​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 20 October 2025

சித்தன் அருள் - 1958 - திருவனந்தபுரம் வாக்கு 21/09/2025!


சித்தன் அருள் - 1946இன் தொடர்ச்சியாக!

குருநாதர் : அப்பனே நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய இன்னும் அப்பனே பின் அழிவுகள் எதை என்று புரிய அப்பனே, ஆனால் அப்பனே சொன்னாலும் அப்பனே மனதில் பயந்து இவ்வாறெல்லாம் நடக்குதா என்பதெல்லாம் அப்பனே சிந்திப்பான் என்பேன் அப்பனே. அப்பனே அதனால் தான் அப்பனே நிச்சயம் அவன் பின் ஓரிடத்தில் கூட நிறுத்த வேண்டும் என்பேன் அப்பனே,பின் எவராலும் எதனாலும் நிச்சயம் நிறுத்த முடியாதப்பா அக்கிரகத்தை. அப்பனே நிறுத்த முடியவில்லை என்றால் அப்பனே மனக்குழப்பங்கள் எழுமப்பா, நிச்சயம் இறைவனை பற்றிய சந்தேகங்களும் கூட எழுமப்பா. ஏன் ? சித்தர்களை பற்றிய சந்தேகங்களும் எழுமப்பா. எது உண்மை? எது பொய்? என்றெல்லாம் தெரியாதப்பா.

அடியவர் : இந்த சந்தேகம் எனக்கு முதலில் இருந்தே இருக்கின்றது.

குருநாதர்: அப்பனே நிச்சயம் எதை என்று புரிய அப்பனே , பிறந்ததிலிருந்து நீ சொல்கிறாய் அப்பனே. ஆனால் நாங்கள் உங்களை பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம் எப்பொழுது இருந்தே அப்பனே. அண்ணாமலையில் அப்பனே  வந்துவிட்டாய் அல்லவா அப்பனே பின் கோபம் கொண்டு அப்பனே பின் நிச்சயம் அதை ஏன் எடுத்து வரவில்லை? பிறப்பிலிருந்து தான் சொல்கிறாய் அப்பனே, பின் யான் இவ்வான்மா எப்பொழுதிருந்தே பார்த்தவன் யான் அப்பா.

வேறு ஒரு அடியவர் : என்னுடைய தம்பிக்கு கல்யாணம் ஆகி குழந்தைகள் எல்லாம் இருக்கு. இருந்தாலும் அந்த இரண்டு குடும்பத்துக்குள்ளே எப்பொழுதும் தகராறு ...

குருநாதர் : அப்பனே நிச்சயம் தன்னில் கூட, எதை என்று புரிய இப்பொழுது தான் புண்ணியங்கள் நிச்சயம் தன்னில் கூட முன்னோர்களை வணங்கி கொண்டு வரச் சொல்லுங்கள் என்பேன் அப்பனே.அனைத்தும் தீருமப்பா.

சுவடி ஓதும் மைந்தன்: அய்யா பித்ரு சாபங்கள் தான் அய்யா அதிகம்.

குருநாதர் : அப்பனே அறிந்தும் புரிந்தும் அப்பனே செய்கின்றாய் அப்பனே மூச்சு பயிற்சி. ஏன் செய்கின்றாய் அப்பனே ?

அடியவர் : நாங்கள் சாப்பிட கூடாத உணவுகள் சாப்பிட்டு உடம்பை கெடுத்துக் கொண்டிருக்கிறோம், அதை சரி செய்வதற்காக...

குருநாதர் : அப்பனே நிச்சயம் இல்லை அப்பன். யான் புதுமையான வழிகளில் செப்புவேன் அப்பனே.சிந்தி நீ !

அடியவர் : நான் அந்த யோகா ஆசிரியரை முன்னால் அமர்த்துகிறேன்.

குருநாதர் : அப்பனே எவ்வளவு சொன்னால் கூட சரியாய் பதிலை உங்களால் நிச்சயம் தன்னில் கூட தெரிந்தது தான் நீங்கள் சொல்கிறீர்கள் என்பேன் அப்பனே. யானே சொல்லிவிடுகிறேன். அப்பனே நிச்சயம் தன்னில் எவை என்று புரிய அப்பனே,அதாவது அப்பனே முதுகு தண்டில் அப்பனே அதாவது கீழே அப்பனே பல நுண்ணிய அப்பனே பல வட்ட வடிவான கூட அப்பனே ஆன்மாக்கள் அடங்கி உள்ளுமப்பா. அதாவது நிச்சயம் தன்னில் கீழே அப்பனே , அதையும் நிச்சயம் தன்னில் கூட அப்பனே பல வழிகளில் மேல் எழுப்ப வேண்டும் அப்பனே, தலைக்குள் எழுப்ப வேண்டும் அப்பனே.இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே நீங்கள் மட்டும் அப்பனே நிச்சயம் பின் ஒரு அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே உயிர் என்பேன் அப்பனே.ஆனாலும் உங்களை இயக்குவது அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பல பரிசுத்தமான வழிகளிலும் கூட அப்பனே எங்கு எங்கோ பின் அதை கொடுக்க வேண்டும் , இதை கொடுக்க வேண்டும் பல ஆன்மாக்கள்.ஆனாலும் நிச்சயம் அப்பனே பந்தத்தில் பிணைந்தது பின் அடியில் இருக்கும் அப்பனே பின்னே இருக்கும்.அவை தன் நிச்சயம் தன்னில் கூட ஒவ்வொரு ஆசை வைத்து கொண்டிருக்கும் என்பேன் அப்பனே.அதாவது நிச்சயம் இப்படி ஆக வேண்டும்,நிச்சயம் எவ்வாறு பின் எதை என்று அறிய உயர வேண்டும் , இன்னும் முயற்சிகள் வேண்டும் , நிச்சயம் பெரிய அளவில் வெற்றிகள் அடைய வேண்டும் என்று அப்பனே.ஆனால் அப்பனே சரியாக தலைக்கு எடுத்து வந்தால் தான் மட்டுமே வெற்றிகள் அடைய முடியும் அப்பா.ஆனாலும் அப்பனே சிலர் பல திருத்தலங்களுக்கு சென்று சென்று அங்கு நிச்சயம் தன்னில் கூட, பல சக்திகள் இருந்ததனால் அவை தானாக பின் நிச்சயம் தன்னில் கூட மேல் நோக்கி வந்துவிடும் அப்பனே. ஆனாலும் நீ கேட்டாயே ? நிச்சயம் ஒரு முறை சென்று வந்தால் ஏன் கிடைப்பதில்லை? அப்பனே பாதி வரும் என்பேன் அப்பனே,அதாவது கால் வாசி தூரம் வரும் ,மீண்டும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே விட்டுவிடுவான் அப்பனே,கீழே வெந்துவிடும் என்பேன் அப்பனே.ஆனால் இவற்றிற்கு வழியாக அப்பனே நிச்சயம் சித்தன் பல திருத்தலத்திற்கு செல்ல முடியவில்லை,இதனால் அப்பனே அவ் ஆன்மாவை மேலிழுத்து நிச்சயம் அப்பனே வைப்பதெல்லாம் அப்பனே, இதனால் சில தியானங்கள்,மூச்சு பயிற்சிகள் செய்தால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட,அப்பனே அறிந்தும் புரிந்தும் கீழ் இருந்து மேல் நோக்கி ஒன்றொன்று உச்சியில் வருகின்ற பொழுது தான் அப்பனே நிச்சயம் தெளிவுகள் பெரும்,சில கர்மாக்களும் அழியும்,அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் தலை உச்சியில் இருந்து கூட பின் மேல் நோக்கி சென்று விடுவார்கள் என்பேன் அப்பனே.அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே , இதனால் கூட அறிந்தும் புரிந்தும் கூட அப்பனே புரிகின்றதா என்பேன் அப்பனே ? இதனால் இதன் மூலம் இருந்து கூட பாவத்தை தொலைக்கலாம் என்பேன் அப்பனே.

அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக நிச்சயம் பின் அவ்வாறு அவ் ஆன்மாவிற்கு முக்தி கொடுக்கும் பொழுது,உந்தனுக்கும் புண்ணிய கணக்கு அதிகமாகும் அப்பா.அப்பனே நல்லவிதமாக அவ்வான்மாக்கள் எதை என்று புரிய சந்தோஷமாக கொடுத்துவிட்டான் என்று மேல் நோக்கி செல்லும் பொழுது இன்னும் உனக்கு புண்ணியங்கள் அதிகமாகி இன்னும் அனைத்தும் நடக்கும் அப்பா.இது தான் விஷயம் என்பேன் அப்பனே. 
இதில் பாவம் கூட,சபித்து செல்லும் ஆன்மாக்கள் கூட உண்டு என்பேன் அப்பனே.அப்பனே இதனால் தான் அப்பனே பல திருத்தலங்களுக்குக் சென்று சென்று அப்பனே அனைத்தும் சீராக்க வேண்டும் என்பேன் அப்பனே,நிச்சயம் தன்னில் கூட இறைவனுக்கு தெரியும் எதை என்று புரிய,அதாவது உன் உடம்பு அவ்வான்மாவிற்கு தெரியாதப்பா,அப்படியே நிச்சயமாக சாதாரணமாக திருத்தலங்களுக்கு செல்கின்ற பொழுது இறைவனை நிச்சயம் இவ்வான்மாக்கள் பார்க்கும் அப்பா.அப்பனே நிச்சயம் தெரிய வைக்கலாம் என்பேன் அப்பனே,நிச்சயம் தியானத்தின் மூலம் என்பேன் அப்பனே,எவையெல்லாம் பின் கண்கள் எடுத்து வந்துவிட்டால் அப்பனே இறைவன் கண்ணனுக்கு தெரிவான் அப்பா.

(இந்த ஆன்மாக்களை கணங்களில் எடுத்து வந்து வைத்துவிட்டால், இறைவனை நம் கண்களாலே பார்க்கலாம்).இதனால் தான் அப்பனே பல ஞானியர்கள் ஒரே இடத்தில் இருந்து கொண்டு பல வழிகளில் அவ்வான்மாக்களை கண்களில் வைத்து கொண்டு குவித்தார்கள் அப்பா,ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை என்பேன் அப்பனே. அப்பனே இதனால் தான் இருக்கும் பின் நிச்சயம் வைத்துக் கொள்ள பல நிச்சயம் எதை என்று கூற ஆண்டுகள் பல நூறு இருநூறு முன்னூறு பின் நிச்சயம் ஒருவரிடம் கூட பின் நிச்சயம் இவ்வாண்டுகள் ஆகலாம் என்பேன் அப்பனே,பின் சித்தர்களுக்கு மட்டுமே புரியும் இதனை.அப்பனே நிச்சயம் தெரிய வைப்பேன் என் பக்தர்களுக்கு என்பேன் அப்பனே எவ்வாறு இழுத்து வருவது என்று அப்பனே.ஆனால் நிச்சயம் அதற்கு தான் பக்குவங்கள் வேண்டும் என்பேன் அப்பனே.பக்குவங்கள் பின் தராமல் அப்பனே நிச்சயம் தன்னில் கூட கொடுத்துவிட்டாலும் பின் அப்பனே நிச்சயம் ஒன்றுமே ப்ரயோஜனம் இல்லாமல் அவன் தனும் பின் எவை என்று அறிய,அதனால் தான் சித்தர்கள் யாங்கள் வந்து பின் அப்பனே உங்களுக்கு இன்னும் அழிவுகளை தான் கொடுத்து கொண்டு இருக்கிறோம் அவ்வளவு தான்.அப்பனே ஆனால் எவ்ஞாபகமும் இருக்க கூடாத என்பேன் அப்பனே.ஞாபகம் பின் எங்காவது சென்றாலும் பின் மேல் எழும்பாதப்பா அது.அப்பனே அதை சொல்லிக் கொடுப்பவனுக்கு பாவம் ஆகிவிடும் என்பேன் அப்பனே.அதனால் நீ சொல்லிக்கொடு முதலில் இதை.அப்பனே நிச்சயம் உடம்பு இருப்பது கூட தெரியப்படுத்த கூடாது.அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பொழுது ஒரு தேவி வந்து அமர்வாள் அப்பா.அப்பனே நிச்சயம் அனைத்தும் தெரிய வைப்பாள் அப்பனே,இதற்கும் பல முயற்சிகள் வேண்டும்.அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவ் தேவி அப்பனே நிச்சயம் தன்னில் கூட இறங்கி இறங்கி சென்று விடுகிறாள் அப்பா உன்னிடத்தில். அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவ் தேவி வருகின்ற பொழுது நிச்சயம் தன்னில் கூட சில எவை என்று அறிய பின்,அதாவது பின் உன் மீது பெண்களுக்கு கோபம் வந்துவிடும் என்பேன் அப்பனே. அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே எவ்வாறு என்று புரிய அப்பனே ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அவ் தேவி உன்னில் கூட அமர்ந்து யோசிக்கின்றாள் அப்பா. (அந்த தேவி ஏன் யோசிக்கின்றார் என்றால் முழுமையாக உட்கார்ந்துவிட்டார் என்றால் , பெண்களால் பிரச்னை வந்துவிடும் என்று யோசிக்கிறார்). அப்பனே அதனால் தான் அப்பனே,சிறு சிறு விஷயங்கள் சொல்வேன் அடிக்கடி அப்பனே.அதனால் எந்த நேரத்தில் சொல்ல வேண்டுமோ அந்த நேரத்தில் சொல்வேன். அப்பனே இதனால் நிச்சயம் தன்னில் எவை என்று புரிய அப்பனே நிச்சயம் அறிந்தும் பல வழிகளில் கூட எதை என்று அறிய அப்பனே,சூரியனின் வெளிச்சம் பின் நிச்சயம் அதிகரிக்க இன்னும் பல வழிகளில் கூட நிச்சயம் அப்பனே நடுவில் தன்னில் கூட ,இருதயத்தின் கீழே நிச்சயம் தன்னில் கூட வெள்ளை நிறம் பின் நிச்சயம் அதிகமாக உள்ளதப்பா,பின் யான் சொல்வேன் இதனை.அப்பனே ஆனால் அங்கு பின் அமர்வது என்பது தேவியே , அவள் அமர்ந்தாள் உந்தனுக்கு தான் பிரச்சனை,அதனால் தான் அப்பனே. அப்பனே இதை பற்றி கூட சொல்கின்றேன்,அங்கு அமர்ந்து விட்டால் இந்த தேசத்தையே நீ ஆள்வாய் என்பேன் அப்பனே.ஆனாலும் அப்பனே பின் பெண்கள் அனைவரும் உன்னை விட்டு சென்று விடுவார்கள் என்பேன் அப்பனே.

அப்பனே ரகசியங்கள் பல உள்ளது நீ ஏன் பிறந்தாய் என்பதெல்லாம் அப்பனே, நீ கேட்காமலே நான் சொல்லுவேன் அப்பனே.அப்பனே இப்பொழுது தான் தொடங்கியிருக்கிறேன் அப்பனே,அடுத்தடுத்து வாக்குகளில் தொடர்ந்து செப்புவேன்.அப்பனே நிச்சயம் எதை என்று புரிய அப்பனே நிச்சயம் அதாவது பின் எச்சரிக்கையாக இரு அப்பனே பின் உன்னிடத்தில் பெண்களும் காதல் வசப்படுவார்கள் சொல்லிவிட்டேன்.அப்பனே நிச்சயம் தன்னில் எதை என்று கூற இவனை ஈர்த்து கொண்டால் நிச்சயம் இவனை வைத்தே சாதித்து கொள்வோம் என்றும் நினைப்பார்கள்.அப்பனே இதனாலும் இல்லத்தில் பிரச்சனைகள் வருமப்பா.அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அப்பனே எதை என்று அறிய இல்லாதோர்களே இவனை பெண் பித்தன் என்று சொல்வார்கள் கூட.அப்பனே நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும் கூட அதனால் அப்பனே இன்னும் கூட சொல்வேன் பல பல உண்மைகளை அப்பனே.அப்பனே அறிந்தும் புரிந்தும் இதனால் நிச்சயம் நேரத்தை கணி நான் சொல்லிவிட்டேன்.

சுவடி ஓதும் மைந்தன் : அய்யா இப்பொழுது உங்களை நேரத்தை பார்க்க சொல்லுகிறார்.

அடியவர் : 12:37

சுவடி ஓதும் மைந்தன்: 12 (1 +2  = 3 , 3  என்பது குருவின் இடம்) , அடுத்து 3 +7  = 10  , 1 +0  = 1  , 1  என்பது மேஷ ராசி, இப்பொழுது அங்கிருந்து கழிக்க சொல்லுகிறார் அங்கிருந்து ஐந்தாம் இடம்.ஐந்தாம் இடம் சிம்ம ராசி.

அடியவர்: இப்பொழுது பிரச்னையே சிம்ம ராசியால் தான்.

சுவடி ஓதும் மைந்தன்: இது பூர்வ ஜென்ம தொடர்பு.அப்பொழுது ஐந்தாம் இடத்தில் இருந்து பூர்வ ஜென்ம தொடர்பு உங்களை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது. இதை வைத்து நீங்கள் தொடர்ந்து கொள்ளலாம் , இப்படி தான் கண்டுபிடிக்க வேண்டும் என்று குருநாதர் கூறுகிறார். அடுத்து ஆறாம் இடம், அது கன்னி ராசி, அப்படி என்றால் பெண்களால் தான் தொந்தரவு மற்றும் எதிரி என்று உணரலாம்.அடுத்து ஏழாம் இடம் என்பது துலாம் ,அதுவும் பெண் தான் , அப்பொழுது உங்களுக்கு அவர்களால் தான் பிரச்னை என்று குருநாதர் பட்டென்று சொல்லி விட்டார் பாருங்கள் ! அப்பொழுது 8  ஆம் இடத்தில் யாரோ காத்துக் கொண்டிருக்கிறார், முருகப்பெருமானோ யாரோ காத்துக் கொண்டிருக்கிறார்.ஒன்பதாம் இடத்தில் குரு வந்து விட்டார், அதனால் தான் நீங்கள் தப்பித்து கொண்டிருக்கிறீர்கள் அய்யா.ஒன்பதாம் இடத்தில் குரு இருந்ததினால் தான் இவர் கூடவே இருந்து காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். அடுத்து 10  , 11  என்பது லாபஸ்தானம், லாபத்தை கொடுத்து அடிப்பார்கள் அய்யா.

குருநாதர்: அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவை வேறு பல மக்களுக்கு தெரிவித்தால் உண்மை நிலை என்ன என்று உனக்கு புரியும்.

சுவடி ஓதும் மைந்தன்: இதை நீங்கள் பல மக்களுக்கு தெரிவிக்கும் பொழுது, நீங்கள் மக்களின் கர்மத்தை சரியாக கணிக்கலாம்.

குருநாதர்: அப்பனே இன்னும் மாற்று முறைகள் யான் சொல்வேன் அப்பா.  அப்பனே நிச்சயம் தன்னில் கூட அங்கு அங்கு சென்று வந்தாலே அப்பொழுது தான் பிரச்சனைகள் தீரும். அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவ்வான்மா பல பிறவிகளில் கூட அப்பனே நிச்சயம் பல பல ஆலயங்களுக்கு கூட சென்று இருக்கும் என்பேன் அப்பனே, அவ் ஆலயங்களுக்கு எல்லாம் சென்று வந்தால் தான் அப்பனே நிச்சயம் இப்பிறப்பில் உண்மை நிலை தெரியும் அப்பா,இல்லை என்றால் தெரியாதப்பா.அப்பனே பாவம் இருந்தால் அலைந்து கொண்டே இருக்க வேண்டும் என்பேன் அப்பனே.நீ சொன்னாயே ஏன் நடக்கவில்லை என்று,புண்ணியங்கள் இருந்தால் அப்பனே யாங்கள் தெரிவித்து விடுவோம் அப்பனே,சுலபமாக முடிந்துவிடும் என்பேன் அப்பனே.

அடியவர்: அய்யா,இவருடைய குரு சொல்லி எல்லா கோவில்களுக்கும் சென்று வருகிறார், நிறைய கோவில்கள்,பயங்கர அலைச்சல்

சுவடி ஓதும் மைந்தன்: அதனால் தான் ஒன்பதாம் இடத்தில் இருந்து குரு அவரை இயக்கி கொண்டிருக்கிறார்.

குருநாதர்: அப்பனே இன்னும் இன்னும் புதுமையான விஷயங்கள் யான் சொல்லுகின்ற பொழுது நிச்சயம் விளங்கும் அப்பா உந்தனுக்கு.

ஓம் லோபமுத்ரா சமேத அகத்தியர் பெருமான் திருவடிகள் போற்றி !!

குருவருள் திருவருள் தொடரும் !!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. Ohm Agatheesaya Namaha !!! Ohm Namah Shivaya !!!

    ReplyDelete
  2. ஓம் அகஸ்தியர் மாதா லோபமுத்ரா தேவி திருவடிகள் போற்றி.. சித்தன் அருள் வலைத்தள குழுவினருக்கு குரு அருளால் இறை அருளால் நலமுண்டாகட்டும்.. இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள்..தங்கள் சேவைக்கு நன்றி

    ReplyDelete