​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 23 October 2025

சித்தன் அருள் - 1961 - அன்புடன் அகத்தியர் - காகபுசுண்டர் வாக்கு!





15/8/2025 அன்று காகபுஜண்டர் மகரிஷி உரைத்த பொது வாக்கு.

வாக்குரைத்த ஸ்தலம்: பசுபதிநாத் மந்திர்.காத்மாண்டு நேபாளம்.

அகிலத்தை ஆளக்கூடிய அகிலாண்ட தேவியே!!!, அகிலாண்ட ஈஸ்வரனே!!!

பணிந்து பரப்புகின்றேன். புசண்ட முனியே!!!

எண்ணற்ற கோடி பிறவிகள், மனிதன் பிறப்பு எடுத்தாலும், ஆனாலும் இறை பலத்தை உணர்வதே இல்லை. இறைபலம் என்னவென்று தெரிவதில்லை.

இறைபலத்தை உணர வேண்டும் என்றால், பல பல பல  வழிகளில் கூட பல கஷ்டங்களை கடந்து!! கடந்து வரவேண்டும்.

அதனுள்ளே, மனிதன் சுயநலம், சுயநலத்திற்காகவே என்ன? ஏது ?என்று தெரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கின்றான். என்ன பயன்???, ஏது பயன்? 


ஆனாலும் அறிந்தேனே, பல ரூபங்களை எடுத்து எடுத்து, மனிதனின் மனநிலைகளை அறிந்தேனே. 


அறிந்து தான் பல வழிகளில் கூட மனிதனை ஏற்றங்கள் செய்யவே, கலியுகத்தில் சித்தர்கள் யாங்கள் அறிந்தும் பல வழிகளில் கூட மூடநம்பிக்கையை ஒழி!!!! என்றெல்லாம்.


 இதனால் தான் பல சித்தர்கள் இக்கலியுகத்தில் அழியும் என்பதை தாராளமாக யோசித்து!!!


அதனால் அறிந்தும் பல வழிகளில் கூட பின் நிறுத்தி, மனிதனை எப்படி? பின் (பக்தியை) இறைவனிடம் செலுத்துதல்!!! என்பவை எல்லாம் சித்தர்கள் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும் வருங்காலத்தில் (சொல்லி) ஏற்றமடைய.!!.....


 நிச்சயம் தன்னில் கூட ஒரு ஆயிரம் பேர் இருக்கின்றார்கள். நிச்சயம் அதில் கூட ஒருவன் எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட நல்லவனாக பின் தேர்ந்தெடுத்தால் அவ், ஆயிரம் பேரையும் கூட நலன்கள் பின், நிச்சயம்!!


 பின் அறிந்தும் உலகமெல்லாம் அறிந்தும் பின் புண்ணியங்கள் தோன்றும்.


 இதனாலே, நிச்சயம் அறிந்தும் புரிந்தும் எங்கு? ஏற்பாடு?      என்னவென்றெல்லாம் சித்தர்கள் யாங்கள் அறிவோம்.


 ஏனென்றால் கலியுகத்தில் மனிதன் பாவம் என்றே!!

, பாவம் என்றே சித்தர்கள் யாங்கள் ஏன்? எதற்கு? திட்டித் தீர்க்கின்றோம்??? என்றால், நிச்சயம் மனிதனுக்கு வாழ்க்கை பற்றியே தெரியவில்லை.

 காசுகளின் பின்னாலே பின் சென்று கொண்டிருக்கின்றான். அக் காசுகள் எங்களால் பின் சுலபமாக கொடுக்க முடியும்


ஆனால் உண்மைதனை உணர்வதில்லை. எது? கஷ்டம்? முதலில் என்றால், நிச்சயம் பக்தி தான் கஷ்டம். அவ் பக்தி தனை சரியாகவே முதலில் கொடுத்துவிட்டால், மீதி எல்லாம் மாயைகள் எதை என்று புரிய உன் பின்னாலே வந்துவிடும். 


பக்தி என்ற ஒன்றை நிச்சயம் அவ் அதிர்ஷ்டத்தை உங்களுக்கு கொடுத்துவிட்டால், அதன் மூலம் நீங்கள் அனைத்தும் தெரிந்து கொள்ளலாம். ஆனால் மனிதனோ!?!?!, முட்டாள் மனிதனோ!?!?!?! என்னென்ன யோசிக்கின்றான்???. முதல் பணத்தை யோசிக்கின்றான்!

, அதுமட்டுமில்லாமல் இல்லத்தை யோசிக்கின்றான், அதுமட்டுமில்லாமல் இன்னும் நிலங்கள் எதை ! எதையோ? யோசித்துக் கொண்டு இருக்கின்றான். ஆனால் அதன் மூலம் அவனுக்கு அழிவு என்பதே தெரியவில்லை.!!!

 இதனை பல உரைகளில் கூட தெரிவித்து விட்டோம். முதலில் பக்தி என்ற அதிர்ஷ்டம் தேவைப்படுகின்றது. அனைத்திற்கும் மேலாக, முதலில் பக்தி எப்படி? பின் அறிந்தும் புரிந்தும் வரவேண்டும்? என்பவை எல்லாம் யாராவது சொல்கின்றீர்களா? மனிதனே, கையை நிச்சயம் மனசாட்சி தொட்டு சொல்லுங்கள். பின் அவனவன் விளம்பரத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றான். பணவளக்கலை இன்னும் எக்? எக்?  கலையோ என்றெல்லாம், 


ஆனால் அவையெல்லாம் அழிவதற்காகவே சொல்லிவிட்டேன். சொல்லிவிட்டேன்,  சொல்லிவிட்டேன், அழிவதற்காகவே.

 நிச்சயம் தன் அழிவற்றவை எவை என்பதை எல்லாம் தெரிவிப்பதில்லையே. மனிதன்!!!


 பின் ஆனாலும் அழிவுள்ளதை நிச்சயம் சொல்லிக் கொடுத்து, சொல்லிக் கொடுத்து எவன் சொல்லிக் கொடுக்கின்றானோ, அவனுக்கு பாவம் அதிக அளவு ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது.



 முதலில் பக்தியை செலுத்துங்கள் என்று சொல்ல வேண்டும். பின்பு எப்படி? அன்பு, கருணை, அனைத்து உயிர்களிடத்திலும் கருணை காட்ட வேண்டும் என்று சொல்ல வேண்டும்.


 ஆனாலும் இதை யார் தெரிவிக்கின்றார்கள்? இல்லையே, அறிவதில்லையே. ஆனாலும் இதை சித்தர்கள் சொன்னாலும், யான் பக்தி காட்டினேன். ஈசன் மீது அதிக அளவு பக்தி காட்டினேன், ஆனால் ஒன்றுமே செய்யவில்லையே என்று. 


ஆனாலும் மனிதா, பின் பக்தி நீ காட்டினால், நிச்சயம் அவ்வாறு நீ செப்ப மாட்டாய். யான் பக்தி அதிக அளவு காட்டினேன் என்று.


 ஏனென்றால் பொய்யானவன் தான் இவையெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பான். யான் பக்தியானவன், யான் ஈசன் மீது அதிக பற்றிக் கொண்டவன் என்றெல்லாம். 

ஈசனை யார்? உன்னை வணங்கச் சொன்னது???????

 சொல் !!!



அறிந்தும் புரிந்தும் எதை என்று அறிய அறிய !!!


நல் மனதாக இருந்தால், ஈசன் நிச்சயம் உன் மனது பின் கருணையாக இருக்க. பின் கருணை படைத்தவனாக நீ இருந்தால், ஈசன் உன்னிடத்தில் வருவான்.


 இவை பெரிதா????, அவை பெரிதா.????


 நிச்சயம் ஈசனை தேடிச் சென்றால், நிச்சயம் எவ்வாறு நடக்கும் என்பதை எல்லாம்!!!


 ஏதோ நமச்சிவாயன் கொடுக்கின்றான் என்றெல்லாம்.

நமச்சிவாய,!!! நமச்சிவாய!! என்றெல்லாம்!!!

ஈசன் கொடுத்து விடுவானா? என்ன???

 நிச்சயம் அறிந்தும் புரிந்தும் எதை என்று அறிய!!!


 தெரியாதவன் தான் நமச்சிவாய!!!, நமச்சிவாய!!. என்றெல்லாம் பட்டைகள் இட்டுக்கொண்டு, ருத்ராட்சங்கள் இட்டுக்கொண்டு!!!!!



 தெரிந்தவன்!!!!

 அட!!! போடா!!!
 அறிந்தும் புரிந்தும் என்றெல்லாம்.

 நிச்சயம் ஈசன் மனதிலே இருக்கின்றான் என்று சொல்லவும் மாட்டான்.


 மனதில் எண்ணி போய்க்கொண்டே இருப்பான்.!!!

 ஈசனே, பார்த்துவிட்டேன் உன்னை என்று.!!!

 நிச்சயம் கருணை படைத்தவன் ஆக எதை என்று புரிய நீ இருந்தால்!?!?!......,

 மனிதா!!!!, நீ எங்கிருந்தாலும் ஈசனை காணலாம்.


 இதோ எதை என்று புரிய.!!
 பின்  இதோ பசுபதிநாதன் எதை என்று புரிய. பின் என்னால் முடியவில்லையே என்று நீ அங்கிருந்தே நினைத்தால், நிச்சயம் பின் அங்கிருந்தே உன் கண்களுக்கு பின் காட்டி விடுவான்.!!


 ஆனாலும், அறிந்தும் புரிந்தும் ஏன்? எதனை? எதை என்று புரிய. பக்தியை தவறாக எடுத்துச் சென்று கொண்டிருக்கின்றீர்கள் மனிதர்களே!!


 அறிந்தும் புரிந்தும் புரியாமலும் கூட!!! இவ்வாறு தவறாக எடுத்துச் சென்றால், பாவங்கள் சேரும். நிச்சயம் தன்னில் கூட!! அவ் பாவத்தை பின் மனிதன் தான் அனுபவிக்க வேண்டும். அறிந்தும் புரிந்தும்,!!


 ஆனால் நிச்சயம் கடைசியில் அனுபவித்தால், ஐயயோ! ஈசனை யான் வணங்கினேனே!!!!, முருகனை யான் வணங்கினேனே,!!!! கணபதியை யான் வணங்கினேனே!!! என்று!!

 உண்மை தெரியாமல் வணங்கி விடாதீர்கள். சொல்லிவிட்டேன்,


 உண்மை தெரிந்து வணங்குங்கள். அதனால் தான் சித்தர்கள் இவ்வுலகத்தில் வந்து வந்து, அடடா, அடடா, மனிதா, அறியவில்லையே. புத்திகள் வைத்துக்கொண்டு, ஈசன் அழகாக புத்திகளை வைத்துள்ளானே. அறிய முடியவில்லையே என்றெல்லாம்.
 நிச்சயம் தன்னில் கூட!!

 இவ்வாறாக அறிந்தும் புரிந்தும் பல வழிகளில் கூட சேவைகள் எதை என்று புரிய. ஆனாலும், சித்தர்கள் யாங்கள் விடப்போவதில்லை. நிச்சயம் தன்னில் கூட எதை என்று கூற!!

இதை ஓதிக் கொண்டிருக்கின்றானே.!!!!
 (அகத்திய மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா)

 இவனும் இன்னும் பின் உயரத்தில் செல்வான். யாங்கள் கூட்டாக கூடி இன்னும் இவனைப் பின் கையை உயர்த்துவோம். இன்னும் பின் அறிந்தும் புரிந்தும் உலகத்தில் பின் ஏற்றுவோம். அப்பொழுது தெரியும், சித்தர்கள் யாங்கள் யார்? என்று புரிந்தும் அறிந்தும் கூட!!!



 சித்தனை வணங்கினால், இப்படித்தான் இருக்க வேண்டும். உலகத்தை ஆளத்தான் வேண்டும். எதை என்று புரிய.!!


 ஆனால் மற்றவர்களோ, யான் சித்தன் எதை என்று புரிய. எவை என்று அறிய இருந்தாலும், அப்படியே பின் அதாவது பணத்தை சம்பாதிக்க வேண்டும். அப்படியே நிச்சயம் தன்னில் கூட பின் மனைவி எதை என்று புரிய. அப்படியே செல்ல வேண்டும்.

 இவையெல்லாம் சித்தனின் பின் ஆசீர்வாதங்கள் இல்லை.


 நிச்சயம் சித்தனின் ஆசீர்வாதம் பெற்றவன் இவ்வுலகத்தை வெல்வான். சொல்லிவிட்டேன், அறிந்தும் புரிந்தும்!!!


 பார்ப்போம். எதை என்று புரிய. பின் நிச்சயம் சித்தனை வணங்கினால், நிச்சயம் இப்படித்தான் இருப்பான் இவ் உலகத்தில் என்று பின் சித்தர்கள் யாங்களே காட்டிக் கொள்வோம். எதை என்று புரிய. அப்பொழுது தெரியும், உண்மை சித்தன் அறிந்தும் எவரிடத்தில் என்று!!!


மனிதன் இன்னும் பட்டங்களை வைத்துக் கொள்வான். யான் சித்தன்!!, யான் ஞானி!!, யான் ரிஷி!!!, யான் சிவனின் பக்தன்.!!! ஓம் என்றெல்லாம் முதலில் சேர்த்துக் கொள்வான்
(பெயருக்கு முன்னால்)

 ஆனால் இவையெல்லாம் அவந்தன் அழிவுக்கு சமம். அறிந்தும் புரிந்தும், நிச்சயம் அதாவது இறைவன் நாமத்தை வைத்துக்கொண்டு எத்தனை? பேர் எதை? எதையோ? செய்து கொண்டிருக்கின்றார்கள். 

இறைவன் விடுவானா? என்ன!?!??

 இன்னும் பின் ""சண்முகன்!!! என்று வைத்துக்கொண்டு என்னென்னவோ செய்து கொண்டிருக்கின்றான். நிச்சயம் தன்னில் கூட!! வேங்கடவன் என்று வைத்துக்கொண்டு, நிச்சயம் என்னென்னவோ செய்து கொண்டிருக்கின்றான். ஆனால் விட்டு விடுவானா என்ன?


 அறிந்தும் எதை என்று புரியாவிடிலும் கூட!!!

 புரியவைத்து ஏற்றங்கள் நல்க!! நல்க!!. ஒருபொழுதும் குறைகள் இல்லை.


 ஆனாலும் இதைப்பற்றி யான் இங்கு சொல்ல வேண்டும். ஈசனின் பக்தி என்றால், ஈசனிடம் பக்தி எவ்வளவு? உயர்ந்தது!!! என்பதை யான் இங்கு இப்பொழுது ஒரு ஞானியைப் பற்றி சாதாரண மனிதனாக தோன்றி, நிச்சயம் ஒரு அரசனாக வாழ்ந்து எப்படி அனைத்தும் இழந்து!!....., எதை என்று இழக்கவில்லை. அன்பை, கருணையை இழக்கவில்லை. ஈசன் மடியில் தவழ்ந்தான், பார்வதி தேவியின் மடியில் தவழ்ந்தான் என்பதை எல்லாம் இங்கு யான் நிச்சயம் பின் அறிந்து உணர்ந்து தெரிவிக்கின்றேன். நிச்சயம் தன்னில் கூட!!

பல வழிகளில் கூட அறிந்தும், பின் இத் தேசத்தை அறிந்தும் புரிந்தும் பல வழிகளில் சேவைகள் செய்து வந்தான். ஈசனை நோக்கியே அனுதினமும் அதிகாலையிலே, மாலை வேளைகளிலே, நிச்சயம் ஈசனை பார்த்து, நிச்சயம் சூரியனையும் சந்திரனையும் பார்த்து, நமச்சிவாய!!! என்று சொல்வான். அவ்வளவுதான். அறிந்தும் புரிந்தும்

 எதை இன்னும் இன்னும் பல வழிகளில் கூட மக்களுக்கு பல வகைகளில் கூட ஈசன் நாமத்தை எடுத்துரைத்தான்.


 நிச்சயம் தன்னில் இவை உணர்ந்து அறிந்தும் புரிந்தும் கூட இவ்வாறாகவே நிச்சயம் தன்னில் கூட சந்தோஷமாக வாழ்ந்து வந்தான்.

நிச்சயம் மனதை அதாவது பக்குவங்கள் ஏற்படுத்தி, நிச்சயம் தன்னில் கூட மனித குலத்தை காக்க வேண்டும் என்று.


 ஆனாலும் யான் கருவியே!!! என்று ஈசனை நினைத்துக்கொண்டு பல வகைகளிலும் கூட எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட!! எதை என்று புரிய.


 நிச்சயம் இதை இவை தன் பின் தெரிவிக்க இன்னும் கூட இவை செல்கின்றதே. இவையெல்லாம் நிச்சயம் பின் பாக்கியங்கள் என நிச்சயம் இன்னும் பின் பறக்க. நிச்சயம் தன்னில் கூட வைத்திருவார்கள் சித்தர்கள். உண்மைதனை நிச்சயம் அனைவரையும் நலத்தையும் காத்தான். பின் அனைவரையும் கூட சிவநாமத்தை எடுத்து எடுத்துச் சொல்லுங்கள்.


 அதாவது யான் அரசன் தான் !!!

என்னால் ஒன்றும் செய்ய முடியாது.!!!

 நிச்சயம் நீங்கள் தான் உங்களை திருத்திக் கொள்ள வேண்டும். அதாவது நமச்சிவாய!!, நமச்சிவாய!!!, சங்கரா!!!, ஆதி சங்கரா!!! என்றெல்லாம் நீங்கள் சொல்லுங்கள். அதிகாலையிலும் மாலை வேளையிலும் கூட பின் ஒவ்வொருவரும் 1008 முறை!!!

 இதனால் ஈசன் உங்களை காப்பான். அதாவது நிச்சயம் தன்னில் கூட!!!


 அறிந்தும் ஏதோ!? எனை அதாவது அரசன் ஆக்கினான். 

ஆனாலும் பின் உங்களை நீங்கள் உணரவில்லை என்றால், நிச்சயம் நீங்கள் அடித்துக் கொண்டு, நிச்சயம் அறிந்தும் புரிந்தும் எதை என்று அறிய.

 இவையெல்லாம் கலியுகத்தில் நடந்த விஷயங்கள். உண்மைதனை கூட இவ்வாறாகவே மக்கள் அனைவரும் சங்கரா!!! அறிந்தும் புரிந்தும் நமச்சிவாய!!! என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.


 அனைவரும் உள்ளத்திலும் கூட பக்தி மயமாக்கியது.


 அனைவரும் அதாவது அனைவரும் இன்னும் கூட எதை என்று ஒரு அரசன் கற்பித்தான். அனைத்து உயிர்களும் நிச்சயம் தன்னில் கூட இறைவனுக்கு சொந்தம். எதையும் கொன்று விடாதீர்கள் என்றெல்லாம்!!!


 இப்படியே அனைத்தும் செய்தார்கள். நிச்சயம் இப்படி நீங்கள் அனைத்தும் செய்தால், பின் எந்தனுக்கு நீங்கள் நிகர் என்று என்றெல்லாம் அனைவரும் அரசர்கள் தான் என்று இவ்வரசன்!!!


பின் இவந்தனும் கூட இவன் நாமத்தையும் கூட சிவ ஞானம் என்றே!!!!. அனைவரும் கூட ஏனென்றால் பின் எதை என்று புரிய இச் சிவ ஞானம் என்று ஏன்?  வைத்தார்கள் பெயர் அறிந்தும் உண்மைதனை கூட!!


 இவன் தாய் தந்தையர் பின் ஈசனிடத்தில் பரிபூரணமாக அதாவது ஈசனே!!!!. நிச்சயம் இதோ இவ் குழந்தை இவ்வுலகத்தை ஆளும் என்றெல்லாம் நிச்சயம் கொடுத்துவிட்டு சென்றார்கள்.


 இதனால் சிவ ஞானம்!!! நிச்சயம் சிவனுக்கு எவ்வளவு ஞானம் இருக்கின்றதோ!?!?, அவ்வளவு ஞானங்கள் வரவேண்டும் என்பதற்கிணங்கவே சிவஞானம் என்று நிச்சயம் அறிந்தும்!!


 இவ்வாறாகவே பட்டத்தை பெற்று இதனால் தேசம் நன்றாகவே!!! அனைவரும் குறைகளும் தீர்ந்தது புரிந்தும் அறிந்தும் கூட!!!


 ஏன் எதற்கு ஆனாலும் பின் இவையெல்லாம் சான்றுகள் எதை என்று புரிய. 


ஆனாலும் நிச்சயம் பின் ஈசனே!!! சோதிக்க ஆரம்பித்தான். ஆனால் பின் சந்தோஷம் ஈசனுக்கு தன் மகனா!! நிச்சயம் இவ்வாறெல்லாம் இத்தேசத்தை அனைவரிடத்திலும் பின் நிச்சயம் தன்னில் கூட !!! நம் பாசத்தை அதாவது நம்மிடத்திலே பாசத்தை கொண்டு வந்துவிட்டானே. நிச்சயம் சில சோதனைகள் செய்வோம் என்று ஈசனும் மனதில் நினைத்தான்.



 இது பார்வதி தேவிக்கு தெரிந்தது. உணர்ந்தும் புரிந்தும் பின் அதாவது அன்பானவரே!!! கருணை படைத்தவரே!!!!, நிச்சயம் ஏன்? சோதிக்கிறீர்கள்?? என்று!!!


 நிச்சயம் ஆனாலும் நிச்சயம் தேவியே!!!! நில்லும்!!
 இவ்வாறு சோதித்தால், நிச்சயம் தன்னில் கூட!

 ஈசன் அதாவது பின் உன் கருணை படைத்தவன் பின் ஒன்றை சோதிக்க விரும்பினால், நிச்சயம் அவற்றை மூலம் நல்லவைகள் தான் நடக்கும் என்பவை எல்லாம் நீ அறிவாய் அல்லவா?


 அதனால் அமைதி காத்திரு!!! என்று நிச்சயம் பின் அதாவது பின் ஈசனே இன்னும் தேசத்தில் வறட்சி ஏற்படுத்தினான். வறட்சி ஏற்படுத்தினான் எதை என்று புரிய.


 ஆனால் மக்கள் அறிந்தும் புரிந்தும் கூட பின் அரசன் மீது கோபம் கொண்டனர். அதாவது எதை  என்று உண்மைதனை கூட அனைவரும் பின் நிச்சயம் தன்னில் கூட பின் நமச்சிவாய,!!! நமச்சிவாய!! என்று கூறுங்கள் என்று அரசன் சொன்னானே. ஆனாலும் கூறிவிட்டோமே!!!, ஒன்றுமே நடக்கவில்லையே என்று!!!


 எதை என்று புரிய. இதனால் பின் அதாவது மனிதன் அரசனை சாடினான். 


பின் அதாவது அரசனே, பின் நமச்சிவாய!!, நமச்சிவாய!! என்றெல்லாம் சொல்லச் சொன்னீர்கள். ஆனாலும் அறிந்தும் இவ்வாறெல்லாம் நிச்சயம் நடக்கின்றதே. இறைவன் எங்கு இருக்கின்றான்????? நமச்சிவாயன் எங்கு இருக்கின்றான்????? என்று!!!


ஆனாலும் பின் ஈசன் அதாவது கைலாய மலையிலிருந்து பார்வதி தேவியே!!! பார்த்தாயா? பின் எதை என்று புரிய. இப்பொழுது இப்பொழுது புரிந்ததா? மனிதனின் எண்ணம் ஏது? தன்மை என்று அறிய எவ்வாறு? நடித்திருக்கின்றான் என்றெல்லாம்.


 ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அனைவருமே நிச்சயம் இவ் அரசன் பொய்யானவன். பின் நிச்சயம் பின் அதாவது எதை என்று புரிய.

பின் நிச்சயம் அதாவது மனிதர்களே தெரிந்து கொள்ளுங்கள், இவ்வாறுத்தான் இன்றெல்லாம் வணங்குகின்றார்கள். மனிதர்கள் விளம்பரங்கள் இவ்வாறு செய்யுங்கள், அவ்வாறு செய்யுங்கள் என்று. 


ஆனால் நடக்கவில்லை என்றால், இறைவனை இறைவன் பொய் என்று கூறுகின்றார்கள். ஆனாலும் யார் சொல்லி எதை என்று புரிய.

பின் அதாவது பின் அறிந்தும் பின் அவன் செய்தானோ, நிச்சயம் தன்னில் கூட சொன்னவனுக்கும் பாவங்கள்!!!

 இன்னும் பாவங்கள் காத்துக் கொண்டிருக்கின்றது.


 ஆனாலும் அனுபவம் மூலம் நிச்சயம் இன்னும் சிலர் அனுபவித்துக் கொண்டு மீண்டும்..... ஆனாலும் பின் எதை என்று புரிய.


 பின் யாங்கள் தேர்ந்தெடுத்தால், நிச்சயம் பின் பாவங்கள் சேராது.


 ஆனாலும் காசுகளுக்காக அவனவன் இறைபலத்தை கூறிக் கொண்டிருந்தால், பாவங்கள் சேரும்.

 அப்பாவத்தை எங்கு தொலைப்பீர்கள்????? என்பதுதான் தெரியவில்லை.


 ஆனால் உங்களுக்குள்ளே, உங்கள் குடும்பத்திற்குள்ளே தொலைப்பீர்கள். அவ்வளவுதான்.!!!


 அறிந்தும் ஏது எவை புரிய. புரிந்தது என்பது ஒன்று இருக்கின்றதா?? இங்கு என்று சொன்னால், இல்லையேயப்பா!!!
, ஏன்? எதற்கு? எதை என்று அறிய காலங்கள் காலங்களாக யுகங்களை தாண்டி தாண்டி மனிதனனை பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றான். ஈசன் !! அறிந்தும்!!!


 இதனால் இவ் அரசனும் கூட நிச்சயம் இவன் மனைவி கூட நிச்சயம் அறிந்தும் இவ்வாறாக பின் இவ் மக்களுக்கு இவ்வாறாக நன்மை செய்தீர்களே!!!!. இப்பொழுது என்ன ஆயிற்று???? என்றெல்லாம்!!!


 பின் அனைவரும் ஒன்று கூடி நிச்சயம் தன்னில் கூட அரசபதவியை  இவன் இழக்க வேண்டும். ஏனென்றால் இவன்தான் சொல்லிக் கொடுத்தான், நமச்சிவாய!!, நமச்சிவாய!! என்று சொல்லுங்கள் என்று

ஆனாலும் சிறிது காலம் நன்றாக இருந்தது. ஆனாலும் இப்பொழுது அனைத்தும் போய்விட்டதே.

 இவந்தன் பொய்யானவன். இவனை நீக்கினால் தான் எதை என்று புரிய. பின் அனைவரும் ஒன்று சேர்வோம் என்று கூட்டாக ஒன்று சேர்ந்தார்கள். அரசனின் இல்லத்திற்கு வந்தார்கள். அனைத்தும் அடித்து நொறுக்கினார்கள்.


 ஆனாலும் இவ்வரசன் நிச்சயம் தன்னில் கூட ஈசனை!!!. நிச்சயம் ஈசனே!!, ஈசனே,!!! உன்னை வணங்குவதற்கு நிச்சயம் இவ்வாறாகவா???

 இது தான் உன் அன்பு பரிசா????

 என்பதை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் அறிந்தும் உணர்ந்தும்.


 ஆனாலும் பின் நிச்சயம்  அவன் மனைவி மட்டும் நிச்சயம் அறிந்தும் எதை எவை என்று புரிய!!!.....


 உண்மை நிச்சயம் அதாவது பொறுத்திரு, பொறறுத்திரு என்றெல்லாம் மனைவிக்கு அரசன் சமாதானப்படுத்தி நிச்சயம் ஈசன் இருக்கின்றான்.

 ஆனால் மனிதனோ புரிந்து கொள்ளவில்லை என்றெல்லாம்!!!

 நிச்சயம் அறிந்தும் எதை என்று புரிய. இவையெல்லாம் கலியுகத்தில் நடந்ததே. ஆனாலும் நிச்சயம் அனைவரும் பின் ஒன்றாக கூடி இல்லத்தை இடித்தார்கள். நிச்சயம் இவ்வரசனையும் அதாவது கால்களையும் அதாவது கட்டிப்போட்டு நிச்சயம் தன்னில் அறிந்தும். 


ஆனாலும் பின் இவனுடைய மனைவியை கூட எதை என்று அறிய கால்களையும் கூட கட்டி வைத்து அடித்து நிச்சயம் தன்னில் கூட ஒருவன் நிச்சயம் கையை வெட்டுங்கள். அவனின் என்று கால்களை வெட்டங்கள். நிச்சயம் தன்னில் என்றென்று மனசாட்சி இல்லாமல்!!!


 இவைதான் இக்கலியுகத்தில் பக்தி என்பதை கூட!!!

""" கொடுத்தால் இறைவன் கொடுக்காவிடில் இறைவன் இல்லை என்பவை எல்லாம்!!!


 இன்னும் சிலர் கொடுத்து இறைவன் கொடுத்துக் கொண்டே இருப்பான் என்று நமச்சிவாய, நமச்சிவா, நமச்சிவாய என்று கூறிக்கொண்டிருக்கின்றார்கள். 



ஆனாலும் நிச்சயம் இல்லை. !!!!


நல் மனதாக பின் இருந்தால் மட்டுமே ஈசன் குடியிருப்பான்.

 நீ நல் மனதாக பின் இல்லை என்றால் ஈசனை பின் நிச்சயம் விழுந்து விழுந்து வணங்கினாலும் ஒன்றும் செய்யப் போவதில்லை. 


நிச்சயம் இன்னும் வருங்காலத்தில் சித்தர்கள் யாங்கள் உங்கள் விதியில் பிரம்மன் என்ன எழுதி வைத்திருக்கின்றான்???? என்பவை எல்லாம் சொல்வோம். 


நிச்சயம் இவைதான் நடக்கும். அதை மாற்ற பல வழிகளில் கூட போராட வேண்டும். அப்போராட்டம் நிச்சயம் வெல்லும்.

 அவை தான் யாங்கள் வருங்காலத்தில் மனிதனுக்கு உரைப்போம், தெளிவும் படுத்துவோம்!!! உரைத்துக் கொண்டே தான் இருக்கின்றோம்.


 நிச்சயம் அவை செய்தால் இவை வரும், இவை செய்தால் அவை வரும் என்பவை எல்லாம் கட்டாயம் இல்லை!!!

நடக்காதப்பா!!!


 எதை எவை என்று இவ்வரசனும் நிச்சயம் தன்னில் கூட மீண்டும் நமச்சிவாய, நமச்சிவாய என்றெல்லாம் அறிந்தும் புரிந்தும்!!!


 ஏதாவது பின் பாசத் தாய்க்கு பார்வதி தேவிக்கு பின் கண்ணீர் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும் எவை என்று அறிய அறிய !!!

நிச்சயம் தன்னில் கூட எதை என்று கூட அக்கண்ணீர் நிச்சயம் அதாவது அறிந்தும் புரிந்தும் அவ்வரசனின் தன் தலையிலும் கூட மனைவியின் தலையில் கூட விழுந்தது. 


இதனால் நிச்சயம் பாவங்கள் தொலைந்து போயிற்று. 

நிச்சயம் பின்  வைரங்கள் இன்னும் தங்கங்கள் இன்னும் வெள்ளிகள் பின் அழகாக இருவரும் நின்றனர். அனைவரும் ஆச்சரியப்பட்டனர். எதை புரிய எவை என்று அறிய.


 நிச்சயம் இவ்வாறெல்லாம் நிச்சயம் அடித்தாலும் இறைவன் எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட !!


இதனால் மீண்டும் எதை என்று கூட அனைவரும் பயப்பட்டனர். எதை என்று அறிய. நிச்சயம் தன்னில் கூட அதாவது ஏதோ தெரியாமலோ இவ்வாறு செய்துவிட்டோம் என்றெல்லாம்!!

நிச்சயம் பின் அரசனும் சொன்னான். நிச்சயம் உங்களுக்கு என்ன செய்தாலும்??? எதை என்று புரிய. எதை என்று அறிய புத்திகள் இல்லையே.

இதனால் ஈசனே அறிந்தும் புரிந்தும் கூட!!

 பின் நிச்சயம் தன்னில் கூட நீங்கள் சரியாக உண்மைப்படுத்தி உண்மைப்படுத்தி அதாவது ஏதோ நடித்துதான் இருக்கின்றீர்கள்.

(நாட்டு மக்கள் அனைவரும் நமச்சிவாயா நமச்சிவாயா என்று நடித்துக் கொண்டு)

 அதனால் அரசன் சொன்னானே என்று நடித்துதான் இருக்கின்றீர்கள். இதனால் நிச்சயம் எதை என்று புரிய!!

""" என் ஈசன் இருக்கின்றான். எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் யான் நிச்சயம்  ஈசனை எப்பொழுதும் விட்டதில்லை.!!! அழகாகவே!; அழகாகவே!! அறிந்தும்!!!


 இப்பொழுது எதை என்று புரிய. யான் என்ன கேட்பது?? அறிந்தும் அனைத்தும் மக்களுக்காக செய்தேன். பின் அறிந்தும் புரிந்தும் ஆனால் ஒன்றுமே இல்லையே.!!!


 ஆனாலும் ஈசனாரே!!! எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட தன் மகனாக  என்னை ஏற்றுக் கொண்டீர்களே. எவ்வளவு கஷ்டங்கள் எதை என்று புரிய.!!!


 ஆனாலும் ஒன்றை மட்டும் கேட்கின்றேன். எதை எவை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட யான் நமச்சிவாய!!, நமச்சிவாய!! என்று கூறுகின்ற பொழுது அண்ணாமலையே எந்தனுக்கு ஞாபகம் வந்துவிட்டது. 

என்னை அங்கே என்னை வைத்து விடுங்கள். அழகாகவே!!! நிச்சயம் வருவருக்கெல்லாம் யான் நிச்சயம் உண்மை பக்தனை நிச்சயம் உயர்த்துவேன் என்றெல்லாம்!!!

 நிச்சயம் பின் அவ்வாறாகவே மேலிருந்தே கைலாயத்திலிருந்தே கேட்டது. !!! (அசரீரி)


குழந்தாய்!;, நிச்சயம் நீ அங்கு செல்வாய். நிச்சயம் அறிந்தும் புரிந்தும் அங்கே இருப்பாய். உயிரோட்டமாகவே!!!

 நிச்சயம் கலியுகத்தில் உண்மைதனை உண்மை பக்தியாக  வந்தால் நிச்சயம் தன்னில் கூட அழகாகவே நீ மனதை தெரிந்து கொள்வாய். ஆசிகள் புரிந்து கொண்டே இருப்பாய்!! என்று!!


 நிச்சயம் இப்பொழுது கூட நிருதி லிங்கத்தில் அவன் நிச்சயம் தன்னில் கூட பின் மறுவேடமாகவே அலைந்து அலைந்து வந்து சென்று கொண்டே இருக்கின்றான்.


 நல்முறையாகவே நல் மனதாகவே இருந்துவிட்டால் அனைத்தும் ஆசிகள் பெற்று தந்து கொண்டே இருக்கின்றான். இன்னும் தந்து கொண்டே இருப்பான்.


 இன்னும் பல அதிசயங்கள் உலகத்தில் காத்துக் கொண்டிருக்கின்றது. பக்தி என்பது நிச்சயம் பின் எவ்வாறு கஷ்டங்கள் கொடுத்தாலும் ஈசன் மீது நிச்சயம் சிறு துளி கூட நிச்சயம் தன்னில் கூட சந்தேகம் வரக்கூடாது.

 இதுதான் பக்தி.


 ஆனால் கலியுகத்தில் இப்படி நிச்சயம் இருக்காது. சொல்லிவிட்டேன்.

 பணத்திற்காகவே அதை செய்கின்றேன், இதை செய்கின்றேன் என்று பாவத்தை சம்பாதித்துக் கொள்ளாதீர்கள், மனிதர்களே. 


நிச்சயம் தன்னில் கூட மீண்டும் பின் உரையில் உரைப்பேன். ஆசிகள், ஆசிகள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...ஓம் அகத்தீசாய நமஹ…

    ReplyDelete