​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 18 June 2026

சித்தன் அருள் - 2232 - அகத்தியப்பெருமானின் பதில்கள்!


51. இலங்கை கொட்டாஞ்சேனை வாக்கில், கையில் வெற்றிலை வைத்து, வேல்மாறல் பாராயணம் செய்து, வெற்றிலையை ஆற்றில் விட சொல்லி இருந்தீர்கள். அப்பா, ஆறு அருகில் இல்லாத சூழலில், இதனை எப்படி செய்வது என வழிகாட்டுங்கள்.

குருநாதர்: அப்பா, நிச்சயம், தன்னில் கூட, பின் எவை என்று கூற, இல்லத்தின் அருகில், பின் நிச்சயம் எதுவும் இல்லை. வேலை செய்வதற்கும் இடமில்லை. இதனால் ஓடி, பின் அதாவது மற்றொரு, பின் தேசத்திலோ அல்லது எங்கேயோ செய்கின்றானே. அதற்கு மட்டும் ஏன் செல்கிறார்கள்? இதற்கு பதிலுரை, [ஐயா, உள்ளூர்ல வேலை கிடைக்கல. வெளியூருக்கு போய், வெளியூருக்கு போய், வேலை பார்க்கிறாரு. என்ன சொல்றாரு, அவர் டெய்லியே, அவன் இதை பண்றான். அப்படின்னா, டெய்லி வேற ஊருக்கு போய், விட்டுட்டு வர முடியுமா? பிராக்டிகலா பாக்கணும்.

குருநாதர்: இலங்கை கொட்டாஞ்சேனி வாக்கில், கையில் வெற்றிலை வைத்து, வேல்மாறலை கூறி, அதை ஆற்றில் விட சொல்லிட்டேன். அப்பா, இன்னொரு முறையும் சொல்கின்றேன். பின் இதைத்தன் பக்குவம் பட்டவனுக்கே, இவ்விஷயம் தெரியும். எதை என்று புரிய, அதாவது அனைத்தும் நடக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். மனிதர்கள் செய்யத்தான் வேண்டும். இதிலும் ஒரு பதில், இதுவும் ஒரு பதில். ஏன்னா, இது வந்து ஆத்தங்கரை பக்கத்துல இல்லன்னா, நீங்க ஆத்துல விடுன்னு சொல்றபோது, அப்பா, இதை நீயே சொல். அப்பா, நிச்சயம் தன்னில் கூட, வேலைக்காக, அப்பா, இல்லத்தையே மாற்றிக் கொண்டு, அதாவது பின் நிச்சயம், பின் அலுவலகம் அருகிலேயே தங்கிக் கொள்கிறார்கள். அதேபோலத்தான், அப்பனே, தங்கச் சொல், தங்கச் செய்து, செய்யச் சொல், 

[ஐயா. பக்கத்துல நதியே இல்லைன்னா, என்ன பண்ணுவ? நதி இல்லாத ஊர், என்ன பண்ணுவீங்க? கடல்ல கொண்டு விடு, இல்லைன்னா, குளத்துல விடுன்னு சொல்லணும்.]

குருநாதர்: நீர்ல விடுவது, எதை என்று கூற, மனிதன் இதை கூட தெரிந்து கொள்வதில்லை. அப்பா, நிச்சயம், பின் அன்புடன் செய்வது, இறைவன் ஏற்றுக்கொள்வான் என்று கூட யான் சொல்லிவிட்டேன். சரி, பின் அப்பொழுது என்ன தெரிந்திருக்கிறது? இவர்களுக்கு, மனிதர்களுக்கு, நீயே சொல். 

52. மேல் சொன்னது போல, அமாவாசை தர்ப்பணம் செய்ய இல்லாத சூழ்நிலையில், என்ன செய்வது என்று தெரியவில்லை.

குருநாதர்: அழகாக இல்லத்தில், ஏது என்று கூற, பின் பின் நன்றாக உறங்கச் சொல். 

53. முருகன் அடிமையாக இருக்க, என்ன செய்ய வேண்டும், ஐயா?

குருநாதர்: நிச்சயம், அதற்கு முருகன் நினைக்க வேண்டும்.

Speaker 1

54. தேரையர் பெருமான், எந்திரம் செய்து, சிவபுராண கூட்டு பிரார்த்தனையில் கொடுக்க, தங்களின் ஆசியும், வழிகாட்டுதலும் வேண்டுகின்றோம், 

குருநாதர்: அப்பா, எது என்று புரிய, அப்பா, எதற்கும் அவனுடைய அருள்கள் வேண்டும். முதலில், நிச்சயம், அனுதினமும் திருத்தலதிற்கு செல்ல வேண்டும். திருத்தத்துல இருந்து போயிட்டே இருக்கணும்.

55. குழந்தைகளை, மனிதர்களை, இறைவனுக்கு தத்துக்கொடுத்து, தவிட்டு புண்ணாக்கு கொடுத்து, மீண்டும் பெற்றுக்கொள்ளப்படும் வழக்கத்தை பார்க்க முடிகிறது. உதாரணம், திருநெல்வேலி, பாபநாசம் ஆலயம், திருச்செந்தூர், மேலும் பல திருத்தளங்களில், இதன் தாத்பரியம் அறிய வேண்டுகிறேன், ஐயா.

குருநாதர்: இது கலியுகம், அழியுகம், முழு அழிவு, தெளிவு உள்ளதை, உள் ஒன்று, புறம் ஒன்று அறிந்தும், இவைத்தன் ஏது என்று தெரியாமல் போனால், போனால் போகட்டுமடா, வந்தால் எதை என்று உணர்ந்தால், உணர்ந்தின்று அறிந்தும், இங்கு பார்ப்பதற்கு ஆள் இல்லையடா. இல்லை என்று சொன்னபோதும், இருப்பதும் என்று எவ்வாறு புகழ்வதடா? புகழ்ந்து போனாலும், இல்லையே, உடம்பு இகழ்ந்து போனாலும், இல்லையே, மனது அறிந்து போனாலும், இல்லையே, இறைவன் எங்கடா? ஞானம் எங்கிடா? ஞானம் அறிந்தும் சொன்னேனடா! [போகர் சித்தர் வாக்கு]

[எனக்கு அது புரியறது. என்ன சொல்ல வராருன்னா, ஒரு விலை மதிப்பு இல்லாத ஒரு பொருளை கொடுத்துட்டு, அவருக்கு தனக்கு ஒரு குழந்தைங்கிற விலை மதிப்பு மிக்க ஒரு பொருளை, இறைவன்ட்ட இருந்து வாங்கிக்கிறான். இந்த ஞானம் கூட அவனுக்கு தெளிவு வரமாட்டேங்குறதுன்னு, இன்டைரெக்ட்டா சொல்றாரு. தவுடை கொடுத்து தானே குழந்தையை வாங்கிக்கிறாங்க. முருகப்பெருமான்ட்ட தவுடு என்னத்துக்கு பயன்படும்? கஞ்சி கூட போட முடியாது. அப்ப கூட முருகனுக்கு, இறைவனுக்கு ஏதாவது கொடுப்பதற்கு ஒன்றுமில்லை இருந்தாலும், மிக உயர்ந்த ஒரு பொருளை கொடுக்கணும்னு மனுஷனுக்கு தோண மாட்டேங்குறதுன்னு தான் இன்டைரெக்ட்டா சொல்றாரு.]

56. புராணங்கள், இதிகாசங்கள் படித்தால் புண்ணியம் பெருகும் என்று வாக்குறுதி அப்பா. ஆனால் நாங்கள் படிக்கின்ற ராமாயணமும், இதிகாசமும், நீங்கள் சொல்லும் ராமாயண நிகழ்வும் வேறாக இருக்கின்றது. உண்மை நிகழ்வை மறைக்கப்பட்ட ரகசியங்களை நீங்கள் அறியத் தருகின்றீர்கள். தவறாக புராணங்கள் படித்தால் கர்மா ஏற்படுமா? 

குருநாதர்: நிச்சயம் உண்டு. எதை என்று அறியும் அதனால்தான் நிச்சயம் அடிப்படை ரகசியங்கள் எல்லாம் தெரிவித்துக் கொண்டே இருக்கின்றேன். ஆனால் அதற்குள்ளே மனிதன் எதை எதையோ பேசி விடுகின்றான். புத்திகெட்ட மனிதன் ஆனாலும் நாங்கள் விடப்போவதில்லை. பின் மனிதனை மனிதன் இறைவனை நம்பி, எங்களை நம்பி வந்து கொண்டிருக்கின்றான். நம்பினோர்கள் கெடுவதில்லை. இதனால் தீர்ப்பு பலமாக இருக்கும் வருங்காலத்தில்.

57. பெண்ணாசை ராமாயணம், மண்ணாசை பாரதம் என்றுதான் நாங்கள் படித்தது, அப்பா. ஆனால் இறைவனின் லீலையாக உலகத்தின் இதயமான சுறாக்கல்லை காப்பதற்கு தான் ராமாயண காவியமே நிகழ்ந்தது என்ற ரகசியத்தை எங்களுக்கு அறிய தந்தீர்கள். கருணை கடலுக்கு நன்றி. அப்படி என்றால் மகாபாரதம் நிகழ்விற்கு காரணம் அறிய வேண்டுகின்றேன், அப்பா.

குருநாதர்: நிச்சயம் உண்டு. இப்பொழுது இதனையே எடுத்து வரோம். நிச்சயம் தன்னில் கூட பல வகைகளில் கூட ஏது என்று அறிய, நிச்சயம் இதை முடித்துவிட்டு அதனையும் எடுத்து வருவோம்.

இதை முடித்துவிட்டுன்னா, இன்னும் முடிக்கவே இல்லையா?

குருநாதர்: ராமாயணம் இன்னும் வந்து முடிக்கவே இல்லை. இதனால்தான் ஏன் நாங்கள் நிறுத்திவிட்டோம் என்றால், அடிப்படை தத்துவங்களை புரிந்து கொண்டால்தான் சிறப்பு. இல்லையென்றால் மனிதன் பின் அதாவது ஏது என்று அறியாமலே பின் இறந்தும் விடுவான். வருங்காலத்தில் அழிவுகள் அதிகம். இதனால் அடிப்படை ரகசியங்களை சொல்கின்றேன், முதலில்.

58. ராவணேஸ்வரரை நீங்கள் யாழ்ப்போட்டியில் வென்றதாக ஒரு வரலாறு கதையும் சொல்லப்படுகிறது, அப்பா,  உங்களின் சீடனாக ராவணேஸ்வரர் இருந்திருக்கின்றார் என்பதை உங்களின் இலங்கை வாக்குகளின் மூலமாக அறிய முடிகின்றது. இந்த நிகழ்வைப் பற்றி அறிய வேண்டுகின்றேன், 

குருநாதர்: அப்பா, இதற்கு நீண்ட கதை ஒன்று உள்ளது. இப்பொழுது வேண்டாம்.

59. ராவணேஸ்வரரின் தம்பி குபேரர், அனைவரின் இல்லத்திலும் பூஜை அறையில் இருக்கின்றார். ஆலயங்களும் இருக்கின்றது. உலகின் தலைசிறந்த சிவபக்தரான சிவராத்திரி வழிபாட்டை ..........

குருநாதர்: ஆனால் ஒன்றை இங்கு குறிப்பிடுகின்றேன். அதாவது குபேரன் மிகவும் நல்லவனாம். எது என்று புரிய, அதாவது பணம் இருக்கிறது என்று. ஆனால் ராவணன் கெட்டவனான். அருள் இருக்கிறது என்று. இதை நீ சொல்ல வேண்டும். இங்கு யார் என்று ஆனாலும் இருவருங்களே. நிச்சயம் தன்னில்கூட பாசத்திற்குரியவர்கள் தான். ஆனாலும் எப்படி ஏது என்று அறிய, குபேரனும் எவன் இல்லத்தில் வைக்க வேண்டும். ராவணன் வெளியே கொண்டு செல்ல வேண்டும். அப்பா, சிந்தித்துப் பாருங்கள். மனிதனின் புத்தியை கூட நீங்க சொல்றதுக்கு ஒன்னும் இல்ல. 

60. சிறந்த சிவபக்தரான சிவராத்திரி வழிபாட்டை தோற்றுவித்தவருமான ராவணேஸ்வரருக்கு வழிபாடு என்று ஒன்று இருந்ததா, அப்பா? தற்போது படங்கள் வைத்து வழிபடலாமா? 

குருநாதர்: அப்பா, நிச்சயம் குபேரனை வழிபட்டாலும் ஒன்றுதான். நிச்சயம் தன்னிலே கூட எவை என்று புரிய சொல்லிவிட்டேன். இங்கு மறைமுகமாக சொல்கின்றேன். ஏனென்றால் மனிதனுக்கு புத்தி இல்லை, அப்பா. ராவணனை எடுத்து வந்தாலும், மனிதன் இன்னும் என்னென்ன பேசப்போகின்றானோ என்று தெரியவில்லை. 

61. கந்த சஷ்டி கவசத்தில் ரவண பவச என்பது ராவணேஸ்வரரை குறிக்கின்றது என்று உங்களின் இலங்கை வாக்கில் அறிந்து கொள்ள முடிகின்றது, அப்பா. அதுபோல திருவோண நட்சத்திரத்திற்கு ஸ்ரவண என்று சம்ஸ்கிருதத்தில் சொல்லப்படுகிறது. ஸ்ரவண இதற்கும் ராவணேஸ்வரருக்கும் தொடர்பு இருக்கின்றதா, அப்பா?

குருநாதர்: நிச்சயம் இதைத்தான் விவரமாகவும் சொல்கின்றேன். ஆனாலும் இதற்கெல்லாம் ஒன்றாகவே தெரிவித்து விட்டாலும், இதற்கு ஏது என்று புரியாமல் போய்விடும். வருங்காலத்தில் இவையெல்லாம் நிறுத்திட வேண்டும். மனதில் நிறுத்திட வேண்டும். மனிதன் மனதில் இதனால் இதற்கும் விடை உண்டு. புரிந்து ஆகவேண்டும். 

62. கடந்த முறை நடைபெற்ற கூட்டு பிரார்த்தனையில் இடைக்காட்டு சித்தர் பெருமான் எந்த ராசியில் பிறந்தோமோ, அவ் ராசியின் அதிபதியான கிரகத்தில் இருந்து தான் வந்திருக்கிறீர்கள் என்ற மாபெரும் ரகசியத்தை உரைத்தார்கள். உதாரணம், தனுசு, மீனம், குருபகவான் அதிபதி. மேலும் பல வாக்குகளில் அனைத்து கிரகத்திலும் மனிதர்கள் வாழ்கின்றார்கள் என்றும் சொல்லியிருக்கிறீர்கள், அப்பா. அப்படியானால் புவியில் பிறந்த ஒரு ஆன்மாவின் பூர்வ ஜென்மங்கள் அனைத்தும் அதே கிரகங்களின் ராசியில் தான் பிறக்குமா? 

நட்சத்திரங்களையும் கிரகங்களையும் கடந்தால்தான் இறைவன் எனும் காந்தத்தில் ஒட்ட முடியும் என்று சொல்லி இருந்தீர்கள், அப்பா. புவியில் பிறந்த ஆன்மா சித்தர்களின் வாக்குகளை முறையாக பின்பற்றி வந்தால், மீண்டும் அவ் கிரகத்திற்கே சென்றுவிடுமா? அல்லது நேராக காந்தத்தினால் காந்தத்தில் ஒட்டிவிடுமா? படிநிலைகள் எவ்வாறு இருக்கும்?

குருநாதர்: எது என்று புரியாது. முதலில் அங்கு சென்றுதான் நிச்சயம். அடுத்து பின் நிச்சயம் செல்லும். எந்த கிரகத்தில் பிறந்தாரோ, கிரகத்திலிருந்து வந்தோமோ, அந்த கிரகத்தில் போய் மீண்டும் போயிட்டு தான் அப்புறம்தான் அடுத்த நிலைக்கு செல்லும். அதனால்தான் இங்கேயே அனைத்து நிலைகளும் செல்வதற்காகத்தான் சித்தர்கள் பின் நேரடியாக காந்தகத்தை ஒட்டிக்கொள்ள, இறை ஒட்டிக்கொள்ள சுற்றிக் கொண்டிருக்கின்றார்கள். அதனால்தான் வந்தோம். [அதனால அந்த கிரகத்துக்கு போயிட்டு அங்கும் கொஞ்சம் கஷ்டப்படணும். அதனால வேணாம்டா, இங்கேயே பூலோகத்திலேயே கஷ்டப்பட்டு நேரா டைரக்டா இறைவன் கையில போயிடுறான்னு சொல்லிட்டு தான் நாங்க வந்து சித்தர்கள் வந்து சொல்லிக்கிறோம், அப்பான்றாங்க]

63. சரி, மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தின் உள்ளே, வடக்கு கோபுரத்திற்கு அருகே, ஒரு மரத்தடியில் மீனாட்சி அம்மனை நோக்கி மிகப்பெரிய சிலை ஒன்று இருக்கிறது. தெளிவான முகம், மடக்கி வால் தெரியும்படி வால் சித்தர் என்று சொல்கிறார்கள். சிலர் வழிபாடும் செய்கின்றார்கள். ஜோதிடர்கள் சில கிரக சேர்க்கைக்கு இங்கு அனுப்புவதை பார்க்கவும் முடிகிறது. அவ் சித்தரைப் பற்றின உண்மை நிலையை அறிய வேண்டுகிறேன்.

குருநாதர்: பல கோடி ஞானிகள் எது என்று அறிய, அன்பின் மீனாட்சி தாயின் அன்பில் நுழைந்திருந்தார்கள். இதனால் பின் நிச்சயம் காசி தண்ணீர் கூட தேவி எது என்று புரிய, நிச்சயம் எனக்காக வருகின்றீர்களா? எனக்காக உயிரை விடுகின்றீர்களா? என்றெல்லாம் நிச்சயம் தன்னை கூட கோபித்துக் கொண்டு அப்படியே நிச்சயம் தன்னில் அறிந்து கொடுப்பேன். இங்கு மீனாட்சி அழகாக இதேபோல் நிச்சயம் அனைவரும் நிச்சயம் தாயே, உங்களுக்காக பின் நாங்கள் இருக்கின்றோம். இதனால் என்ன வேணுமானாலும் செய்வோம். எங்கள் உடம்பை எல்லாம் கீழே வைக்கின்றோம். அதன் மேல் நீ நன்றாக இரு. ஒருவருக்கெல்லாம் ஆசைகள் கொடு என்று சொன்னால் எதை என்று புரிந்து கொள்ள. இதனால் பின் கால்களும் தெரியும், கைகளும் தெரியும், தலைகளும் தெரியும். பின் யார் என்ன பின் தெரிந்திருக்கின்றார்கள்?

64. புத்தர், மகாவீரர் அவர்களின் சமகாலத்தில் வாழ்ந்தவராக சொல்லப்படும் மற்களி கோசாலர் அவர்களைப் பற்றியும், அவர்கள் நிறுவிய ஆசீவகம் மதத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

குருநாதர்: அனைத்தும் சொல்கின்றேன், அப்பா. இவையெல்லாம் நேரங்கள் ஆகும். இப்பொழுது வேண்டாம். இதெல்லாம் எழுதி வைக்கணும். 

65. மேல்மலையனூர்  அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் அமாவாசை ஊஞ்சல் தாலாட்டின் மகிமைகளும், அங்குள்ள எங்கள் குலதெய்வமான பாவாடை ராயன் ஐயா பற்றின உண்மை வரலாறும், குறிப்புகளும். 

குருநாதர்: அப்பா, நிச்சயம் அங்குதான் இது ரகசியத்தை சொல்வேன். நிச்சயம் பின் அவளுடைய தரிசனமும் ஏது என்று அறிய, இன்னும் என்னென்ன அருள் அளிக்கிறாள் என்பவை எல்லாம் மற்றொரு வாக்கில் நான் அங்கு சென்று தெரியப்படுத்துகின்றேன்.

66. பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த சித்தர்கள், ஞானிகள், சித்தர்களுக்கு நட்சத்திரம் இல்லை என்றாலும் இருக்கிறார்களா, அப்பா? குபேரன் என்றும் சொல்லப்படுகிறது. பூரட்டாதி நட்சத்திரத்தின் கதிர்வீச்சுகள் அதிகம் விழும் ஆலயங்கள், இடங்கள் பற்றி அறிந்து கொள்ள வேண்டுகின்றேன்.

குருநாதர்: அப்பா, இவையும் விஞ்ஞானபூர்வமாகத்தான் நான் விவரிப்பேன்.

67. சிலருக்கு சக்தி வாய்ந்த ஆலயங்களின் சன்னதிகளுக்கு செல்லும் பொழுது உடலில் சில அதிர்வுகளை ஏற்படுகிறது. வயிறு, கண் பகுதிகளில் அல்லது நல்லதா, கெட்டதா?

குருநாதர்: 

அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் பின் கிரகங்களின் பின் நச்சுக்கள். அதாவது இப்படியும் சொல்லலாம். துகள்தான் மனிதனுடைய பின் எவை என்று அறிய. இதனால் பின் அங்கு ஏது என்று கூற, எவ்கிரகத்தின் எதை என்று பொறுத்தே பின் விழுகின்றது. எங்கு என்பதை எல்லாம் நிச்சயம் எவ்வாறு ஒரு கிரகத்தை மாற்றப்பட வேண்டும் என்பதை எல்லாம் நிச்சயம் கிரகங்களை நிச்சயம். பின் எங்கு ஒருவனுக்கு, அதாவது பின், அதாவது பல தோஷங்கள், அவை இவை என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். எங்கு சென்றால், எங்கு எதை என்று அவ் கிரகத்தின் ஈர்ப்பு அதிகமாக இருக்கும் என்பவை எல்லாம் எடுத்துரைக்கின்றேன். ஆனாலும் எதை என்று கூற, பின் இவனுக்கு பின் ஏது என்று அறிய, அவ் கிரகத்தின் தன்மை எவ்வாறு, அதாவது கிரகத்திலிருந்து வந்தானே என்று பின் சொன்னேனே. ஆனாலும் ஆற்றல் அதிகமாக, பின் துகள்கள் அதிகமாக இருக்கின்ற பொழுது, அவ் கிரகம் எதை என்று கூற, பின் ஆற்றல் எங்கு எதை என்று புரிய, பின் படுகின்றதோ, அங்கு சென்றால், இவனுக்கு பின் திடீரென மாற்றமும், திடீர் யோகமும், அதாவது திடீர் அதிர்ஷ்டம் என்றெல்லாம் சொல்வார்கள். அது நடந்திடும், அப்பா. யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். அதனால்தான் பின் நிச்சயம் தன்னில் கூட தர்மம் ஏதுவாக இருந்தாலும், இவன் உச்சிக்கு செல்பவன் எதை என்று புரிய, அதைப்பற்றி நான் எடுத்துரைக்கின்றேன். பொறுத்திருந்தால்.

68. ஜீவராசிகளை பலியிடுவது, அசைவம் அதிகமாக உண்ணும் இடங்களில் பலமாக அழிவுகள் ஏற்படும் என்று சொல்லி இருக்கிறீர்கள், ஐயா. முதல் கட்டமாக, ஆலயங்களில் ஜீவராசிகளை பலியிடுவதை சட்டங்கள் இயற்றி, நல்லோர்கள் யார் மூலமாவது தடுக்கலாமே, ஐயா. நீங்கள் நினைத்தால் முடியாது இல்லையே?

குருநாதர்: நிச்சயம் உண்டு. ஆனால் நிச்சயம் எதை என்று கூற,  அப்பா, எது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது தர்மத்தை காப்பவனே, நிச்சயம் எது என்று அறிய, பின் எவை என்று புரிய. ஆனால் நிச்சயம் தன்னில் கூட, அவனே உட்கொள்கின்ற பொழுது, எப்படி, அப்பா, மற்றவருக்கு சொல்ல முடியும்? நீயே சொல்.

[என்ன சொல்றது தெரியல. இது ஒரு நாட்டை காக்குறவரே, கறி சாப்பிட்டா, டேய், நீ கறி சாப்பிடாதன்னு மனுஷனுக்கு எப்படி சட்டம் இயற்ற முடியும்? அதனால, அப்பா, மெதுவாக நகர்த்துவோம். பொறுத்திரு]

69. அன்னதானம் பற்றி பல வாக்குகள் எடுத்துரைத்திருக்கிறீர்கள், அப்பா. எதிர்பார்ப்பின்றி, சைவ உணவை அனைவரும் அன்னதானம் செய்வது புண்ணியத்தை தரும் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் பல இடங்களில், ஆலயங்களில், பாண்டிமுனி கோயில், அசைவ உணவு அன்னதானமாக வழங்கப்பட்டு வருகின்றது. மக்களின் பசியை போக்குவதால் இது புண்ணியமா? அல்லது அசைவ உணவை வழங்குவதால் இது பாவமா? 

குருநாதர்: இது பற்றி தெளிவு பெற வேண்டியது ஏது என்று முடிந்தால், இவனையும் அங்கு சென்றுட்டு வரச் சொல். பார்ப்போம். ஒரு வருடமோ, இரு வருடமோ, மூவருடமோ, அவ்வளவுதான். அவ்வளவுதான் வாழ்க்கை போய்விடுகின்றது.

70. அப்பா, உண்மையில் காவல் தெய்வங்களான கருப்பசாமி, முனீஸ்வரர், மதுரை வீரன், பாவாடை ராயன் மற்றும் பல தெய்வங்கள் அசைவம், மது, சுருட்டு போன்றவற்றை படையலாக விரும்புகிறார்களா? இவ் வழிபாட்டு முறைகள் சரியா? மக்களிடத்திலே என்னவென்றால், காலகாலமாக இதைத்தானே செய்து வருகின்றோம் என்று நம்பிக்கையாகவும் வைத்திருக்கிறார்கள்.

குருநாதர்: எதை என்று தெளிவு பெற வேண்டியது பின் காலங்கள் எத்தனை என்பதே தெரியாது. எது என்று புரிய, எத்தனை யோகங்கள் என்றே தெரியாது. எத்தனை மணிகளே என்றே தெரியாது. எப்படி, எத்தனை பின் கிரகங்கள் என்றே தெரியாது. எத்தனை நட்சத்திரங்கள் என்றே தெரியாது. ஆனால் பின் சொல்லி வந்துவிட்டார்கள், காலங்கள் காலங்களாக நான் பயன்படுத்துகின்றோம் என்று.

ஒன்றை கேட்கின்றேன். பிறப்பதும் தெரியாது, இறப்பதும் தெரியாது, நடுவில் வாழ்வதும் தெரியாது. ஆனால் இது மட்டும் தெரியுமாம். மனிதன் புசிப்பதற்கு எவ்வளவு ஆசைகள் பார்? 

71. கண்ணப்ப நாயனார் அசைவம் உண்பவராக இருந்தாலும், அவரின் முன் முன்ஜென்ம பயனாகவும், அசாத்திய பக்தியின் காரணமாகவும், ஈசன் அவரை ஆட்கொண்டார். இறைவன் பலதரப்பட்ட வழிகளில் பலரையும் ஆட்கொண்டிருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது. ஆன்மீகத்தில் இருந்தாலும், அசைவம் உண்பவர்கள் இதை உதாரணமாகவே வைத்திருக்கிறார்கள். கண்ணப்பரின் வாழ்க்கையை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும்?

குருநாதர்: அப்பா, பின் ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டார்கள். நிச்சயம் தன்னில் கூட, ஏனென்றால் மனிதன் கர்மா சேர்த்துக்கொள்ள வேண்டும், பாவங்கள் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான். இறைவனுடைய திருவிளையாடல்கள் பல பல. அதனால் சொன்னேன், அறிந்தும் கூட, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, இறைவன் பாவ, அதாவது நிச்சயம் இவ் ஆன்மா பலவிதங்களாக, நிச்சயம் எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, பாவம் செய்திருக்கின்றது. இதனால் இதுவும் ஈசனின் திருவிளையால் தான் பார்ப்போம். இப்படி ஒரு திருவிழா நடத்தி, இதை எப்படி பயன்படுத்திக் கொண்டு, மனிதன் இன்னும் பாவத்தில் விழுகின்றான் என்றெல்லாம், நிச்சயம் இன்னும் இது மட்டும்தான் கண்ணுக்கு தெரிகின்றதா? இன்னும் எத்தனை, எத்தனையோ ஞானிகள் வாழ்ந்தார்களே. அவர்களைப் பற்றி பேசுங்கள். பின்பு பார்ப்போம்.

72. புதிது புதிதாக தோஷங்களை எல்லாம் எடுத்து வருகின்றார்கள் ஜோதிடர்கள். பலருக்கும் இதனால் குழப்பங்களே அதிகரிக்கின்றது. கேந்திராதிபத்திய தோஷம், உபய லக்னமாக......... 

குருநாதர்: நிச்சயம் ஒன்றை சொல்கின்றேன். பின் இதற்கெல்லாம் தீர்வு, அடுத்தடுத்த வாக்கில் சொல்கின்றேன். நிச்சயம் தன்னில் கூட, எவை இருந்தாலும், தர்மம் காத்திட வேண்டும். அவ்வளவுதான். தர்மம் காத்திட்டால், எவ்வ தோஷமும் கிடையாது. எதை என்று புரிய, தர்மம் காத்திடுவதால்.

73. அன்னை தந்தை அவர்களுக்கு அநேக கோடி வணக்கங்கள். தந்தையே, வேல்மாறல் பாராயணம், அன்னை பாலா திருபுரசுந்தரி மூல மந்திரம், குரு முகமாக உபதேசம் பெற்று, ஜெபித்தால்தான் பலன் என்கிறார்கள். வழிகாட்ட வேண்டும்.

குருநாதர்: எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, இதை சொல்லிட்டு வந்தாலே, நிச்சயம் தன்னில் கூட, இருதயம் பலமாகும். இதனால் பின் நல்விதமாகவே, எதை என்று புரிய, இருதயத்தில் இறைவன் அமருவான். இதனால் பின் நிச்சயம், பின் எவை என்று கூற, அவன் இருதயமே குருவாகும். நன்மைகள் ஏற்படும், அப்பா.

74. ஆன்மீக முன்னேற்றத்திற்கும், சத்சங்கத்தில் கலந்து கொள்வதற்கும், எங்களைப் போன்ற குடும்பப் பெண்களுக்கு கணவனும், மற்றவர்களும் மிகவும் தடையாக இருக்கிறார்கள். என்ன செய்வது, தந்தையே? எங்களால் மீறி வர முடியவில்லை. தங்களின் கருணையும், அன்பும், வழிகாட்டுதலும் என்னைப் போன்ற பெண்களுக்கு மிகவும் பேருதுவியாக இருக்கும். தந்தையே, என்ன செய்ய வேண்டும் என்று வழிகாட்டுங்கள், தந்தையே. 

குருநாதர்: அனைவருக்கும் எவை என்று புரிய, கர்மத்தில் சிக்கியுள்ளான். அவ்வளவுதான். நிச்சயம் தன்னில் ஏது என்று கூற, பின் இவள் புண்ணியம் என்றால், அவன் பாவம். அவன் புண்ணியம் என்றால், இவள் பாவம். [அதனாலதான் இவங்க எதிர்பார்க்கிற மாதிரி இந்த கூட்டு பிரார்த்தனைக்கு எதுக்கும் வர முடியல. தடங்கல் இருக்கு. என்னங்க, ஐயா, கணவன்ல இருந்து பாவம் நிறைய இருக்கு. ரெண்டு பேர்ல யாரோ ஒரு ஆளுக்கு பாவம் அதிகமா இருக்கிறதுனால, கூட்டு பிரார்த்தனையோ, அந்த மாதிரி விஷயங்களுக்கு போக முடியலைங்க.]

குருநாதர்: அதனால்தான், அப்பனே, எது என்று புரிய, அன்றைய காலத்தில், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எப்படி என்று பின் நிச்சயம், பின் அதாவது மனங்கள் செய்கின்ற பொழுது, இவன் தன்னை ஓடி ஓடிச் சென்று பார்ப்பார்கள். நிச்சயம் தன்னில் கூட, அப்படி இல்லையே. இப்பொழுது, அப்பா, ஆசைகள், ஆசைகள், ஆசைகள், ஆசைகள்.

75. பாலா மந்திரம் என்பது ஐம் கிளீம் சௌ. பாலா மந்திரத்திற்கு சாபம் உள்ளது என்று சொல்கிறார்கள். எல்லோரும் குருவிடம் சென்றுதான் இதை சொல்ல வேண்டுமா? 

குருநாதர்: எதை என்று புரிய, பின் நிச்சயம், அதாவது குரு என்பவர் யார்? முதலில் குரு என்பவர் யார்? முதலில் ஒன்றை சொல்கின்றேன். பின் குரு என்பவர் எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, அழகாக மனதை தூய்மையாக வைத்துக்கொண்டு, நிச்சயம் தன்னில் கூட, அழகாகவே, பின் இறைவன் மனதில் இறங்குவான். அவன்தான் குரு. நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறாக, எவ்வாறப்பா, எதை என்று கூற, பின் அதாவது ஒன்றும் தெரியாத குழந்தை, அப்பா, அவனைப் போல் சாபம் என்று சொல்கின்றார்களே. நிச்சயம் பின் யார் சாபம் என்று சொன்னார்களோ, அவர் வாழ்க்கையை பார்க்கச் சொல். எப்படி இருக்கின்றது என்பது, இவையெல்லாம் ஒரு முட்டாள்தான்.

76. வித்யா உபதேசம் பெற, என்ன தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்?

குருநாதர்: எதை, எவை என்று புரிய, முதலில் தர்மத்தை பேணி, பின் காத்திட வேண்டும். அனைவருக்கும் தர்மத்தை பின் செப்பி வரவேண்டும். அது மட்டுமில்லாமல், அனைவருக்கும், நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது இயலாத குழந்தைகளுக்கெல்லாம், நிச்சயம் தன்னில் கூட, பின் எழுதுகோல் கூட, பின் நிச்சயம் தர வேண்டும். அது மட்டுமில்லாமல், இப்பொழுது சொன்னேனே, நிச்சயம் பின் அதாவது கணவன் மனைவி இருவருக்கும் சண்டை இடுகின்றதே. இவர்களுக்குள், பின் நிச்சயம் உள்ளே தூண்டு, நிச்சயம் நல்லது செப்ப வேண்டும் என்பதை எல்லாம், நிச்சயம் தன்னில் கூட.

77. மனநோய் நீங்குவதற்கும், தூக்கமின்மை பிரச்சனை நீங்குவதற்கும், மருத்துவம் என்ன? 

குருநாதர்: எதை என்று புரிய, அதனால் இருதயத்தில் இறைவனை வைப்பதே சாலச்சிறந்தது.

[இல்லை, ஏற்கனவே மனநோய் வந்தாச்சு. நான் அவர்களுக்கு எப்படி புரிய வைக்கிறது?]

குருநாதர்: அனைவரையும் பின் பாவத்தை, நிச்சயம் தன்னில் கூட, நிச்சயம் எவை என்று கூற, பேசி இருந்ததிலும், பார்த்து இருந்ததிலும், இதனால் மனநோய் ஏற்பட்டு விடுகின்றது. நிறைய கர்மா இருக்கிறது. 

78. நாம் வாங்கும் கேலண்டர், துணி, பை, விபூதி பாக்கெட், பஞ்சாமிருதம், ஊதுபத்தி பாக்கெட் போன்றவற்றில் சாமி படம் அச்சிடப்படுகிறது. இவற்றை பல சமயம் தூக்கிப் போடும்படி நேருகிறது. இதனால் தோஷம் ஏற்படுமா? மேலும், வீட்டில் பழைய சாமி படம் பேப்பர் இத்துப் போய்விடுகிறது. அதை மரியாதையாக ஆற்றிலோ, குளத்திலோ எப்படி போடுவது? 

குருநாதர்: அப்பா, எது என்று கூற, இறைவன் எங்கிருந்தாலும், இறைவன் இறைவன் தான், அப்பா. ஆனால் இவையெல்லாம் நிச்சயம் செய்யக்கூடாது என்பேன். ஆனால் பின் மனிதன், பின் நிச்சயம் முட்டாள்தனமாக செய்து கொண்டிருக்கின்றான். இதை அப்பனே, நிச்சயம் பாவம், பாவம்தான், அப்பனே, ஒன்றை சொல்கின்றேன். மனிதனின் பின் நிச்சயம், பின் முட்டாள்தனம் எவை என்று புரிய, அதாவது அண்ணாமலையில், நிச்சயம் தன்னில் கூட இருக்கும். அழகாக வணங்குவான். போய் சென்று ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட, அழகாக நீ சொன்னாயே, நிச்சயம் அதை எழுதி வைத்திருந்தால், தூரே எறிந்து விடுவான். அப்பொழுது பக்தி எப்படி இருக்கின்றது என்று இருக்கிறது. நீங்களே பாருங்கள், தர்மம் எப்படி இருக்கின்றது என்று 

[இந்த உலகத்தில் என்ன சொல்றது தெரியுங்களா, ஐயா? நேர்ல அண்ணாமலையை பார்த்தா, நேர்ல போய் வணங்குறான்றாரு. அதே அண்ணாமலை, இது மாதிரி இங்க வரைஞ்சு வச்சா, தூக்கி எரியுறான்ப்பா. அதே அண்ணாமலை எடுத்து வைக்கலன்னா, இது என்ன வரலையேப்பா? அப்ப, பக்தி எங்கப்பா இருக்குதான்னு கேக்குறாரு.]

79. ஐயா? நீங்கள் எப்பொழுதும் சொல்லுவீர்கள், இறைவன் மேல் உண்மையான அன்பு செலுத்தணும்னு, இறைவன் கிட்ட அன்பா பேசணும், பாசம் வைக்கணும்னு. நான் இறைவனை முழுமையா நம்புறேன். அவர் மேல பக்தி இருக்கு, அன்பு இருக்கு. ஆனா என் அம்மா மேலேயோ, பிள்ளைகள் மேலேயோ வைக்கிற பாசம், அன்பு மாதிரி, இறைவன் மேல செலுத்த முடியவில்லை. காரணம், இன்னார்தான் என் அம்மா, இன்னார்தான் என் பிள்ளைன்னு தெரியுது. ஆனா இயல்பா பாசம் வந்துடுறது. 

குருநாதர்: ஆனா எதை என்று புரிய, நிச்சயம் தண்ணீர் கூட அறிந்து கூட, பின் ஆனாலும் இறைவிடத்தில் பாசம் வை என்று பின் எழுதி வைத்திருக்கும் பொழுது, மற்றவர் மீது பாசத்தை வைத்திருக்கின்றான். அங்குதான் அழிவு. 

ஆனால் இறைவன் என் வாழ்க்கையிலே எல்லா முக்கியமான கட்டத்திலேயும் என்னை காப்பாத்தி, இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்காரு. அவரை முழுமையா நம்புறேன். 

குருநாதர்: பக்தி, அப்பா, இப்பொழுது சொன்னானே, ஏது என்று புரிய, அப்பனே, எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, அதாவது நிச்சயம் கடமை செய்து கொண்டு, நிச்சயம் வந்தாலே, இறைவன் காப்பாற்றுபவன். அவ்வளவுதான், அப்பா. நிச்சயம் தன்னில் கூட!

ஆனால் இன்னார் அல்லது இதுதான் இறைவன் என்று எனக்கு தெரியாததால, இந்த இயல்பான பாசம் எனக்கு வரமாட்டேங்குது. 

குருநாதர்: அப்பா, எவை என்று அறிய, பின் உன் பிள்ளை கூட, எவை என்று அறிய, எதை என்று கூற, பின் பிள்ளை கூட, இறைவன் என்று நினைத்துக் கொண்டால், அப்பா, மனிதன் எண்ணுவதுதான் இங்கு எதை என்று புரிய. அப்பா, இறைவனை எப்படியாவது வணங்கலாமே. ஏன், மனைவி கூட, இறைவன், இறைவி என்று வணங்கக்கூடாது. அப்பா, மனிதன் மிகப்பெரிய அறிவாளி என்று நினைத்துக் கொண்டிருக்கின்றான். அவன் பின் நினைப்பதெல்லாம், நிச்சயம் பாவமே. பின் அறிந்து கூட, இவ்வாறாக மனைவி அனைத்தும் செய்கின்றாள் அல்லவா? நிச்சயம் அவள் காலிலே வணங்கச் சொல். எதை என்று கூற, அவ்வாறு என்று எதை என்று புரிய. 

ஆனா கொஞ்ச காலம் என் வாழ்க்கையிலே அந்த இயல்பான பாசம் இறைவன் மேல் எனக்கு வந்தது. அப்போ, அவரோடு ரொம்ப அன்பா கலந்து இருந்தேன். ஆனா அது கொஞ்ச காலம் தான் நீடிச்சது. மறுபடியும் அதை யோசிச்சா, அது ஒரு சொல்ல முடியாத, இனம் புரியாத பாசமான அனுபவமாக. 

குருநாதர்: எவை என்று புரிய, இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன். இறைவன் எவை என்று புரிய, என் மீது பாசத்தை வை என்று பின் நிச்சயம், பின் வந்து நேரில் கேட்டாலும், வைத்து விடுவார்களா? என்ன, நிச்சயம் நேரடியாக இருக்கும் மனிதனிடத்திலே எனக்கு உதவி செய் என்றால், நிச்சயம் உதவி செய்வதில்லை. இறைவன் பெண் பாசத்தை காட்டு என்று, நிச்சயம் இவையெல்லாம் மனிதன் நடிப்பு. அவ்வளவுதான். 

தவிர, அது மறுபடியும் வரல. ஆனா அதுக்கு மாறா, என்னுடைய எல்லா நம்பிக்கைகளையும், கோட்பாடுகளையும், புரிதல்களையும் புரட்டிப் போடுகிற மாதிரி, எல்லா நிகழ்வும் நடக்குது. 

குருநாதர்: நிச்சயம், பின் எவை என்று கூற, பின் அதாவது ஒன்றை சொல்கின்றேன். மனிதனுக்காக, இறைவன் நிச்சயம் கீழே இறங்க வேண்டிய அவசியம் இல்லை. இறைவன் எப்படி வேண்டுமானாலும் செய்வான். எதை என்று அறிய, எதற்கும் தயாராக இருக்க வேண்டும். அதாவது, பிறக்கின்றான். எதை, ஏது என்று புரிய, பின் எவ்வாறு நடுவில் என்ன நடக்கப் போகின்றது என்பதே தெரியவில்லை. எதை என்று கூற, அதனால் உடம்பும், உயிரும், இறைவனுக்கு சொந்தம். எப்பொழுது வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் செய்யலாம். 

இப்ப, நான் வச்சது உண்மையான அன்பா, உண்மையான பாசமா, உண்மையான பக்தியா இல்ல, எல்லாம் பொய்யான்னு என்னையே எனக்கு கேள்வி கேட்க தோன்றுகிறது. 

குருநாதர்: இது உண்மையும் பொய்யும், பொய்யும் உண்மையும். உண்மையானால், எது பொய்? பொய் என்பது மறுத்துப் போனால், மறுத்து பின் மருந்து போடுவதா சிறப்பு? அப்பா, எதை எங்கிருந்து வந்தது என்று அங்கே கொண்டு சேர்த்தாலும், அப்பா, ஏது என்று இங்கு உணர ஆளில்லையே. வந்ததும், எதை பின் எதிலிருந்து வந்ததும், எங்கு வந்தாள் என்பவளும் கூட, எங்கு வந்தவன் என்பதும் கூட தெரியவில்லை. எங்கு போனார்கள் என்பதும் கூட தெரியவில்லை. இவன் கண்ணுக்கு எங்கு போகின்றார்கள்? அனாதியாக விட்டு விடுகின்றார்கள். ஏது என்று அறியாத அளவிற்கும் கூட, மனிதனின் படைப்பு இல்லை. எங்கு செல்கின்றார்? எதற்காக? மனைவி எதற்காக? புருஷன் எதை என்று? எதற்காக? குழந்தைகள் எவை? ஏது என்று புரிய? மீண்டும், அக்குழந்தை எங்கு செல்கின்றது? எதனால் பாதிக்கப்படுகின்றது? எங்கு பின் இல்லறத்தால் இல்லவன் எங்கு செல்கின்றான்? எதை என்று கூற, எதுவும் தெரியாமல், எதை என்று கூற, இங்கு பக்தி என்பதா? இவை தன் ஏது என்று அறிய, இறைவனிடத்தில் நடிப்பு என்பதா? முழுமையாக பெறவில்லை என்றால், எவ்வாறு? எதை என்று அறிய, இதனால் மனம் இவ்வாறாகவே சென்று கொண்டிருக்கும்.

ஒன்னும் புரியல எனக்கு கூட. எனக்கு புரிஞ்சது. இதுவும் ஒரு மாயை ஒன்னு தோன்றுது. இதுவும் ஒரு ஆணவம்.

குருநாதர்: ஏது என்று புரிய, பிள்ளைகளும் ஒரு மாயையே, மனைவியும் ஒரு மாயையே. அப்பொழுது இது தெரிகின்றது. முன்னதாகவே மனிதனுக்கு தெரிகின்றது, அழியக்கூடியது என்று. அழியக்கூடிய இடத்தில் போய் சேருவான் மனிதன். பின்பு, பின் நிச்சயம் இதைப்பற்றி யோசிப்பான். அவ்வளவுதான். அனைத்தும் சுகத்திற்காக. அவ்வளவுதான். முடிந்தது வாழ்க்கை.

இதுவும் ஒரு ஆணவம் உடைய தருணமோன்னு தோணுது. ஒன்னும் சொல்ல தெரியல. இந்த இறைவன் யாருன்னு தெரிஞ்சுகிட்டா, இந்த மனித வாழ்க்கை இவ்வளவு கடினமா இருக்காதேன்னு தோன்றுது. உண்மையான அன்பை அந்த கடவுள் மேல வைக்க முடியும்னு தோணுது. ஆனா அதை தெரிஞ்சுக்கிற தகுதி இந்த அப்பாவிக்கு இல்லை. எங்க அப்பா, நீங்க கொஞ்சம் கருணை காட்டி, இந்த குழப்பம் தீர்த்து, தெளிவு பெற அருள் புரியுங்கள்.

குருநாதர்: அனைத்தும் சொல்லிவிட்டேன். நேரில் வரச் சொல். இன்னும் விளக்குகின்றேன்.

80. அப்பா, காவல் தெய்வங்கள், குல தெய்வங்கள்னு சொல்லப்படுகிற கருப்பசாமி, முனீஸ்வரன், கன்னியம்மன்கள், சுடலை மாடன், பெரியாண்டவர் போன்ற இன்னும் பல காவல் குல தெய்வங்கள் பற்றிய உண்மையான தோற்றம் மற்றும் தல வரலாறு மக்களுக்கு தெரிய வேண்டும், ஐயா.

குருநாதர்: நிச்சயம் சொல்கின்றேன். பொறுத்திருந்தால், அனைத்தும் ஒரே முறையில் சொல்ல முடியாது, அப்பா. அனைத்தும் சொல்கின்றேன். பொறுத்திருக்க வேண்டும். ஏனென்றால் ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றேன், அப்பா.

81. ஐயா, நீங்க ஆதி ஈசன்னு சொல்றது பரம்பொருளையா? ஆதி ஈசன் யார்? பரம்பொருள் பற்றி கூறுங்கள், ஐயா.

குருநாதர்: அப்பா, இதைப்பற்றியும் இன்னும் நேரங்கள் ஆகும். இப்பொழுது சொல்வதற்கு இல்லை, 

82. ஐயா. அகத்தியர், அப்பா, உண்மையாகவே யாருன்னு இந்த எல்லா மக்களுக்கும் தெரிஞ்சுக்கிற நாள் எப்போ வரும், அகத்தியர், அப்பா.

குருநாதர்: வந்து கொண்டே இருக்கின்றது. 

83. இது பற்றின கட்டுரையை அடியேனின் வெப்சைட்டில் வெளியிடலாமா?

குருநாதர்: எதை என்று புரிய, நேரில் வரச் சொல்.

[அதுக்கு முன்னாடியே ட்ரைலர் வந்தாச்சுன்னு நினைக்கிறேன். இல்ல, அவர் இது வந்து கொண்டிருக்கிறதுன்னாரு இல்லையா? அதுக்கு முன்னாடியே ட்ரைலர் ரெடி ஆயிடுச்சுன்னு நினைக்கிறேன். என்னுடைய வெப்சைட்ல போடலாமான்னு கேக்குறார், அப்பா.]

குருநாதர்: எதை என்று புரிய, நேரில் வரச் சொல். [சில விஷயங்கள் ஏது என்று புரிய, நேர்லயே சொல்றாங்க. சில விஷயங்கள் இந்த நேரில் வரச் சொல்ங்கிறது எனக்கு புரியல. எங்க வரணும்?]

குருநாதர்: எதை என்று புரிய, எங்கிருந்தாலும், எவை என்று கூற, பின் இதை நேரில் தான் சில விஷயங்கள் கேட்க வேண்டும். நிச்சயம் தன்னில்  கூட, எதற்காக என்பதெல்லாம் யாம் அறிவோம். இப்பொழுது சொன்னாலும், நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறெல்லாம் பைத்தியம் போல் கேள்வி கேட்கின்றாள் என்று, நிச்சயம் தன்னில் கூட, மனிதன் நினைப்பான். 

84. அப்பா, உச்சிஷ்ட கணபதி உபாசனை பற்றிய புரிதல் கேட்கின்றேன். அதைப்பற்றி முழுமையாக சொல்ல முடியுமா? அதை செய்யக்கூடியதா, செய்யக்கூடாததா? பல குழப்பங்கள் பலரால் நிலவுகிறது.

குருநாதர்: பல வழியில் கூட, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் இவை தன் உபகாசனை செய்கின்றேன், செய்கின்றேன் என்று வாழ்க்கை தொலைத்து நிற்கின்றார்கள், அப்பா. ஆனால் எதில் விளையாடக்கூடாது என்பது எல்லாம், பக்திக்குள் விளையாடக்கூடாது என்பது எல்லாம், மனிதனுக்கு தெரிவதே இல்லை. சொல்கின்றேன், இதைப்பற்றி ரகசியங்கள் இவையெல்லாம், நீ இப்பொழுதெல்லாம் அனைத்தும் கேள்விகள் கேட்டாயே. இவையெல்லாம் பின் அடிப்படை தத்துவத்திலே இருக்கின்றது. அடிப்படை தத்துவமே தெரியாமல், நிச்சயம் அடுத்த பின் எவை என்று எடுத்துச் சொல்வது கடினம். அதனால்தான் அனைத்தும் சொல்லிட்டு, அவனே புரிந்து கொள்வான். நிச்சயம் எவை என்று கூற, பின் மனிதனே புரிந்து கொள்வான். இன்னும் விவரிக்கின்றேன். 

உச்சிஷ்ட கணபதிக்கு அப்படி என்ன ஆபத்து இருக்கு? 

குருநாதர்: அப்பா, எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, அவ்வளவு எளிமையாக ஞானத்தோன் விடமாட்டான், அப்பா. [அவ்வளவு எளிமையா வந்து, உச்சிஷ்ட கணபதி வந்து, வழிபாடு செய்ய முடியாது என்றார்.[

குருநாதர்: வந்து ஞானத்தோன் விட முடியாது என்றார். வந்து ஏது என்று புரிய, எதற்கும் தகுதியானது, எதை என்று உரை, நான் சொல்கின்றேன், விவரிக்கின்றேன், விவரமாக.

85. அப்பா, ஆஸ்ட்ரோ டிராவல், அதாவது பல இடங்களுக்கு சென்று வருவார் யார் என்பது என்ன? அது நல்லதா, கெட்டதா? தூக்கத்தில் வேறு பரிமாணத்தில் வாழ்வது போன்ற அனுபவங்கள்.

குருநாதர்: நிச்சயம், இப்பொழுது தேவையில்லை. இதை, அதாவது ஒன்றை சொல்கின்றேன். இவை போன்ற பின் செப்பினாலும், புரிந்து கொள்ள முடியாது. யான் யான் எதை என்று ஒரு செப்பினேன் என்பதெல்லாம், நிச்சயம் மீண்டும் குழப்புவான். அதனால், பின் குழப்பவாதியே இதை சொன்னாலும், இப்பொழுது வேண்டாம். இதை தன் விஞ்ஞான முறையில் அனைத்தும் எடுத்து விடுகின்றேன். வரும் காலத்தில், அப்பொழுது புரியும்.

இல்லை, காலையில் எழுந்தால் சோர்வாக உள்ளது. அதை தவிர்க்க வேண்டுமா? வழி என்ன? இதெல்லாம் ஏன் நடக்கிறது? அல்லது இதெல்லாம் கேட்கிறேன்.

குருநாதர்: பல பல கீரை வகைகளை எடுத்துரைக்க, எதை என்று புரிய, அனைத்திற்கும் ஒரு திறன் உண்டு. அதை எடுக்கச் சொல். [முதலில் பல கீரை வகைகள் எல்லாம் எடுக்க சொல்றார்.] 

86. ஈசன் திருவடி போற்றி, அகத்தீசர் திருவடி போற்றி, குருவே, உங்கள் பாதம் பணிகின்றேன். அனைத்து உயிர்களும் நன்றாக இருக்கட்டும். மேலை நாட்டோன் போர் என்ற கொடூர ஆயுதத்தைக் கொண்டு, மனித இனத்தை முற்றிலும் நசுக்குகின்றனர். மதம், சாதி, மொழி, இனம் என்ற பிரிவினைகளால் மக்கள் அல்லல் படுகின்றனர். மது என்ற அரக்கனும் தன் வேலையை காட்டுகின்றான். மனிதர்கள் ஆட்சி என்ற மாய ஆட்சி நீங்கட்டும். கலியுக ஆட்சி நீட்டப்படாமல், சத்திய யுக முருகனின் ஆட்சி அதி அற்புதமாக மலர, உடனே, உடனே, தாங்களும் சித்தர் பெருமக்களும் கருணை காட்டுங்கள், ஐயா! பாரெங்கும் பரமநாட்சி நடைபெறுகின்றது. ஆனால் இந்த புவிதனில் ஏதோ ரகசிய குழுக்கள் இந்த புவியை கட்டுப்படுத்துவதாக கூறுகின்றார்கள். 

குருநாதர்: நிச்சயம் எவை என்று புரிய, அப்பனே, அதனால்தான் நிச்சயம் தண்ணீர் கூட, அப்பனே, எடுத்துரைத்துக் கொண்டே வருகின்றேன். விஞ்ஞானபூர்வமாக, அடுத்தடுத்து விவரமானதெல்லாம் சொல்வேன். தெரிந்து கொள்ளலாம். அனைவரும் பின் பக்திக்குள் வந்துவிட்டால், ஏனென்றால் பின் அறிவில் வரியாகவே எதை என்று வருக. பின் அனைவரையும் நிச்சயம் மனதை மாற்றி, பின் கெடும்படி செய்கின்றார்கள். மனிதனே, இதனால் அதற்குள்ளேவே இன்னும் மனிதன் பக்திக்குள் நுழைய வேண்டும். இதனால் சொல்கின்றேன், நாங்களும் எடுத்துச் செல்வோம். விஞ்ஞானபூர்வமாக, மனிதனுக்கு மிஞ்சியது.

87. அன்பு தந்தையே, தாங்கள் இந்த ஜீவ அருள் ஓலை சூடி மூலம் வாக்குகள் வழங்கும் முறைக்கும், சில அருளாளர்கள் மூலம் வழங்கப்படும் தெய்வ வாக்களும் உள்ள வேறுபாடுகள் என்ன?

குருநாதர்: ஏது என்று புரிய, பின் போகப்போக சித்தர்கள் யார் என்று தெரிந்து கொள்வார்கள். எதை என்று புரிய, சித்தர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதெல்லாம் தெரிந்து கொள்வார்கள். அப்பொழுது நிச்சயம் புரியும்.

88. ஒவ்வொரு கிராமங்களிலும் ஏதாவது ஒரு இடம் மக்கள் கூடும் இடத்தில் பெரிய அரச மரமும், வேப்ப மரமும் வளர்க்கப்பட்டு, அங்கே நாகதேவதைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வணங்கப்படுகிறது அல்லவா? இதன் அறிவியல் மற்றும் ஆன்மீக அடிப்படை என்ன?

குருநாதர்: எவை என்று கூட சொல்கின்றேன். இதற்கு பின் பெரிய எவை என்று நேரங்கள் ஆகும். சொல்கின்றேன், [ஐயா. பெரிய இடத்துல ஒரு கோயில்ல சொல்லுவாருன்னு நினைக்கிறேன். இதெல்லாம் எங்கயாவது சொல்லுவாருங்க, ஐயா. ஆமாங்க, ஐயா.]

89. பூமியின் சுழற்சி வேகம் குறைந்துள்ள விவரமும், சந்திரன் பூமியை விட்டு விலகியதால், அதன் இயல்பான சுழற்சி வேகம், பூமியின் சுழற்சி வேகத்திற்கு இணையாக இல்லாத நிலை மாறுபட்டு இருப்பதால், மனிதர்கள் பல மனக்குழப்பத்திற்கு உள்ளாகும் நிலை பற்றி பலமுறை கூறியிருந்தீர்கள். இது 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த அசாதாரண கோள்நிலை மாற்றம் ஆரம்பித்து விட்டதாகவும் உரைத்திருந்தீர்கள். இதை திருக்கணித முறைப்படியோ அல்லது வேறு வானியல் கூர்நோக்கு ஆய்வுகள் முறையில் ஏன் அறிய முடியவில்லை?

குருநாதர்: எதை என்று கூட, பின் அவ்வளவுதான். [மனிதனுக்கு மூளை அவ்வளவுதானா? அவ்வளவு சிம்பிளா? அதுதான் அறிவு. அப்படி அவ்வளவுதான் இருக்குது. மூளை அவ்வளவு. அப்படின்னா என்னது? அவருக்கு அறிய முடியாது. மனித மூளைக்கு அவ்வளவுதான். மூளை ரைட், ரைட். அவ்வளவுதான்.

90. ஐயனே, உலக மக்களுக்கு அடியேன் சேவை செய்ய வேண்டும். ஐயனே, அடியேனை தாங்கள் சேவைக்கு சிறிது காலங்கள் கழித்து அழைத்துக் கொள்கிறேன் என்று கூறினீர்கள்.

குருநாதர்: ஏன்? எது என்று குறை வரச் சொல். எவை என்று கூறப்படும். அறிந்து கூட, பின் அதாவது தர்மத்தை செய்வதற்கு நிச்சயம் பின் கால லாபங்கள் இருக்கக்கூடாது. வரச் சொல் பார்ப்போம். 

91. ஒரு முறை மட்டுமே என்னால் கூட்டு பிரார்த்தனையில் கலந்து கொள்ள முடிந்தது. அதன் பிறகு ஒவ்வொரு முறையும் வர முயற்சிக்கும் பொழுது சொல்ல முடியாத வகையில் ஏதோ தடைகள் உருவாகின்றன. கூட்டு பிரார்த்தனைக்கு வர விரும்பினாலும், வீட்டில் பெரியவர்களின் உடல்நிலை சரியில்லாததால் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. என்னைப்போல் வர விரும்பும் அடியவர்கள் வர முடியாத சூழ்நிலையில் தவிப்பர்களுக்கு வழிகாட்டுங்கள். 

குருநாதர்: எதை என்று புரிய. பின் வழிகாட்டிக் கொண்டே தான் இருக்கின்றேன். இதுதான் வழி செல் என்று. ஆனால் நிச்சயம் அந்த வழியில் யான் செல்ல மாட்டேன் என்பவை எல்லாம் இன்னொரு விஷயம். எதை என்று புரிய. ஆனால் நிச்சயம் பின் மன தைரியத்தோடு நிச்சயம் தன் வெல்லலாம் என்றெல்லாம் அறிந்தும். எதை என்று புரிய. ஆனாலும் சில வகையில் கூட எவ்வாறு என்பதை எல்லாம் நிச்சயம் எதற்காக, எதை என்று புரிய. இன்னும் விவரமாகவும் விவரிக்கின்றேன். சில சில வழிகளில் கூட, பின் சில தீயவை. பின் எவை என்று கூற, பின் சில கர்மாக்கள். அதாவது நிச்சயம் தன்னில் அறிந்து கூட, பின் சில, பின் அதாவது நிச்சயம் தன்னில் அறிந்தும், அறிந்து கூட சில மர்மமான விஷயங்கள் எல்லாம் செய்திருந்தாலும், பின் நல்லதற்கு ஏது என்று அறிய. அது மட்டுமில்லாமல், எதை ஏன் புரிந்து கொள்ள, எதை என்று அறிய. நிச்சயம் பின் நல்லதற்கு, பின் பின் சென்றால், நிச்சயம் தன்னில் ஏது என்று கூற. தீயவைக்கு சென்றால், எதை என்று புரிய. ஆனாலும் இதற்கு ரகசியங்கள் பின் அதிகமாக இருக்கின்றது. இதன் ரகசியம் பின் நிச்சயம் சொல்வேன். பொறுத்திருக்க, 

92. உங்கள் வழிப்படி நடக்க முயற்சிக்கும் பொழுது, வீட்டில் உள்ளவரிடமிருந்து எதிர்ப்பு வருகிறது. அனைவரையும் சமாதானப்படுத்தி, உங்கள் வழியில் நடக்க வழிகாட்டுங்கள்.

குருநாதர்: நிச்சயம் எவை என்று வந்தால், வரட்டும். காத்துக் கொள்கின்றேன். அவ்வளவுதான். எதை என்று புரிய. 

93. கணவரின் சம்மதம் பெறுவது மிக சிரமமாக உள்ளது. எவை என்று புரிய. 

குருநாதர்: பார்த்தாயா? ஆசைகள், அப்பா, இவ்வளவு ஆசைகள். எதை என்று புரிய. இதற்கெல்லாம் யார் பொறுப்பு? நீ கூறு. [இல்ல, உங்க வழியில வரதுக்கு வேண்டி முயற்சி பண்ணா, ஹஸ்பண்டே விடமாட்டேங்குறாரு.]

94. அப்பா, சிறு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை, வன்முறை அதிகரித்து வருகிறது. அவர்களை காத்தருள் புரியுங்கள். 

குருநாதர்: பெண் குழந்தைகளை கொண்டு எவை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட இனிவரும்  காலங்களில் அதிகமாக நடக்கப் போகின்றது. ஏன், எதற்காக என்றெல்லாம் பின் விஞ்ஞானபூர்வமாக விவரிக்கின்றேன். எதையெல்லாம் தடுத்துற வேண்டும். அதனால்தான் பக்தியில் உள்ளவர், நிச்சயம் தன்னில் கூட எப்பொழுதுமே எதை என்று கூறும். பின் ஓங்கி எழுத வேண்டும். அதனால் சொல்கின்றேன். வரும் காலங்களில் இதனால் பக்திமான்கள் தான் வரும் காலத்தில், பின் எப்படியோ இந்த உலகத்தை காத்திட வேண்டும். இதனால் பின் விவரமாக விவரிக்கின்றேன்.

95. இந்த போர் சூழல் விரைவில் முடிவுக்கு வரவேண்டும்!

குருநாதர்: அப்பாவி மக்கள் எவை என்று புரிய. எப்படி, எப்படியோ ஆகி இருக்க வேண்டும். ஆனாலும் தடுத்து நிறுத்தி இருக்கின்றோம். இப்பொழுது சரி.

96. ஐயா. ஐயும் கிலியும் சவ்வும் என்கிற பால மந்திரத்திற்கு சாபம் உள்ளது. அதின் குருவின் முகாந்திரமாக மட்டும்தான்.

குருநாதர்: எதை எவை என்று தன்னில் கூட உண்மையாக, பின் அன்பு இறைவிடத்தில் சொல்லி, நீ எதை சொன்னாலும் சாபமே இல்லை.

97. சில பல சமயங்களில் எனது சிந்தனையும் செயலும் தடுமாற்றம் காண்கின்றன. அக மற்றும் புற உலகப் பற்றுக்களில் விருப்பமும் செயலாற்ற தயக்கமும் ஏற்படுகிறது. புற செயல்கள் மீதான தயக்கம், அகசெயலுக்கும் அகசெயல் மீதான தயக்கம், புற செயலுக்கும் உந்தி செலுத்துகிறது. இது ஒரு குழப்ப நிலை உருவாக்கி, செயல்படாத சோம்பல் நிலைக்கு இட்டுச் செல்கிறது. இதனை எங்கனம் வெல்வது?

குருநாதர்: நிச்சயம் சோம்பல். எது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட ஒரு 108 பின் சிவாலங்களுக்கு செல்லச் சொல். பின் உரைக்கின்றேன்.

98. எனது பிறப்பின் நோக்கம் அறிந்து, அதை நோக்கி பயணப்பட அருள வேண்டுகிறேன்.

குருநாதர்:நிச்சயம் பின் சொல்கின்றேன்.

பிறப்பின் நோக்கம் எப்போ?

குருநாதர்: ஆனாலும் எதை என்று கூற, ஒரு பிறப்பின் நோக்கத்தை இப்படியா கேள்வி கேட்பார்கள்? ஒருவர் வருவாங்க.

99. ஆன்ம பயணத்தில் முதலாம் வகுப்பை முடித்தேனோ இல்லையோ அறியேன். இலக்கின்றி பயணமாக, கடினமாக உள்ளது. இலக்கு அறிந்து, தங்களுடன், பயணமாக ஆசி வழங்க வேண்டி பணிகிறேன்.

குருநாதர்: நிச்சயம் எப்பொழுதோ ஆசியில் கொடுத்துவிட்டேன்.

100. ஓம் அகத்தீசாய நமஹ. ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம், சனீஸ்வரர் ஸ்தலம், பொழிச்சலூர் கும்பாபிஷேகம் பணிகள் தடைபட்டு நிற்கின்றன. அவை தொடர்ந்து நடைபெற, அருள் வேண்டும்!

குருநாதர்: யானே முன்னின்று நடத்துகின்றேன்.

101. குருநாதா, அனைவரிடத்திலும் அன்பு செலுத்துங்கள் என்று நீங்கள் கூறுகிறீர்கள். அந்த அறிவுரையை பின்பற்றி, இறைவனிடம், பிராணிகளிடமும், இயற்கையிடமும் அன்பு காட்டும்போது, மனதிற்கு நிம்மதி கிடைக்கின்றது. ஆனால் மனிதர்களிடம் அன்பு செலுத்தும் போது, பல நேரங்களில் அவர்களால் மனதில் வேதனை மட்டுமே மிஞ்சுகிறது. நல்லது நினைத்து செய்கிறோம் என்றாலும்,

குருநாதர்: எதை என்று புரிய. அன்பே தெய்வம் என்று சொல்லிவிட்டார்கள். இதனால் பின் அன்பு யாரிடத்தில்? நிச்சயம் பின் எவை என்று கூற, பின் தெய்வம் இடத்தில் பின் காட்டினால் தான் வெற்றி. அது மற்றவர்களில் காட்டினால் தோல்வி. அவ்வளவுதான் வாழ்க்கை. 

அது சில சமயம் பொல்லாப்பிற்கு காரணமாகி விடுகிறது. இதனால் மனிதர்களிடமிருந்து விலகி இருப்பதே நலம் என்று எண்ண தோன்றுகிறது. இது சரிதானா?

குருநாதர்: இப்பொழுது என்ன சொன்னேன்? அதுதான் அன்பு. அன்பே தெய்வம். அந்த அன்பு தெய்வத்தில் எடுத்துக்கொண்டால் வெற்றி.

102.  நீங்க நல்லா இருக்கீங்களா, ஐயா? சித்தர்கள் அனைவரும் நலமாக இருக்கிறார்களா? இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உலகங்களிலும் உள்ள அனைத்து உயிர்களும் நலன் பெற்று வாழ வேண்டும் என மனம் விழைகிறது. யாம் பெற்ற இன்பம் பெருக, வையகம் என்பார்கள். யாம் பெறாத இன்பங்களையும் பெற்று, தழைத்தோங்க, வையகம் என மனமானது வாழ்த்துகின்றது. இச்சிந்தனை எமக்குள் இறைவன் அருளினாலும், என் மீதினில் அத்தனை பொதுநலம் அனைத்து நேரங்களிலும் இல்லை. ஆசைகள், சுயநலம், பொறாமை போன்ற பல கழிவுகள் வெளிவருகின்றன. இதனால் நான் வேண்டுவது யாதெனில், மனதினை தூய்மையாக்குவது எப்படி?

குருநாதர்: எதை எவை என்று புரிய யானே ஆக்குகின்றேன். ஆனால் மனிதனால் முடியாது. இவ்வளவு இறங்கி வந்து கேட்டுவிட்டான்.

103. நல்மனதினை களங்க, களங்கப்படாமல் காப்பது எப்படி? பின் இவ்வுலகத்தில் முடியாத காரியம் எண்ணத்தினை பவித்திரமாக வைத்துக் கொள்வது எப்படி?

குருநாதர்: நிச்சயம் முடியாது. எதை எவை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட அவற்றுக்கெல்லாம். நிச்சயம் தன்னில் கூட. அதாவது எவ்வாறெல்லாம்? நிச்சயம் எதை என்று புரிய. பின் மனிதன் எவ்வாறெல்லாம் இறைவன் ஆக்குகின்றான்? நிச்சயம் பின் உலகத்தில் பிறக்க வைத்து, நிச்சயம் பின் எவை என்று கூற. இதனால் ஒரே முறையில், நிச்சயம் ஒரே தடவில் இவையெல்லாம் செய்ய முடியாது. பின் நிச்சயம் அதாவது நாட்கள் ஆகும். பின் அதாவது எங்கள் வழியில் வந்தால் செய்வோம்.

104. மனமானது ஏன், எப்படி ஒரே நேரத்தில் பல கூறுகளாக பிரிந்து செயல்படுகின்றது? சிதறிய மனத்தினை இறைவன் மீது ஒருநிலைப்படுத்தி தியானிப்பது எப்படி?

குருநாதர்: நிச்சயம் தன்னில் கூட. இவையும் விஞ்ஞானபூர்வமாக விரைவில் தெரிவிக்கிறேன்! பழையதெல்லாம் சொன்னால், மனிதன் இப்பொழுது புது புதிய விதத்தில் மாறிவிட்டான். ஆனால் அதேபோல், மனிதன் எப்படி போகின்றானோ, அதேபோல் சென்று அவனை வென்று விடலாம். கர்மத்தை அவனிடத்தில் கர்மத்தை வென்று விடலாம். அப்பொழுது தூய்மையாகி விடுவான். இதுபோலத்தான் சித்தர்கள் முடிவெடுத்திருக்கின்றனர். வரும் காலத்தில், 

105. ஐயா, உலகமே மாயை காணும் அனைத்தும் மாயை என்கிறார்கள். உண்மையில் மாயை என்றால் என்ன? அது எப்படி செயல்படுகிறது? ஏன் அனைவரும் மாயையினால் ஆட்கொள்ளப்படுகிறார்கள்? எனில், மாயையினால் ஆட்கொள்ளப்படுவதின் முக்கியத்துவம் என்ன? 

குருநாதர்: எவை என்று அறிய ஒன்றைத்தான் சொல்கின்றேன். மாயை என்பது மாயையின் பொருள் ஆசை. அவ்வளவுதான். இதை சொல்லிவிட்டார்கள் பெரியவர்கள். பின் நிச்சயம் ஆசை வைத்தால் முடிந்தது வாழ்க்கை என்று. மாயையின் மற்றொரு பொருள் ஆசை.

106. ஐயா, மனம் தான் எளிதில் ஒடுங்குவதில்லை. அமர்ந்து ஆசனங்களையாவது பழகுவோம் என்றால், கால் மரத்துப் போகின்றது. அமர்ந்து ஆசனம் பழகவோ கூட இயல்வதில்லை. அப்படி மரத்துப் போகாமல், மெல்ல மெல்ல தியான நிலைமை அடைய.... எதை என்று புரிய வேண்டும்.

குருநாதர்: அதாவது அறிந்தும் புரிந்தும் கூட, இதையும் கூட, நிச்சயம் 108 சிவாலயங்களுக்கு, நிச்சயம் பின் அடிக்கடி சென்றிட்டு, நிச்சயம் பின் தியானங்களை செய்துட்டு, நிச்சயம் பின் அதிகாலையில் ஓடச் சொல். பின்பு வரச் சொல்.

107. அப்பா, நான் திருப்பரங்குன்றம் முருகவேல் பன்னிரு திருமுறை ஆய்வு மையம் நடத்தவிருக்கும் திருப்புகழ் ஆன்லைன் வகுப்பின் மூலம் திருப்புகழ் கற்கலாமா? தங்களின் அனுமதியும் ஆசிகளும் வேண்டும்,.

குருநாதர்: பின் எப்பொழுதோ எவை என்று ஒரு நல்லது செய்வதற்கு எங்களுடைய ஆசிகள் எப்பொழுதும் உண்டு.

108. திருவண்ணாமலை அருகில் உள்ள தலம் வேங்கிக்கால். இங்குதான் திருவாசகம் கூட்டு வழிபாடு நடக்கின்றது. தங்களின் மேலான உத்தரவினால், அடியேனின் சிந்தையுள் புகுந்து, தாங்கள் ஏற்படுத்திய சந்தேகம் என்னவென்றால், முற்காலத்தில் வேங்கைக்கால் முனிவர், அதாவது புலிப்பாணி சித்தர், வியாக்கிரபாதர் ஆசிரமம் அமைத்து, ஈசனை வழிபட்டு இருந்த இடமாக இருக்குமோ என்பதை தாங்கள் தயை கூர்ந்து பதிலளித்து அருள் புரிய வேண்டும்.

குருநாதர்: எதை என்று இப்பொழுது சொல்வதற்கு இல்லை.

ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு விசித்திரமானதெல்லாம் அவையெல்லாம் சொல்லிவிட்டால், எதை என்று புரிய. இதனால் நிச்சயம் பொறுத்திருக்கச் சொல். நிச்சயம் சொல்வேன். விவரமானதெல்லாம் சொல்வேன். 

109. அப்பா, தீபத்திரிகளை என்ன செய்ய வேண்டும்?

குருநாதர்: சரியாக எவை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட. பின் எது என்று அதனால்தான் தீபத்தை சரியாக ஏற்றுதல் வேண்டும். அதாவது, அத்திரியை ஏது என்று புரிய. பின் நடுவில் நின்றுவிட்டாலும், அவை எடுத்து வந்து காசி தண்ணீர் கூட. பின் விட்டுவிட வேண்டும். சொல்லிவிட்டேன். இதுதான் தர்மம்.

110.கோவிந்த நாமாவளி 108 முறை ஒருவராக சொல்லலாமா? நாராயணன் ஸ்லோகத்திற்கு பதிலாக 

குருநாதர்: எதை என்று அறிய. பின் நிச்சயம், நிச்சயம் 

111. திருத்தலத்திற்கு சென்று பாடல்களை பாடி வழிபடுவது சிறந்ததா? அல்லது வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது சிறந்ததா?

குருநாதர்: நிச்சயம், உடம்பில் அவரவர் ஆற்றலை பொறுத்தது.

112. அப்பா, கோரிக்கை வைத்து, கோரிக்கை வைத்து வழிபடுவது கூட்டு பிரார்த்தனையில் சொல்லப்பட்டது. அப்பா, எங்களது கோரிக்கை இறைவனுக்கு தெரியும் அல்லவா? கோரிக்கை வைத்து தான் தீபத்தில் போட வேண்டுமா?

குருநாதர்: எதை என்று அறிய. அதனால்தான் எப்பொழுதோ இதைப்பற்றி சொல்லியிருக்கின்றேன். அமைதியாக இருந்தாலே, இறைவனை எதனையும், இறைவனை எதனையும் கேட்கக்கூடாது. இதனால் நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய.

113. வயதாக மூட்டு வலி வருகின்றது. மலைக்கோவிலுக்கு செல்வது அல்லது நடப்பதால் எலும்புகள் தேய்மானம் அடையுமா?

குருநாதர்: எவை என்று இவையெல்லாம் ஒரு கேள்வியே கிடையாது. இதெல்லாம் ஒரு கேள்வியே கிடையாது. 

114. குருவே, வேதனையை தாங்க முடியாத அளவுக்காக தவறுகள் செய்தேன் என்று ஒருவர் விசாரிக்க பற்று அறுக்க என்ன செய்ய வேண்டும்? 

குருநாதர்: நிச்சயம், இப்பொழுது வேண்டாம். இதைப்பற்றி இன்னும் ரகசியமாக சொல்கின்றேன். சில நிச்சயம் இடத்தில் கூட அப்பொழுது தெரியும். அனைத்தும் 

115. ஐயனே, அகத்தியப் பெருமானே, பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள சகஸ்ர லிங்கேஸ்வரர் 1008 லிங்கம் உள்ள மண்டபத்தில் சிவபுராண கூட்டு பிரார்த்தனை செய்ய அடியேனின் விருப்பம். தங்களின் உத்தரவு மற்றும் அருளும் ஆசியும் வேண்டும். 

குருநாதர்: நிச்சயம் மாதங்கள் ஆகட்டும்.

116. அகத்தியர் லோபா முத்திரை அன்னை பொற்பாதங்களை போற்றி வணங்குகிறேன். இருதய அடைப்பு (கேல்சிபிகேஷன்), நீங்க மருந்து அருளுங்கள், தந்தையே.

குருநாதர்: ஏது என்று புரிய. அப்பா, இதனை கூட பின் இப்பொழுது யான் சொல்வதற்கு இல்லை. விஞ்ஞானபூர்வமாக விவரித்து, அதற்கு எப்படி, ஏது என்று கூட. அதாவது, படம் பார்த்து பதில் சொல்கின்றேன். அமைதியாக இருக்கச் சொல்.

117. காது இரைச்சல் சத்தம் நீங்க வழி சொல்லுங்கள். 

குருநாதர்:எதை எவை என்று புரிய. நிச்சயம் எவை என்று கூறப்பின் மனதை பின் திசை திருப்பச் சொல். 

118. கடைபிறப்பாக இருந்து எந்த கிரகத்திலிருந்து வந்தோமோ, அங்கே சென்றுவிட்டு மீண்டும் தவறு செய்தால், மறுபடியும் பூமியில் விழுந்து விடுவோமா? 

குருநாதர்: அப்பா, எதை எவை என்று கூட பின் புரிந்து கொள்ள வேண்டும். நீங்களே இதை நீங்களே புரிஞ்சுக்கோங்கப்பான்றாரு. கண்டிப்பா விழுவோங்க. 

119. ஐயா, வெரிகோஸ் வெயின், கால் வலி, இடுப்பு வலி. நீங்க வழி கூறுங்கள். 

குருநாதர்: ஏதேனும் மருந்து எதை என்று அறிய. அதனால்தான் இளமையில் ஆட்டம், பாட்டம். கடைசியில் எவை என்று இப்படி கேட்பது என்ன? நியாயம், கவலை வேண்டாம். சொல்கின்றேன், எப்படி, ஏது என்று புரிய. ஆனாலும், அப்பா, உன்னை பார்த்தே சொல்லிவிட்டேன். இப்பொழுது இவையெல்லாம் நிச்சயம் விஞ்ஞானபூர்வமாக எடுத்து வருகின்றேன். அப்பொழுதுதான் மனிதனுக்கு தெரியும். விஞ்ஞானம் எடுத்து வந்து அங்கே நிச்சயம் எவை செய்ய வேண்டும் என்று படம் பார்த்து எவை என்று சொல்கின்றேன். அதாவது, குழந்தைகளுக்கு போல் எடுக்க வேண்டும். மனிதர்களுக்கு வருங்காலத்தில், அப்பொழுதுதான் உணர்ந்து கொள்வான். பொறுத்திருக்க வேண்டும். 

120. அருள்மிகு அகத்தியர் ஐயன், அன்னை லோபா முத்திரை, தாய் துணை. ஐயா, எங்கள் அம்மாவின் ஆன்மா எங்கு, எப்படி இருக்கிறார்? என் அம்மாவிடம் நான் பேச முடியுங்களா? நன்றிகள், ஐயா. 

குருநாதர்: நிச்சயம் எவை என்று கூறப்பின் ஆன்மா இடத்தில் பேச முடியும். ஆனாலும், தீய சக்திகள் பின் பேச, பின் அதனால்தான் நிச்சயம் அக்குடும்பமே சீரழிந்து விடுகின்றது. ஆனாலும், நிச்சயம் இறை சக்திகள் பேச வேண்டும். எப்பொழுது, எதை, எந்நேரத்தில், எங்கெல்லாம் அவ் ஆன்மா இருக்கும் என்பதெல்லாம் யான் சொல்வேன். அங்கு சென்றால், நிச்சயம் உறங்கினால், நிச்சயம் பேசுவார்கள். இதுதான் பின் இறைவனிடத்திலிருந்து பேசுவது. ஆனாலும், நிச்சயம் சில தீய சக்திகளை வைத்துக்கொண்டு இழுத்து, அவ் ஆன்மாவை நிச்சயம் தன்னில் கூட. பின் வருத்தத்தோடு, நிச்சயம் பின் போக வைத்தால், பின் நிச்சயம் பின் அழிவுகளே வந்து கொண்டிருக்கும். அவனுக்கு, பின் அவளுக்கு சொல்லி விட்டேன். இதுதான். ஆனால், இப்படி அனைவரும் இக்கலியுகத்தில் இப்படித்தான் செல்கின்றார்கள். தீய சக்தியை பயன்படுத்தி, நிச்சயம் வரச் சொல்லி, அவ் ஆன்மா. ஆனால், அவ் ஆன்மா என்னவோ, நிச்சயம் இறைவனை நோக்கி எது என்று புரிய. ஆனாலும், பின் தீய சக்தியால் இழுத்து வந்து, நிச்சயம் நிற்க வைத்து, அவ் ஆன்மாவை நிச்சயம் முழுமறியாமல் செய்து விடுகின்றான். மனிதனை இதற்கு காரணம் என்ன? ஏது என்று அறிய, நிச்சயம் பின் சொல்கின்றேன். பின் ஒவ்வொரு ஆன்மாவும் ஒவ்வொரு இடத்தில் தங்கித்தான் இறைவனை நாடும். மறைந்து, பின் நிச்சயம் சொல்கின்றேன். அங்கு சென்றால், எப்போதும் நிச்சயம் அனைத்தும் மாறும்.

121. முடக்குவாதத்துக்கு தீர்வு சொல்லுங்கள், ஐயா.

குருநாதர்: பின் நிச்சயம் கீரை வகைகள் எடுத்து வர. நன்று, பல வகையிலும் கீரை வகைகளை சாப்பிடுவது முடக்குவாதத்துக்கு நன்று. 

122. குருநாதா அனைத்து கேள்விகளும் அடியவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் விஞ்ஞான ரீதியாக அனைத்து விளக்கங்களுக்கும் பதில் கொடுங்க. 

அப்பனே, எவை என்று புரிய. அப்பனே, இவையெல்லாம் அப்படியே வைத்துக்கொள். அப்பனே, பின் என்னை பார்த்தே. அப்பனே, பின் அனைத்தும் சொல்கின்றேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment