்கமா நிக்குதுன்னு கேக்குறாருமா?
அம்மை அடியவர் :- (பாதரசம்) அடியில இருக்கு.
குருநாதர் :- ஏனென்று தெரிகின்றதா? அறிந்தும் இப்பொழுது, பின் அதாவது ஆள்காட்டி விரலை பின் அதை என்று தண்ணீர் இடு.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆள்காட்டி விரல் அதனை தண்ணிர் உள்ளே இடு என்றார்.
அம்மை அடியவர் :- ( தனது ஆள்காட்டி விரலிலை தண்ணீரின் உள்ளே இட்டார்கள்)
குருநாதர் :- தாயே, இப்போது சுற்று
சுவடி ஓதும் மைந்தன் :- சுற்றுமா. ( ஆள் காட்டி விரலினால் நன்கு கலக்க சொன்னார்கள்.)
அம்மை அடியவர் :- ( தனது ஆள்காட்டி விரலினால் தண்ணீரின் உள்ளே நன்கு சுற்றினார்கள் - அதாவது நம் அன்பு குருநாதர் பூமியின் சுழற்சி போல ஒரு எளிய பாடம் அங்கு எடுக்க தொடங்கினார்கள். )
குருநாதர் :- தாயே, ரசம் எங்கு இருக்கின்றது?
அம்மை அடியவர் :- (பாதரசம்) அடியிலே இருக்கு.
குருநாதர் :- ஏன் அது மேல் வரவில்லை?
அம்மை அடியவர் :- நீரை விட அது அடர்த்தியா இருக்குது. அதனால வரல.
குருநாதர் :- அறிந்தும் இதிலிருந்து என்ன பாடம் கற்றுக்கொண்டாய்?
அம்மை அடியவர் :- அடர்த்தியானது கீழ இருக்கு.
குருநாதர் :- அறிந்தும் ஏது என்று புரிய அப்பா, உப்பை எடுத்து வா.
சுவடி ஓதும் மைந்தன்:- உப்பை எடுத்துட்டு வாங்க, ஐயா. அம்மா, இது என்ன சொல்றாருன்னா (குடுவையை என்னிடம்) கொடுங்கம்மா. தண்ணி எடுத்துக்கினாரு. இங்க வந்து பாதரசம் இருக்குது. வந்து பார்த்தீங்களா?
சுவடி ஓதும் மைந்தன் குடுவையில் உள்ள பாதரசத்தை சுட்டிக்காட்டினார்கள்:- ➖
https://youtu.be/C5OQ5pL4GnY?t=30485
சுவடி ஓதும் மைந்தன்:- பாதரசம்னா என்னன்னு தெரியும் இல்ல? தொப்புக்குன்னு போட்டாங்க. உள்ள போயிடுச்சு. அது எங்க நிக்குது?
அடியவர் :- அடியில நிக்குது.
சுவடி ஓதும் மைந்தன்:- அடியில நிக்குது. பாதரசம் தெரியுதா?
அடியவர் :- பாதரசம் அடியில இருக்கு. பாருங்க,
சுவடி ஓதும் மைந்தன்:- அடியில நிக்குது. இதோ பாருங்க, உருண்டையா நிக்குது. பாருங்க,
அடியவர் :- தண்ணீர், அதை சுத்த சொன்னாங்க.
சுவடி ஓதும் மைந்தன்:- இருங்க, அப்படியே வச்சுக்கோங்க.
குருநாதர் :- அதன் உள்ளே ஏது என்று அறிய தேனையும் எடுத்துக்கொள்.
தேன் எடுங்க, ஐயா. ஐயா, இதெல்லாம் சொல்வார். என்னன்னு சொல்வார். நம்மளுக்கு வந்து இதெல்லாம் புரிஞ்சுக்கோங்க. உங்களை வெல்றதுக்கு தான் வேற ஒன்னும் இல்ல. எனக்கும் தெரியாது. பார்ப்போம், என்ன கடைசில நடக்குதுன்னு.
===========================
# சுவடி ஓதும் மைந்தன் குடுவையில் தேன் ஊற்றினார்கள்.
===========================
# நேரலை - https://youtu.be/C5OQ5pL4GnY?t=30528
===========================
குருநாதர் :- தாயே, ஏன் எதற்கு அடியில் சென்று விட்டது?
சுவடி ஓதும் மைந்தன்:- இது ஏன் (தேன்) அடியில் சென்றுவிட்டது?
அம்மை அடியவர் :- நீரை விட தேனுடைய அடர்த்தி அதிகமா இருக்கிறதுனால, அடியில போய் விழுந்துருச்சு.
குருநாதர் :- அறிந்தும் ஏது என்று புரிய. அப்படியே ஏது என்று அறிய. பின் எலுமிச்சை.
சுவடி ஓதும் மைந்தன்:- ஒரு எலுமிச்சை எடுங்க அம்மா.
( அடியவர்கள் எலுமிச்சை கனி ஒன்று எடுத்து அங்கு உள்ளவர்களிடம் கொடுத்தார்கள் )
சுவடி ஓதும் மைந்தன்:- (குடுவையை) குடுங்க ஐயா. (எல்லோரிடமும்) காண்பிக்கலாம்.
நேரலை :- https://youtu.be/C5OQ5pL4GnY?t=30563
சுவடி ஓதும் மைந்தன்:- அம்மா, எங்கமா தேன் காணும்?
அடியவர் :- தேன் அடியில இருக்கு.
சுவடி ஓதும் மைந்தன்:- இதுல தேனும் பாதரசம் இருக்கு. பாதரசம் நல்லா தெரியுது. ஆனால் தேன் வந்து தெரியவில்லை. (அம்மை அடியவரை பார்த்து) ஆனா நீங்க என்ன சொன்னீங்க? அடர்த்தி ஜாஸ்தின்னு சொன்னீங்க. ஆனா தேன் வந்து என்ன ஆச்சு வந்து? தேன் வந்து கரைஞ்சிருக்குது இங்க வந்து. ஐயா,
சுவடி ஓதும் மைந்தன்:- அப்படியே (எலுமிச்சை ) ஒன்னு குடுங்கம்மா. இருங்க கேக்கலாம். ( மீண்டும் சுவடி வாசிக்க ஆரம்பித்தார் )
===========================
# குடுவையில் எலுமிச்சை சாறு ஊற்றினார்கள்.
===========================
குருநாதர் :- அப்பா, (எலுமிச்சம்பழம்) அதன் சாற்றையும் கூட அதிலிடு.
https://youtu.be/C5OQ5pL4GnY?t=30603
சுவடி ஓதும் மைந்தன்:- அம்மா (எலுமிச்சம்பழம்) சாற்றை அதிலிடு.
அம்மை அடியவர் :- ( எலுமிச்சம்பழம் சாற்றை பிழிந்து குடுவையில் இட்டார்கள்)
இதன் நேரலை :- https://youtu.be/C5OQ5pL4GnY?t=30600
குருநாதர் :- தாயே, அச்சாறு சாறு எங்கு உள்ளது?
சுவடி ஓதும் மைந்தன்:- அச்சாறு எங்கு உள்ளது?
அம்மை அடியவர் :- முழுவதும் கலந்துருச்சு.
குருநாதர் :- எதனால் தாயே?, சொல். இப்பொழுது நிச்சயம் அனைவரும் யோசிக்க வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன்:- குடுங்கம்மா. ஐயா, என்ன சொல்றாரு தெரியுங்களா?
அடியவர் :- சாறு தெரியல. கலந்துருச்சு.
சுவடி ஓதும் மைந்தன்:- எல்லாமே அப்ப நீருடன் கலந்து போச்சு. ஓகேங்களா?
அடியவர் :- பாதரசம்?
சுவடி ஓதும் மைந்தன்:- பாதரசம் கரையல. ஓகேங்களா? அதே மாதிரி தேனும் (நீருடன் கலந்து போச்சு) ஆனா பாதரசம் ஒன்னுதான் கரையல. ஆனா என்ன கலந்துச்சு?
அடியவர் :- எலுமிச்சை (சாறு ) கரைஞ்சுச்சு.
சுவடி ஓதும் மைந்தன்:- எலுமிச்சை (சாறு ) கரைஞ்சு போச்சு. அடுத்து சொல்வார். எலுமிச்சை (சாறு ) தெரியுதா யாருக்காவது?
https://youtu.be/C5OQ5pL4GnY?t=30660
===========================
# குடுவையில் ஒரு முழு எலுமிச்சை கனி இட்டார்கள்.
===========================
குருநாதர் :- தாயே, பின் சரியாகவே அறிந்தும் இதன் தன்மையை உணர்த்த, எலுமிச்சை அதில் இடு.
சுவடி ஓதும் மைந்தன்:- எலுமிச்சை ஒரு நல்ல எலுமிச்சை. அதுல போடுங்க. இந்தாங்க. (ஒரு எலுமிச்சை கனி கொடுத்தார் அவ் குடுவையில் இட. )
அம்மை அடியவர் :- ( எலுமிச்சை கனி குடுவையில் இட்டவுடன் , கீழே சென்று விட்டது )
குருநாதர் :- தாயே, இதைத்தன் ஏது என்று புரிய. ஏன் அடியில் சென்றுவிட்டது?
சுவடி ஓதும் மைந்தன்:- ஏன் அடியில் சென்றுவிட்டது? எலுமிச்சை வெயிட் ஜாஸ்தியா? எதுக்கு அடியில் சென்றுவிட்டது?
அம்மை அடியவர் :- ( அமைதி )
குருநாதர் :- தாயே, அனைத்துக்கும் சொன்னாய். ஆனால் இதற்கும் ஒரு விடை கண்டுபிடி.
சுவடி ஓதும் மைந்தன்:- எல்லாத்துக்கும் நீ ஒரு சொன்னாய்மா. இதற்கும் ஒரு விடை கண்டுபிடி என்றார்.
அம்மை அடியவர் :- அதே நீர் அதை உயிர்ப்பித்து வந்து எலுமிச்சை உருண்டை. அது ஒன்னா கலந்து வச்சிருக்கு.
சுவடி ஓதும் மைந்தன்:- எப்படிங்க அய்யா?
அடியவர் :- அதாவது ஒரு பொருள் முங்காமல் இருக்கணும்னா அந்த இடைக்கு சமமான நீரை வெளியேற்றணும். உருண்டை வந்து அந்த இடைக்கு சமமான நீரை வெளியேறாத்தனால் உள்ள போயிருச்சு.
சுவடி ஓதும் மைந்தன்:- எப்படி?
===========================
# குடுவையில் “உப்பு” இட்டனர்.
===========================
குருநாதர் :- எது என்று புரிய தாயே, உப்பு இடு அதில் .
https://youtu.be/C5OQ5pL4GnY?t=30718
சுவடி ஓதும் மைந்தன்:- உப்பு எடுத்து போடுங்க.
அம்மை அடியவர் :- ( உப்பை எடுத்து இட்டார் குடுவையின் உள்ளே )
குருநாதர் :- தாயே, இன்னும் இடு.
அம்மை அடியவர் :- ( உப்பை எடுத்து இட்டார் குடுவையின் உள்ளே )
குருநாதர் :- தாயே, எது என்று புரிய, ஆனாலும் இதிலிருந்து நீயும் என்ன கற்றுக்கொண்டாய்? பின் அப்பா, அனைவரும் என்ன கற்றுக்கொண்டீர்கள்? தெரியப்படுத்து.
சுவடி ஓதும் மைந்தன்:- இதிலிருந்து என்ன கற்றுக்கொண்டீங்க? ஐயா, ஐயா, பாருங்க ( குடுவையை தூக்கி அனைவருக்கும் காண்பித்தார்கள்)
குருநாதர் :- தாயே. மீண்டும் அவ் எலுமிச்சை அப்படியே எடு.
https://youtu.be/C5OQ5pL4GnY?t=30780
சுவடி ஓதும் மைந்தன்:- மீண்டும் அந்த எலுமிச்சை அப்படியே எடுன்றார். ( ஏற்கனவே முங்கி போயிருந்த எலுமிச்சை அதனை அப்படியே வெளியே எடுத்தார் )
குருநாதர் :- தாயே, பின் உப்பு ஏன் கரையவில்லை?
சுவடி ஓதும் மைந்தன்:- உப்பு கரையலையா?
அடியவர் :- கரையல.
சுவடி ஓதும் மைந்தன்:- ஏன்மா, உப்பு கரையல? கொஞ்ச நேரம் ஆகும் அம்மா.
அடியவர்கள் உரையாடல்கள் :- ( உப்பு போட்டா கரையாதுங்க. இல்ல இல்ல இல்ல கரையும்).
குருநாதர் :- ஏது என்று புரிய நீயே கலக்கு தாயே.
சுவடி ஓதும் மைந்தன்:- கையில கலக்காதீங்க. ( குச்சி வச்சு கலக்குங்க )
அம்மை அடியவர் :- ( கையில குச்சி வச்சு கலக்க ஆரம்பித்தார்கள் )
https://youtu.be/C5OQ5pL4GnY?t=30825
சுவடி ஓதும் மைந்தன்:- கரையுதா? ஒரு கேள்வி கேட்டதால ஏதோ ஒரு அது சொல்ல வராரு.
அடியவர் :- அதெல்லாம் குருநாதருக்கு சில பேர் தெரியும். அதெல்லாம் குருநாதர் யாரை எழுப்பி, யாரை உட்கார வச்சு, யார் மேல விளக்கணும்னு.
குருநாதர் :- தாயே, நிறுத்து. அதனை எடு.
சுவடி ஓதும் மைந்தன்:- அப்படியே எடுமா?
https://youtu.be/C5OQ5pL4GnY?t=30884
( இப்போது பாதரசம் பல சிறு உருண்டைகளாக இருந்தது. நேரலையில் பார்த்து தெரிந்துகொள்ளவும். )
குருநாதர் :- எது என்று புரிய நீ ஒரே எதை என்று புரிய இட்டாய். ஆனால் ரசமோ பல வகையானது. எப்படி?
சுவடி ஓதும் மைந்தன்:- நீங்க மைக்லயே எல்லாருக்கும் இத எக்ஸ்பிளைன் பண்ணுங்கம்மா என்று ஒரு அடியவரிடம் கீழே சென்று எடுத்துரைக்க சொன்னார்கள்.
நிகழ்வை எடுத்துரைக்க அம்மை அடியவரின் நேரலை :-
https://youtu.be/C5OQ5pL4GnY?t=30986
அம்மை அடியவரின் உரை :- இந்த இந்த இதுல வந்து இந்த கிளாஸ் டம்ளர்ல ஃபர்ஸ்ட் தண்ணி எடுத்துட்டாங்க. அந்த தண்ணில வந்து ஃபர்ஸ்ட் மெர்க்குரி பாதரசம் ஒரு ட்ராப் எடுத்து போட்டாங்க. போட்டுட்டு பார்த்தா, அது அப்படியே முழுசா எப்படி போட்டாங்களோ, அப்படியே ஒரே உருண்டையா அடியில போய் தங்கிடுச்சு. அதுக்கப்புறம் தேன் விட்டு பார்த்தாங்க. தேன் அப்படியே தண்ணியோட தண்ணியா கரைஞ்சு அதோட போயிடுச்சு. அதுக்கப்புறம் எலுமிச்சம் பழ சாறு கொஞ்சம் விட்டாங்க. அதுவும் அதோட கரைஞ்சிருச்சு. அதுக்கப்புறம் உப்பு போட்டாங்க. உப்புவும் கரைஞ்சிருச்சு. இதுக்கு நடுவுல முழுமையான ஒரு எலுமிச்சம் பழம் போட்டாங்க. அது அடியில போயிடுச்சு. அது ஏன் அடியில போயிடுச்சுன்னு ஐயா கேட்டிருக்காங்க. அதுக்கப்புறம் அந்த எலுமிச்சம் பழத்தை வெளியே எடுத்துட்டாங்க. உப்பு போட்டு கரையல. அப்புறம் ஒரு நல்லா கலக்கின உடனே அந்த கல் உப்பு கரைஞ்சிருச்சு. கரைஞ்சதுக்கு அப்புறம் பார்த்தா, அந்த ஒரு பாதரசம், ஒரு உருண்டையா இருந்தது. சிறு சிறு சிறு உருண்டைகளா, குட்டி குட்டி குட்டியா, நிறைய ஒரு 20-30 அதுக்கு மேலயே இருக்கும். எவ்வளவுக்கு எவ்வளவு சின்னதாகுமோ, அந்த அதுக்கு முன்னாடி இருந்தது எல்லாமே சேர்ந்து, கரைஞ்சு, சிறு சிறு, சிறு சிறு உருண்டைகளா அடியில இருக்கு. இது எதுக்குன்னு கேக்குறாங்க. ஐயா?
சுவடி ஓதும் மைந்தன்:- குடுங்கமா. அப்படியே குடுங்கமா. இதுக்கு அதிசயமாதான் இருக்குங்க. ஐயா, பாதரசம் பிரியாது அவ்வளவு சீக்கிரத்துல. ஐயா,
https://youtu.be/C5OQ5pL4GnY?t=31073
===========================
# ஏன் மனிதன் கஷ்டப்படுகிறான்? உங்கள் பிறவி ரகசியம் என்ன ?
===========================
குருநாதர் :- எதை என்று அறிய, இதன் மூலம் என்ன ஏது என்று அறிய. அதாவது அறிந்தும் புரிந்தும் கூட ஏன் எதற்காக இவ்வாறு என்பதை எல்லாம் சரியாகவே இவ்வாறாக அறிந்தும் கூட. அதாவது எதை என்று புரிய. இவ்வாறாக மனிதனை சராசரியாகவே ஏது என்று அறிய, ஆனால் புவி தன்னிலே பின் ஒரு நிச்சயம் தன்னில் கூட துளி போலே இறைவன், அதாவது தவறி விழுந்து விடுகின்றான். ஆனாலும் மனிதன் தவறு செய்து தவறு செய்து மீண்டும் மீண்டும் இதுபோலே பல பிறவிகள் பூமியிலே எடுக்கின்றான். கஷ்டப்படுகின்றான்.
அடியவர் 2 :- ( உண்மை புரிந்த ஆச்சரியத்தில் ) ஓ !!!!!!!!!
சுவடி ஓதும் மைந்தன்:- ஐயா, இறைவன் என்ன பண்றாரு?
அடியவர் :- ஒரே ஒரு பிறவி, அதை அனுபவிச்சிட்டு வான்னு அனுப்புறாரு.
சுவடி ஓதும் மைந்தன்:- பூமியில போயிட்டு தப்பு பண்றவங்க என்ன பண்றாங்க? பூமியில வராங்க. ஒரே ஒரு முறை வந்து ஒரு பெரிய சொட்டை விடுறாரு. எங்க அது ஒரு பெரிய சொட்டை விடுறாங்க. ஐயா, ஆனால் மனிதன் என்ன பண்றான்?
அடியவர் :- இங்க வந்து தவறு செய்து தவறு செய்து…
சுவடி ஓதும் மைந்தன்:- தவறு செய்து தவறு செய்து தவறு செய்து என்ன பண்றான்?
அடியவர் :- பிறவியை பெருக்கிக் கொண்டே போகிறான்.
சுவடி ஓதும் மைந்தன்:- பிறவியை ?
அடியவர் :- பெருக்கிக் கொண்டே போகிறான்.
சுவடி ஓதும் மைந்தன்:- பெருக்கிக் கொண்டே போகின்றான்.
அடியவர்கள் :- ( கை தட்டல்கள் )
சுவடி ஓதும் மைந்தன்:- இப்ப பாருங்க, எத்தனை ( பாதரச துளிகள் பிரிஞ்சி இதுக்குள்ள ) இருக்குது.
குருநாதர் :- மீண்டும் தாயே, இதை யார்? எப்படி பின் இணைப்பது?
சுவடி ஓதும் மைந்தன்:- இதை யார் மீண்டும் என்ன பண்றது? பிறவியை வந்து எப்படி ?
அடியவர் :- ஒரே டிராப் ஆக்குறது? எப்படி யார் ஆக்குவா?
சுவடி ஓதும் மைந்தன்:- யார் ஆக்குவாங்க?
குருநாதர் :- அறிந்தும் தாயே, மீண்டும் எலுமிச்சை இடு.
சுவடி ஓதும் மைந்தன்:- எலுமிச்சை இடுங்க ஐயா.
அம்மை அடியவர் :- ( இப்போது எலுமிச்சை பழத்தை குடுவையினுள் இட்டார்கள். எலுமிச்சை பழம் இப்போது நீரின் மேலே மிதந்தது. )
அடியவர் :- ( ஆச்சரியத்தில் ) அட !!!!! பார்ரா !!!!!
சுவடி ஓதும் மைந்தன்:- அப்போ கீழ போச்சு. இப்ப என்ன ஆச்சு?
https://youtu.be/C5OQ5pL4GnY?t=31177
குருநாதர் :- ஏது புரிய? பின் யாருக்காவது இது ரகசியம் தெரியுமா? நிச்சயம் தன்னில் கூட சொல்லுங்கள்.
சுவடி ஓதும் மைந்தன்:- எனக்கும் தெரியாது. அறிவியல் மெய். யாருக்காவது இந்த ரகசியம் தெரியுமா?
குருநாதர் :- அப்பா, மடையனே, இவன் அம்மை கூட பின் அடர்த்தி அதிகமாகத்தான் இருக்கிறது என்று சொன்னாள். ஆனால் இப்பொழுது முழித்துக் கொண்டிருக்கின்றாள்.
சுவடி ஓதும் மைந்தன்:- இந்த அம்மாகூட அடத்தி அதிகமாக தான்ப்பா இருந்துச்சுன்னு சொன்னாங்க. இப்ப முழித்து நிற்கிறார். ஏதாவது சொல்ல சொல்லுப்பான்றாரு.
அடியவர் 4 :- முதல்ல தண்ணில வந்து உப்பு கரையல. நல்ல தண்ணியா இருந்தது. இப்ப இது உப்பு தண்ணியா மாறுது. அதனால…
குருநாதர் :- ஏது என்று புரிய? அப்பா, அனைவருமே நன்கு சிந்தியுங்கள்.
சுவடி ஓதும் மைந்தன்:- எல்லாரும் சிந்திக்க சொல்லிட்டார். எனக்கும் தெரியல. எல்லாரும் சிந்திக்கணும்ன்றாங்க. ஐயா, எப்படிங்க இது?
அடியவர்கள் :- ( அனைவரும் பலமாக சிந்திக்க ஆரம்பித்தனர்……….. )
அடியவர் :- சோடியம் இருக்கு, சிட்ரிக் இருக்கு, வாட்டர் இருக்கு, மெர்க்குரி இருக்கு. ஏதோ ஒரு கெமிக்கல் காம்பினேஷன் ஆகி, எலுமிச்சை பழம் மிதக்க ஆரம்பிச்சிருச்சு.
அடியவர் 2 :- இது ஒரிஜினல் நீர் கிடையாது. இப்ப ஒரிஜினல் நீர் இல்லாததுனால, நீரோட அடர்த்தி ஜாஸ்தி, அதனால்தான் மிதக்குது .
அடியவர் :- இல்ல, ஒருவேளை பூமி எப்படி மிதக்குதுன்னு சொல்றாங்களா?
குருநாதர் :- எதை என்று புரிய, தாயே, மீண்டும் நீரைச் சுற்று.
சுவடி ஓதும் மைந்தன்:- நீரை சுற்றுமா. ( மீண்டும் நீரைச் சுற்ற சொன்னார்கள் )
அம்மை அடியவர் :- (நீரை சுற்ற ஆரம்பித்தார்கள்…அதனால் எலுமிச்சம்பழம் உள்ளே சுற்றிக்கொண்டே இருந்தது….)
சுவடி ஓதும் மைந்தன்:- ( குடுவையை கையில் எடுத்து பின்னர் அனைவருக்கும் தெரியும்படி எலுமிச்சம்பழம் சுற்றுவதை காண்பித்தார்கள்….)
https://youtu.be/C5OQ5pL4GnY?t=31275
குருநாதர் :- இப்பொழுது சுற்றிக் கொண்டே இருக்கின்றது புவி. ஆனால் புவி எதற்காக சுற்றுகின்றது? பின் சுற்றுகின்ற மனிதன் வேண்டும் அல்லவா?
சுவடி ஓதும் மைந்தன்:- ஓகேங்களா? பூமி என்ன பண்ணுது? வேகமா சுத்துது. சும்மா சுத்துமா. பூமி? அதை சுற்றுகின்றவன் யார்?
அடியவர்கள்:- ( அமைதி )
சுவடி ஓதும் மைந்தன்:- யாரோ ஒருத்தர் இருக்கிறார். ஐயா, அம்மா, பூமி எல்லாம் வந்து சுத்துது. அது சுத்துறதுக்கு யார் இருக்கிறார்?
அடியவர்:- இறைவன் வேணும்.
அடியவர்:- இறைவன் இருக்கின்றார். இறைவன் இருக்கின்றார். அப்பதான் என்ன ஆகும்? அது வந்து சுத்தும்.
குருநாதர் :- இதை அறிய தாயே, மீண்டும் கருவிகளை எடு.
https://youtu.be/C5OQ5pL4GnY?t=31319
சுவடி ஓதும் மைந்தன்:- கருவிகள் எடுங்க. ஐயா, வெர்னியர் காலிபர் (Vernier caliper அல்லது வேணியர் இடுக்குமானி ) எல்லாம் எடுங்க.
சுவடி ஓதும் மைந்தன், அடியவர்:- ( Vernier caliper / வேணியர் இடுக்குமானி கையில் எடுத்தார்கள். )
அடியவர் 2 :- ( ஆச்சரியத்துடன் ) இதுக்குத்தான் இதெல்லாம் எடுத்துட்டு வர சொல்லி இருக்காரா?
அடியவர் :- எடுத்தாச்சு. கருவிகள் ரெடி.
அடியவர் :- ( மேடையில் அமர்ந்திருந்த அம்மை அடியவரை பார்த்து ) இந்தாங்க, பிடிங்க.
குருநாதர் :- தாயே, எது என்று கூட எப்படி இதை பயன்படுத்துவாய்? கூறு?
சுவடி ஓதும் மைந்தன்:- எப்படி பயன்படுத்துவோமா?
அடியவர் :- அவங்களுது தெரியணும். இதுதான் மெஷர் பண்றது ( என்று அம்மை அடியவருக்கு விளக்கினார் ).
சுவடி ஓதும் மைந்தன்:- மெஷர்மெண்ட் பண்ணுங்க.
அடியவர் :- எதை மெஷர் பண்ணனும்?
குருநாதர் :- தாயே, அறிந்தும் கூட, பின் நிச்சயம் தன்னில் கூட அனைத்து துகள்களையும் எடுத்து, நிச்சயம் நீ செய் பார்ப்போம்.
சுவடி ஓதும் மைந்தன்:- இதுல இருக்கிற பாதரசம் உன்னால எடுக்க முடியுமான்னு கேக்குறாரு.
அம்மை அடியவர் :- நீங்க சொன்னா நான் எடுக்க முடியும். ( நீங்க உத்தரவு கொடுத்தால் நான் எடுக்க முடியும் )
குருநாதர் :- எதை என்று கூட எடு, தாயே, பார்ப்போம்.
சுவடி ஓதும் மைந்தன்:- எப்படி எடுங்க அம்மா மேல.
அம்மை அடியவர் :- உங்க அருள் இருந்தாதான் எடுக்க முடியும்.
சுவடி ஓதும் மைந்தன்:- நீங்க எடுங்களேன். எப்படி எடுக்க முடியுமா? முடியாதா?
அம்மை அடியவர் :- (வெர்னியர் காலிபர் மூலம் பாதரசத்தை எடுக்க முயன்றார் )
அடியவர் :- இதை வச்சா எடுக்கணும்.
அடியவர் 2 :- (எடுக்க) முடியாது. முடியாது.
===========================
# தர்ப்பணம் ஏன் அவசியம் செய்ய வேண்டும் என்ற ரகசியம்
===========================
குருநாதர் :- தாயே, முடியாது என்பேன். எதை என்று அறிய, இவ்வாறு தான் ஆன்மாக்கள் கடலடியில் பல வழிகளில் கூட ஏது என்று அறிய. அதாவது மனிதனின் ஏது என்று கூற சில பிம்பங்கள் அறிந்தும் கூட, பின் பட்டு எதை என்று அறிய. அப்படியே நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது பின் உருண்டை வடிவமாக இருக்கின்றது. கண்ணுக்குத் தெரியாது. அறிந்தும் கூட, அதனால்தான் முன்னோர்களுக்கு தர்ப்பம் (தர்ப்பணம்) என்றே ஏது என்று அறிய அறிய. ஆனாலும் இவையெல்லாம் பின் எதை என்று கூற இணைக்க இணைத்துவிட்டால், நீ அதாவது பின் எவை என்று அறிய இறைவன் பால் சென்று விடுவாய்.
அடியவர் :- (ரகசியத்தின் உண்மை நிலை புரிந்து குருநாதரை கை எடுத்து கும்பிட்டார்கள் )
சுவடி ஓதும் மைந்தன்:- ஐயா, மனுஷன் என்ன பண்றாரு?. ஒரு சொட்டுதான் மனுஷன். அதை மனுஷனை , இறைவன் , வந்து வீசிறார். ஒரு இது கோலி குண்டு மாதிரி. ஓகேங்களா? கோலி குண்டு மாதிரி மனுஷனை வீசிறாரு. அந்த மனிதன் என்ன பண்ணிட்டான்? திருப்பியும் பூமியில என்ன பண்றான்? இறந்து இறந்து என்ன பண்றாங்க வந்து?
அடியவர் :- பல பிறவிகள் வராரு.
சுவடி ஓதும் மைந்தன்:- சேர்ந்து சேர்ந்து என்ன ஆச்சு? பல பிறவிகள். ஆனால் அந்த ஆன்மாக்கு என்ன? பல பிறவிகள். இதுல போட்டு அந்த ஆன்மா எல்லாம் சல்லி சல்லியா ( சிறு சிறு துகள்களாக ) வந்து என்ன ஆச்சு? வந்து சிதறுறது. ஆனால் அந்த ஆன்மா என்ன?
அடியவர் :- ஒன்னு சேர்த்து தான் திருப்பி இறைவன்ட்ட போக முடியும்.
சுவடி ஓதும் மைந்தன்:- இறைவன்களை திருப்பியும் செலுத்தினா மட்டும்தான் என்ன ஆகும்? வந்து
அடியவர் :- இங்கிருந்து தப்பிச்சு போக முடியும்.
சுவடி ஓதும் மைந்தன்:- இங்கிருந்து தப்பிச்சு போக முடியும்ன்றாரு. இல்லையென்றால்
அடியவர் :- இங்கேயே சிக்கிக்க வேண்டியதுதான்.
அடியவர் 4 :- அதுக்கு ஒரு வழிதான். தர்ப்பணம் பண்றது.
சுவடி ஓதும் மைந்தன்:- அதுக்கு ஒரு வழிதான். என்ன பண்றது? முதல்ல எல்லாரும் என்ன பண்ணனும்?
https://youtu.be/C5OQ5pL4GnY?t=31477
சுவடி ஓதும் மைந்தன்:- சிதறிக் கிடக்கக்கூடிய இதற்கெல்லாம் ஒருங்கிணைக்கிறதுக்கு முன்னோர் தர்ப்பணம்னு சொல்றாங்க.
சுவடி ஓதும் மைந்தன்:- முன்னோர் தர்ப்பணம் விட வேண்டும்.
குருநாதர் :- தாயே, இதானால் தான் தேரையன் கூட ஐந்தாம் இடத்தை பின் எது என்று அறிய பின் முக்கியம் என்றே.
சுவடி ஓதும் மைந்தன்:- அதனால்தான் இந்த ஐந்தாம் இடத்தை பத்தி….
அடியவர் :- முன்னோர்கள் ஸ்தானம் ….பித்ரு. (ஜாதகத்தில்) மூணு அஞ்சு கனெக்சன்.
===========================
# ஏன் இறையருள் - நீங்கள் அவசியம் பெற்றே ஆகவேண்டும்?
===========================
குருநாதர் :- தாயே மீண்டும் எடு அறிந்தும்.
https://youtu.be/C5OQ5pL4GnY?t=31504
( மீண்டும் ஒரு சொட்டு பாதரசத்தை அவ் குடுவையில் இட்டனர். இப்போது ஒரு அதிசயம் அங்கு நிகழ்ந்தது. அனைத்து பாதரச துளிகளும் ஒன்றாக சேர்ந்து விட்டது. )
சுவடி ஓதும் மைந்தன்:- சேர்ந்துச்சு. எல்லாம் ஒன்னு சேர்ந்துச்சு.
அடியவர் :- ( ஆச்சரியத்துடன் ) அட !!!! பார்ரா !!!!!!
அடியவர் 4 :- சூப்பர்
சுவடி ஓதும் மைந்தன்:- இப்ப பார்த்தீங்களா? எல்லாம் ஒன்னு சேர்ந்துவிட்டது.
அடியவர்கள் :- ( கை தட்டல்கள் )
அடியவர் :- இன்னொரு பாதரச துளி போட்டாங்க. எல்லாத்தையும் ஈர்த்துருச்சு.
சுவடி ஓதும் மைந்தன்:- அது எல்லாம் இடிச்சிச்சு. எப்படி இது?
அடியவர் :- அந்த துளியை பூரா ஈர்த்து ஒரு பெரிய உருண்டை ஆயிடுச்சு.
சுவடி ஓதும் மைந்தன்:- பெரிய உருண்டை ஆயிடுச்சு ஐயா, புரியுதுங்களா? அம்மா, எப்படிமா ஆச்சு? இப்ப
அம்மை அடியவர் :- ( குடுவையை சுவடி ஓதும் மைந்தனிடம் இருந்து தன் கையில் வாங்கினார். )
சுவடி ஓதும் மைந்தன்:- இப்ப ஏதாவது அடர்த்தி ஏதாவது சொல்ல முடியுமா? உடனே நீ இருந்த பாவம் எல்லாம் இல்ல. இல்ல, ஒன்னு ஒன்னு புண்ணியமா?
அடியவர் 2 :- இறைவனோட அருள் கிடைச்ச உடனே எல்லாம் ஒன்றாக சேர்ந்துவிட்டது.
குருநாதர் :- எதை ஏது என்று புரிய தாயே, நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாகத்தான். நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட பலமாக பின் ஏது என்று அறிய இறையருள் பெற்றே ஆகவேண்டும்.
அடியவர் 2 :- ( பலத்த கைதட்டல்கள் )
குருநாதர் :- எதை என்று அறிய இவ்வாறாக பின் இறையருளை பெற்றுவிட்டால், பின் அனைத்தும் ஒன்றிணைந்து எது என்று கூற அனைத்தும் புரிந்து, அனைத்தும் உனக்கு கிட்டி, நீ மேல் நோக்கி சென்று விடுவாய். தாயே, பின் போதுமா?
அடியவர் 2 :- அவ்வளவுதான். ஒரே அடி. நெத்தி அடி.
அம்மை அடியவர் :- ( ஆத்ம ரகசியங்கள் புரிந்து, மிக்க மகிழ்வுடன் குருநாதரை வணங்கினார்கள் )
சுவடி ஓதும் மைந்தன்:- எல்லாம் சேர்ந்துச்சுங்க ஐயா. ஆமா, அதிசயம் தான் எனக்கு.
அடியவர் 2 :- (கடைசியாக) போட்ட பாதரசம் தான் இறை அருள்.
சுவடி ஓதும் மைந்தன்:- ஆமாம். லாஸ்ட் திருப்பி என்ன பண்றார்? ஒரு சான்ஸ் கொடுக்கிறார்.
அடியவர் 2 :- நிறைய பாவம் பண்ணி இறைவனோட அருள் பெறும்போது, அந்த பாவம் எல்லாம் கரைந்தது ஒன்றாகிவிடும்.
சுவடி ஓதும் மைந்தன்:- எல்லாம் பாவம் பண்ணிட்டு என்ன? பிரிஞ்சு கிடக்குது.
அடியவர் 2 :- எல்லாம்…. இது இன்னும் மேல வந்துரும்.
சுவடி ஓதும் மைந்தன்:- பார்த்தீங்களா? எப்படி அம்மா? பார்த்துக்கோங்க. எல்லாத்தையும் திருப்பி பாதரசம் என்ன ஆச்சு? ஒன்னு சேர்ந்துச்சு.
அடியவர் :- அதாவது இந்த பூமியில பிறந்த ஆன்ம துகள்கள் எல்லாம் சிதறி கிடக்குது.
சுவடி ஓதும் மைந்தன்:- சிதறி கிடக்குதுமா உங்களுக்கெல்லாம். அங்கங்க.
அடியவர் :- சிதறி கிடக்கும் ஆன்ம துகள்கள் எல்லாம் ஒருங்கிணைகணும்.
சுவடி ஓதும் மைந்தன்:- எப்படி ஒன்னா இணைக்கணும்னா, நீங்கள் முதல்ல என்ன பண்ணனும்?
அடியவர் :- பித்ரு தர்ப்பணம்
சுவடி ஓதும் மைந்தன்:- இறையருள் கிடைக்கணும். அந்த இறையருள் கிடைக்கிறதுக்கு என்ன தகுதியோ, அதை பெற்றுட்டோம்னா, உங்க எல்லாம் ஒன்னு சேர்ந்த மாதிரி சேர்ந்துச்சுன்னா, உங்களுக்கு தேவையானது கிடைத்துவிடும். நீங்கள் வெற்றி ஆள்.
அடியவர் :- இங்கிருந்து தப்பிச்சு போயிடலாம்.
சுவடி ஓதும் மைந்தன்:- தப்பிச்சு போயிடலாம். எப்பா போதும்டா? எப்பான்னு சொல்லிட்டு ஐயா, ஐயா, புதுமையான விஷயங்கள் புரியுதுங்களாமா? எல்லாம் ஒன்னா சேர்ந்துருது. இது மாதிரி ஒன்னா துகள் சேரும் பொழுது, நம்ம இறைவனை கண்ணால பார்க்கலாம்ன்றாரு.
அடியவர் 2 :- இப்பதான் பார்த்துட்டோமே.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (
வியப்பும் தனித்துவமும்: இந்த வகையான சோதனைகளும் அதன் பின்னணியில் உள்ள ரகசியங்களும் சாதாரண பள்ளி வகுப்பறைகளிலோ, இயற்பியல் (Physics) மற்றும் வேதியியல் (Chemistry) பாடப்புத்தகங்களிலோ எளிதாகக் கற்றுத்தரப்படுவதில்லை.
இறைவனின் சக்தி: பாதரசத் துகள்கள் பிரிந்து, பின்னர் மீண்டும் ஆச்சரியப்படும் விதமாக ஒன்றாக இணைவதை வெறும் அறிவியலாக மட்டும் பார்க்க முடியாது; இது பிரபஞ்சத்தை இயக்கும் அந்த இறைவனின் அதிசயமான செயல்பாட்டிற்கு ஒரு சிறந்த உதாரணம்.
ஒன்று கூடுதல்: பல சிறு துகள்களாகப் பிரிந்து கிடந்த பாதரசம், இறுதியில் அனைத்தும் ஈர்க்கப்பட்டு மீண்டும் ஒரே துகளாக ஒன்று சேர்ந்துவிடுகிறது. )
===========================
# “வெர்னியர் காலிபர்” வைத்து மற்றொரு பாடம் ஆரம்பம்
===========================
( இப்போது இவ் வாக்கின் ரகசியங்கள் புரிய , மேலே கொடுக்கப்பட்டுள்ள எழுத்து பிரதியை பார்க்கவும். )
பின் வரும் வாக்கிற்கு அடியவர் அளித்த விபரங்கள் :-
முதல் தடவை வந்து எடுத்த நம்பர் வந்து 31837. அதுக்கு வந்து பாத்தீங்கன்னா மூணாம் நம்பர், காலச்சக்கரப்படி வந்து பாத்தீங்கன்னா மிதுனம் மூணாம் ராசி, மேஷம் 1, விருச்சிகம் 8. மிதுனம், திருப்பி மிதுனம் 3, துலாம் வந்து 7. இப்படி தனி எழுதியாச்சு. அதுக்கப்புறம் இரண்டாவது தடவை இந்த அம்மா விரிக்கப்போ வந்தது வந்து 31844. மிதுனம், மேஷம், விருச்சிகம், கடகம், கடகம். சோ 31844. சோ இது எல்லாம் வந்து ஈக்குவலா இருக்கக்கூடிய பெயர்களை எல்லாம் அடிச்சு அடிச்சிடனும், அதான் சொன்னாரு குருநாதர். சோ மிதுனம், மிதுனம் கேன்சல் ஆயிடுச்சு. மேஷம், மேஷம் கேன்சல் ஆயிடுச்சு. விருச்சிகம், விருச்சிகம் கேன்சல் ஆயிடுச்சு. அதுக்கப்புறம் இதுல இருக்க மிதுனமும் அங்க இருக்கிறதுனால இந்த மிதுனத்தை கேன்சல் பண்ணியாச்சு. சோ மிஞ்சின ராசி வந்து பாத்தீங்கன்னா, முதல் எடுத்தப்போ துலாம் மிச்சம். இரண்டாவது தடவை விரிச்சப்போ வந்து பாத்தீங்கன்னா கடகம் மிச்சம். சோ ஆக மொத்தம் மீத ராசி துலாம் கடகம். அதுக்கப்புறம் வாக்குலயும் உங்களுக்கு தெளிவா வரும். நன்றிங்க ஐயா, நன்றிங்க ஐயா. சோ வேற எதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க ஐயா. சோ வணக்கம்.
குருநாதர் :- எதை என்று அறிய, தாயே, அதை எடுத்து எவ்வளவு நீட்ட வேண்டுமோ, அவ்வளவு நீட்டு.
சுவடி ஓதும் மைந்தன் :- (வெர்னியர் காலிபர்) அது உன்னால எவ்வளவு நீட்டுமோ, அவ்வளவு நீட்டுன்ட்டார்.
அம்மை அடியவர் :- ( வெர்னியர் காலிபர் முழுதும் நீட்டினார்கள்)
நேரலை :- https://youtu.be/C5OQ5pL4GnY?t=31699
சுவடி ஓதும் மைந்தன் :- (வெர்னியர் காலிபர் அதை என்னிடம் ) குடுங்கம்மா, அப்படியே குடுங்க.
குருநாதர் :- அப்பா, எதை என்று அறிய, இதனை எழுதிக்கொள் முதலில்
சுவடி ஓதும் மைந்தன் :- இதை எழுதிக்கோப்பான்றார்.
அடியவர் :- (அது இங்கு மேலே புகைப்படமாக கொடுக்கப்பட்டுள்ளது. அடியவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளவும் )
வெர்னியர் காலிபர் அளவு :- 318.37
குருநாதர் :- அப்பா, இதனை அங்கே பின் ராசிகளாக இருக்கின்றது. மூன்று எங்கே இருக்கின்றது? ஒன்று எங்கே இருக்கின்றது? என்றெல்லாம் பின் ராசிகளை எடு.
( அடியவர்கள் பின் வரும் வரிசையில் ராசிகளை எழுத ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு எண்ணுக்கும் அதற்குரிய ராசி பின் வருமாறு)
அடியவர் அளித்த விவரங்கள் :-
முதல் தடவை வந்து எடுத்த நம்பர் வந்து 31837. அதுக்கு வந்து பாத்தீங்கன்னா மூணாம் நம்பர், காலச்சக்கரப்படி வந்து பாத்தீங்கன்னா மிதுனம் மூணாம் ராசி,
மேஷம் 1,
விருச்சிகம் 8.
மிதுனம்,
திருப்பி மிதுனம் 3,
துலாம் வந்து 7. இப்படி தனி எழுதியாச்சு.
வெர்னியர் காலிபர் அளவு :- 318.37
3 - மிதுனம்
1 - மேஷம்
8 - விருச்சிகம்
3 - மிதுனம்
7 - துலாம்
குருநாதர் :- தாயே, மீண்டும் இழு.
அம்மை அடியவர் :- ( வெர்னியர் காலிபர் முழுதும் நீட்டினார்கள்)
இப்போது வெர்னியர் காலிபர் அளவு :- 318.44
( அடியவர்கள் பின் வரும் வரிசையில் ராசிகளை எழுத ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு எண்ணுக்கும் அதற்குரிய ராசி பின்வருமாறு)
அதுக்கப்புறம் இரண்டாவது தடவை இந்த அம்மை அடியவர் நீட்டும் போது வந்தது வந்து எண் 31844. மிதுனம், மேஷம், விருச்சிகம், கடகம், கடகம். சோ 31844.
வெர்னியர் காலிபர் அளவு :- 318.44
3 - மிதுனம்
1 - மேஷம்
8 - விருச்சிகம்
4 - கடகம்
4 - கடகம்
https://youtu.be/C5OQ5pL4GnY?t=31853
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, எழுதிட்டீங்களா? எல்லாத்தையும் எழுதுங்க. அப்ப வந்து ஒன்னு, ரெண்டு, மூணு, நாலு, அஞ்சு, அஞ்சு, அஞ்சு, பத்து.
சுவடி ஓதும் மைந்தன் :- பத்து ராசி இருக்குதா?
அடியவர்கள் :- ஆமாம்.
https://youtu.be/C5OQ5pL4GnY?t=31897
குருநாதர் :- அப்பனே , அப்பனே, அறிந்தும் கூட, பின் சமமாக வரவை. அழி.
சுவடி ஓதும் மைந்தன் :- சமமாக வந்ததெல்லாம் டாட் போடுங்க. மிதுனம், மிதுனம். கேன்சல் பண்ணுங்க. மேஷம், மேஷம்.
( சோ இது எல்லாம் வந்து ஈக்குவலா இருக்கக்கூடிய பெயர்களை எல்லாம் அடிச்சு அடிச்சிடனும், அதான் சொன்னாரு குருநாதர். சோ மிதுனம், மிதுனம் கேன்சல் ஆயிடுச்சு. மேஷம், மேஷம் கேன்சல் ஆயிடுச்சு. விருச்சிகம், விருச்சிகம் கேன்சல் ஆயிடுச்சு. அதுக்கப்புறம் இதுல இருக்க மிதுனமும் அங்க இருக்கிறதுனால இந்த மிதுனத்தை கேன்சல் பண்ணியாச்சு. சோ மிஞ்சின ராசி வந்து பாத்தீங்கன்னா, முதல் எடுத்தப்போ துலாம் மிச்சம். இரண்டாவது தடவை விரிச்சப்போ வந்து பாத்தீங்கன்னா கடகம் மிச்சம். சோ ஆக மொத்தம் மீத ராசி துலாம் கடகம்.)
(இங்கு மேலே புகைப்படமாக கொடுக்கப்பட்டுள அதனை அடியவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளவும். அதாவது முதலில் 5 இப்போது மிச்சம் உள்ள ராசி கடகம், துலாம்.)
குருநாதர் :- தாயே, கடகம், துலாம். இப்பொழுது இதைப்பற்றி என்ன நினைக்கின்றாய்?
https://youtu.be/C5OQ5pL4GnY?t=31953
குருநாதர் :- தாயே, இதைப்பற்றி நிச்சயம் நீ சொல்ல வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- இதைப்பற்றி நிச்சயமா நீ சொல்லணும்ன்றாரு. சொல்லுங்கம்மா.
அம்மை அடியவர் :- ( இறைவனை பற்றி சில வார்த்தைகள் உரைத்தார்கள் )
குருநாதர் :- தாயே, பின் அதாவது உன்னை பற்றியே இங்கு எடுத்துரைக்கின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- உங்களைப் பற்றி தான் எடுத்துரைக்கிறார்ன்றாரு. நீங்க இறைவனை பத்தி இங்கு சொல்ல வேண்டாம். உங்களைப் பத்தி…. அப்படியே உங்களைப் பத்தி நினைங்க. உங்களைப் பத்தியோ, உங்க வீட்டுக்குள்ள உள்ளவரை பத்தியோ நினைங்கமான்றாரு. வந்து வேற ஒன்னும் இல்ல. இந்த இந்த ராசிக்கு உங்களுக்கு ஏதாவது சம்பந்தம் இருக்கான்னு கேக்குறாங்க.
அம்மை அடியவர் :- எனக்கு துலாம் ராசி .
சுவடி ஓதும் மைந்தன் :- அம்மா, அதனாலதான்மா கேட்டுட்டு இருக்காங்க. வந்து கடகம், துலாம். ரெண்டு இருக்குதுமா? அம்மா, சரி. துலாம், இந்த ராசியில ஒன்னு உங்களுக்கு சம்பந்தப்பட்டு இருக்கு. சரி, ரெண்டு என்ன தெரியுமா? துலாம். அந்த ராசி துலாம். துலாம். ஓகேங்களா? துலாம் ராசி கன்ஃபார்மா?
குருநாதர் :- அறிந்தும். அப்பா, அதையும் எடுத்துவிடு.
சுவடி ஓதும் மைந்தன் :- துலாத்தையும் எடுத்துவிடு. ( துலாம் ராசியை அழித்து விட்டனர். இப்போது கடகம் மட்டுமே அங்கு அழிக்காமல் இருந்த ராசி. )
https://youtu.be/C5OQ5pL4GnY?t=32020
குருநாதர் :- எது என்று புரிய அப்பா, இப்பொழுது ஏது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட. அதாவது இவர்கள் முன்னோர்கள் ஏது என்று அறிய ஒருவன் எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட குழப்பவாதியாக இருந்து ஏது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட. பின் அதாவது பின் மரணம் இல்லை. ஆனாலும் மரணித்து ஏது என்று புரிய. இதனால் இச்சாபம் ஏற்பட்டுவிட்டது. இதனாலே பின் எவை என்று பின் அறிந்தும் கூட. பின் மனக்குழப்பங்கள் அதிகமாகி, அதிகமாகி எப்படி வாழ்வது என்று தெரியாமல் போகும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன சொல்றாரு தெரியுங்களா? கடகம். ஐயா, எங்க ஐயா மீதி நிக்குது என்ன? கடகம். அப்ப கடகத்துக்கு அதிபதி யாரு? சந்திரன். அப்ப அவர் என்ன பண்ணாரு? யாரோ ஒருத்தர் வீட்ல வந்து முன்னோர்கள் வந்து யாராவது ஒன்னு மனம் இழந்து தற்கொலை ஏதோ ஒன்னு எல்லாம் இருக்கிறாங்களோ எனக்கு தெரியல. வந்து முன்னோர்கள் ஒன்னு வந்து என்ன பண்ணாங்கன்னா வந்து அப்ப எதையோ வந்து ரொம்ப இது பண்ணி இது அவங்க வந்து இறந்துட்டு இருக்காங்க. வந்து அதனால இப்ப அதிகமா வந்து குழப்பங்கள்.
குருநாதர் :- இதனால் எது என்று கூறப்பின் இல்லத்தில் சில வழியில் கூட ராகு கேதுவின் தோஷங்கள்.
இவ் அம்மைக்கு சுவடி ஓதும் மைந்தன் அளித்த விளக்கங்கள்:-
https://youtu.be/C5OQ5pL4GnY?t=32080
( குருநாதர் இவ் அம்மையை மேடைக்கு அழைத்த காரணமே, இவ் அம்மையிடம் விளையாடிய காரணமே - இவ் அம்மை அனைத்து கூட்டு பிரார்த்தனைகளுக்கு தவறாமல் வந்தவர் என்ற ரகசியம் அப்போதுதான் வெளிப்பட்டது. )
சுவடி ஓதும் மைந்தன் :- சாதாரணம் இல்ல. சித்தர்கள் உங்களை வச்சு விளையாடுறாருன்னா நீங்க அப்ப எவ்வளவு பக்தி செழிச்சிருப்பீங்க. எங்கெல்லாம் போயிருப்பீங்க சொல்லுங்கமா? எத்தனை கூட்டு பிரார்த்தனை வந்தீங்க பாருமா?
அம்மை அடியவர் :- எல்லாத்துக்கும்
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாத்துக்கும் வந்துக்கிறாங்க. புண்ணிய ஆத்மா. அதனாலதான் இன்னைக்கு மேடைக்கு வந்துக்கிறாங்க. தப்பா நினைக்காதீங்க. எல்லாரும் வரலாம். எல்லாரும் வந்துக்கிறாங்க. ஆனால் இந்த அம்மாவே வாயை கிளறிவிட்டு வாமான்னு சொல்லிட்டு உட்கார வச்சீங்கன்னா எவ்வளவு நம்பிக்கையா வந்திருக்காங்க.
அடியவர் :- ( மேலும் சில விளக்கங்கள் )
https://youtu.be/C5OQ5pL4GnY?t=32220
===========================
# ராகு கேது தோஷங்கள் நீங்கும் ரகசியங்கள்.
===========================
குருநாதர் :- எவை இதை என்று புரிய இவ்வாறு தான் அறிந்தும் கூட இவ்வாறாக இருந்தால் நிச்சயம் தன்னில் கூட புவியானது இவ்வாறாக சுற்றிக்கொண்டே சுற்றிக்கொண்டே. அதாவது நிச்சயம் தன்னில் கூட பின் இவ்வளவு சுற்றுகள் சுற்றினால் தானாகவே அறிந்தும் கூட எதை என்று கூறுகிற ராகுவின் தோஷங்கள் நீங்கிவிடும் பின்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு இப்படி பூமி சுற்றினே இருக்குது இல்ல? பூமி ஒரு சில சுற்றுகள் சுற்றினால் மட்டும், ராகு கேது தோஷம் என்ன பண்ணுமா?
அடியவர் :- போயிடும்.
சுவடி ஓதும் மைந்தன் :- (ராகு கேது தோஷம்) தானா போயிடும். அது விலக்குவதற்கு அவசியமில்லை. புரியுதா உங்களுக்கு? வந்து நீங்க ஜாதகம் எடுத்துட்டு போனா கூட அந்த பரிகாரம் இந்த பரிகாரம்னு சொல்லுவாங்க. ஆனாலும் ஒரு குறிப்பிட்ட குறிப்பிட்ட வயது (அடைந்தவுடன் , பூமியின் சுழற்சியால் அவ் தோஷம் தானாக நீங்கிவிடும் )
அடியவர் 2 :-அது நமக்கு எப்படி தெரியும்?
குருநாதர் :- எது என்று அறிய அப்பனே சில விசேஷ தலங்களுக்கு சென்றால் அப்பனே, இப்பொழுது எப்பொழுது பின் எலுமிச்சை மேல். அதாவது கீழ் உள்ளது எது என்று கூட மேல் எழும்பி பின் ஆடிற்றே. அதேபோலத்தான் சில திருத்தலங்கள் இருக்கின்றது. அங்கு சென்றால் தானாக அப்பனே பின் மேல் எழும்பி விடும். அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட.
அடியவர் 2 :- சூப்பர்!!!!! ( கை தட்டல்கள் )
கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( பலத்த கை தட்டல்கள் )
அடியவர் 2 :- அப்ப நான் திருத்தலங்களுக்கு போனாதான் அந்த பூமி….
அடியவர் :- அதுக்கு சொல்யூஷன் இருக்கு. எப்படி வந்து எலுமிச்சம் பழம் உள்ள அடியில முதல் இருந்தது அந்த பொருட்கள் எல்லாம் சேர்த்த உடனே எப்படி மேல வந்ததோ, அதேபோல அந்த தோஷங்கள் நீக்குறதுக்கு, சில ஸ்தலங்கள் இருக்கு. அங்க போறப்போ, அதெல்லாம் நிவர்த்தி ஆயிடும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அது நிவர்த்தியாகும். அதை வந்து நீங்க வந்து பூமி சுத்தம் பண்ணா இது வந்து தானா என்ன ஆகும்? வந்து அந்த
அடியவர் 2 :- திருத்தலங்களுக்கு போனா நம்ம பூமி சுத்தத்தை உணர முடியும்.
குருநாதர் :- அறிந்தும் எது என்று புரிய பின் இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட எவ்வாறாக பின் கீழே உள்ளது அனைத்தும் இணைந்துவிட்டது. மேலே பின் அது தோஷமும் நீங்கிவிட்டது. அவ்வளவுதான்.
அடியவர் 2 :- ( அடேங்கப்பா )
சுவடி ஓதும் மைந்தன் :- அப்படின்னு அப்ப என்ன ஆகுது? முன்னோர்கள் முன்னோர்கள் எல்லாம் பிரிஞ்சு எல்லாம் என்ன ஆகுது? அந்த ஆலயங்களுக்கு போனா எல்லாம் இணைஞ்சிரும் கீழ. என்ன ஆகும்? நம்ம தோஷங்களும் போயிடும். இதுதான் இதனுடைய ரகசியம்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( குடுவையை எடுத்து அனைவரிடமும் காண்பித்தார்கள் ) அம்மா பாருங்கம்மா. புரியறதா யாருக்காவது ?
https://youtu.be/C5OQ5pL4GnY?t=32355
சுவடி ஓதும் மைந்தன் :- புரியலைன்னா கேளுங்கம்மா. ஐயா எல்லாம் ஒன்னா இணைஞ்சுச்சு. பார்த்தீங்களா? இது ஒன்னா இணைஞ்சுச்சுன்னா…. எல்லாரும் முன்னோர்கள் குலதெய்வம் எல்லாம் முன்னேறினுச்சுன்னா தானாக உன்னோட தோஷங்கள் கிரக எல்லாமே
அடியவர் :- குற்றங்கள் எல்லாம் போயிடும்.
சுவடி ஓதும் மைந்தன் :- குற்றங்கள் எல்லாமே போயிட்டு அழகா நீ வந்து மேல அப்படி பார்க்கலாம். இல்லைன்னா என்ன பண்ணலாம்? அடியிலவே என்ன பண்ணலாம்? மூச்சு விடாம சாகணும்மா? எப்படி? ஏது? அதனால பாரு அழகா வந்து பாரு. இப்ப பாரு எலுமிச்சை மேலே வந்து மூஞ்சி காட்டுச்சு. ஐயா தெரியுதா?
( இவ்விடத்தில் எலுமிச்சை பழம் மேலே வந்து விட்டது )
அடியவர் :- இது மேல ஏறிட்டே இருக்கு.
சுவடி ஓதும் மைந்தன் :- மேல ஏறுச்சு. அப்ப கீழ எல்லாம் ஒன்னா சேர்ந்துச்சு ஆன்மாக்கள். அப்ப என்ன பண்ணனும்? ராகு கேது தோஷங்கள், கிரகத்தில் உள்ள தோஷங்கள் விலகணும்னா, என்ன பண்ணனும்?
அம்மை அடியவர் :- சில சில திருத்தலங்கள் இருக்குது.
சுவடி ஓதும் மைந்தன் :- சில திருத்தலங்கள் இருக்குது.
அடியவர் 2 :- எந்தெந்த திருத்தளத்துக்கு போகணும்? எதுக்கெல்லாம் போகணும்?
குருநாதர் :- அப்பா ஏது என்று புரிய, அப்பனே இவை பின் வந்தாலே அப்பொழுதே எது என்று புரிய, பின் யாங்கள் வந்தோம் அப்பனே. பின் கவலையில்லை. வருங்காலத்தில் நீக்கி விடுவோம் யாங்களே. எது என்று கூறப்பின் மறைமுகமாகவே பின் சொன்னேமே. எது என்று அறிய இத்தனை பின் நல்வற்றை தேடி தேடி சென்றால் சில சித்தர்கள் குறுக்கிடுவார்கள். பின் அவ்வாறு சித்தர்கள் பின் குறுக்கிட்டால் பின் சக்தியும் மேலேறி எவை என்று கூறி இதுபோல் வந்துவிடும். அப்பா
அடியவர் :- ( சிவாய நம )
https://youtu.be/C5OQ5pL4GnY?t=32432
குருநாதர் :- தாயே எது என்று அறிய இப்பொழுது அடர்த்தியை பற்றி கூறு போதும்.
அம்மை அடியவர் :- ஒவ்வொரு பொருளையும் அது இறைத்தன்மை ஒவ்வொரு அடர்த்தி நிலையா இருக்குது. அந்த அடர்த்தி கலக்கப் போகும்போது அதை நம்ம இயற்பியல் சொல்லும்போது அடர்த்தி நிலைன்னு தான் குறிப்பிடுவோம். அப்போ எல்லாம் ஒன்னா கலக்கும்போது ஒரு அடர்த்தி நிலையா மாறுது. அதை சமன் படுத்தக்கூடிய, மேல ஒரு இருக்க இன்னொரு இறைநிலை இறை தன்மையுடைய அடர்த்தி நிலை கலக்கப் போகும்போது, எல்லாம் ஒன்னாகி சமநிலைக்கு வந்துருச்சு.
===========================
# ரசவாதம் ரகசியங்கள் - https://youtu.be/C5OQ5pL4GnY?t=32520
===========================
குருநாதர் :- தாயே தந்தையே அனைவருக்கும் ரசத்தை கட்டுவது எப்படி என்று பிற்பகுதியில் உரைக்கின்றேன். நிச்சயம் இதை கட்டினால் எதை என்று புரிய பின் மந்திரங்கள் நிச்சயம் தன்னில் கூட பின் சக்தி பெறும். நிச்சயம் வருங்காலத்தில் உரைப்பேன்.
குருநாதர் :- அதற்கும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இறைவன் ஏது என்று புரிய அறிந்து கூட பின் இறைவன் என்ற பாடத்தில்.
குருநாதர் :- அறிந்தும் பின் இங்கே அதாவது சாதாரணம் இல்லை. ஏது என்று புரிய சரியாகவே அறிந்து கூட இவ் ரசம் அறிந்து கூ.ட
சுவடி ஓதும் மைந்தன் :- ரசம் இது சாதாரணமா இல்லைன்றாரு. ரசம் இதை வந்து ஒருத்தர் கட்டி, சொல்லிக் கொடுத்தா, நீங்க பண்ணீங்கன்னா, உங்களுக்கு எல்லாமே வேண்டியதெல்லாம் கிடைக்கும்ன்றாரு.
குருநாதர் :- பின் வருங்காலத்தில் யான் இதைப்பற்றியும் உரைப்பேன். தாயே பின் அனைவரும் ஏது என்று புரிய அப்பனே பின் அதாவது திருடர்கள் போல் முழித்துக் கொண்டிருக்கின்றார்கள். அப்பனே ஒரு பாடலை பாடு.
குருநாதர் :- ஏது என்று புரிய. ஆனால் மனிதன் பின் எதை என்று கூற, ஏன் அவ்வ ஊரில் பிறக்கின்றான் என்பதையும் வருங்காலத்தில் எடுத்துரைப்பேன்.
===========================
# அனைத்தும் கற்றுக் கொண்டால் அதிர்ஷ்டம் தானாக வரும்
===========================
குருநாதர் :- அறிந்தும் அப்பனே ஏன் இவ்வாறு உங்களுக்கு சொல்கின்றேன் என்றால் அனைத்தும் கற்றுக்கொண்டால் அதிர்ஷ்டம் தானாக வரும். அப்பா. அப்பனே பின் உழைத்தால் அதிர்ஷ்டம் தானாக வரும். அனைத்தும் எதை என்று புரிய, அப்பனே பின் அனைத்தும் கற்றுக்கொண்டால், பின் இதுவும் ஒரு உழைப்புதான் அப்பா.
அடியவர் :- இந்த கற்றலும் கேட்டலும் ஒரு உழைப்புதான். குருநாதர் ஒரு தடவை சொல்லி சொல்லித் தர்றாங்க இல்ல? இதை வந்து நம்ம கத்துக்கணும். இதை கேட்டுக்கிட்டு இருக்கிறோம். கேட்டதை வந்து நம்ம செயல்படுத்தணும். இதுவும் ஒரு உழைப்புதான். இந்த உழைப்புன்றப்ப அந்த உழைப்புக்கு தகுதியை ஊதியம் வந்து உங்களுக்கு கொடுக்கப்படும் அப்படின்றாங்க குருநாதர்.
குருநாதர் :- அறிந்தும் எதை என்று புரிய அப்பனே ஒரு பாடலை பாடு.
பாடகர் :- ( திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா என்ற பாடலை பாட ஆரம்பித்தார்கள் )
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 19.04.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் …….)
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)

No comments:
Post a Comment