அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 24/05/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 5
நாள், நேரம் : 24/05/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை
முழு நிகழ்வின் நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=1
இடம் : உலக நன்மைக்காக 10 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.
===========================
# இவ் 5ஆம் பகுதி வாக்கின் நேரலை https://youtu.be/NqRaI13qIDU?t=18865
===========================
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
குருநாதர் :- "தாயே, அறிந்தும் உடைக்கேட்கின்றேன்; இன்னும், அதாவது, புண்ணியத்தை இவர்களுக்கு வாங்கித் தருகின்றாயா? யான் குழந்தையாக இங்கே இருக்கட்டுமா?"
சுவடி ஓதும் மைந்தன் :- அகத்தியர் என்ன சொல்றார்னா, "இன்னும் இவங்களுக்கு நீ வந்து புண்ணியத்தை வாங்கித் தரியா? நான் இங்க குழந்தையா இருக்கிறேன்; இன்னும் இவங்க நல்லது சொல்லப் போறியா?"
குருநாதர் :- அறிந்தும் இக்குழந்தை நல்லதை பின், அதாவது, தெளிவுபடுத்தட்டுமா?"
சுவடி ஓதும் மைந்தன் :- அதாவது என்ன சொல்றார் தெரியுங்களா? அகத்தியர் வந்து, "நீ எல்லாம் இன்னும் அம்மா நீயே"ன்னு சொல்றார் உன்னை. "குட்டி, உன்னை அம்மான்னு சொல்றார் அகத்தியர் வந்து; நீயே எல்லாருக்கும் நல்லது சொல்லி கொடுக்கின்றாய் என்றால் , சொல்லி குடுமா?" இல்ல நான் சொல்லிக்கொடுக்கட்டுமா ? என்றார்; நீ என்ன சொல்லப் போற?
சிவ குழந்தை அன்னை:- ( நான் சொல்கின்றேன் )
குருநாதர் :- தாயே, எதை என்று புரிய, நிச்சயம் அறிந்தும் கூட உன்னை தாயே என்று சொல்லிவிட்டேன். யானும் இங்கு கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றேன்; அதனால் உன் பேச்சை நிச்சயம் கேட்க வேண்டும் என்று எனக்கு ஆசை. அதனால் நீ பேசு.
அடியவர் :- ( இவ் வகை கேட்ட உடன் கை எடுத்து கும்பிட்டார்கள் இவ் வேளையில்.)
அடியவர் :- நமச்சிவாய !!!!!
சுவடி ஓதும் மைந்தன் :- அகத்தியர் என்ன சொல்றார் தெரியுமா? இங்கதான் எங்கயோ அகத்தியர் இருக்கார். இங்கேயே இருக்கார் வந்து. அதனால நீ தாயாம்; அதனால உன் பேச்சை நான் கேட்க வேண்டுமாம். நீ பேசுமா என்றார். பேசுங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- பேசுமா.
( அடியவர்கள் அனைவரும் சிவ குழந்தையின் வாக்கை கேட்க தயார் ஆனார்கள் )
உலகோருக்கு சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னை உரைத்த வாக்குகள்:- நான் வந்து, படிக்கும்போதே வந்து, நிறைய தடவை ஏதாவது ஒரு ஸ்லோகம் மாதிரி எனக்கு வந்து தோணும். அதனால எழுதி வைப்பேன். அது எங்க அப்பா கூட தெரியாது. நான் வந்து, சாமி கும்பிடும்போது அதெல்லாம் கேட்பேன்.
என்னன்னா, ஒரு நாள் எனக்கு தோணிச்சு, நான் வந்து பாய்சன், அதாவது நஞ்சா இருந்தா, நான் வந்து நஞ்சா இருந்தா கூட உன்னுடைய தொண்டையிலேயே அழகா இருப்பேனே, அப்படின்னு எனக்கு வந்து தோணிச்சு. அதே மாதிரி, ஒருவேளை நான் பாவம் பண்ணி, நான் என்னை வந்து சொர்க்கத்துக்கு இல்லாம, உன்கிட்ட முக்தி அடையாம, என்னை நரகத்துல போட்டா கூட, அந்த அங்க வந்து என்னை கொடுமைப்படுத்துருவாங்க இல்ல, சித்திரவதை பண்ணுவாங்க இல்ல, அப்படி பண்ணும்போது கூட என் வாயில இருந்து சிவா, சிவான்னு தான் வரணும், அப்படின்னு கூட அவர்கிட்ட கேட்பேன்.
அடியவர்கள் :- ( சிவ குழந்தை அம்மை பேசி முடித்தவுடன் கை தட்டல்கள்)
குருநாதர் :- அம்மா, எனக்காக நீ பேசு இன்னும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அகத்தியர் என்ன சொல்றார் தெரியுமா? உங்களை அம்மான்னு சொல்றார். இன்னும் எனக்காக நீ பேசுமா? பேசு.
சுவடி ஓதும் மைந்தன் :- நீ பேசுனேன்னா எல்லாருக்கும் புண்ணியம்மா.
புண்ணியம் வரும் என்றார் அகத்தியர்; வேற ஒன்னும் இல்லை.
உலகோருக்கு சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னை உரைத்த வாக்குகள்:- நம்மளால முடிஞ்ச அளவுக்கு வந்து ஹெல்ப் பண்ணணும். அவரை வந்து நம்ம வந்து உருகி வேண்டிக்கிட்டே இருந்தோம்னா, நமக்கு அவர் வந்து கண்டிப்பா ஒரு நாள் நம்மள ஆட்கொள்வார்.
===========================
# “திருச்செந்தூர் வென்றிமாலைக் கவிராயர்” - திருச்செந்தூர் முருகன் கோயிலின் அர்ச்சகர் மரபில் (திரிசுதந்திரர்) பிறந்து, முருகனின் அருளால் தமிழ் இலக்கிய வரலாற்றில் புகழ்பெற்ற ஒரு சிவனடியார் மற்றும் பத்தர் ஆவார். முருகப் பெருமானின் கட்டளையை ஏற்று, 'திருச்செந்தூர் தலபுராணம்' என்ற பெருநூலை இயற்றியதன் மூலம் உலகோரால் அறியப்படுகிறார். அவர் குறித்து அம்மை உரைத்த வாக்குகளை இப்போது காண்போம்.
===========================
( அவசியம் அடியவர்கள் பின் வரும் நேரலையில் மழலை அன்னையின் அமுத வாக்குகளை கேட்கவும். அதுவே புண்ணியம். )
பின் வரும் வாக்கின் நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=19042
சிவ குழந்தை அன்னை வாக்கு :- அதேபோல, ஒருத்தர், அதாவது வென்றிமாலைக் கவிராயர் அப்படின்னு ஒரு பட்டர் இருந்தார். அவர் வந்து திருச்செந்தூர் கோயில்ல வந்து, அதாவது பிரசாதம் வந்து ரெடி பண்ற அடியவர். அவர் வந்து மடப்பள்ளியில வேலை செய்வார்.
ஒரு நாளைக்கு என்ன பண்ணிருக்கார்? முருகரை நினைச்சுக்கிட்டே ஒரு சின்ன தியானம் பண்ணிருக்கார். அன்னைக்கு வந்து அந்த திருச்செந்தூர் கோயில்ல ரொம்ப ஏதோ பெரிய விசேஷம். அப்படியே பண்ணி, அவர் வந்து என்ன பண்ணிட்டு இருக்கார்? தியானம் பண்ணிக்கிட்டே இருந்திருக்கார். என்ன பண்ணல? சாப்பாடு ரெடி பண்ணவே இல்லை. அதாவது பிரசாதம் செய்ய மறந்து, முருகரையே நினைச்சு தியானம் பண்ணிட்டே இருந்தார்.
அப்போ அங்க இருக்கிற திருச்செந்தூர் கோயில்ல இருக்கிறவங்க எல்லாரும் என்ன பண்ணிருக்காங்க? என்ன இன்னும் பிரசாதம் வரல? சரி, வாங்க போய் மடப்பள்ளியில போய் பார்ப்போம். அப்படின்னு வந்து திறந்து பார்த்தா, இவர் பாட்டு உட்கார்ந்து தியானம் பண்ணிட்டு இருந்திருக்கார். எல்லாத்துக்கும் டென்ஷன் ஆயிட்டு, இவங்க எல்லாம் வந்த சத்தத்தை கேட்டுட்டு, அப்பதான் அந்த வென்றிமாலை கவிராயர் வந்து கண்ணை முழிச்சு பார்க்கார்.
அப்பதான் அவருக்கு சுயநினைவே வருது. ஐயோ, முருகா, நீ வந்து இந்த மாதிரி நான் வந்து உன்னை நினைச்சுதான் தியானம் பண்ணேன். இப்படி வந்து என்ன சோதனை எனக்கு தந்திருக்க, அப்படின்னு இந்த வென்றிமாலை கவிராயர் ரொம்ப மனம் உருகி அவரை வந்து வேண்டி இருக்கார். ஆனாலும் என்ன பண்ணிருக்காங்க? அந்த கோயில்ல இருந்து வந்து அந்த வென்றிமாலை கவிராயரை தூக்கிட்டு போய், ஒரு தூண்ல கெட்டி வச்சு, அடி அடி அடின்னு போட்டு அடிச்சிருக்காங்க. அடிச்ச உடனே இவருக்கு வந்து ரொம்ப மனசு நொந்து போயிட்டாரு. நொந்து போய், இதுக்கு மேல நான் எதுக்கு வாழணும்? நீ ஏன் வந்து எனக்கு வந்து ஹெல்ப் பண்ணல? நான் எதுக்கு வந்து இதுக்கு மேல நான் உயிரோட இருக்கணும்? அப்படின்னு அந்த திருச்செந்தூர் கடல்ல விழுந்து உயிரை விட்டுறலாம். அப்படின்னு நேரா கடல்ல நோக்கி வரார். கடல்லையே விழுந்துடுறார்.
ஆனா விழுந்த அடுத்த கணமே ஒரு பெரிய…… அலை வந்து அவரை தூக்கி……. கரையில கொண்டு போட்டுருது. போட்ட அடுத்த நிமிஷம், அங்க ஆறுமுக நைனாராக முருகப்பெருமான் அவருக்கு காட்சி கொடுக்கிறார்.
அவருடைய கருணையை பார்த்தீங்களா? முருகருக்கு எவ்வளவு இரக்கமான மனசு இருந்துச்சுன்னா, இப்படி தன்னுடைய பக்தன் வந்து நம்மள வந்து இவ்வளவு வேண்டி கேட்டு, அவனுடைய உயிரையே வந்து கொடுக்குறதுக்கு தயாரா இருக்காரே, அப்படின்னு சொல்லிட்டு, அவருடைய மனம் இறங்கி வந்து ஆறுமுக நைனாரா வந்து அவருக்கு காட்சி அளிச்சிருக்கார்.
===========================
# மிக உயர்ந்த உபதேச வாக்குகள்…….
===========================
அதேபோல, நம்மளும் எவ்வளவுக்கு எவ்வளவு அவரை வந்து வணங்க முடியுமோ, அவ்வளவு நம்ம சிவபெருமானையோ இல்ல, உங்களுக்கு புடிச்ச தெய்வத்தையோ வணங்கணும்.
வணங்கணும், அப்படின்னு. அதாவது, நான் வந்து சாமி கும்பிட, அதாவது எப்படி சொல்ல? நான் வந்து அவர்கிட்ட பார்த்து கேட்க மாட்டேன். நான் முன்னாடியே சொன்னேன், அவர்கிட்ட கேட்கவே மாட்டேன். அவரை பார்த்தா, நீ எவ்வளவு அழகா இருக்க இல்ல, அப்படின்னு அவர் பார்த்துக்கிட்டே இருப்பார்.
எனக்கு எதுவுமே ஓடாது. அவர் பார்த்தா, பார்த்துக்கிட்டே இருப்பார். கோயிலுக்கு போனாலும் சரி, நம்ம இங்க அண்ணாமலைக்கு வந்தாலும் சரி, மீனாட்சி சொக்கநாதர் மீனாட்சி அங்க உண்டு இல்ல, மதுரையில அங்க போனாலும் சரி, இதோட குலசேர பட்டினத்துல வந்து ரெண்டு பேர் இருப்பாங்க இல்லையா? ஒரே சன்னிதியில சுவாமியும் இருப்பாங்க, அம்பாளும் இருப்பாங்க. குலசேர பட்டண குலசையின்னு சொல்லுவாங்க. அங்க வந்து அம்பாள் தான் ரொம்ப ஃபேமஸ்.
போனா எல்லாரும் தாயே, அப்படின்னு ரொம்ப மனமுறுகி வேண்டுவாங்க. நான் அங்க போனாலுமே சிவபெருமானை மட்டும்தான் பார்த்துக்கிட்டே இருப்பேன். நான் வேற எதுவுமே கேட்க மாட்டேங்க.
அவர் பார்த்தாலே போதும். அதுவே எவ்வளவு, அதாவது நம்ம நினைக்கலாம், நம்ம கோவிலுக்கு போறோம், அவரை வந்து வணங்குறோம், அப்படின்னுட்டு. ஆனா அதுவே அவர் நினைச்சா மட்டும்தான் நம்மளால கோயிலுக்கே போய் அவரை பார்க்க முடியும்.
அப்ப நினைப்பேன், பரவாயில்லை, நான் வந்து இன்னைக்கு உன்னை வந்து பார்த்திருக்கேன், நீ நினைச்சிருக்க தானே, அப்படின்னுட்டு நான் வந்து என் மனசுக்குள்ள அப்படியே ஓடிக்கிட்டே இருக்கும். நான் வந்து எப்படி சொல்ல? அவரை பார்த்துக்கிட்டே இருப்பேன். வேற எதுவுமே கேட்க மாட்டேன். நீ நல்லா இருந்தா போதும். நீ நல்லா இருந்தா எனக்கு எல்லாமே அள்ளி தருவ, அப்படின்னு ஒரு நம்பிக்கை. அது மட்டும் இல்லாம, அவரை ரொம்ப பிடிக்கும். அவ்வளவுதான்.
===========================
# சிறுபிள்ளையாக அகத்திய மாமுனிவர் - அன்பின் வலிமை.
===========================
குருநாதர் :- தாயே அறிந்தும், பின் வருங்காலத்தில் உலகம் எதை என்று புரிய, அழிவு நிலைக்கு செல்லப் போகின்றது. இதனால் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் எதை என்று புரிய, அதாவது உலக நன்மைக்காக நீ ஏதாவது பாடலை பாடவே தீர வேண்டும், அம்மா. அறிந்தும் கூட இப்பிள்ளை (அகத்தியன்) சிறுபிள்ளை உன்னை கேட்கின்றான்.
சுவடி ஓதும் மைந்தன் :- அகத்தியரே, நான் ஒரு சிறு பிள்ளையா உன்னை கேட்கிறேன், அம்மா. இந்த உலகத்தில் இருக்கிற எல்லாரும் நல்லா இருக்கணும்; அதற்காக நீ ஒரு பாடல் பாடியே ஆகணும் அம்மா. நான் சிறு பிள்ளை மாதிரி என்றார் அகத்தியர், இங்க வந்து.
சுவடி ஓதும் மைந்தன் :- ( மேலும் சில உரைகள் அளித்தார்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- குட்டி, பாடு குட்டி. அகத்தியர் உங்களை அம்மான்னு சொல்லிட்டு, அவர் குழந்தை ஆயிட்டாருன்னு சொல்றதுக்கு ஒன்னும் இல்லைங்க.
===========================
# சிவ குழந்தை அன்னையின் உயர் எண்ணங்கள்
===========================
சிவ குழந்தை அன்னை வாக்கு :- அதான் நான் ஒரு முடிவு வச்சிருக்கேன். என்னன்னா, 63000மார்களுக்கு எப்படி வந்து சிவபெருமான் காட்சி அளித்தாரோ, ஒருவேளை எனக்கும் ஒரு நாள் எப்பயாவது வாய்ப்பு இருந்தா காட்சி அளித்தார் அப்படின்னா, கண்டிப்பா. அவர் காலை சிக்கன புடிச்சுக்குவேன். அவரை விடவே மாட்டேன். ஒன்னும் இல்ல, என்ன கூட்டிட்டு போ. இல்ல, நீ என் கூட இரு அப்படின்னு.
சுவடி ஓதும் மைந்தன் :- சூப்பர் குட்டி. எப்படி பேசுறாங்க, ஐயா. ஞானம் எப்படி பேசுது பாருங்க, ஐயா.
…………….
…………….
…………….
…………….
ஞானம் வேண்டும் முதல்ல. ஞானத்தை பெற்றுக்கொள்ளணும்மா. இந்த அறிவு. அகத்தியர் பாருங்க, உனக்கு என்ன வேணுமோ நான் தூக்கி விடுறேன்றார் அகத்தியர் வந்து. இதே மாதிரி நீங்க இருந்துட்டீங்கன்னா, உன்னை தூக்கி வச்சு அழகா பார்ப்பாரும்மா வந்து. ( அன்புடன் ) பாடு குட்டி.
உலகோருக்கு சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னை பாடிய பாடல் ( முத்தை திரு பத்தி திருநகை ) :-
பாடலின் நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=19855
( பாடல் பாடி முடித்த பின்னர் மீண்டும் வாக்குகள் ஆரம்பமானது…)
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
குருநாதர் :- அம்மா. அறிந்தும், இத்தேசத்தில் வருங்காலத்தில் பின் எதை என்று பொறுத்து இன்னும் அடித்துக் கொள்ளப் போகின்றார்கள். சட்டத்தில் இருப்பவர்களே இன்னும் பல வகையில் கூட பின் அடித்து, அதாவது இன்னும் பொய் சொல்லி, இன்னும் ஏமாற்றி, அவரவர்களை சாகடிக்கப் போகின்றார்கள்.
ஏனென்றால் பின் இப்படியெல்லாம் நடந்தால் மனிதன் இன்னும் கீழாகப் போய்விடுவான். இதனால் தர்மத்தை நிலை நாட்ட சட்டம் கூட அறிந்தும் எது என்று புரிய, அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்.
அதாவது இன்னும் பல வழிகளில் கூட பின் குழப்பங்கள், பின் மனிதன் மனிதனிடத்திலே பெரிய பெரிய பதவிகளில் இருந்து இருந்து, இதனால் அதிலிருந்தே நிச்சயம் பின், அதாவது துப்பாக்கியால் கூட சுடப் போகின்றார்கள்.
இதனால் அவையெல்லாம் நிறுத்த வேண்டும் என்று நிச்சயம் இரண்டத்தில் மன்றாடு, அம்மா, பாடு. அனைவரும் வேண்டிக்கொள்ளச் சொல்.
சுவடி ஓதும் மைந்தன் :- என்ன நடக்குமாம் தெரியுமா, அடுத்த அடுத்து நடக்கும்போது அகத்தியர் சொல்றார், இந்த சட்டம், இந்த அரசியல் மாற்றங்கள்ல பெரிய பெரிய சண்டை வருமாம். சண்டை வந்துட்டு நாட்டை வந்து விட்டுடுவாங்களாம், வந்து காப்பாத்துறதுக்கு நாட்டை விட்டுடுவாங்க. அப்ப அவங்க அவங்க சண்டையிட்டு கொன்னு கூட போடுவாங்களாம். அவங்க அவங்களே வந்து துப்பாக்கி எடுத்து, அவங்க அவங்களே சண்டை போட்டு, சுட்டு கூட போவாங்களாம். வந்து அந்த நிலைமைக்கு போகும்பா, அந்த நிலைமை வரக்கூடாது. எல்லாம் அண்ணாமலையாரை நினைத்து, எல்லாரும் மனசுல நினைத்து, ஏன்னா அடுத்து வரப்போறது அது வந்து, அதனால இங்க சொல்றார் இப்ப. அதனால வந்து அதெல்லாம் நடக்கக்கூடாது. அண்ணாமலையிடத்தில முறையீடு, நீங்களும் முறையீடு, அம்மா நீயும் முறையிட்டு பாடுமான்றார். வந்து பாடுமா, பாடு.
சிவ குழந்தை அன்னை :- பேசவா?
சுவடி ஓதும் மைந்தன் :- பேசுங்க, அம்மா.
===========================
# இறைவன் மீது பற்று வைக்க வேண்டும்
===========================
சிவ குழந்தை அன்னை வாக்கு :- இப்போ நம்ம பக்கத்து வீட்டுல இருந்து ஒரு ஆண்டி, அல்லது சரி. நம்மளோட பிள்ளைன்னு வச்சுக்கலாம், ஓகேவா? நம்மளோட பிள்ளை ஐஏஎஸ் ஆனாங்க அப்படின்னா எவ்வளவு சந்தோஷப்படுவோம். அம், ஸ்வீட் கொடுக்கும்போது, ஒரு குறைஞ்சது ஒரு மாசத்துக்கு, "என் பிள்ளை ஐஏஎஸ் ஆயிட்டான், என் பிள்ளை ஐஏஎஸ் எழுதி பாஸ் ஆயிட்டான்" அப்படின்னு எவ்வளவு சந்தோஷப்படுவோம், இல்லையா?
அதே போல, நம்ம வீட்டுல ஏதாவது ஒரு—நம்ம வீட்டுல ஏதாவது ஒரு காரியங்கள், அப்பா தவறிட்டா, அப்பா தவறிட்டாரு, அம்மா தவறிட்டாரு அப்படின்னா எவ்வளவு நம்ம வந்து சோகப்படுவோம், எவ்வளவு அழுவோம். நம்ம வந்து அதுக்காக 16 நாட்கள் வந்து காரியம் கொண்டாடுவோம், இல்லையா?
அது, அதற்குரிய நோக்கம் என்ன? அதாவது, "என்னுடைய பிள்ளை வந்து ஐஏஎஸ் ஆயிட்டாரு" அப்படின்னு சொல்றதும், "என்னுடைய அப்பா தவறிட்டாரு" அப்படின்னு சொல்றதும், ரெண்டுலையும் என்ன வந்து ஒண்ணு போல இருக்கு.
என்னுடைய பிள்ளை, என்னுடைய அப்பா, என்னுடையது, என்னுடைய காரு, என்னுடைய வீடு, என்னுடைய போனு, என்னுடைய பைக், என்னோட அம்மா, என்னோட அப்பா அப்படின்னு நம்ம எல்லாத்து மேல எப்படி பற்று வச்சிருக்கோம், இல்லையா? அந்த "என்னுடையது" அப்படிங்கற பற்று, நம்ம இதுங்க மேல எல்லாம் வச்சிருக்கறது வெறும் டெம்பரரி.
===========================
# "என்னுடைய" என்ற பற்றை நம்ம இறைவன் மேல வச்சாலே போதுங்க, அடுத்தடுத்து எல்லாமே ஆட்டோமேட்டிக்கா வந்துரும்.
===========================
சிவ குழந்தை அன்னை வாக்கு :- அந்த "என்னுடையது" அப்படிங்கற பற்றை யார் மேல வைக்கணுமா? இறைவன் மேல வைக்கணுமா? அவர் என்னுடைய, அவர் என்னுடைய முருகர், என்னுடைய பிள்ளையார், என்னுடைய பெருமாள், என்னுடைய சிவபெருமானே அப்படின்னு யாராவது சிவபெருமானை மட்டும், "ஆமா, அவரா சோதிப்பார்" அப்படின்னா, நம்ம சொல்லணும், "அவர் எப்படியா? அவர் என்னுடைய சிவபெருமான் இல்ல, அப்படி எல்லாம் பண்ண மாட்டார்" அப்படின்னு. நமக்கு நம்மளுடைய பொருளையோ, நம்மளுடைய இதையோ நம்ம வந்து டேமேஜ் பண்ணா, நமக்கு எவ்வளவு கோவம் வரும். இப்போ நம்ம காரை வந்து ரோட்ல நிறுத்திக்கோம்னு வச்சுக்கோங்க, யாரோ வந்து கல்லை கொண்டு எறிஞ்சு உடைச்சிட்டாங்க, எவ்வளவு கோவம் வரும். "நீ எப்படி உடைக்கலாம்?" அப்படின்னு என்னுடைய பொருளுக்காக நம்ம எவ்வளவு சண்டை போடுவோம்.
அதே மாதிரி, என்னுடைய முருகர், என்னுடைய பிள்ளையார் அப்படி, அந்த "என்னுடைய" பற்றை நம்ம இறைவன் மேல வச்சாலே போதுங்க, அடுத்தடுத்து எல்லாமே ஆட்டோமேட்டிக்கா வந்துரும்.
சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னை பாடிய பாடல்:-
https://youtu.be/NqRaI13qIDU?t=20308
===========================
# திருவாசகத்தில் 'பிடித்த பத்து' என்று பத்து பாடல்கள் மாணிக்க வாசகர் அருளிச் செய்திருக்கிறார். அதில் இருந்து ஒரு மிக மிக இனிய பாடல்.
===========================
பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து, நீ, பாவியேனுடைய
ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி, உலப்பு இலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!
யான் உனைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?
சிவ குழந்தை அன்னை விளக்கங்கள் :- இப்போ நான் சொன்னேன் இல்லையா, ஒரு சின்ன குழந்தையோட அம்மா வந்து என்னதான் வேலை வேலை செஞ்சுட்டு இருந்தாலும், அவளுடைய மனசு நினைப்பு எல்லாம் எங்க இருக்கும். பாப்பா தூங்கிட்டு இருக்கா, முழிச்சிருப்பாளோ அப்படின்னு எட்டி வந்து பாப்பா. அடுத்து வயிறு பசிக்கும், சரி பால் கொடுப்போமே அப்படின்னு வந்து நினைச்சு நினைச்சு வந்து கொடுப்பா இல்லையா. அதாவது குழந்தை தூங்கிட்டு தான் இருக்கும்.
ஆனா அவ மனசுக்குள்ள பாப்பாக்கு பசிக்குமே அப்படின்னு எப்படியும் மறக்காம நினைச்சு, அதான் பாழ் நினைந்து ஊட்டும் தாயினும் சால பரிந்து. அதைவிட மேலானவர் தான் யாரு? நம்ம சிவபெருமான். அப்படி நம்ம தாய் போல நம்மள வந்து பார்த்துக்குவார். அதேபோல கடைசி வரியில பார்த்தீங்களா, சிக்கன பிடித்தேன் எங்கு எழுந்தருள்வது இனியே. அதாவது சிவபெருமானே, நான் உன்னை சிக்கன பிடிச்சுக்குவேன், நீ எப்படி என்னை விட்டு போக முடியும் அப்படின்னு சொல்லி இருக்கார். அழகான பாட்டு இது பாட்டு.
சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னை பாடிய பாடல் நேரலை :-
https://youtu.be/NqRaI13qIDU?t=20450
அடியவர்கள்:- ( பாடல் பாடி முடித்தபின்னர் , அடியவர்கள் கைதட்டினர் )
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
குருநாதர் :- தாயே, அறிந்தும், அதாவது இப்பொழுது சொன்னேனே—பின் உலகத்தில் என்ன நடக்கும் என்று அனைவரும் வேண்டிக்கச் சொல். நீயும் பின், அதாவது பிரார்த்தனை செய், இறைவனிடத்தில்.
சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப சொன்னார் இல்ல, (அழிவுகள்)இதெல்லாம் நடக்கப் போகுது…..அது நடக்க வேணாம். நீ சொல்லுமா, உன் வாயால என்றார் வந்து. சொல்லுங்க, சொல்லுங்க. பிரார்த்தனை பண்ணி சொல்றார். நாட்டுல நல்லா இருக்கணும், எல்லாரும் நல்லா இருக்கணும், பிரார்த்தனை—நீங்க சொல்லுங்க அதை. உங்க மூலமா சொல்ல சொல்றார். சொல்லுங்க.
சிவ குழந்தை அன்னை :- உலகம் இந்த மாதிரி எல்லாம் நிறைய சிக்கலை வந்து சந்திக்கப் போகுதாம். அதனால, ஆளாளுக்கு எல்லாரும் அவங்க மனசுக்குள்ள இருந்து, அதாவது உள் மனசுல இருந்து வேண்டணும். என்னென்ன? இறைவா, என்னை மட்டும் இல்ல, எல்லாரையும் துன்பம் நெருங்கக் கூடாது. எல்லாரையும் காப்பாத்தணும், அப்படின்னு கண்டிப்பா வேண்டணும்னா, என்னன்னு கண்டிப்பா வந்து சிவபெருமான் வந்து, சிவபெருமானோ இல்ல முருகரோ, உங்களுக்கு பிடிச்ச இஷ்ட தெய்வங்களை நீங்க வந்து கேட்டீங்க அப்படின்னா, கண்டிப்பா அந்த அழிவில இருந்து நம்மள காப்பாத்துவார்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)

No comments:
Post a Comment