அன்புடன் முருகப்பெருமான் , அன்புடன் போகர் சித்தர் அருளிய பாபநாசம் கூட்டுப் பிரார்த்தனை வாக்கு.
நாள் 27-7 2025.
வாக்குரைத்த ஸ்தலம் :- பாபநாசர் ஆலயம் அருகில் கூட்டு பிரார்த்தனை நடந்த மண்டபம், பாபநாசம், திருநெல்வேலி மாவட்டம்.
===================================================
( அன்புடன் முருகப்பெருமான் வாக்கு )
===================================================
அனைத்தும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் தந்தையே, போற்றியே!
உனைதன் காண, ஓடோடி வந்துள்ளார்களே , அவர்களை நீயும் காண, பாவங்களைப் போக்க, ஓடோடி வா, தந்தையே!
பின், மக்களுக்காகவே உழைப்பேன், கந்தனவனே!
( அடியவர்கள் பரவசம் )
===================================================
( அன்புடன் போகர் சித்தர் வாக்கு - பாடல் )
===================================================
என்றென்றும் இல்லையே முருகா ,
அறிந்தும் என்றென்றும் முருகனே! என்றென்றும்,
வா வா பிள்ளையே! போகனே, செப்புகின்றேனே !
வா வா குகனே ! போகனே, செப்புகின்றேனே !
அன்னையே, தந்தையே! அனைத்தும் நிற்கும் வேலவா! நீயும் காணும் அறிந்தும் !
============================================================
( அன்புடன் முருகப்பெருமான் பாடல் வாக்கு )
============================================================
ஒன்றொன்று இணைந்த என் தந்தையே!
என்றோடு என்றும் இயலாமை உள்ளோரை பணிந்து, பணிந்து நின்றோரை !
ஏனிந்த ஏக்கங்கள் என்றோரை பணிந்து,
ஒன்றில்லை எப்போதும்! எப்போழுதும், எப்பொழுதும் அன்றில்லை!
வருவோர்க்கெல்லாம் அருள்கள் ஈயும் தந்தையே!
அருள்கள் ஈந்தும் தந்தையே!
எப்பொழுதும் மக்களுக்கு எவை எவையை போதாது!
அவையெல்லாமே கொடுத்திடும் தந்தையே!
அவையெல்லாமே கொடுத்திடும் தந்தையே!
என்றென்றும் உன் நாமம் உச்சரிக்கும் பக்தர்களுக்கு,
என்றென்றும் கொடுத்தாய், தந்தையே!
என்றென்றும் கொடுத்தாய், தந்தையே!
உலகென்றும் என்றென்றும் காக்க, காக்க வருவாய், தந்தையே!
அன்றென்று நிற்கும் பின் சித்தர்களாக, பின் அறிந்திருந்தும் கூட, பின் அறியாமல் கூட, பின் என்றென்றும் எப்பொழுது பின் மாற்றுவாய், தந்தையே!
அனைத்துலகும் மாற்றுவாய், தந்தையே!
அனைத்துலகும் மாற்றுவாய், தாயே!
என்றென்றும் உன் பக்தர்களுக்கு என்ன பதில்தான் சொல்ல போகின்றாய், தந்தையே!
என்னத்தான் பதில் சொல்ல போகின்றாய்?
அனைத்தும் நீயே என்று நமச்சிவாயே! என்று பின் உன்னை அழைத்தார்களே !
அதற்காக ஓடோடி வா, தந்தையே!
அதற்காக ஓடோடி வா, தந்தையே!
உன் நிலைமை இப்படியே, இப்படியே!
வேடிக்கை பார்த்தால் நீ இல்லை என்று தானே சொல்வார்கள் மனிதர்கள்!
நீ இல்லை என்று தானே சொல்வார்கள்,
தந்தையே! ஏன் வேடிக்கை பார்க்கின்றாய்?
தந்தையே! ஏன் வேடிக்கை பார்க்கின்றாய்?
இன்னும் மக்கள் மீது பின் கோபம் தெளியவில்லையே !
நாங்கள் அனைவரும் சேர்ந்து உன்னை அழைக்கின்றோமே, தந்தையே!
நாங்கள் சித்தர்கள் அனைவரும் உள்நோக்கி அனைத்தும் பின் அழைக்கின்றோமே, தந்தையே!
வா வா, தந்தையே! தந்தையே!
கருணை மிக்க தந்தையே!
வா வா, தந்தையே!
அன்போடு உன் நாமம் ஜெபித்தார்களே!
அன்போடு உன் நாமம் அனைவரும் சேர்ந்து பின் ஜெபித்தார்களே!
என்றென்றும் அனைத்து ஆளும் கருணையும்!
என்றென்றும் அனைத்தும் பின் கலைந்து நின்றாலும்!
என்றென்றும் (திரு) வாசகத்தை பின் போற்றி, போற்றி பின் அறிந்தும், அறிந்தும் கூட, பின் சொன்னார்களே!
அப்பொழுது கூட, பின் எப்பொழுதும் கூட, நீ நின்று அதற்காக அருள்வாயே, அருள்வாயே!
என்றென்றும், என்றென்றும் இருப்பாயே, தந்தையே!
அனைத்தும் அறிந்தாலும், நின்றென்று பேசுவாயே, தந்தையே!
குழந்தையாக கேட்கின்றேனே, தந்தையே!
குழந்தையாக கேட்கின்றேனே, தந்தையே!
அறிந்தும், அறிந்தும், அறியாவிடிலும்,
அறிந்தும், அறிந்தும், அறியாவிடிலும்!
எதற்காக லோகத்தை மனிதனே படைத்தாயே?
=====================================================================
( இப்போது — அன்புடன் போகர் சித்தர் வாக்கு - பாடல் —- )
=====================================================================
அவ் படைத்ததை மனிதனுக்கு அனைத்தும் சொல்லித் தர, பின் சித்தர்களுக்கு தந்து அருளும் தா தா முருகா!
முருகா! முருகா! என்றென்றும், பின் போகனே!
அறிந்திருந்தும் என்னென்ன முருகா!
எப்படி பாடல்கள் பாடினாய், தந்தையை நோக்கி பாடினாய்!
அனைத்தும் பின் யாங்களே இருப்போமே, முருகா!
என்றென்றும் அறிந்தும், உண்மையுடனே , மக்களுக்காக ஓடோடி வந்தாயே, முருகா!
முருகா! அறிந்தும், என்றென்றும் பின் அறிந்தாயே, முருகா!
நீ போகனுக்காகவே வந்து அருள் வாங்கி உன் தந்தையே இன்னும் அழைப்பாயே, முருகா!
உன் தந்தையே இனிமேலும் அழைப்பாயே, முருகா!
==================================================================
( இப்போது — அன்புடன் முருகப்பெருமான் வாக்கு - பாடல் —- )
==================================================================
அப்பனே, அப்பனே ! ஈசனே !
தந்தையே ! தந்தையே !
அப்பனுக்கும் தந்தைக்கும் என்ன வேறுபாடு என்று,
தாயே! தாயே! உண்ணாமலை தாயே!
நிச்சயம் எவ்வாறு அழைப்பார்கள் உன்னை என்று,
பின் செல்ல குழந்தைக்காக, பின் ஓடோடி வா, தந்தையே!
பின் செல்ல குழந்தைக்காக, ஓடோடி வா, தந்தையே!
தாயே! நீயும் எடுத்துக் கூறும் !
தாயே! நீயே எடுத்துக் கூறும் !
இன்னும் அழிவுகள் பலமாக வருகின்றதே !
தந்தையே! இப்படியே வேடிக்கை பார்த்தாலும்,
எப்படி மனிதன் வாழ்ந்து திருந்துவான்?
தாயே! தந்தையே! வருவாயே!
அனைத்தும் நீதானே கற்றுத் தந்தாயே, பின் தந்தையே!
இப்பொழுது அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது ஏன் ?
இப்பொழுது வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது ஏன் ?
அன்பான தந்தையே!
அழகான தந்தையே!
கருணை வடிவான தந்தையே!
கருணை வடிவான தந்தையே!
ஈரேழு உலகையும் காக்கும் தந்தையே!
நிச்சயம் மனிதனை காக்க, ஓடோடி வா, தந்தையே!
ஓடோடி வா, தந்தையே!
நிச்சயம் தன்னில் உங்கள் வாகனத்தின் மீது ஏரேறி வா, தந்தையே!
வா வா, தந்தையே!
அனைத்தும் நீயே வெல்வாய், தந்தையே!
இப்படியே நீ அமைதி காத்தால், மனிதர்கள் விடுவார்களே விடுவார்களே !
மனிதர்கள் வென்றே விடுவார்களே , தந்தையே!
அப்பொழுது நீ ஏன், பின் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க வேண்டும்?
தாயே! அன்பே, தாயே! உண்ணாமலையே, அண்ணாமலை என்று பாசத்தோடு அழைத்தேனே!
பின் அழகாக என்னை, பின் குழந்தையாக, செல்லை குழந்தையா! தர்மத்தை நிலைநாட்டு என்று சொன்னீர்களே!
தர்மத்தை நிலைநாட்ட சொன்னீர்களே!
அதற்காக வேலோடு கலியுகத்தில் நின்றேனே!
அதற்காக வேலோடு இக்கலியுகத்தில் நின்றேனே!
நீங்களும் சக்தியை தாருங்கள்!
இன்னும் நீங்கும், நீங்கும் எதையென்றும் அறியாத உண்மை பொங்கி எழுவாய், தாய் தந்தையே!
பொங்கி எழுவார்கள், தாய் தந்தையே!
அன்பின் உருவம் எதனை காட்டுகின்றது?
தந்தையே! நீ என்னை தடுத்தாய்!
தந்தையே! ஏன் என்னை தடுத்தாய்?
மௌனத்தை காத்திடு, முருகா என்று சொன்னாய்!
அவ்வாறே இருப்பேனே, என்ன ?
நான் அவ்வாறே இருப்பேனே, என்ன?
இவ்வாறு இருப்பதனாலே! இவ்வாறு இருப்பதனாலே!
இருந்தவர்களுக்கு வந்து, பின்னும் பின் அழுகின்றார்கள், தந்தையே!
என்னை நோக்கி அழுகின்றார்கள், தந்தையே!
யான் என்ன பதில் சொல்லட்டும்?
யான் என்ன பதில் சொல்லட்டும்?
அழகாக பாவத்தை நீக்கும்! அழகாக பாவத்தை நீக்கும்!
உன்னால் மட்டுமே முடியும், தந்தையே!
இதை அனைவரும் அறிவார்கள் , தந்தையே!
அப்பாவத்தை நீக்கிட, வா! வா!
அப்பாவத்தை நீக்கிட, வா! வா!
தந்தையே! வேடிக்கை பார்க்காதே!
தந்தையே! வேடிக்கை பார்க்காதே!
யானும் குழந்தை என்று கொஞ்சினாய்!
அனைவரும் பின், அனைவரும் பின், குழந்தையாக கொஞ்சி,
அனைவரையும் குழந்தைகளாக, பின் கொஞ்சி,
அன்னையே! அன்னையே! தந்தையே! வா வா! வா வா! தந்தையே!
எப்பொழுதும் உன்னை நினைத்து, ருத்ராட்சம் அணிந்திருப்பார்கள்!
எப்பொழுதும் உன்னை நினைத்து, ருத்ராட்சம் அணிந்திருப்பார்கள்!
அவர்களுக்கும் ஏன் கஷ்டத்தை அள்ளித் தருகின்றாய்?
ஏன் இந்த அவலம் , தந்தையே?
நிச்சயம் வேறொருவர்கள் வருங்காலத்தில், பின் ருத்ராட்சம் அணிந்து பொய் என்று, வேறொருவர்கள் சொல்வார்களே!
அதற்காக முன்பே . அவர்களை அழித்திட, வா வா! தந்தையே!
அவர்களை, பின் அழித்திட, வா வா! வா வா! தந்தையே!
அன்னையே! நீ தன்னில் எடுத்தாய், அவதாரம்!
இவ்ஆடி மாதத்தில், கால அவதாரம்!
அனைத்தும் அழித்திட, நிச்சயம்! தன்னில் எடுத்த அவதாரம்!
இனிமேலும், பின் பகைவர்களை வென்றோடு, எந்தாயும் நிச்சயம்!
அன்போடு, ஆதரவோடு, அனைவரும் கூட, உன்னை எண்ணித்தானே!
வாசகத்தை, பின் ஓதி, ஓதி, பின் அறிந்தும், அறிந்தும் சொல்கின்றார்களே!
அதற்காக, ஓடோடி வா, தந்தையே!
அதற்காக, ஓடோடி வா, தந்தையே!
என்றென்றும் நீங்காத மனதில், பின் இருப்பவனே!
அனைவரும் உள்ளத்தில் இருப்பவனே!
என்றென்றும் அனைத்தும், நீயே! நீயே!
என்றென்றும் அவரவர் வழிபாட்டில் கூட, வேறுபாடு இருந்தாலும்,
எப்பொழுதும் அங்கெல்லாம் ஆசிகள்! தா தா!
உனை பிரித்தே, பின் பல மதங்களாக வழிபட்டாலும்,
அவர்களுக்கு கூட, பின் புத்தியே! தா தா! இறைவா!
உன்னை இறைவா! என்பதா?
தந்தையார் என்பதா?
தாயார் என்பதா?
எப்படி நீ கூப்பிட்டால் வருவாய்?
எப்படி நீ கூப்பிட்டால் வருவாய்?
நிச்சயம், தாயே! நிச்சயம், தாயே!
கர்மத்தை ஏற்றி, பின் நடத்திக் கொண்டே இருக்கும்!
இவ்வருவி தன்னில் கூட, அறிந்தும் கூட, குளித்தால் கூட, தரித்திரம் போகும்!
என்றென்றும் மக்களுக்கு, யானே சொல்லிக் கொடுப்பேனே, தந்தையே !
யானே சொல்லிக் கொடுப்பேனே, தந்தையே !
என்றென்றும், என்றென்றும் உனை நாடி வந்தார்களே!
அறுபடை வீடு செல்கின்ற பலனை, அனைத்தும் தருகின்றேன்!
இவர்களுக்கு அனைத்தும் தருகின்றேனே! எண்ணி எண்ணி !
அனைவருக்கும் யான் இட்ட கட்டளையாக, இப்பொழுது பின் சொல்கிறேனே !
சித்தர்கள் வாக்குக்கு, இவர்கள் அனைத்தும் பின் வந்து, வந்து, இவர்கள் ஞானத்தை இன்னும் மேம்படுத்தி என்றும், அனைத்தும் பின் தருவார்களே! சித்தர்களே!
பொறுத்திருங்கள் என்று யான் சொன்னேனே!
பொறுத்திருந்துங்கள் என்று யான் சொன்னேனே!
அவர் விருப்பப்படி, பின் சித்தர்கள் வந்து, ரகசியங்களாக வாக்குகள் சொல்லி, உங்களை பக்குவப்படுத்தி, வேண்டி வைப்பார்கள்! மக்களே!
வேண்டி வைப்பார்கள்! மக்களே!
கவலைப் பட தேவையில்லை!
அனைத்தும் யானாக இருக்கின்றேன்! தந்தையே!
அனைத்தும் பின் உன்னுள் யானிருந்து இனிமேலும், அனைத்தும் அறிந்தேனே!
என்னென்ன இன்னும் வாக்குகள் செப்புவேனே மக்களுக்கு !
ஆசிகள்! ஆசிகள்!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

No comments:
Post a Comment