​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 1 June 2026

சித்தன் அருள் - 2214 - அன்புடன் அகத்தியர் - கருவூரார் சித்திரை அஸ்தம் அவதார தினம், குரு பூஜை வாக்கு!




29/4/2026 சித்தர் கருவூரார் சித்திரை அஸ்தம் அவதார தினம், குரு பூஜை அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த வாக்கு:

வாக்குரைத்த ஸ்தலம்: கரூர் பசுபதீஸ்வரர் ஆலய வளாகம்.

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன்.

அப்பனே, நல்விதமாக அப்பனே, கரு ஊரான். அப்பனே, பல சேவைகளை செய்துள்ளானப்பா; நிச்சயம் தன்னில் கூட. 

அதனால், அறிந்தும் கூட, பின் ஒவ்வொருவரும் ஏது என்று புரியாமலும் அப்பனே உலகத்தில் இருக்கின்றார்கள் என்பேன். 

இதனால் அவ் சேவை பல பல, அப்பனே. பின் நன்மைகளை உலகத்திற்கு, அப்பனே. 

அதனால் ஒரு சேவையை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்; அதையும் புண்ணியமே. 

 அப்பனே, இதனால் பின், அவனை மட்டும் வணங்கி வணங்கி!?!?!??!!!

 ஆனாலும் அவன் செய்த சேவையை மறந்துவிட்டார்கள் மனிதர்கள். 

 அப்பனே, இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட அப்பனே, ஒவ்வொன்றாக—அப்பனே, பின் அதை நீங்கள் கேட்டாலும், அப்பனே, புண்ணியமே. 


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்.

இங்கு வீற்றிருக்கும் அதாவது.. கருவூர் சித்தர் பற்றி குருநாதர் அகத்தியர் வாக்குகள் கூறுகின்றார்.

கருவூர் சித்தர் மக்களுக்கு பல சேவைகளை செய்துள்ளார்கள். ஆனால் அந்த சேவையைப் பற்றி மக்களுக்கு யாருக்கும் தெரியவில்லை. 

எல்லோரும் அவரை வணங்கி செல்கின்றார்கள் ஆனால் அவர் செய்த சேவை என்னென்ன என்பது அவரைப் பற்றி யாருக்கும் தெரியாது. 

இப்பொழுது குருநாதர் அகத்தியர் பெருமான் கருவூரார் செய்த சில சேவைகளை நமக்கு வாக்குகளில் கூறுகின்றார் இதை கேட்பதே நமக்கு புண்ணியம் ஆகும். 







குருநாதர் அகத்தியர் பெருமான் வாக்கு!

 அப்பனே, நல்விதமாக அப்பனே, அதாவது கருவூரான் பல திருத்தலங்களுக்கு சென்றானப்பா.


 அப்பனே, எதை என்று புரிய, அப்பனே. அதாவது, அப்பனே, கன்னியா(குமரி) தன்னிலிருந்து அப்பனே, நிச்சயம் தன்னில் ஏது என்று புரிய, அப்பனே. பல வகையில் கூட, அப்பனே, பின், அனைத்திற்கும் சென்று, அப்பனே, பின், இறைவன் எங்கு இருக்கின்றான்????? என்றெல்லாம், அப்பனே.
அறிந்தும் ஏது என்று புரிய. 

ஆனாலும் எங்கும் இறைவன் கண்ணுக்கு தென்படவில்லை.



சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம் 

கருவூர் சித்தர் முதலில் கன்னியாகுமரியில் இருந்து தன்னுடைய பயணத்தை தொடங்கி இறைவன் எங்கு இருக்கின்றார் என்று தேடலோடு ஆரம்பித்தார்.


குருநாதர் அகத்தியர் பெருமான் வாக்கு.


 ஆனாலும் இறைவனை காண முடியவில்லை. 
அறிந்தும் ஏது என்று புரிய.!!!


இதனால் எவ்வாறு என்பதை எல்லாம் அறிந்தும் உடலை வருத்தி. 


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம் 

கருவூர் சித்தர் இறைவனை தேடிச் செல்லும் பொழுது

உடலாலும் மனதாலும்
 பல கஷ்டங்களை அனுபவித்தார் பல வருத்தங்களை அனுபவித்தார். !




குருநாதர் அகத்தியர் பெருமான் வாக்கு


ஆனாலும் அறிந்தும் கூட பலர் எவ்வாறு என்பதை எல்லாம் இதனால் எதை என்று அறிய. அதாவது தற்பொழுது பின் கேதர் (கேதார்நாத்)

 அது இது என்று அறிய. அங்கேயே பலர் எவை என்று கூட பின், அதாவது உறங்கினான்.


  ஆனாலும் எதற்காக??? வந்த பிறவி ஏது என்று அறிய. 


ஆனாலும் அனைத்தும் அறிந்தவனே. 


 அறிந்தும் இவ்வளவு ஏது என்று அறிய.

 அதாவது வயதும் இவ்வளவு. அறிந்தும் ஏது என்று அறிய.

 அதாவது பல நூறு ஆண்டுகள். அப்பனே இறைவனைக் காண!!!


 அறிந்தும் இவ்வாறாக எங்கும் காணமே!!!( எங்கும் காணவில்லையே என்று) என்று படுத்து.


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம் 

கரூர் சித்தர் இறைவனைக் காண இப்படியே கன்னியாகுமரியில் இருந்து கிளம்பி ஒவ்வொரு திருத்தலங்களாக சென்று சென்று கடைசியாக இமயமலை சாரலில் இருக்கும் கேதார்நாத்தை அடைந்தார். 

அங்கு பலமான சிந்தனைகள் அவருக்கு எதற்காக எனக்கு பிறவி நான் வந்த நோக்கம் என்ன இறைவன் எங்கு இருக்கின்றான் என்றெல்லாம் சிந்தித்து சிந்தித்து அங்கேயே பல நூறு ஆண்டுகள் கிடந்து உறங்கி இறைவனை சிந்தித்து வாழ்ந்து வந்தார்.




குருநாதர் அகத்திய பெருமான் வாக்கு

  அறிந்தும் ஏது என்று அறிய. 

அதாவது ஏது என்று பொருள்பட அறிந்தும் இவை யாவும் எவ்வாறு செப்ப?? என்று அறிந்தும் கூட இடியுடனே பின் அறிந்தும் கூட.

 அதாவது கருவானவனே என்று.


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்


கருவூர் சித்தர் கேதார்நாத்தில் இப்படி இறைவனைப் பற்றி சிந்தித்து படுத்து கொண்டு இருந்த பொழுது



இடியுடன் இறைவனுடைய அசரீரி
கருவானவனே என்று!!!


குருநாதர் அகத்திய பெருமான் வாக்கு


  எதை? ஏது என்று புரிய. அதாவது அறிந்தும் கூட. அதாவது ஏது என்று புரிய. அறிந்தும் கூட பின் அதாவது கரு!! என்று!!! மீண்டும் வந்து கரு!!! என்று. 


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்

கருவூர் தேவரிடம் வானத்திலிருந்து அசரீரீயாக கரு!! கரு! என்று ஈசனார் பேசினார்! 


குருநாதர் அகத்திய பெருமான் வாக்கு



அறிந்தும் ஈசன் சொன்னான்.

 அறிந்தும். அறிந்தும் ஏது என்று புரிய. அவ்வாறே அறிந்தும் கூட பின் செல்லமாய் குழந்தாயே!!!! அறிந்தும் ஏது என்று புரிய. எங்கெல்லாம் சுற்றினாய்???? எவ்வளவு வருடங்கள் வாழ்ந்தாய்????? இப்பொழுது என் கருவில்தான் உள்ளாய் நீ.

 அறிந்தும்  அப்பொழுதுதான் ஞானம் தித்தித்தது.
(கருவூராருக்கு)


 . அறிந்தும் ஏது என்று இவ்வளவு நாட்கள் வயிற்றுக்குள்ளே இருந்தேனா!?!?!? என்று அறிந்தும்.



சுவடி ஓதும் மைந்தன் விளக்கம் 


ஈசன் கருவூர் சித்தரை பார்த்து சொல்கின்றார் 

என் செல்ல குழந்தையே!! நீ இது நாள் வரை என்னுடைய கருவில் தான் இருந்தாய். என்று!!

அதாவது வெளி உலகத்தை பற்றி கருவூரார் சிந்திக்காமல் பார்க்காமல் இறைவனைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருந்ததால் இறைவன் என்ற கருவில் அப்படியே இருந்து விட்டார். 

ஈசன் இதை சொன்னவுடன் நான் இதனால் வரை உங்கள் கருவிலா!? இருந்தேன் என்று சிந்தித்த பொழுது அவருக்கு ஞானம் கிடைத்தது!


குருநாதர் அகத்திய பெருமான் வாக்கு


அறிந்தும் இறைவா!!!!! ஏது என்று புரிய.


 அதாவது பின் ஞானங்கள் இன்னும் பெற வேண்டும். அறிந்தும் புரிய. இதனால் வெளியே அனுப்பு என்று. 


 இதை நன்குணர்ந்து பல வகையில் கூட சேவை செய்ய அறிந்தும் கூட!!

 அதாவது வெளியே அனுப்பு. 

 அறிந்தும் ஏது என்று அறிய. பின், அதாவது நிச்சயம் ஏது என்று புரிய. வெளியே!!!. 


வெளியே வந்து அறிந்தும் ஏது என்று புரிய. ஒன்றுமே புலப்படவில்லை.










 அறிந்தும்  உள்ளே சென்றால் அறிந்தும் கூட வெளிச்சம். வெளியே சென்றால் இருட்டு என்று.






சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்!!

ஈசனைப் பார்த்து கரூவூர் சித்தர்
இன்னும் நான் ஞானங்கள் பெற வேண்டும் என்னை கருவிலிருந்து வெளியே செல்ல அனுமதி உங்கள் என்னை வெளியே அனுப்புங்கள் என்று கேட்கின்றார். ஈசனின் அனுமதி கிடைத்த வெளியே வந்தவுடன் பார்த்தால் எதுவும் அவருக்கு புலப்படவில்லை எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை... வெளி உலகம் முழுவதும் இருட்டாகவும் கரு அதாவது ஈசன் கருவில் வெளிச்சமாகவும் இருப்பதைக் கண்டு மிகவும் சிந்தித்தார்.



குருநாதர் அகத்தியர் பெருமான் வாக்கு.

  எதை? எவை என்று சமநிலை அடைய. இதனாலே!!! அறிந்தும் இறைவா !! மீண்டும் யான் பின் அதாவது பின் உள்ளே வந்து விடுகின்றேன் என்று.



சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்.

ஈசனார் கருவில் இருந்து வெளியே வந்த கரூர் சித்தர் வெளியே இருட்டாக ஒன்றும் புலப்படாமல் இருப்பதால் மீண்டும் நான் தங்களுடைய கருவறைக்கே வந்து விடுகின்றேன் என்று வேண்டுகோள் விடுக்கின்றார். 



குருநாதர் அகத்தியர் பெருமான் வாக்கு.


ஈசனாரும்!!!!

அறிந்தும் ஏது என்று புரிய. 

சரி என்று.(மீண்டும் கருவறைக்குள் உள்ளே வா என்று)


 ஆனாலும் பின் உள்ளே இருப்பது ஏது என்று அறிய. 

அதாவது மறைத்து வைத்திருந்தான். ஏது என்று இறைவன்.

 ஆனாலும் எவை என்று புரிய. பின் அனைத்தும் காட்டினான்.





  இறைவா!!! எதை என்று அறிய!! அனைத்தும் உன் லீலையா??? எவ்வாறு என்பதை எல்லாம் புரிதல். 

சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்!


கருவூர் சித்தரின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் வெளி உலகத்திலிருந்து கரு உள்ளே வா என்று அழைத்து உள்ளே அனைத்தையும் ஈசன் காட்டுகின்றார்... அனைத்தையும் புரிய வைக்கின்றார்.. இதையெல்லாம் பார்த்து கரூவூர் சித்தர் அனைத்தும் இறைவனுடைய திருவிளையாடல் என்று மெச்சுகின்றார்.









குருநாதர் அகத்தியர் பெருமான் வாக்கு

கருவூரான் அதாவது நிச்சயம் யான் ஏன் வந்தேன்???? என்று.


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம் 

கரூர் சித்தர் ஈசனை பார்த்து நான் எதற்காக வந்தேன்???? என் பிறவி நோக்கம் என்ன?? என்றெல்லாம் கேள்விகள்!!!










 ஈசனார் கருவூராரை பார்த்து!!!


அறிந்தும் ஆனாலும் கருவூரோன் பின் அமைதியாக பொறுத்திருந்தால் அனைத்தும் தெரியும்.


 ஆனாலும் இறைவனிடம் ஏன் நாட வேண்டும்??????



 .ஏது என்று புரிய. அதாவது அறிந்தும். அதாவது இவை என்று ஞான உரையை கூட.


 அதாவது அகத்தியன் ஏற்படுத்திய பின் காவேரியை அடை.


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்!!


கரூவூர் சித்தர் ஈசனை பார்த்து கேட்ட கேள்விகளுக்கு ஈசன் நீ அமைதியாக இருந்தால் உனக்கு ஒவ்வொரு விஷயமாக தெரியவரும்.. என்று ஞான உரையெல்லாம் சொல்லி.. அகத்தியர் ஏற்படுத்திய காவிரி நதியை அதாவது காவேரி நதிக்கரைக்கு செல் என்று கருவூர் சித்தருக்கு ஈசன் கட்டளையிட்டார்.






குருநாதர் அகத்தியர் பெருமான் வாக்கு


கருவூரார் ஈசனைப் பார்த்து!!!!
அறிந்தும் இதற்கும் ஏது சம்பந்தம்???? என்றெல்லாம்.



ஈசனார் கருவூராரை பார்த்து!!!!

 அறிந்தும் அங்கு சென்றால் உனக்கு ஒரு சீடன் கிடைப்பான்.

 அறிந்தும் இதனால் அனைத்தும் உனக்கு கிட்டும் என்று.



கருவூரார் ஈசனைப் பார்த்து!!!
 அறிந்தும் அதாவது பின் நதி எங்கெங்கேயோ ஓடுகின்றது !!!!

ஒரு இடத்தை சொல் இறைவா!!!. 


 ஈசனார்!! கருவூராரிடம்!!...

அறிந்தும் ஏது என்று புரிய. அனைத்தையும் சொல்லிவிட்டால் அப்பொழுது உனக்கு புத்தி எங்கு போய்விடும்!!!


 அறிந்தும் அதாவது நீ சென்று கொண்டே இரு. 

எங்கு ஏது?? என்று அறியலாம்.

 எங்கிருந்து ஆரம்பமாகின்றது?? என்றெல்லாம். எங்கிருந்து ஏது என்று அறிய. (தலைக்காவிரியில் இருந்து கொள்ளிடம் வரை சென்று கொண்டே இரு என்று)

பின் அங்கெல்லாம் சென்று கொண்டே இருந்து அறிந்தும் கூட அதாவது பின் அறிந்தும் கூட தந்தையே!!! என்று ஒருவன் கூறுவான். அங்கு அமர்ந்திடு என்று. 



 ஏது என்று அறிய. இவ்வாறெல்லாம் அறிந்தும் எதை என்று புரிய. 

இங்கு அழகாக அறிந்தும் கூட பின் பல வழியில் கூட பின் எதை என்று அறிய. பின் அதாவது எங்கு ஆரம்பமாகிறதோ (தலைக்காவிரியில் இருந்து காவிரி ஓடும் தலங்களுக்கு எல்லாம் கருவூரார் பயணம்)

 அங்கெல்லாம் தேடி எதை என்று அறிய. கடைசியில் பின் மௌனத்தில் ஏது என்று அறிய. எங்கும் யாரும் அழைக்கவில்லையே என்று ஏங்கி!!!



 பின் அறிந்தும் கூட சரியாக இங்கிருந்து (கரூரில் இருந்து) ஒரு பின் ஐந்து அல்லது பின் ஆறு ஐந்து அல்லது ஆறு மைல் தொலைவில் அறிந்து கூட பின் அமர்ந்தான்.



சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்!!


கருவூர் சித்தர் ஈசனுடைய கட்டளையை அதாவது அகத்தியர் ஏற்படுத்திய காவேரி நதிக்கு செல் அது எங்கெல்லாம் ஓடுகின்றதோ அங்கெல்லாம் செல் ஓரிடத்தில் ஒருவன் வந்து தந்தையே என்று உன்னை அழைப்பான் அந்த இடத்தில் நீ அமர்ந்து கொள் என்று ஈசன் கூற 

அதை கருவூரார் ஏற்று  காவிரி நதிக்கரை அதாவது தலை காவிரியில் இருந்து கொள்ளிடம் வரை செல்லும் காவிரி நதிக்கரை ஓரம் முழுவதும் தலங்கள் தலங்களாக யாத்திரை செல்லும் பொழுது காவிரி நதிக்கரை நகரமான கரு ஊருக்கு வந்து அமர்ந்தார். 




குருநாதர் அகத்திய பெருமான் வாக்கு 


அப்பொழுது அறிந்தும் தந்தையே!!!!! என்று குரல்.


 

தந்தையே !! என்று குரல் கேட்டது!!!




(குரலைக் கேட்ட கருவூரருக்கு ஈசன் சொன்னபடி அழைப்பு வந்துவிட்டது இனி எனக்கு விடிவு காலம் பிறந்து விட்டது என்று)

அறிந்தும் விடிவு வந்துவிட்டது என்று அறிந்தும். 


ஆனாலும் இவை தன் ஏது என்று புரிய. இவையும் பின் யாரும் என்று அறிய.


 ஆனாலும் மறைந்திருந்து இதுவும் ஈசனே. 

(இதுவும் ஈசனுடைய திருவிளையாடல்)

 அறிந்தும் ஏது என்று புரிய. அறிய.!!

 ஆனாலும் பின் எவ்வாறு ?என்று கூட இவ் கருவூரானுக்கும் அறிந்து கூட ஏது என்று புரிய. 

ஆனாலும் ஒவ்வொரு சித்தன் ஏது என்று கூட பல வழியில் கூட பல இருப்பிடங்களில் அறிந்தும் கூட!!
 பின் அதாவது பின் உடம்பை வைப்பான். இதுபோலத்தான் கருவூரன் கூட.



சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்!!

ஒவ்வொரு சித்தர்களும் பளபள அவதாரங்கள் பல பல பிறவிகள் பல பல உடம்புகளை எடுப்பார்கள் தன்னுடைய உடல்களை ஆங்காங்கு புதைத்து ஜீவசமாதி ஆக்கி வேறொரு இடங்களில் புதிய பிறப்புகள் எடுத்து மனிதர்களுக்கு சேவை செய்வார்கள்... இதைப் பற்றி நம் குருநாதர் ஏற்கனவே பல வாக்குகளில் தெரிவித்து இருக்கின்றார்.
அதேபோல் கரூவூர் சித்தருக்கும் பல இடங்களில் பிறப்புக்கள் பல இடங்களில் ஜீவ சமாதி அடைந்துள்ளார்.



கரூர் காவேரி நதிக்கரையில் கரூர் சித்தர் அமர்ந்திருந்தபோது ஈசனுடைய திருவிளையாடல் படி !!!தந்தையே என்று ஒரு சிறுவன் அழைத்து கருவூர் சித்தரிடம் ஓடி வந்து பாசத்தை காட்டினார்.


குருநாதர் அகத்தியர் பெருமான் வாக்கு



 அறிந்தும் எதை என்று புரிய. இவ்வாறாகவே அறிந்தும் இதை தன் உணர்ந்து பின் அதாவது சிறுவன் தந்தையே என்று. 


ஆனாலும் அப்பொழுதுதான் பின் பாசம் வந்துவிட்டது.(கருவூராரக்கு)



  அறிந்தும் ஏது என்று அறிய. பிள்ளையே என்று !!!(சிறுவனை பாசத்தோடு கருவூரார்)


சிறுவன்
அறிந்தும் பின் தந்தையே!!  ஏன் அழுகின்றாய்???? என்று.



கருவூரார் சிறுவனை பார்த்து!!!

 அதாவது இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது. 
அதாவது அறிந்தும்!!!

 அறிந்தும் பாசம் என்பது. ஆனாலும் நீ காட்டிய பாசம் என்னை அடைத்துவிட்டது.



சிறுவன்!!
 அறிந்தும் பின் அதாவது பின் ஏது என்று கூட தந்தையே!!! அதாவது ஏது என்று புரிய.

 எப்படியோ அறிந்தும் கூட எத்தனை ஆண்டுகள் வாழ்ந்திருப்பாய்???. 



கருவூரார்!!


அப்பனே பின் ஏன் இவ்வளவு பாசங்கள்????

 எதை என்று அறிய. இதனால் எதை என்று புரிய. அதாவது ஏது என்று அறியாமல் கூட பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட!!



சிறுவன்!!

 அதாவது தந்தையே!! பின் இவ்வாறு நீ ஏது? எப்படி? சொல்கின்றாய் என்றெல்லாம்.


 ஆனாலும் ஏதோ ஒன்று என்று பின் இவ்வூரான் (கருவூரான்) சொல்ல அறிந்தும் எதை என்று புரிய. 


 அறிந்தும் இதை தன் எவை என்று அறிய. இதனால் அறிந்தும் அறிந்தும் பல வகையில் கூட அப்பனே நல் விதமாகவே எதை என்று அறிய.

 இதனால்  அவ் புதல்வனும் அறிந்து கூட அதாவது நிச்சயம் அதாவது தந்தையே!! யான் இறந்துவிட்டால் என்ன செய்வாய்???? என்று. 


 இதை தன் எவ்வாறாக ஏது என்று புரிய. இவ்வாறாகவே அதனால் பின் இவ்வூரானும் (கரூவூரார்) ஏது என்று அறிய. பின் அழுதுகொண்டே!!!!!!




சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம் 

ஈசன் திருவிளையாடலால் அனுப்பப்பட்ட அந்த சிறுவன் தந்தையே தந்தையே என்று கருவூராரை அழைத்ததில் கருவூரருக்கு பாசம் பிறந்து விட்டது அன்பு என்பது என்ன என்பது தெரிந்து விட்டது இத்தனை வருடங்கள் வாழ்ந்தோம் ஆனாலும் ஒரு சிறுவன் என்னை தந்தையே என்று அழைக்கின்றான் என்று பாசம் ஆனந்த கண்ணீர் வந்துவிட்டது. 
அந்த சிறுவன் கருவூராரை பார்த்து இவ்வளவு பாசம் காட்டுகின்றீர்களே.. ஒருவேளை நான் இறந்து விட்டால் என்ன செய்வீர்கள்??? என்று கேட்டான் அந்த சிறுவன்!!





குருநாதர் அகத்தியர் பெருமான் வாக்கு

அச் சிறுவன்!!
அறிந்தும் எதை என்று புரிய.
 இவ்வாறாகவே அறிந்தும் கூட இதனால் பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட பின் ஏன் அழுகின்றாய்????.தந்தையே!!! அதாவது எதை என்று புரிய அறிய. 


நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாகவே அதாவது அறிந்தும் புரிந்தும் கூட அழகாகவே எதை என்று அறிய.

 அதாவது நிச்சயம் உன்னை விட்டு யான் ஓடப்போகின்றேன்.என்று!!!




சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்!!


கருவூராரின் பாசத்தை கண்ணீரை கண்ட சிறுவன் அவரோடு திருவிளையாடல் விளையாட தொடங்கினார்.. அதாவது உங்களை விட்டு இப்போது விலகி ஓடிப் போகப் போகின்றேன் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று விளையாட்டு காட்டினார்.





குருநாதர் அகத்தியர் பெருமான் வாக்கு

  அறிந்தும் எதை என்று புரிய. இவ்வாறாகவே அறிந்து கூட அக் கரை தன்னிலிருந்து ஓடி வந்து ஓடி வந்து நிச்சயம் பிள்ளையே!!! பிள்ளையே!!!! என்றெல்லாம் அறிந்தும் ஏது என்று அறிய. 



சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம் 

என்னை விட்டு செல்லாதே என்னை விட்டு செல்லாதே பிள்ளையே செல்ல பிள்ளையே என்றெல்லாம் கருவூரார் அந்த சிறுவனை பின் தொடர்ந்து ஓடினார். 



குருநாதர் அகத்திய பெருமான் வாக்கு




அச் சிறுவன் 
சரியாக இங்கு வந்து எது என்று அறிய. பின் ஈசனாகவே. 


அறிந்தும் ஏது என்று புரிய. பின் இங்கு வந்து ஈசனாக அம்மையாக !!!


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்!!


அதாவது கரூரில் இருக்கும் காவிரி ஆற்றங்கரையில் அதாவது இங்கிருந்து ஐந்து ஆறு மைல் தொலைவில் இருந்து ஓடி வந்த சிறுவன் இங்கு அதாவது இந்த ஆலயம் இருக்கும் இடத்திற்கு வந்தவுடன் ஈசனாகவும் பார்வதி தேவியாகவும் அம்மையப்பனாக கருவூரருக்கு தரிசனம் தந்தார்கள்.




குருநாதர் அகத்தியர் பெருமான் வாக்கு


 அறிந்தும் கருவூரான் ஈசனாரே!!!! இவ்வாறா ??? ஏது என்று புரிய அறிய. எதை என்று அறிய. நிச்சயம் தன்னில் கூட நீயா??? இவ்வாறு திருவிளையாடல் செய்தாய்??? தாயே?? தந்தையே ??! என்று இன்னும் அழுதான் கருவூரான். 





 எதை என்று எங்கே இருந்து இங்கே அழைத்துக் கொண்டு வந்தாய் அல்லவா? தாயே தந்தையே!!! அதனால் ஏது என்று புரிய அறிய இங்கே தங்கிவிடு. (ஈசனையும் பார்வதி தேவியையும் இங்கேயே தங்கி விடுங்கள் என்று) 
ஏது என்று புரிய. 




அதனால் யானும் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட இங்கே தங்கி விடுகின்றேன் என்று.


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்.


திருவிளையாடல் குறித்து எங்கோ இருந்த என்னை இங்கு அழைத்து வந்தீர்கள் அல்லவா!! நீங்களும் இங்கேயே தங்குங்கள்! நானும் இங்கேயே தங்கி விடுகின்றேன் என்று கருவூரார் ஈசனையும் பார்வதி தேவியும் வேண்டிக் கொண்டார்!!


குருநாதர் அகத்தியர் பெருமான் வாக்கு 


ஈசனார் கருவூராரை பார்த்து
அறிந்தும் அப்பப்பா!!! அப்படி இல்லை. 
பல சேவைகள் யான் செய்யப் போகின்றேன். அறிந்தும்
 கூட!! 


அப்படி இல்லை. எதை என்று அறிய. அதனால் பின் அதாவது பின் சொல்கின்றேன். பின் ஏது என்று கூற. 


பின் அறிந்தும் கூட மகனே!!! அறிந்தும் கூட அதாவது வருவருக்கெல்லாம் நீ எதை என்று கூற. பின் என் எவை என்று புரிய. அதாவது எப்பொழுதும் நிச்சயம் தன்னில் கூட. பின் அதாவது எனக்கு பின் எவை என்று அறிய. யான் ஏது என்று உணவு. பின் உண்ணக்கூடிய பின் எதை என்று ஒரு கையாக இருந்து அனைவருக்கும் வாரி வழங்கு. 



சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம் 





ஈசனார் கருவூராரை பார்த்து என்னுடைய வலது கையாக இங்கிருந்து அனைவருக்கும் அருள் செய்  சேவை செய் இங்கு வருபவர்கள் அனைவருக்கும் வாரி வழங்கு என்று கட்டளை இட்டார்.



குருநாதர் அகத்தியர் பெருமான் வாக்கு


மேலும் ஈசனார்

 அறிந்தும் ஏது என்று புரிய. 

ஆனால் இங்கே இருக்கின்றேன். நீ அனுமதித்தால் மட்டுமே வரங்கள்.



சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம் 


கருவூராரை பார்த்து ஈசன் 
நானும் இங்கேயே இருக்கின்றேன்

 நீயும் இங்கே இருந்து சேவை செய் வருகின்ற பக்தர்கள் அனைவரையும் பார் நீ யாருக்கு வரத்தை தர வேண்டும் என்று சொல்கின்றாயோ அவர்களுக்கு மட்டுமே நான் வரத்தை தருவேன்!!!... இங்கு வருபவர்களை நல்ல ஆத்மா யார்?? யார் புண்ணியம் செய்தவர்கள்  என்பதையெல்லாம் கருவூர் சித்தர் பார்த்து ஈசனிடம் சொல்வார் அப்பொழுது தான் ஈசன் அனைவருக்கும் வரத்தை தருவார்



குருநாதர் அகத்தியர் பெருமான் வாக்கு


 அறிந்தும் எதை என்று புரிய. அதாவது எனக்கும் ஏது என்று! அறிய அறிய இவ்வாறு பல ஆண்டுகள் ஆகிவிட்டது.

  அறிந்தும் அழுதுகொண்டே இருந்தான் கருவூரான்.



சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்


ஈசன் இப்படி சொல்லிவிட்டு சென்று விட்டார் பல ஆண்டுகளாக கருவூரார் சேவை செய்து வந்தார் இருந்தாலும் ஈசனை நினைத்து ஈசன் அன்பை நினைத்து அழுது கொண்டே இருந்தார்.



குருநாதர் அகத்தியர் பெருமான் வாக்கு


  அறிந்தும் மீண்டும் ஈசன் வந்து என்னப்பா? ஏது என்று அறிய. 

இப்படி ஆண்டுகள் கடந்துவிட்டது. ஏன் அழுகின்றாய் என்று?




இது நடந்தது
கலியுகத்தில் !!



கருவூரார் ஈசனைப் பார்த்து
  அறிந்தும் ஞாபகம் வந்துவிட்டது. பழைய ஞாபகம் வந்துவிட்டது. நீ சிறுவனாக இருந்தாய் அல்லவா? எதை என்று புரிய. அறிந்தும் கூட


 அதேபோல் இன்னொரு முறை காட்சி தா என்று.



சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம் 


இப்படியே பல ஆண்டுகள் கடந்து விட்டது கருவூரார் ஈசனை நினைத்து அழுது கொண்டே இருக்கும் பொழுது ஈசன் மீண்டும் வந்து ஏன் அழுகின்றாய் உனக்கு என்ன தேவை என்று கருவூராரிடம் கேட்ட பொழுது 


எனக்கு பழைய ஞாபகம் வந்துவிட்டது நீங்கள் சிறுவனாக வந்து திருவிளையாடல் புரிந்து காட்சி தந்தீர்கள் அல்லவா அதை மீண்டும் எனக்கு அந்த தரிசனத்தை காண்பியுங்கள் என்று கருவூரார் முறையிடுகின்றார் ஈசனிடம்.



குருநாதர் அகத்தியர் பெருமான் வாக்கு 


அறிந்தும் ஏது என்று புரிய.!!
ஈசனார் கருவூரானை பார்த்து
 அதனால் பின் போதும்.

 திருவிளையாடல் விளையாடிவிட்டேன். இதை எதை என்று புரிய.


 அதாவது நிச்சயம் தன்னில் கூட அங்கே செல். !!

ஒரு ஞானப்பிள்ளை இருப்பான். !!

அறிந்தும் கூட பின் அதாவது உனக்கு பின் அறிந்து கூட உன்னை தந்தை என்று கூறுவான் என்று. 


 அறிந்தும் ஏது என்று புரிய. இவ்வாறாக அழகாக நிச்சயம் தன்னில் கூட அங்கு ஒரு குழந்தை தந்தையே!!! என்று அறிந்தும் கூட. 


கருவூரான் அறிந்தும் ஏது என்று புரிய. அழகாக தூக்கினான். அறிந்தும் கூட

 கருவூரான். எதை என்று புரிய. நீ இங்கேயே இருந்துவிடு. எதை என்று அறிய அறிய. அதனால் என் எவை என்று கூட என் ஆசையையும் தீர்த்துக் கொண்டேன். இதனால் நீ வருவருக்கெல்லாம் சேவை செய் என்று அறிந்தும் கூட!!


 இப்பொழுது கூட அக்குழந்தை அங்கே இருக்கின்றான்.


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம் 

ஈசனிடம் கருவூரார் கேட்டுக் கொண்டதற்கு இணங்க... கருவூர் ஆலயம் இருக்கும் இடத்திலிருந்து சிறிது தூரம் செல் ஒரு குழந்தை உன்னை தந்தை என்று அழைப்பான் அந்த குழந்தை ஞானக் குழந்தை சென்று பார் என்று சொல்ல... அதைக் கேட்டு கருவூரார் கரூரிலிருந்து சிறிது தொலைவில் இருக்கும் நெரூர்... செல்ல அங்கு ஒரு ஞானக் குழந்தை இருந்தது.. அதை தூக்கி கொஞ்சி அதற்கும் வரம் தந்து வாழ்த்தினார் கருவூரார் 

அந்தக் குழந்தைதான் சதாசிவ ஞான பிரம்மேந்திரா சுவாமி. 


சதாசிவ பிரமேந்திரர் கோயில் கரூர் அருகே உள்ள நேரூரில் அமைந்துள்ளது.[1] நெரூர் கரூரில் இருந்து பஞ்சமாதேவி செல்லும் சாலையில் காவிரி ஆற்றின் கரையில் உள்ளது . இங்கு மிகவும் பழமையான சிவபெருமான் கோயில் காவிரி ஆற்றின் கரை அருகில் அக்கினீசுவரர் என்ற பெயரில் அமைந்துள்ளது.அக்கினீசுவரர் கோயிலுக்கு பின்புறம் சதாசிவ பிரமேந்திரரின் சமாதி அமைந்துள்ளது.


நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் 17-18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அத்வைத ஞானி, அவதூத யோகி மற்றும் கருநாடக இசைப் பாடல்களை இயற்றிய மகான் ஆவார்.மவுன ஞானி: தன் குருவின் கட்டளைப்படி, வாழ்நாள் முழுவதும் மவுனத்தைக் கடைப்பிடித்தார்.

நெரூர் ஆலயத்தில் சதாசிவ பிரமேந்திராள் சமாதி அடைந்த இடத்தில் வில்வமரமும், சுயம்பு (தான்தோன்றி) இலிங்கமும் அமைந்திருக்கிறது. இங்கு வேண்டிக் கொள்பவர்களுக்கு அமைதியும், செல்வமும் பரிபூரணமாக கிடைக்கும் என்று நம்பிக்கை உண்டு. இத்தலத்தில் பௌர்ணமி பூசை, ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு பூசை , சித்திரை மாத குரு வார பூசை போன்றவைகள் மிக சிறப்பாக கொண்டாப்படுகிறது.ஆராதனை: ஆண்டுதோறும் வைகாசி மாதம் (Jyeshta) கிருஷ்ண பட்ச தசமி திதியில் இவரின் ஆராதனை விழா சிறப்பாக நடைபெறுகிறது.

பல்வேறு அற்புதங்கள் புரிந்து, பலரது ஆன்ம ஞானம் சிறக்கக் காரணமாக இருந்த மகான் சதாசிவ பிரம்மேந்திரர், 1753-ம் ஆண்டில் சித்திரை மாதத்து தசமி திதி அன்று, கரூரை அடுத்த நெரூரில், சீவ சமாதி ஆனார்.







குருநாதர் அகத்தியர் பெருமான் வாக்கு


 . எதை என்று புரிய இன்னும் குழந்தையாக இருந்து பின் கருவூரான் சொல்படி கேட்டு வரங்கள் கொடுத்துக்கொண்டே இருக்கின்றான் அக்குழந்தை. !!!



சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்!!


சதாசிவ பிரம்மேந்திர சுவாமி கருவூராரின் செல்ல பிள்ளையாக ஞானப் பிள்ளையாக இங்கே நெருூரில் இருந்து வரும் பக்தர்கள் அனைவருக்கும் வரங்களையும் ஆசீர்வாதங்களையும் வாரி தந்து கொண்டே இருக்கின்றார். 



குருநாதர் அகத்திய பெருமான் வாக்கு



இதனால் எதை என்று புரிய இங்கு வருவோருக்கெல்லாம் வரங்கள் வழங்கப்படும். 


 இதனால் எதை என்று புரிய பின் வருவருக்கெல்லாம் இவ்வூரான் (கருவூரார்) அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றான்!!




 அறிந்தும் எதை என்று புரிய. இதனாலே நிச்சயம் மனிதர்கள் பாசத்தை காட்டி பின் வாங்கிச் சென்று கொண்டே இருக்கின்றார்கள் வரத்தை. 


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம். 

வரப்பிரசாதியாக இருவரும் அதாவது கருவூராரும் சதாசிவ ஞான பிரம்மேந்திர சாமியும் அன்பு காட்டி நல்மனதோடு இருப்பவர்களுக்கு வரத்தை வாரி வழங்கிக் கொண்டே இருக்கின்றார்கள்.



குருநாதர் அகத்தியர் பெருமான் வாக்கு

. இதனால் இவ்விடத்தில் ஏது என்று புரிய பின் அதாவது பின் கருவூரானிடம் கேட்பவர்களுக்கு எப்பொழுதும் ஏது என்று புரிய பின்!!!!


 அதாவது கருவூரான் இல்லை என்றே சொல்வதில்லை.


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம் 

கருவூரார் எப்பொழுதும் இல்லை என்று சொல்வதே இல்லை.. அப்படி கருணையோடு வரத்தை தருகின்றார்.






குருநாதர் அகத்தியப் பெருமான் வாக்கு

 அதனாலே எதை என்று கூற பின் எவை என்று கூற பின் இவ்வூர் (கரூர்) மிகவும் ஏது என்று கூற அனைவரும் பின் பிச்சைக்காரர்களாக இருந்தாலும் உயர்ந்து நிற்பார்கள். 



 இதனால் அப்பனே கருணன் கருணையானவன் கருவூரான் அப்பனே!! எதை என்று அறிய அப்பனே கருணை  ஊரான்!!!! 



கருணை ஊரான்.

 கருவூரான் கருவூர்.


 எதை என்று அறிய இதனால் சித்தர்கள் விளையாட்டு எவ்வளவு ?? எவ்வளவு?????

 இதனால் கருவூரன் விளையாட்டு எவ்வளவு??? எவ்வளவு????

 நிச்சயம் தன்னில் கூட அவனைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

 ஆசிகள் பெற்றுக் கொள்ளுங்கள். 



 அறிந்தும் அவை மட்டுமில்லாமல் குழந்தையை தூக்கிச் சென்றால் அவனுக்கு இன்னும் பின் அறிந்து கூட பின் வரங்கள்!!


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம் 


கரூர் இந்த ஊருக்கு இந்த பெயர் வந்தது கருவூர் அதாவது கருவில் இருந்து ஈசனின் கருவில் இருந்து வந்த கருணை சித்தன் கருவூராரின் கருணையால் கரூர் என பெயர் பெற்றது.

அவரவர் நல்ல மனதோடு வேண்டிக் கொண்டு சென்றால் மேலும் குழந்தையோடு சென்றால் அவர்களும் மகிழ்ந்து வரத்தை வழங்குவார்கள்!! மனிதர்கள் புண்ணியம் செய்ய வேண்டும் நல்லதை செய்தால் நல்லது நடக்கும்!!



குருநாதர் அகத்திய பெருமான் வாக்கு

 இதனாலே எதை என்று அறிய இங்கு இருப்பவர்கள் எதை என்று அறிய அறிய குழந்தைக்கு சேவை செய்தால் நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் கிட்டும்.


 
அப்பனே கருணை படைத்தவன். அதனாலே கரு அப்பனே பின் கருணை அப்பனே பின் எவை என்று அறிய அப்பனே பின் கருணை அப்பனே பின் எவை என்று ஊருக்கு சொந்தக்காரனப்பா.



  கருவூரான். கருணை ஊரான். 



அறிந்தும் எதை என்று புரிய. இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் எவ் பதவி வேண்டுமானாலும் கொடுப்பான்.அப்பனே!!!


 அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட. இதனால் அப்பனே எதை  என்று கூட பின் இவனோடு சேர்ந்து அப்பனே எதை என்று புரிய. அப்பனே பின் அவனும் கூட!!! (சதாசிவ ஞானம் பிரம்மேந்திர சுவாமி)

 
சதாசிவ பிரமேந்திரர்.

 அறிந்தும் எதை என்று கூட தந்தையே!!!!.... அதாவது அவனும் கூட சொன்னான்!!!

 தந்தையே!!! ஏது என்று புரிய. உன்னை எவை என்று அறிய அறிய நீ அங்கேயே இரு. அறிந்தும் கூட எவை என்று புரிய. பின் அறிந்தும் கூட!!

 உன்னை வந்து ஏது என்று அறிய வணங்கிவிட்டால் எதை என்று அறிய அறிய அதை பின் அகத்தியனின் காவேரியில் நீராடுவது போல் யான் வரங்கள் தந்து விடுகின்றேன் என்று!!!

 

 அதனால் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள்.

 தெரிந்து கொண்டு அப்பனே நிச்சயம் தன்னில் கூட. அதாவது ஒரு தீயவை அப்பனே நிச்சயம் தன்னில் கேட்டால் தீயவையே ஆகும்.

 மனதில் ஏது என்று  அறிய அறிய அப்படியே நிச்சயம் ஆகும்.


 நல்லதை கேட்டால் நல்லதே நடக்கும். 

சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம் 

நெரூரில் இருக்கும் சதாசிவ பிரம்மேந்திரா ஸ்வாமி கரூரில் இருக்கும் கருவூராரை பார்த்து நீங்கள் அங்கே இருந்து அருளாசிகள் வழங்குங்கள்
உங்களை கரூரில் வந்து உங்கள் தரிசனம் செய்பவர்களுக்கு

 நான் இங்கே இருந்து அகத்திய பெருமானின் காவிரி நதி போல் அருளாசிகள் வழங்குகின்றேன். 
என்று!!


சித்தர்களிடம் நல்லதை தான் கேட்க வேண்டும் நல்லவை வேண்டிக் கொண்டால் நல்லவையே நடக்கும் மனதில் நல்லதை நினைத்துக் கொள்ள வேண்டும். 


மனது தீயதாக இருந்தால் நமக்கு தீயவைதான் நடக்கும்.. இதனால் மனதை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.



குருநாதர் அகத்தியர் பெருமான் வாக்கு

 அப்பனே இன்னும் சித்தர்களைப் பற்றி சொல்கின்றேன்!!! ரகசியங்கள் பற்றி சொல்கின்றேன்!!. அப்பனே 


அவ் ரகசியம் தெரிந்து கொண்டு நீங்களும் அப்பனே வெற்றி பெறுங்கள். 



மனிதர்களுக்கு இறைவனைப் பற்றியும் ரகசியங்களை பற்றியும் உண்மை நிலைகளை பற்றியும் தெரிவதில்லை

அப்பனே இதனால்தான் அப்பனே பக்தி தோல்வி அடைந்து கொண்டிருக்கின்றது. 



அதனால் பக்தி தோல்வி அடையக்கூடாது என்பதற்கிணங்க அப்பனே பின் என்பதற்காகவே அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின். யாங்கள் சித்தர்கள் வந்து வாக்குகள் செப்பி அப்பனே நல்விதமாக அப்பனே மனிதனை வெற்றியாளனாக ஆக்குவோம். அப்பனே


 கவலைகள் வேண்டாம் என்பேன். அப்பனே பின் எவை என்று கருணை. அப்பனே பின் உள்ளத்திற்கு சொந்தமானவன் கருவூரான்.

. அப்பனே இன்றளவு நல்முறையாக என்னென்ன வேண்டுமோ? எவை என்று அறிய அறிய நிச்சயம் தன்னில் கூட வேண்டிக்கொண்டு செல்லுங்கள்.


 அனைத்தும் கொடுப்பான். 

பின் அவனைப் பற்றி சிறிது தெரிந்து கொண்டீர்கள்!! அவ்வளவுதான்.


 இன்னும் கருவூராரின் ரகசியங்கள் பெரிய பெரியதெல்லாம் இருக்கின்றது. வருங்காலத்தில் எடுத்துரைக்கின்றேன். அனைவருக்குமே ஆசிகள். 

லோபா முத்திரையோடு வந்து ஆசிகள். ஆசிகள்!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment