15/6/2025 அன்று காசியில் குருநாதர் அடியவர்களுக்கு உரைத்த பொதுவான உபதேசங்கள்.
அப்பனே இதனால் அப்பனே பின் அலைந்து திரிந்து அப்பனே கஷ்டங்கள் பட்டால் தான் அப்பனே எங்கள் அருகிலே வர முடியும்!!
அப்பனே எங்கள் அருகில் வந்து விட்டால் அப்பனே... துன்பம் போல் அதாவது துன்பம் இருப்பது போல் இருக்கும் அப்பா
ஆனால் அப்பனே அவை அப்படியே எடுத்து விடுவோம் என்போம் அப்பனே
அப்பனே அடுத்த வினாடியே மாற்றி விடுவோம் அப்பனே மனதை கூட.
அப்பனே முதலில் மனது தான்.. இங்கு நிச்சயம் தன்னில் கூட அப்பனே... பெரிய அப்பனே நிச்சயம் அப்பனே.. பின் இழப்பப்பா.
அதை முதலில் யாங்கள் மாற்றுவோம்.
அப்பனே மனது நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன்... அனைத்தும் இறைவன் அருளால் தான்.. என்று அப்பனே நீங்கள் சென்று கொண்டே இருங்கள் என்பேன் அப்பனே...யான் பார்த்துக்கொள்கின்றேன்.
நிச்சயம் தன்னில் கூட அப்பனே இதனால் அப்பனே எப்பொழுது இவை வந்து விடுகின்றதோ!???
அப்பொழுதே அப்பனே நீங்கள்.. பின் பக்குவத்திற்கு வந்து விட்டீர்கள்.. என்று அர்த்தம்... அதாவது மனிதன் பக்குவத்திற்கு வந்து விட்டான் என்று அர்த்தம்.
ஆனால் இப்பொழுது இல்லையே அனைவருமே.
அப்பனே நிச்சயம் தன்னில் கூட இதனால் அப்பனே இறைவன் படைத்தான் என்பேன் அப்பனே மனிதனை..
அப்பனே அவனுக்கு எப்படி ஏது கொண்டு போக முடியும் என்பதெல்லாம்.. அவனே தீர்மானிப்பான் என்பேன் அப்பனே.
அப்பனே அப்பொழுது சொல்லுங்கள் உங்களால் என்ன செய்ய முடியும் ?? என்று !!
நிச்சயம் கூறுங்கள்!!
அப்பனே இதனால்தான் அப்பனே ஆனாலும்.. அப்பனே நீங்கள் செய்த புண்ணியங்கள்.. அப்பனே நிச்சயம் எங்கள் அருகிலே இருக்கின்றது அப்பா.
உங்களுக்கு தேவையானதை அப்பனே பிரம்மாவிடத்தில்... அப்பனே விதியில் இல்லை என்றாலும்..யான் கொடுப்பேன் அப்பனே போதுமா???
அப்பனே மனிதர்களுக்காக யாங்கள் போராடிக் கொண்டே இருக்கின்றோம்.. அப்பனே..
அப்பனே ஆனாலும் யாங்களும் விட்டுவிடலாம்.. என்பேன் அப்பனே..
ஆனாலும் மனிதனை அப்பனே நிச்சயம் அப்படியே விட்டு விட்டால் அப்பனே.. நிச்சயம் ஈவு இரக்கம் இல்லாமல். அப்பனே. தவறுகள் செய்து விடுவான் என்பேன். அப்பனே. மனிதன்.. அதனால் தான் அப்பனே நிச்சயம் யாங்களும் இறங்கி வந்து காத்துக் கொண்டிருக்கின்றோம் அப்பனே... மனிதனை அப்பனே பின் பக்குவங்கள் படுத்தி.. அப்பனே மாற்றம் அடையச் செய்து கொண்டே இருக்கின்றோம் கலியுகத்தில் கூட.
அப்பனே இதனால் என்னுடைய அருகிலே நீங்கள் இருக்கிறீர்கள் அப்பனே... உங்கள் மனதை யான் அறிந்து தான் அப்பனே.. நிச்சயம் செய்வேன் அப்பா... அப்பனே நிச்சயம் அவரவருக்கு தேவையானதை யான் கொடுப்பேனப்பா
எந் நேரம்.. அப்பனே பின் எந் நேரத்தில் கொடுக்க வேண்டும்? அப்பனே நீங்கள் விதியில் இல்லாததை கூட கேட்டாலும் கூட... அப்பனே விதியில் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று இருந்தால் அப்பனே நிச்சயம்... அதையும் அப்பனே உங்களை... மாற்றிட பிரம்மாவிடம் மன்றாடி... அப்பனே பின் அதாவது... மன்றாடுகின்ற பொழுது... சிறிது தாமதமாக ஏற்படும் என்பேன் அப்பனே... அவ்வளவுதான்!!
ஆனாலும் அனைத்தும் கொடுப்பேன் அப்பனே.
அப்பனே நிச்சயம் ஒரு உலகத்தை மட்டும் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் என்பேன். அப்பனே...
அடுத்தடுத்து உலகத்தை அப்பனே பின் அதாவது ரகசியங்களை...யான் எடுத்துரைப்பேன் அப்பனே.. இன்னும் கூட மக்களுக்கு.
அதனால் அப்பனே உங்களுக்கு நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே அறிந்தும் கூட.. அப்பனே நன்மைகளாகவே... அப்பனே அறிந்தும் கூட ஒரு வேலையை... இன்னும் நீங்கள் முடிக்கவே இல்லை என்பேன் அப்பனே.
அப்பனே நிச்சயம் அதை பூர்த்தி செய்ய... அதிவிரைவிலே யான் சொல்வேன் என்பேன் அப்பனே..
நிச்சயம் அப்பனே புது உலகத்தை பற்றி.. அதாவது அப்பனே அது எங்களுக்கு பழைய உலகமப்பா!!!... அதாவது.. மனிதனுக்கு புது உலகங்கள்ப்பா!!
அவை பற்றி எல்லாம் ரகசியங்கள் எடுத்துரைப்பேன் அப்பனே.
பின் அங்கெல்லாம் எப்படி எல்லாம் மனிதர்கள் வாழ்கின்றார்கள் என்பதை எல்லாம் அப்பனே நிச்சயம் அப்பனே அனைவருக்கும் தெரிவிப்பேன் என்பேன் அப்பனே.
அத்தனை பின் உலகத்தில் இருப்பவர்களும் கூட.. ஆனால் கங்கைக்கு வர வேண்டும் என்பேன் அப்பனே. வந்து கொண்டுதான் இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே.
அப்பனே எப்பொழுது? அவ் உலகத்தில் இருந்து வருவார்கள்?...எந் நேரத்தில் வருவார்கள்? என்பதை எல்லாம்!!.. யான் மக்களுக்கு தெரிவிப்பேன் என்பேன் அப்பனே!!
நிச்சயம் அவர்களைப் பார்த்தால்... புண்ணியம் என்பேன் அப்பனே.
அப்பனே அடுத்து வருவது அண்ணாமலையில் என்பேன் அப்பனே... நிச்சயம் எப்பொழுது வருவார்கள்?? எத்தனை மணிக்கு வருவார்கள் என்பதை எல்லாம்.. அப்பனே எங்கு இறங்குவார்கள்?? என்பதை காண்பிப்பேன்!!
அப்பனே அடுத்து வருவது ராமேஸ்வரம் எனும் தலத்திற்கு என்பேன் அப்பனே.
எப்பொழுது வருவார்கள்... அப்பனே பின் வந்து கொண்டே இருப்பார்கள்.. பின் ஒரு வினாடி தான் என்பேன் அப்பனே....அவ் வினாடி என்பதையெல்லாம் அப்பனே... நிச்சயம் மக்களுக்கு தெரிவிப்பேன் என்பேன் அப்பனே.
அங்கு சென்றிட்டு அப்பனே பார்த்தாலே.. போதுமானதப்பா அப்பனே. நிச்சயம் பாவங்கள் கரைந்து விடும் என்பேன் அப்பனே.
அப்பனே பின்பு ஏழுமலையானுக்கு... நிச்சயம் வருவார்களப்பா... நிச்சயம் உரைப்பேன் அப்பனே எப்படி..ஏது என்றெல்லாம்.
அப்பனே நிச்சயம் தன்னில் கூட அடுத்து.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட பாவம் நாசம் செய்கின்ற பாபநாசம் என்பேன் அப்பனே.
அப்பனே நிச்சயம் தன்னில் கூட அங்கு நீராடி அப்பனே பின் நிச்சயம்.. தன்னில் கூட அவனை (பாபநாச நாதர்) தரிசிப்பார்கள் என்பேன் அப்பனே.
அதைப் பற்றியும் ரகசியமாக...
அப்பனே அடுத்தபடியாக அப்பனே பின் கேதார்நாதனிடத்தில் என்பேன் அப்பனே இறங்குவார்கள் என்பேன் அப்பனே.
அப்பனே அடுத்து மராட்டியம்..(மகாராஷ்டிரா) என்னுமிடத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. பீமா (பீமா சங்கர் ஜோதிர் லிங்கம்) நிச்சயம் தன்னில் கூட!!!
கிரிஷ்னேஷ்வர்
(கிரிஷ்னேஷ்வர் என்பது மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள வெருல் கிராமத்தில் உள்ள சிவன் கோயிலாகும். இது இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாகும்.
கிரிஷ்னேஷ்வர் கோயில், எல்லோரா குகைகளுக்கு அருகில் அமைந்துள்ளது.)
கிரண்!!
அப்பனே பின் இவை தன்..அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஏன் எதற்கு...இவ் கிரணின் ஆதிக்கத்தால் தான் அப்பனே நடக்கும் அதாவது கிரந்தை என்கின்றார்களே அப்பனே நிச்சயம்.. அதைப் பற்றி அப்பனே அங்கு குறிப்பிடுவேன் அப்பனே... குப்தர்கள் அங்கு வாழ்ந்தார்கள் அல்லவா... நிச்சயம் தன்னில் கூட
(அஜந்தா எல்லோரா )...
நிச்சயம் அடுத்தபடியாக அப்பனே... துவாரகை...
அப்பனே இன்னும் இன்னும் பின் விளக்கங்களாக கூறுகின்றேன் அப்பனே. ஒவ்வொன்றாக..
அப்பனே அடுத்தபடியாக அயோத்தியில் என்பேன் அப்பனே.
அப்பனே இவ்வாறாக அப்பனே மனிதன் பிறப்பெடுத்தால் பின் நிச்சயம் சில ஸ்தலங்கள் இருக்கின்றது என்பேன் அப்பனே... அங்கு சென்று வந்தால் தான் அப்பனே நிச்சயம்... கஷ்டங்களே தீருமப்பா!!!
அப்பனே அப்படி இல்லை என்றால் அப்பனே... கஷ்டங்கள் அப்பனே வந்து கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே
அப்பனே அதாவது ஒரு.. பிள்ளையை காப்பாற்றுவது சரியா???
பல பிள்ளைகளை காப்பாற்றுவது சரியா???
அப்பனே கூறுங்கள் அப்பனே நீங்களே!!!
அதனால்தான் அப்பனே பொதுவாக வாக்குகள் உரைத்து அப்பனே.. என் பேச்சைக் கேட்டு வந்தால் அப்பனே.. அனைவருக்கும் அப்பனே பின் நன்றாகத் தான் இருப்பார்கள் என்பேன் அப்பனே.
அப்பனே ஆனால் அதன் உள்ளே ஒருவருக்கொருவர்.. போட்டிகள் போட்டுக் கொண்டு அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவை பொய் இவை பொய் என்றெல்லாம் சொல்லி கொண்டிருக்கும் பொழுது அவந்தனக்கும் அருள்கள் கொடுத்து.. அப்பனே கடைசியில் அப்பனே நிச்சயம்.. அவன் வாயாலே அவன் அழிவான் அப்பனே.
அப்பனே சித்தர்கள் அப்பனே பின் ஒருவருக்காக இல்லை என்பேன் அப்பனே.
உலகத்தில் உள்ள அனைவருக்குமே என்பேன் அப்பனே.
அப்பனே இதனால் நல்லோர்களை தேர்ந்தெடுத்து.. பின் அவற்றின் மூலம் உலகத்தை மாற்றுவோம் அப்பனே..
ஒரு உலகத்தை மட்டும் இல்லை என்பேன் அப்பனே எதை என்று அறிய அறிய பல உலகத்தை அப்பனே.
ஆனாலும் அப்பனே அவ் உலகத்தில் நன்றாக தான்.. அப்பனே நீதி நியாயமோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பேன் அப்பனே.
ஆனால் அப்பனே நிச்சயம்...
அப்பனே இவ்வுலகத்தில் இருந்து ஆன்மா பிரிகின்ற பொழுது... அப்பனே என்னென்ன தண்டனைகள்?? அனுபவிக்கின்றது என்பதை அடுத்த.. கட்டத்தில் யான் சொல்வேன் என்பேன் அப்பனே.
அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் இவ்வாறு... ஆன்மா அப்பனே பின் முதலில் இவ்வுலகத்தில் இருந்து
எவ் உலகத்திற்கு செல்கின்றது? என்பதை அடுத்த வாக்கில் சொல்வேன் என்பேன் அப்பனே..
இன்னும் அப்பனே புண்ணிய ஸ்தலங்களை.. தேர்ந்தெடுத்து அப்பனே.. செப்பினால் தான் அப்பனே புண்ணியம்.
அப்பனே இவ் ஆன்மாவை எதை என்று புரிய அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் நன்றான அதாவது புண்ணிய உலகத்திற்கு தான்... அனுப்புவான் என்பேன் இறைவன் அப்பனே.
ஆனால் அப்பனே நீங்கள்.. அதாவது பின் உங்கள்.. எண்ணத்தைத்தான் மேன்மையாக.. வைக்கச் சொன்னேனே அப்பனே... நிச்சயம் அதற்காகத்தான் அப்பனே..
அவ் மேன்மை இல்லையென்றால் அப்பனே.. பின் நிச்சயம் அவ் ஆன்மா பதிந்து விடும் என்பேன் அப்பனே... இவன் மேன்மை இல்லாதவன்.
இன்னும் துன்பங்களை.. எதை என்று அறிய அறிய அப்பனே.. கொடுத்து மீண்டும் இவ்வாறெல்லாம்... அனுபவிக்க வேண்டும் என்று... மீண்டும் இவ்வுலகத்திற்கு.. அனுப்பி விடுவார்கள் என்பேன் அப்பனே.
அப்பனே ஏன் துன்பங்கள் வருகின்றது என்றால் அப்பனே நிச்சயம் அப்பனே...
பின் அதை எதிர்கொள்ளும் சக்தி உங்களிடத்தில் இல்லையப்பா.
அப்பனே வருங்காலத்தில் அப்பனே அதை அனைவருக்குமே அப்பனே உரைப்பேன் அப்பனே ... அனைவருக்குமே புரியுமப்பா!!
அப்பனே இதனால் நீங்கள் உங்களையே வெல்லலாம்...
அப்பனே எப்பொழுது அப்பனே நிச்சயம் அப்பனே.. துன்பம் அதிகம் வருகின்றதோ அப்பொழுது நீங்களே பின் வெல்லலாம் உங்களை.
அதனால்தான் அப்பனே
உங்களை நீங்களே வெல்லலாம் என்பதற்கு இணங்க அப்பனே இறைவன்.. துன்பத்தை கொடுத்து விடுகின்றான் என்பேன் அப்பனே.
அப்பனே துன்பம் என்ற ஒரு பாதையை இறைவன் வைத்தால் தான்... இன்பம் என்ற பாதைக்கு வருவீர்கள் என்பேன் அப்பனே நீங்கள்.
அப்பனே எப்படி இவ் ஆன்மா பிரிகின்றது?? என்பதையெல்லாம் உங்கள் சொந்தக்காரர்கள்.. அதாவது அதிக பாவம் செய்பவர்கள் எதை என்று அறிய அறிய அப்பனே.. ஏன் எதற்கு என்றால் அப்பனே.. மனம் தெளிவாக வைக்கவில்லை என்றாலும் பாவம் என்பேன் அப்பனே.
அவ் ஆன்மாக்கள்... அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே பின் அதாவது... இவ்வுலகத்தை தாண்டி மறு உலகத்திற்கு செல்கின்ற பொழுது... அப்பனே அங்கு தண்டனைகள்... அனுபவிக்கின்ற பொழுது அப்பனே பின்.. நிச்சயம் தன்னில் கூட அதாவது ஆன்மாவானது... உங்களுக்கு சொந்தமானது அல்லவா...
இதனால் அப்பனே பின் உங்களுக்கு அவ் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே.
இதனால் அவ் ஆன்மாவை எப்படி ஏது என்று அவ்வுலகத்தில் நிச்சயம் தன்னில் கூட சாந்தப்படுத்த வேண்டும்... என்பதையெல்லாம் அப்பனே இவ்வுலகத்தில் அப்பனே பின்..யான் சொல்வேன் அப்பனே வரும் காலத்தில் என்பேன் அப்பனே.
இதனால் அவ் ஆன்மா சாந்தியடையும் பொழுது அப்பனே பின்... அதாவது இவ் ஆன்மாக்கும் கூட சாந்தி அடைந்து விடும்.... அதாவது நீங்களும் சாந்தி அடைந்து விடுவீர்கள் என்பேன். அப்பனே.
அப்பனே இன்னும் தெளிவுகள் வரப்போகின்றது என்பேன் அப்பனே..
மனிதன் மூடநம்பிக்கையிலே ஒளிந்துள்ளானப்பா!!!
அப்பனே நிச்சயம் அவ் ஆன்மாக்கள் அப்பனே பின் மகிழ்ந்தால்தான் அப்பனே... உங்கள் அப்பனே பின் அதாவது உடம்பில் அப்பனே அதாவது இருளாக உள்ளது என்பேன் அப்பனே.
நிச்சயம் அவ் ஆன்மா சந்தோஷப்பட்டால் அப்பனே... நிச்சயம் இங்கு அப்பனே....
இப்பொழுதெல்லாம் அப்பனே மின்சாரம் வந்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட... எரிகின்றதல்லவா அதே போல் அப்பனே... நிச்சயம் ஒரு சிறிய துகள்.. எரியுமப்பா!!!
இதனால் அப்பனே.. உடம்பில் அப்பனே நிச்சயம் பின் வெளிச்சம் வந்துவிடுமப்பா!!!
அப்பனே பின் உடம்பு வெளிச்சம் பெற்று விட்டால்.. அப்பனே உங்களுக்கு அனைத்தும்.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட தெரிய வரும்.. என்பேன் அப்பனே.. நிச்சயம் அனைத்தும் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் என்பேன் அப்பனே.
நிச்சயம் அதனால் அப்பனே.. நிச்சயம் இப்பொழுது.. எதை என்று அறிய அறிய அப்பனே பின்... அதாவது உள்ளே இருக்கும் நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதாவது நிறுத்தப்பட்டு இருக்கின்றது என்பேன் அப்பனே.
இதனால் தான் துன்பம்!!
அப்பனே எப்பொழுது சொல்லுங்கள் பார்ப்போம் துன்பத்திற்கு காரணம் யார்?? என்று!!
அப்பனே நிச்சயம் தன்னில் கூட... வெளிச்சத்தை ஈய வேண்டும் என்பேன் அப்பனே... இதனால்தான் அப்பனே சில பக்குவங்களை.. ஏற்படுத்த அப்பனே அங்கும் இங்கும்.பின் அலைய வைக்கின்றேன்.. என்பேன் அப்பனே யான்!!! மனிதர்களை!!
ஆனாலும் அப்பனே நிச்சயம்... பின் அங்கு பின் சென்று விட்டால் அவை நடக்குமா??? இவை நடக்குமா??? என்று பின் மனிதன் வருவதால்தான்...(எதிர்பார்த்து)
நிச்சயம் மனிதன் மீது கோபமப்பா!!!
அப்பனே அவை எரிய வைத்து விட்டால் அப்பனே... நிச்சயம் உங்களுக்கே தெரியும் அப்பா... அடுத்து என்ன நடக்கும்? என்று!!!
அப்பனே அவ் வெளிச்சம் இதயத்தில் நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே பின் அறிந்தும் கூட... நடுப்பகுதியில் உள்ளதப்பா.
அப்பனே அதை எரிய விட்டு.. விட்டால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... துன்பங்களும் வராது நோய்களும் வராதப்பா!!
அதனால்தான் அப்பனே தீபங்கள் பின்.. நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய அறிய... ஏன் இறைவனுக்கு ஏற்ற சொல்கின்றோம் என்று... இப்பொழுது புரிகின்றதா?? அப்பனே!!
இறைவன் காண்பிக்கின்றான் பின் நிச்சயம் இப்படித்தான்... உன் உடம்பில் தீபம் ஏற்ற வேண்டும் என்று அப்பனே.
ஆனால் அதை.. மூடநம்பிக்கையிலேயே சென்று விட்டார்கள் மனிதர்கள்.
அப்பனே நிச்சயம் தன்னில் கூட... இவ்வாறாக இருந்தால் மட்டுமே.. பின் இறைவனே வந்து உள்ளத்தில் அப்பனே.. பற்ற வைப்பான் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே மனது தெளிவாக இருக்க வேண்டும்.. அப்பனே மனது... நிச்சயம் தன்னில் கூட அப்பனே.
அப்பனே இதனால் அப்பனே இறைவன்... அதனால் அவ் தீபம் எரிவதற்கு... துன்பங்கள் பின் கொடுத்தால் தான் பக்குவங்கள்.. அடைய முடியும் என்று... அப்பனே சில துன்பத்தை கொடுத்து தான்... ஏற்றுவான் என்பேன் அப்பனே.
அப்பனே அதை ஏற்றுவதற்காக தான்... துன்பங்களை கொடுக்கின்றான் என்பேன் அப்பனே.
அப்பொழுது துன்பம் கொடுப்பது நல்லவையா ??
தீயவையா???
அப்பனே அறிந்தும் புரிந்தும் கூட..
அகத்தியர் அடியவர் ஒருவர் இடைமறித்து இதயத்தில் எப்பொழுது விளக்கு எரியும் என்று கேட்டதற்கு
அப்பனே அறிந்தும் புரிந்தும் கூட அப்பனே எதை என்று அறிய அப்பனே இவ்வாறு தான் பேசக்கூடாது என்பேன் அப்பனே.
அப்பனே எதை என்று அறிய அறிய அதிவிரைவிலே.. பின் ஏற்று விடுவான் என்பேன் அப்பனே உன் உள்ளத்திலே அப்பனே
அப்பனே அறிந்தும் கூட இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட துன்பம் அப்பனே வருவது நல்லதே அப்பனே
துன்பம் என்பது அப்பனே இறைவனுக்கு நல்லது என்பேன் அப்பனே.
ஆனால் மனிதனுக்கு கெடுதல் என்பேன் அப்பனே.
இவை நிச்சயம் தன்னில் கூட... மனிதனுக்கு பின் இன்பத்தை கொடுத்தால்.. நல்லது என்று நினைப்பான்.
ஆனால் அப்பனே.. துன்பத்தைக் கொடுத்தால் பின் இறைவன் நிச்சயம்.. துன்பம் என்று நினைப்பான் அப்பனே.
இதனால் அப்பனே எதை மனிதனுக்கு பின்.. சந்தோசம் அடைகின்றதோ அது இறைவனுக்கு துன்பம் என்று தெரியும் அப்பா.
எதை பின் துன்பம் மனிதனுக்கு எண்ணுகின்றானோ அதுதான் இன்பம் என்று பின் நிச்சயம் தன்னில் கூட இறைவனுக்கு புரியும் அப்பா!!
அப்பனே இவ் ரகசியம் நிச்சயம் தன்னில் கூட இன்னும்.. வெளிக்காட்டுகின்ற பொழுது தெரியும் அப்பா.
ஏற்கனவே சொல்லி உரைத்து விட்டேன் அப்பனே.
நிச்சயம் தன்னில் கூட இன்னும் இன்னும் கூட அப்பனே விளக்கங்கள்.. எழுதி வைத்திருந்தோம் என்போம் அப்பனே... அவையெல்லாம் தெரிந்து கொண்டால் மனிதன்.. வாழ்ந்து விடுவான் என்று அடியோடு.. அப்பனே சுவடிகள் அப்பனே பின் எதை என்று அறிய அறிய அனைத்தும்.. நீரில் விட்டு அப்பனே பின்.. நிலத்திலும் விட்டு எரிய வைத்து விட்டார்கள் என்பேன் அப்பனே.
ஆனாலும் அப்பனே யாங்கள் விடமாட்டோம் என்போம் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட.. அவை இருந்தாலும் அப்பனே பின் உலகத்திற்கு இவ் வாக்குகள் அப்பனே பறந்து கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே... சில தத்துவங்களை எல்லாம் என்பேன் அப்பனே.
அப்பனே இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட காப்பாற்றி இருக்கலாம் அப்பனே அதனை..
ஆனாலும் அதை வைத்துக்கொண்டு விலை பேசி இருப்பான் அப்பனே மனிதன்.
இதனால் அப்பனே நிச்சயம் விட்டு விட்டோம் அப்பனே.
ஆனால் வருங்காலத்தில் அப்பனே உலகத்திற்கு செல்லுமப்பா!! உங்களுடைய வாக்குகள்... பலமாக!!!
அப்பனே ஒவ்வொருவரையும் ஏற்படுத்தி நிச்சயம் தன்னில் கூட பின் எதனைக் காக்க வேண்டும்?? என்பதையெல்லாம் எடுத்துச் சொல்லிட்டு அப்பனே... அனைவரும் தெளிவு பெறுவார்கள் என்பேன். அப்பனே!!
அப்பனே பின் இவ்வாறு நிச்சயம் தன்னில் கூட... தெளிவு பெற்று விட்டால் அப்பனே... உங்களை அப்பனே பின் நீங்களே வெல்லலாம்.
துன்பம் என்ற அப்பனே பின் அதாவது துன்பம் என்ற..உள் !!... நீங்கள் விட மாட்டீர்கள் என்பேன் அப்பனே அனைவருக்குமே இது பொருந்தும்!
அப்பொழுது நிச்சயம் தன்னில் கூட பின்.. துன்பம் அதை எதிர்த்து நிற்பீர்கள் என்பேன் அப்பனே.
அப்பனே நிச்சயம் தன்னில் கூட இறைவன் அப்பனே பின்.. இன்பத்தையும் அப்பனே பின் துன்பத்தையும் அப்பனே படைத்தான் அப்பனே.
ஆனாலும் அப்பனே பின்... துன்பம் வருகின்ற பொழுது அப்பனே நிச்சயம் அப்பனே மயங்கி விடுகின்றான் என்பேன் அப்பனே.
ஆனாலும் அப்பனே அதை எதிர்கொள்ளும் சக்தியையும் அப்பனே கொடுத்திருக்கின்றான் அப்பனே...
ஆனாலும் அப்பனே அதை எதிர்கொள்ளும் சக்தி... எப்படி என்பதையெல்லாம் அப்பனே யான் எடுத்துரைப்பேன் அப்பனே.
அப்பனே இதனால் அப்பனே... எடுப்பதும் கொடுப்பதும் இவ்வுலகத்திலே என்பேன் அப்பனே... இக்கலி யுகத்திலே என்பேன் அப்பனே...
அப்பனே எண்ணங்களை பொறுத்து எடுத்துக் கொள்வீர்கள் அப்பனே.
பின் எண்ணங்களை பொறுத்து.. அவை கீழ் தடுமாறி விடுவீர்கள்.
அப்பனே பின் பிறக்கும் பொழுதே இறைவன் அனைத்தும் கொடுத்து அனுப்புகின்றான் என்பேன் அப்பனே..
அதை சரியாகவே பயன்படுத்துவது இல்லை அப்பனே மனிதன் அவ்வளவுதான்.
அப்பனே அதை எப்படி உபயோகித்துக் கொள்ள... என்பதை எல்லாம் அப்பனே வரும் காலத்தில் எடுத்துரைக்கும் பொழுது அப்பனே நிச்சயம் அப்பனே நீங்கள் வெற்றி பெறுவீர்கள் அப்பனே அனைவரும்.
அப்பனே இறைவன் கொடுப்பதும் இல்லை எடுப்பதும் இல்லை இங்கு!!!
அப்பனே நீங்கள் செய்த பாவமும் புண்ணியமும் தான் அப்பனே.
அப்பனே நிச்சயம் தன்னில் கூட இறைவன் இருக்கின்றான்... நிச்சயம் தன்னில் கூட இதனால் அப்பனே பார்த்துக் கொண்டே இருக்கின்றான் என்பேன் அப்பனே.
நாம் தன் அறிவை கொடுத்தோமே இவன்.. சரியாக பயன்படுத்துகின்றானா?? என்றெல்லாம்!!!! அப்பனே!!
அப்படி பயன்படுத்தவில்லை என்றால் அப்பனே உன்னை... சாகடித்திடுவான் இறைவன்.
அப்பனே அதனால்தான் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட ஒரு ஒருவருக்காவது... உபயோகமாக இருக்க வேண்டும் அப்பனே.. மனிதனுக்கு மனிதன்.
அப்பனே அதனால்தான் பல புண்ணியங்கள்.. செய்யுங்கள் அப்பனே ஏதாவது உயிரினத்திற்கு.ஆவது செய்யுங்கள் செய்யுங்கள் என்றெல்லாம் அப்பனே மனிதர்களுக்கு தெரிவித்துக் கொண்டே இருக்கின்றோம்.
அப்பனே உங்களிடத்தில் ஏதும் இல்லாவிடிலும் கூட அப்பனே பின் இப்படி போ!!!... பின் நன்மை நடக்கும் என்று கூட (நல்வழி காட்டுதல்) சொல்ல வேண்டும் என்பேன் அப்பனே!
அப்பனே இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே மீண்டும் சொல்கின்றேன் அப்பனே..
எதற்கும் உபயோகம் இல்லாதவனை இவ்வுலகத்தில் விட்டு வைக்க மாட்டான் இறைவன் சொல்லிவிட்டேன் அப்பனே.
துன்பத்தில் நுழைத்து அப்பனே அதன் மூலம் மரணத்தை ஏற்படுத்தி விடுவான் அப்பனே
சொல்லிவிட்டேன் அப்பனே!!
இதனால் அப்பனே பின் கோடிகளாக வைத்துக் கொண்டாலும் ஒன்றும் பிரயோஜனம் இல்லையப்பா!!!
அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் அப்பனே இறைவன் எப்பொழுது கொடுப்பான்?? எப்பொழுது எடுப்பான்... என்பதையெல்லாம் யாம் அறிவோம் அப்பனே!!!
அப்பனே அதை எல்லாம் எம் மக்களுக்கு நிச்சயம் தெளிவுபடுத்துவேன் என்பேன் அப்பனே.
வருங்காலத்தில் என்பேன் அப்பனே
அப்பனே இறைவன் யார் என்பதே தெரியவில்லை என்பேன் அப்பனே மனிதன் நிச்சயம் அப்பனே அதை தெரிந்து கொள்ளாமல் யான் தான் இறைவன் என்று சொல்லிவிடுகின்றான் அப்பனே கலியுகத்தில். என்பேன் அப்பனே.
அவனே துன்பத்தில் விழுந்து விடுகின்றான் என்பேன் அப்பனே.
அவனே இறப்பிற்கு வழி தேடுகின்றான் என்பேன் அப்பனே!!
அப்பனே இதனால் அவனவன் செய்த தவறுகள் அப்பனே அவனையே தண்டித்து விடுகின்றது என்பேன் அப்பனே
அவனவன் செய்த புண்ணியங்கள் அப்பனே அவனையே அப்பனே தூக்கி விடுகின்றது என்பேன் அப்பனே
அப்பனே இறைவன் எதை என்று அறிய அறிய கொடுப்பதும் இல்லை அப்பனே எடுப்பதும் இல்லை அப்பனே... சமமாக பார்த்துக் கொண்டே இருக்கின்றான் அப்பனே... நீங்கள் செய்த அதாவது உங்கள் எண்ணத்திற்கு ஏற்றவாறே... அப்பனே கொடுப்பதும்.. எடுப்பதும் அப்பா!!
அப்பனே இறைவன் அனைவரையும் சிருஷ்டித்தான் என்பேன் அப்பனே... இறைவனுக்கு தெரியும் அப்பா எப்பொழுது எடுக்க வேண்டும்? எப்பொழுது கொடுக்க வேண்டும்? என்று!
அப்பனே இதனால் அப்பனே இன்னும் தத்துவங்கள் எல்லாம் சொல்வேன் என்பேன் அப்பனே யான்!!!
அப்பனே அவையெல்லாம் தெளிவடைகின்ற பொழுது அப்பனே அப்பனே நீங்கள் உயர்ந்து பெருகுவீர்கள் என்பேன் அப்பனே.. அப்பனே நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பேன் அப்பனே.
எப்பொழுது என்று கேட்டு விடாதீர்கள்... நிச்சயம் பக்குவங்கள் பட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் என்பேன் அப்பனே.
அதாவது அப்பனே விளக்கு... எளிதில் பின் நிச்சயம் அப்பனே விரைவாகவே எரிந்து விடும் என்பேன் அப்பனே உள்ளத்திலே...
கவலைகள் இல்லை!!
அப்பனே உங்கள் பாதையில் சென்று கொண்டே இருங்கள் என்பேன் அப்பனே யான் அருகிலே இருப்பேன் என்பேன் அப்பனே... அவ்வளவுதான்.
எதை என்று நீங்கள் விரும்பினாலும்... அது உங்களுக்கு நல்லவையா? தீயவையா? என்பதை யாம் அறிவோம் அப்பனே!!!
அப்பனே நிச்சயம் தன்னில் கூட அதனால் நல்லவையாக இருந்தால் கொடுத்து விடுவேன்.
அதனால் பின் தீயவையாக இருந்தால் யான் கொடுக்க மாட்டேன்.
அவ்வளவுதான்.
இதனால் அப்பனே உங்களை பக்குவப்படுத்திக் கொண்டிருக்கின்றேன். அப்பனே இன்னும் அப்பனே உலகத்திற்கு.. அப்பனே பின் எவை என்று அறிய அறிய சில விஷயங்களை வெளி காட்ட வேண்டும் என்று.
அப்பனே இங்கு அனைத்தும் பொய் என்று உணர வேண்டும் சொந்தங்கள் என்பேன் அப்பனே.
இவ்வளவுதான்!! இறைவன் வந்து விடுவான் உள்ளத்தில்!!
அப்பனே அப்பொழுது இறைவன் சொந்தமாகி விடுகின்றான் என்பேன் அப்பனே.
மிகப்பெரிய சொந்தம் அப்பா இவ்வுலகத்தில்.
அப்பனே அதனால் அப்பனே இறைவன் துன்பம் கொடுக்கவே மாட்டான் அப்பனே...
ஆனால் மனிதனின் சொந்தங்கள் அப்பனே துன்பத்தை ஏற்படுத்தும் என்பேன் அப்பனே நிச்சயம் அப்பனே.
அப்பனே நிச்சயம் தன்னில் கூட சொந்தங்கள் எதை என்று அறிய அறிய நிச்சயம் அப்பனே... இன்னும் விளக்கங்கள் அப்பனே என் பக்தர்களுக்கு... நிச்சயம் எடுத்துச் செல்வேன் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட உலகம் தெளிவு பெறும் என்பேன்
அப்பனே இன்னும் நட்சத்திரங்களை பற்றி சொல்வேன் என்பேன் அப்பனே... நட்சத்திரங்கள் அப்பனே இன்னும் மாதத்திற்கு.. ஒரு நாள் பின் கீழே இறங்கும் என்பேன் அப்பனே... கீழே இறங்கி அப்பனே நீராடி... மீண்டும் மேலே செல்லும் என்பேன் அப்பனே.
நிச்சயம் எப்பொழுது என்று தெரிவிக்கின்றேன் அனைவருக்குமே!!
அப்பனே இவையெல்லாம் மனிதனால் கண்டுபிடிக்க முடியாதப்பா... எவ்வளவு விஞ்ஞானிகள் பின் வந்தாலும்!!!
அப்பனே கண்ணுக்குத் தெரியாத அப்பனே புண்ணியங்கள் பெற்றால் அப்பனே கண்ணுக்குத் தெரியாமலே நல்லது நடக்கும் என்பேன் அப்பனே.
அப்பனே இதனால் அப்பனே நிச்சயம் இறைவனே ஆட்சி செய்தால் மட்டுமே.. நன்மை உண்டு என்பேன் அப்பனே இங்கு.
மனிதன் ஆட்சி செய்தால் மட்டுமே நிச்சயம் தன்னில் கூட சில பாவங்களை அனுபவிக்க தான் வேண்டும் என்பேன் அப்பனே.
அப்பனே நிச்சயம் தன்னில் கூட சொல்லி விட்டேன் அப்பனே நரகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் என்பேன் அப்பனே.
இதனால் நரகத்தில் மனிதனுடைய ஆட்சிகள் தான் நடக்கும் என்பேன் அப்பனே.
அப்பனே இதனால் எதை என்று அறிய அறிய.. இறைவன் என்ன சொன்னாலும்.. பொய் என்று சொல்லிவிடுவார்கள் அப்பனே.
அதற்காகத்தான் அதிவிரைவிலே அப்பனே யாங்கள் மாற்றம் அடைய செய்து விடுவோம் என்போம் அப்பனே...
நல் மனிதருக்கு அப்பனே நல்லதை புகுத்தி.. அப்பனே பின் மேற்கொண்டு.. நல்லதை செய்ய அப்பனே பின் தூண்டி விடுவோம் என்போம் அப்பனே.
இதனால் நிச்சயம் அப்பனே... மனிதனை ஞானியாக்குவோம் என்போம் அப்பனே.
அப்பனே இதனால் இவ் நரகத்தில் வந்து அப்பனே எத்தனை வாக்குகள்???? எதை என்று அறிய அறிய.. உண்மைகளை சொன்னாலும் அப்பனே பின் மனிதன் நம்ப போவதாக இல்லை என்பேன் அப்பனே!
பார்த்துக் கொண்டே!!!!!!! தானே இருக்கின்றோம் யாங்கள்!!!...............
அப்பனே இவ் நரகத்தில் எப்படி எல்லாம் மனிதனை பக்குவப்படுத்தினால் நிச்சயம் தெரியும்... என்பதையெல்லாம் அப்பனே தெளிவுபடுத்தவே... அனைவரும் அப்பனே மாறி விடுவார்கள் என்பேன் அப்பனே எளிதில் என்பேன் அப்பனே.
அனைத்தும் எங்களுக்கு தெரியும் அப்பா..
சித்துக்கள் விளையாட கூடியவர்கள் சித்தர்கள் என்பேன். அப்பனே.
அப்பனே அனைத்தும் தெரியும் எதை என்று அறிய அறிய... சித்தர்களுக்கு என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
அப்பனே ஆனாலும் பின் நிச்சயம் பின்... எங்களைப் பற்றியும் பின் புரிந்து கொள்ள முடியாதப்பா!!!
சொல்லிவிட்டேன் அப்பனே.
புரியாமல் தான் அப்பனே மனிதன் தவித்துக் கொண்டு யான் சித்தன் என்று சொல்லிவிடுகின்றான் என்பேன் அப்பனே.
துன்பத்தில் விழுந்து விடுகின்றான் என்பேன் அப்பனே!!!
அப்பனே நிச்சயம் அப்பனே சித்தனை பற்றி. பின் நிச்சயம் அப்பனே.. எவ்வளவு எதை என்று கூற ஆழ்ந்து மனதில்.. எதை என்று அறிய அறிய அப்பனே எப்படி சென்றாலும் அப்பனே.. சித்தனை பற்றி நிச்சயம் அப்பனே தெரிந்து கொள்ள முடியாதப்பா!!
அப்பனே அப்படி நிச்சயம் தெரிந்து கொள்வதற்கும் நிச்சயம் ஆராய்ச்சிகள் செய்தாலும் முடியாதப்பா.
நிச்சயம் தன்னில் கூட அவ்வாறு ஆராய்ச்சிகள் செய்து செய்து செய்து அப்பனே... பார்த்துவிட்டார்கள் மடிந்து விட்டார்கள் அப்பனே.
வேண்டுமென்றால் மனிதன் தன் பெயரை சித்தன் என்று வைத்துக் கொள்ளலாம் அவ்வளவுதான் என்பேன் அப்பனே.
ஆனாலும் நிச்சயம் வீண் அப்பா.
கடைசியில் அப்பனே அவ் சித்தன்.. என்று வைத்துக் கொண்டிருக்கின்றானே அப் பெயரே அவனை அழித்துவிடும் என்பேன் அப்பனே.
அப்பனே நிச்சயம் தன்னில் கூட பல ரகசியங்கள் இவ்வுலகத்தில் அடங்கி இருக்கின்றது.. என்பேன் அப்பனே.
அப்பனே நிச்சயம் நீங்கள் எல்லாம் இயந்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என்பேன். அப்பனே.
இதனை இயக்கும் சக்தி.. அப்பனே இறைவனே என்பேன் அப்பனே.
அப்பனே எப்பொழுது இயக்க வேண்டும் எப்பொழுது நிறுத்த வேண்டும் பிடுங்க வேண்டும்.. எதை பிடுங்கினால் நிச்சயம் நன்றாக விடுவான் என்பதை எல்லாம் அப்பனே... நிச்சயம் அடிக்கடி பிடுங்கி கொண்டே இருப்பான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அதாவது மின்சாரத்தைக் கூட!!!
அப்பனே நிச்சயம் இதனால் அப்பனே மனிதனாலும் அப்பனே பல ஆண்டுகள் வாழ முடியும் அப்பா...
அப்பனே இன்னும் விவரமாக குறிப்பிடுகின்றேன் அப்பனே... புண்ணிய ஸ்தலங்களுக்கு பின் நிச்சயம் தன்னில் கூட.. புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்றால்தான் இவையெல்லாம் கூட சொல்ல முடியும் என்பேன் அப்பனே.
அப்பனே இன்னும் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்... இன்னும் பல விஷயங்கள் இருக்குதப்பா.
அப்பனே இப்பொழுது தான் ஒன்றுக்கு (ஒன்றாம் வகுப்பிற்கு) வந்திருக்கின்றீர்கள் என்பேன் அப்பனே.
அப்பனே நலன்களாகவே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் அப்பா ஆசிகள்!!!! அப்பனே.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
No comments:
Post a Comment