​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 27 June 2026

சித்தன் அருள் - 2237 - அன்புடன் அகத்தியர் - 24/05/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 3


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 24/05/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 3

நாள், நேரம்  : 24/05/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 

முழு நிகழ்வின் நேரலை :-  https://youtu.be/NqRaI13qIDU?t=1 

இடம் : உலக நன்மைக்காக 10 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.

===========================
# இவ் பகுதி #3 வாக்கின் நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=16329   
===========================

===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
===========================

குருநாதர் :- அழகாக குழந்தாய் உனக்கு ஞானத்தை அள்ளி அள்ளி தருகின்றேன். இன்னும் மானிடன் எப்படி வாழ வேண்டும் என்று எடுத்துரை.

சுவடி ஓதும் மைந்தன் :-  உனக்கு நான் நிறைய தர்றேன், ஞானத்தை. இன்னும் இந்த மனுஷன் வந்து, "எப்படி இந்த உலகத்துல வாழணும்"ன்னு உனக்கு வந்தது சொல்லுமா என்றார். அம்மா, அகத்தியர் வாய்ப்பு கொடுக்குறார்.  சொல்லுங்க. 

குருநாதர் :- "குழந்தாய், அறிந்தும் இன்னும் சொல்; எவ்வளவு, எவ்வளவு, எதை என்று புரிய அள்ளித் தருகின்றேன்." 

சுவடி ஓதும் மைந்தன் :-  இன்னும் நிறைய வரங்களை அள்ளித் தர்றார் என்றார், உங்களுக்கு வந்து. அதனால இன்னும் சொல்லுமா என்றார், வந்து. அகத்திய பெருமான் சொல்றது இது வந்து. அகத்தியர் யாருன்னு தெரியும்ல? 

சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னை :- ( தெரியும் அய்யா என்று தலையசைத்தார் ) 

===========================
# பக்தி என்றால்  என்ன?
===========================

நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=16374

உலகோருக்கு சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னை உரைத்த வாக்குகள்:- 


இப்போ நம்ம வீட்டுல வந்து மீன் வளர்ப்போம், நாய்க்குட்டி வளர்ப்போம், பூனைக்குட்டி வளர்ப்போம். இதுங்க மேல காட்டுறது என்னது? அன்பு. நம்ம பிள்ளைங்க மேல, அதாவது அம்மா, பிள்ளைகள், கணவன், மனைவி—இவங்க மேல எல்லாம் காட்டுவது அன்பு. 

இறைவன் மேல காட்டுவது தான் பக்தி. அதாவது, நிறைய பேர் கேட்காங்க, "இந்த பக்தினா என்ன?" 

அதாவது, பக்தி வந்து எப்படி இருக்கும்? கருப்பா இருக்குமா, சிவப்பா இருக்குமா? இல்ல கட்டையா இருக்குமா, இல்ல வளர்த்தியா இருக்குமா? குண்டா இருக்குமா, ஒள்ளியா இருக்குமா? இப்படி எல்லாம் கேட்கிறாங்க. 


ஆனா இப்படி எல்லாம் பக்தியை வகைப்படுத்த முடியாது. 


அப்ப பக்தினா என்ன? அதாவது, நம்ம என்ன சொல்லுவோம்? கோவிலுக்கு ஒரு அம்மா வருவாங்க, நல்ல பக்தியோடு சாமி கும்பிடுவாங்க, பக்தியோடு பூஜை பண்ணுவாங்க, அப்படின்னு சொல்லுவோம். பூஜை பண்ணுவாங்கன்னு சொன்னா பரவாயில்லை. அது என்ன? பக்தியோடு பூஜை பண்ணுவாங்க. 


அப்ப அந்த பக்தி ஏன் கூட கூடவே வருது? இந்த பக்தி அப்படின்னா, அதை உணர்ந்தால் மட்டும்தான் முடியும். 


அதை வந்து, "பக்தினா இப்படிதான் இருக்கும்" அப்படின்னு எல்லாம் சொல்லவே முடியாது. அதை அனுபவித்தால் மட்டும்தான் அதை உணர முடியும். 


இப்போ தீ வந்து சுடும். சுடுமா? இல்ல கைய வைக்க கூடாது அப்படின்னு சொல்லுவோம். அதே மாதிரி தேன் வந்து நல்லா திப்பா இருக்கும். இல்ல? அப்போ திப்பா இருக்கும் அப்படின்னு சொன்னா புரியுமா? புரியாது. அதை எடுத்து சுவைத்து பார்த்தா தான், அது ஓ !!! இவ்வளவு டேஸ்டா இருக்கு தேனு அப்படின்னு புரியும். அதே மாதிரிதான் தீக்குள்ள லேசா ஒரு விரலை விட்டாலும், எம்மாடி சுட்டுட்டு அப்படின்னுட்டு, அப்பதான் நம்மளால உணர முடியுது. அதுக்கு முன்னாடி சுடுது அப்படின்னா என்னன்னு நம்மளால சொல்ல முடியுமா? முடியாது. 


அதே போல தான் பக்தியும். அதை அனுபவித்து பார்த்தால் தான் நம்மளால உணர முடியும். மித்தபடி பக்தி செய்யுங்க, பக்தி செய்யுங்கன்னு சொன்னா முடியவே முடியாது. அந்த பக்தினா என்ன? 


சிவபெருமானை, அதாவது நமக்கு வந்து எத்தனையோ பிரண்ட்ஸ் இருக்காங்க இல்லையா, அது கூட அவரையும் ஒரு பிரண்டா வச்சுக்கணும். 


இல்லனா நம்மளுக்கு அப்பா அப்படின்னு நினைச்சுக்கணும். 


சிவபெருமான் என்னோட அப்பா அப்படின்னு நினைச்சுக்கணும். 


இல்லனா சிவபெருமான் எனக்கு ஒரு முதலாளி, நான் அவருக்கு தொழிலாளி. இப்படி நினைச்சு வழிபடணும். 


இல்லனா இன்னொரு ஒரு வழி இருக்கு. அது என்னன்னா, இறைவன் எனக்கு காதலன், நான் அவருக்கு காதலி. அவர் வந்து எனக்கு கணவன், நான் அவருக்கு மனைவி. இப்படி நினைத்து வழிபடுவதுதான் சன்மார்க்கம். 


===========================
நான்கு வழிகள்  மனிதன் இறைவனை அடைவதற்காகச் சைவ சமயம் மற்றும் திருமந்திரம் போன்ற ஆன்மீக நூல்கள் வகுத்துக் கொடுத்துள்ள நான்கு படிநிலைகள் (மார்க்கங்கள்) ஆகும். 
===========================


அதாவது நான்கு வழிகள் இருக்கு. என்னென்ன? 


சர்புத்திர மார்க்கம், தாச மார்க்கம், சக மார்க்கம், சன்மார்க்கம். 


(1)சர்புத்திர மார்க்கம் அப்படின்னா, நான் ஆல்ரெடி சொன்னது, இறைவன் எனக்கு அப்பா, நான் அவருக்கு குழந்தை. இப்படி நினைக்கிறது. சர்புத்திர மார்க்கம், 


(2)தாச மார்க்கம். தாச மார்க்கம்னா, சிவபெருமான் எனக்கு ஒரு முதலாளி, நான் அவருக்கு தொழிலாளி. நான் அவருக்கு ஒரு தொண்டன், நான் அவருக்கு ஒரு வேலைக்காரன். இப்படி நினைச்சு வழிபடுவது தாச மார்க்கம். 


(3)சக மார்க்கம், சிவபெருமான் எனக்கு ஒரு பிரண்டு(friend) நானும் அவருக்கு ஒரு பிரண்டு(friend). இப்படி நினைச்சு வழிபடுவது சக மார்க்கம். 


(4)நான்காவது சன்மார்க்கம். இந்த சன்மார்க்கம், சிவபெருமான் எனக்கு ஒரு காதலி, நான் அவருக்கு ஒரு காதலன். இல்லனா சிவபெருமான் எனக்கு ஒரு கணவன், நான் அவருக்கு மனைவி. இப்படி நினைச்சு வழிபடுவதுதான் சன்மார்க்கம். 


இப்படித்தான் மாணிக்கவாசக சுவாமிகளும் இறைவனை நினைச்சு வழிபாடு செஞ்சிருக்கார். 


அடியவர்கள் :- ( பலத்த கை தட்டல்கள் )

===========================
# ஏன் திருவாசகம் என்பது “அழுகைத் தமிழ்”?
===========================




அன்னை உரைத்த வாக்குகள்:-  அதாவது, கணவனை விட்டு மனைவி பிரியாமல் அழுத அழுகை தமிழ்தான் திருவாசகம். அதனாலதான் நாம திருவாசகம் படிக்கும் பொழுது நமக்கும் கண்ணீர் வருது. நிறைய தடவை எங்க அம்மா எல்லாம் அழுது இருக்காங்க, திருவாசகத்தை படிக்கும் பொழுது. 


அதேபோல பேசுவது இயல் தமிழ். 


பாடினால் இசைத்தமிழ்.


நடித்தால் நாடகத் தமிழ். 


திருமுறைகள் சைவத் தமிழ். நாலாயிர திவ்ய பிரபந்தம் வைணவத் தமிழ், 


“திருவாசகம் அழுகைத் தமிழ்”....... அப்படின்னு சொல்லி இருக்காங்க. 


===========================
# நம் உடம்பில் உள்ள உத்தரகோசமங்கை ரகசியங்கள் 
===========================


சரி, இந்த மாணிக்கவாசகர் யார் தெரியுமா? மாணிக்கவாசகர் தான் நமக்கு வந்து திருவாசகத்தை எல்லாம் தந்திருக்கார். இவர் யார் தெரியுமா? அதாவது, உத்தரகோசமங்கை அப்படின்னு நம்ம உடம்புல வந்து ஒரு இடம் இருக்கும். என்னன்னா, உத்திரம்னா வடக்கு, கோசம்னா உடம்பு. உடம்புல வடக்கு பகுதிதான் நெற்றி. அதை ஏன் உத்திரகோச மங்கைன்னு சொல்றாங்க? ஏன்னா அங்கதான் திருநீறு, அடுத்த பொட்டு, சந்தனம், குங்குமம் இதெல்லாம் நம்ம வந்து.. நெற்றியில தான் வச்சுக்கிறோம். அதனால இதுக்கு பேரு உத்திரகோச மங்கை. 


===========================
# உத்தரகோசமங்கை ரகசியங்கள் 
===========================


இதே போல உத்திரகோச மங்கைன்னு ஒரு ஊர் இருக்கு. அந்த ஊருல ஆயிரம் ஞானிகள் இருந்து தவம் இருக்கிறாங்க. அப்படி இருக்கும் பொழுது அங்க சிவபெருமான் வர்றார். வந்து என்ன சொல்றார் தெரியுமா? இராவணனுடைய மனைவி மண்டோதரி இப்பதான் கல்யாணம் ஆயிருக்கா. அவ வந்து கல்யாணத்துக்கு முன்னாடி என்கிட்ட வந்து ஒரு வரம் கேட்டா. என்னன்னா, சிவபெருமானே, உன்னை விட்டு இப்படி பிரிஞ்சு போறேனே. நான் என்னைக்காவது ஒரு நாள் உன்னை வந்து நான் வந்து கூப்பிடுவேன். 


அப்படி கூப்பிடும்போது நீ வந்து என்னுடைய மடியில ஒரு கை குழந்தையா வரணும் அப்படின்னு ஒரு வரம் கொடுத்திருப்பார். அதாவது வரம் வாங்கி இருப்பா மண்டோதரி. 


அப்போ சிவபெருமான் இதெல்லாம் சொல்றார். இப்படி வரம் வாங்கிட்டா, அதை மாதிரி என்னைக்காவது ஒரு நாள் கூப்பிடுவா என்ன? அப்ப நான் அவருடைய அவளுடைய மடியில ஒரு கை குழந்தையா போவேன். 


அங்க இருக்கிற இராவணன் என்னை தொட்டான் அப்படின்னா, இந்த உத்திரகோச மங்கையிலே இந்த குலத்திலே ஒரு பெரிய நெருப்பு உருவாகும். அந்த நெருப்பில் நீங்க ஆயிரம் பேரும் வீழ்ந்து என்னை அடைஞ்சிடுங்க அப்படின்னு சொல்லிட்டு சிவபெருமான் என்ன செஞ்சார்? மறைஞ்சு போயிட்டார். 


அதேபோல ஒரு நாள் மண்டோதரிக்கு சிவபெருமானுடைய ஞாபகம் வருது. சிவபெருமான் என்ன செய்கிறார்? இதே மாதிரி வேண்டுறா. மண்டோதரி, சிவபெருமானே, எனக்கு குழந்தையா வா அப்படின்னு வேண்டுறா. வேண்டுன உடனே சிவபெருமானும் ஒரு குட்டி கைப்பிள்ளையா வந்து அவருடைய மடியில இருக்கா. 


அப்படி இருக்கும் பொழுது இராவணன் அங்க இருக்கிற இராவணன் ஆசையா வந்து யார் இந்த குழந்தை அழகா இருக்கே அப்படின்னு தொட்டு தூக்கிடுறார். 


தூக்கியதும் இந்த உத்திரகோச மங்கையில ஒரு பெரிய நெருப்பு உருவாகுது. அந்த நெருப்புல இந்த ஆயிரம் பேரும் வீழ்ந்து அடையுங்கன்னு சொல்லி இருந்தார் இல்லையா சிவபெருமான். அதேபோல இந்த ஆயிரம் ஞானிகள் அந்த நெருப்புல விழலாம் அப்படின்னு வரும் பொழுதுதான் அவங்க எல்லாருக்கும் ஒரு சந்தேகம் வருது. 


சரி, நம்ம எல்லாம் ஞானிகள் தானே? அப்ப நம்ம எல்லாம் வந்து இந்த நெருப்புக்குள்ள விழுந்துட்டோம்னா யார் இந்த ஆகமங்கள் விதிகள் எல்லாம் பார்த்துக்குவா? அதனால ஒரே ஒருத்தரை வந்து என்ன பண்றாங்க? தேர்ந்தெடுக்குறாங்க. தேர்ந்தெடுத்து நீ மட்டும் இந்த ஆகமங்கள் எல்லாம் பார்த்துக்கோ. நாங்க எல்லாம் வந்து சிவபெருமானை இந்த நெருப்புக்குள்ள விழுந்து சிவபெருமானை அடைஞ்சிடுறோம் அப்படின்னு சொல்லிட்டு மீதி உள்ள 999 பேரும் அந்த நெருப்புல விழுந்து சிவபெருமானை அடைஞ்சிடுறாங்க. 


அப்படி இருக்கும்போது அந்த ஒரே ஒரு ஞானிக்கு மட்டும் எவ்வளவு வந்து கஷ்டமா இருக்கும்? எல்லாரும் சிவபெருமானை அடைஞ்சிடுறாங்க. நான் மட்டும் இங்க இருக்கேனே அப்படின்னு எவ்வளவு வந்து அவருக்கு வருத்தமா இருக்கு. 


அந்த முனிவர், அந்த ஞானிதான் அடுத்த பிறவியில மாணிக்கவாசகரா பிறந்து இப்படி அழுது, அழுது, அழுது, அழுது, அழுது, அழுது சிவபெருமானை அடையறார். 


ஆக அவர் அழுத அழுகை தமிழ் தான் திருவாசகம். அந்த திருவாசகத்தை நம்ம படிச்சுக்கிட்டே இருந்தோம்னா நம்மளையும் ஒரு நாள் சிவபெருமான் கண்டிப்பா ஆட்கொள்வார். 


எப்படி மாணிக்கவாசகர் ஆட்கொண்டாரோ, அதேபோல நம்மளையும் கண்டிப்பா ஆட்கொள்வார். நம்ம பிறவி எடுத்ததுக்கே சிவபெருமானை வந்து வழிபட தானே ….பிறவு. நம்ம எல்லாரும் கண்டிப்பா சிவபெருமானை வழிபாடு செஞ்சு, அவர் நம்மள கண்டிப்பா ஆட்கொள்வார். நம்மளுடைய மனசு தூய்மையா இருந்ததுன்னா, கண்டிப்பா ஒரு நாள் வந்து நம்மளுடைய மனசுல உட்காருவார். 


===========================
# எப்படிப்பட்ட மனம் வேண்டும் ?
===========================

குருநாதர் :-  அழகாகவே. குழந்தைக்கு எம்முடைய ஆசிகள். இதுபோல் மனம் வரவேண்டும். இவ்வாறு மனம் வந்துவிட்டாலே, யாங்களே துணையிருந்து அழைத்துச் செல்வோம், என்ன விருப்பம் என்று. 


ஆனாலும் நீங்கள், தான் தான் விருப்பங்களை சொல்கிறீர்கள்.  ஆனாலும் அவர் விருப்பத்தை நிறைவேற்றினாலும் உங்களுக்கு குறை என்பதை உங்களுக்குத் தெரியாது. யாங்களே அறிவோம். 


===========================
# தகுதி இல்லாதவன் - “அதைத்தா, இதைத்தா, என்று கேட்பவன்”
===========================


குருநாதர் :-  இதனால்தான் நிச்சயம், அதாவது எங்களுக்கு அதைத்தா, இதைத்தா, என்று கேட்பவன் நிச்சயம் எது என்று புரியாது. அதற்கு நிச்சயம் தகுதி இல்லாதவன். தகுதி இல்லாதவன் தான் நிச்சயம் கேட்பான். 


===========================
# தகுதி உள்ளவன் சொல்வது - “எதை கொடுத்தாலும் பரவாயில்லை”
===========================


குருநாதர் :-  தகுதி உள்ளவன் இப்பொழுது இக்குழந்தை அழகாக சொன்னாளே , அறிந்தும் கூட எதை கொடுத்தாலும் பரவாயில்லை என்று நிச்சயம். இப்பொழுது கூறுங்கள், நீங்கள்?




சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றார் தெரியும்களா? அகத்தியர் இதுல வந்து, தகுதி இல்லாதவன் தான் எனக்கு அதை கொடு, இதை கொடுன்னு கேட்பாங்களாம். இறைவனிடத்தில் வந்து. எனக்கு வந்து அது வேணும், இது வேணும்னு சொல்லிட்டு, அப்ப அதை கொடுத்தாலும் நீங்க சரியா வந்து உங்க கையில நீங்க வந்து நிக்க வைக்க மாட்டீங்க. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஆனால் தகுதி உள்ளவன் எதை கேட்பான் தெரியும்களா? இந்த குழந்தை கேட்டு சொல்லுச்சு பாருங்க, எதை கொடுத்தாலும் பரவாயில்லை. இதுதான் உண்மை. அப்ப தகுதியை வளர்த்துக்கணும். 


===========================
# உங்கள் குழந்தைகளிடம் பக்தியை வளர்த்து விடுங்கள்
===========================


குருநாதர் :- எதை, எவை என்று அறிய. இதனால்தான் குழந்தைகளிலே பக்தியை வளர வேண்டும். வளர்த்திட வேண்டும். இவ்வாறு பின், அதாவது குழந்தையின் கருணைக்கு ஈசன் இறங்கியே ஆவான். 


===========================
# நிச்சயம் பள்ளிகளில் கூட முதலில், இறை நாமத்தையே சொல்லித் தர வேண்டும்.
===========================


குருநாதர் :- இதனால் நிச்சயம் அங்கங்கு குழந்தைகளுக்கு, அவ்வவ் பின் நிச்சயம் பள்ளிகளில் கூட முதலில் இறைநாமத்தையே சொல்லித் தர வேண்டும். இப்படி சொல்லித் தந்துவிட்டால், உலகம் அடுத்த நிலைக்கு செல்லும். இல்லையென்றால் நிச்சயம் செல்லாது. 


===========================
# “தாயே!!!!!  சிறு குழந்தையாக இருந்தாலும் நீ எனக்கு தாய் தான்”
===========================


குருநாதர் :-  தாயே, அறிந்தும் கூட, இதனால் சிறு குழந்தையாக இருந்தாலும் நீ எனக்கு தாய் தான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அகத்தியர் என்ன சொல்றார் பார்த்தீங்களா? நீ சொன்ன குழந்தைமா, ஆனால் எனக்கு தாய். அகத்தியர் என்ன சொல்றார்? அகத்தியர் தெரியும்களா யாருன்னு? 


குருநாதரின் அன்னை :- ( தெரியும் என்று தலையசைத்தார்)  


சுவடி ஓதும் மைந்தன் :- அகத்தியர் சொல்றாரு, நீ குழந்தை. ஆனாலும் எனக்கு தாய். ஐயா,கொஞ்சம்  எக்ஸ்பிளைன் பண்ணுங்க, ஐயா 


அடியவர் :- வயதில, சிறு குழந்தையா இருந்தாலும், நீ எனக்கு தாய் போலப்பா, அப்படின்னு குருநாதர் சொல்ராங்க. 


சுவடி ஓதும் மைந்தன் :-  வயதில சிறு குழந்தை, நீ குழந்தை எல்லாருக்கும், ஆனா எனக்கு? 


அடியவர் :- நீ தாய். 


சுவடி ஓதும் மைந்தன் :-  நீ தாய். அகத்தியர் சொல்றாரு, அப்ப எவ்வளவு பெரிய ஆளு அகத்தியர்?  அவருக்கு தெரியாதா? அதனால முதல்ல சின்ன குழந்தைகள் எல்லாம் இறைநாமத்தை சொல்லித் தரணும். எல்லா பள்ளிகளிலும் வந்து, அதெல்லாம் வந்து, எப்படியாவது அகத்தியரன் இறைவன் ஏத்துக்கல போவார். அப்படி சொன்னா மட்டும்தான், அடுத்த நிலைமை, அடுத்த நிலைமைக்கு இந்த உலகம் செல்லும். இல்லையென்றால், 


அடியவர் :- தேங்கி நிக்கும், அப்படியே செல்லாது. 


சுவடி ஓதும் மைந்தன் :- இந்த ஸ்கூல்லவே வந்து, நிறைய? 


அடியவர் :-  இறைவன் நாமத்தை சொல்லிக் கொடுக்கணும். 


சுவடி ஓதும் மைந்தன் :- இறைநாமத்தை சொல்லிக் கொடுக்கணும். அப்பதான் வந்து, அடுத்த நிலைமைக்கு, அடுத்த நிலைக்கு, உலகம் வந்து மாறிக்கிட்டே போகும். இல்லையென்றால், நிச்சயம் 


அடியவர் :-   முன்னேறாது…


===========================
# “தாயே!!!!!  உன்னைப் போன்று ஆட்கள் இத்தேசத்தை ஆள்வதற்கு நிச்சயம் வேண்டும். 
===========================


குருநாதர் :- அறிந்தும் குழந்தாய், உன்னைப் போன்று ஆட்கள் இத்தேசத்தை ஆள்வதற்கு நிச்சயம் வேண்டும். உருவாக்குவேன் வருங்காலத்தில். 


அடியவர்கள் :- ( பலத்த கை தட்டல்கள் )


சுவடி ஓதும் மைந்தன் :-  உன்னைப் போல் ஆட்கள் தான் எங்களுக்கு தேசத்துக்கு, தேசத்துக்கு தொண்டாற்ற வேண்டும். அதனால, ஆள்வ நீ வந்து, அந்த இந்த உலக, இந்த தேசத்துக்கு நீ தொண்டாற்றுவன்றார். 


அடியவர்கள் :-  உன்னை போல ஆள்கள் தான் எங்களுக்கு வேணும். இந்த உலகத்தை ஆள்வ தேசத்துக்கும் பெரிய சூழ்நிலையை நாங்க உருவாக்குவோம், அப்படின்றார். 


சுவடி ஓதும் மைந்தன் :-  உருவாக்குவோம்ன்றார். இந்த தேசத்தை நீங்க வந்து தொண்டாற்றுவீங்க. 


===========================
# எப்போது இறைவன் உங்களுக்கு தொண்டாற்றுவார்?
===========================


குருநாதர் :- எதை, எதை என்று பொறுத்த, அனைவரையுமே நல்மனதாக இருக்க வேண்டும். தேசத்திற்கு தொண்டாற்ற வேண்டும். அப்படி தொண்டாற்றினால், இறைவன் உங்களுக்கு தொண்டாற்றுவான். அவ்வளவுதான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  எக்ஸ்பிளைன் பண்ணுங்க, ஐயா. 


அடியவர் :-  அனைவருமே வந்து, நம்ம வந்து, இந்த தேசத்துக்கு தொண்டாட்டணும். சரிங்களா? இந்த மாதிரி குருநாதர் சொல்ற மாதிரி, அப்படி தொண்டாட்டினா, இறைவன் வந்து நமக்கு தொண்டாற்றுவார்ன்றாங்க. 


குருநாதர் :- அறிந்தும் இத்தாய்க்கு இருக்கின்ற அறிவு கூட, நிச்சயம் இன்னும் பின் வளர்ந்த, அதாவது வளர்ந்த வயதைத்தான் இங்கு சொல்கின்றேன். அறிவில்லையே, எப்படி பின் இவ் தேசத்தை காப்பாற்றுவார்கள்? 


அடியவர் :-  இவங்க சின்ன குழந்தை, இவங்களுக்கு இருக்கிற அறிவு கூட, உடம்பு வளர்ந்திருக்கு. மனிதன் வளர்ந்திருக்கிறான். அந்த வளர்ந்த மனிதனுக்கு அந்த அறிவு இல்லை. அறிவில்லையே, அப்படின்னு வருத்தப்படுறாங்க. குருநாதர்.


( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 24/05/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் …..)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment