​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 10 June 2026

சித்தன் அருள் - 2225 - அன்புடன் அகத்தியர் - 19.04.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 12



அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 19.04.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 12

நாள் :- 19/04/2026 (ஞாயிற்றுக்கிழமை) 
நேரம் :- காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 
இடம் : உலக நன்மைக்காக 09 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை. 


===========================
( உங்கள் குலதெய்வத்தை கண்டுபிடிப்பது எப்படி என்ற ரகசியங்கள் அடங்கிய வாக்கு. குலதெய்வம் தெரியாமல் இருந்தால், குறை இருந்து கொண்டே இருக்கும்.  இவ் வாக்கின் முந்தைய பகுதியையும் (சித்தன் அருள்  2224)  படிக்கவும்.   அடியவர்கள் அவசியம் இவ் வாக்கினை புரிந்து அனைவருக்கும் எடுத்து சொல்லவும் ) 
===========================

===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு….. 
===========================


https://youtu.be/C5OQ5pL4GnY?t=35888


குருநாதர் :- எதை என்று புரிய, அப்பனே, சரியாக பின் மேடத்தில். அப்பனே, நீ நிற்பாய் அப்பனே. அங்கிருந்து. அப்பனே, பின் எது நேராக சென்று. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் அதாவது எப்படியாவது அப்பனே, ஏது இருக்கிறது என்று எண்ணக்கூடாது என்பேன் அப்பனே. மலையின் மீதும் இருக்கலாம், பின் எவை என்று புரிய. 


அடியவர் 4  :- மேஷ ராசியா இருந்தா மேஷ ராசிக்கு கிழக்கு பக்கம் இருக்கிற கடல் இருக்கும் இல்லைங்களா? அந்த கடலுக்கு போனீங்கன்னா அங்க வந்து முன்னோர்களோட ஆன்மா வந்து அங்க இருக்கும். அங்க இருக்குதுன்னு அர்த்தம். அப்ப இதே விருச்சிக ராசினா மேற்கு பக்கம் இருக்கிற கடல் போகணும். கடக ராசினா தெற்கு பக்கம் இருக்கிற கடல். 


சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, புரியுதுங்களா? ஓகேங்களா? ஐயா, புரியுதுங்களா எல்லாருக்கும்? 


எழுதிய அடியவர்  :- எந்த திசையில கடலுக்கு போகணும்? ( என்று புரியும் ) 


சுவடி ஓதும் மைந்தன் :- எந்த திசையில கடலுக்கு போகணும்? சில பேருக்கு வந்து…. 


அடியவர் 5:- வடக்கு திசையில் கடல் இருக்கும்ல ? ( சந்தேகம் ) 


குருநாதர் :- அப்பனே, யோசியுங்கள், விடை கிடைக்கும். 


குருநாதர் :-  அப்பனே, ஏது என்று அறிய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட புரியாமல் பேசாதீர்கள் என்பேன். 


சுவடி ஓதும் மைந்தன் :-  புரியும் பேசுப்பான்றாரு. 


( அடியார்களிடம் சற்று அமைதி )


சுவடி ஓதும் மைந்தன் :-  வடக்குல ( கடல் இல்லையென்றால் ) நீங்க வந்து வேற நாட்டுக்கு போகணும். ( சில விளக்கங்கள் ) 


அடியவர் 6:- ( மேடை ஏறினார் ) இப்ப ஒரு வீட்ல மூணு அண்ணன் தம்பி பிறக்கிறோம். மூணு பேருக்கு மூணு லக்னம், மூணு ராசி இருக்கு. வெவ்வேறு ராசி. அது அவங்களுக்கு எப்படி குலதெய்வம்? மூணு பேருக்கு மூணு மூணு குலதெய்வம். 
https://youtu.be/C5OQ5pL4GnY?t=36089




குருநாதர் :- அப்பனே, அறிந்தும் ஏது என்று புரிய. அப்பனே, இதற்கும் இப்படி கேட்பாய் என்பதை எல்லாம் யான் அப்பனே பின் தெரிந்து வைத்திருக்கின்றேன். அப்பனே, ஏது என்று புரிய. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட 


சுவடி ஓதும் மைந்தன் :-  இவ்வாறெல்லாம் கேட்பாங்க. இதற்கும் நான் பதில் அளிக்கிறேன்றாரு. 


குருநாதர் :-  அப்பனே, நலமாகவே இப்பொழுது யான் சொல்லியிருக்கின்றேனே. அதுவே முதலில் நீ நடத்து, பின்பு யான் விவரிக்கின்றேன். 


சுவடி  ஓதும் மைந்தன் :- ( இதுவரை நடத்திய பாடத்தை முதலில் புரிந்து கொள்ளுங்கள். அதேபோல் அனைத்து ராசிகளுக்கும் குலதெய்வம் கண்டு பிடிக்கலாம். ) 


https://youtu.be/C5OQ5pL4GnY?t=36233

அடியவர் 4 :- ஐயா, அவருக்கு ஒரு நிமிஷம்ங்க. ஏன்னா இந்த இந்த கேள்வி வந்து ஒரு நியாயமான கேள்வி. அவங்க கேட்டது ஆமா. இதுக்கு கண்டிப்பா ஒரு தெளிவான பதில் சொல்ல வேண்டியது இருக்குதுங்க. ஏன்னா இப்போ ரெண்டு குழந்தைகள், மூணு குழந்தைகள் வந்து பிறந்திருப்பாங்க. ஆனா நீங்க கரெக்டா வந்து இந்த கணக்குப்படி போட்டு பார்த்தீங்கன்னா ஒரு குழந்தை வந்து, நீங்க கணவர் வீட்ல பிறந்திருப்பீங்க. அங்க கிழக்குக்கு கிழக்க இருக்கும் உங்க கணவர் வீடு. இல்ல, உங்க அம்மா வீட்ல பிறந்திருப்பீங்க. அம்மா வீடு மேற்கு இருக்கும். அதுக்கு தக்கன ராசிகள் வந்து மாத்தி இருக்கும் போல. நீங்க ஒரு தம்பிக்கு பார்த்தீங்கன்னா கிழக்கே இருந்து நாலு நாலு மைல்னு வரும். அண்ணனுக்கு பார்த்தீங்கன்னா மேற்கே இருந்து நாலு மைல்னு வரும். அப்ப பார்த்தீங்கன்னா சரியா வந்து நிற்கும். இந்த கணக்கு நீங்க கரெக்டா போட்டு பார்த்தீங்கன்னா உண்மையிலேயே அந்த திசையும் அந்த அளவீடு எத்தனை கிலோமீட்டர்ல இருக்கணுங்கிறதும் சரியா மேட்ச் ஆகும். கண்டிப்பா மேட்ச் ஆகும். ஏன்னா சொன்னது வந்து மனுஷன் இல்ல. அகத்தியர் குருநாதர் சொன்னாங்க. ஆமா, அதனால வந்துட்டு மனுஷன் சொன்னா பொய்யாகும். ஆமா, குருநாதர் சொன்னதுனால வந்து அது கண்டிப்பா வந்து அது இருக்கும். நம்ம போட்டு பார்த்தோம்னா அது தெரியும் வந்துட்டுங்க. 


நேரலை :-  https://youtu.be/C5OQ5pL4GnY?t=36290


( இவ்விடத்தில் பல உரையாடல்கள்…அவசியம் நேரலையை பார்க்கவும் ) 


நேரலை :-  https://youtu.be/C5OQ5pL4GnY?t=36511


ஒரு அம்மை அடியவர் :- ஐயா, ஐயா, அந்த ஐந்தாம் இடம் வந்து குலதெய்வம் இருக்கக்கூடிய திசையை குறிக்கும்னு சொல்றீங்க இல்லையா? ஆமா, இப்ப அப்பா மீன ராசியில பிறந்திருக்காரு. அவருடைய அஞ்சாம் இடம் வேற திசையில இருக்கு. மகன் வந்து கன்னி ராசியில பிறந்திருக்காரு. அவருடைய அஞ்சாம் இடம் வேற திசையில இருக்கு. எப்படிங்க? அப்ப குலதெய்வம் வேற வேற ????


குருநாதர் :- தாயே எது என்று புரிய. அதனாலதான் சொன்னேன், அனைத்தும் முதலில், பின் கூட்டி, பின் கழி. பின்பு உரைப்பேன். அதனை முதலில் எடுத்து வா. 


சுவடி ஓதும் மைந்தன் விளக்கங்கள் , உரையாடல்கள் :- https://youtu.be/C5OQ5pL4GnY?t=36579


குருநாதர் :- எதை என்று புரிய தாயே, பின் வணங்கியதே தவறு. இவனுக்கு குலதெய்வமே தெரியவில்லை. பின் எதை என்று புரிய? 
https://youtu.be/C5OQ5pL4GnY?t=36657




சுவடி ஓதும் மைந்தன் :- இவர் குலதெய்வமே தெரியல. இவர் வணங்கியதே தவறுன்னுட்டார். ஐயா, புரியுதுங்களா? 


ஒரு அம்மை அடியவர் :- குலதெய்வம்னு ஒன்னு வணங்கிட்டு இருக்கோம்யா  நாங்க. 


குருநாதர் :- தாயே, எது என்று புரிய நிச்சயம் இதற்கு சொல்கின்றேன். பொறுத்திருங்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :- ஆனால் நீங்க வணங்குறது சரியில்லை, தவறுன்றார். 


அடியவர் :- நீங்க இதை கண்டுபிடிங்க. ஐயா, முதல் குருநாதர் சொன்னதை முதல் செய்யுங்க. அப்புறம்தான் சொல்லுவாங்க. இது சொல்லாம சந்தேகங்கள் கேட்டாலும் புரியாது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  உங்களுக்கு யார் சொன்னது? ஹோம் ஒர்க் பண்ணிட்டு வாங்க. அடுத்தது யார் சொன்னது? அது மாதிரி உங்க யார் சொன்னது? தவறு. 


===========================
# குலதெய்வம் தெரியாமல் இருந்தால், குறை இருந்து கொண்டே இருக்கும். 
===========================


குருநாதர் :- அறிந்தும் அப்பா எது என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஒன்றை சொல்கின்றேன். அப்பனே, குலதெய்வம் தெரியாமல் இருந்தால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட குறை இருந்து கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே, சொல்லிவிட்டேன். 


சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாருக்கும் பொதுவா சொல்றாரு. குலதெய்வம் சரியா தெரியலைன்னா, ஏதாவது ஒரு குறை ஃபர்ஸ்ட் கண்டிப்பா இருந்துகிட்டே இருக்கும். 


குருநாதர் :- எது என்று அறிய  மனைவி மூலமோ, அல்லது எவை என்ற கூற தொழில் மூலமோ, அல்லது அதாவது எவை என்று திருமணம் ஆகாமலோ, பின் குழந்தை பிறந்தும் பாதிப்புகள் பலபல. அப்பனே, எவை என்று அறிய.  


சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, குலதெய்வம் சரியா தெரியலைன்னா, குழந்தைகள் பாதிப்புகள், திருமணம் ஆகாது திருமணம் ஆகி இருந்தாலும் நிம்மதி இல்லாம இருக்குது. அப்ப அடுத்து தொழில் பாதிப்பு, தொழில் பாதிப்பு, பெரும் பாதிப்பு, களத்திர ஸ்தான பாதிப்பு, எல்லாமே பாதிக்கும். 


குருநாதர் :- இதனால்தான் ஐந்தாம் இடம் மிகவும் சிறப்பும் கொண்டது. அதுதான் மீண்டும் உரைக்கின்றேன் அனைவருக்கும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐந்தாம் இடம் என்பது வந்து மெயின் என்றாருமா.


அடியவர் :- காலைல தேரையரையா நிறுத்துனது அஞ்சாம் இடத்தை தான் நிறுத்தி வச்சிருக்காங்க. நிறுத்தி வச்சு அதனாலதான் இவரும் வந்து அஞ்சாம் இடத்தை தான் சொல்லிட்டே இருக்காங்க. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஆமா, குலதெய்வம் தெரியாம ஒரு இன்ச் நகர முடியாது. 


குருநாதர் :-  தாயே, அறிந்தும் கூட ஐந்தாம் இடம் புரியாத புதிர். ஆனாலும் ஐந்தாம் இடத்தில் தான் அனைத்தும் உள்ளது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐந்தாம் இடம் என்பது என்னது? ஐயா, புரியாத புதிர், ஒரு புரியாத புதிர். ஆனால் ஐந்தாம் இடத்தில்தான் எல்லாம், எல்லாமே இருக்குது. 


அடியவர் :- எல்லா வெற்றிகள், எல்லாம் அங்கதான் இருக்கு. கண்டுபிடிக்கணும். 


குருநாதர் :-  அடுத்து ஏது என்று புரிய எதை என்று அறிய ஆனாலும் அறிந்தும் உண்மைதனை. இவை எதை என்று அறிய இன்னும் செப்புகின்றேன் அப்பனே. பின் அமருங்கள். 
( அனைவரும் அமர்ந்தனர் அங்கு) 
https://youtu.be/C5OQ5pL4GnY?t=36797




சுவடி ஓதும் மைந்தன் :- பாருங்க, ஐயா, சொல்றாரு. ஐயா, சொல்றாரு. அஞ்சாம் இடத்தை பத்தி அப்பா டயர்ட் ஆயிடுச்சுங்க. ஐயா, என்னங்க இது? ஒன்னும் ஒன்னும் புரியல. 




அடியவர் 4 :-அதாவதுங்க, இப்ப ஒருத்தங்க கேட்டாங்க இல்லைங்களா? ராசி வந்து அப்பாக்கு ஒரு மாதிரியும், பையனுக்கு ஒரு மாதிரியும். சோ, அப்பாக்கு ராசி வந்து தெற்கு திசையை காமிக்குது, பையனுக்கு ராசி வந்து வடக்கு திசையை காமிக்குது. சரிங்களா? வந்துட்டுங்க. ஏன்னா என்னமா, இந்த இந்த சுவடி வாசிக்கும் போல, கேட்கும்போல, ஒவ்வொரு வார்த்தையும் ரொம்ப ரொம்ப கவனமா கவனிச்சாதான் சில விஷயங்கள் புரியும். அதுல ஒரு சின்ன திருத்தம் என்னன்னா, குருநாதர் சொல்லும்போல, ராசி அல்லது லக்னம் ரெண்டுமே சொன்னாங்க. நீங்க லக்னத்தையும் சேர்த்து பார்க்கணும். லக்னத்தை நீங்க பார்த்தீங்கன்னா, உங்களுக்கு மேபி புரியலாம். ஏன்னா ஒன்னு ஒன்னு ரொம்ப ரகசியமா இருக்கிற மாதிரி இருக்கும். சின்ன வார்த்தை தான். நீங்க ராசியை மட்டுமே பார்க்கும்போது இந்த குழப்பங்கள் வரலாம். நீங்க லக்னத்தையும் எடுத்து பார்த்தீங்கன்னா, உங்களுக்கு அந்த தெளிவு வந்து உங்களுக்கு வந்து கிடைக்கும். சொல்லணும்னா, வந்து 
………………………
………………………
………………………
………………………


(ஒரு கேள்வி பதில்):- https://youtu.be/C5OQ5pL4GnY?t=36932
………………………
………………………
………………………
………………………


ஒரு அம்மை அடியவர்:-  (கேள்விகள் மேடையின் முன்னால் வந்து கேட்டார்கள்) 


குருநாதர் :-  அறிந்தும் தாயே, எவை என்று புரிய ஆனாலும் அறிந்தும் கூட பின் இறைவன்பால் நீ எவை என்று அறிய. இறைவன்பால் நம்பிக்கையாக வைத்து ஏது என்று புரிய ஆனாலும் சென்று விடுகின்றது. ஆனாலும் தற்பொழுது எவை என்று அறிய பின் நம்பிக்கை இல்லாத ஆன்மாக்கள் நீதான் நிலைக்க வேண்டும். போய் சென்று, 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, அந்த ஆன்மா கூட என்ன ஆகுதுன்னா இறைவனை நல்லா வணங்கி வணங்கி என்ன ஆகுதாம். வந்து என்ன ஆகுதாம் ஒரு இடத்துல போய் சேர்ந்துருமாம். அப்ப சில பேர் என்ன பண்ணுவாங்க? வந்து நம்பிக்கை இல்லாம நான் இறைவன் வணங்க மாட்டேன். இல்ல, அது இல்ல, அது செய்யலன்னு என்ன பண்ணும்? வந்து அங்க போய் ஒரு இடத்துல சேராது. இங்கதான் நிக்கும். அப்படி நம்பு, பக்தி செலுத்தி என்ன பண்ணும்? ஈர்த்துட்டு போய் அங்க போய் விடணும். ஐயா, அம்மா, புரியுதாமா? அது அம்மா, தனுஷ்கோடி போனாவே. அது வந்து உங்களுக்கு அங்க இப்ப வந்து 


அடியவர் :- அதாவது தனுஷ்கோடி போயிட்டா அந்த ஆன்மா வந்து இறை நம்பிக்கை அடைஞ்சு இங்க இருந்த ஆன்மா முக்திக்கு வழியாக அங்க போயிடுச்சு. அங்க போயிடுச்சு. ஆனா இறை நம்பிக்கை இல்லாத ஆன்மா முன்னோர்களா மாறி உங்க குலதெய்வம் கோவில்ல போய் அங்க போய் இருக்கும். நீங்க போயி அவங்க உங்களுக்கு ஆற்றல் கொடுப்பாங்க. நீங்க அவங்களுக்கும் முக்திக்கு வழி காமிக்கணும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஆமா, அப்ப அங்க போயிட்டீங்கன்னாவே உங்களுக்கு நல்லது. தனுஷ்கோடு அப்படி எல்லாம் போயிட்டாவே அந்த ஆன்மாக்கள் வந்து உங்களுக்கு சந்தோஷம். ஓ, ரைட், நம்ம தெரிஞ்சுக்கும். ஏன்னா இறைவன் வந்து உங்களை தெரிஞ்சுக்கும். அப்ப அந்த தெரிஞ்சுக்கிறதுனால நீங்க இந்த விஷயம் வந்து தெரிஞ்சுக்கணும்னு சொல்லிட்டு, ஐயா, அதனாலதான் நம்மளையும் இறை வழிபாட்டுல இருக்க சொல்றாங்க. உங்களை மட்டும் இல்ல, உங்க முன்னோர்களையும் நீங்க கரை ஏத்தலாம். உங்க தலையில உங்க முன்னோர்கள் எல்லாம் இருக்காங்க. உங்க பொறுப்பு அவங்களையும் சேர்த்து கரை ஏத்தணும். உங்களையும் கரை ஏறணும். நீங்களும் கரை ஏறணும். 


அடியவர் 4 :- அதனாலதான் வந்து பார்த்தீங்கன்னா வந்துங்க. எந்தெந்த எந்தெந்த திசைக்கு அந்த கடல் இருக்கு. பக்கத்துல இருக்கற கடலுக்கு போகணும். கிழக்க இருக்கிற கடலுக்கு நல்ல பாயிண்ட் எடுத்துட்டு வந்தாங்க. பாருங்க, எந்த ராசியோ அந்த ராசிக்கு கிழக்க மேஷம்னா கிழக்க. அந்தந்த பக்கத்துல ஏன்னா அங்கதான் ஆன்மா இருக்கும். அந்த திசையில அந்த ஆன்மா இழுத்துட்டு போறது எளிமை. அதனாலதான் எந்த திசையில கடல் இருக்குன்னு பார்த்து உங்களுக்கு என்ன ராசின்னு பார்த்து உங்க குலதெய்வத்தை பார்த்து அந்த திசையில இருக்கிற கடலுக்கு போனீங்கன்னா இது முக்தி கொடுக்கிறது. எளிமை. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அதாவது நிலத்துல இருக்கிற ஆன்மாவை நீருக்கு இழுத்துட்டு போகணும். 


அடியவர் 4 :- ஆமா, ஆமா. ஏன்னா கிழக்க இருக்கிறது எல்லாரையும் நீங்க தனுஷ்கோடிக்கு இழுத்து வரதுக்கு உங்களுக்கு தெம்பு வேணும்ல. 


சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப புரியுதாமா? இன்னும் புரியலையா? 
https://youtu.be/C5OQ5pL4GnY?t=37203




குருநாதர் :-  அறிந்தும் தாயே, நிச்சயம் எது என்று அறிய பின் இங்கும் ஏது என்று இறைவனுக்கும் எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட பின் பல சம்பந்தங்கள் உண்டு. அறிந்தும் கூட இதனையெல்லாம் நிச்சயம் எடுத்துரைப்பேன். பொறுத்திருந்தால். 


சுவடி ஓதும் மைந்தன் :- குலதெய்வத்திற்கும் இறைவனுக்கும் நிறைய சம்பந்தங்கள் உண்டு. 


குருநாதர் :- அறிந்தும் இப்பொழுது ஏழுமலையான் என்று சொன்னானே, புரிகின்றதா? 


சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப ஒருத்தர் ஏழு மலையான் சொன்னார் இல்ல? வந்து அப்ப இங்க வழிபாட்டு இங்க இருந்தா வந்து அந்த ஆன்மா என்ன ஆயிருக்கும்? வந்து முக்தி பெரிய அங்கிருந்து இங்க வரும். ஐயா, புரியுதுங்களா? நம்மள பார்க்கிறது. அப்புறம் வந்து டக்குனு வந்து குழந்தையாகவும் பிறக்கலாம். அந்த ஆன்மா 


குருநாதர் :- தாயே, எது என்று புரிய இதுவும் அறிவியல் வழியாகத்தான் உரைப்பேன். அப்பொழுதுதான் புரியும் எது என்று அறிய பின் அறிவியலில் பின் அதாவது பூஜ்ஜியம் தான். அனைவரும் 


சுவடி ஓதும் மைந்தன் :- அறிவியலில் என்னது எல்லாரும்? பூஜ்ஜியம். பூஜ்ஜியம் என்றார் அகத்தியர். 


குருநாதர் : எது என்று புரிய அடுத்தடுத்த வாக்கில் இன்னும் சொல்வேன் விவரமாக அறிந்து கூட. அதனால்தான் முதல் வகுப்பிலே தேர்ச்சி பெறுங்கள். இரண்டாம் வகுப்பிலே தேர்ச்சி பெறுங்கள். மூன்றாம் வகுப்பிலே தேர்ச்சி பெறுங்கள்என்றெல்லாம்  சொல்லிக் கொண்டிருக்கின்றேன் அறிந்தும் கூட எது என்று. இவையெல்லாம் பின் மெதுவாக வந்தால்தான், உயர் படிப்புகள் பின் எது என்று சுலபமாக இருக்கும். 


அடியவர் :- இப்ப இவ்வளவு நேரமா நம்ம போட்டு குழப்பிட்டு இருந்தோம்ல சொல்றாங்க எல்லாம். ஆனால இருக்கீங்கப்பா, அதெல்லாம் ஒரு சின்ன எளிய விஷயம் கூட உங்களுக்கு புரியல. போட்டு குழப்பிக்கிறீங்க அப்படின்றாங்க. ஆனால இருக்கிறீங்க, இந்த எளிய விஷயம் புரியல அப்படின்னா அறிவு இல்லை. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அம்மா, நீங்க சொல்றது ரைட் தான். அதுக்கு என்ன சொன்னாங்க தெரியுங்களா? நீங்க சொல்லுங்க ஐயா. 


அடியவர் :- ஆனா கொஞ்சம் ரகசியம், நீங்க சொன்னது குருநாதர் பின்னாடி உரைக்கிறேன்னு இருக்காங்க. அறிவியல் பூர்வமா 


மற்றொரு அடியவர் :- ராசி லக்னம் தெரியாது. என்னோட ராசி லக்னமும் தெரியாது. நம்ம பிள்ளைகளோட ராசி லக்னம் வச்சு நம்ம குலதெய்வத்தை கன்ஃபார்ம் பண்ணிக்கலாம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  கண்டுபிடிக்கலாம். அதெல்லாம், அதெல்லாம் ஈஸிங்க ஐயா. ஐயா, சொல்லி கொடுத்ததை முதல் போட்டு அதுலயே கிடைச்சிரும். போதும், அதை வச்சு நம்ம கன்ஃபார்ம் பண்ணிக்கலாம். 


குருநாதர் :- அப்பனே, அறிந்தும் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஈசனை நினைத்து அறிந்து கூட அப்பனே ஒரு பாடலை பாடுங்கள். 


பாடகர் :- ( என் அப்பன் அல்லவா பாடல் பாடினார்கள் ) 
https://youtu.be/C5OQ5pL4GnY?t=37380

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 19.04.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் …….)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment