​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 27 October 2025

சித்தன் அருள் - 1967 - அன்புடன் அகத்தியர் - பாபநாசம் கூட்டுப் பிரார்த்தனை வாக்கு - 3


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய பாபநாசம் கூட்டுப் பிரார்த்தனை வாக்கு.

நாள் 27-7 2025.

வாக்குரைத்த ஸ்தலம் :- பாபநாசர் ஆலயம் அருகில் கூட்டு பிரார்த்தனை நடந்த மண்டபம், பாபநாசம், திருநெல்வேலி மாவட்டம்.

பாபநாசம் கூட்டுப்பிரார்த்தனையின் முந்தய வாக்கு பதிவுகள்.

சித்தன் அருள் - 1912 - அன்புடன் அகத்தியர் - இடைக்காடர் சித்தரின் பாபநாசம் வாக்கு!

சித்தன் அருள் - 1920 - அன்புடன் அகத்தியர் - பாபநாசம் வாக்கு!

அகிலத்தை ஆண்டு வந்த இறைவா போற்றி. போற்றியே பணிந்து வாழ்த்துகள் ஈகின்றேன் என் சேய்களுக்கு. 

அப்பப்பா !!! நிச்சயம் தன்னில் கூட அப்பா!! வரும் காலத்தில் நிச்சயம் மனிதனுக்கு ஏற்றங்கள் இருக்காது அப்பா. ஏன் எதற்கு இதை சொல்லுகின்றேன் என்றால், பின் அனைவரும் சித்தர்களை நோக்கியே வருகின்றார்கள் ஏன் எதற்கு என்றெல்லாம்? நிச்சயம் எங்கெல்லாம் திருத்தலங்கள் இருக்கின்றதோ, அங்கெல்லாம் நிச்சயம் அலைந்து திரிகின்றனர். ஆனாலும் கலியுகத்தில் ஒரு பயனும் இருக்காது அப்பா. இதுதான் அப்பனே, ஈசன் கட்டளையும் கூட. ஆனால், ஈசனை எப்படி பின் சரியாக வணங்க வேண்டும் என்பதை எல்லாம் அப்பனே, பின் அதாவது நம்பிவிட்டீர்கள் அப்பனே. 

நம்பிக்கை துரோகம் செய்யக்கூடாது  அப்பா உங்களுக்கு. அப்பனே அகத்தியனை, பின் அகத்தியன் என்றால், ஓடோடி வந்துவிடுகிறீர்கள் அப்பனே. சித்தர்கள் என்றால், ஓடோடி வந்துவிடுகிறீர்கள் என்பேன் அப்பனே. 

அப்பொழுது ஒன்றும் நடக்காவிடில், பின் சித்தர்கள் இல்லை என்று, பின் கலியுகத்தில் செப்பக்கூடாது. அப்படி செப்பும் நிலையும் வரும்  அப்பா. ஏன் இறைவன் இல்லை? பின் அனைத்தும் அநியாயங்களும் கூட, அக்கிரமங்களும் கூட நடந்து கொண்டே இருக்கின்றது அப்பனே.  

அவை மட்டுமில்லாமல், இங்கே நிச்சயம் தன்னில் கூட, பின் நல்லவர்,  தீயவர் என்றெல்லாம் இல்லை அப்பனே.

“”””””அரக்கர் கூட்டமும் ஒன்று ஒன்று இருக்கின்றது அப்பா. அவ் அரக்க கூட்டங்கள் வந்து நிச்சயம் நல்லோர்களை கூட மனதை மாற்றி கெடுத்துவிடுவார்கள் அப்பா.””””””

இதனால்தான் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அவ் அரக்கர்களை கூட நீங்கள் எதிர்கொள்ள வேண்டும். அதனால்தான் அப்பனே, உங்களையும் கூட  அப்பனே. 

அதாவது பின் நல் பக்தன் அப்பனே, ஒருவன் இருந்தால் அப்பனே நிச்சயம் அப்பனே கோடிக்கு சமம் என்பேன் அப்பனே. அப்பனே  கோடி அப்பனே நிச்சயம் தீயவர்கள் இருந்தாலும், அப்பனே, நிச்சயம் தன்னில்  கூட அப்பனே, எதை என்று புரிய  ஒருவனால் வென்றுவிட முடியும் அப்பா.

ஆனாலும் அப்பனே, அனைத்தும் உங்களுக்கு பின் தயாராக. அப்பனே, கொடுக்க தயாராக. ஆனாலும் அப்பனே, பக்குவங்கள் இல்லையப்பா. அவ்  பக்குவங்கள் நிச்சயம் இல்லாவிடில் அப்பனே, யாருக்கு கொடுத்தாலும் அதை பயன்படுத்த முடியாது அப்பா, 

அதனால்தான் அப்பனே, சிறுக சிறுக அப்பனே, சேமித்தாலே பெரும் பணம். அப்பனே, சிலருக்கு திடீர் பணம் வரும் வரும் அப்பா.  திடீர் என்று போய்விடும். ஏனென்றால், பின் திடீர் வருவது பக்குவம் இல்லாதவை அப்பனே.  அதை எப்படி பயன்படுத்த தெரியாது. மீண்டும் போய்விடும் என்பேன் அப்பனே, 

ஆனால் படிப்படியாக கொடுத்தால் நிச்சயம் அப்பனே.  அதாவது அப்பனே, நிச்சயம் நீங்கள் அனைவருமே பின் சித்தரை நோக்கி வருகின்றீர்கள் அப்பனே. 

ஆனாலும் அப்பனே, உங்களுக்கு துரோகம் செய்யக்கூடாது அப்பா, 

ஏனென்றால் அப்பனே, கலியுகம் அப்பனே. சொல்லிக்கொண்டே இருக்கின்றேன். அழியுகம் , அழியுகம் என்றெல்லாம் அப்பனே.

இதனால் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இறைவன் அப்பனே, எப்படி எல்லாம் பிறக்க வைத்தான் அப்பனே, ஆனால் மனிதன் அப்படியெல்லாம் இல்லையப்பா. அதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்படியெல்லாம் அப்பனே இல்லாத காரணத்தால், இறைவனுக்கே கோபம். 

அதாவது, தான் தான் பிள்ளைகள் அப்பனே, உங்கள் பேச்சை கேட்டால் நல் பிள்ளை என்று சொல்வீர்கள் அப்பனே, அதேபோலத்தான் அப்பனே, நிச்சயம் அப்படி கேட்காவிடில் அப்பனே, மனக்குழப்பங்கள், பின் சண்டைகள்  அப்பனே, இன்னும் எதை எதையோ அப்பனே, பின் ஒருவருக்கு ஒருவர் அப்பனே வாக்குவாதங்கள். ஆனாலும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இதனால் என்ன ஆகும் என்றெல்லாம் அப்பனே, 

இதே போலத்தான் அப்பனே, கலியுகத்தில் இறைபலங்கள் குறைந்துவிடும் அப்பா, 

அப்பனே நிச்சயம் அயோக்கியத்தனங்கள் எல்லாம் அதிகரிக்கும் அப்பா.

அப்பனே, பின் குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் நிம்மதி இருக்காது அப்பா, 

அவை மட்டுமில்லாமல், சண்டைகள், சச்சரவுகள். 

இதனால் அப்பனே நிச்சயம் இல்லத்திலே அப்பனே, இதையெல்லாம் நடந்து  நிச்சயம், அப்பனே, மனம் குழம்பி அப்பனே, நிச்சயம் எவை என்று புரியாமலும், பின் இப்படி இறைவனை வணங்குகின்றோமே? ஏன் இந்த சூழ்நிலை? ஏன் இந்த கஷ்டம் என்றெல்லாம் அப்பனே நிச்சயம் நீங்கள் நினைப்பீர்களாக. ஆனால் நிச்சயம் நினைப்பீர்கள்  அப்பா, 

அப்பா அறிந்து இதனால் அப்பனே, நீங்கள் நிச்சயம் வந்தாலும், பின் நால்வருக்கு உதவி செய்ய வேண்டும் என்றெல்லாம் அப்பனே, முன்னோர்கள் வாக்கு.

ஆனாலும், பின் அவ் மனநிலையிலே நீங்கள் இருப்பீர்கள். அப்பா, ஏன் எதற்கு? அப்பனே, இன்னொரு விடயத்தையும் நான் சொல்கின்றேன் அப்பனே.

நிச்சயம் சித்தர்களால் அப்பனே, நிச்சயம் எப்படி ஏன் இவ்வுலகம் அழியும் என்பதை எல்லாம் அப்பனே தெரிவித்துக் கொண்டிருக்கின்றேன் அப்பனே. 

நிச்சயம் அப்பனே இவையெல்லாம் காரணம் அப்பனே, நிச்சயம் இறைவனும் இல்லை, சித்தரும் இல்லை அப்பனே, மனிதன் தான் காரணம். இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் ஒவ்வொரு மனிதனையும் யாங்கள் தேர்ந்தெடுத்து, அப்பனே, நல்ல விதமாக எங்கள் பணியை செய்யச் செய்து. அப்பனே, நிச்சயம் இருப்பவர், நிச்சயம் தன்னில் கூட நல்லோர்களை ஏற்படுத்தி, அரக்க கூட்டர்களை கூட்டங்களை அழிப்போம் என்போம் அப்பனே, 

“””” நிச்சயம் தன்னில் கூட இவ்வுலகத்தில் அரக்க கூட்டங்களை நிச்சயம் அழிக்க வேண்டும் என்பேன் அப்பனே.  “”””” 

அப்படி அழிக்காவிட்டால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இன்னும், அப்பனே, கற்பழிப்புகள், கொலைகள் அப்பனே, இன்னும்,அப்பனே, பல வழியில் கூட அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அதாவது நல்லோர்கள் எல்லாம், இறைவா, ஏன் இவ்வாறு நடந்து கொண்டிருக்கின்றது என்றெல்லாம் அப்பனே நிச்சயம். 

ஆனாலும் அப்பனே ஒன்றை நன்றாக தெரிவிக்கின்றேன் உங்களுக்கு. 

அப்பனே,  கலியுகத்தில் அதிகமாக தீயவைத்தான் நடக்க வேண்டும் என்பது விதியப்பா. 

அப்பனே இது ஆதி ஈசனாலே இவ்வாறாக சில ஆண்டுகள் கலியுகத்தில்,  தொடங்குவதற்கு முன்பே, பின்பே, அப்பனே எதனை என்று ஆராய்வது?. 

அப்பனே இதனால்தான் அப்பனே, பல ஞானியர்கள், சில குருமார்கள் வந்தார்கள். அப்பா. மக்களுக்கு தெளிவு பெற செய்தார்கள் அப்பா,.

ஆனால் மக்களோ அதையும் கூட ஏற்று நடக்கவில்லை  அப்பா, 

அப்பனே இதனால் அப்பனே நிச்சயம் எப்பொழுது, அதாவது இறைவனே அப்பனே, நிச்சயம் யார் இறைவன் என்றெல்லாம் உங்களுக்கு நிச்சயம் தெரியாது அப்பா.

அனைத்தும் அப்பனே நிச்சயம் ஏதோ இறைவனை வழிபடுகின்றோம். இறைவன் நம் தன்னுக்கு செய்கின்றார்கள் என்றெல்லாம்  யோசித்துக் கொண்டிருப்பீர்கள் என்பேன். அப்பனே.

ஆனால் நிச்சயம் பின் அவர் யோசனை. 

அப்பனே பின் அதாவது கலியுகத்தில்  வயதை நீங்கள் கடந்து விடுகின்றீர்கள். அதாவது  70 வயதிற்கு வந்த பிறகு, எங்கு இறைவன் இருக்கின்றான்? இவ் நேரமும் தேடினும் எங்கும் காணவில்லையே? என்று அப்பனே நிச்சயம் கண்டுகொள்வீர்களாக நீங்கள் அப்பனே.

ஏன் எதற்கு? அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பின் கலியுகத்தில் நிச்சயம் அப்பனே, பின், அதாவது, பின் திருத்தலங்களில் கூட, அப்பனே, மாற்றங்கள் ஏற்படும் அப்பனே.

நிச்சயம் திருத்தலத்தில் திருடர்கள் தான் அப்பனே, அதிகமாக செல்வார்கள் அப்பனே. நிச்சயம் தன்னில் கூட நல்லவர்கள்  அப்பனே  நிச்சயம் செல்ல முடியாது அப்பா. 

“”””””””””””””ஆனால் அப்பனே நீங்கள் எல்லாம் அதாவது நல்லவர்கள் எல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட  அதாவது (கெட்டவர்கள்) அவர்களுக்குத்தான் அதிக மதிப்பு என்றெல்லாம். அப்பனே, நிச்சயம் இக்கலியுகத்தில் என்பேன் அப்பனே. “””””””””””””

“””””””””””””””” ஆனால், நிச்சயம் தன்னில் கூட பக்தியே பொய்யாகும் என்பேன். அப்பனே கலியுகத்தில் அப்பனே. “””””””””””””””

இன்னும் என் பக்தர்களுக்கு எப்படி எல்லாம் பின் இருந்தால்,  இவ்வுலகத்தில், அப்பனே, நீங்களும் அப்பனே நீடூழி வாழ்ந்து, பின் நோய்கள் இல்லாமல் வாழ்ந்து, பரிசுத்தமாக ஆன்மாவை பெற்று, வாழ்க்கையில் நிச்சயம் சந்தோஷம் அடையலாம் என்பேன் அப்பனே. 

ஏனென்றால் மனிதன் அதாவது ஒன்றை சொல்கின்றேன் அப்பனே. 

ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுகிறேன் என்பேன் அப்பனே, 

“””” கலியுகத்தில், அப்பனே, நிச்சயம் அதிகம் பாவம் செய்தவர்களுக்குத்தான் பிறக்கின்றீர்கள் என்பேன் அப்பனே சொல்லிவிட்டேன்.  “””””

இதனால் அப்பனே ஒவ்வொருவருக்கும் அப்பனே சூழ்நிலைகள். 

ஆனாலும் இப்பாவத்திலும் கூட என்னை நோக்கி வந்தவர்கள் தான் அப்பா நீங்கள் என்பேன் அப்பனே முன்னொரு காலத்தில்.

அதனால்தான் அப்பா நிச்சயம் அதிக அளவு உங்களை பாவம் பின் தாக்காமல், பின் யாங்களே, பின் புண்ணிய பாதையில் அழைத்துச் சென்று, உங்களுக்கு தேவையானதை யாங்களே வழங்குவோம் அப்பா. 

“”””””””” அப்பனே, நிச்சயம் பின் அழகாகத்தான் இறைவன் மனிதன் படைத்தான் என்பேன். “””””””””

ஆனால் புத்தி கெட்ட மனிதன் அப்பனே, உலகத்தை அழித்துக் கொண்டிருக்கின்றான். அப்பா, 

“”””” அப்பனே, இறைவன் ஏனோ தன் செல்லக் குழந்தைகள், செல்லக் குழந்தைகள் என்றெல்லாம் விட்டுவிட்டு அப்பனே நிச்சயம் தன்னில் கூட. “””””

ஆனால் மனிதனோ தன் வேலையை காட்ட ஆரம்பித்தான். அப்பா. 

இதனால் இங்கு யார் குறை?  எதை என்று புரிய. 

இதனால் அப்பனே  நிச்சயம் தன் தந்தைக்கு, நிச்சயம் தன்னில் கூட, அதாவது, நிச்சயம் சரியாகவே, பின் எதை என்று புரிய பின், அதாவது, அனைவருக்கும் பின் எதை என்று புரிந்து கொள்ள பார்க்கின்றான் அப்பா, 

“”””” நிச்சயம் அவ் பாசத்திற்கு மாறுதலாக நடந்தால், தந்தை நிச்சயம் எதை எடுக்க வேண்டுமோ அதை நிச்சயம் எடுப்பான். அப்பா. “””””

அதேபோலத்தான் அப்பனே நிச்சயம் மனிதன், அப்பனே, ஒழுங்காகவே இல்லை. அப்பா, இவ்வுலகத்தில் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே மனிதன் நிச்சயம் தன்னில் கூட உலகம் இறைவனால், பின், நிச்சயம் பின் அழிக்கப்படவில்லை  என்பேன் அப்பனே, 

இறைவனால் நிச்சயம் மனக்குழப்பங்கள் இல்லை என்பேன். 

இறைவனால் கஷ்டங்கள் இல்லை என்பேன். அப்பனே, 

நிச்சயம் மனிதனே ஏற்படுத்திக் கொள்கின்றான் இங்கு. 

அப்பனே இதை நிச்சயம் அப்பனே, இதனால் இவ் மனிதன் ஏற்படுத்திக் கொண்டு, நிச்சயம் இறைவனிடத்தில் செல்வதாம். அப்பனே ஒன்றும்  நடக்காது அப்பா.

(நமது வழிமுறைகளால் இறைவனை நெருங்க இல்லாது. சித்தர்கள் காட்டும் வழிகளிலேயே இறைவனை காண, நெருங்க  இயலும். )

அதனால்தான் அப்பனே, 

இறைவனை எப்படி வணங்க வேண்டும்?, 

எப்படி அழைக்க வேண்டும்?

எங்கு இருப்பான்?  

என்பதை எல்லாம் யாங்கள் அறிவோம் அப்பனே.

அதனால் அப்பனே, உங்களை அழகாக எங்களுக்கு பின் சுலபமாக உங்களை அழைக்க, அழைக்க, அழைக்க. அப்பனே, இறைவன், அதாவது, அதாவது, அன்பின் மூலமே, அப்பனே, உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவது உறுதி. அப்பா, 

இதனால் அப்பனே, 

ஏன்? 

என்ன நடக்கின்றது?

என்பதை எல்லாம் அப்பனே.  

நிச்சயம் அப்பனே அத்தனை பாடல்களும் கூட அப்பனே, நிச்சயம் பின் அனைவரும் கூட அப்பனே சாதாரணம் இல்லை என்பேன் அப்பனே. 

நிச்சயம் அப்பனே ஒவ்வொரு பாடலையும் கூட, ஏன்  அப்பனே, இவ் திருவாசகத்தை நான் இயக்கச் சொன்னேன் என்றால் அப்பனே, நிச்சயம் அதை அப்பனே, நிச்சயம் இன்னும் சில பாடல்கள். அப்பனே, நிச்சயம் அருணகிரி. அப்பனே பரிபூரணமாக அப்பனே, இவையெல்லாம் பின் எதற்கு தேவை என்று புரிய. இவையெல்லாம் பாடினால், அனைவருக்கும் நன்மை ஏற்படும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்பேன் அப்பனே.

ஆனால், நிச்சயம் இல்லை அப்பா.

—---------------------------------------------------------------
இப்போது கூடு விட்டு கூடு பாயும் அஷ்டமா ஸித்திதனை பார்ப்போம்.

சித்தன் அருள் - 1655 - அன்புடன் அகத்தியர் - திருக்கோணேஸ்வரம்/ சக்தி பீடம், திரிகோணமலை
https://siththanarul.blogspot.com/2024/07/1655.html

தனது தவ வலிமையால்  கூடு விட்டு கூடு பாயும் அஷ்டமா சித்தி பெற்றவர் இராவணேஸ்வரன்..

ஈசனிடம் வரம் வாங்கி தவம் இருந்து ஒவ்வொரு பிறவியாக எடுத்து எடுத்து ஒவ்வொரு பிறவியாக எடுக்கும் பொழுது அந்த உடல்களை எல்லாம் இலங்கையில் மறைந்து இருக்கின்றது. பல பிறவிகள் இராவணன் எடுத்துள்ளார். சுயமாக இலங்கை  தேசத்தை கட்டி எழுப்புவதற்காக தவமிருந்து, சுயமாக உயிரை மாய்த்த போதெல்லாம் தன்னுடைய உடல்களை இலங்கை முழுவதும் புதைத்திருக்கின்றார்.

வாருங்கள். இப்போது மீண்டும் ஒரு  அஷ்டமா சித்தி வாக்கினுள் செல்வோம்.
—------------------------------------------------------------------

முதலில் அப்பனே அறிந்து புரிந்து கூட உடம்பை பலப்படுத்த வேண்டும் என்பேன் அப்பனே.

ஆன்மாவை பலப்படுத்துவது தான் இத்தனை பாடல்கள் அவர்கள் உணர்ந்து, உணர்ந்து, அப்பனே கூடுவிட்டு கூடுபாயும் (அஷ்டமாசித்தி பெற்றதனால்).

நிச்சயம் அவ்வாறு ஒரு பாடல் எழுதும் பொழுது, இவ்வளவுக்கு நிச்சயம், இவ்வளவுதான் ஆயுள் என்று பிரம்மன் (எழுதிய தலை விதி).

ஆனால், அப்பனே, மீண்டும், அப்பனே, அவர்கள் தன் உடலை, அதாவது, நாளைக்கு உயிர் போகிறது என்றால், நிச்சயம் அடுத்த பாடலை எழுத வேண்டும், அல்லவா?

நிச்சயம் உடனே பின் (இறைவனிடம்) முறையிட்டு, இவ் பூத உடம்பை பின் நிச்சயம் இங்கே அமர்த்திட்டு. 

(இங்கு “இங்கே” என்பதற்கு பாபநாசம் தாமிரபரணி நதியின் கீழ் அல்லது ஜீவசமாதி  என்றும் பொருள் கொள்ளலலாம். விளக்கங்கள் பின்னால் வரக்கூடும்.)

நிச்சயம் அப்பனே மறுபடியும் அவ் பூத உடம்பை நிச்சயம் மறுநாளே, பின் அறிந்து கூட பிறப்பெடுத்து, பின்  அழகாக எழுதுவார்கள்  பாடல் என்பேன் அப்பனே. 

அப்பனே ஒவ்வொரு பாடலும் கூட சாதாரணமாக நினைக்காதீர்கள் என்பேன் அப்பனே.

நீங்கள் அப்பனே நிச்சயம் அப்பனே பல ஆண்டுகள் அப்பனே இறைவன், அவர்களுக்கு தக்க தண்டனையும் அப்பனே.

நிச்சயம் அதாவது  தண்டனை இல்லை.

எதை என்று புரிய , அப்பனே இங்கு பக்குவங்கள் கொடுத்து ஒரு பாடலை எழுத, இறைவன், அப்பனே, ஐந்து வருடங்கள் எடுத்துக் கொள்வான் அப்பனே.

ஏனென்றால் பக்குவங்கள் வரவேண்டும் அல்லவா? 

“”””””””””நிச்சயம் இவ்வாறு பக்குவங்கள் பட்டால்தான், நிச்சயம் இறைவனிடம் செல்ல முடியும் என்று.””””””””””””’

அதேபோலத்தான் அப்பனே, சாதாரணமாய் இல்லை என்பேன் அப்பனே. 

அவ் பக்குவப்பட்டு, அடிபட்டு , உதைபட்டு , அப்பனே, ஞானியர்களுக்கே இவ்வளவு துன்பங்கள் என்றால் அப்பனே, பின் அப்பா நீங்கள் யோசித்து பாருங்கள். 

“””””” அப்பனே ஏன் எதற்காக உங்களையெல்லாம் செல்லமாக “””“அப்பனே””” நிச்சயம் என்றெல்லாம் (யான் அழைக்கின்றேன்?). “”””””””

ஆனால் அப்பா உங்களுக்கெல்லாம் ஒன்றும் தெரியவில்லை. 

பாவத்தோடு பின்னி பிணைந்திருக்கிறீர்கள். 

ஐயோ நீங்கள்  நிச்சயம் எவ்வாறு உணரவில்லையே என்று, செல்லமாக, உங்களை, பின், அதாவது, 

“””” அப்பா “”””””, 

“””””அப்பா ”””””””, 

“””””அம்மையே”””””””, 

“””””அம்மையே””””””

 என்றெல்லாம், அழைத்துக் கொண்டிருக்கின்றேன். 

இங்கு ஆண் பெண்ணுமே நிச்சயம் தன்னில் கூட என் சேய்களே , அறிந்தும், அதாவது, 

அப்பனே தான், 

அம்மையே தான் 

என்றெல்லாம், நிச்சயம் இங்கு எதை குறிக்கின்றது என்றெல்லாம் பார்த்தால்……. அறிந்தும்.

“””””””””””””””””””””””இதனால், அப்பப்பா, கோடி பிறவிகள் நிச்சயம், எடுத்து வந்தால் தான் அப்பனே நிச்சயம் எங்களை நிச்சயம் அறிந்து கூட, பின், தொடமுடியும் அப்பா,. சொல்லிவிட்டேன் அப்பனே. “”””””””””””””””””””””””””””””””””

“”””””””””””அவ்வாறு இல்லை என்றால் அப்பனே எங்கள் நினைப்பை கூட யாங்கள் உங்களுக்கு தரமாட்டோம் என்போம் அப்பனே.”””””””””””””

அப்படி நீங்கள் சொன்னாலும் அகத்தியன் பின் வருகின்றான்.

அங்கு இருக்கின்றான் என்று சொன்னாலும்,  அப்பனே அவன் பாவம் அப்பனே.

நிச்சயம் அவர்களை என்னிடத்தில் வரவழைக்க முடியாது அப்பா.

ஏன், எதற்கு, எத்தனை பேர் இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே.

நிச்சயம் அகத்தியன் அதாவது வாயால் சொல்லட்டும், அகத்தியன் என்று  அப்பனே.

நம்புவோரும் என்று உண்டு இங்கு.

அப்பனே, நம்பாதவர்களும் அப்பனே உலகத்தில் அதிகம் அப்பா, 

ஏனென்றால், கலியுகத்தில், அப்பனே, நிச்சயம், அநியாயங்கள், அக்கிரமங்கள், அப்பனே இன்னும் அப்பனே நிச்சயம், ஒன்றை சொல்கின்றேன் அப்பனே.

மறைமுகமாக  ராகு கேதுகளும் அப்பனே அதிவேகமாக.

ஆனாலும் அப்பனே அது திடீரென்று நின்றுவிட்டு அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, மறுசுற்று  அப்பனே. 

ஆனாலும் அப்பனே  ராகு கேது, இவ் கிரகங்கள்  அப்பனே, எவ்வாற  சுழலும் என்பது எல்லாம் உங்களுக்கு தெரியும் அப்பா, 

—-------------------------------------------------------------
(ராகு மற்றும் கேது கிரகங்கள்  பின்னோக்கி (retrograde) சுழல்கின்றன. மற்ற 7 கிரகங்கள் நேர்மாறாக சுழல்கின்றன)
—--------------------------------------------------------------

அது மாறுபட்டு சுழன்றால் அப்பனே, நிச்சயம் அனைவருக்குமே குழப்பம்தான்  அப்பா. 

அப்பனே அனைவரும் பைத்தியக்காரர்கள் ஆவார்கள் என்பேன்  அப்பனே, 

ஏன், எதற்கு இவ்வாறு நடக்கின்றது? 

ஏன், எதற்கு, அப்பனே, 

இதனால், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட.

அப்பனே, இவையெல்லாம், அப்பனே, மனிதனால் மாற்ற முடியாது. அப்பா, 

மனிதன், அதாவது, சாதாரண மனிதன் தான் எங்களுக்கு. அப்பனே, 

இறைவன் பக்தனாக இருந்தாலும், அப்பனே, அதாவது, சிவனடியவராக இருந்தாலும், அப்பனே, யான் பக்தன், எங்களுக்கு அனைத்தும் தெரிந்தவன், அதாவது, அறிந்து கூட, மாந்திரீகம், எவை என்று அப்பனே, நிச்சயம், தேர்ச்சி பெற்றவனாக இருந்தாலும், நிச்சயம் அனைத்துமே மனிதன் தான். அப்பா, 

ஆனாலும் அப்பனே, கலியுகத்தில் இன்னும் அப்பனே, அதை செய்கின்றேன், இதை செய்கின்றேன் என்றெல்லாம் சொல்லி சொல்லி, தன்னை மட்டும் ஏமாற்றிக் கொள்ளாமல், பிறரையும் ஏமாற்றி, அப்பனே கர்மத்தில் விழச்செய்வான். அப்பா, 

இதனால் அப்பனே, உங்களிடத்திலே இறைவன் இருக்கின்றான் அப்பா, 

ஒவ்வொரு அப்பனே, மனிதன் உடம்பில் கூட, இறைவன் இருக்கின்றான் அப்பா, 

அவன் இறைவனை எப்படி வெளிக்கொண்டு வருவது என்று தெரியாமல், அலைந்து கொண்டிருக்கின்றீர்கள் என்பேன் அப்பனே, 

அவைகள் அப்பனே மனிதனுக்கு தெரியாது அப்பா. 

எத்தனை எத்தனை அப்பனே….

ஆனாலும், அனைத்தும் தெரிந்த மனிதன், அது செய்கின்றேன், இதை செய்கின்றேன் என்று சொல்வதெல்லாம், 

அப்பனே, உயிர் போனால் நிச்சயம் உயிர் கொடுக்க முடியுமா என்ன?

அப்பனே முடியாது அப்பா. முடியாது. 

அப்பனே மீண்டும் அப்பனே, இவ் நேரம், இது அறிந்து கூறி, பின், இவ்வுயிர் போகின்றது என்று, அப்பனே, யாங்களே, அறிவோம் என்பேன் அப்பனே, 

அதை கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட உங்களுக்கு, பின், எதை என்று தெரியாது. 

அவன் உயிரையும் கூட நீட்டிக்கலாம் என்பேன் அப்பனே, 

ஏன், எதற்கு, அப்பனே, புண்ணியம் என்ற ஒரு வார்த்தையை தான் இங்கு யான் சொல்கின்றேன் அப்பனே, 

இதனால் அப்பன  யானும் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் அப்பனே?

புண்ணிய பாதையை உங்களை நன்றாக அழைத்துச் சென்றுவிட்டால், அப்பனே, நீங்களே உங்களை , உங்களுக்கு  அப்பனே அனைத்தும் தெரியும். 

இறைவன் அப்பனே, உங்களுக்குள்  அதாவது ஒரு சக்தி இருக்கின்றதே. 

அவ்  சக்தியை யாங்கள் இயக்க பார்க்கின்றோம் அப்பனே, 

ஆனாலும் அது சரியாக இயங்கிவிட்டால், இறைவனை நீங்கள் உங்களிடத்தில் இருந்தே பார்த்துக் கொள்ளலாம் என்பேன் அப்பனே. 

இதனால்தான் அப்பனே, இத்தனை திருத்தலங்கள் ஏன் அமைத்தார்கள் என்பதை எல்லாம் யாருக்கும் தெரியாது அப்பா, 

ஏன், எதற்காக செல்கின்றோம் ? திருத்தலம் திருத்தலமாக  அப்பனே ? 

அப்பனே கஷ்டங்கள் வந்தால் திருத்தலங்கள் ஓடிவிடுவது. 

ஏதாவது நிச்சயம் நடக்க வேண்டும் என்றால் அப்பனே, திருத்தலம் திருத்தலமாக  ஓடிவிடுவது. 

இன்னும் ஜெபங்கள்.

இன்னும் அப்பனே ஆராதனைகள்.

இன்னும் அப்பனே, எதை எதையோ செய்கின்றது அப்பனே, 

ஆனால் ஒன்றும் முடியாது அப்பா.

இன்னும் அப்பனே, மூட நம்பிக்கையில் ஒளிந்து கொண்டிருக்கின்றீர்கள் அப்பனே.

நிச்சயம் அதனால் அப்பனே, மனிதனாக பிறந்துவிட்டால் நிச்சயம் கஷ்டம் ஒன்றை படைத்தான் வேண்டும். 

ஏன், எதற்கு, அப்பனே?  

நிச்சயம் இறைவன் படைத்தான் அல்லவா? 

தந்தை படைத்தான் அல்லவா? 

மீண்டும், தந்தையிடம்  வருவதற்கு பாதை கஷ்டம் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே நீங்கள் நன்றாக உங்களை உணர்ந்து கொண்டால்,  அவ் கஷ்டம் என்ற பாதை நிச்சயம் இருக்காது அப்பா. 

இதனால் அப்பனே நிச்சயம் இறைவனை உணர்ந்து கொள்ள வேண்டும். 

இறைவனா, இறைவனை உணராததே நிச்சயம், இவ்வாறு இன்னும், அப்பனே, நிச்சயம்,  வாழ்ந்தாலும், அப்பனே எதை எதையோ இறைவனே (உங்களை) நீக்கி வைப்பான் அப்பா, 

இவன் இருந்தும் பிரயோஜனம் இல்லையே என்று அப்பனே.

“””” அதனால் யாருக்காவது அப்பனே, பிரயோஜனமாக இருங்கள் என்பேன் அப்பனே.”””””

அவ்வாறு இருந்துவிட்டால், நிச்சயம், அங்கு  100 பேர் அப்பனே, நிச்சயம், குருவாக இருந்தாலும் , அப்பனே, அதில் கூட, அவ்  99 நபர்கள் எப்படியோ இறைவனை வணங்காதவராக இருந்தாலும், அப்பனே ஒருவனுக்காக, இவன் இருக்கின்றானே என்றெல்லாம்  விட்டுவிடுவான் என்பேன் அப்பனே. சொல்லிவிட்டேன்  அப்பனே.

—--------------------------------------------------------------------------------------------------------
(கூட்டுப்பிரார்த்தனையில் நூறு பேர் இருந்தாலும், அவர்களில் 99 பேர் இறைவனை வணங்காதவர்களாக இருந்தாலும், அந்த  ஒரே ஒருவருக்காக  இறைவன் - இவன் ஒருவனாவது பிறருக்கு பிரயோஜனமாக இருக்கின்றானே என்றெல்லாம்  அனைவர்க்கும் அருளிவிடுவார் இறைவன்) 
—--------------------------------------------------------------------------------------------------------

இதனால், வாழ்வதும், வீழ்வதும், உங்களிடத்திலே இருக்கின்றது என்பேன். அப்பனே, 

—-----------------------------------------------------------------------------------------------------
“””” சிவபுராணம் - ரகசியங்கள் - முதல் முறையாக கலியுகத்தில் ”””
—----------------------------------------------------------------------------------------------------

இதனால், ஏன், எதற்கு அப்பனே (நிச்சயம் சிவபுராணம் அனைவரும் அவசியம் ஓதவேண்டும் ) நிச்சயம், தன்னில் கூட? 

சிவபுராணத்தில் கூட அத்தனை வரிகளில் கூட, அத்தனை உள்ளூறுப்புகளை கூட இயக்கக்கூடும்  என்பேன் அப்பனே, 

இதனால் அப்பனே (சிவபுராணம்) அதை படித்தால், அப்பனே, அனைத்து நலன்களும் பெறுவீர்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்பேன் அப்பனே.

ஆனாலும் அதை படித்தால், அப்பனே, உடம்பில் உள்ள பல்லாயிரம் கணக்கான, அப்பனே, பின்  நாடி நரம்புகள் அசைந்து விடும் அப்பா.

இதனால், அப்பனே, பல தொல்லைகள் நீக்கும். அப்பா, 

—---------------------------------------------------------------------------------------------
அதிகாலையில் சந்திரனிலிருந்து நிச்சயம்  அனுதினமும் பின் அதாவது கண்ணுக்கு தெரியாத ஒரு ஒளியானது சூரியனை நோக்கி செல்லும் சித்த ரகசியங்கள். 

YouTube Link
https://www.youtube.com/watch?v=we1bgZHTdFk

அதிகாலை மூன்று மணி  ரகசியம். 
சித்தன் அருள் - 1713 - அன்புடன் அகத்தியர் - காசி வாக்கு 2
https://siththanarul.blogspot.com/2024/10/1713-2.html
—--------------------------------------------------------------------------------------------


அப்பனே ஆனாலும் நிச்சயம்  அப்பனே, ஒரு ஒளி வரும் அப்பா அதிகாலையில்.

எப்பொழுது ஓத வேண்டும்?

அப்பனே எப்பொழுது எதை செப்பினால்? அப்பனே, இன்னும் (ஒளி) அதை, அப்பனே, இன்னும் ஆராயலாம் என்பதெல்லாம் இன்னும் உங்களுக்கு சொல்லிக் கொடுப்பேன் அப்பனே. 

உங்கள் ஆன்மாவை நீங்கள் அறிய, வருங்காலத்தில் மந்திரங்கள் எல்லாம் யான் சொல்லிக் கொடுப்பேன் அப்பனே.

ஆனால், அப்பனே, இப்பொழுது சொல்லிக் கொடுத்தாலும், அப்பனே, நிச்சயம், ஏதோ அகத்தியன்  சொல்லிவிட்டான் (என்று சென்றுவிடுவார்கள்).

ஏனென்றால் இனிமேல் எத்தனையோ பேர்கள், அவை செய் , இவை செய் என்றெல்லாம் அப்பனே.  

ஆனாலும் சிறிது அடங்கட்டும்.  

யாங்களே அதை அடக்கி வைப்போம். 

—----------------------------------------------------------------------------------------------
(பலபேர்கள் உண்மை நிலை புரியாமல்  அவை செய் , இவை செய் என்றெல்லாம் மக்களை குழப்பிக்கொண்டு இருக்கின்றார்கள். அப்படி உலகத்தில் வெளிவரும் பொய்யான ஆன்மீக செய்திகள் அனைத்தும் சிறிது அடங்கட்டும். சித்தர்கள் அப்படி செய்தி வெளியிடுபவர்களை அடக்கிவிடுவார்கள்.) 
—--------------------------------------------------------------------------------------------


பின்பு அப்பனே, யார் என்பதை  நிச்சயம் தன்னில் கூட. 

( யார் மூலம் அவ் மந்திர ரகசியங்களை தெரிவிக்க வேண்டும் என்று யாங்கள் அறிவோம் )

மந்திரத்தை எப்பொழுது உரைக்க வேண்டும்?

என்று உரைக்க வேண்டும்?

எப்படி உரைக்க வேண்டும்? 

அதன் முன்னே என்ன செப்ப வேண்டும்? 

நிச்சயம், என்ன செய்ய வேண்டும்? மனிதன் என்றெல்லாம் அப்பனே நிச்சயம், பாதை காட்டுவதே இல்லை. 

பின், உதாரணத்திற்காக சொல்கின்றேன், இவ் மந்திரத்தை சொல், அனைத்தும் நடக்கும் என்று சொல்லிவிடுவான். 

ஆனால் அப்பனே அது தவறு அப்பா. 

அதுவே அப்பனே பிற்காலத்தில்  தீமை செய்து  கொண்டிருக்கின்றது. 

அப்பனே, பலபேர்கள் இப்படி செப்பி செப்பி, அப்பனே ஒன்றும் ஆகாமல்,  மீண்டும் வந்து, நான் மந்திரத்தை செப்பினேனே, ஒன்றும் பிரயோஜனம் இல்லை என்று (புலம்பல்கள்). 

இதனால்தான் அப்பனே, குருவானவன் இல்லாவிடில்  அப்பனே எதை சொல்லிக் கொடுத்தாலும் பாழ்  அப்பா.  

(குருவில்லா வித்தை பாழ்).

சொல்லிவிட்டேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

அதனால் அப்பனே, அவ் மந்திரங்களே உங்களை கஷ்டங்களுக்கு உள்ளாக்கலாம் என்பேன் அப்பனே.  சொல்லிவிட்டேன் அப்பனே.

மந்திரத்தை எப்படி ஓதலாம்? 

அப்பனே, எங்களுக்கு வேஷங்கள் அவசியம் இல்லை என்பேன். அப்பனே, 

“””””””உள்ளம்தான் அவசியம். அவ் உள்ளத்தை யாங்கள் பார்க்கின்றோம் அப்பனே. “”””””

வேஷங்கள் எங்களுக்கு தேவையில்லை அப்பா. 

அப்பனே, யார்? எப்படி?  என்பதெல்லாம் எங்களுக்கு தெரியும் அப்பா.

இதனால் அப்பனே நிச்சயம், இன்னும் இன்னும் அழிவுகள் தான் அதிகம் அப்பனே.

அதனால் பின் உங்களால் முடியும் அப்பா நிச்சயம்.

அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் அழிவு  (வராமல் தடுக்கலாம்) அப்பனே. 

(எங்களுக்கு ) அனைத்து குழந்தைகளும் ஒருவரே அப்பனே.

பின் இல்லத்தில் இருக்கின்றீர்கள்.

பின் ஒருவருக்கு ஒருவர் பாசத்தை  காட்டுகின்றீர்கள் அப்பனே.

நிச்சயம், அனைத்துமே  நம் உயிர்  என்று எண்ண வேண்டும் என்பேன் அப்பனே, 

இதனால்  கலியுகத்தில். அப்பனே, பின், பக்குவம் இல்லாமல் வாழ்ந்து வருகின்றான் அப்பா.

இன்னும் அப்பனே நாங்கள் நிச்சயம், எவ்வாறு என்று எல்லாம்,  யார் யாரை  தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதெல்லாம்  தீர்மானித்து, அப்பனே நிச்சயம்  அனைத்தும் செய்வோம்  என்பேன்  அப்பனே.

ஏனென்றால்  நீங்களும் கேட்கலாம். 

கலியுகத்தில் இவ்வாறெல்லாம்  நடக்கின்றதே. அநியாயம் அக்கிரமங்கள் எல்லாம்.

ஏனென்றால் இது மனிதனுடைய ஆட்சி அப்பா.

இறைவனுடைய ஆட்சி வேறு, மனிதனுடைய ஆட்சி வேறு. 

அப்பனே, இறைவன் ஆட்சி செய்தான். 
சித்தர்கள் ஆட்சி செய்தார்கள். 
ஞானிகள் ஆட்சி செய்தார்கள். 
ரிஷிகள் ஆட்சி செய்தார்கள். 

ஆனாலும் அப்பனே நிச்சயம் புத்தி கெட்ட மனிதன் அப்பனே, இவ்வுலகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கின்றான் அப்பா. 

இதனால் மனிதன், மனிதனையே நிச்சயம் கொல்வான் அப்பா, 

ஏனென்றால் இறைவன் ஆட்சிகள் செய்கின்ற பொழுது, அழகாக மனிதனை நடத்திக் கொண்டு விடுவான் அப்பா, 

ரிஷிகள் (ஆட்சிகள் செய்கின்ற பொழுது) , நிச்சயம், எப்பேர்ப்பட்டவது அப்பனே, (மக்களின் ) தடைகளை நீக்கி விடுவார்கள்  அப்பா, 

ஆனால் மனிதன் ஆட்சிகள் செய்கின்றானே அப்பனே…… மனிதன் எப்படி அப்பா உங்களை காப்பாற்ற முடியும்? 

அப்பனே உங்கள் கஷ்டங்களை எப்படி அப்பா?, 

ஏனென்றால் அவன் நிச்சயம், அவனை காப்பாற்றிக் கொள்வதே, நிச்சயம் அப்பனே, கடினம் அப்பா, 

அப்படி இருந்து, உங்களை எப்படி காப்பாற்றுவான் அப்பா?.. 

இதனால் தான் அப்பனே ரகசியங்களாக, 

நாங்கள் கலியுகத்தில், நிச்சயம் எங்களுக்கு தேவையில்லை என்று யாங்கள் ஒதுங்கிவிட்டோம். ஆனாலும் அப்பனே, நிச்சயம், எங்களுக்கும் கருணை உள்ளம் (உள்ளது). 

இத்தனை நாட்கள், இத்தனை யுகங்கள்  யுகங்களாக மனிதனை காப்பாற்றி விட்டோம். 

“””””””””” நிச்சயம் இனிமேலும் இறங்குவோம், மனிதனை காப்பாற்றுவோம் என்றெல்லாம். அப்பனே “””””””””””””

உங்களுக்காக அப்பனே, அதாவது பின்  நிச்சயம்  தன்னில் கூட இயங்கிக் கொண்டிருக்கின்றோம் அப்பனே.

ஏனென்றால் அப்பனே, அனைத்து உயிர்களும் எங்களுக்கு ஒரே எதை என்று புரிய அப்பனே.

“””””””””””” அதனால் அப்பனே,  அனைவருக்குமே யான் நிச்சயம்  தன்னில் கூட  அப்பனே பின்  வழி நடத்துகின்றேன். “”””””””””””

“”””””””””””” நிச்சயம் உங்களுக்கு தேவையானது, யானே வழங்குவேன் என்பேன் அப்பனே. “””””””””””

“””””””””””” நிச்சயம் தந்தைக்கு தெரியும். தாய்க்கு தெரியும். தன் குழந்தை என்ன விரும்புகின்றது என்று.  “””””””””””””””

ஆனால் நிச்சயம் தெரியும்.  இதை கொடுத்தால் நன்றா?  கொடுக்காவிடில் நன்றா? என்றெல்லாம்.  ஆனால்  அப்பனே சிறு தாமதம் ஏற்படும்  அப்பா.

“”””” அப்பனே, கஷ்டங்கள் வருகின்ற பொழுது நான் அருகிலே இருப்பேன். “”””

ஏனென்றால் அப்பனே நிச்சயம் ஆமை இருக்கின்றதே அப்பனே, அது எப்படி பின் அடக்கிக் கொண்டு, நிச்சயம் வாழவேண்டும் என்பேன் அப்பனே.

அதை உங்களுக்கு சொல்லிக் கொடுப்பேன். 

ஆனால், புண்ணிய பாதையில் வந்துவிட்டால், நிச்சயம் உங்களை யான் விட்டு விடுவேன்  அப்பனே. 

நிச்சயம் நீங்கள் தான் அப்பனே ராஜா. 

இதனால் அப்பனே நிச்சயம், அப்பனே இப்பொழுது, பின் ஆமை எப்படி  தன் கால்களை அடக்கிக் கொண்டிருக்கின்றதோ, அப்பனே, நீங்கள் அடக்கிக் கொண்டிருந்தால் போதுமானது. 

அப்பனே  மீதி எல்லாம் யான் பார்த்துக் கொள்வேன் அப்பனே.  இதனால் அப்பனே, தக்க சமயத்தில்,  தக்க நேரத்தில், யானே வருவேன் என்பேன் அப்பனே. உங்களிடத்தில் அப்பனே. 

“”””””””””” (இங்கு வந்துள்ள) பலரிடம் நான் பேசி இருக்கின்றேன் அப்பனே.  “””””””””” 

இப்பொழுது எல்லாம் நீங்கள் வந்திருக்கின்றீர்களே. எப்படி அவன் மனநிலை பாதிக்கும் பொழுது, இவன் மனநிலை பாதிக்கின்ற பொழுதெல்லாம்  அப்பனே, நிச்சயம், திடீரென்று மனிதர் ரூபம் எப்பட?, எதோ எவை ரூபத்திலே, நிச்சயம், பின் அதாவது பிச்சை ஏந்துபவனாகவும் அப்பனே, நிச்சயம் பின் எப்பேர்பட்டவனாகவும்  வந்து பேசுவேன் அப்பனே.

“””””” (உங்களின்) அக்  குறைகளை எழுதிவைத்திருக்கின்றோம் அப்பா. “””””””

“”””” இதனால் அப்பனே உங்களது குறைகளை அப்பனே  நிச்சயம், இவை சொன்னால், அவை செய்தால் நடக்கும் என்பது, நிச்சயம் உண்மை இல்லை அப்பா எதுவும்.  தெரிந்து கொள்ளுங்கள். இன்னும் வாக்குகள் சொல்கின்றேன் உங்களுக்கு அப்பனே. “”””””

“””” புரிந்து கொள்ளுங்கள் அப்பனே. புரிந்து கொண்டு வாழ்ந்தால் அப்பனே, அனைத்தும் பெரிதாக அப்பனே, நிச்சயம் இறைவன் வாசல் படியே உங்களை அனுப்பி வைப்பான்.  அதாவது அனுமதிப்பான் என்பேன். “”””

அப்படி இல்லை என்றால், மீண்டும் ஒரு பிறப்புக்கு செல் என்று சொல்லி விடுவான் என்பேன் அப்பனே. அப்பிறப்பு தேவையில்லை அப்பா உங்களுக்கு. 

(மோட்சம் / முக்தி அடைய…)

“”””” இப்பிறப்பிலே இறைவன் வாசல் படியில் நில்லுங்கள். அதற்காக வழியை சொல்கின்றேன் அப்பனே. “””””

இன்னும் உங்களுக்கு வாக்குகள் செப்புகின்றேன். உங்கள் குறைகள் என்னென்ன என்று அப்பனே, தந்தையிடம் நீங்கள் கேட்க தேவையில்லை. யானே சொல்வேன் அப்பனே.


நீங்கள் அன்பு மட்டும், அதாவது, உங்கள் பெயர்கள் எங்களுக்கு தெரியும் அப்பா.  நிச்சயம் நீங்கள் கேட்டால்தான் நாங்கள் வாக்குகள் உரைக்க வேண்டுமா அப்பனே?

அன்பை செலுத்துங்கள் . யாங்கள் வருவோம் அப்பனே.  நிச்சயம் தன்னில் கூட இன்னும் வாக்குகள் உண்டு. 

இன்னொரு சித்தனும் பின்பு வந்து வாக்கு வைப்பான். 

அப்பனே ஆசிகள், ஆசிகள்.

ஓம் ஶ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment