​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 2 June 2026

சித்தன் அருள் - 2217 - அன்புடன் அகத்தியர் - தோரணமலை போகர் வாக்கு!






30/04/26 அன்று போகர் சித்தர் பெருமான் உரைத்த வாக்கு.

வாக்குரைத்த ஸ்தலம்:  முருகன் கோயில் தேரையர் மலையான தோரணமலை.கடையம் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் அடிவாரம் தென்காசி மாவட்டம். 


அழகாக புவி தன்னிலே ஆடுகின்ற ஈசா போற்றி.

 ஈசா தேவியே போற்றி,

போற்றி பணிகின்றேனே குழந்தையை.!!

போற்றி.  செப்புகின்றேனே  போகனவன்.!!!

 அறிந்தும் பல, எண்ணற்ற சித்தர்கள் பல வகையில் அறிந்தும், ஏது என்று தெரியாமல் இருந்தாலும் மனிதனுக்கு பல சேவைகள். 

ஆனாலும் மனிதனின் எண்ணங்களோ!?? பல வழிகளில் கூட எண்ணற்ற. அதை, இதை என்றெல்லாம் பயன்படுத்தி மனிதன் தன்னைத்தானே கெடுத்துக்கொண்டு, மற்றவர்களையும் கெடுத்துக்கொண்டு வாழ்ந்தான். 

வாழ்ந்தும் வருகின்றான்.

இதனால் என்ன பயன்????

யாருக்கு என்ன பிரயோஜனம்?????

என்பதையெல்லாம் இறைவனுக்கே, அதாவது பின் அவப்பெயரை ஏற்படுத்துகின்றான் மனிதன். 


இதனாலே இறைவன் வரும் காலங்களில் அறிந்தும், புரிந்தும் ஒன்றின் மேல் என்ன செய்ய வேண்டும்?? என்பவையெல்லாம்.


 அதனால் மனிதன் என்ன நினைக்கின்றானோ அதை தன் நிச்சயமாக இறைவனும் அறிந்தும், அதாவது உண்மை பொருளை என்னவென்று விளக்க வந்தது. 


அதாவது மனிதன் எண்ணங்களுக்கு ஏற்ப அதனை பின் மாற்றி அமைக்க இறையருளும் பரிபூரணம் உண்டு.


 ஆனாலும் மனிதன் எண்ணங்கள் இன்னும் தாழ்வாக போய்க்கொண்டிருக்கின்றது. 


ஆனாலும் இதைப்பற்றி சொல்கின்றேன் இப்பொழுது.



 அகத்தியன் அனைத்திலும் உயர்ந்தவன்.

 அதனால் அறிந்தும் இவை என்று அறிய அனைவரையும் அறிந்தும் சேவைகள் செய்ய வரவழைத்து வரவழைத்து.


 இதனாலே. 


ஆனாலும் அகத்தியனும் அமர்ந்துவிட்டான்.


 ஆனாலும் ஈசனாரும் பின் அகத்தியனே அமர்ந்துவிட்டால்!!!!.....

 மற்றவர்கள் யார்??? சேவை செய்வார்கள் என்று அகத்தியனை எழுப்ப அகத்தியன் அனைவரையும் எழுப்பிக்கொண்டே எழுப்பிக்கொண்டே.



 இதனால் பின் அகத்தியரின் கருணை மிகப் பெருமை வாய்ந்தது.

 பெருமை. அறிந்தும் பின் மரியாதை கொடுப்பது, நன்றி செலுத்துவது எதை என்று அறிய யாங்களே உற்ற துணையாக அறிந்தும் பெயரைச் சொன்னாலே வருவோம்!!
 சித்தர்கள் யாங்கள் என்று உணர்ந்து.


 உணர்ந்து அறிந்தும் இதனாலே அழகாக பின் தன் சீடர்களை, அதாவது அனைத்து பல வகையான சீடர்களை உருவாக்கியவர் அகத்தியர். 


அதாவது இதை புரிந்து அறிந்தும், அதாவது அனைத்தும் அஷ்டமா சித்துக்கள் எல்லாம் தன் சீடர்களுக்கு கற்றுக் கொடுத்தவர் அகத்தியர். 

கருணை மிகுந்த அகத்தியர். 


அறிந்தும். ஆனாலும் அகத்தியர் ஒரு வார்த்தை புரிந்தும் எதை என்று குருவே அறிந்தும் பணிந்து. அறிந்தும். 


ஆனாலும் குருவே அறிந்தும் அனைவரிடமும் கூட பின் சீடர்களாக இருந்தாலும் பின் நீங்கள் தான் குரு என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார் குருவானவரை.

 அதாவது அகத்தியரே.


 அறிந்தும் இதனால் பல வகைகளில் கூட நன்மைகள் அறிந்தும்.


 இதனால் பின் அனைவருக்கும் பல வகைகளில் கூட பின் அஷ்டமா சித்துகளை சொல்லிக் கொடுத்தவர் குருநாதர் அகத்தியரே.


 இதை தன் ஏற்று பல வகையில் கூட நன்மைகள், அதாவது பின் யான் அமைதி காத்தாலும் நீங்கள் உலக மக்களுக்கு எப்பொழுதும் சேவைகள் செய்து கொண்டிருக்க வேண்டும் என்பதையெல்லாம் இச் சித்திகள் பலவற்றையும் கூட கற்றுக் கொடுத்து கற்றுக் கொடுத்து.


 இதனால் அனைவருமே அறிந்தும் புரிந்தும் சேவைகள் செய்து கொண்டு வந்தனர்.


 சரியாகவே. அனைத்து சீடர்களும் கூட. 


இதை தன் ஏது என்று புரிய, ஆனாலும் மனிதனிடத்தில் பாவங்கள் அதிகமாக அதிகமாகி நோய்கள் வர ஆரம்பிக்க.


 ஆரம்பிக்க!! ஆரம்பிக்க!!! எதை என்று எதை எடுத்து என்று தெரியாமல் வாழ்ந்து. 


ஆனாலும் அறிந்தும் பின் தேரையனே இதை தன் உணர்ந்து. ஆனாலும் வருவோருக்கெல்லாம் அகத்தியனின் பின் சொல்படி அனைத்தும் பின் செய்து கொண்டிருந்தான் தேரையனே.

இதை தன் மாற்று வழியாக வந்தவர்கள் எல்லாம் இதை பயன்படுத்திக் கொண்டு.


 மீண்டும் நோய் தீண்டியது. மீண்டும் அதே நோய் வந்தது.


 ஆனாலும் மனிதன் அதே தவறை தான் செய்து கொண்டிருந்தான்.


 அதாவது பின் அறிந்தும் பின் தேரையன், அதாவது குணமாக்கி பின்பு அனைத்தும் மீண்டும் அவனே தேரையனிடத்தில் வந்தார்கள். 


இதனால் பெரிய பெரிய அரசர்களும் கூட அறிந்தும் கூட இதை தன் பல முனிவர்களும் கூட!!


 ஏன்? என்று பின் தேரையனிடத்தில் பின் சென்றால் அனைத்தும் நலமாகும் என்று. 


ஆனாலும் இதை கற்றுக் கொடுத்ததே அனைவருக்கும் பின் குரு முனி அகத்தியனே. அறிந்தும்.


 இதனால் தான் ஏது என்று அறிய பின் அவருக்கு இணை யாருமில்லை உலகத்தில்.


 அதனால்தான் சொல்ல வந்தோம் சீடர்கள் யாங்கள்.


 ஏது என்று, அதாவது மிகவும் பின் கவனமுடன், அதாவது அறிந்தும், அதாவது சீடர்களுக்கு அனைத்தும் சொல்லிக் கொடுத்தார் குருமுனியே.


 அனைத்தும் சொல்லிக் கொடுத்து பின் அறிந்தும் நீங்கள் செய்யுங்கள் உலக நன்மைக்காக!!!


 யான் பொதிகையில் (பொதிகை மலையில்) அழகாக தங்கி விடுகின்றேன் என்று.

 தங்கி விடுகின்றேன் என்று பின் அகத்திய மாமுனிவரும். 


ஏது என்று அறிய அகத்தியனை எவ்வாறு யான் அழைப்பது????

, இறைவா!!!!! என்று அழைப்பதா,???
 குருவா !? என்று அழைப்பதா???

, எதை என்று புரியாமலும் பின் முனிவா!!!, முனிவரா,!!! தேவரா!!!!!

 எதை என்று அறிய. இன்னும் பல வகையில் கூட இன்னும் கோணல்கள் அறிந்தும். 

இதை தன் நிச்சயம் எவ்வாறு என்பவையெல்லாம் அறிந்தது அகத்தியன் போல் ஒரு இவ்வுலகிற்கு சேவை செய்பவன் எவரும் இல்லை. 


அதனாலே அறிந்தும். இதனால் பின் சீடர்களுக்கு அஷ்டமா சித்துகளை சொல்லிக் கொடுத்து அழகான பொதிகை தன்னிலே அமர்ந்திட்டார்.



 ஆனாலும் அனைத்து வித்தைகளும் ஏது என்று அறிய. புரிய!! இவை என்றும் கூட தேரையனுக்கு இன்னும் ஒரு வரம் அதிகமாகவே கொடுக்கப்பட்டது.



 அதனால் பின் அதிக மிகுந்த பின் அனைத்தும் வளமாக்கி கொடுப்பவன் அறிந்தும், 


அதாவது தன்னுடைய அனைத்து ஏது என்று கூட உற்ற  துணையாக கடைநாளும் எதை என்று புரிய சரியாக பயன்படுத்தி அருகிலே வைத்திருந்தார் அகத்தியரே. 

அறிந்தும் தேரையனை.


 இதனால் பின் பற்று மகனே!! மகனே!!! என்றுதான் தேரையனை அடிக்கடி அழைத்துக் கொண்டிருப்பார் அகத்தியனே.


 ஆனாலும் அறிந்தும் இவ்வாறு பின் பலவற்றையும் கடந்து தேரையனும் அங்கங்கு சென்று பல மக்களைக் கண்டார்.


 ஆனாலும் ஏன் எதற்காக பின் திரும்பவும் திரும்பவும் நோய் வருகின்றது,??? ஏன் உடம்பு பாழாகின்றது???, 

ஏன்?? எதற்காக?? என்றெல்லாம் பார்த்ததில் மக்கள், அதாவது மனிதன் மிக கீழான எண்ணங்களோடே!!!!


 கீழான எண்ணங்களோடு வாழ்ந்து அதனுடனே பின்னிப் பிணைந்து பின் மீண்டும் பின் உடம்பை கெடுத்துக்கொண்டு, அதாவது இறைவன் கொடுத்த உடம்பை!!!! ஏதாவது பின் எதை எதையோ   பயன்படுத்தி கெடுத்து வந்து உடம்பையும் பின் நாசமாக்கி அறிந்தும் பல வகையில் கூட பின் பலவற்றை அவனும் பின் அவனை சுற்றியுள்ள அனைவரையும் நாசமாக்கி எதை என்று புரியாமலே சென்று விடுகின்றான்.



 இதனால் அதாவது பாவங்களும் அதிகரித்து விட்டது!!!


 இதனால் பல அரசர்கள் அறிந்தும், அதாவது ஏது என்று அனைவரும் பின் அதாவது தேரையனிடத்தில் சந்தித்தனர்.


 ஆனாலும் தேரையன் இனிமேல் பின் அதாவது யான் மக்களுக்கு சேவை செய்ய மாட்டேன். 


ஏன்? எதற்காக???

மனிதர்கள் பாவங்கள் அதிகமாக செய்து கொண்டிருக்கின்றார்கள்.


 இதனால் இனிமேல் உதவிகள் செய்யப் போவதில்லை.


 இதனால் அதற்காக பின் குருமுனி  எப்படி பின் பொதிகைமலையில் அமர்ந்து, அதாவது அமர்திட்டாரோ!?.....

 அதேபோல் யானும் இவ் மலையிலே அமருகின்றேன்.


 இதனால் இனிமேல் யாரும் வரத் தேவையில்லை என்று பின் ஒரு குகை தன்னிலே அமர்ந்திட்டார்.


 அக்குகையும் ஏது என்று அறிய இன்னும் பல வகையிலும் சந்தித்து உள்ளது.

 அதையும் கூட இப்பொழுதும் கூட அங்குதான் தவம் இயற்றிக் கொண்டே!!!!! பின் நல்லோர் வருவோருக்கெல்லாம்......நோய்கள் வினைகளை பல வகையிலும் கூட தீர்த்துக் கொண்டே!!! தேரையனும் இதை என்று அறிய.(இப்போதும்)








(தீர்வு தேடிவந்த அரசர்களிடம் தேரையர் கோபம்)

 இதனால் பின் தேரையனும் கோபமுற்று மனிதனுக்கு யான் சேவை செய்யப் போவதில்லை. 


எதை என்று அறிய. ஆனாலும் பின் அதாவது யாங்கள் வந்து பின் இவ்வாறு எப்படி பின் அனைவருக்கும், அதாவது பின் குருநாதன் சொல்லி இருக்கின்றான்,


 அதாவது அனைத்து சித்துக்களையும் கூட பின் என்னிடத்தில் உள்ள அனைத்து சித்துக்களையும் கூட நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் என்று அனைவருக்கும் கொடுத்தார் அல்லவா மாமுனி. 


அறிந்தும் பின் தந்தை அகத்தியர் ஆனவர்,


 அவரே ஏது என்று புரிய இப்பொழுது பின் தனியாக இப்படி அமர்ந்து இருக்கின்றாயே!?? எவ்வாறு நியாயம்!?? என்று. 


பின் இல்லை தந்தைக்கே தெரியும் அனைத்தும்.


 ஏனென்றால் மனிதன் பாவப்பட்டவன். அதாவது எத்தனை?? எத்தனை??? பாவங்கள் செய்து செய்து வந்து வந்து!!

 குணமடைந்து மீண்டும் அத் தவறை தான் செய்கின்றான்.


 இதனால் யான் இப்படி,!!

(முடிவெடுத்து விட்டேன் இனி சேவை செய்யக்கூடாது என்று)


 அதாவது முடிந்தால் நீங்களே  சேவை செய்து கொள்ளுங்கள்.



 இனிமேல் யான் சேவை செய்யப் போவதில்லை.

 அனைவருக்கும் சுலபமாக, அதாவது சிறு சிறு வேலைகள் தான் கொடுத்திருக்கின்றார் குருநாதர். 


ஆனால் பின் எனக்கோ பெரிய வேலையை கொடுத்திருக்கின்றார். 

ஆனால் உணர்ந்து விட்டேன், 


எனக்கு ஒன்றும் தேவையில்லை. 


யான் இங்கே அமர்ந்திருக்கின்றேன் என்று. 



(தேரையர் சித்தர் எடுத்த முடிவினை அடுத்து சித்தர்களும் முனிவர்களும் குருநாதர் இடத்தில் சென்றனர்)

ஆனாலும் எதை என்று அறிய இவ்வாறு அனைவரும் சித்தர்கள் பின், அதாவது பொதிகையை நோக்கி,


 அதாவது மேல்நோக்கி சென்றனர். அறிந்தும்

அதாவது பின் தந்தையே!!! என்று அனைவரும் அகத்தியரை அழைக்க,!!!!


 அறிந்தும் மகனே!!!!
 வாருங்கள் என்று அகத்தியர் அழைக்க!!!
(அனைத்து சித்தர்களையும் மகன்களே என்று வரவேற்றார் பொதிகையில் குருநாதர் அகத்தியர் பெருமான்)


(தேரையர் சித்தர் ஒத்துழைப்பு தராததால் குருநாதரிடம் முறையீடு) 


, அதாவது தேரையன் இப்படி செய்துவிட்டான், அதாவது அறிந்தும் என்னால் சேவை செய்ய முடியாது என்றெல்லாம்  சொல்லிவிட்டான் என்று.


 நீங்கள் வந்தால்தான் அவன் நிச்சயம் கேட்பான் என்றெல்லாம்.


அகத்தியரும்

 அப்படியா? !!

அறிந்தும், அதாவது நீங்களும் ஒருமுறை எடுத்துக் கூறுங்கள்.

 பின், அதாவது பின் குருநாதன் எதை என்று புரிய, அதாவது பின் வாக்கை பின் காப்பாற்று என்று!!



 எதை என்று அறிய. மீண்டும், அதாவது பின், அதாவது தந்தையே!!! நீங்கள் வந்தால்தான் அவரையும் கூட,


 ஏனென்றால் தேரையன் கோபத்தில் பேசுகின்றான். எதை என்று அறிய.


 அதனால் நீங்களே வாருங்கள் என்று சித்தர்கள் அனைவரும் சித்தர்கள் அறிந்தும்.



 ஆனாலும் ஏது என்று புரிய. 

அதனால் அறிந்தும் உண்மை என எதை தெரியாமலும் அறியாமலும் இருந்தாலும் இதை தன் உருவாக்கி பின், அதாவது குருநாதரும் மீண்டும் கைலாயத்துக்கு சென்று!!!!


(இதற்கு விடை காண குருநாதர் அகத்தியப் பெருமான் ஈசனை காண கைலாயம் சென்றார்... சிறிது நேரம் கூட அமர்ந்திருக்க விடுவதில்லை என்று... அதாவது சிறிது ஓய்வாக அமரலாம் என்று நினைத்தால் அதற்கும் விடுவதில்லை என்று குருநாதர் நினைத்துக் கொண்டார்)



 அறிந்தும், அதாவது அறிந்தும் ஈசனிடம் அறிந்தும் ஏது என்று அறிய.


 இவ்வுலகத்தில் இப்படி மக்கள் அறிந்தும், அதாவது நிச்சயம் தன்னில் கூட பின், அதாவது சிறிது நேரம் பின் அமர்கின்றோம் என்றால் நிச்சயம் இப்படி இப்படி ஆகின்றது.


 கைலாய நாதனே!!!! கைலாயம் அறிந்தும் பின், அதாவது கைலாய நாதியே!!!

(ஈசனிடமும் பார்வதி தேவியிடமும் குருநாதர் வேண்டுகோள்)
 


 அறிந்தும் ஏதும் ஏது என்று புரிய.

 இதனால் பின் சீடர்கள் எப்படி இருக்கின்றார்கள் மனிதனை பார்த்து!!!


 அறிந்தும் ஏது என்று கூட நீங்கள் பின் நீங்கள் பின் முடிவெடுத்தால்தான் மக்கள் திருந்துவார்கள் என்று.

ஆனாலும் பின் ஈசனாரும் அறிந்தும் பின் அகத்திய மாமுனிவரே!!!!! தெரியும். 


அறிந்தும் கூட!!


 இதனால் ஏது என்று அறிய மனிதனுக்கு சரியாக அறிவை பயன்படுத்தி!!!!!

 அறிந்தும், அதாவது அறிவை சரியாக. பின் கொடுக்கின்றேன்,


 ஆனால் அவ் அறிவை சரியாக பயன்படுத்துவதில்லை. 


இதனால் அழிவுதான் மிச்சம். 


அதனால் பின், பின், பின் தொடர்ந்து தொடர்ந்து அழகாக அனைத்தும் கொடுத்து அனுப்புகின்றேன்.



 ஆனால் அறிவை வைத்துக்கொண்டு கீழாக போய்க்கொண்டு போய் இன்னும் எதை எதையோ செய்து அவனவனே அழித்துக் கொள்கின்றான்.


 அப்படி ஏது என்று அறிய. 


இதனால் எவை என்று  ஆனாலும் இதை தன் உருவாக்கி,!!!

 அதாவது மாமுனி உங்கள் தந்தையை கூட!! எவ்வாறு இவ்வாறு எல்லாம் நீங்கள் சொன்னால் எப்படி,???

 ஏது என்று அறிய. இதனால் அறிந்து கூட, அதனால் பின், அதாவது புசண்டனும் அங்கே !!!


 (குருநாதர் அகத்திய பெருமான் ஈசனிடம் முறையிட கைலாயம் சென்று இருந்த பொழுது அங்கே காகபுஜண்டர் மகரிஷியும் இருந்தார்)


காகபுஜண்டர் ஈசனிடம்:

எதை என்று அறிய. இவ்வாறு பின் இதை என்று அறிய, இவ்வாறாக இருப்பதற்கு நீ சொல்கின்றாயே, நமசிவாயனே. 


உலகம் ஏது என்று அறிய, அப்படியே கவிழ்த்து விட்டு செல்ல வேண்டியதுதானே.!!!!


 பின் படைத்தல், காத்தல், அழித்தல் எதற்கு???? என்றெல்லாம்.
(காகபுஜண்டர் ஈசனிடம்)



ஈசனார் காகபுஜண்டருக்கு மறுமொழி:

 ஆனாலும் புசுண்டனே!! வந்து ஏது இவை தன் அறிய. பின் இவ்வாறெல்லாம் பேசுகின்றாய்!!!!!


 இதற்கும் பின், அதாவது நீங்கள் ஏது என்று கூற, இதற்கும் முடிவு உண்டு.


 இதனால் அறிவும் கூட இதற்கு என்றும். அதனால்தான் இன்னும் பின் விவரமான விஷயங்கள் எல்லாம் சித்தர்கள் சொல்வார்கள்.

 அதை தன் நிச்சயம் நீங்கள் கூர்ந்து ஆராய்ந்து பார்த்தால், இப்பிறவி எதற்கு??? என்றெல்லாம் இன்னும் பல வகையான திருத்தல்கள்( விடைகள்/தீர்வுகள்) சொல்வார்கள்.


 அப்பொழுதுதான் மனிதன் எதற்காக? பிறந்தான்,?? எதற்காக?? வாழ்கின்றான்??, எதற்காக இறைவனைத் தேடுகின்றான்??? என்பவை எல்லாம் தெரியும். 


(மனித பிறவி மனித பிறப்பு இறப்பு வாழ்க்கை இறைவன் இதைப் பற்றி எல்லாம் சித்தர்கள் ஒவ்வொன்றாக ஒவ்வொரு வாக்காக சொல்லி சொல்லி மனிதர்களை மேம்படுத்தி பாவம் கர்மா நோய் இல்லாமல் இறைவனை அடைவதற்கான வழியை கூறுவார்கள் முக்தி மோட்சத்திற்கான வழியை காட்டுவார்கள் சித்தர்கள் என்று ஈசன் பதில்)




இதனாலே ஒவ்வொன் பின் ஒவ்வொன்றாக.

 அதனால்தான் அகத்தியன் பன்மடங்கு அறிந்தும் கூட, பின் ஏது என்று பின் பல வழிகளில் கூட பல வகைகளான புதுப்புது விஷயங்களை கண்டுபிடித்து, கண்டுபிடித்து!!!!

 அவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட இன்றைய கால அறிந்தும். பின் மனிதன் பல வகைகளில் கூட முன்னேறினாலும், அறிந்தும் பல விஷயங்கள் கண்டுபிடித்தாலும், அதற்குள்ளே பல விஷயங்களை யாங்கள் கொண்டு வந்து விடுவோம். அதை தோற்கடித்து விடுவோம். அவ்வளவுதான். 



சித்தருக்கு மிஞ்சிய சக்தி இவ்வுலகத்தில் இல்லை!!!




போகர் பெருமானின் வாக்கு:

எதை என்று, அதனால் தான் சித்தனுக்கு மிஞ்சிய எதை யாங்கள் சொல்லக்கூடாது.
 பெருமையாக!!!!!


 அறிந்தும், பின் சொல்கின்றோம்.


 ஏனென்றால், பின் வாய்ப்பு!!!

 ஏது என்று அறிய மனிதனுக்கு ஒரு ஒரு வாய்ப்பாக.



 ஆனாலும், அவ் வாய்ப்பை தவறிவிட்டு, தவறிவிட்டு!!!

இவ்வாறு பின் இப்படியே தவறவிட்டு சென்று கொண்டே இருந்தால் என்ன லாபம்??????



இதை தான் எண்ணற்ற ஏது புரிய.

 இதனால், பின் மீண்டும், அதாவது கோபமுற்று தேரையன் கூட, 


பின் அதாவது, பின் அறிந்தும் கூட, அதனால் நிச்சயம் தன்னில் ஏது என்று அறிய. 


(மீண்டும் பொதிகை மலைக்கு திரும்பிய அகத்தியர் காத்திருந்த சித்தர்களை பார்த்து மீண்டும் தேரையனிடத்தில் செல்லுங்கள் என்று)


மீண்டும் பொதிகை தன்னில் கூட,... அதாவது அழகாக, அழகாக, பின் தந்தையும் கூட,


 இதனால் ஏது என்று புரிய. அதாவது, அனைவரையும் அழைத்து, நிச்சயம் செல்லுங்கள், அவனிடம் சொல்லுங்கள் 
இப்பொழுது செய்வான் என்று!! அறிந்தும் கூட,!!


 இதனால் ஏது என்று புரிய. அனைவரும் வந்து,!!!

 (பொதிகை மலையில் இருந்து சித்தர்கள் தோரண மலைக்கு மீண்டும் வந்து தேரையரை சந்தித்து)


 பின் தேரையனே!!!! அதாவது குருநாதர் அழகாக சொன்னார். அதாவது, தந்தை அழகாக சொன்னார்.

 பின் தேரையன் அழகாக செய்வான் என்று!!!



தேரையர் சித்தர்களுக்கு கூறியது:

ஆனாலும், யான் பேசுகின்றேன், ஏது என்று புரிய.!!!


 என்னால் முடியாது. தந்தைக்கு சொல்லிவிடு.


 ஏனென்றால், மக்கள் ஏது என்று அனைத்தும் தெரிந்திருந்தும், தவறுகள் செய்துட்டு, செய்துட்டு, அவை இவை என்றெல்லாம் பிதற்றி. ஏதேதோ!?? செய்துவிட்டு!!!!


, அதனால் நிச்சயம் தந்தையை, அதாவது யான் எப்பொழுதும், பின் அனைத்தும் ஏது என்று கூற, தந்தை (பேச்சை)  மீறி பேசுவதில்லை.



 ஆனாலும், இப்பொழுது சொல்கின்றேன், 


பின் எதை வேண்டுமானாலும் செய்கின்றேன்.


 ஆனாலும், மனிதனுக்கு யான் சேவையே செய்ய மாட்டேன். 

சேவைகள் செய்து செய்து அலுத்துவிட்டேன்.


 பல அரசர்களும், பல வழிகளிலும் உள்ள இளவரசர்களும் என்ன, ஏது என்று புரிய, எவை என்று அறிந்தும் கூட, பல மக்களை காப்பாற்றி,(அரசர்களையும் நாடுகளையும் நாட்டு மக்களையும் காப்பாற்றி காப்பாற்றி)



 ஆனாலும், இப்போது நிச்சயம் யான் செய்யப் போவதில்லை. 


பின் ஆணித்தரமாக கூறுகின்றேன் என்றெல்லாம், நிச்சயம். 



ஆனாலும், பின் மீண்டும், அனைவரும் சென்றனர். 

(சித்தர்கள் மீண்டும் பொதிகை மலைக்கு)


பின், அதாவது, தந்தையே அறிந்தும், ஏது இவை தன் புரியாமல் கூட, ஆனாலும், எவரும், பின் அறிந்தும், இதை தன் ஏன்?, எதற்காக? என்றெல்லாம்,


 நிச்சயம் தேரையன், பின் யார், பின் கேட்டாலும், ஏது என்று புரிய. அதாவது, நிச்சயம், பின் என் தந்தை சொன்னாலும், யான் கேட்கப் போவதில்லை என்று தேரையன் கோபமாக இருக்கின்றான்.


 தந்தையே, நீங்களே வாருங்கள் என்று.


 ஆனால், பின் நோக்கி எதை புரிந்து அறிய. ஆனாலும், இவை தன், ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட, குருநாதன் அழகாக, தந்தையும் உணர்ந்தார், ஏது என்று புரிய. 


இதனால், இவை அறிய, நிச்சயம் ஒன்றின் பின் ஒன்றாக. 

இதனால், இவை தன் அறிய!!!!


(அகத்தியர் பொதிகை மலையில் இருந்து தோரணமலை/ தேரையர் மலைக்கு வந்து)


, ஆனாலும், வந்து, தேரையனே,!!!!!!! எவ்வாறு, ஏது இவ்வாறாக சொல்கின்றார்கள்.


தேரையனே!!!... உனக்கு அனைத்தும் சொல்லிக் கொடுத்தேன் அல்லவா? 


உலக மக்களுக்காகத் தான் செய்ய வேண்டும் என்று. 


இப்பொழுது நீ இப்படி, பின் பேசுகின்றாயே?????? என்றெல்லாம்.

தேரையர்:

 தந்தையே!!!, நில்லும்.


 ஆனால், மக்களுக்கு சேவை செய்து, சேவை செய்து, அலுத்து விட்டேன். 

மக்கள் பல கர்மங்களை, அதாவது பல பாவங்களைத்தான் சுமந்து, சுமந்து,!!!


 புண்ணியங்கள் யாரிடமும் இல்லை.


 அதற்காகவே யான் அமர்ந்து விட்டேன்.


 போதும்,!!!  தந்தையே!!!

, அறிந்தும், ஆனாலும், வேண்டாம்.


 ஏனென்றால், மக்கள் திருந்த போவதில்லை. கலியுகத்தில் திருந்த போவதில்லை. 


என்ன சொன்னாலும், மாயையை நோக்கித்தான் புறப்படப் போகின்றான். 

அவ் மாயையை நோக்கி புறப்பட்டு, அனைத்து நோய்களும் பெற்றுக்கொண்டு, மீண்டும்  வரத்தான் போகின்றான். 


அவை பின் கலியுகத்தில் சரியாகாது, சரியாகாமல் தான் போய், சரியாகாமல் தான் போய்விடும். ஏது என்று அறிய.



அகத்தியர் மறுமொழி:

 இதனால், பின், அதாவது, தேரையனே அமைதி காத்திரு.


 அனைத்தும் நல்லதாகவே நடக்கும்.


 அதாவது, இறைவன் கட்டளைப்படி, அனைத்தும் நன்றாகவே செய்வோம் என்றெல்லாம்.



 தேரையனும் ஒத்துக்கொள்ளவே இல்லை. 


பின், தந்தையே, வேண்டாம். இவ்வேலையே வேண்டாம். 


ஏன், ???எதற்காக?????

, அறிந்தும், மக்களுக்கு ஏன் சேவை செய்ய வேண்டும்.?? நாம்?????


 அறிந்தும், பல மக்களுக்கு சேவை செய்து, ஏன், எந்த, என்ன லாபம், ?????


எதை என்று புரிய. ஆனாலும், ஈசன் கட்டளைப்படியே அனைத்தும் நடக்கின்றது என்று.



அகத்தியர் மறுமொழி:

 ஆனாலும், பின், அதாவது, பின், தந்தையும் கூட, தந்தையும் கூட, அதாவது, தேரையனே, அழகாக, பின், அனைத்தும் கற்றுக் கொடுத்தேன் அல்லவா? 


பின், பாவங்களைப் போக்கு என்று!!!
 அறிந்தும்.



தேரையர் வாதம்:

 எப்படி போக்குவது? மனிதனிடத்தில் நல்லெண்ணங்களே இல்லையே.


 நல்லோன் போல் நடித்து, அனைத்தும் செய்து கொண்டிருக்கின்றான். 

இதனால் என்ன பயன்??? என்று.


 ஆனாலும், அறிந்தும், அதற்குள்ளே, அதாவது, பாவங்கள் பெருகிக் கொண்டே, அதாவது, கலியுகத்தில் அறிந்தும், ஏது என்று.




அகத்தியர்:

 ஆனாலும், நிச்சயம் தன்னில், அதாவது, பின், எனக்கும் ஏது என்று புரிய. சில சில, அதாவது, ஏது என்று அறிய. 

அதாவது, என்னையாவது, பின், நிச்சயம் பார்ப்பாயா என்று. எதை என்று, கூற!!!



தேரையர்:

, அதாவது, தந்தையே, நிச்சயம், உன் பேச்சு எதை என்று அறிய. இவ்வாறா ?????அறிந்தும், 



அகத்தியர்:

அதாவது, எனக்கொன்று, பின், ஏதாவது வந்தால், நீ என்ன செய்வாய்???? என்று. 


பின், குருமுனியும் கூட,

தேரையர்:

 பின், தந்தையே!!!!!, எதை என்று, இப்படி நீ, ஏது என்று அறிய. இப்படி கூறலாமா? நீ அறிந்து கூட,

 அனைத்தும் கற்றுக் கொடுத்தவர் நீர்.


 இப்படி ஆனாலும், நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட,


அகத்தியர்:

 அனைத்தும், அதாவது, நிச்சயம், அனைத்தும் சொல்லிக் கொடுத்தேன்.

 ஆனாலும், இப்பொழுது என் கண்ணில் ஏது என்று கூட அறிய.


 இப்பொழுது யான் ஒன்றை, பின், அழகாக இடுகின்றேன். அதை நீ எப்படி எடுப்பாய்??? என்பதை பார்ப்போம் என்று அறிந்தும் கூட,


(ஒரு முள் எடுத்து  குருநாதர் தன் கண்களில் குத்திக்கொண்டார்)


அதனால், பின், இப்படியாவது வருவானா??? என்று.


(இப்படி செய்தாலாவது  தேரையர் குணப்படுத்த வருவாரா என்று அகத்தியர் சோதனை நம் குருநாதரின் கருணையை பார்த்தீர்களா மனித குலம் நல்வாழ்வு வாழ்வதற்கு தேரையரை மீண்டும் சேவையை செய்ய முள்ளை எடுத்து தன் கண்களிலேயே குத்திக்கொண்டார் நம் கருணை தெய்வம் நம் குருநாதர் அகத்திய பெருமான்... நம்மை வாழ வைக்கும் தெய்வமான அகத்தியர் பெருமானை கருணைக்கடலை போற்றி வணங்குவோம் அவரது பாதையிலேயே சென்று கொண்டே இருப்போம்)



 இதனால் விளையாட்டாக அறிந்து கூட, முள்ளொன்றை, அதாவது, அகத்தியன் எடுத்து கண்ணை குத்தினான்.

 அறிந்தும், தேரையர் அதாவது, தந்தையே!!, தந்தையே?? என்றெல்லாம் மலரெடுத்து, எதை என்று புரிய. 

(தேரையர் ஒரு மலரை எடுத்து அகத்தியர் கண்களில் ஒத்திக்கொள்ள அருகே சென்றார்)



பின்,முள்  உள்ளேயும் சென்றுவிட்டது. எதை என்று கூட, அழகாக அறிந்தும், புரிந்தும் கூட, பின், அழகாக, தந்தையே, நீயே இப்படி செய்யலாமா? அனைத்தும் கற்றுக் கொடுத்தவர் நீ. 


அகத்தியர்:

எதை என்று கூற ஏனென்றால், இப்பொழுது தெரிகின்றதா? வலி ஏது என்று அறிய.  அறிந்தும் கூட, எனக்குத்தான்,





 அதாவது, பாசங்கள் வந்த பாசங்களில் மனிதன் சிக்கிக் கொள்கின்றான்.

 இதனால், எதை என்று புரியாமலும், எதனால், எதை என்று அறியாமலும், இதனால் நீ உலகத்திற்கு தொண்டு செய்தே ஆகவேண்டும்.



 ஏனென்றால், பின், கலியுகத்தில், பின், கலியுகத்தில், பின், பின்னிப் பிணைந்து, நோய்களாகவே வாழ்வான்.

 நோய்களை குணப்படுத்த முடியாது.

 எண்ணற்ற நோய்கள், பின், வரும்.


 இதனால், பின், பல மருத்துவமனைகள் அறிந்தும் கூட, பின், அதாவது, நிச்சயம் தன்னில் காசுகள் பிடுங்கி எறிந்து, பின், நோய் இல்லாதவர்களை  கூட,
 பின், நோய்களை உண்டாக்கி அறிந்தும், பல வகைகளில் கூட, பின், அதாவது, மருத்துவர்கள் பல பொய்யான வழிகள் எல்லாம் செய்து, அனைத்தும், நிச்சயம் தன்னில்  கூட அவை இல்லாத பொழுது, பின், இவையும் இருக்கின்றது

 (இல்லாத நோய்கள் எல்லாம் இருக்கின்றது) 

 என்று பொய் சொல்லி, பணம் பிடுங்கி, அனைத்தையும் அழிப்பார்கள்.



 மருத்துவர்களே, கடமையை மீறுவார்கள்.!!
 மருத்துவர்களே, பல பொய் சொல்லி நடிப்பார்கள்.


 இதனால், நிச்சயம், உன் கடமை தேவைப்படுகின்றது, தேரையனே என்று,



தேரையர்:

 தந்தையே, ஏது என்று, அறிய நிச்சயம், இவ்வாறு முள்ளால் குத்தி கொண்டாய் என்றெல்லாம்.




 அழகாக இப்பொழுது பார்!!!  எவ்வாறு, ஏது என்று அறிய. அதனால், முதலிலே, ஏது என்று அறிய. பின், அழகாக, நிச்சயம், தன்னில் கூட, அதாவது, பின், ஏது என்று கூற,

 அழகாக, காற்றில், தன்னிலே, பின், அவ் முள்ளை எடுத்தான், தேரையன்.


(குருநாதர் அகத்தியர் கண்களில் காற்றை ஊதி கண்ணுக்கு உள்ளே சென்ற முள்ளை வெளியே எடுத்தார் தேரையர்)




 அவ்வளவு சக்தி மிகுந்தவன், தேரையன், எதை என்று புரிய.


 இதனால், நிச்சயம், தன்னில் கூட, பின், கட்டித் தழுவிக் கொண்டான், அகத்தியன்!!!

 மகனே என்றெல்லாம். பின்!!

, தந்தையே என்றெல்லாம்!!!

(அகத்தியரும் தேரையரும்)

 சொல்லுங்கள் என்றெல்லாம்.


தேரையனே இப்படி நீ இருக்கக்கூடாது.

 ஏனென்றால், அனைத்தும் சொல்லிவிட்டேன். 

அதனால், அனைத்தும் நீ செய்ய வேண்டும். உலக நன்மைக்காக செய்ய வேண்டும். அறிந்தும் கூட,


 தவறு செய்கின்றார்கள் மனிதர்கள்.

 இல்லை என்று சொல்லவில்லை.

 ஆனாலும், எதற்காக என்பதெல்லாம் போகப்போக அறிவாய்.


 அறிந்தும் கூட, ஆனாலும், பின், உன்னால் மட்டுமே கலியுகத்தில் காப்பாற்ற முடியும்.


 இல்லையென்றால், பின், நிச்சயம் வருகின்ற காலத்தில், எதனாலும் எந்நோயையும் காப்பாற்ற முடியாது.

 அவனவன், பின், அனுபவிக்க நேரிட வேண்டியதுதான். 


ஏதோ அறிந்தும் சில காலம் இருக்கலாம். நோய்களோடு!!!

 ஏது என்று அதுவும் கூட பல நோய்கள் இன்னும் இன்னும் தொற்று ஏது என்று. 

(தொற்று நோய்கள் காற்றில் பரவும் வியாதிகள் வரப்போகின்றது)


அதனால், பின், உன்னால் மட்டுமே முடியும். தேரையனே என்றெல்லாம்.


தேரையர்:

  அகத்தியா!!!, தந்தையே, ஏது என்று இப்படி சொல்கின்றாயே. பாசத்தை காட்டிக் காட்டி நியாயமா?


 மனிதனை பார்த்து சலித்தும் விட்டேன். 

ஏது என்று மனிதனுக்கு புத்திகள் இல்லை.



அகத்தியர்: 


 தேரையனே இதனால், பின், ஏது அறிந்து கூட, இதனால், நிச்சயம், பின், உனக்கு, பின், வரத்தை வாங்கி அறிந்து கூட, வரத்தை தருகின்றேன். யானே அறிந்தும்,


 இதனால், காற்றிலே நல் அறிந்தும் கூட, பின், நோய்களை குணமாக்கு என்று. 


இதனால், ஏது என்று அறிய. இத் தேரய மலையில் (தோரணமலை) 
 வந்து, பின், அவ் நீரில் நீராடி, பின், நீரை, பின், எடுத்துச் சென்று, பின், அனுதினமும், பின், மூன்று மண்டலம் அல்லது நான்கு மண்டலம், நிச்சயம் அருந்திக் கொண்டே வந்தால், பல நோய்கள் இன்னும் எதை என்று அறிய. பின், தீரும்!!!

(தோரணமலை முருகன் கோயிலில் மொத்தம் 64 சுனைகள் உள்ளன. இந்த சுனைகள் மலை அடிவாரம் முதல் உச்சி வரை அமைந்துள்ளன


 மருத்துவ குணம்:
 இந்த சுனைகளில் உள்ள நீர் பல்வேறு அபூர்வ மூலிகைகளைக் கடந்து வருவதால்,  நோய்கள் மற்றும் நாள்பட்ட வியாதிகளைத் தீர்க்கும்


தெய்வீகத் தன்மை: மலை உச்சியிலும், அடிவாரத்திலும் கோடைகாலத்திலும் வற்றாத இந்த நீரூற்றுகளில் உள்ள தண்ணீரைக் கொண்டே முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது)

தோரணமலை முழுவதிலும் சுமார் 64 சுனைகள் இருக்கின்றன. அடிவாரத்திலேயே இரண்டு சுனைகள் காணப்படுகின்றன. 

இந்தச் சுனைகளில் நீராடினால்  நோய்கள் நீங்குவதுடன், பல வியாதிகள் குணமாகும் என்பது நம்பிக்கை.

 அதுமட்டுமல்ல, கடும் கோடைகாலத்திலும் வற்றாத இந்த ஜீவ சுனைகளில், ஒவ்வொரு சுனையின் நீரும் ஒவ்வொரு சுவையுடன், மருத்துவக்குணமும் கொண்டிருப்பது இயற்கையின் அற்புதம்)

இந்த தோரணமலைக்கு வேறொரு தனிச்சிறப்பும் இருக்கிறது. இந்த மலைக்கு தென்புறம் மலையில் இருந்து பாய்ந்து வருகிறது ராமநதி, மலையின் வடபுறத்தில் ஜம்பு நதி பாய்கிறது. இந்த இரண்டு நதிகளுக்கும் இடையேதான் தோரணமலை கம்பீரமாக காட்சியளிக்கிறது)




(சுனை தீர்த்தத்தோடு இன்னும் என்னென்ன மூலிகைகளை கலந்து அருந்த வேண்டும் என்பதை குருநாதர் விபரமாக மறு வாக்கில் குறிப்பிடபோகின்றார்)



இன்னும் கூட பலவற்றை கூட, அதனுடன் என்ன கலக்கி, ஏது என்று அறிய. பின், இன்னும் சொல்கின்றேன், பல விவரமானதெல்லாம்.




 அதனால், பல வகையில் கூட சரி, எதை என்று அறிய.



தேரையர்:

 ஆனாலும், ஒரு உத்தரவிடுகிறேன், தந்தையே.!!!


ஆனால், இங்கு மூலிகைகள் பல மூலிகைகள் பொதிகை தன்னில் கூட, 

அனைத்தையும் யான் வைக்கின்றேன்.

 ஆனால், மனிதன் வந்து பயன்படுத்தினால், பின், பயன்படுத்திக் கொள்ளட்டும் என்று.


 இதனால், பல வகையில் அறிந்தும்,


 காற்றின் மூலமே வளரும். 
அறிந்தும் கூட, அரிய வகை செடிகளையும் கூட அறிந்தும், பின், அதாவது, இயற்றினான் (பல மூலிகை செடிகளை ஏற்படுத்தினார். பின், அதாவது, தேரையனே!!!



(நீர் தேவைப்படாமல் காற்றின் மூலமே காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சி வாழும் மிக அரிய வகையான மூலிகைகளை எல்லாம் தோரண மலையில் தேரையர் சித்தர் ஏற்படுத்தியுள்ளார்)




 இதனால், பல வகையான  மூலிகைகள் சுற்றியும் கூட உள்ளது.

 அதையும் கூட, மனிதன் இப்பொழுது, பின், தெரிந்து கொண்டாலும், அதை, பின், மனிதனுக்கு, பின், அதாவது, விஷங்கள் ஆக்கி, அறிந்தும், பணத்தை ஆக்கி, பின், அனைத்தும் கெடுத்து விடுவான். 


பல வகையான, அதனால்தான், (மூலிகைகளை பயன்படுத்த தெரியாமல் பயன்படுத்தி அதை விட்டு பணமாக்கி பலவகையிலும் கெடுத்து விடுவார்கள்)



 எதையும், அதனால், மனிதனுக்கு புண்ணியம் இருந்தால், வரட்டும் என்றெல்லாம். இன்னும், பல வகையான மூலிகைகள் தங்கியிருக்கின்றது.

 இன்னும், அறிந்தும், அவையெல்லாம், நிச்சயம், தன்னில் கூட, அறிந்தும்,


அங்கு கூடியிருந்த சித்தர்கள் அனைவரும்:

 அகத்தியன், பின், உத்தரவு படியே, அனைவரும், யாங்கள் செல்வோம்.

அகத்தியர் சீடர்களை பார்த்து:


 சீடர்களே, கவலைகள் வேண்டாம். 

(என்று சித்தர்களிடம் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்)


இதனால், அறிந்தும், இதனால், தேரையனே, பலவற்றை கண்டறிந்து, 

(இதற்கிடையில் தேரையர் சித்தர் எப்படி மனிதர்களை நோயில் என்று காப்பாற்றுவது என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது) 


(அதனுள்ளே மனிதர்களுடைய பாவங்கள் அதிகமாய் நோய்களின் வீரியம் அதிகமாகிவிட்டது)


இதனால், ஏது என்று புரிய. ஆனாலும், அதனுள்ளே, பாவங்கள், மனிதனுக்கு, அதிகமாகிவிட்டது.


 அறிந்தும், ஏது என்று புரிய. 


இதனால், பல வகையான நாட்டு அரசர்களும், ஏது என்று அறிய.  அறிந்தும் கூற, பின், பல வகையான நோய்கள் யாராலும், பின், காப்பாற்றப்படவில்லை, காப்பாற்ற முடியவில்லை.

 புலவர்களும், அறிந்தும், இதனால், நிச்சயம், மலையை நோக்கி, இவ் மலையை நோக்கி வந்தார்கள். 


ஆனாலும், ஏது என்று புரிய, அனைவரும், பின், வந்து, அறிந்தும், ஏது என்று அறிய. நிச்சயம், பின், காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்றெல்லாம், 


எதை என்று அறிய. இதனால், நிச்சயம், தன்னில் கூட, அதாவது, நிச்சயம், காப்பாற்றுகின்றேன் என்றெல்லாம் தேரையன். 


அழகாக, நிச்சயம், பின், அதாவது, பின், சங்கு!! (எடுத்து)
 சங்கால், பின், ஊதினான், தேரையன். 


அழகாக, இவ் மலை, பின், அதாவது, பிளந்தது, 


ஏது என்று புரிய. பின், அனைவரையும், நோய் உள்ளவர்கள் கூட, அதில் இட்டான். அறிந்தும் கூட, பின், காற்றை ஊதினான். அனைவரும், பிழைத்துக் கொண்டார்கள், வெளியே செல்லுங்கள் என்று அறிந்தும்.


 இதனாலே, நிச்சயம், காற்றாலே குணப்படுத்துபவன், பின், தேரையன்.


 இன்னும், பல வகையிலும் கூட கண்டு, அறிந்து, உணர்ந்து உள்ளான்.


 இச்சித்திரை, பின், அதாவது, பங்குனி சித்திரை, பின், வைகாசி தன்னில், பின், இதற்குத்தான், இங்குதான், பின், நோய்கள் தாக்கம் அதிகமாகும்.


 அதாவது, இதை என்று கூற, இவ் மூன்று மாதத்தில்தான், நோய்கள் தாக்கமே அதிகமாகும். 

எதை என்று, அறிய அறிய ஏனென்றால், பின், இதனை, பின், அறிவியல் வடிவாகவே, அகத்தியன் கண்டு, உணர்ந்திருக்கின்றான்.

 இவ்மாதங்களில் கூட,

(பங்குனி சித்தரை வைகாசி மாதங்களில்)


கந்தனுக்கு மறு பெயர் விபூதி!!!!


 இதனால்தான், சரியாக, பின், அதாவது, கந்தனை வணங்கி, ஏனென்றால், கந்தனை, ஏன் என்று கூற, பின், அதாவது, கந்தனுக்கு மறுபெயர், பின், விபூதி என்றும் பெயர்.

 அறிந்தும், அது, ஏது என்று புரிய. 

அதனால், கந்தன், அறிந்து கூட, அவ் விபூதியை சரியாக, பின், பயன்படுத்திக் கொண்டு, அறிந்தும்,!!!

இலுப்பை எண்ணெயில் தீபம்!!!


 தீபங்கள் பல ஏற்றி, அறிந்தும், அதாவது, பின்,  இலுப்பையிலும், பின், ஏது என்று அறிய.


 அதிலும் கூட, நன்குணர்ந்து, பின், அதாவது, பல, பின், திருத்தலம் முருகன், திருத்தலங்களுக்கு சென்று,  விபூதியை. அதில் இட்டு, நிச்சயம், சிறிது சிறிதாக, அறிந்தும் கூட, பின், நாக்கில் தொட்டு வந்தாலே, பின், சித்தர்களை வணங்கி முருகனை வணங்கி மனதில் நன்றாக நோய் நொடிகள் தீர வேண்டும் என்று   நினைத்து, சில வியாதிகள் குணமாகும்.


(முருகன் திருத்தலங்களுக்கு செல்ல வேண்டும் முருகன் ஆலயங்களில் இலுப்பை எண்ணெயில் விளக்கு ஏற்றி அந்த விளக்கில் விபூதி பிரசாதத்தை விட வேண்டும்!

 அந்த இலுப்பை எண்ணெய் மற்றும் விபூதி குழைந்து இருப்பதை விளக்கு தீபம் சமாதானம் ஆனவுடன் திருநீறு இலுப்பை எண்ணெய் இருக்கும் விளக்கை வீட்டுக்கு எடுத்து வந்து அதை தனியாக சேகரித்து அல்லது விளக்கில் உள்ளே இருப்பதை
தினமும் அதிகாலையில்

 சிறிதளவில் விரலால் எடுத்து நாக்கில் தேனை தடவுவது போல சித்தர்களை  நினைத்து தினமும் முருகனை நினைத்து நோய்கள் குணமாக வேண்டும் என்று வேண்டிக்கொண்டு தடவி அதை உட்கொள்ள வேண்டும் இப்படி செய்வதால் வியாதிகள் குணமாகும்)





 அதனாலே, ஏது என்று அறிய.

 இன்னும், பல வகையான நோய்களும் கூட, இவ்மாதத்தில்தான் அதிகமாகும். 

பின், அதாவது, பங்குனி சித்திரை, வைகாசி தன்னில் கூட, 

ஏன்?, எதற்கு? என்றெல்லாம், இவையெல்லாம் ஆராய்ச்சிகள் நிற்கின்றது. எங்களிடத்தில்,!!

 அவ் ஆராய்ச்சிகளை, யாங்கள் சொல்ல, பின், அதாவது, அகத்தியன் அனுமதி பெற்றே, நன்றாக, யாங்கள் செப்புவோம்.


 இதனால், உங்களை நீங்கள் கடந்து போங்கள். மனிதன், ஏது புரிய. 


மனிதன், பின், இயந்திரமாகவே திகழ்கின்றான். அதாவது, இயக்கும் சக்தி, அனைத்தும், எங்களிடத்திலே தான்
 இருக்கின்றது.

 இதனால், பல வகையான, அறிந்தும் கூட,


இதனால்தான், எங்கு, ஏது என்று கூற, ஓரிடம் இருக்கின்றது. இங்கு,!!!

 (தோரண மலையில் ஒரு ரகசியமான ஒரு இடம் உள்ளது)



 எதை, அங்கு, பின், நுழைந்து வந்தாலே, பின், இளமை ஆகிவிடும்.

 அவையெல்லாம், ஏது என்று கூற, மக்களுக்கு தெரிவித்தால், பின், எதை என்று, அதிலும் கூட, அமர்ந்துவிட்டு, பின், யான்தான், அனைத்தும் என்று,

 பின், அதில் நுழைந்து, நின்று, காசுகள் பறிப்பான். மனிதன்,

 பின், இங்கு நுழைந்து வா என்றெல்லாம், இவ்வாறு என்றெல்லாம்.


 இதனால்தான், பின், பக்தி, இங்கு, ஏது அறிந்து, எதை என்று கூற, பக்தி என்பது, காசுகளாக போய்விட்டது.


 இதனாலே, இறைவன், ஏது என்று, இதனாலே, இவ் விபூதியை, பின், அறிந்தும் கூட, பின், அனுதினம், நாக்கில் தொட்டு, தொட்டு,


 அதனால்தான், பின், முருகன், ஏது என்று அறிய. பின், அதாவது , இப்பொழுதும் சொல்வேன்,

முருகனுக்கு மறுபெயர், பின், விபூதி, 

அறிந்தும், பல வகையான மாற்றங்கள், மனிதனுக்கு, கலியுகத்தில், பின், உண்டு

உண்டு என்றாலும், பல வகையான நோய்களும் உண்டு.

 அவையும் சரி செய்ய, எதை என்று, கூற!!!

 அதனால்தான், பின், மீண்டும், மீண்டும், கலியுகத்தில், தேரையனே!!!!, வா, !!வா !! என்று, 

மகனே,!! வா,!! வா!! என்று, அகத்தியன், அழைத்து அழைத்து,!!!


 இதனால் மீண்டும், சேவை செய்யப் போகின்றான், தேரையன். 


அதனால், பயன்படுத்திக் கொண்டால், நன்று. ஆசிகள், ஆசிகள், ஆசிகள்.




ஆலயம் பற்றிய விபரங்கள் 
தமிழ் நாடு 
தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தோரணமலை முருகன் கோயில் அமைந்துள்ளது.


 அகத்தியர் மற்றும் தேரையர் போன்ற சித்தர்கள் தவமிருந்து மூலிகை ஆராய்ச்சி செய்த புண்ணிய ஸ்தலம் இது.


 இங்குள்ள 64 சுனைகளின் தீர்த்தத்தால் முருகனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.


கோயில் சிறப்பம்சங்கள்:மூலவர்: மலை மீது அமைந்துள்ள முருகப் பெருமான்.

வரலாறு: படுத்திருக்கும் யானை வடிவில் தோற்றம் அளிப்பதால் வாரணமலை என்று அழைக்கப்பட்டு, பின்னர் தோரணமலை என மருவியது.

சித்தர் ஜீவ சமாதி: தேரையர் சித்தர் ஜீவ சமாதி இத்தலத்தில் அமைந்துள்ளது.

கோயில் நேரம்:காலை 05:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை.மதியம் 02:30 மணி முதல் மாலை 05:00 மணி வரை.

மலையேற அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகிறார்கள்.
மலை உயரம்: சுமார் 800 அடி உயரம் கொண்ட மலை.

தோரணமலை உச்சியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் முருகனை தரிசிக்க 1193 படிகள் ஏறிச் செல்ல வேண்டும்... 

அமைவிடம் & வழித்தடங்கள்:

அருகிலுள்ள ஊர்: கடையம் (சுமார் 7 கி.மீ தொலைவில் உள்ளது).

மாவட்டம்: தென்காசி மாவட்டம்.

அருகிலுள்ள விமான நிலையம்: தூத்துக்குடி (சுமார் 90 கி.மீ).

ஆலய மேப்.

Thoranamalai Murugan Kovil https://share.google/qQ3LaWj0oS0aLqSZw

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment