​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 24 October 2025

சித்தன் அருள் - 1964 - அன்புடன் அகத்தியர் - மதுரை கூட்டுப் பிரார்த்தனை வாக்கு ( 05.அக்டோபர்.2025) - பகுதி 2




மதுரை கூட்டுப் பிரார்த்தனை வாக்கு ( 05.அக்டோபர்.2025) - பகுதி 2

அகத்திய மாமுனிவர் அருளால் நடைபெற்ற சிவபுராணம் கூட்டுப் பிரார்த்தனையில் , இடைக்காடர் சித்தர் அருளிய மதுரை கூட்டுப் பிரார்த்தனை வாக்கு ( 05  October  2025) - பகுதி 2 

வாக்குரைத்த மாநகர்:- அன்னை மீனாட்சி தேவி உடனுறை சொக்கநாதர் அருளும் மதுரை மாநகர்.

நாள் : 05.10.2025 ஞாயிற்றுக்கிழமை. நேரம் : காலை 8 மணி - மாலை 6 மணி வரை
இடம் : லட்சுமி சுந்தரம் ஹால் & T S ராஜம் ஆடிட்டோரியம், 15.A, கோகலே ரோடு , தமுக்கம் மைதானம் எதிரில், தல்லாக்குளம், மதுரை - 625002.

அழகாக உலகமெல்லாம் ஆளக்கூடிய இறைவா, இறைவியே போற்றியே பணிந்து பணிந்து பரப்புகின்றேனே இடையன் அவன்.


(இவ்வாக்கின் முந்தய பகுதி - சித்தன் அருள் - 1960 -  பகுதி 1.
https://siththanarul.blogspot.com/2025/10/1960-1.html   )


இடைக்காடர் வாக்கு :- இவை தனக்கும் நிச்சயம் சித்தர்கள். யாங்கள் வருங்காலத்தில் வழியும் வகுப்போம். 


இடைக்காடர் வாக்கு :-  இவை தன் இத்தனை விஷயத்தில் காப்பாற்றுவது எளிதல்ல. 


இடைக்காடர் வாக்கு :- எவை என்று பின்னி பிணைந்துள்ளது. விதியின் ரகசியங்கள் உங்களிடமே. இவை எவ்வாறு பின் மாற்ற? 


இடைக்காடர் வாக்கு :- இதைத்தன் அறிவித்து சித்தர்களும் ஏற்கனவே அதாவது ஒரு ஆன்மாவுக்கு பல கோடி பிறவிகள். அப்பிறவிகள் என்னென்ன தவறு செய்தீர்களோ, அதை அதாவது ஒரு மணி நேரமோ அல்லது ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களவோ அதிகமாக ஒரு பிறவியில் கர்மா இருந்தால், இன்னும் அதாவது பாவம் இருந்தால், தன்னைத்தானே அழித்து விடும். 


—----------------------------------------------------------------
(ஒரு ஆன்மா கோடிக்கணக்கான பிறவிகளை அனுபவித்திருக்கிறது. இப்பிறவியில், ஒவ்வொரு அரை மணி நேரத்திலும் அந்த ஆன்மா ஒரு பிறவியின் கர்மத்தை அனுபவிக்கிறது. இதன் மூலம், 60 வருட வாழ்க்கைக்குள் ஆயிரம் கோடி பிறவிகளில் செய்த பாவங்களை அனுபவித்து தீர்க்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. இது ஒரு மிகச் சூட்சுமமான ஆன்மீக உண்மை என கூறப்படுகிறது)
—----------------------------------------------------------------


இடைக்காடர் வாக்கு :-  என்ன நடக்கும் என்பதை நீங்கள் பின் அறிய மாட்டீர்கள். சித்தர்கள் யாங்கள்தான்? ஐயோ, பாவம் என்று. இவைதன் நீங்கள் எப்படித்தான் வாழப்போகின்றீர்கள்? இறைவனை நினைத்து, ஐயோ, பாவம்!  இவையன் அறிவித்த இதனாலே இறைவன் பெயர் பின் பாசங்கள் நீங்கள். அதனாலே சொல்ல வந்தோமே யாங்கள். எவை என்று பிறந்து, எவை என்று வளராமலே மீண்டும் எதை என்றும் தெரியாமையே. 


சுவடி ஓதும் மைந்தன் :- ( பிறந்தோம். ஆனால் வாழ்க்கை எதற்காகவோ தெரியாமல், வீணாகச் செல்கிறது. நம்மால் உணர முடியாமலே, காலம் கையோடு போய்விடுகிறது.) 


இடைக்காடர் வாக்கு :- இவைதன் அதனால் ஒவ்வொரு எதை என்று அறிய நிச்சயம். அதாவது எத்தனை அப்பிறவிகளில் நீங்கள் சிறிதாவது புண்ணியம் செய்திருக்க வேண்டும். அப்புண்ணியத்தை அழகாக யாங்கள் எடுத்து வருவோம்.  இதனால்தான் எப்பொழுதும் எதை என்று புரிய, இறைவனை நினைத்துக் கொண்டே இருங்கள் என்று சொல்வது பெரியோர்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :- (இறைவனை எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பது தான் வாழ்க்கையின் உண்மையான வழி. அப்படி இருந்தால் பாவமும் புண்ணியமும் ஏற்படாது. வாழ்க்கை ஒரு தொடர்ச்சியான பயணமாக, ஒவ்வொரு அரை மணி நேரத்திலும் ஒரு பிறவியின் கர்மா அனுபவிக்கப்படுகிறது. இது ஒரு தொடரும் டிரான்சாக்ஷன் போல. பாவங்களை அதிகமாகச் சேர்த்தால், அதை யாராலும் தீர்க்க முடியாது. அதனால்தான், இறைவனையே ஒரே துணையாகக் கொண்டு, இறைவனையே நினைத்து வாழ வேண்டும் என்பதே முக்கியமான செய்தி.) 




இடைக்காடர் வாக்கு :-  பயத்தை போக்க எப்பொழுதும் ருத்ராட்சை பின் ஈசனாக எண்ணி, ஈசனால் ஒருவனால் மட்டுமே காப்பாற்ற முடியும். 


அடியவர் :-  ( பாவம், புண்ணியம் என எதுவும் நமக்குத் தெரியாது; எல்லாம் இறைவனின் கட்டுப்பாட்டில்தான். அதனால்தான், ருத்ராட்சத்தை அணிவது முக்கியம். எல்லோருக்கும் அதை அணிய சொல்ல வேண்டும். வரவிருக்கும் காலங்கள் சீரானவை அல்ல, எனவே ருத்ராட்சம் பாதுகாப்பாக இருக்க உதவும்.)




இடைக்காடர் வாக்கு :- இவைதன் இதனாலே யான் இடையன் என்று 


சுவடி ஓதும் மைந்தன் :- உங்களையெல்லாம் மேய்க்கிறோம்ல. அதனால அதான் என் பேரு இடையான்றாரு.


( அடியவர்கள் பலத்த சிரிப்புகள் )


இடைக்காடர் வாக்கு :- அறிந்தும் ஆடு மேய்த்தேன் . பின் பசும் கன்றுகளும் மேய்த்தேன். பின் பன்றிகளையும் மேய்த்தேன். ஆனால் மனிதனை மேய்க்க முடியவில்லையே. 


( அடியவர்கள் பலத்த சிரிப்புகள் )


இடைக்காடர் வாக்கு :- அறிந்தும் ஆடுகளும் யார் சொன்னால் கேட்கும். மனிதனோ பின் அறிந்தும் எவை என்று புரியாமலும் (மனுஷன் கேட்க மாட்டேன் என்று) 


இடைக்காடர் வாக்கு :- ஏனென்றால் விதி ஜெயிக்க வேண்டியது அல்லவா? அதனால் மற்றொருவன் பின் குறை கூறி அவையெல்லாம் நம்பாதே என்று சொல்லிவிடுவான். 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப நீங்க நல்லது செஞ்சா என்ன பண்ணுவாங்களாம்? விதி ஜெயிக்கணும்ல. விதியை ஜெயிக்கவைக்க இன்னொருத்தன் வருவானாம்.  ஏய், அதெல்லாம்  ( இறைவன் , சித்தர்கள் வாக்குகள் ) நம்பாதடா. அதெல்லாம் பொய்டா. அதெல்லாம் பொய் என்று சொல்வார்களாம். (இப்படி உங்களை கெடுப்பதற்கு ) அடுத்த அடுத்த  லைன்ல வருவார்களாம் . ஏன்னா விதியை ஜெயிக்கவைக்க. ( இப்படி உங்கள் மனதை கலைப்பதுவும் விதியின் விளையாட்டே என்று உணருங்கள்.) 


இடைக்காடர் வாக்கு :- எவை தன் உன் புத்தியை சரியாக உபயோகித்தால், பின் புத்திமான் நீ. சரியாக உபயோகிக்கவில்லை என்றால், (மற்றொருவன்) அவன் புத்திமான். 


இடைக்காடர் வாக்கு :- சரியாகவே இறைவன் அழகாக உறங்கிக் கொண்டிருப்பான். அறிந்தும் கூட எதை என்று கூட ஆழ்ந்த நித்திரையில். இதை யான் எடுத்துக்காட்டாகவே கூறுகின்றேன். ஐந்து ஆறு அறிந்து கூட அதில் எழுந்து நீங்கள் பதிகங்களை பாடினாலும், பின் தூங்கச் செல்வான். அதாவது பின் இரவு ஏழு எவை என்று கூட எட்டு எவை என்று அறிய இதனுள்ளே பாடல்கள் பாடினால், பின் வென்று விடலாம் நீங்கள். 




சுவடி ஓதும் மைந்தன் :- ( தினமும் இரண்டு மணி நேரம் இறைவனுக்காக ஒதுக்க வேண்டும்:
காலை 5 மணி முதல் 6 மணி வரை
மாலை 7 மணி முதல் 8 மணி வரை )


இடைக்காடர் வாக்கு :- அனைத்தும் ஒதுக்கி ஒதுக்கத் தெரிந்த மனிதனுக்கு தன்னை பற்றி சிந்தனையே இல்லை. 


சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாத்துக்கும் நேரம் ஒதுக்குறீங்கப்பா. ஆனா உங்கள் கஷ்டத்தை தீர்ப்பதற்காக நீங்கள் நேரம் ஒதுக்கவே இல்லை அப்பா. 


இடைக்காடர் வாக்கு :- நிச்சயம் பின் தேவையில்லை. இறைவனுக்காக ஒதுக்குங்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப  இறைவனுக்காக நேரம் ஒதுக்குங்கள். 


இடைக்காடர் வாக்கு :- படைத்தவன் அவனே. அனைவரும் ஒதுக்குகின்றார்கள். நீங்கள் தான் ஒதுக்கவில்லை உலகத்தில். 


அடியவர் :-   (பல ஜீவராசிகள் இறைவனை நினைத்து நேரம் ஒதுக்கி வழிபடுகின்றன. ஆனால் மனிதன் மட்டும் தான் அந்த ஆன்மீக நேர ஒதுக்கீட்டை செய்யவில்லை)


இடைக்காடர் வாக்கு :- இதனால்தான் அங்கங்கும்,  பின் வெவ்வேறு, எத் தெய்வத்தை வணங்கினாலும்,  பின்பற்றி தான் கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் தான் இல்லை. 


சுவடி ஓதும் மைந்தன் :- ஆமாம் ஐயா, எல்லோரும் (மதத்தினரும்)  நேரம் ஒதுக்குகிறார்கள். (உலகில் எல்லா மதத்தினரும்,  தினமும் குறிப்பிட்ட நேரத்தை இறைவனுக்காக ஓதுக்குகின்றார்கள்.)


இடைக்காடர் வாக்கு :- ஆனால் நீங்களோ பின் இறைவனுக்காக நேரம் ஒதுக்காமல், அனைத்தும் செய்துவிட்டு இறைவன் காக்க வேண்டும் என்று (எண்ணங்கள்).


இடைக்காடர் வாக்கு :- இதனால் ஒவ்வொரு  நேரங்கள் (600)  கூட நிச்சயம் நோய்களாகவும், வருத்தங்களாகவும், மனக்குழப்பங்களாகவும், இன்னும் என்னென்னவோ.


(ஒவ்வொரு நேரமும் நோய்கள், மனக்குழப்பங்கள் மாறி மாறி வருகின்றன.)


இடைக்காடர் வாக்கு :- ஆனாலும் அத்தனை விலக்குவதற்கும் யாங்கள் தயாராக இருக்கின்றோம். கவலை விடுங்கள். 


இடைக்காடர் வாக்கு :- இன்னும் சித்தர்கள், அகத்தியன் கண்டுபிடித்ததெல்லாம் அதாவது கிரகங்கள் எப்படி, நட்சத்திரங்கள் எப்படி அதிகமாக வேகமாக செல்லுகின்ற பொழுது, பின் அதன் இயக்க ஆற்றல் எல்லாம் மனிதனை தாக்கி உடனே அழித்து விடுவதாக அவையெல்லாம் சொல்கின்றேன். எந்நேரங்கள் எங்கு செல்லக்கூடாது என்று. 


இடைக்காடர் வாக்கு :- சரியாகவே ஒருவனுக்கு எப்படி பின் அறிந்தும் இறப்பு ஏற்படுகின்றது. சரியாகவே அவன் நட்சத்திரம் அறிந்தும், இதைத்தன் பங்கு போட அறிந்தும், அதிலிருந்து ஒன்பதை கூட்ட. இவை, இவை இரண்டிற்குமே சரி சமமாக பாதியில் பார்த்தால், ஒரு நட்சத்திரம் அன்றைய தினத்தில் சரியாக நிச்சயம் பின் முழு இரவில் பயணிக்கக் கூடாது. 


(இதன் ரகசியங்கள் தெரிந்த அடியவர்கள் இங்கே கமெண்ட் செய்யவும். பிறருக்கும் உதவியாக இருக்கும்.)


இடைக்காடர் வாக்கு :- இவைத்தன் அறிந்து பின் உங்கள் நட்சத்திரத்திற்கு அறிந்தும் புரிந்தும், அதாவது பின் பத்தாவதாக நிச்சயம் சுழலுகின்ற பொழுது, அங்கே நீங்கள் பேசக்கூடாது. சண்டைகள். 


சுவடி ஓதும் மைந்தன் :- (ஒவ்வொருவரும் தங்களது நட்சத்திரத்திலிருந்து பத்தாவது நட்சத்திரம் நாளில் பேசக்கூடாது. பேசினால் சண்டை ஏற்படும்.)


இடைக்காடர் வாக்கு :-  உங்கள் நட்சத்திரம்  பின் இருபதாக (20ஆம் நட்சத்திரம்) அறிந்தும் புரிந்தும் கூட. அதாவது கணவன்மார்கள் அன்றைய தினத்தில் அமைதியாக மௌனம் காத்தல். 


சுவடி ஓதும் மைந்தன் :- (உங்கள் நட்சத்திரம் அதில் இருந்து இருபதாம் நட்சத்திரம் நடக்கின்ற அந்த நாளில் கணவன்மார்கள் அமைதியாக மௌனமாக இருக்க வேண்டும். அப்ப இருபதாக  வரும்பொழுது, உங்க வீட்ல நீங்க சண்டை போடக்கூடாது. அன்னைக்கு சண்டை போட்டீங்கன்னா, சண்டையே போயிட்டே இருக்கும்.)


இடைக்காடர் வாக்கு :- இவையெல்லாம் எழுதி வைத்தது கலியுகத்தில். பின் எப்படியாவது அடித்துக் கொள்ளட்டும் என்று அனைத்தும் அழிந்து போயிற்று.  (800)


(மனிதர்களே இதனை அழித்துவிட்டனர்)


இடைக்காடர் வாக்கு :- பின் ஏகன் இதை அறிவித்து, நிச்சயம் இவை என்று வருகின்ற பொழுது, பின் ஒன்பதாவது அன்றைய தினத்தில் சில முயற்சிகள் மேற்கொள்ள நன்று. 


சுவடி ஓதும் மைந்தன் :- (ஒருவர் தன் நட்சத்திரத்தை அறிந்து, அதன்பின் ஒன்பதாவது நட்சத்திரம் நாளில் சில முயற்சிகளை மேற்கொண்டால் நன்மை ஏற்படும். அந்த நாளில் முயற்சி செய்தால் பலன்கள் ஏற்படும்.)


இடைக்காடர் வாக்கு :- எதை அறிவித்த பின் ஞாயிறு அறிந்தும், இவை தன் உத்திராடத்தை கடக்கின்ற பொழுது, பின் வாகனத்தில் பயணிக்கக்கூடாது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  (சூரியன் (ஞாயிறு) உத்திராட நட்சத்திரத்தில் பயணிக்கும் நாளில், ஞாயிற்றுக்கிழமையிலும் உத்திராடம் நட்சத்திரம் சந்திக்கும்போது, வாகனத்தில் அதிக தூரம் பயணிக்க வேண்டாம். அந்த நாளில் பயணம் தவிர்ப்பது நன்மை தரும்)


இடைக்காடர் வாக்கு :- இவைதன் அறிவித்து, சிந்தித்து பாருங்களேன். 


இடைக்காடர் வாக்கு :-  ஞாயிறு பின் பழுது  உடம்பில் உள்ள, அன்றைய தினத்தில்  எதை உட்கொண்டாலும், நிச்சயம் உடம்பு ஏற்காது. உடம்பில் நோய்கள் வந்துவிடும். அன்றைய தினத்திலே  பச்சை வகை  காய்கறிகளும் உண்ட நன்று. 


சுவடி ஓதும் மைந்தன் :- (ஞாயிறு காலத்தில் பச்சை வகை காய்கறிகள் மட்டுமே உணவேண்டும். அதை மீறி பிற  உணவுகளைச் சாப்பிட்டால், நோய் வருவது உறுதி. இது அனைவருக்கும் பொருந்தும்.)


இடைக்காடர் வாக்கு :-  பின் அன்றைய தினத்திலே எதை என்று அறிய, பின் சூரியன், பின் வெளிச்சத்தில் அறிந்தும் பலமாக பச்சை காய்கறிகளை… 


சுவடி ஓதும் மைந்தன் :- ( அன்றைய தினத்தில் பச்சை காய்கறிகளை சூரியன் வெளிச்சத்தில் வைத்து, அதன்பின் சாப்பிட வேண்டும். இது சூரிய சக்தியை உணவில் சேர்க்கும் ஒரு ஆன்மீக வழிமுறை)


இடைக்காடர் வாக்கு :- இவை வெல்பவன் பின் இல்லை. 
சுவடி ஓதும் மைந்தன் :-  (இவை வெல்லக்கூடியவர் யாரும் இல்லை; இதுவரை யாரும் இதைச் செய்ததில்லை. எனவே, அனைவருக்கும் நோய் ஏற்படும் என்பதே பொது)
இடைக்காடர் வாக்கு :- இவை அறிவித்து வருபவரின் காலத்தில், உங்கள்  பிள்ளைகளுக்காவது நல்லதாகட்டுமே. 


இடைக்காடர் வாக்கு :-  இன்னும் சரியான மரண விகிதத்தை கூட கணிக்கலாம். பின் அறிந்தும் கூட ஆனாலும் இதையும் யான் பிரம்மனிடமே கேட்க வேண்டும். 


இடைக்காடர் வாக்கு :- பின் மனிதருக்கு பயங்கள் தோன்றிவிடும். அதனால் இறைவன் இருக்கின்றான் என்று சென்று கொண்டே இருங்கள். 


இடைக்காடர் வாக்கு :- ஒவ்வொரு நாளும் எதை என்று அறிய மனிதன் எங்கு செல்கின்றான். கூறுங்கள். சரியாக பயணத்தில் தான் சென்று கொண்டே இருக்கின்றான். 


இடைக்காடர் வாக்கு :- அறிந்தும் மரணத்துக்கு என்னென்ன வேண்டுமோ, அதை மட்டும் உபயோகித்து சரியான வழியில் செல்கிறீர்கள். 


(அடியவர்கள் சிரிப்பு அலைகள்)


இடைக்காடர் வாக்கு :-  அப்பா, இது சரியா? 


சுவடி ஓதும் மைந்தன் :- ( இந்த பிறவி இறைவன் கொடுத்த ஒரு வாய்ப்பு. அதைப் பயன்படுத்தி பிறவிச் சுழற்சியை முடிக்க வேண்டும். ஆனால், நாம் செய்யும் செயல்கள் மறுபிறவியை மீண்டும் ஏற்படுத்தும் வகையில்தான் இருக்கின்றன. இது சரியா எனக் கேட்கிறார்கள்.) 


இடைக்காடர் வாக்கு :-  ஆனால் ஒரு பாதை இறைவனிடத்தில் செல்ல. ஆனால் அவ்வாறு அவ் பாதை நாங்கள் வாருங்கள், வாருங்கள் என்று அழைக்கின்றோம். யாருமே வருவதில்லை. 


இடைக்காடர் வாக்கு :- ஆனாலும் கலியுகத்தில் நிச்சயம் பின் நின்றிருப்பான். கெடுப்பதற்கே ஒருவன். (இறை வழி) இவ்வழியில் வராதே. (பாவ / கர்ம) அவ்வழியிலே சென்றுவிடு (என்று கூறிக்கொண்டே உங்களை திசை திருப்புவான் எப்பொழுதும்).


இடைக்காடர் வாக்கு :-  இப்படித்தான் அப்பா. ஒருவன் ஒருவன் பக்தனாகவே இருந்து,(1200)  பக்திக்குள்ளே இருந்து குறை சொல்லி பின் எப்படி எப்படியோ சொல்லிக் கொண்டிருக்கின்றான். மூடன் என்பேன் அவனை. 


இடைக்காடர் வாக்கு :-  இதை அறிவிக்க நிச்சயம் யாங்கள் இருப்போம். பின் அறிந்தும் மாற்றி விடுவோம். 


இடைக்காடர் வாக்கு :-  எதை என்று அறிய எங்களிடத்தில் இருக்கும் புண்ணியத்தை உங்களுக்கு வழங்குகின்றோம். அகத்தின் சொன்னதை போலே.


இடைக்காடர் வாக்கு :-  இவை அறிவித்து எந்நேரத்திலும் பின் யாங்கள் வருவோம். உங்களை காக்க.


இடைக்காடர் வாக்கு :-  எதற்கு என்றால் இன்னும் புண்ணியம் சேர்க்க பல ஆண்டுகள் ஆகும் நீங்கள்.  இதனால் தெரிவிக்கின்றோம். 


இடைக்காடர் வாக்கு :-  ஆனாலும் பின் நீங்களோ பாவங்கள். நல்லதை எடுத்துரைக்க ஆள் இல்லையே. 


இடைக்காடர் வாக்கு :- இவைதன் நிச்சயம் யாங்கள் பின் பக்குவப்படுத்தி, பின் திருத்தி, உங்களை நீங்கள் வெல்வீர்களாக. 


இடைக்காடர் வாக்கு :- இன்னும் பின் தாந்திரீகம் கூட ரிஷிமார்கள் சொல்கின்ற பொழுது, அதை சரியாக பயன்படுத்தி உயர்வீர்களாக. உங்கள் குடும்பம் செழிப்பாக.
சுவடி ஓதும் மைந்தன் :-  (இன்னும்  ரிஷிமார்கள் தாந்திரீக ரகசியங்களை கூறும்போது, அதை சரியாகப் பயன்படுத்தினால், நீங்கள் மற்றும் உங்கள் குடும்பம் உயர்வடையும், செழிப்படையும். அந்த ரகசியங்களை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.)
இடைக்காடர் வாக்கு :- இப்பொழுது யான் ஒன்றை சொல்கின்றேன். சமமாக நட்சத்திரத்தை சரியாகவே, பின் நவதானியங்களில் பின் இட்டு,  (1400)  ஒவ்வொரு இதிலும் அறிந்தும் கூட சரவணபவ எதை என்று அறிய. பின் நிச்சயம் அறிந்தும் இவை ஒன்று ஒன்றுக்கு பின் தீபங்கள். 
சுவடி ஓதும் மைந்தன் :-  (நவதானியங்களை நன்றாக அரைத்து, அதில்  அறுகோண நட்சத்திரம் வரைய  வேண்டும். அதன் அருகில் சரவணபவ  எழுத்துக்களை எழுதவேண்டும். இங்கு உள்ள படத்தில் காட்டியபடி.. சரவணபவ ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தனித்தனியாக தீபங்கள் ஏற்ற வேண்டும். சரவணபவ என்பதைக் குறிப்பிட்டு,  ஆறு தீபங்கள் ஏற்ற வேண்டும்.)
—------------------------------------------------------------------------------
(வீட்டில் பூஜை அறையில் தரையை சுத்தப்படுத்தி அங்கு முருகனின் சரவணபவ நட்சத்திரம் போல் நவ தானியத்தில் ஒரு நட்சத்திரம் செய்ய வேண்டும் முதலில் நீங்கள் நட்சத்திர கோடு வரைந்து அந்த கோடுகளுக்கு மேலே நவதானியங்களை அரைத்து  அனைத்தையும் கலந்து பொடியாக்கி அந்த பொடியில் நட்சத்திரத்தை உருவாக்கலாம் அதாவது கோலம் வரைவது போல்)


ச.      தீபம்
ர.      தீபம்
வ.    தீபம்
ண.  தீபம்
ப.     தீபம் 
வ.    தீபம்


மொத்தம் ஆறு தீபங்கள்.)
—--------------------------------------------------------------------------


இடைக்காடர் வாக்கு :- இவையன் அறிவித்த நலங்களாகவே இவையன் இதைத்தன் நிறுத்தி, இதையன் பின் புரிய அறியாத அளவிற்கு கூட இவைதன் பின் அருந்தும் எவை என்று அனுதினமும் இப்படி இருக்க. பின் முருகா, முருகா என வேண்டி. 


சுவடி ஓதும் மைந்தன் :- (இதேபோல அறுகோண நட்சத்திரம் வரைந்து, நன்மைகளுக்காக தினமும் முருகா முருகா என வேண்டி, சரவணபவ அதை எழுதி, தொடர்ந்து வழிபடவேண்டும்). 


இடைக்காடர் வாக்கு :- இவைதன் ஒவ்வொரு நாளிலும் பின் நதிகளிலோ அறிந்தும் எதை என்று புரிய இடவேண்டும். அல்லது எதை என்று பின் ஜீவராசிகளுக்கும் கூட 


சுவடி ஓதும் மைந்தன் :- (சரவணபவ  மற்றும் அறுகோண நட்சத்திரம் வரைந்த அந்த நவதானிய மாவு பொடிகளை பூசை முடித்த பின்னர்  ஒவ்வொரு நாளும் நதிகளிலோ அல்லது ஜீவராசிகளுக்கு கொடுக்கவேண்டும்.)


இடைக்காடர் வாக்கு :- இவையன் செய்ய, செய்ய புண்ணியம் பெருகும். 


மதுரை  அடியவர் :- ஒரு அருமையான வரி சொல்லிக் கொடுத்திருக்காங்க. இப்படி செய்ய , செய்ய புண்ணியம் நமக்கு பெருகும். 


இடைக்காடர் வாக்கு :- எவையின் அத்தீபத்தை அரசன் இலை அறிந்தும் எவை என்று கூற. 


சுவடி ஓதும் மைந்தன் :-  (அந்த 6 தீபத்தை , 6 அரசு இலையில தான் ஏற்றவேண்டும்.)


இடைக்காடர் வாக்கு :- இவைதன் உணர பின் எவை என்று அறிய நவதானியங்களும், அதாவது நவதினங்களுக்கு பிறகு எவை என்று அறியாக சரியாகவே பின் நிச்சயம் ஆற்றின் பாதையிலே இடவேண்டும்.  இதைதன் அறிய பின் தீபத்தை இறைவனே அணைத்து எதை என்று நீயே என்று. 
சுவடி ஓதும் மைந்தன் :-  (இந்த பூசையை ஒன்பது நாட்கள் செய்து விட்டு ஒன்பது நாட்களுக்குப் பிறகு மீதி இருக்கும் நவதானியத்தை வாழை இலையில் அல்லது பாக்கு தட்டில் வைத்து நதியில் ஆற்றின் போக்கு அதாவது நீரோட்டத்தின் வழியாக மிதந்து செல்லுமாறு விட வேண்டும். அந்தத் தட்டில் அல்லது இலையில் ஒரு தீபம் ஏற்றி வைத்து இறைவா அனைத்தும் நீயே!!! என்னுடைய அனைத்து கர்மங்களையும் பாவங்களையும் எடுத்துக்கொள் இறைவா அருள்புரிவாய் இறைவா.  புண்ணியத்தை அருள்புரிவாய் இறைவா என்று வேண்டிக் கொண்டு)
இடைக்காடர் வாக்கு :- ஒவ்வொரு முறையும் இவை செய்தல் அவசியம். அறிந்தும் இதற்கும் புண்ணியம் வேண்டும்.  அதனால்தான் யாங்கள் புண்ணியம் தருகின்றோம் என்று.


( நதிநீர் தீபம்  வழிபாடு ஓவ்வொரு முறையும், 9 நாட்கள் பூசை முடித்தபின்  அவசியம் செய்யவேண்டும். ) 


இடைக்காடர் வாக்கு :- எவை இன்னும் புதுமையான விஷயங்கள் எல்லாம் யாங்கள் சொல்வோம். வருங்காலத்தில் 


இடைக்காடர் வாக்கு :- இதனால் நீங்களும் கற்றுக்கொள்ளுங்கள். பின் மற்றவருக்கும் உதவுங்கள். புண்ணியங்கள் இவ்வாறாகவே அவர்கள் பின் உதவ உதவ, அவர்களுக்கு புண்ணியம், அவர்களுக்கு புண்ணியம் சென்று கொண்டே இருக்கும். 


இடைக்காடர் வாக்கு :- அப்பா, இவ்வாறுத்தான் தாக்க முடியும். உங்களை இதுதான், 


இடைக்காடர் வாக்கு :- குழந்தைகள் முதலில் பின் அறிந்தும் சிறு சிறுது பின் சொல்லிக் கொடுத்தாலே, அனைத்தும் தெரிந்து கொள்ளும். 


இடைக்காடர் வாக்கு :- வெற்றியை பெறுவது சிலருக்கு இவ்வுலகத்தில் பின் அதாவது என்னென்ன தேவை என்பவை எல்லாம் அறிந்தும் அவை தேவை. இவை தேவைகள் பல தேவைகள் இருக்கும் அல்லவா? வாழுகின்ற பொழுது அவையும் கூட எப்படி பெறுவது என்பது ரிஷிமார்கள் உரைப்பார்கள். 


இடைக்காடர் வாக்கு :- இதைத்தன் ஒருவனுக்கு பின் கற்பிப்பது புண்ணியமா? அனைவருக்கும் கற்பிப்பது புண்ணியமா? சொல்லுங்கள், நீங்களே 


அடியவர்கள் :- அனைவருக்கும் கற்பிப்பதுதான்.


இடைக்காடர் வாக்கு :- அப்பப்பா. மனிதன் இப்படித்தான் ஒருவனுக்கு மட்டும் சொல்லிச் சொல்லி பாவத்தை சம்பாதித்துக் கொண்டே இருக்கின்றான். 


இடைக்காடர் வாக்கு :- இதையன் அறிவித்து நிச்சயம் அதாவது பின் யாங்களே சில கர்மாக்களை அகற்றுவோம். 

இடைக்காடர் வாக்கு :- இவைதன் எப்பொழுதும் இல்லத்தில் ஒரு தீபமாவது எரிந்து கொண்டே இருக்க வேண்டும். இதுதான் உத்தமம். 

இடைக்காடர் வாக்கு :- இதை என்று நிரூபிக்க. இதனுள் பின் நவதானியங்களின் விட்டே அடியிலே தங்கிவிட. 

(நவதானிய பொடிகளை அடியில் பரப்பி அதன் மீது தீபம்)

இடைக்காடர் வாக்கு :- இதை ஏன் சொன்னேன்? பின் கிரகத்திற்கும் இதற்கும் சம்பந்தங்கள் உண்டு. போக போக நீங்கள் அறிவீர்களாக. இவைதன் அறிய சொல்லிவிட்டேன். மீண்டும் வருகின்றேன். இவைதன் பின் மீண்டும் உங்கள் செயலை தொடங்குங்கள். 

(மீண்டும் சிவபுராணம் கூட்டுப் பிரார்தனை பாராயணம் ஆரம்பமானது.)

( இடைக்காடர் சித்தர் அருளிய மதுரை கூட்டுப்பிரார்தனை வாக்கு நிறைவு.)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

No comments:

Post a Comment