சித்தன் அருள் - 1962ன் தொடர்ச்சியாக...
ஆக இந்த இடம் முருகப்பெருமான் உலா வந்த இடம் ! இதற்கு கீழே நந்தவனம் பத்து காத தூரத்திற்கு இருந்தது. நந்தவனங்கள் புஷ்பங்கள் எல்லாம் பூத்து குலுங்கிய இடம். அங்கு வெற்றிலையை முதலில்முதலில் உலகிற்கு கொண்டு வந்த இடம் இதுவென்று கூட சொல்லலாம். ஏனென்றால் வெற்றிலை என்பது தேவர்களுக்கு மட்டுமே உண்டான இலை. இன்றைக்கும் வெற்றிலை பற்றி சொல்லும் போதெல்லாம், எந்த இலைக்கும் கிடைக்காத பெருமை வெற்றிலைக்கு உண்டு. எந்த நல்ல காரியம் என்றாலும் கெட்ட காரியம் என்றாலும், வெற்றிலை வைத்து விட்டு தான் எல்லா காரியமும் செய்வார்கள். மற்ற இலைகளுக்கு, ரோஜா பூவுக்கு ஏன் அந்த மரியாதையை இல்லை ? மல்லிகை பூவுக்கு ஏன் அந்த மரியாதையை இல்லை ?எத்தனையோ செடிகள் எல்லாம் இருக்கிறதே, அந்த இலைகளை வைத்து வணங்க கூடாதா ? அதனையெல்லாம் தாண்டி இந்த வெற்றிலைக்கு மரியாதையை குடுத்த காரணம், தேவலோகத்தில் இருந்த வெற்றிலை, பூமிக்கு இறங்கி வந்து அதை சீர் பயிரிட்ட இடமும் கூட இந்த புனிதமான கஞ்சமலை தான் !
ஆக முதலில் வெற்றிலை தோன்றிய இடம், முதலில் ஏழு இலை விழுந்தது, பிறகு அதை பிடுங்கி நட்டார்கள், வேறிடமும் மாறிற்று. ஆக வெற்றிலையயை பூமிக்கு கொண்டு வந்த புனிதமான நாள், அந்த அரும்பெரும் காரியத்தை செய்தவன் காலாங்கிநாதன் !!
அந்த காலாங்கிநாதன் தான் செய்த சாதனைகள் எல்லாம் எனக்கு ஓரளவுக்கு தெரியும், அவன் வாய் திறந்து சொல்ல மாட்டான், ஆனால் அந்த புனிதமான நாள், இன்றைக்கு வெற்றிலை வைத்து வணக்கம் அத்தனை பேரும் காலாங்கிநாதனுக்கு முதல் வணக்கம் செலுத்த வேண்டும் ! செலுத்துவது இல்லை ஏனென்றால் அவர்களுக்கு விஷயம் புரியவில்லை.அந்த வெற்றிலையில் தான் உலகத்தில் மகத்துவமான சக்தி இருக்கின்றது !
அந்த வெற்றிலையை மட்டும் நீங்கள் உண்டு, வெறும் காம்பால் ஆண் வெற்றிலை, பெண் வெற்றிலை என்று இரண்டு இலைகள் உண்டு. அந்த வெற்றிலையை எப்படி விழுங்க வேண்டும் என்பதல்ல, அந்த வெற்றிலை சாற்றை உட்கொண்ட அத்தனை பேருக்கும், ஏறத்தாழ 43 கொடிய வியாதிகள் குணமாகும். எலும்பு சத்து அதிகமாகும். வெற்றிலையயை நிறைய போடுகின்ற நிறைய பேரை நன்றாக பார், அவர்கள் எலும்பு நிறைய கடினமாக இருக்கும். எலும்பும் தோலுமாக தான் இருப்பர்.
ஆனால் உன்னை விட வேகமாக நடப்பார். ஒருபோதும் துவண்டு விட மாட்டார். மூட்டுவலி என்று சொல்லி முனங்க மாட்டார். வேகமாக நடப்பார்கள். எலும்பு, நரம்பு பலம் அதற்கு உண்டு. ஆக வெற்றிலை கூட என்ன செய்யவேண்டும் என்ற முறை எல்லாம் கூடச் சொல்லுகிறார்கள். வெற்றிலை சாறை முழுங்கிவிட்டு அதை துப்ப வென்றும் என்றெல்லாம் சொல்லுவார்கள், வெறும் வெற்றிலையை வாயில் மென்றாலே போதும், அதன் சாறு எலும்புக்குள் சென்று, நரம்புக்குள் புகுந்து, எலும்பு - நரம்பு சம்பந்தப்பட்ட உயிர்கொல்லியான நோய்கள் அத்தனை நோய்களையும போக்குகின்ற வன்மை அந்த வெற்றிலைக்கு உண்டு ! அந்த வெற்றிலையை மேலோகத்திலிருந்து, பூலோகத்துக்கு கொண்டு வந்த நாள். பொதிகைமலை என்றாலும் கூட, அதற்கு முன்னாலே இங்குதான் வைத்து பயிரிடப்பட்டு, பிறகு தான் வெளியே கொண்டு வந்தது. அந்த புண்ணியதொரு காரியத்தை செய்ததும் காலாங்கிநாதன் தான் ! ஆக எத்தனை பெரிய காரியங்களை செய்திருக்கிறான் என்று சொன்னேன் !
அதுமட்டும் இல்லை, இன்னும் கூட சொல்லுவேன். துருவ நட்சத்திரங்கள் என்றெல்லாம் சொன்னேன். சப்தரிஷி மண்டலங்களில் ஏழு ரிஷிகள் அமர்ந்திருந்தார்கள். ஏழு ரிஷிகளும் ஏழேழு மோட்சம் வேண்டுமென்று, ஏறத்தாழ பல ஆண்டுகள், பிள்ளை முன் நடந்தும் கூட, அதற்கு பிறகு கூட அவர்கள் வந்து பிரார்த்தனை செய்து தவம் செய்தார்கள் ! அந்த சப்த ரிஷியெல்லாம் வானுலகில் உட்கார வைத்து, ஆனந்தப்பட்டு, அவர்களுக்கு வாழ்வு குடுக்க வேண்டுமென்று பிரளயம் ஏற்பட்டால் கூட, விண்மீனாக ஜொலிக்கவேண்டும் என்றெல்லாம், முக்கண்ணனிடம் போராடி, என்னிடமும் போராடி, அவர்களையெல்லம் உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்த நாளும் இந்த நாள் தான் !
அகத்தியன் இங்கு வரச்சொன்னான் என்றாலோ, காலாங்கிநாதன் வரச்சொன்னான் என்றாலோ, மிக முக்கியத்துவம் இருக்கும் ! அதுதான் சொல்லுகிறேன் இந்த அருமையான நாள் ! ஏனென்றால் அந்த சமயத்தில் அந்த நட்சத்திரத்தில், அந்த மாநிலத்தில் சப்தரிஷிகள் வந்து மேலோங்கி அமர்ந்திருக்கின்ற ஒரு நாளில், அந்த நல்லதொரு கண்ணை, விசித்திரமான காட்சியெல்லாம் இங்கிருந்த அத்தனை பேரும் கண்டிருக்கிறார்கள் ! அதனால் தான் அவர்கள் ஒன்று கூடி இங்கு வந்திருக்கிறார்கள் ! ஆக இங்கு வரதவர்க்கெல்லாம் அந்த பாக்கியம் இல்லை என்று எண்ணிக்கொள்ளுங்கள். ஆக இவர்கள் எல்லாம் இன்றைக்கு நேற்றைக்கு பிறந்தவர்கள் அல்ல. பல ஜென்மங்களை வளர்ந்து பிரார்த்தனை செய்து, காடு மலை எல்லாம் சுற்றி, இறைவனுக்கு தொண்டாற்றியர்வகள்தான் நீங்கள் எல்லாம் ! உங்களில் யாரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. ஒவ்வுருவரும் ஒவ்வொரு விதத்தில் புண்ணியம் செய்திருக்கிறீர்கள் ! காலத்தின் கட்டாயத்தில் வெவ்வேறு திசையில் பிறந்திருக்கலாம், வளர்ந்திருக்கலாம், வாழ்ந்துகொண்டிருக்கலாம். இந்த காலத்தின் கட்டாயம் என்பது அவரவர் கர்ம வினையின் பயன் என்றாலும் கூட, நீங்கள் அத்தனை பேரும் ஒவ்வொரு விதத்தில் புண்ணியம் செய்தவர்கள். அவர்கள் அத்தனை பேரும் இங்கு வந்து சித்தர்களுக்கு பணிவிடை செய்திருக்கிறீர்கள்.
சித்தர்களின் அருளாசி பெற்று இருக்கிறீர்கள்! ஆக இங்கே நந்தவனத்தில் தோட்டம் போட்டு பயிரிட்டு, அன்றாடம் மலர்ந்த புஷ்பங்களையெல்லாம் ஆண்டவனுக்கு அர்ப்பணத்தியிருக்கிறீர்கள் ! உங்கள் அத்தனைபேருக்கும் அவர்கள் ஒருபோலதான், யார் யார் ஆண்டவனுக்கு புஷ்பங்களால் அர்ச்சனை செய்தார்களோ ? அவர்கள் மட்டும் தான் இங்கு வந்திருக்கிறார்கள் ! என்றைக்கு ஏறத்தாழ என்னுடைய கணக்குப்படி, எங்கள் நினைவு மிக சரியாக இருக்க வேண்டும். ஏறத்தாழ 2017 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில், இதே நட்சத்திரத்தில் எல்லாம் நீங்கள் எல்லாருமே ஒன்றுகூடியவர்கள். இங்கிருக்கும் அத்தனை பேரும் சகோதரர்களாகவோ, நண்பர்களாகவோ,வெளியூர் வாசிகளாகவோ, ஆன்மீக பற்றில் தழைத்தவர்களாகவோ, சித்தர்களின் அடியார்களாகவோ இருந்துகொண்டு நெடியதொரு தொண்டாற்றி வந்திருக்கிருறீர்கள். அந்த நல்ல தொண்டு ஆற்றியதனால், மீண்டும் நீண்ட நாள் கழித்து, உங்களையெல்லாம் ஒன்று சேர்த்து, ஆனந்தப்பட்டு கொண்டிருக்கிறான் காலாங்கிநாதன் !
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!


No comments:
Post a Comment